இலங்கையைப் பொறுத்தவரை யுத்தத்தினால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் பெண்களே ஆகும். இந்த உள்நாட்டு யுத்தத்தின் மூலம் பல ஆயிரக்கணக்கான பெண்கள் விதவைகளாக்கப்பட்டிருக்கின்றனர்.
அவர்களின் நிலை படு மோசமான நிலையிலே இருக்கின்றது. இவர்களிலே அதிகமானவர்கள் இளம் பெண்கள் என்பது குறிப்பிடத் தக்கது. இவர்கள் சிறு வயதிலேயே குடும்ப சுமையினை தாங்கிக் கொள்ளவேண்டிய நிலைக்கு ஆளாகிவிட்டனர்.
இதில் அதிகமானவர்கள் பின்தங்கிய கிராமப் புரங்களை சேர்ந்தவர்கள் கல்வி அறிவேன்பதும் அவர்களிடம் சரியான முறையில் இல்லை. இதனால் தன்னையும் தனது குடும்பத்தையும் காப்பாற்றவேண்டிய? கொண்டு நடாத்த வேண்டிய பொறுப்பு இவர்களிடமே இருக்கின்றது.
இதற்காக இவர்கள் கூலி வேலை செய்தல், சுய தொழில்களை மேற்கொள்ளல் போன்றவற்றில் ஈடுபடுகின்றனர். சுய தொழிலைப் பொறுத்தவர். எல்லோராலும் செய்ய முடியாத காரியமாக இருக்கின்றது. போதிய பணவசதி உதவிகளை பெறுவதிலே சிக்கல்களை எதிர் நோக்குகின்றனர்.
கூலி வேலைக்கு செல்பவர்களைப் பொறுத்தவரை தனது பிள்ளைகளை கவனிக்கவேண்டும், வீட்டுவேலைகளை செய்யவேண்டும், கூலி வேலைக்கு செல்லவேண்டும் என்று பாரிய சிக்கல்களை எதிர் நோக்குகின்றனர். அவர்களின் உழைப்புக்கேற்ற கூலி வழங்கப்படுகின்றதா என்பது வேறு விடயம்.
சிலர் இவ்வாறு கஷ்டப்படுகின்றவர்களை வைத்து அதிகவேளைகளைக் கொடுக்கின்றனர். ஆனால் வேலைக்கேற்ற கூலி வழங்கப் படுவதில்லை. இதை விட்டாள் வேறு வழியில்லை என்று கஷ்டப்பட்டு உழைத்து வருகின்றனர் பலர்.
இது ஒரு புறமிருக்க இந்த விதவைகளைப் பொறுத்தவரை பலர் இளம் வயதை சேர்ந்தவர்கள். வாழ வேண்டிய வயதில் வாழ்க்கையை இழந்து நிக்கின்றனர். இவர்களின் வாழ்க்கையை வளமானதாக மாற்ற எமது சமுகத்தால் முடியும்.
ஆனால் அவர்களளின் எதிர் காலத்தைப் பற்றி சிந்திக்காத சமூகமாக எமது சமூகம் இருப்பதுதான் கவலைப்படவேண்டிய விடயம். விதவைகளை ஒதுக்கி வைக்கின்ற சமுகமாக எமது சமூகம் இருக்கின்றது.
விதவைகள் திருமணம் போன்ற முக்கிய நிகழ்வுகளிலே கலந்து கொள்ள கூடாது, இந்த விதவைகளின் கண்களிலே விழிக்கக் கூடாது என்று நினைப்பவர்களும் இருக்கின்றனர்.
பெண்களை மறுமணம் செய்தால் கேலி செய்து தேவையற்ற கதைகளைக் கட்டி விடுகின்ற சமூகம். ஆண்கள் எத்தனை திருமணம் செய்தாலும் போசாதிருப்பது ஏன்? சில ஆண்களைப் பொறுத்தவரை ஒரு மனைவி இருக்கும்போதே இன்னொரு திருமணம் செய்வார். இதனை வீரமாக பேசிக்கொள்பவர்களும் இல்லாமல் இல்லை.
பெண்களோ தன் குடும்பத்தின் கஸ்ர நிலையின் காரணமாகவும், தனது பிள்ளைகளின் எதிர்காலத்துக்காகாகவும் மறுமணம் செய்தால் வேசி என்றும் இன்னும் பல கதைகளும் சொல்லி அந்த பெண்ணை ஒதுக்கி வைக்கின்றனர். விதவையான பெண் வாழக் கூடாதா?
எங்கள் ஒவ்வொருவருடைய மனங்களும் மாற வேண்டும் விதவைகளின், எமது சமூகத்தின் எதிர்கால வளமான வாழ்வுக்காக ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும்.
6 comments: on "சமூகத்திலிருந்து புறக்கணிக்கப்படும் விதவைகள்"
congrats on ur 250th post!!
250 ......வது பதிவுக்கு வாழ்த்துக்கள். உங்களது மேம்பட்ட் சிந்தனையை வரவேற்கிறேன்.
சமுதாய மன மாற்றம் தேவை. மாறுமா நம் சமூகம்?
உங்களின் 250 பதிவிற்கு வாழ்த்துக்கள் நண்பரே .
உங்களின் ஆதங்கங்கள்தான் எல்லோரின் உள்ளத்திலும் காலம் வெல்லும் ஒருநாள் . நாம் நினைப்பது நடக்கும் விதவை என்ற வார்த்தை வண்ணமாகும் விரைவில் . பகிர்வுக்கு நன்றி !
வாழ்த்துக்கள் சந்ரு.
நல்ல பதிவு.
வாழ்த்துக்கள் நண்பரே
நல்ல சிந்தனை சந்துரு .250 ......வது பதிவுக்கு வாழ்த்துக்கள்
'.எங்கள் ஒவ்வொருவருடைய மனங்களும் மாற வேண்டும் விதவைகளின், எமது சமூகத்தின் எதிர்கால வளமான வாழ்வுக்காக ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும். "
சரியான கருது ..நன்றி
Post a Comment