Sunday 29 April 2012

மட்டக்களப்பில் கூட்டமைப்பினருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்


களுதாவளைக் கிராம மக்களால் இன்று மாலை வேளையில் ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது. இவ் ஆர்பாட்த்தில் நூற்றுக்கும் மேற்பட்ட  பொது மக்கள் கலந்து கொண்டதோடு சிவாஜிலிங்கம் அவர்களின் கொடும்பாவியும் எரிக்கப்பட்டது.

அண்மையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற தந்தை செல்வாவின் நினைவுதின நிகழ்விற்கு அழைக்கப்பட்டு சென்றிருந்த கிழக்கிலே எல்லோராலும் மதிக்கப்படுகின்ற அரசியல் தலைவர் இராஜதுரை அவர்கள் மேடையில் பேசச் சென்றபோது கறுப்புக் கொடி காட்டி தகாத வார்த்தைகளால் சிவாஜிலிங்கம் அவர்கள் நாகரிகமற்ற முறையில் அவமானப்படுத்திய செயலை கண்டித்து ஆர்ப்பாட்டத்தினை மேற்கொண்டனர். 


இதன்போது கருத்துத் தெரிவித்த விவசாயி யோகராஜா  கிழக்கு மாகாணத்துக்கு பெருமை சேர்த்த கிழக்கு மாகாண மக்களால் சிறந்த அரசியல் தலைவராக போற்றப்படுகின்றவரை யாழ்பாணத்துக்கு அழைத்து துரோகி சக்கிலியன் போன்ற நாகரிகமற்ற வார்த்தைகளால் பேசியமை எமது  ஒட்டுமொத்த கிழக்கு மாகாண மக்களையும் அவமானப் படுத்தியமைக்கு சமமானதாகும். கிழக்கு மக்களால் நேசிக்கப்படுகின்ற ஒரு அரசியல் தலைவரை அழைத்து மேடையில் வைத்து அவமானப்படுத்தியமை வேண்டுமென்று திட்டமிட்டு செய்யப்பட்ட ஒரு செயலாகும். 

இராஜதுரை ஐயா அவர்கள் தானாக செல்லவில்லை அவர்களே அழைத்தார்கள் அவர்களின் அழைப்பின் பேரின் சென்றவருக்கு அவர்கள் கொடுத்த பரிசுதான் இது. இது வேண்டுமென்று திட்டமிட்டு செய்யப்பட்ட ஒரு செயல் எங்களால் நேசிக்கப்படுகின்ற ஒரு அரசியல் தலைவருக்கு செய்யப்பட்ட இச் செயலானது கிழக்கு மக்கள் எல்லோருக்கும் செய்யப்பட்ட ஒரு செயலாகும்.

 வடக்கு சாதிவெறி பிடித்த மேலாதிக்க சக்திகள் கிழக்கு மக்களை சாதி குறைந்தவர்களாக பார்க்கின்ற பார்வை இன்னும் இருக்கின்றது. அதன் வெளிப்பாடே ஐயா இராஜதுரை அவர்களை சக்கிலியன் என்றும் துரோகி என்றும் வசை பாடச் செய்திருக்கின்றது. 

கிழக்கைச் சேர்ந்த ஒரு அரசியல் தலைவருக்கு செய்யப்பட்ட இச் செயலை  கூட்டமைப்பிலே இருக்கின்ற மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் எந்தஒரு அறிக்கையினையும் எதிர்ப்பையும் வெளிப்படுத்தாமல் இருப்பது கவலைக்குரிய விடயம். இவர்கள் தொடர்ந்தும் வடக்கு மேலாதிக்க சக்திகளுக்கு துணை போகின்றவர்களாகவே இருக்கின்றனர். இச் செயலை கிழக்கு மக்கள் சார்பில் வண்மையாகக் கண்டிப்பதோடு மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் இச் செயல்தொடர்பில் மெளனிகளாக இருப்பார்களானால் அவர்களுக்கெதிராகவும் நாம் வீதியில் இறங்க தயாராக இருக்கின்றோம் என்றார்.












read more...

Thursday 26 April 2012

பிரதேசவாதம் பேசும் பினாமிகள் யார்?

பிரதேசவாதம் பேசும் பினாமிகள் யார்? கிழக்கு மக்களே சிந்தியுங்கள்
யாழிலுள்ள தந்தை செல்வநாயகத்தின் நினைவு சதுக்கத்தில்தந்தை செல்வாவின் நினைவு தினம் கூட்டத்திம் இன்று (26.04.2012) வியாழக்கிழமை நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் செல்லையா இராஜதுரை உரையாற்றுவதற்குஅமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கறுப்பு கொடிகாட்டி எதிர்புப் போராட்டத்தில் ஈடுபட்டார்
சிவாஜிலிங்கம் தனது கறுப்பு கொடி எதிர்ப்பின் போது, “தமிழ் தேசிய துரோகி இராஜதுரையை வெயேற்று எனவும் மட்டக்களப்பு துரோகி அரசின் அடிவருடி துரோகியை வெளியேற்ற வேண்டும்” என போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதன்போது தந்தை செல்வாவின் நினைவஞ்சலிக் கூட்டத்தில் குழப்ப நிலை ஏற்பட்டது.  மட்டக்களப்பு மகானுக்கா இந்த நிலை  நான் ஒரு மட்டக்களப்பான் என்ற வகையில் நான் படித்த அரசியல் வரலாறுகளையும் அழியாத மட்டக்களப்பின்  அரசியல் சரித்திரத்தையும் இன்று  வெளிப்படுத்த வேண்டும் யார் துரோகி  ?  மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினராக 33ஆண்டுகள் தொடர்ச்சியாக பதவி வகித்த பெருமைக்குரிய  இராசதுரை துரோகியா ? அல்லது இன்றய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் துரோகியா சங்கரி துரோகியா  என வெளிப்படுத்த வேண்டும் இன்று ரெலோ அமைப்பின் அரசியல் பிரிவு தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும்; எம்.கே.சிவாஜிலிங்கம் கறுப்பு கொடிகாட்டி  மட்டக்களப்பு துரோகி யை வெளியேற்ற வேண்டும் என கோசம் இட்டுள்ளார்  இவர்  இராசதுரைக்கு இட்ட கோசம் அல்ல ஒட்டு மொத்த மட்டக்களப்பு மக்களுக்கு இட்ட கோசம் 33 வருடம் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த மக்கள்  பிரதி நிதிக்கு  கொடுத்த பட்டம்  மக்களுக்கும் கொடுக்கப்பட்டது என்பதே பதே உண்மை  இதற்க்கு பின்னும்  வெட்கம் கெட்ட மட்டக்களப்பு கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாய் முடியுள்ளனர் ?
யார் இந்த இராஜதுரை ?
சொல்லின் செல்வன் செல்லையா இராசதுரை என்று மட்டக்களப்பில் பெரும்பாலானவர்களால் அழைக்கப்படும் இராசதுரை 1956ஆம் ஆண்டு தமிழரசுக்கட்சியில் போட்டியிட்டு மட்டக்களப்பு தொகுதி பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட போதிலும் அதற்கு முதல் 1950ஆம் ஆண்டுகளில் தமிழரசுக்கட்சியில் இணைந்து மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வராக தெரிவு செய்யப்பட்டதன் மூலம் அரசியலுக்கு பிரவேசித்திருந்தார்.
1956ஆம் ஆண்டிலிருந்து 1979ஆம் ஆண்டுவரை 23ஆண்டுகள் தமிழரசுக்கட்சியிலும் அதன் பின்னர் தமிழர் விடுதலைக் கூட்டணியிலும் இருந்தவர்
தந்தை செல்வநாயகத்தின் பின் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர்நாயகமாக தெரிவு செய்யப்பட்டவர் அப்பாபிள்ளை அமிர்தலிங்கம், இராசதுரையும் அமிர்தலிங்கமும் 1956ஆம் ஆண்டில் சமகாலத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்ட போதிலும் அமிர்தலிங்கம் 1970ஆம் ஆண்டு தேர்தலில் வட்டுக்கோட்டை தொகுதியில் தோல்வியடைந்திருந்தார்.
இராசமாணிக்கத்திற்கு பின்னர் கிழக்கில் தமிழரசுக்கட்சியிலும் அதன் பின் தமிழர் விடுதலைக் கூட்டணியிலும் இராசதுரையே மூத்தவராக இருந்தார். தந்தை செல்வநாயகத்தின் பின் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைமைப்பதவி தனக்கே கிடைக்கும் என எதிர்பார்த்திருந்த இராசதுரைக்கு அமிர்தலிங்கம் அப்பதவியை பெற்றுக்கொண்டது முதல் கசப்புணர்வு வளர ஆரம்பித்தது. தமிழர் விடுதலைக் கூட்டணியில் தலைவர் அல்லது செயலாளர் பதவிகளில் ஒன்று கிழக்கை சேர்ந்தவர் ஒருவருக்கு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை அமிர்தலிங்கம் போன்ற தலைவர்களால் நிராகரிக்கப்பட்டது அன்றே வடக்கு கிழக்க பிரிவினை உருவாகியது  தவிர இன்றல்ல என்பதை யாராவது மறுக்கமுடியுமா?
1977ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் வடக்கு தலைமைக்கு கிழக்கு மக்கள் மரண அடி கொடுத்தனர் கிழக்கு தலைமையை அழிக்க நினைத்த  தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகமாக இருந்த அமிர்தலிங்கம்.அந்த தேர்தலின் மூலம் காசி ஆனந்தனை மட்டக்களப்பு தொகுதியில் போட்டியிட வைத்து இராசதுரையை தோற்கடிக்க வேண்டும் என அமிர்தலிங்கம் திட்டமிட்டார்.
தொகுதிவாரியான தேர்தலில் ஒரு தொகுதியில் ஒரு கட்சியை சேர்ந்த ஒருவர் மட்டுமே போட்டியிட முடியும் என்பதால் மட்டக்களப்பு தொகுதியில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் உதயசூரியன் சின்னத்தில்இராசதுரைக்கே சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் என மட்டக்களப்பில் உள்ள தமிழர் விடுதலைக் கூட்டணி கிளைகளும் பொது அமைப்புக்களும் பெரும் போராட்டம் செய்தன  இதனால் இராசதுரைக்கு மட்டக்களப்பு தொகுதியில் தமிழர் விடுதலைக் கூட்டணியில் போட்டியிடுவதற்கு சந்தர்ப்பம் வழங்கிய போது அடுத்த கபட நாடகத்தை  அமிர்தலிங்கம் திட்டம் தீட்டினார்.  அதேதொகுதியில் செயலிழந்து போய் இருந்த தமிழரசுக்கட்சியில் காசி ஆனந்தனை மட்டக்களப்பு தொகுதியில் போட்டியிடவைத்தார்
இராசதுரையின் தேர்தல் பிரசார மேடைகளில் யாழ்ப்பாண அரசியல் தலைமைக்கு எதிராக மிக காரசாரமான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. யாழ்ப்பாண தலைமையின் கீழ் நாம் இருக்க கூடாது என்று கூட சிலர் பேசினர்.அன்றய தலைமைகள் குரல் எழுப்பின அன்று எடுத்த முடிவின் வெளிப்பாடு   மட்டக்களப்பில் இன்னும் சில காலத்தில் எடுக்கப்படும் என்பது இன்றய அரசியல் நிரோட்டத்தில் இருந்து உணரக்குடியதாகவுள்ளது
தேர்தலில் இராசதுரை அமேக  வெற்றி பெற்றார்
இந்நிலையில்தான் 1978ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கிழக்கு மாகாணத்தை சூறாவளி முற்றாக அழித்திருந்தது. சிதைந்து போன பகுதியை சிரமைக்கும்  பணியில் இடுபட அரசின் உதவியை நாடினார் மட்டக்களப்பு தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் செல்லையா இராசதுரை அனால் மட்டக்களப்பின் சிதைவை அழிவை சிந்திக்காத யாழ்பானத்தலமை
தமிழர் விடுதலைக் கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாரும் அரசாங்க அமைச்சர்கள் கலந்து கொள்ளும் எந்த கூட்டத்திலும் கலந்து கொள்ளக் கூடாது என உத்தரவு இட்டிருந்தது
சூறாவளியால் பாதிக்கப்பட்ட சிதைவடந்துள்ள புனரமைப்பு பணிகள் பற்றி ஆராய்வதற்குமாக 1979ஆம் ஆண்டு பிரதமராக இருந்த பிரேமதாஸ மட்டக்களப்புக்கு வருகை தந்தார்.பிரேமதாஸாவை  பாராளுமன்ற உறுப்பினர் செல்லையா இராசதுரை மட்டக்களப்பு மக்களுக்காக சென்று வரவேற்றார். மாவட்ட செயலகத்தில் பிரேமதாஸ தலைமையில் நடைபெற்ற கூட்டத்திலும் இராசதுரை கலந்து கொண்டார்.
அதில் இருந்த  கட்சி தலமைக்கும் இராசதுரைக்கும்  கடிதப் போராட்டம் நடைபெற்றது அழிந்து போன மட்டக்களப்பை மீட்டெடுப்பதற்காக அந்த கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டியது மக்கள் பிரதிநிதி என்ற வகையில் எனது கடமை. அந்த கடமையை செய்த என் மீது கட்சி தலைமை கேள்வி கேட்க முடியாது. விளக்கம் கேட்க முடியாது என இராசதுரை பதிலளித்திருந்தார்.
இராசதுரை உரிய காலத்தில் சரியான பதிலை கட்சி தலைமைப்பீடத்திற்கு வழங்கவில்லை என்றால் அவரை கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என அமிர்தலிங்கம் தரப்பு கூறிக்கொண்டிருந்தது. அப்போது உயிருடன் இருந்த திருமதி செல்வநாயகம், திருமதி திருச்செல்வம், ஆகியோருக்கு இராசதுரை  உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். தந்தை செல்வநாயகம் உயிருடன் இருந்திருந்தால் தான் இவ்வாறு பழிவாங்கப்பட்டிருக்க மாட்டேன் என்றும் தன்னை திட்டமிட்டு ஒதுக்கி ஓரங்கட்ட வைப்பதும் கட்சியிலிருந்து நீக்க நினைப்பதும் மட்டக்களப்பு மக்களுக்கு செய்யும் துரோகம் என எழுதியிருந்தார். மக்களை பற்றி சிந்தித்த தலைவன்  சிதைந்த தனது மண்னை கட்டியேழுப்ப 1979ஆம் ஆண்டு மார்ச் மாதமளவில் இராசதுரை ஆளும் கட்சிக்கு மாறினார். அவருக்கு பிரதேச அபிவிருத்தி அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. இதுதான்  இராசதுரையின் வரலாறு மட்டக்களப்பு மக்களை மதிக்காத கட்சியை விட்டு ஒதுங்கினார்
1978ல் அன்று ஜனாதிபதியாக இருந்த ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவுடன் உறவாடி பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு  ஆதரவாக வாக்களித்த அமிர்தலிங்கம் தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணி தமிழ் மக்களுக்கு செய்த அநீதியை போல இராசதுரை தமிழ் மக்களுக்கு அநீதி செய்ய வில்லை
அமிர்தலிங்கம், சிவசிதம்பரம்,  சம்பந்தன், ஆனந்தசங்கரி போன்றோர் நாடாளுமன்றத்தில் ஆதரவாக வாக்களித்து நிறைவேற்றிய பயங்கரவாத தடைச்சட்டத்தால்சிறையில் அடைக்கப்பட்டனர். கொல்லப்பட்டனர். இன்றும் அந்த பயங்கரவாத தடைச்சட்டத்தின்  தமிழர்கள் சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருக்கின்றனர் இன்று உயிருடன் உள்ள  சம்பந்தன் ஆனந்தசங்கரி போன்றவர்களின் இந்த மகா தவறை விடவா இராசதுரை அரசின் பக்கம் சேர்ந்து அமைச்சர் பதவி பெற்றது  பிழையா ?
இன்று தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி செய்யும்  போரினால் அழிந்த தேசத்தை கட்டமைப்பதை  அன்று இராசதுரை சூறாவளியால் பாதிக்கப்பட்ட புனரமைப்பு பணிகளில்  இடுபட்டவர்  இவருக்கு  ரெலோ அமைப்பின் அரசியல் பிரிவு தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் எம்.கே.சிவாஜிலிங்கம் கறுப்பு கொடிகாட்டி  மட்டக்களப்பு துரோகியை வெளியேற்ற வேண்டும் என கோசம் இடுவது. எந்த வகையில் நியாயம் யார் துரோகி  இன்றும் வடக்கு தலைவர்கள் மட்டக்களப்பு தலைவர்களை மக்களை  துரோகியாய் பார்க்கும் படலம் இன்றும் தொடர்ந்துள்ளது ? இவர்களிடம்  இன்னும் கைகோர்த்து பயனிப்பது சரியா பிழையா என தீர்மாணித்து தீர்க்கமாண முடிவெடுத்து கூட்டமைப்பிற்க்கு மரண அடி கொடுப்பது மாணமுள்ள மட்டக்களப்பானின் கடமையாகும்.
read more...

Tuesday 17 April 2012

கொள்கைகளை குழி தோண்டிப் புதைக்கும் கூட்டம்

முன்னைய பதிவின் தொடராகவே இப் பதிவு 

முன்னைய பதிவு

கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழரா முஸ்லிமா முதலமைச்சர் பகுதி -01


கிழக்கு மாகாணசபை கலைக்கப்பட்டு விரைவில் மாகாணசபை தேர்தல் இடம்பெறும் என்று இன்று பரவலாகப் போசப்படுகின்ற நிலையில் கிழக்கு மாகாணசபை கலைப்பு மற்றும் மாகாணசபை தேர்தலும் மக்கள் மத்தியில் பெரும் எதிர் பார்ப்புக்களையும் குழப்பங்களையும் ஏற்படுத்தி இருக்கின்றன. மக்கள் மத்தியில் மட்டுமல்ல அரசியல் கட்சிகள் அரசியல்வாதிகள் என்று எல்லோருமே பல குழப்பங்களுக்கு மத்தியில் பல சதித்திட்டங்கள் வயூகங்களை வகுத்துக் கொண்டிருக்கின்றனர்.

தமிழரா முஸ்லிமா முதலமைச்சர் என்பதிலே பாரிய எதிர்பார்ப்புக்களும் தமிழ் மக்கள் மத்தியில் பாரிய சவாலும் இருக்கின்றது. தமிழ் முதலமைச்சர் வரக்கூடாது என்பதிலே பிரதான தமிழ் கட்சிகள் உறுதியாக இருப்பதுடன் பல சதித் திட்ட்களையும் மேற்கொள்ள திட்டமிடுகின்றன. தமிழ் கட்சிகளைப் பொறுத்தவரை பல தமிழ் கட்சிகள் தனித்து போட்டியிட தீர்மானித்திருப்பதாக அறிய முடிகின்றது. இதனால் தமிழ் மக்களின் வாக்குகள் சிதறடிக்கப்பட்டு தமிழ் முதலமைச்சரை நாம் இழக்க நேரிடும்.

மறு புறத்திலே முஸ்லிம் மக்கள் தாங்கள் முதலமைச்சரை பெற வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றனர். அதற்குரிய திட்டங்களையும் முஸ்லிம் கட்சிகள் தீட்டிக்கொண்டிருக்கின்றனர். முஸ்லிம் மக்கள் ஒன்று படுகின்றபோது இலகுவாக முஸ்லிம்கள்முதலமைச்சரைப் பெற முடியும். தமிழர்களின் வாக்குகள் சிதறடிக்கப்பட வாய்ப்புக்கள் அதிகமாகவே இருக்கின்றன.

தமிழர் ஒருவர் மதலமைச்சராக வரவில்லை என்றால் அதற்கான முழுப்பொறுப்பையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரே ஏற்க வேண்டும். கிழக்கிலே தமிழ் முதலமைச்சரை இல்லாமல் செய்த வரலாற்றுத் தவறினை கூட்டமைப்பினர் செய்ய இருக்கின்றனர். கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்தியினை சகித்துக் கொள்ள முடியாத கூட்டமைப்பினர் காலங்காலமாக கிழக்கு மக்களுக்கு பல வரலாற்றுத் தவறுகளை செய்து வருபவர்கள் இம் மாகாணசபை தேர்தலையும் கிழக்கு தமிழ் மக்களுக்கு எதிராக பயன் படுத்த திட்டமிடுகின்றனர்.

கிழக்கு மாகாணத்தில் கிழக்கு மாகாணசபை உருவாக்கப்பட்டு கிழக்கு மாகாணம் துரிதமாக அபிவிருத்தி கண்டு வருவதை வடக்கு தலைமைகளால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. கிழக்கின் அபிவிருத்தியை இல்லாமல் செய்ய பல சதித்திட்டங்கள் தீட்டுகின்றனர். அதற்கு மட்டக்களப்பு மாவட்ட மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களும் உடந்தையாக இருந்து கிழக்கு மக்களுக்கு துரோகம் செய்கினறனர். இவர்களின் துரோகங்களை கிழக்கு மக்கள் மறந்துவிடக் கூடாது.

இன்று கூட்டமைப்பினர் கிழக்கு மாகாணசபை தேர்தலில் போட்டியிட இருப்பதாக அறிய முடிகின்றது. கூட்டமைப்பினரின் நிலைப்பாடுகள் என்ன? கொள்கைகள் என்ன? வடக்கு கிழக்கு இணைக்கப்பட வேண்டும் என்பதே அவர்களின் நிலைப்பாடு. கிழக்கு மாகாணசபையை சந்திரகாந்தன் பொறுப்பேற்றபோது சம்பந்தன் அவர்களை முதலமைச்சர் சந்திரகாந்தன் அவர்கள் சந்திக்க சென்றபோது கிழக்கு மாகாணசபை ஒன்று இல்லை கிழக்கில் ஒரு முதலமைச்சரும் இல்லை. கிழக்கு மாகாணசபையை நாம் ஏற்கவில்லை என்று திருப்பி அனுப்பியிருந்தார்.

இன்று கிழக்கு மாகாணசபையில் போட்டியிட தீர்மானிப்பதன் நோக்கம் என்ன? தமது வடக்கு கிழக்கு இணைந்த மாகாணசபை கொள்கையை குழி தோண்டிப் புதைத்துவிட்டனரா? இவர்களிடம் நிரந்தர கொள்கைகள் இல்லையா? தமிழ் மக்களை இவ்வாறு தொடர்ந்து ஏமாற்றப் போகின்றனரா? 

தமிழீழம் தமிழீழம் என்று இலச்சக்கணக்கான தமிழர்களை உரிமைப் போராட்டம் என்று அழித்தவர்கள். இதுவரை தமிழர்களுக்காக எதனைச் செய்தனர். கிழக்கு மாகாணசபை உருவாக்கப்பட்டு மாகாணசபை மூலம் தமிழர்களுக்கான தீர்வுகளை பெற முடியும் என்று கிழக்கு மாகாண முதலமைச்சர் சி;. சந்திரகாந்தன் சாதித்துக் காட்டியதன் பின்னர். இன்று கூட்டமைப்பினருக்கு மாகாணசபை மீது ஆசை வந்துவிட்டது. மாகாணசபைக்கு கனவு காண்கின்றனர்.

அண்மையில் அரியநேத்திரன் அவர்கள் ஒரு நிகழ்வில் பேசியிருந்தார் மக்கள் சாகலாம் கொள்கை சாகாது என்று கொள்கைகள் சாக வைக்காத கொள்கைகளாக இருக்க வேண்டும். கொள்கைகளுக்காக மக்களை சாக வைப்பவர்கள் இவர்கள்.அது ஒரு புறமிருக்க கொள்கை சாகாது என்று சொல்பவர்கள் வடக்கு கிழக்கு இணைந்த மாகாணம் வேண்டும் என்ற கொள்கைகளுடன் இருப்பவர்கள். கொள்கைகளை சாக வைத்து குழி தோண்டி புதைத்துவிட்டா கிழக்கு மாகாணசபை தேர்தலில் போட்டியிடப் போகின்றார்கள்.

தொடரும்...



read more...

Saturday 14 April 2012

கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழரா முஸ்லிமா முதலமைச்சர் பகுதி -01

இன்று கிழக்கிலே எல்லோராலும் பரவலாகப் பேப்படுகின்ற விடயம் கிழக்கு மாகாணசபைக் கலைப்பும் மாகாணசபைத் தேர்தலும் முதலமைச்சர் தமிழரா அல்லது முஸ்லிமா என்கின்ற விடயமுமாகும். இன்றைய கால கட்டத்தில் இவ்விடயங்களை கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த தமிழ் மக்கள் சிந்தித்து செயற்பட வேண்டும்.
கிழக்கு மாகாணசபை கலைப்பும் தொடர்ந்து இடம்பெறும் தேர்தலும் முதலமைச்சர் தெரிவுமே கிழக்கு தமிழர்களின் தலைவிதியை தீர்மானிக்கின்ற ஒன்றாக அமைய இருக்கின்றது. இம் மாகாணசபைத் தேர்தலானது தமிழ் மக்களிடையே சாவால் நிறைந்த ஒன்றாகவும் கிழக்கு வாழ் தமி்ழ் மக்களின் தலைவிதியினைத் தீர்மானிக்கின்ற ஒரு தேர்தலாகவும் அமைய இருக்கின்றது.
இத் தேர்தலில் முதலமைச்சரை தீர்மானிப்பதில் பல சவால்களை கிழக்கு தமிழ் மக்கள் எதிர்நோக்க இருக்கின்றனர். கடந்த மாகாணசபை தேர்தலையும் இன்றைய கால சூழ்நிலைகளையும் அரசியல் நிலைமைகளையும் நாம் ஆராய்ந்து பார்க்கவேண்டி இருக்கின்றது. கடந்த மாகாணசபைத் தேர்தலிலே முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனா அல்லது ஹிஸ்புல்லாவா என்று தீர்மானிப்பதிலே பல சவால்களை எதிர்நோக்கி தமிழ் மக்கள் வெற்றி பெற்று இருந்தனர் சிவநேசதுரை சந்திரகாந்தன் முதலமைச்சராக தெரிவு செய்யப்பட்டார்.
சந்திரகாந்தன் அவர்கள் முதலமைச்சராக தெரிவு செய்யப்பட்டதன் வெளிப்பாடுதான் இன்றை கிழக்கின் துரித அபிவிருத்தியாகும். ஹஸ்புல்லாவோ அல்லது வேறு ஒருவரோ அன்று முதலமைச்சராக பதவி ஏற்றிருந்தால் கிழக்கு மாகாணம் குறிப்பாக தமிழர் பிரதேசங்கள் இந்தளவிற்கு அபிவிருத்தியினைக் கண்டிருக்க முடியாது.
அன்று மாகாணசபைத் தேர்தல் இடம்பெற்ற சூழ்நிலைக்கும் இன்றைய சூழ்நிலைக்கும் பாரிய வேறுபாடுகளும ;தமிழ் மக்களுக்கு பாரிய சவால்களும் இருக்கின்றன. அன்று மாகாணசபை தேர்தல் இடம்பெற்றபோது தமிழ் கட்சிகளுக்கிடையே போட்டி இருக்கவில்லை தமிழ் மக்கள் அனைவரும் ஒரு கட்சிக்கே வாக்களித்திருந்தனர். அனைவரும் ஒருமித்து ஒரு கட்சிக்கு வாக்களித்தும் கூட தமிழ் முதலமைச்சரை தீர்மானிப்பதிலே பல சவால்கள் நிறைந்திருந்தன.
அன்றை நிலையைவிட இன்றைய நிலை மிக மோசமான பல சவால்கள் நிறைந்ததாக அமைய இருக்கின்றது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு உட்பட தமிழ் கட்சிகள் பல இத் தேர்தலிலே போட்டியிட தீர்மானித்திருப்பதாக அறிய முடிகின்றது. இதனால் தமிழ் மக்களின் வாக்குகள் சிதறடிக்கப்பட இருக்கின்றது. இதன் காரணமாக தமிழ் முதலமைச்சரை இழக்கக்கூடிய துப்பாக்கிய நிலையினை தமிழ் மக்கள் பெறப்போகின்றார்கள்.
பல கட்சிகள் போட்டியிட்டு தமிழர்களின் வாக்குகள் சிதறடிக்கப்பட்டு தமிழ் முதலமைச்சரை பெற முடியாமல் போகின்றபோது. நேரடியாகவே ஒரு முஸ்லிம் வேட்பாளர் முதலமைச்சராக வரப் போகின்றார். இதனால் அபிவிருத்தி கண்டு வரும் தமிழ் பிரதேசங்களின் அபிவிருத்திகள் தடைப்பட வாய்ப்புக்கள் இருக்கின்றன. இவ்வாறு பல பிரச்சினைகள் இருக்கின்றன.
இவ்வாறான பிரச்சினைகளை தமிழ் கட்சிகள் உணராமலும் இல்லை. கூட்டமைப்பு உட்பட பல தமிழ் கட்சிகள் கிழக்கில் ஒரு தமிழ் முதலமைச்சர் வரக்கூடாது என்பதற்காகவே தமிழர்களின் வாக்குகளை சிதறடிப்பதற்காக தேர்தலில் போட்டியிட தீர்மானித்திருக்கின்றனர்.
மறு புறத்தில் முஸ்லிம்கள் தாங்கள் முதலமைச்சரை பெற வேண்டும் என்பதற்காக ஒன்று பட்டு செயற்படுகின்றனர்.
தொடரும்..

read more...

Friday 13 April 2012

கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ் முதலமைச்சர் வரக்கூடாது என்பதற்காக திட்டமிடும் கூட்டமைப்பினர்



இன்று கிழக்கிலே அதிகம் பேசப்படுகின்ற விடயம் கிழக்கு மாகாணசபை விரைவில் கலைக்கப்படும் என்ற செய்தியாகும். இச் செய்தியுடன் தொடர்பு பட்ட பல விடயங்கள் பேசப்படுகின்றன. அவற்றில் மிக முக்கியமான பிரச்சினைக்குரிய விடயம் முதலமைச்சர் முஸ்லிமா? தமிழா? என்பதாகும்.

முஸ்லிம்கள் தாங்கள் முதலமைச்சரை பெற வேண்டும் என்பதில் உறுதியாக பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் தமிழ் கட்சிகள் தமிழ் முதலமைச்சர் வருவதனை விரும்பாதவர்கள் போன்று செயற்பட்டு வருகின்றனர். பல தமிழ் கட்சிகளும் சுயேற்சைக் குழுக்களும் போட்டியிட இப்பொழுதே முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இவ்வாறு தமிழ் கட்சிகள் பிரிந்து தமிழர்களின் வாக்குகளை சிதைத்து தமிழ் முதலமைச்சரை இல்லாமல் செய்ய முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இன்று சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் முதலமைச்சர் பதவியினை பொறுப்பேற்றதன் பின்னரே கிழக்கு மாகாணம் துரிதமாக வளர்ச்சி அடைந்து வருகின்றது. கிழக்கு மாகாணத்தின் துரித வளர்ச்சியினை பொறுத்துக் கொள்ள முடியாத சிலர் பல சதித் திட்டங்களை தீட்டி வருகின்றனர்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பினரும் கிழக்கிலே தமிழ் முதலமைச்சர் வரக்கூடாது என்பதிலே உறுதியாக இருக்கின்றனர். அவர்களின் இச் சதித் திட்டங்களுக்கு கூட்டமைப்பின் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் துணை போவது கவலைக்குரிய விடயம்.
 தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வடக்கு கிழக்கு இணைப்பு பற்றி பேசும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தனித்த கிழக்கு மாகாணசபை தேர்தலில் போட்டியிடுவது அவர்களின் கொள்கைகளுக்கு முரணானது இல்லையா?அன்று கிழக்கு மாகாணசபையை சந்திரகாந்தன் அவர்கள் பொறுப்பேற்றபோது கிழக்கு மாகாணசபை ஒன்று ல்லை என்று சம்பந்தனுடன் பேசச் சென்ற சந்திரகாந்தனை வர வேண்டாம் என்று திருப்பி அனுப்பியவர் கூட்டமைப்பின் தலைவர். இன்று கிழக்கு மாகாணசபைக்கு ஆசைப்படுவது ஏன்? நிரந்தர கொள்கை இல்லாததன் வெளிப்பாடா?

கிழக்கு மாகாணத்தின் இன விகிதாசார  அடிப்படையில் கூட்டமைப்பினர் தனித்து போட்டியிட்டு முதலமைச்சர் பதவியினை பெறுவது முடியாத காரியம். இவர்கள் தமிழர்களின் வாக்குகளை வேட்டையாடி கிழக்கிலே இடம்பெறும் துரித அபிவிருத்தித் திட்டங்களை இல்லாமல் செய்ய நினைக்கின்றனர்.

கூட்டமைப்பினர் அதிக ஆசனங்களை பெற்றால்கூட ஆட்சியமைக்க முடியாது. எதிர் கட்சி ஆசனங்களில் இருந்து அறுபது வருடங்களுக்கு மேலாக செய்துவரும் கதிரைகளை மட்டும் சூடேற்றும் வேலைகளை மட்டுமே செய்ய முடியும். 

இன்று என்னுடைய நண்பர் ஒருவர் மட்டக்களப்பு மாவட்டத்திலே அறிக்கை மன்னனாக திகழும்ஒரு பாராளுமன்ற உறுப்பினருக்கு தொலைபேசி அழைப்பினை எடுத்தார். வழக்கமாக அவருடன் பேசுபவர்தான் நண்பர். நண்பர் மாகாணசபை கலைப்பு விடயத்தையும் கூட்டமைப்பினர் கிழக்கு மாகாணசபை தேர்தலில் போட்டியிடுமா என்றும் கேட்டார்.

அதற்கு அவர் சொன்ன பதில் கேட்போம். அப்போது நண்பர் கேட்டார் வடக்கு கிழக்கு இணைப்பு பற்றி பேசும் நீங்கள் தனியாக இருக்கும் கிழக்கு மாகாணசபையில் போட்டியிடுவதா என்று தேர்தலில் போட்டியிடுவதற்காக கொள்கைகளில் மாற்றம் வரும் என்று சொன்னதுடன் நின்று விடாமல் பல விடயங்களை பேசினார் அப்போது நண்பர் கேட்டார் கூட்டமைப்பு போட்டியிட்டால் முதலமைச்சர் பதவி கிடைக்குமா என்று அதற்கு பாராளுமன்ற உறுப்பினர் சொன்ன பதில் நிட்சயமாக கிடைக்காது அது எமக்குத் தெரியும். இன்றை நாள் நேரத்தை குறித்து வையுங்கள் நான் ஒரு விடயம் சொல்கின்றேன்  கிழக்கிலே இனிமேல் ஒரு தமிழ் முதலமைச்சர் வரமாட்டார் நான் இவ்வாறு குறிப்பிட்ட நாளை ஞபகத்தில் வைத்திருங்கள் என்று சொன்னார்.

பாருங்கள் தமிழ் முதலமைச்சர் வரக்கூடாது என்பதிலே இவர்கள் எவ்வளவு அக்கறையாக இருக்கின்றார்கள். இவர்கள் கிழக்கு மக்களுக்கு தேவையா? 
read more...

Wednesday 11 April 2012

விரச்சமர்கள் பல புரியந்து வீர வரலாறு படைத்த கிழக்கு போராளிகளுக்கு வன்னிப் புலிகள் கொடுத்த பரிசு வெருகல் படுகொலை


விடுதலைப் புலிகள் அமைப்பின் பல வரலாற்று வீரச்சமர்களுக்கும் சரித்திர
வெற்றிகளுக்கும் பின்னால் ஒவ்வொரு வரலாறு இருக்கின்றது. வரலாற்றின்
கதாநாயகர்கள் கிழக்குப் போராளிகளே. விடுதலைப் புலிகள் அமைப்பின் ஒவ்வொரு
வெற்றிக்குப் பின்னாலும் இருப்பவர்கள் கிழக்குப் பொராளிகளே. சரித்தர
முக்கியத்துவம் வாய்ந்த வெற்றிகளை தேடிந்த பெருமை கிழக்குப் போராளிகளையே
சேரும். புலிகள் அமைப்பு வலுவான ஒரு அமைப்பாக அருப்பதற்கு தூண்களாக
இருந்தவர்கள் கிழக்குப் போராளிகளே.

கிழக்குப் போராளிகள் வீர வரலாறு படைத்த சரித்திரங்களை எழுதுவதென்றால்
எழுதிக் கொண்டே போகலாம். வரலாற்று வெற்றிகளைப் படைத்த கிழக்கு மண்
ஈன்றெடுத்த போராளிகளின் வரலாறுகள் சாதனைகள் மறைக்கப்படுவது ஒரு
புறமிருக்க. தமிழீழமே எமது மூச்சு என்று தமது சொந்தங்கள் பந்தங்கள்
சொத்து சுகங்களை இழந்து போராடப் புறப்பட்ட கிழக்குப் பொராளிகளை வன்னிப்
புலிகள் கொன்றொழித்த வரலாறுகளும் இருக்கின்றன.

கடந்த வருடங்களுக்கு முன்னர் கருணா புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்து
வந்தபோது கிழக்குப் போராளிகளும் புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்து
வந்தனர். அவர்கள் யுத்தத்தை விரும்பவில்லை நிம்மதியான வாழ்க்கையை
விரும்பியிருந்தனர். ஆனாலும் அவர்கள் புலிகள் அமைப்பிலிருந்தபோது பல
வெற்றிச் சமர்களை புரிந்து வீர வரலாறு படைத்தவர்கள்.

புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்து வந்து யுத்தம் வேண்டாம் ஆயுதக்
கலாச்சாரம் வேண்டாம் நிம்மதியாக வாழ வேண்டும் என்று இருந்த கிழக்குப்
போராளிகளுக்கும் கிழக்கு மக்களுக்கும் புலிகள் பேரிடியினைக் கொடுத்தனர்.
தமது அமைப்புக்காகவே போராடி பல சரித்திர வெற்றிகளை நிலைநாட்டி வீர வரலாறு
படைத்த ஒன்றாக உணவருந்தி ஒன்றாகவே படுத்துறங்கிய தமது சகோதர போராளிகளை
கொன்றொழிக்க புலிகள் அமைப்பு திட்டமிட்டது.

அவர்களின் திட்டங்களை சாதித்தும் காட்டினார்கள் ஏப்ரல் 10 அன்று
வெருகலில் கிழக்குப் போராளிகளை நோக்கி தமது துப்பாக்கிகளை நீட்டினர்.
வெறுமனே துப்பாக்கிகளோடு மட்டும் நின்றுவிடாமல் பல சித்திரவதைகளையும்
செய்தனர். அன்று அவர்கள் வெருகலில் நிராயுதபணிகளாக இருந்த போராளிகளை கொலை
செய்தது மட்டுமல்லாமல் பெண் போராளிகளை சொல்லொண்ணா சித்திரவதை செய்ததுடன்
பலாத்காரப் படுத்தியும் கொலை செய்தனர். இது ஒரு புறமிருக்க மறு புறத்தில்
வன்னியிலே இருந்த கிழக்குப் போராளிகள் சித்திரவதை செய்யப்பட்டமை வேறு
கதை. இவ் வெருகல் படுகொலையில் 210 க்கு மேற்பட்ட கிழக்குப் போராளிகளை
கொன்று குவித்தனர்.

புலிகள் அமைப்பு தமது கொள்கைகளுக்கு எதிரானவர்களுக்கு இவ்வாறான
நடவடிக்கைகளை எடுப்பார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்திருந்தாலும்
தம்மோடு ஒன்றாக இருந்து பல சரித்திர வெற்றிகளை பெற்றுத்தந்த போராளிகளை
இவ்வாறு கொடுரமாக கொன்று குவிப்பார்கள் என்று எவரும்
எண்ணிப்பார்க்கவில்லை.

இன்று கிழக்கு மாகாணசபை உருவாக்கப்பட்டு கிழக்கு மாகாணம் துரிதமாக
அபிவிருத்தி கண்டு வருகின்றதென்றால் அது அன்று கிழக்குப் போராளிகளின்
வெருகலில் சிந்திய குருதியும் அவர்களின் உயிர்தியாகங்களுமாகும். கிழக்கு
மாகாணத்துக்காக அன்று வெருகலில் உயிர் நீத்த கிழக்குப் போராளிகளின்
நினைவு தினமாகிய இன்றைய நாளில் அன்று உயிர் நீத்த அந்தப் போராளிகளின்
கனவுகளை நோக்கிப் பயணிக்க நாம் சபதம் எடுப்போம்.
read more...

Monday 9 April 2012

வடக்கு கிழக்கில் தொடர் கதையாகும் சிலை உடைப்புக்களும் அரசியலாக்க நினைக்கும் அரசியல் அசிங்கங்களும்

இன்று வடக்குக் கிழக்கில் சிலைகள் உடைக்கப்படுவது தொடர் கதையாகிவிட்டது. இது யாரால் செய்யப்படகின்றது என்பதற்கு அற்பால் சிலை உடைப்பினை அரசியலாக்கி அரசியல் இலாபம் தேடும் முயற்சியில் சில அரசியல்வாதிகள் இறங்கியிருப்பது கவலைக்குரிய விடயம்.
இன்று தமிழ் மக்கள் நிம்மதியாக வாழ்ந்து வருவதனை பொறுத்துக் கொள்ள முடியாதவர்களும் மக்களை குழப்பி அரசியல் இலாபம் தேட முனைபவர்களும் இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறான நடவடிக்கைகள் தொடர்வதன் பின்னணி என்ன? எதற்காக இவ்வாறான செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன என்பது கேள்விக்குறியே.
சிலை உடைப்பு என்பது மட்டக்களப்பில் மட்டும் இடம்பெறவில்லை. அண்மையில் யாழ்ப்பாணத்தில் உடைக்கப்பட்டது. திருகோணமலையில் தந்தை செல்வாவின் சிலை என்பன உடைக்கப்பட்டன. மட்டக்களப்பில் அண்மையில் சுவாமி விவேகானந்தர்சிலை உடைக்கப்பட்டது. பின்னர் இப்போது நான்கு சிலைகள் உடைக்கப்பட்டிருக்கின்றன.
இச் சிலைகள் யாரால் எதற்காக உடைக்கப்படுகின்றன என்பது ஒரு புறமிருக்க இச்சிலை உடைப்பு விடயத்தை வைத்து கூட்டமைப்பினர் அரசியல் நடாத்த நினைக்கின்றனர். மட்டக்களப்பில் இடம்பெற்ற சிலை உடைப்பு விடயத்தை அரசியலாக்க நினைக்கும் கூட்டமைப்பினர். பிள்ளையான் குழுவினரே சிலையினை உடைத்தனர் என்று தம்பட்டம் அடிக்கின்றனர்.
எதை வைத்து அரசியல் நடத்தலாம் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் கூட்டமைப்பினருக்கு சிலை உடைப்பு நல்ல வாய்ப்பாகிவிட்டது. இன்று பிள்ளையான் குழுவினருக்கு மக்கள் செல்வாக்கு அதிகரித்துவிட்டது எப்படி மக்களை மடையர்களாக்கலாம். பிள்ளையானைக் கவிழ்க்கலாம் என்று திட்டமிட்டுக் கொண்டிருந்த கூட்டமைப்பினருக்கு சிலை உடைக்கப்பட்டமை சிலை உடைப்பை வைத்து அரசியல் நடாத்தலாம் என்று நினைத்துவிட்டனர்.
பிள்ளையான் குழு சிலையை உடைத்துவிட்டது என்று அறிக்கைகள் விடும் கூட்டமைப்பினர் மக்களை மடையர்கள் என்று நினைத்துவிட்டனர். மட்டக்களப்பான் மடையன் என்று யாழ்ப்பாணத்தலைமைகள் சொல்வது புதிய விடயமல்ல. ஆனால் மட்டக்களப்பு மக்களால் தெரிவு செய்யப்பட்ட கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களே கிழக்கு மக்களை மீண்டும் மடையர்களாக்க நினைப்பது கவலைக்குரியது.
மட்டக்களப்பில் மட்டும் சிலை உடைக்கப்படவில்லை. வடக்கு கிழக்கில் பரவலாக சிலை உடைக்கப்படுகின்றது. மட்டக்களப்பில் சிலை உடைக்கப்பட்டபோது மட்டும் பிள்ளையான் உடைத்தான் என்று சொல்வது முட்டாள் தனமானது. அப்போ யாழ்ப்பாணத்தில் சிலை உடைக்க பிள்ளையான் சென்றாரா? திருகோணமலையில் சிலை உடைக்க சென்றாரா? கூட்டமைப்பினரின் முட்டாள்தனமான அறிக்கைககளும் வக்காளத்து வாங்கும் தமிழ் ஊடகங்களும்.
கூட்டமைப்பினர் சிலை உடைப்பு விடயத்தை அரசியலாக்கும் அதே வேளை சிலை விடயத்திலும் கூட மட்டக்களப்பை ஓரக்கண்ணால் பார்க்கின்றது. புறக்கணிக்கின்றது. யாழ்ப்பாணத்தில் சிலை உடைக்கப்பட்டபோது கூட்டமைப்பினர் என்ன செய்தனர். திருகொணமலையில் சிலை உடைக்கப்பட்டபோது என்ன செய்தனர் இன்று மட்டக்களப்பில் சிலை உடைக்கப்பட்டபோது என்ன செய்கின்றனர்.
யாழ்ப்பாணத்தில் சிலை உடைக்கப்பட்டபோது பாரிய எதிர்ப்பினை தெரிவித்ததோடு உடனடியாக சிலை நிறுவுவதற்கு நடவடிக்கை எடுத்து நிறுவினர். அதே போன்று தந்தை செல்வாவின் சிலை உடைக்கப்பட்டபோது தமது தலைவர் என்பதற்காக பாரிய எதிர்ப்புக்களை தெரிவித்து உடனடியாக சிலைகளை நிறுவினர்.
மட்டக்களப்பில் சுவாமி விவேகானந்தர் சிலை உட்பட 5 சிலைகள் உடைக்கப்பட்டிருக்கின்றன. இவற்றுக்கு கூட்டமைப்பினர் என்ன நடவடிக்கை எடுத்திருக்கின்றனர். ஒரு சிலையையாவது நிறுவ முன்வந்தனரா? வெறுமனே சிலை உடைப்பை வைத்து அரசியல் நடாத்த மட்டுமே நினைக்கின்றனர். இவர்கள் யாழ்ப்பாணத்தில் உடனே சிலைகளை நிறுவ முன் வந்தவர்கள் ஏன் மட்டக்களப்பில் நிறுவ முன்வரவில்லை. மட்டக்களப்பு என்பதனாலா?
மட்டக்களப்பில் உடைக்கப்பட்ட சிலைகளை உடனே நிறுவ நடவடிக்கை எடுத்ததைக்கூட எதிர்த்து அரசியல் செய்ய நினைக்கின்றனர் கூட்டமைப்பினர். அவர்கள் யாழ்ப்பாணத்தில் சிலையை உடனே நிறுவ முடியும் மட்டக்களப்பில் நிறுவக்கூடாது. இவர்களுக்கு மட்டக்களப்பான் எதுவும் செய்யக்கூடாது என்ற எண்ணம். அவர்கள் எதனையும் செய்யலாம் மட்டக்களப்பான் எதைச் செய்தாலும் எதிர்த்து அரசியல் செய்வதும் வர்கள் வேலை.
வர்களுக்கெல்லாம் பக்கப்பாட்டுப்பாடி கிழக்கு மக்களை ஏமாற்றி அரசியல் நடாத்தும் யோகேஸ்வரன் போன்றவர்கள் தொடர்ந்தும் கிழக்கு மக்களை ஏமாற்ற முடியும் என்று நம்பிக் கொண்டு இருந்தனர். ஆனால் அண்மையில் இடம்பெற்ற தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தேசிய மாநாட்டிற்கு 15000 க்கு மேற்பட்ட மக்கள் வருகை தந்ததமை கூட்டமைப்பினருக்கு கடும் தலையிடியை ஏற்படுத்தி இருந்ததது.
வெறுமனே ஒருவரை ஒருவர் குற்றம் சொல்வதை விடுத்து சிலை உடைப்பின் சூத்திரதாரிகளை பிடிப்பதற்கு நடவடிக்கை எடுக்க அரசியல் தலைவர்கள் மாத்திரமல்ல சமூகமும் ஒன்றிணைந்து செயற்பட்டு குற்றவாளிகளுக்கு சரியான தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
read more...

Sunday 8 April 2012

மட்டுநகர் சிலை உடைப்புக்கும் சில அரசியல்வாதிகளி்ன் செயற்பாடுகளுக்கும் கிழக்கிலங்கை மாற்றத்திற்கான மக்கள் அமைப்பு கண்டனம்



மாற்றத்திற்கான மக்கள் அமைப்பு
People Organisation for Change (POC)
மட்டக்களப்பு நகரிலுள்ள மகாத்மா காந்தியின் திருவுருவச்சிலையும், சாரணியத்தின் தந்தை என போற்றப்படும் பேடன் பவுலின் சிலையும், கிழக்கிலங்கைக்கு புகழ்சேர்த்த சுவாமி விபுலானந்த அடிகளின் சிலையும், மட்டக்களப்பிற்கு புகழ் சேர்த்த மண்டூர் பெரியதம்பிப்புலவரின் சிலையும்   (06.04.2012) வெள்ளிக்கிழமை அதிகாலை விஷமிகளால் உடைத்து சேதப்படுத்தப்பட்டுள்ளைமையை நாம் வண்மையாகக் கண்டிக்கின்றோம்.

கிழக்கு மாகாண மக்கள் பல தசாப்தங்களின் பின்னர் நிம்மதிப்பெருமூச்சு விட்டு வாழ்ந்துவரும் காலம் இது. யுத்தத்தால் சின்னாபின்னமாக்கப்பட்ட கிழக்கு துரிதமாக வளர்ச்சி அடைந்துவரும் இவ்வேளையில் கிழக்கு மக்களின் நிம்மதியான வாழ்க்கையையும் கிழக்கின் துரித அபிவிருத்தியையும் பொறுத்துக் கொள்ள முடியாத ஒரு கும்பலின் செயற்பாடே இது.

இச்சிலை உடைப்பு விவகாரத்தினை அரசியலாக்க நினைக்கும் யோகேஸ்வரன் போன்றோரின் செயற்பாடுகளையும் நாம் வண்மையாகக் கண்டிக்கின்றோம். குற்றவாளிகளை பிடிப்பதற்குரிய முயற்சிகளை செய்வதனை விடுத்து. வெறுமனே பிள்ளையான் குழு செய்தது என்று மக்களை குளப்பி அரசியல் இலாபம் தேட முயலும் யோகேஸ்வரன் போன்றோர் மக்களை குளப்பி அரசியல் நடாத்தும் கைங்கரியங்களை விடுத்து மக்களுக்காக செயற்பட முன்வர வேண்டும்.

இச் சிலைகள் யார் உடைத்தாலும் அவர்கள் மீது பாரபட்சமின்றி காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்விடயத்தை ஒருவர்மீது ஒருவர் குற்றம்சாட்டி அரசியல் நடாத்துவதை விடுத்து குற்றவாளிகளை பிடிப்பதற்கு அரசியல்வாதிகள் ஒன்றிணைந்து செயற்பட முன்வரவேண்டும்.

மாற்றத்திற்கான மக்கள் அமைப்பு
கிழக்கிலங்கை 
read more...

Friday 6 April 2012

மட்டக்களப்பில் காந்தி சிலை உட்பட நான்கு சிலைகள் உடைப்பு பின்னணி என்ன?

மட்டக்களப்பு நகரிலுள்ள மகாத்மா காந்தியின் திருவுருவச்சிலையும்இ சாரணியத்தின் தந்தை என போற்றப்படும் பேடன் பவுலின் சிலையும்இ கிழக்கிலங்கைக்கு புகழ்சேர்த்த சுவாமி விபுலானந்த அடிகளின் சிலையும்இ மட்டக்களப்பிற்கு புகழ் சேர்த்த மண்டூர் பெரியதம்பிப்புலவரின் சிலையும்  இன்று (06.04.2012) வெள்ளிக்கிழமை அதிகாலை விஷமிகளால் உடைத்து சேதப்படுத்தப்பட்டுள்ளது.

இன்று மட்டக்களப்பு சிலை உடைப்பு வரலாறுகள் தொடர்கதையாக மாறி வருகின்றது. அதுவும் மக்களால் போற்றப்படுகின்ற மகான்களின் சிலைகள் உடைக்கப்படுவது வருந்தத்தக்க விடயம். இன்று அதிகாலை இச் சிலைகள் உடைக்கப்பட்டதன் நோக்கம் என்ன? யாரால் உடைக்கப்பட்டது?

இவ்வாறான சம்பவங்கள் தொடர் கதையாக இருக்கக்கூடாது. முதன் முதலில் ஆரையம்பதியில் சுவாமி விவேகானந்தருடைய சிலை உடைக்கப்பட்டபோது சிலை உடைப்பு விடயத்தில் கைது செய்யப்பட்டவருக்கு உரிய தண்டனை வழங்கப்பட்டிருந்தால் இவ்வாறான சிலை உடைப்பு சம்பவங்கள் தொடர் கதையாக இருக்க வாய்ப்புக்கள் குறைவானதாகவே அமைந்திருக்கும்.

முன்னர் சுவாமி விவேகானந்தரின் சிலையினை உடைத்து பாரிய குற்றத்தினை புரிந்தவர் பிணையில் விடுதலை செய்யப்பட்டதன் நோக்கம் என்ன? இன்று நான்கு சிலைகளும் உடைக்கப்பட்டதன் நோக்கம் என்ன?

அதுவும் இன்று உடைக்கப்பட்ட  சிலைகள் நகரின் மத்திய பகுதி என்பது குறிப்பிடத்தக்கது. அத்தோடு நான்கு சிலைகள் உடைக்கப்பட்டிருக்கின்றன. கிழக்கு மாகாண மக்கள் நிம்மதியாக வாழ்ந்து வரும் இவ்வேளையில் மக்களை குழப்பமடையச் செய்யும் முயற்சியா?

இந்த நான்கு சிலைகளையும் உடைத்த குற்றவாளிகளையாவது காவல்துறையினர் கைது செய்து உரிய தண்டனை வழங்குவார்களா? 

சிலை தொடர்பில் நேற்று நான் எதிர்வு கூறிய என் பதிவு

சுவாமி விவேகானந்தரின் கை கால்கள் உடைக்கப்பட்ட வரலாறு தொடருமா?








read more...

Thursday 5 April 2012

சுவாமி விவேகானந்தரின் கை கால்கள் உடைக்கப்பட்ட வரலாறு தொடருமா?



கடந்த ஒரிரு மாதங்களுக்கு முன்னர் மட்டக்களப்பு ஆரையம்பதி - காத்தான்குடி எல்லைப்பிரதேசத்தில் ஆரையம்பதி பிரதான வீதியில் சுவாமி விபுலானந்தருடைய சிலை வைக்கப்பட்டது. சிலை வைக்கப்பட்டு ஒருசில மணித்தியாலங்களில் இனம் தெரியாதோரால் உடைக்கப்பட்டது.

சிலை உடைக்கப்பட்டு சில தினங்களில் ஒருவர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டார். அவர் பிணையில் விடுதலை செய்யப்பட்டார். 

இப்பொழுது மீண்டும் புதிய சிலை ஒன்று அதே இடத்தில் வைக்கப்படுகின்றது. மீண்டும் இச் சிலை உடைக்கப்படமாட்டாது என்பதற்கு என்ன உத்தரவாதம் இருக்கின்றது. சுவாமி விவேகானந்தருடைய சிலை உடைப்பு என்பது மிகவும் பாரதூரமான செயல் மட்டுமல்ல சம்பந்தப்பட்டவர்களுக்கு தகுந்த தண்டனை வழங்க வேண்டிய ஒரு செயலாகும். 

இச் சிலை உடைப்பானது தமிழ் முஸ்லிம் சமூகத்தினரிடையே பாரிய இன விரிசலை ஏற்படுத்தக்கூடிய ஒரு செயலாகும். உலகமே போற்றும் ஒரு மகானின் சிலையை உடைத்தமை இரு சமூகங்களுக்கிடையே விரிசலை ஏற்படுத்த முயற்சித்தமை. என்று குறித்த நபர்மீது பல குற்றங்களை அடுக்கிக்கொண்டே போகலாம் அப்படிப்பட்ட ஒருவரை பிணையில் விடுதலை செய்வது சரியா?

இச் சிலை உடைப்பிலே தொடர்பு பட்டவருக்கு தண்டனை வழங்காமல் பிணையில் விட்டமையானது. இன்னும் பலரை இச் செயலை செய்துவிட்டு தப்பிக் கொள்ளலாம் என்று எண்ணத்தோற்றப்பாட்டை தோற்றுவிக்கலாம்.

அது ஒரு புறமிருக்க முஸ்லிம்களின்  இஸ்லாம் சார்ந்த ஒரு சின்னம் இவ்வாறு உடைக்கப்பட்டிருந்தால் அல்லது ஒரு புத்தர்சிலை இவ்வாறு உடைக்கப்பட்டிருந்தால். எந்தளவிற்கு பிரச்சினையாகி இருக்கும். குறித்த நபர் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருப்பாரா?

உடைக்கப்பட்ட சிலை







read more...

Sunday 1 April 2012

கிழக்கு மாகாண மக்கள் யார் பின்னால்



கிழக்கு மாகாணம் மூவின மக்களும் ஒற்றுமையாக அன்று தொட்டு வாழ்ந்துவரும் ஒரு பிரதேசமாகும். இவ்வாறு ஒற்றுமையாகவும் நிம்மதியாகவும் வாழ்ந்து வரும் கிழக்கு மக்களை இன மத ரீதியாக பிரித்து குழப்பங்களை ஏற்படுத்தி அதன் ஊடாக அரசியல் நடாத்தும் தீய சக்திகள் அவ்வப்போது கிழக்கிலே வாழ்கின்ற மூவின மக்களையும் மோதவிட்டு வேடிக்கை பார்த்து இலாபம் தேடிக்கொண்டிருக்கின்றனர்.

இனங்களுக்கிடையிலான பிரிவினைகளை தோற்றுவிப்பது ஒருபுறமிருக்க கிழக்கிலே வாழ்கின்ற தமிழ் மக்களை தாழ்த்தப்பட்டவர்களாக பார்க்கின்ற யாழ்ப்பாண மேலாதிக்க சக்திகளின் கிழக்கு மக்களை ஏமாற்றுகின்ற அடக்கியாளுகின்ற கைங்கரியங்களை மிக சுலபமாக செய்வதற்கு கிழக்கிலே இருக்கின்ற மக்கள் தலைவர்கள் என்று தங்களை தாங்களே சொல்லிக்கொள்கின்ற கிழக்கு மாகாணத்தை நேசிப்பதாகச் சொல்லிக் கொள்கின்ற சிலர் கிழக்கு மாகாணத்திற்கும் கிழக்கு மக்களுக்கும் வரலாற்றுத் தரோகங்களை செய்து வருகின்றனர்.

யாழ்ப்பாண மேலாதிக்க சக்திகளானது கிழக்கு மாகாணத் தமிழர்கள் ஒற்றுமையாக இருக்கக்கூடாது ஒற்றுமையாக இருந்தால் கிழக்குத் தமிழர்கள் வலுப்பெற்று தங்களைவிட வலுவானவர்களாக தோற்றம் பெற்று விடுவார்கள் என்கின்ற நோக்கத்தின் காரணமாக கிழக்கத் தமிழர்களுக்கிடையே பிரிவினைகளை மறைமுகமாக ஏற்படுத்திவரும் பல வரலாற்றுப் பாடங்கள் எங்களுக்கு படிப்பினைகளை தந்திருக்கின்றன.

எது எப்படி இருப்பினும் கிழக்கு மக்களின் ஒற்றுமையினை சிதறடிப்பதென்பது இலகுவான விடயமல்ல. இருந்தபொதிலும் தமிழ் பற்று தமிழ் உணர்வு என்பன கிழக்குத் தமிழர்களை உணர்ச்சிவசப் படத்தக்கூடியவை. தமிழ் தேசியக் கூட்டமைப்பினரும் கிழக்கு மக்களை காலங்காலமாக ஏமாற்ற நினைப்பவர்களும் கிழக்குத் தமிழர்களை தங்கள் வசம் கட்டிப் பொடுவதற்கு பயன் படுத்திய ஆயுதம் உணர்ச்சி வார்த்தைகளும் அடய முடியாத இலக்கு நோக்கிய பயணமுமாகும்.

அனாலும் கிழக்கு மக்கள் கிழக்கு மண்மீது அதிக பற்றுறுதி கொண்டவர்கள். கிழக்கு மக்களை ஒற்றுமையாக வாழ விடாமல் பிரித்தாள நினைக்கின்ற் வடக்கு மேலாதிக்கத் தலைமைகளினதும் தழிழ் தேசியக் கூட்டமைப்பினரதும் செயற்பாடுகளுக்கும் அப்பால் கிழக்கின் தனித்தவத்திற்காக கிழக்கு மக்கள் ஒற்றுமைப்பட்டு இருக்கின்றார்கள். தமிழ் உணர்வு தமிழ் பற்று அதிகம் கொண்டவர்களாக கிழக்கு மக்கள் இருக்கின்றபோதிலும் கிழக்கின் தனித்துவம் என்று வருகின்றபோது கிழக்கு மண்ணை நேசிப்பவர்களாக ஒற்றுமைப்பட்ட வரலாறுகள் கிழக்கு மக்களை தொடர்ந்தும் ஏமாற்று முடியாது எனும் படிப்பினைகளை கிழக்கை மேலாதிக்க சிந்தனையோடு பார்க்கின்ற வடக்குத் தலைமைகளுக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு போன்றவர்களுக்கு தெரியும்.

விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து கருணா பிரிந்து வந்தபோது கிழக்கு மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு வடக்கு தலைமைக்கு எதிராக செயற்பட்டதை எவராலும் மறுக்க முடியாது. தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை தெய்வம்போல் தங்களின் உயிரக்கு இணையாக போற்றியவர்கள் கிழக்கு மக்கள். கிழக்கு மாகாணம் புறக்கணிக்கப் படகின்றது கிழக்கக்கான தனித்துவம் நிலை நாட்டப்பட வேண்டம் எனும் கருத்து வலுப்பெற்ற அவ் வேளையில் தங்களின் உயிரிலும் மேலாக மதிக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் உருவப்படங்களுக்கு செருப்பு மாலை போடடவர்களும் கிழக்கு மக்களே. இதற்கு காரணம் கிழக்கு மக்களுக்கு தமிழ் உணர்வுடன் தேசப் பற்றும் இரத்தத்தில் ஊறிய ஒன்றாகிவிட்டது. கிழக்கு மக்கள் கிழக்கின் தனித்துவத்தை விரும்புகின்றவர்கள். ஆனாலும் கிழக்கு மக்களின் ஒற்றுமை பிரதேசப்பற்று கிழக்கின் தனித்துவம் எனும் உதிரத்தில் ஊறிய உணர்வுகள் அவ்வப்போது பல சதிகளினாலும் உணர்ச்சி வார்த்தைகளாலும் தகர்த்தெறியப் படுகின்றன. 

இன்று கிழக்கு மக்கள் உண்மைகளையும் கிழக்கு மக்கள் மீது கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட வரலாற்றுத் துரோகங்களையும் உணர்ந்த மக்களாக கிழக்கின் தனித்தவத்தை நோக்கி ஒன்றுபட்டிருக்கின்றனர். கடந்த 18.03.2012 அன்று தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முதலாவது தேசிய மாநாடு மட்டக்களப்பு கல்லடி சிவானந்த விளையாட்டரங்கில் இடம் பெற்றது. இம் மாநாட்டின்போது கிழக்கிலே திருப்புமுனை ஏற்பட்டிருப்பதனை உணர முடிந்தது. அம் மாநாட்டிற்கு 15000 க்கு மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டனர். எவருமே இந்தளவிற்கு மக்கள் வருவார்கள் என்று கனவிலும்கூட எதிர்பார்க்கவில்லை.

மாநாட்டினை நடாத்திய தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினர்கூட இந்தளவிற்கு மக்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கவில்லை. 5000 க்கு உட்பட்ட மக்கள்தான் வருவார்கள் என தாம் எதிர் பார்த்ததாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர் குறிப்பிட்டார். இம் மாநாட்டிற்கு வந்த மக்கள் தாமாகவே வந்தவர்கள் கட்டாயத்தின்பேரில் எவரும் அழைக்கப்படவில்லை. கிழக்கு மாகாணத்திலே அதிகளவு மக்கள் கலந்துகொண்ட ஒரு கட்சியின் தேசிய மாநாடு இதுவாகும்.

இம் மாநாட்டில் இவ்வளவு மக்கள் தாமாகவே கலந்துகொண்டமை கிழக்கிலே இடம்பெறுகின்ற அபிவிருத்தித் திடடங்களையும் பாரிய மாற்றங்களையும். நிம்மதியான வாழ்க்கையினையும் விரும்பும் மக்களாகவும். கிழக்கிற்கான தனித்துவத்தினையும் விரும்பும் மக்களாகவே தாமாக இம் மாநாட்டில் பங்குபற்றினர் என்பது வெளிப்படை.

இந்தளவு மக்கள் ஒரு அரசியல் கட்சியின் தேசிய மாநாட்டில் பங்குபற்றுவதென்பது கிழக்கு அம் மக்கள் குறித்த கட்சிக்கு ஒரு திடமான அங்கிகாரத்தை வழங்கி இருக்கின்றார்கள் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி கிழக்கு மாகாணசபையை பொறுப்பெடுத்ததன் பின்னர் கிழக்கிலே துரிதமாக அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கிழக்கு மாகாணசபை உருவாக்கத்தின் பின்னரே கிழக்கு மக்கள் நிம்மதியாக வாழ்கின்றனர் இதுவரை அறுபது வருடங்களாக போராடி பல இழப்புக்களையும் உயிர்களையும் பறிகொடுத்து தமிழருக்கு எந்தவிதமான உரிமையும் கிடைக்காத நிலையில். மாகாணசபை முறைமை மூலம் படிப்படியாக உரிமைகளை வென்றெடுத்துவருவதுடன் அறுபது வருடங்களாக உரிமை உரிமை என்று தமிழ்ர்களை உசுப்பேற்றி தமிழர்களின் அழிவிற்கு காரணமான தமிழ் தேசியக் கூட்டமைப்பினரையே மாகாணசபை முறைமை மூலமே தீர்வுகளை பெற்றுக்கொள்ள முடியும் சிந்திக்க வைத்த தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் கொள்கைகள் செயற்பாடுகளில் நம்பிக்கை கொண்டதன் வெளிப்பாடேயாகும்.

எவரும் எதிர்பாராத விதமாக சிறப்பாக இம் மாநாடு இடம்பெற்றது. கிழக்கு மக்களையும் கிழக்கின் அபிவிருத்தியினையும் கிழக்குக்கான தலைமைத்தவத்தினையும் பொறுத்துக்கொள்ள முடியாத  வடக்கத் மேலாதிக்கத் தலைமைகளின் ஊது குழல்;களாக செயற்பட்டுக் கொண்டிருக்கின்ற தமிழ் ஊடகங்கள் இம்மாநாடு தொடர்பாக செய்திகளை சரியாக வெளிப்படுத்தாமை தமிழ் ஊடகங்களின் மேலாதிக்க சிந்தனையையும் காட்டுகின்றது. 

ஒரு யானை பள்ளத்தில் விழுந்தாலே பிரதான செய்தியாக்ககின்ற தமிழ் ஊடகங்கள் 15000 க்கு மேற்பட்ட மக்கள் கலந்து கொண்ட ஒரு கட்சியின் தேசிய மாநாட்டினைப் பற்றி செய்திகளை வெளியிடாமை ஒட்டு மொத்த கிழக்கு மக்களும் வேதனைப்பட வேண்டிய விடயமாகும். ஊடகங்கள் இவ்வாறு தொடர்ச்சியாக செயற்பட்டு வருகின்றமை கிழக்கிற்கான தனியான ஒரு ஊடகத்தின் தேவை உணரப்பட்டிருக்கின்றது. கிழக்கின் உண்மை நிலைகளையும் உண்மைசெய்திகளையும் வெளியிடுவதற்கென்று ஒரு ஊடகம் இல்லாதநிலை தோன்றியிருக்கின்றது.

அத்தோடு சமூக நல்லுறவைப் பேணுவதிலும் ஊடகங்களின் பங்கு அளப்பெரியது. ஆனால் ஊடகங்கள் சிறிய விடயங்களை பெரிதாக காட்டி சமூகங்களிடையே பிரச்சினைகளை ஏற்படுத்திய பல சம்பவங்களை நாம் சந்தித்திருக்கின்நோம். எனவே கிழக்கிலே துரித அபிவிருத்தியும் சமூக நல்லுறவும் கட்டியெழுப்பப்பட்டு வரும் இவ்வேளையில் கிழக்கிற்கான தனி ஒரு ஊடகத்தின் தேவை உணரப்பட்டிருக்கின்றது. 

கிழக்கின் அபிவிருத்தியிலே அக்கறையோடு செயற்படுகின்ற கிழக்கு மாகாண முதலமைச்சர் அவர்களும் அரசாங்கமும் கிழக்கிலே கிழக்கிற்கான ஊடகம் ஒன்றினை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே கிழக்கு மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கின்றது.

read more...