Sunday, 19 February 2012

வடக்கு கிழக்கு தமிழர்கள் பற்றி விக்கிலீக்ஸ் என்ன சொல்கிறது

வட மாகாணத் தமிழர்கள் குறித்து கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் சேகரித்து வைத்திருக்கின்ற தகவல்கள் மிகவும் சுவையானவையும், சுவாரஷியம் நிறைந்தவையும் ஆக உள்ளன.
வட மாகாண தமிழர் – பெருமை பிடித்தவர்கள் என்கிற உப தலைப்பில் இத்தகவல்கள் எழுதப்பட்டு உள்ளன
பரந்த விரிந்த சமுதாய நோக்கின்படி வட மாகாண தமிழர்களுக்கும், கிழக்கு மாகாண தமிழர்களுக்கும் இடையில் மிக நீண்ட காலமாகவே பதற்ற நிலை காணப்பட்டு வருகின்றது
பொதுவாக இந்து உயர் சாதியைச் சேர்ந்த வட மாகாண தமிழர்கள் அதிகம் படித்தவர்கள், நகரவாசிகள். கிழக்கு மாகாண தமிழர்கள் பொதுவாக வறியவர்கள், கிராமவாசிகள்.
இலங்கையில் யாழ்ப்பாணம்தான் தமிழர்களின் கலாசார அடையாளத்தின் மையமாக விளங்குகின்றது என்று காலம் காலமாக சொல்லி வருகின்றனர். பெருமை பிடித்தவர்கள்.
கல்வியில் உயர்ந்தவர்கள் என்று சுயம் பெருமைப்பட்டுக் கொள்கின்றனர். ஏராளமான பாடசாலைகள் யாழ்ப்பாணத்தில் உள்ளன. அமெரிக்க சபைகளினால் 19 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பல பாடசாலைகள் இங்கு உள்ளன.
கல்வித் தகைமைகள் காரணமாக பிரித்தானியர் ஆட்சியிலும் வட மாகாண தமிழர்கள் பயன் பெற்றனர். குறிப்பாக எழுதுவினைஞர் பதவி உட்பட பல பதவிகளிலும் அமர்த்தப்பட்டனர். வட மாகாண தமிழர்கள் என்கிறபோது இந்து வெள்ளாளர்களை குறிக்கின்றோம்.
யாழ்ப்பாண தமிழர்களில் பலர் கொழும்பில் மிகவும் வசதியாக உள்ளனர், வர்த்தகம் செய்கின்றார்கள். வெளிநாடுகளில் செல்வச் செழிப்புடன் வசிக்கின்ற இலங்கைத் தமிழர்களில் அநேகர் யாழ்ப்பாணத்தார்.
இலங்கையில் 23 சதவீதமானவர்கள் தமிழர்கள் என்றால் 18 சதவீதமானவர்கள் இலங்கைத் தமிழர், 05 வீதமானவர்கள் மலையகத் தமிழர். இலங்கைத் தமிழரில் மூன்றில் இரண்டு பங்கினர் யாழ்ப்பாணத்தார்.
வட மாகாண தமிழர்களில் அநேகர் அகம்பாவமும், தற்பெருமையும் பிடித்தவர்கள் என்பதை வட மாகாணத்தார் இயல்பாகவே ஏற்றுக் கொள்கின்றனர்.
யாழ்ப்பாணத்தார் எங்குல்லாம் போகின்றனரோ அங்கு சொத்துக்களை வாங்கி குட்டிப் பிரபுக்கள் போல் வாழ்கின்றனர், இவர்களின் தலைக் கனத்தை விளங்கிக் கொள்ள முடிகின்றது என யாழ்ப்பாண கத்தோலிக்க பாதிரியார் நிக்கொலஸ் தெரிவித்தார்.
ஆளப் பிறந்தவர்கள் என்கிற உணர்வு வட மாகாண தமிழர்களுக்கு உள்ளது, இலங்கையில் தமிழ் சமுதாயத்தை கட்டாயம் தலைமை தாங்கி நடத்த வேண்டியவர்கள் என்கிற உணர்வை பிறப்புரிமையாக கொண்டு இருக்கின்றனர் என்று சுரேஸ் பிறேமச்சந்திரன் கூறினார்.
தூதரகத்தில் இருந்து 2004 ஆம் ஆண்டு மார்ச் 17 ஆம் திகதி அமெரிக்க வெளியுறவு அமைச்சுக்கு அனுப்பப்பட்ட ஆவணம் ஒன்றில் இருந்து விக்கிலீக்ஸ் மூலம் இவ்விபரங்கள் கிடைத்து உள்ளன.
read more...

Tuesday, 14 February 2012

உங்களாலும் முடியும்தானே?

என் முயற்சி வீண் போகவில்லை என்று நினைக்கிறேன். உடனடியாக இருதய சத்திரசிகிச்சை செய்ய வேண்டிய மாணவனுக்கு கனடாவில் இருக்கும் ஒரு நண்பர் 25000 இலங்கை ரூபாவினை கொடுத்திருக்கின்றார். அம்மாணவனின் உயிரைக்காப்பாற்ற அனைவரும் முன்வாருங்கள். பணம் வழங்கிய நண்பர் தனது விபரங்களை வெளியிட வேண்டாம் என்று சொன்னதனால் அவரது விபரங்களை நான் வெளியிடவில்லை. அந்த நண்பருக்கு என் நன்றிகள்

முன்னைய பதிவு

வலைப்பதிவு எழுதும் நாம் எழுத்துக்களுடன் நின்று விடாது சமூகத்திற்காக ஏதாவது செய்ய வேண்டும். சில பதிவர்கள் இதனைச் செய்து வருகின்றனர். நானும் சமூக சேவை செய்து வருபவன் எனும் வகையில் உங்களிடம் ஒரு கோரிக்கையை முன்வைக்கின்றேன். 

 தற்போது உயர்தரம் படித்துக் கொண்டிருக்கும் ஒரு மாணவனுக்கு இருதய நோய் இருக்கின்றது. உடனடியாக இருதய சத்திரசிகிச்சை செய்ய வேண்டிய நிலையில் இருக்கின்றார். உடனடியாக சத்திரசிகிச்சை செய்யாவிட்டால் உயிராபத்து ஏற்படும் நிலையில் இருக்கின்றார். இருதய சத்திர சிகிச்சைக்காக இலங்கை ரூபா ஐந்து இலடசத்திற்குமேல் செலவாகும்.


ஆனாலும் அம்மாணவனின் குடும்பம் மிகவும் வறிய நிலையில் இருக்கின்றது. நல்ல எண்ணம் கொண்டவர்கள் இவரின் உயிரைக் காக்க உதவி செய்யுங்கள். இவர் மட்டக்களப்பு களுதாவளையைச் சேர்ந்தவர் பெயர் இராஜேந்திரம் நிமல்ராஜ் மட்களுதாவளை மகா வித்தியாலயத்தில் உயர்தரம் படிக்கின்றார். மாணவனின் உயிரைக்காக்க உதவ நினைப்பவர்கள் என்னைத் தொடர்பு கொள்ளுங்கள் நேரடியாக குறித்த மாணவனுடன் தொடர்புபடுத்தி விடுகிறேன்.

எனது மின்னஞ்சல் :-shanthruslbc@gmail.com
 தொலைபேசி இலக்கம் : - 0094778548295


சில நண்பர்கள் உதவுவதாக தெரிவித்தனர் அவர்கள் விரைவு படுத்துமாறு கேட்டுக்கொள்கினறேன். பதிவிட்ட நண்பர்களுக்கும் நன்றிகள். அத்துடன் மதிசுதா அவர்கள் பதிவிட்டதுடன் பல நடவடிக்கைகளை மேற்கொண்டார். அவருக்கு நன்றிகள் அவரின் நடவடிக்கைகளை துரிதப்படுத்தமாறும் அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன். எனது இந்தப் பதிவினைப் பார்த்து பதிவர்கள் என்மிது கோபப்பட்டால் அது என்னை ஒன்றும் செய்யப் போவதில்லை. குறித்த மாணவன் தன் நிலை தொடர்பாக நேற்று என்னிடம் மிகவும் கவலையுடன் கூறியபோது என்னை அறியாமலே என் கண்ணில் கண்ணீர் வந்தது. 
read more...

செக்ஸ்.. காமக்கடலில் மூழ்கியவர்களும் தமிழ்மணத்தின் அராஜகமும்


என்  வலைப்பதிவினை தமிழ்மணத்திலிருந்து நீக்குவதற்காக பாடுபட்ட கருத்துக்களை கருத்துக்களால் வெல்ல முடியாத முதுகெலும்பில்லாத கோளைகளுக்கு நன்றிகள். கடந்த எட்டாம் திகதி என்னுடைய வலைப்பதிவு தமிழ் மணத்திலிருந்து நீக்கப்பட்டிருக்கின்றது. எனக்கு தமிழ்மணம் குழுவினரால் அனுப்பப்பட்ட அனுப்பப்பட்ட மின்னஞ்சல் இதோ

Dear சந்ரு,
Your blog is Removed from listing by tamilmanam.net Administrator due to follwing reason,

http://www.shanthru.com/2012/02/blog-post_6315.html நீங்கள் இப்படியான படங்களுக்கு இணைப்புகளைக் கொடுத்துக்கொண்டிருந்தால் (அவற்றினைக் கண்டிப்பதாகச் சொல்லிக்கொண்டே), தமிழ்மணத்திலே இப்பதிவினை இணைத்திருப்பதிலே அர்த்தமில்லை. இப்பதிவு உடனடியாக நீக்கப்படுகின்றது. எங்கள் முடிவினைப் புரிந்துகொள்வீர்களென நம்புகிறோம். நன்றி

நிர்வாகி
www.tamilmanam.net.

அதற்கு நான் தமிழ்மணத்திற்கு அனுப்பிய மின்னஞ்சல் இது

வணக்கம்...

தமிழ்மணம் முதன்மைத்திரட்டியாக இருப்பது வரவேற்கத்தக்கது. எனது சந்ருவின் பக்கம் www.shanthru.com பதிவில் ஆபாச படங்கள் இருப்பதனால் என் பதிவை நிக்கியமை வரவேற்கத்தக்கது. எனது வலைப்பதிவிற்கு அதிகமான வாசகர்கள் தமிழ் மணத்திலிருந்துதான் வருகின்றனர். எனது வளர்ச்சியில் தமிழ் மணத்தின் பங்கு மிகப்பெரியது. என்னை தமிழ் மணத்திலிருந்து நிக்கியமை பெரும் மனவேதனையை தருகின்றது.

நான் இதுவரை ஒருபோதும் இவ்வாறான படங்களை பகிர்ந்து கொள்ளவுமில்லை. என் பதிவுகளை பார்த்தால் புரியும். இந்தப்பதிவில் மட்டுமே படங்களை இணைத்தேன். அதனையும் நீக்கி இருக்கின்றேன். தொடர்ந்து நான் இவ்வாறான படங்களை பகிர்ந்து வந்திரந்தால் நிங்கள் நீக்கி இருக்கலாம்.

ஒரு பதிவில் மட்டும் இணைத்தமைக்கு இவ்வாறு செய்வது மனவேதனை தருகின்றது. என் பதிவுகள் சமூகம் சார்ந்த பதிவுகள். வெறுமனே மொக்கைப்பதிவுகள் இல்லை. இனிமேல் இவ்வாறான விடயங்கள் இடம்பெறாமல் தவிர்த்துக் கொள்கிறேன்.

என் வழலப்பதிவினை மீண்டும் தமிழ் மணத்தில் இணைத்துக் கொள்ள முடியுமா?

உங்களிடமிருந்து நல்ல பதிலை எதிர்பார்க்கின்றேன்.

நன்றி
என்றும் அன்புடன்
சந்ரு
 
இதுவரை தமிழ்மணம் பதில் அனுப்பவில்லை

அவர்களால் சுட்டிக்காட்டப்பட்ட பதிவில் அரைகுறை ஆடைகளுடன் 3 படங்களை இணைத்து இருந்தேன் அதனை நீக்கும்படி அமல்ராஜ் கூறியதனால் 2 படங்களை உடனே நீக்கிவிட்டேன். தமிழ்மணம் குழுவினரின் இந்த முடிவு சரியானதா? இதற்கு முன்னர் நான் இவ்வாறான படங்களை இணைத்திருந்தால் பரவாயில்லை ஆனாலும் இப் பதிவில் படத்தினை நான் உடனே நீக்கியிருந்தேன். என்னுடைய பதிவுகள் வெறுமனே கில்மா பதிவுகளோ அல்லது மொக்கைப்பதிவுகளோ இல்ல.

நான் சமூகத்தின் பிரச்சினைகளை எழுதி வருகின்றேன். சரி இந்தப்பதிவில் தவறான படங்களை இணைத்துவிட்டேன் இதற்கு முன்னர் நான் ஒருபோதும் இவ்வாறான படங்களை பதிவிட்டதில்லை. தமிழ்மணம் குழுவினர் என்ன செய்திருக்க வேண்டும். எனக்கு மின்னஞ்சல் அனுப்பி இருக்கலாம் அப்படத்தினை நீக்கும்படி.

தமிழ்மணம் நிர்வாகிகளிடம் கேட்கின்றேன் தமிழ்மணத்தில் இணைக்கப்படுகின்ற பதிவுகள் அனைத்தும் தமிழ்மணத்தின் கட்டுப்பாடுகள் கொள்கைகள் விதிகளுக்கு அமைவாகவா இணைக்கப்படுகின்றன. தமிழ்மணத்தில் இணைக்கப்படுகின்ற ஏனைய பதிவுகளில் ஒருவரை தாக்கி எழுதப்படவில்லையா? ஒரு கட்சி சார்ந்து எழுதப்படவில்லையா? செக்ஸ் காமம்பற்றி எழுதப்படவில்லையா? இவ்வாறான படங்கள் இணைக்கப்படவில்லையா?

ஒரு தடவை படங்களை இணைத்தேன் என்பதற்காக என் பதிவை நீக்கியிருக்கும் உங்கள் மனிதாபிமானம் எங்கே போனது. ஒருசிலர் எனக்கும் எனது பதிவுகளுக்கும் எதிராக என்னை தமிழ் மணத்திலிருந்து என் பதிவை நீக்கும்படி மின்னஞ்சல் அனுப்பினால் அதனை நீக்குவது மனிதாபிமானமல்ல. உங்களுக்கும் மூளை இருக்கின்றது என் பதிவுகளைப் பார்த்து நீங்கள் முடிவெடுக்க கற்றுக் கொள்ளுங்கள். என் பதிவுகளில் இதற்கு முன்னர் இவ்வாறான படங்கள் போடப்பட்டதா? இப் பதிவின் கருப்பொருள் படம் என்பவற்றை புரிந்து கொள்ளுங்கள்.

தமிழ்மணம் குழுவினரின் அண்மைக்கால செயற்பாடுகள் அவர்கள் நாகரிகமற்றவர்கள் என்பதனை வெளிக்காட்டுகின்றது. ஒருவர் செக்ஸ் காமம் பாலியல் பற்றி பேசக்கூடாதா எழுதக்கூடாதா? செக்ஸ் பாலியல் காமம்பற்றி எழுதினாலே பொங்கி எழுபவர்களே உங்களிடம் ஒரு கேள்வி உங்களிடம் காமம் இல்லையா நீங்கள் செக்ஸ் உணர்வு அற்றவர்களா? இன்று பாலியல் கல்வியே போதிக்கப்படும் காலத்தில் செக்ஸ் காமம் பாலியல் என்று எழுதியதற்காக போர்க்கொடி தூக்கும் நீங்கள்  வெளி உலகிற்கு வாருங்கள்.

எனது பதிவை தமிழ்மணத்திலிருந்து நீக்குவதற்காக பாடுபட்டவர்களிடம் சொல்கிறேன் என்னை தமிழ்மணத்திலிருந்து நீக்கியதனால் என் எழுத்துக்களை உங்களால் தடை செய்ய முடியாது. உங்களது இவ்வாறான செயற்பாடுகள் என்னை இன்னும் உச்சத்திற்கே கொண்டு செல்லும்.


செக்ஸ் காமம் பாலியல் ஒரு உணர்வு சார்ந்தது அதனை பேசக்கூடாது என்று கட்டுப்பாடு விதிப்பதனாலும் தவறாக பார்ப்பதனாலும் எதுவும் நடந்துவிடப் போவதில்லை. நம்மை நாம் சுயபரிசோதனை செய்துகொண்டு நல்லவர்களாக வாழந்தாலே போதும். எழுதுவதும் பேசுவதும் தவறில்லை.

செக்ஸ் காமம் பாலியல் தொடர்பாக எழுதினாலே போர்க்கொடி தூக்குபவர்களே நீங்கள் சொல்லங்கள் உங்களுக்கு செக்ஸ் உணர்வும் இல்லை காமமும் இல்லயைா? 
read more...

Friday, 10 February 2012

உனக்கில்லடி உபதேசம் ஊருக்குத்தாண்டி பதிவர்கள் நிலைப்பாடும் இதுதானா? புலம்பெயர் உறவுகளிடம் அன்பான வேண்டுகோள்நாம் ஒவ்வொருவரும் வலைப்பதிவு எழுத வந்ததன் நோக்கம் ஒருவருக்கொருவர் வேறுபடலாம். ஒருவர் பொழுதுபோக்குக்காக எழுத வந்திருக்கலாம். சிலரோ சமூகத்துக்காக எழுத வந்திருக்கலாம். ஆனாலும் நாம் சமூகத்துக்காக ஏதாவது செய்ய வேண்டும்.

இன்று பதிவர்கள் நாம் சமூகம் சமூகம் தமிழன் தமிழன் என்றெல்லாம் கோசம் எழுப்பிக் கொண்டிருக்கின்றோம். இவையெல்லாம் உனக்கில்லடி உபதேசம் ஊருக்குத்தாண்டி என்பதுபோல் வெறும் வேசம் என்று எண்ணத் தோன்றுகின்றது.

நாம் வலைப்பதிவு எழுத வந்து சமூகத்தக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைப்பவன் நான். சமூகத்துக்கு ஏதாவது செய்ய வேண்டும் எனும் நோக்குடன் வலைப்பதிவு எழுத வந்தவன் நான். மிகவும் கவலைக்கிடமாக இருக்கின்ற ஒரு மாணவனுக்கு இருதய சத்திர சிகிச்சைக்காக உதவும்படி  கடந்த இரு மாதங்களாக அடிக்கடி பதிவிட்டு வருகின்றேன். இதுவரை அந்த மாணவனுக்கு ஒரு சதக்காசுகூட எவராலும் வழங்கப்படவில்லை.

ஒரு உயிரைக்காக்க எவரும் முன்வராதிருப்பது கவலைப்பட வேண்டிய விடயம். இன்று எத்தனையோ பதிவர்கள் நாம் பதிவிட்டுக்கொண்டிருக்கின்றோம். தினம் எவ்வளவோ பணத்தினை செலவு செய்கின்றோம். ஒரு பதிவர் 100ரூபா உதவி வழங்கினாலே பெருந்தொகைப் பணம் வரும். சமூகம் சமூகம் என்று எழுதிக் கொண்டிருப்பதெல்லாம் வெறும் வேசம்தானா என்று எண்ணத் தோன்றுகின்றது. ஒரு உயிரைக் காக்க உதவ முடியாத நாம் சமூகம் சமூகம் என்று எழுத வேண்டிய அவசியமில்லை.

சரி உதவத்தான் பணம் இல்லை என்றாலும். ஒரு பதிவாவது இட முடியாதா? நாம் ஒருவரை ஒருவர் பாராட்டி புகழ்ந்து எழுதுவதனைவிட உயிரைக்காக்க ஒரு பதிவு எழுதுங்கள். ஒரு உயிரைக் காக்க உதவாத பதிவுலகம் தமிழ் பதிவுலகம். அதற்குள் நான் பெரிது நீ பெரிது என்ற சண்டைகளும் சச்சரவுகளும். 

பதிவர்கள் மீது இருந்த நம்பிக்கை எல்லாம் பொய்விட்டது. பதிவுகளை படிக்கின்ற தனவந்தர்கள் சமூக சேவை நோக்கம் கொண்டவர்கள். புலம்பெயர் தமிழர்கள் உதவ முன்வாருங்கள் குறித்த மாணவன் மிகவும் வறிய குடும்பத்தைச் சேர்ந்தவன் அவனுக்கு உடனடியாக சத்திர சிகிச்சை செய்ய வேண்டும். இல்லையேல் அவரது உடல்நிலை கவலைக்கிடம்..


முன்னைய பதிவு


நண்பர்களே ஒரு மாணவனின் உயிரைக் காப்பாற்ற உதவுங்கள் என்று இரண்டு பதிவுகள் போட்டும் சிலர் உதவுவதாக சொல்லி இருக்கின்றனர். இருந்தும் எந்த உதவியும் இதுவரை கிடைக்கவில்லை விரைவில் குறித்த மாணவனுக்கு சத்திரசிகிச்சை செய்ய வேண்டிய நிலையில் இருக்கின்றார். முந்திய பதிவை அப்படியே தருகிறேன்.

வலைப்பதிவு எழுதும் நாம் எழுத்துக்களுடன் நின்று விடாது சமூகத்திற்காக ஏதாவது செய்ய வேண்டும். சில பதிவர்கள் இதனைச் செய்து வருகின்றனர். நானும் சமூக சேவை செய்து வருபவன் எனும் வகையில் உங்களிடம் ஒரு கோரிக்கையை முன்வைக்கின்றேன். 

 தற்போது உயர்தரம் படித்துக் கொண்டிருக்கும் ஒரு மாணவனுக்கு இருதய நோய் இருக்கின்றது. உடனடியாக இருதய சத்திரசிகிச்சை செய்ய வேண்டிய நிலையில் இருக்கின்றார். உடனடியாக சத்திரசிகிச்சை செய்யாவிட்டால் உயிராபத்து ஏற்படும் நிலையில் இருக்கின்றார். இருதய சத்திர சிகிச்சைக்காக இலங்கை ரூபா ஐந்து இலடசத்திற்குமேல் செலவாகும்.


ஆனாலும் அம்மாணவனின் குடும்பம் மிகவும் வறிய நிலையில் இருக்கின்றது. நல்ல எண்ணம் கொண்டவர்கள் இவரின் உயிரைக் காக்க உதவி செய்யுங்கள். இவர் மட்டக்களப்பு களுதாவளையைச் சேர்ந்தவர் பெயர் இராஜேந்திரம் நிமல்ராஜ் மட்களுதாவளை மகா வித்தியாலயத்தில் உயர்தரம் படிக்கின்றார். மாணவனின் உயிரைக்காக்க உதவ நினைப்பவர்கள் என்னைத் தொடர்பு கொள்ளுங்கள் நேரடியாக குறித்த மாணவனுடன் தொடர்புபடுத்தி விடுகிறேன்.

எனது மின்னஞ்சல் :-shanthruslbc@gmail.com
 தொலைபேசி இலக்கம் : - 0094778548295


சில நண்பர்கள் உதவுவதாக தெரிவித்தனர் அவர்கள் விரைவு படுத்துமாறு கேட்டுக்கொள்கினறேன். பதிவிட்ட நண்பர்களுக்கும் நன்றிகள். அத்துடன் மதிசுதா அவர்கள் பதிவிட்டதுடன் பல நடவடிக்கைகளை மேற்கொண்டார். அவருக்கு நன்றிகள் அவரின் நடவடிக்கைகளை துரிதப்படுத்தமாறும் அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன். எனது இந்தப் பதிவினைப் பார்த்து பதிவர்கள் என்மிது கோபப்பட்டால் அது என்னை ஒன்றும் செய்யப் போவதில்லை. குறித்த மாணவன் தன் நிலை தொடர்பாக நேற்று என்னிடம் மிகவும் கவலையுடன் கூறியபோது என்னை அறியாமலே என் கண்ணில் கண்ணீர் வந்தது. 
read more...

Tuesday, 7 February 2012

சர்வதேச ரீதியில் வலுப்பெறும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்


கிழக்கு மாகாணத்தில் உருவாக்கப்பட்ட கிழக்கின் தலைமைத்துவத்தைக் கொண்ட முதலாவது கட்சி என்று சொல்லப்படுகின்ற தற்போது கிழக்கு மாகாண சபையையும் கிழக்கு மாகாணத்தின் பல உள்ளுராட்சி சபைகளையும் தன்வசம் வைத்திருக்கும் முதலமைச்சர் சந்திரகாந்தன் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி சர்வதேச ரீதியிலும் தம் இருப்பை பலப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டிருக்கின்றன.

தற்பொது கிழக்கு மாகாணத்தில் இடம்பெறும் துரித அபிவிருத்தித் திட்டங்கள் முதலமைச்சரின் தூர நோக்கிலான சிந்தனை செயற்பாடு கட்சியின் கொள்கைகள் என்பவற்றால் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியினர் கிழக்கிலே பலமான ஒரு கட்சியாக வேருன்றி வருகின்றனர். 
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி கிழக்குக்கான ஒரு தலைமைத்துவம் வேண்டும் கிழக்கிற்கு தனியான ஒரு கட்சி வேண்டும் எனும் அடிப்படையில் உருவாக்கப்பட்ட கட்சி. அதன் அடிப்படையில் கிழக்கு மாகாணசபை தேர்தலிலும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலிலும் போட்டியிட்டு கிழக்கு மாகாணசபையை கைப்பற்றியதுடன் பல உள்ளுராட்சி மன்றங்களையும் கைப்பற்றி கிழக்கு மாகாணசபை மூலம் கிழக்கு மாகாணம் தூரிதமாக அபிவிருத்தி அடைந்து வருகின்றது.

கட்சியின் உருவாக்கத்திற்கு பக்க பலமாக இருந்து கிழக்கினதும் கட்சியினதும் முன்னேற்றத்தின் பக்க பலமாக இருந்து செயற்பட்ட கட்சியின் முன்னாள் தலைவர் குமாரசாமி நந்தகோபன்(ரகு) அவர்கள் படுகொலை செய்யப்பட்டாலும் தற்போதைய கட்சியின் தலைவரும் முதலமைச்சருமான சந்திரகாந்தன் அவர்கள் கட்சியை மக்கள் மயப்படுத்தும் முயற்சியில் பல திட்டங்களை செயற்படுத்தி வருகின்றார். 

கட்சி உருவாக்கப்பட்ட ஆரம்பகாலத்தில் கட்சிக்கு பெரும் வரவேற்பு இருந்தாலும் பின்னர் படிப்படியாக மக்கள் ஆதரவு குறைந்திரந்தது. இதற்கான காரணம் கருணா பிள்ளையான் இருவருக்குமிடையிலான கருத்து முரண்பாடும் பிரிவுமாகும். கருணா புலிகள் அமைப்பிலிருந்து விலகி வந்தபோது அவர் பிரிவிற்கான காரணத்தை சொன்னபோது கிழக்கு மக்கள் அவரை 100 வீதம் நம்பினர். 

அவர் அன்று சொன்ன விடயங்கள் கிழக்கு மக்கள் வடக்கு தலைமைகளால் கிழக்கு மக்கள் ஏமாற்றப்படுகின்றார்கள் கிழக்குக்கு ஒரு தலைமைத்தவம் வேண்டும் கிழக்கில் ஒரு கட்சி வேண்டும் என்று சொன்னவர் தனது நோக்கத்திலிருந்து விலகி அரசுடன் இணைந்து கொண்டதனால் மக்கள் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியையும் கருணாவையும் ஒன்றென நினைத்துவிட்டனர்.

இது ஒரு புறமிருக்க கருணா குழுவைச் சேர்ந்தவர்களின் அடாவடித்தனங்கள் மலிந்திருந்தன. அவர்கள் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் எனும் பெயரில் இயங்கியவர்கள் என்பதனால் கருணா குழுவினர் செய்யும் அடாவடித்தனங்கள் அனைத்தும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்தான் செய்கின்றனர் எனும் தப்பான அபிப்பிராயம் மக்கள் மத்தியில் இருந்தன. ஊடகங்களும் இதனை பாய்பிரசாரம் செய்ய ஆரம்பித்தன. 

இக்கால கட்டத்தில்தான் பாராளுமன்றத் தேர்தல் இடம்பெற்றன அப்போது பல சவால்களுக்கு மத்தியில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி போட்டியிட்டாலும் 25 ஆயிரத்தக்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெற்றிருந்தனர். இத் தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி போட்டியிட்டிருக்க வில்லை எனில் முஸ்லிம்களின் பாராளுமன்றப் பிரதிநிதித்தும் அதிகரித்திருக்கும்.

தொடர்ந்தும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி தமது கட்சியினை வலுப்பெற செய்வதில் பல முன்னெடுப்புக்களை மேற்கொண்டு வருகின்றனர். தமது கட்சியின் நிலைப்பாடுகள் தொடர்பாக கட்சியின் ஆதரவாளர்களுக்கும் மக்களுக்கும் தெளிவுபடுத்தப்பட்டு வருகின்றது. அத்துடன் கட்சியானது முற்றிலும் மக்கள் மயப்படுத்தப்பட்டு மக்கள் கட்சியாக மாற்றம் பெற்றிருக்கின்றது. கட்சியில் கிழக்கைச் சேர்ந்த பல படித்த புத்தியீவிகள் இணைக்கப்பட்டுள்ளதுடன் கட்சியில் உள்வாங்கப்பட்டு இளைஞர்களுக்கு பதவிகள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. 


மறு புறத்திலே சர்வதேச ரீதியிலும் தமது கட்சியின் கொள்கைகள் நிலைப்பாடுகள் தொடர்பாகவும் கிழக்கிலே இடம்பெறுகின்ற அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாகவும் தெளிவு படத்தும் செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன.

அண்மையில் முதலமைச்சர் மற்றும் மாகாணசபை உறுப்பினர் பூ.பிரசாந்தன் உள்ளிட்ட குழுவினர் இரண்டுவார கால ஐரோப்பிய நாடுகளுக்கான விஜயத்தினை மேற்கொண்டிருந்தனர். பிரான்ஸ், ஜேர்மன், டென்மார்க் போன்ற நாடுகளில் வாழும்  கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்களை சந்தித்து தமது கட்சியின் கொள்கைகள நிலைப்பாடுகள் கிழக்கிலே இடம்பெற்று வரும் அபிவிருத்திகள் தொடர்பாகவும் பேசப்பட்டிருக்கின்றது.

இச் சந்திப்புக்களில் புலம்பெயர் கிழக்கு மாகாண முக்கியஸ்தர்கள் பலர் கலந்துகொண்டிருக்கின்றனர். இவர்கள் கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்திக்கு தமது பங்களிப்பினை வழங்குவதாக உறுதியளித்துள்ளனர். அத்துடன் பல முக்கியமான விடயங்கள் தொடர்பாக பேசப்பட்டதாகவும் மாகாண சபை உறுப்பினர் பூ. பிரசாந்தன் தெரிவித்தார். அத்துடன் தாம் எதிர்பார்த்ததைவிட அதிக வரவேற்பு தமக்கு கிடைத்ததாகவும் புலம்பெயர் கிழக்கு மாகாண மக்கள் கிழக்கு மாகாணம் அபிவிருத்தி செய்யப்படவேண்டும் எனும் நிலைப்பட்டில் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

இது ஒரு புறமிருக்க மத்திய கிழக்கு நாடுகளிலும் வாழும் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்களிடமும் கட்சியின் கொள்கைகள் நிலைப்பாடுகள் கிழக்கின் அபிவிருத்தி தொடர்பாகவும் தெளிவு படத்தப்பட்டு வருவதாக அறிய முடிகின்றது. கடந்த வருடம் கட்டாரில் கிழக்கு மாகாண தமிழர்கள் இருக்கும்   இடங்களில் குறிப்பிட்ட சிலரால் கட்சியின் கொள்கைகள் நிலைப்பாடுகள் கிழக்கில் இடம்பெறும் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாகவும் விளக்கமளிக்கப்பட்டதாகவும் அறிய முடிகிறது. கட்டாரில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் ஆதரவாளர்கள் பலர் இருப்பதாவும் இவர்களால் இச் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அறிய முடிகின்றது. 

முதலமைச்சரின் அபிவிருத்தித் திட்டங்களின் தொகுப்பாக வெளியிடப்பட்ட இறுவட்டக்கள் இரண்டு பகுதிகளும் கட்டாரில் கிழக்கு மாகாணத்தவர்கள் வாழும் இடங்களில் அதிகம் உலாவுவதாகவும் அறிய முடிகின்றது.

தொடர்ந்து கட்சியை மக்கள் மயப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட இருப்பதாகவும் அறிய முடிகின்றது. 
read more...

Monday, 6 February 2012

இலங்கையின் சகல பாகங்களிலும் புலி ஆதரவாளர்களுக்கு மரண தண்டனை எச்சரிக்கை பெயர்களும் வெளியிடப்பட்டிருக்கின்றன

இலங்கையில் நாடு பூராகவும் ஒரு துண்டுப் பிரசுரம் வெளியிடப்பட்டள்ளது. அதில்  தாய்நாட்டின் நற்பெயருக்கு அபகீர்த்தியை ஏற்படுத்துகின்ற வகையிலும், நாட்டின் அபிவிருத்தியை மந்தமடையச் செய்கின்ற வகையிலும் செயற்படுகின்ற புலிகளுக்கும் அவர்களின் உள்நாட்டு , வெளிநாட்டு ஆதரவாளர்களுக்குமான மரணதண்டனையை நிறைவேற்றப்போவதாக நாம் இலங்கையர் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது. அது இறுதி எச்சரிக்கை என தெரிவித்து நாடுபூராகவும் வெளியிட்டுள்ள துண்டுப்பிரசுரத்தில் கடந்த காலத்தில் நாட்டுக்கு எதிராக செயற்பட்ட பலருக்கு தமது படையணி மரண தண்டனையை வழங்கியிருந்ததாகவும் தெரிவித்துள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் இதோ..


நாட்டைக் காக்கும் தமிழர் கூட்டமைப்பு

புலி ஆதரவாளர்களே உங்களுக்கு இறுதி எச்சரிக்கை


உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விடுதலைப்புலி ஆதரவாளர்களை இறுதியாக எச்சரிக்கின்றோம்

இலங்கை மண்ணில் மாணவர் போராட்டம் மக்கள் போராட்டம் ஊடகப்போர் மக்கள் எழுச்சி என்ற பெயரில் பயங்கரவாதிகளுடன் இணைந்து நாசகார வேலைகளில் ஈடுபட்ட

தமிழ் மாணவர் ஒன்றிய உறுப்பினர்களான நிலக்சன், குணேந்திரன் மக்கள் படை உறுப்பினர்கள் (ஜனா, அனுதீபன், ரஜீவன், நிதன்) மதகுருக்கள் நாடாளுமன்ன உறுப்பினர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கும் (ரஜீவன்) ஆகியோருக்கு எம்மால் மரண தணடனைகள் வழங்கப்பட்டன 

2009 ஆம் ஆண்டில் விடுதலைப் விடுதலைப் புலிகளும் அவர்களின் முட்டாள்தனமான ஈழ விடுதலைப் போராட்டமும் முள்ளிவாய்க்காலில் புதைக்கப்பட்டு இன்று ஐக்கிய இலங்கைக்குள்இரண்டாம் இனமாக வாழ தமிழர்கள் முற்பட்டுக்கொண்டிருக்கின்றனர். இவ்வேளையில் யாழ் பல்கலைக்கழகம் மற்றும்பாடசாலைகளில் பயங்கரவாதத்தை தூண்டுவது மற்றும் புலம்பெயர் நாடுகளில் இலங்கை அரசுக்கு எதிராக செயற்படுபவர்களை நாங்கள் அவதானித்துக்கொண்டிருக்கின்றோம்.

இணையத்தளங்களில் இலங்கை அரசு சம்மந்தமாக பொய்ப்பிரசாரம் செய்வது முகப்புத்தகங்களில், டுவிட்டர்,சமூக வலைத்தளங்களில்இலங்கை அரசுக்கு எதிராக எழுதுவது, இலங்கையின் கெளரவ அமைச்சர்கள் மீதும் அவதூறு ஏற்படும் வகையில் போராட்டம் மற்றும் வழக்குகளைப் போட்டு இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் மீது அவதூறு எற்படுத்துவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள அனைவரையும் இறுதியாக எச்சரிக்கின்றோம்.

குறிப்பாக - தினகரன் திவாகரன், கிரிசாந், திவாகரன் மற்றும் குருபரன் (யாழ்ப்பாணம்) அருளினியன், கஜேந்திரகுமார், குமரன் தேனுகாந்தன் (இந்தியா) தனம், கண்ணன், றஞ்சன், அங்கஜன்,சந்துரு (லண்டன்) சிவகுரு, ஆறுமுகம், நிசாந்தன் (கனடா), செல்வம், ரவி, சாச ராசன், தனு (பிரான்ஸ்)போன்றவர்களையும் இவர்களுடன் இணைந்து செயற்படம் புலி ஆதரவாளர்களையும் கடுமையாக எச்சரிக்கின்றோம். உங்களுக்குரிய தண்டனை மரண தண்டனை என்பதனை உறுதியாகக் கூறிக்கொள்ள விரும்மபுகின்றோம்.

இனப்பிரச்சினை முடிவிற்கு வந்து இரண்டு வருடங்கள் கடந்துவிட்ட நிலையில் ஐக்கிய இலங்கைக்குள் இரண்டாம் இனமாக தமிழர்கள் வாழ முற்பட்டு வருகின்றார்கள். மீண்டும் ஈழ விடுதலை என்ற பெயரில் பலம்பெயர் தமிழர்களால் மேற்கொள்ளப்படம் நடவடிக்கைகள் ஒட்டுமொத்த தமிழினத்தின் அழிவிற்கு வித்திடும் என்றும் எச்சரிக்கின்றோம்

நாட்டைக் காக்கும் தமிழர் கூட்டமைப்பு 
நாம் இலங்கையர் பாதுகாப்பு படை


read more...

Sunday, 5 February 2012

மட்டக்களப்பு பேச்சுத் தமிழுக்கு செந்தமிழ் அங்கிகாரம்..

மட்டக்களப்பு பேச்சித் தமிழுக்கு யாழ் பல்கலைக்கழக பேராசிரியர் ஆ.வேலுப்பிள்ளை அவர்கள் செந்தமிழ் அங்கிகாரம் வழங்கியிருப்பது ஒன்றும் ஆச்சரியப்படும் ஒன்றல்ல. மட்டக்களப்பு தமிழர்கள் எவ்வாறு பூர்வீகக் குடிகளோ அவ்வாறே அவர்கள் பேசும் தமிழ் செந்தமிழாகப் போற்றப்படுவதற்க்கு வடமொழிக்கலப்பு மிகவும் குறைவாக இருப்பது ஒரு காரணமாகும் என பேராசிரியர் ஆ.வேலுப்பிள்ளை அவர்கள் வெளியான மட்டக்களப்பு மாநாட்டு நினைவு மலர்-1996 இல் குறிப்பிடப்பட்டுள்ளது. மட்டக்களப்பு தமிழர்கள் பேசும் தமிழ் பழந்தமிழ் இலக்கியங்களில் எல்லாம் இழையோடி நிற்பதனை சான்றாதாரத்துடன் நிரூபித்திருக்கும், இலங்கையில் ஆரம்ப குடிகளாக இங்குள்ள தமிழர்களும் வாழ்ந்தார்கள் என்பதனை வாகரை வாணன் அவர்களின் ‘”பழந்தமிழ் இலக்கியத்தில் மட்டக்களப்புத் தமிழ்’ எனும் நூலை ஆதாரமாகக்கொண்டு ஆணியடித்துச் செல்ல இதனை வரைகிறேன்.

மட்டக்களப்புக்குள் இருக்கும் மகிமை உலகின் மூலை முடுக்குகளில் கிழம்பி வருவதற்க்கான சந்தர்ப்பங்கள் நீண்டநாள் யுத்தச் சூழல், அடக்குமுறை, பாராபட்சம், ஒதுக்கித்தள்ளுதல் என்கின்ற தடைகளால் முடங்கிக்கிடந்தமை, அந்த மக்களை பாரம்பரியத்தின் வழிவந்தவர்களா? ஏன உலக அரங்கில் கேள்வி கேட்க வைத்தமை இந்த ஆதாரங்களை பார்க்கும்போது மனம் வருந்த வைக்கிறது.

இதற்க்கு சான்றுகள் தேவையல்லவா இதனை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்னால் தமிழ்துறைத் தலைவர் பேராசிரியர் ஆ. வேலுப்பிள்ளை அவர்கள் மட்டக்களப்பு தமிழின் சிறப்புகள் பற்றி குறிப்பிடுகையில், ‘மட்டக்களப்பு தமிழகம் சமீபகாலம் வரையில் பிறபகுதி மக்களுடன் தொடர்புகொள்ள முடியாத நிலையில் வாழ்ந்துவந்ததால் அவர்கள் மொழி தன்னியல்பு சிலவற்றினை கொண்டு விழங்குகின்றது. மட்டக்களப்பு தமிழ் சொற்களையும் மலையாளச் சொற்களையும் ஒப்பிட்டு நோக்கும்போது மட்டக்களப்புச் சொற்களில் சில மலையாளச் சொற்க்கள் மட்டும் வாழ்வது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது’ எனக் கூறுகிறார்( மட்டக்களப்பு பிரதேச சாகித்திய விழா நினைவு மலர்-1993).

இதற்க்கு அவர் மேலும் வலுவூட்டும் ஒன்றாக மட்டக்களப்பு தமிழே மிகவும் செந்தமிழ் பண்புடையது எனும் கருத்து 1966 ஆண்டில் கமில சுவெலபியினால் அறுதியிடப்பட்டுக் கூறப்பட்டுள்ளமை இங்கு எடுத்துச் சொல்லக்கூடியதாக உள்ளது.
கதிரவெளியில் கண்டு பிடிக்கப்பட்ட சிவலிங்க ஆதாரம்.
செந்தமிழ் என்பது அது உயிர்த்துடிப்புள்ள ஆதித் தமிழ். அதற்க்கு சான்றாக ஒரு சமுகம் பேசுகின்ற பேச்சு வழக்கு, பழம்பெரும் இலக்கியங்களில் எழுதப்பட்டிருக்கவேண்டும். அந்த வகையில் மட்டக்களப்பு பேச்சுத்தமிழ், சுவையான தமிழ் இலக்கிய நூல்களில் அலங்கரிக்கப்பட்டுள்ளது ஒன்றும் ஆச்சரியம் இல்லை என வாகரைவாணன் அவரது ‘பழந்தமிழ் இலக்கியத்தில் மட்டக்களப்புத் தமிழ்’ எனும் நூலில் அடிச்சுக் கூறுவது தெழிவாகிறது.
இதில் வரலாற்றுப்பாதையை சற்று திரும்பிப் பார்ப்போமானால், மட்டக்களப்பில் கி.மு 5ம் நூற்றாண்டிலே கதிரவெளி, மற்றும் கட்டுமுறிவில் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருள் ஆதாரங்கள் வரலாற்றுக்குறிப்புகள் எமது முன்னோர்கள் நனி நாகரிகமாக வாழ்ந்துள்ளனர் எனக் கூறுகிறது. இம்மக்கள் பேசிய தமிழ் சொற்க்கள் சில இன்னும் சிதைந்துபோகாமல் அவர்கள் பரம்பரையினர் நாவில் நடமாடுகின்றமையும், அச்சொற்க்கள் பரிபாடல், கலித்தொகை, தொல்காப்பியம், அகநாநூறு, புறநாநூறு, குறுந்தொகை போன்ற சங்க இலக்கியங்களில் காணப்படுகின்றமை மட்டக்களப்புத் தமிழரின் தொன்மையை நிரூபிக்கப் போதுமானவை என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை.

இதனையே மட்டக்களப்பு தமிழக ஆசிரியர் பண்டிதர் வி.சீ.கந்தையா அவர்கள் கூறிய பின்வரும் கூற்று அணிசெய்யும். ஒரு நாட்டின் பண்டைய வரலாற்றை அறிவதற்க்கு புத்தகங்களும் செய்யுளம்தான் வேண்டும் என்பதற்க்கில்லை. அந்நாட்டு மொழி அல்லது சொல்க்கூட வரலாறாருரைக்கும் பெருங்காவியமாய் அமையும் (மட்டக்களப்புத் தமிழகம் -பக்.86)
நான் முன்பும் ஒரு கட்டுரையில் எழுதியிருந்தேன் அது மட்டக்களப்பில் பேசப்படும் சொற்க்கள் பழந்தமிழ் இலக்கியங்களில் வருவதாகக் கூறியதற்க்கு, ஆதாரக்குறைவு இருந்தமையை பல அன்பர்கள் சுட்டிக்காட்டியமைதான் எனது தேடலை தூண்டியது. அவர்களில் குறிப்பாக டீடீஊ யின் எமது மதிப்பிற்க்குரிய நிருபர் சீவகன் அவர்கள் என்னை இவளவு ஆதாரத்துடன் எழுதத் தூண்டியவர் என பெருமையுடன் கூறிக்கொள்ள விரும்புகிறேன்.

எனவே பண்டிதர் வி.சீ.கந்தையா அவர்களின் கூற்றுக்கு அணிசேர்க்கும் வரலாருரைக்கும் வழக்காறுகள் சிலவற்றினை தொட்டுச் செல்லலாம்.
மட்டு மண்வாசனை மாறாத மூதாட்டி ஒருவர்.
முதலில் மட்டக்களப்பின் கிராமப்புறங்களில் இன்றும் வழக்கிலுள்ள ‘கா’ எனும் சொல் வயதானவரை அல்லது தமக்கு மிகவும் நெருக்கமானவர் ஒருவரைக் கண்டால் ‘எங்ககா போறா’ என்ன கா பாடு? ஏன்று வினவுதல் வழக்கு. இது அவர்களது நாட்டுப்பாடல்களிலும் இடம் பெறுவதை வாகரை வாணர் இவ்வாறு காட்டுகிறார்.

‘வாழைப்பழம் எடுகா, வம்பரையில் தேனெடுகா’ எனும் பாடலும் அதுபோல், சிலப்பதிகாரம், கலித்தொகை ஆகிய நூல்களிலும் சான்றாக வருகிறது.
பொய்யாமை நுவலும் நின் செங்கோல் அச்செங்கோலின்
செய்தொழிற் கீழ்ப்பட்டாளோ இவள் காண்டிகா! –மருதக்கலி
அதுபோல் சிலப்பதிகாரத்தில் இது “கணிகா வாய்வதின் வந்த குரவையின் வந்தீண்டும்” எனவும் வருவது இம்மக்கள் பேசும் தமிழ் அன்று இலக்கியத்தில் வந்துள்ளதை காட்டுகிறது.

நான் சிறுவனாக இருக்கும் பொழுதுகளில் என்னுடைய மாமாவின், அப்பப்பாவின் வெற்றிலைத் தோட்டத்துக்கு செல்லுவது வழக்கம், அங்கு துரவு கிண்டி அதற்க்குள் ஒரு பழய பொந்துள்ள மரத்தை நிறுத்தி பூவல் அமைத்து அதில் இருந்து கிடைக்கும் நீரை குடிக்கப்பயன்படுத்துவதை பார்த்திருக்கிறேன். ஆனால் அவை 2000 ஆணடுகளுக்கு முன்னமே கூவல் என அழைக்கப்பட்டதுடன், இவை பழந் தமிழ் இலக்கியங்களில் ‘ அரிது உன் கூவல்’ ‘கண்படு கூவல் தோண்டி’ என புறநாநூற்றிலும், ‘ஐங்குறு கூவல் கீழ்’ என ஐங்குறுநூற்றிலும் சொல்லப்படுகிறது.
மட்டக்களப்பு மதுரத்தமிழில் முக்கியமாக பேசப்படும் இன்னொரு சொல் ‘மருங்கை’ இது ஒரு குழந்தையின் பிறப்பை ஒட்டி நடைபெறும் சடங்கு ஆகும். இச்சடங்குக்கு பக்கத்தில் உள்ளவர்களை அழைப்பதனாலேயே (மருங்கு-பக்கம்) இச்சடங்கு மருங்கை எனச் சொல்லப்பட்டது. இச் சொல் பண்டைய இலக்கியங்களில் பல இடங்களில் பாவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக,

இன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு
அன்பொடு புனர்ந்த ஐந்திணை மருங்கின்- தொல்காப்பியம்.
மருங்கில் கொண்ட பல்குறுமாக்கள்- புறநாநூறு.
பெருவழி மருங்கில் -அகநாநுர்று.

என அடுக்கிக் கொண்டு போகலாம். இன்னொரு மறக்கமுடியாத மட்டக்களப்பாருக்கே உரித்துடைய சொல் என்றும் சொல்லிவிடலாம். அது சூடு எனும் சொல்லன்றி வேறில்லை. வயலில் விளைந்த கதிர்களை தாக்கத்தி (தாள்10 கத்தி) கொண்டு அறுத்தெடுத்து களத்தில் அகலப்பரப்பி அவற்றின் மீது அவற்றின் மீது எருமைக் கடாக்களை நடக்கவிட்டு மிதித்து வைக்கோலில் இருந்து நெல்லை வேறாக்கும் செயலே சூடு போடுதல் எனப்படும். சூடுபோடும் போது நெல் மிகுதியாகக் கிடைக்க வேண்டும் என்ற பெருஆசையில் பெருமக்கள் பொலி பொலிதாயே பொலி குரல் எடுத்து பாடுவார்களாம்.
இந்த முறையில் சூடு போட்டு அவுரியில் மீது நின்று பதர் போகத் தூற்றி எடுத்து, அவணக்கணக்கில் சாக்கில் கட்டி வண்டியில் கொண்டுவந்து வீட்டு முற்றத்தில் பட்டறை கட்டி வைப்பர். உழவுத் தொழிலுடன் இரண்டறக்கலந்த வெள்ளாமை, சூடு, களம், பொலி, பட்டடை(பட்டறை), ஆகிய சொற்க்கள் பழந்தமிழ் இலக்கியங்களில் பதியப்பட்டுள்ளமை, தமிழர் வாழ்வோடு அத்தொழில் ஒன்றித்தமையைக் காட்டுகிறது என வாகரைவாணன் புட்டுக்காட்டுவது மட்டக்களப்பு தமிழின் மகிமையை தொட்டுக்காட்டுகிறது அல்லவா.

நீடு கதிர்கழனி சூடு தடுமாறும் – புறநாநூறு.
வயல்வெளி ஆம்பல் சூடு தடுப்புதுப்பூக்
கன்றுடை புனிற்றா தின்ற மிச்சில் -நற்றினை.
வட்டில் வாய்வைக்கும்..
பெட்டியால் வாரிப் பட்டடை நெல்லெல்லாம் -முக்கூடற்ப்பள்ளு
பல வெள்ளாமையிட்டேன் மணல் வாரியைப்
பண்டு நம் பெருமான் கட்டழித்தார்- முக்கூடற்ப்பள்ளு
பொலி தூற்றி ஆற்றிப் பொலி
பொலி யென்றளப்பார்- முக்கூடற்ப்பள்ளு
என்பன அவை பழந்தமிழ் இலக்கியச் சொற்கள் என்ற சான்றை கொண்டுள்ளது என்பதற்கு தக்க எடுத்துக்காட்டு.

இன்னும் ஒரு உன்னதமான சொல் மட்டக்களப்பில் இவர்கள் பயன்படுத்துவார்கள் அது ‘ஏமம்சாமம்’ என்பதுதான். இங்கு ‘சாமம்’ இது இரவு என்று பொருள்படும். இதற்கு சூடாமணி, நிகண்டு என்பன சாட்சியளிக்கின்றன. ஏமம் என்கின்ற சொல் மலையாள மொழியிலும் உண்டு என்பார் பேராசிரியர் ஆ.வேலுப்பிள்ளை அவர்கள்.
குறிஞ்சி, கூதீர் யாமம் என்மனார் புலவர் (தொல்காப்பியம்)
இடையிருள் யாமத்து என்னையீங்கு
அழைத்தனை (மணிமேகலை)

நளன் யாமத்தும் பள்ளிகொள்ளான் (நெடுநல்வாடை)
இன்னொரு சொல் மட்டக்களப்பு தமிழகத்தில் இதை உச்சரித்தாலே பக்தி, பயம், சந்தோசம், தூய்மை என்பன குடிகொண்டுவிடும் அந்தச் சொல் தான் ‘சடங்கு’ (வைகாசிச் சடங்கு, வைரவர் சடங்கு). சடங்குகளின்போது, கண்ணூறு, நாவூறு கழிப்பதற்க்காகச் செம்பில் தண்ணீர் ஓதிக் கொடுத்தல் என்பன பட்டி தொடங்கி பட்டினம் வரைக்கும் விசேசமாக நடைபெறும் வழக்குகள். புழந்தமிழ் இலக்கியங்களும் இதனைப் பறைசாற்றுகிறது.
சீர் மறைத் தொழிற் சடங்கு செய்திருந்து
நூல் முனிவர்…..(பெரிய புராணம்)
போற்றுஞ் சடங்கை நன்னாதே…(கடு வெளிச் சித்தர்)
இன்னொரு மட்டக்களப்பு தமிழகத்தில் எம்முன்னோர் இன்றும் பேசும் ஒரு மரக்கறி வகை வழுதுணங்காய் என்கின்ற சொல். அதை ஒரு நாட்டுப்புறக் கவிஞர்கூட இப்படிச் சொல்லியது ஞாபகம் வருகிறது.
‘வாழக்காய் மந்தம்
வழுதுணங்காய் செங்கிரந்தி
கீரை குழுமை –என்
கிளிமொழிக்கு என்ன கறி?’
அதுபோலவே பழந்தமிழ் செப்பேடுகளில் அவை வந்துள்ளமை ஆச்சரியமில்லை.

‘வட்டும் வழுதுணையும் போல் வாரும்’ (நாலடியார்)
மட்டக்களப்பு தமிழக மக்கள் அனேகமாக சமைப்பதற்கு தேவைப்படும் விறகினை ‘கொள்ளி’ என்றே பேச்சு வழக்காக இன்றும் கொண்டுள்ளமையும் அவை அன்றே பழந்தமிழில் செந்தமிழாக வந்துள்ளமையும் இம்மக்களின் பூர்வீகத்துக்கு எடுத்துக்காட்டே.
குறத்தி மாட்டிய வறற்கடைக் கொள்ளி (புறநாநூறு)
கொள்ளி வாய்ப் பேய்க் குழவிக்கு (கலிங்கத்துப் பரணி)
ஆனால் இப்போது இம்மக்கள் கொள்ளி என்பது ஏதோ கொச்சைத் தமிழ், படியாதவன் பேசும் ஒன்று என நினைத்து அவர்களது நல்ல வழக்காறுகளை வழுக்க விட்டுக்கொண்டிருப்பது பரிதாபமே.
அடுத்தது ஆணம் எனும் மட்டக்களப்பு தமிழர்களின் கறிவகைகளில் ஒன்று. கொச்சிக்காய் தூள் போடாமல் தேங்காய்ப்பால் நிறைய விட்டு ஆக்கப்படும் சுவையான கறி இது. அதற்க்கு மரணவீட்டு அமுதுகளில் நல்ல மரியாதை உண்டு. மண்டல புருடர் வழங்கிய சூடாமணி நகண்டு ‘ஆணமே குழம்பொடு’ என்று சொல்கிறது. இது போலவே தமிழர் திருநாள் தைப்பொங்கலிலும், கோயில் திருவிழாக்களிலும் புக்கை அல்லது பொங்கலுக்கு பஞ்சம் இருக்காது. புழந்தமிழ் இலக்கியங்களிலும் புக்கை, புற்கை என்று இருப்பதனை இங்கே காணலாம்.

தெள்நீர் புற்கை ஆயினும் தாள் தந்து
உண்ணலின் ஊங்கு இனியது இல் (திருக்குறல்)
நெடுநீர் புற்கை நீத்தனம் வரற்கே (புறநானூறு)
அடுத்து ஒசில் என்னும் மட்டக்களப்பு தமிழ் ஒயில் எனும் சொல்லின் திரிபாகும். இதற்க்கு அழகு என்று பொருள். ஆனால், ஒசில் என்பது சந்தர்ப்பத்தைப் பொறுத்து அழகின்மையையும் சுட்டும். பட்டினத்தார் இச்சொல்லை பல இடத்தில் பயன்படுத்தியுள்ளார். அது ‘ஒயிலான வன்னமயிற் கொத்தவளென்றும்’ எனும் சான்றாகும்.
மட்டக்களப்புச் சொல்லில் பிறகு என்பது பேச்சுத் தமிழில் பின்ன என்று வரும். திருவாசகத்திலும், பெரிய புராணத்திலும் இதன் திருத்திய வடிவமான பின்னை இருக்கிறது.
‘படுவேன் படுவதெல்லாம் நான்
பட்டாற் பின்னை பயனென்னே!’ (திருவாசகம்)
குழறுதல் என்னும் மட்டக்களப்புத் தமிழ் சொல்லுக்கு புலம்புதல் என்று பொருள். இது இலக்கியங்களில் இவ்வாறு வருகிறது.
குயில் பைதல் காள் கண்ணன் நாமமே
குழறிக் கொன்றீர்’ (நம்மாழ்வார்)

இவ்வாறு மட்டக்களப்பு தமிழகம் பயின்று வந்திருக்கும் அழகு தமிழ் சொற்க்கள் போன்று இன்னும் உழக்குதல், திண்ணை, வெட்டைக்குப்போ, கச்சை, அறுநாக்கொடி, குடி, குரவை போன்ற நற்தமிழ் சொற்க்கள் இன்றும் இம்மக்களின் நாவில் தவழ்வது அன்றய பழந்தமிழ் இலக்கியங்களில் அழியா மறைச் சான்றாதாரங்களாக மிழிர்வது இம்மக்களின் பூர்வீகம், உரித்து, என்பனவற்றை பறை சாற்றுகிறது. இந்த எடுத்துக்காட்டுகள் மட்டக்களப்பில் வழங்கும் தமிழ் சொற்க்களின் பழமையையும் செழுமையையும் சங்க இலக்கியங்கள் உட்பட பழந்தமிழ் இலக்கியங்களை சான்றுகாட்டி மேலே விழக்கியதன் மூலம் மட்டக்களப்பு உட்ப்பட ஈழத்திருநாடு எங்கும் தமிழர்கள் மிகப் பழங் காலந்தொட்டே வாழ்கிறார்கள் என்பதனை உறுதிப்படுத்துவதுடன். மட்டக்களப்பின் தமிழ் செந்தமிழ் அந்தஸ்த்து பெறுவதற்க்கு அவர்களின் இனிய எழிய மொழிவழக்கும் ஒரு காரணம் என்று பேராசிரியர் கூட அழுத்திச் சொல்வது இம்மக்களின் பாரம்பரியத்தினை உறுதிப்படுத்துகிறது அல்லவா.
ஆக்கம்: சி.தணிகசீலன்

நன்றிகள் www.battinews.com www.meenmagal.net
read more...

Saturday, 4 February 2012

உயிருக்கான போராட்டத்தில் பங்கெடுங்கள்
நண்பர்களே ஒரு மாணவனின் உயிரைக் காப்பாற்ற உதவுங்கள் என்று இரண்டு பதிவுகள் போட்டும் சிலர் உதவுவதாக சொல்லி இருக்கின்றனர். இருந்தும் எந்த உதவியும் இதுவரை கிடைக்கவில்லை விரைவில் குறித்த மாணவனுக்கு சத்திரசிகிச்சை செய்ய வேண்டிய நிலையில் இருக்கின்றார். முந்திய பதிவை அப்படியே தருகிறேன்.

வலைப்பதிவு எழுதும் நாம் எழுத்துக்களுடன் நின்று விடாது சமூகத்திற்காக ஏதாவது செய்ய வேண்டும். சில பதிவர்கள் இதனைச் செய்து வருகின்றனர். நானும் சமூக சேவை செய்து வருபவன் எனும் வகையில் உங்களிடம் ஒரு கோரிக்கையை முன்வைக்கின்றேன். 

 தற்போது உயர்தரம் படித்துக் கொண்டிருக்கும் ஒரு மாணவனுக்கு இருதய நோய் இருக்கின்றது. உடனடியாக இருதய சத்திரசிகிச்சை செய்ய வேண்டிய நிலையில் இருக்கின்றார். உடனடியாக சத்திரசிகிச்சை செய்யாவிட்டால் உயிராபத்து ஏற்படும் நிலையில் இருக்கின்றார். இருதய சத்திர சிகிச்சைக்காக இலங்கை ரூபா ஐந்து இலடசத்திற்குமேல் செலவாகும்.


ஆனாலும் அம்மாணவனின் குடும்பம் மிகவும் வறிய நிலையில் இருக்கின்றது. நல்ல எண்ணம் கொண்டவர்கள் இவரின் உயிரைக் காக்க உதவி செய்யுங்கள். இவர் மட்டக்களப்பு களுதாவளையைச் சேர்ந்தவர் பெயர் இராஜேந்திரம் நிமல்ராஜ் மட்களுதாவளை மகா வித்தியாலயத்தில் உயர்தரம் படிக்கின்றார். மாணவனின் உயிரைக்காக்க உதவ நினைப்பவர்கள் என்னைத் தொடர்பு கொள்ளுங்கள் நேரடியாக குறித்த மாணவனுடன் தொடர்புபடுத்தி விடுகிறேன்.

எனது மின்னஞ்சல் :-shanthruslbc@gmail.com
 தொலைபேசி இலக்கம் : - 0094778548295read more...

Friday, 3 February 2012

மாகாணசபைக்கு பொலிஸ் காணி அதிகாரங்கள் தேவை ஆதரிக்கும் பிள்ளையான் எதிர்க்கும் கருணா

இன்று பரவலாகப் பேசப்படுகின்ற விடயம் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் - தமிழ் தேசியக் கூட்டமைப்பு பேச்சுவார்த்தை தொடர்பான விடயமும் மாகாண சபைகளுக்கான பொலிஸ் காணி அதிகாரங்கள் தொடர்பான விடயமுமாகும். 01.01.2012 அன்று கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்கு கடிதம் ஒன்றினை அனுப்பியிருந்தார். அக் கடிதத்தில் அரசு - கூட்டமைப்பு பேச்சுக்களின்போது வடக்கு கிழக்கு இணைப்பு தவிர்ந்த மாகாணசபைகளுக்கான பொலிஸ் காணி அதிகாரங்கள் பற்றி பேசப்படுமானால் தாம் அதற்கு ஆதரவு வழங்குவதாகவும் இவ்விடயம் தொடர்பில் தாம் கூட்டமைப்புடன் பேச தயாராக இருப்பதாகவும் அக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. சரியான நேரத்தில் முதலமைச்சர் அவர்கள் நல்ல முடிவினை எடுத்திருப்பது பாராட்டப்பட வேண்டிய விடயம்

முதலமைச்சரின் இக் கடிதமும் முதலமைச்சரின் நிலைப்பாடு தொடர்பிலும் தமிழ் மக்கள் மத்தியில் பெரும் ஆதரவு கிடைத்தது. ஆனாலும் குறுகிய நோக்கம் கொண்ட சிலர் இவ்விடயத்தை எதிர்ப்பது கவலைக்குரிய விடயம். ஒரு சமூகத்தைப் பிரதிநிதிப் படுத்துகின்ற தலைவர்கள் அம் மக்கள் தொடர்பாக எடுக்கப்படுகின்ற நடவடிக்கைகளுக்கு ஆதரவு வழங்க வேண்டிய கடப்பாடு இருக்கின்றது. இவ்விடயத்தில் கட்சிகளுக்கிடையில் கருத்து வேறுபாடு இருப்பினும் மக்களுக்கான நல்ல திட்டங்கள் யாரால் முன் வைக்கப்பட்டாலும் அதற்கு ஆதரவு வழங்க வேண்டியது அச் சமூகம் சார்ந்த தலைவர்களின் கடமையாகும்.

கிழக்கு மாகாண சபை உருவாக்கப்பட்டதன் பின்னரே கிழக்கு மாகாணம் துரித அபிவிருத்தி கண்டு வருகின்றது. ஆனாலும் மாகாண சபைக்கு பல அதிகாரங்கள் இல்லை. பல விடயங்களில் தீர்மானம் எடுக்கும் அதிகாரம் முதலமைச்சரின் கையில் இல்லை. இவ்வாறு பல பிரச்சினைகள் இருக்கின்றன. பொலிஸ் காணி அதிகாரங்கள் இல்லாமையால் மாகாணசபை பல சவால்களுக்கு முகங்கொடுக்க வேண்டி இருக்கின்றது.

பல உயிர் உடமை இழப்புக்களுக்குப்பின் தமிழருக்கு கிடைத்திருக்கும் தீர்வு மாகாணசபை முறமைதான். கிடைத்திருக்கும் மாகாணசபை முறமை மூலம் இன்னும் பல சலுகைகளையும் தீர்வுகளையும் பெற்றுக்கொள்ள தமிழர்களும் தமிழ் தலைவர்களும் ஒன்றுபட வேண்டிய நேரமிது.

இன்று மாகாண சபைக்கு பொலிஸ் காணி அதிகாரங்கள் வழங்கப்படுதல் தொடர்பாக பேசப்படுவது தமிழர்கள் சந்தோசப்படவேண்டிய விடயம். ஆனாலும் அற்ப சலுகைகளுக்காக இதனை சில தமிழ் தலைவர்கள் எதிர்ப்பது கவலைக்குரிய விடயமாகும்.

நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பிரதி அமைச்சர் வினாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) அவர்கள் மாகாண சபைகளுக்கு பொலிஸ் காணி அதிகாரங்கள் தேவையில்லை எனவும் சிறுபிள்ளைத்தனமான விளக்கங்களையும் கொடுத்திருக்கின்றார். இவரின் இவ்வாறான செயற்பாடுகளும் கருத்துக்களும் தமிழர்களுக்கு கிடைக்க இருக்கின்ற தீர்வுகளை இல்லாமல் செய்யலாம்.

இவருடைய செயற்பாடுகள் தமிழ் மக்கள் நலன் சார்ந்ததாக இருக்கின்றதா என்றால் கேள்விக்குறிதான். இவர் புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்து வரும்போது இவர் என்ன சொன்னார்? கிழக்குக்கென்று ஒரு தலைமைத்துவம் வேண்டும். கிழக்குக்கென்று ஒரு கட்சி வேண்டும் என்று புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்து வந்தவர். பிரிந்து வந்தபோது அவரை கிழக்கு மாகாண மக்கள் அனைவரும் அவரை நம்பினார்கள். பிரிந்து வந்தபோது புலிகளின் தலைமைப்பீடத்திற்கு எதிராக கிழக்கு மக்கள் வீதியில் இறங்கினார்கள். ஆனால் அவரை நம்பிய மக்களை நட்டாற்றில் விட்டுவிட்டு தான் எதற்காக புலிகளில் இருந்து பிரிந்து வந்தாரோ அந்த நோக்கத்தை கைவிட்டு சலுகைகளுக்காக அரசுடன் இணைந்தார். அன்றுமுதல் இன்றுவரை தமிழர்களுக்கு தீர்வுத்திட்டங்கள் கிடைக்க இருக்கும் தருணத்தில் அவ்வப்போது வந்து குறுக்கிட்டுக் கொண்டிருக்கின்றார்.

மறு புறத்தில் முதலமைச்சர் அவர்கள் பல சவால்களுக்கு மத்தியில் மாகாணசபை மூலம் கிழக்கினை துரிதமான அபிவிருத்திப் பாதைக்கு இட்டுச் செல்கின்றார். வடக்கு கிழக்கில் இ்ன்றைய தேவை என்ன? யுத்தத்தால் அழிவடைந்த எமது தேசத்தை கட்டி எழுப்ப வேண்டும். எதிர்க்கட்சி ஆசனத்தில் இருந்தால் எந்த அபிவிருத்தியும் நடக்கப்போவதில்லை. அரசுடன் பேரம்பேசி அரசுக்கு நிபந்தனைகளுடன் ஆதரவு வழங்கி எமது பிரதேசத்தை அபிவிருத்தி செய்ய வேண்டிய பொறுப்பு ஒவ்வொரு தமிழ் அரசியல்வாதிகளுக்கும் இருக்க வேண்டும்.

அதற்காக தமிழர்களின் உரிமைகளை விட்டுக்கொடுக்கக்கூடாது. இங்கு முதலமைச்சர் அரசாங்கத்துடன் இருந்தாலும் எடுத்திருக்கும் முடிவு பாராட்டப்பட வேண்டியது. அரசுடன் இருந்தாலும் எமது மக்களின் நலனையும் கருத்தில் கொள்ள வேண்டும். முதலமைச்சர் அவர்கள் அரசுடன் இருந்தாலும் பல தடவை அரசுடன் முரண்பட்டு வந்த சந்தர்ப்பங்கள் இருக்கின்றன. மாகாணசபைகளுக்கான பொலிஸ் காணி அதிகாரங்கள் தொடர்பிலும் பல சவால்களுக்கு மத்தியிலும் குரல்கொடுப்பது நல்ல விடயமே.

தமிழர்களுக்கான தீர்வு விடயத்தில் தமக்கு வழங்கப்படும் அற்ப சலுகைகளுக்காக விலை போகாமல் ஒவ்வொரு தமிழ் தலைவர்களும் செயற்படுவது நல்லது.

read more...