Sunday 25 November 2012

வேசிகளும் வேசிகளை நாடும் சமூக அந்தஸ்துள்ளவர்களும்

பாலியல் தொழிலாளர்களை நாம் வேசிகள் என்று ஒதுக்கி வைத்திருக்கின்றோம். யாரும் மரியாதை கொடுப்பதில்லை. இந்த வேசிகளிடம் போய் உல்லாசமாய் அனுபவித்துவிட்டு வருபவர்கள் யார்? எம்மைப் போன்றவர்கள்தான்?  இந்த வேசிகளிடம் போய் வந்து அதனை வீரம்போல் சொல்லிக் கொள்வார்கள் ஆண்கள் பாலியல் தொழிலாளிகளிடம் போய் உல்லாசமாய் இருந்துவிட்டு வருகின்ற ஆண்களையும் ஒதுக்கி வைக்க வேண்டுமே.

பாலியல் தொழிலாளர்களைப் பொறுத்தவரை அதிகமானவர்கள் தானாக இத் தொழிலுக்கு வந்தவர்களல்ல. அவர்களுக்குப் பின்னால் ஒரு கதை சோகக் கதையே இருக்கும். இன்று இலங்கையிலே இருக்கின்ற பாலியல் தொழிலாளர்களில் அதிகமானவர்கள் இளம் யுவதிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிலும் நாம் அறிந்தோ அறியாமலோ எமது தமிழ் யுவதிகளும் சிறுமிகளும் பாலியல் தொழிலுக்குள் தள்ளப்பட்டுள்ளனர். வறுமை ஒரு புறம் தனது குடும்பத்தை டகொண்டு நடாத்த வேண்டிய குடும்ப சுமை ஒரு புறம் இவர்களை பாலியல் தொழிலுக்கள் தள்ளிவிட்டு வேடிக்கை பார்க்கின்றது.

இலங்கையில் இருக்கின்ற பாலியல் தொழிலாளர்களில் எமது தமிழ் பெண்கள் இத் தொழிலை நாடியதன் காரணம் என்ன? நாட்டில் இடம்பெற்ற கோர யுத்தமும் எமது சமூகமுமே முக்கிய காரணமாகும். 

நாட்டில் இடம்பெற்ற யுத்தத்தின் காரணமாக விதவையான தமிழ் பெண்கள் இலட்சத்தைத் தாண்டும் என்று நினைக்கின்றேன். மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டும் நாற்பதாயிரத்துக்கும் மேற்பட்ட விதவைகள் இருக்கின்றனர். இவர்களில் அதிகமானவர்கள் இரு குழந்தைகளுக்கு தாயாக குடும்ப சுமைய சுமக்க வேண்டிய நிலையில் இருக்கின்றனர்.

எமது தமிழ் சமூகம் பெண்கள் மறு மணம் செய்வதை தடுக்கின்றது. ஆனால் ஆண்கள் எத்தனை கல்யாணம் பண்ண விரும்பினாலும் செய்து  கொடுத்து வீரமாக நினைக்கின்றது எமது சமூகம். ஒரு பெண் இறந்து விட்டால் இறந்து ஒரு மாதம் செல்ல முன்னரே தனது மகனுக்கு  பெண் பார்த்து மறு மணம் செய்து வைத்த எத்தனை பெற்றோரைப் பார்த்திருக்கின்றோம்.

ஆனால் ஒரு இளம் பெண் தனது கணவன் இறந்துவிட்டால் தனது குடும்பத்தை கொண்டு நடாத்துவதற்கு இன்னொரு திருமணம் செய்ய நினைத்தால் வேசி என்கின்ற ஒரு பட்டத்தினையும் சூட்டிவிடுகிறது எமது சமூகம்.

அதே போன்று விதவைகளை எந்த ஆணாவது மறுமணம் செய்ய முன்வருகின்றார்களா? (ஓருசில விதிவிலக்கானவர்கள் இருக்கின்றார்கள் அவர்களுக்கு நாம் தலைவணங்க வேண்டும்) எவரும் முன் வரமாட்டார்கள் அந்த விதவையிடம் கள்ளக் களவாகப் போய் வரத்தான் விரும்புவார்கள்.

எமது சமூகத்தில் இருக்கின்ற மற்றொரு விடயம் விதவைகளை ஒதுக்கி வைப்பது. மறு மணம் செய்து தமது குடும்பத்தை காப்பாற்றிக் கொள்ளவும் விடமாட்டார்கள். குறித்த விதவையை சமூக அந்தஸ்துள்ள ஒருத்தியாக நினைக்கவும்மாட்டார்கள். சமூகத்திலிருந்து ஒது்க்கி வைத்துவிடுவார்கள். இந்த நிலையில் தனது குடும்பத்தை கொண்டு நடாத்துவதற்கு இவ்விதவைப் பெண் என்ன செய்வாள்?

தொடரும்.....

Post Comment

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

2 comments: on "வேசிகளும் வேசிகளை நாடும் சமூக அந்தஸ்துள்ளவர்களும்"

Unknown said...

Intha vidayam thodarpana thankal anaiththu pathivukalaiyum parththen. Ivattul mukkiyamana kaaranamana aan aathikkam namathu pakuthi ponra pirathesankalil kaanappaduvathum, penkal kanavanuku, kudumpaththuku paninthu panpaha nadakka vendum enra karuththu adimaiyai irukka vendum enra maattu karuththaha namathu pirathesaththil kaanappaduvathum, perarivalarkal, gnanikal, methaikal ena thammai thame ninaithukkondu irukum samooka periyavarkalum avaralathu 1 sathaththitku kooda perumathi illatha arivai kondu eduththa mudivukalukkum namathu samookaththil ankeekaram iruppathume ivvaranavattitku idamalikkinrathu ena ninaikkinren.

Post a Comment