Tuesday 27 November 2012

கல்லறைகளில் புதைக்கப்பட்ட மாவீரர்களின் கனவுகள்


 இன்று தமிழர்களால் பரவலாகப் பேசப்படுகின்ற விடயம் மாவீரர்நாள். ஈழம் விடுதலை என்ற கோசங்களுக்கு அப்பால் இன்னுயிர்களைத் தியாகம் செய்த மாவீர்களின் கனவுகளையுப் பற்றியும் நாம் சிந்திக்க வேண்டும்.

நாம் ஈழம் விடுதலை என்கின்ற என்கின்ற கோசத்தில் பல ஆயிரக் கணக்கான போராளிகளை இழந்திருக்கின்றோம். அவர்களுக்கு மாவீரர்கள் எனும் பட்டம் மட்டுமே வழங்கியிருக்கின்றோம். அவர்களின் கனவுகள் இலட்சியங்கள் பற்றியும். அவர்களின் குடும்பங்கள் பற்றியும் யாராவது சிந்தித்திருக்கின்றோமா? 

உணர்ச்சி வார்த்தைகளால் உந்தப்பட்டு ஈழம் கிடைக்கும் என்ற கனவோடு தமது இன்னுயிர்களைத் தியாகம் செய்த அந்த மாவீரர்களின் குடும்பங்கள், மனைவி பிள்ளைகள் இன்று நடுத்தெருவில். மாவீரர்நாளில் வீர வசனங்கள் பேசுகின்றவர்கள் இக் குடும்பங்கள் பற்றி சிந்தித்திருக்கின்றார்களா?

வெறுமனே வீரப் பேச்சுக்களைப் பேசிப் பேசியே உசுப்பேற்றி மாவீர்களாக மடிய வைத்த தமிழ் அரசியல்வாதிகள் யாராவது மாவீரர் குடும்பங்கள் பற்றி சிந்தித்தார்களா?

அன்று வீர மரணமடைந்த அந்த மாவீரர்களின் மனதிலே ஈழம் கிடைக்கும் என்கின்ற உணர்வி விதைக்கப்பட்டிருந்தது. அவர்களின் உயிர் மூச்சு ஈழம் பெறுவதாகவே இருந்தது. தமது மனைவி பிள்ளைகள் குடும்பத்தை மறந்து ஈழம் என்ற இலட்சியத்திற்காகப் போராடினார்கள்.

உண்மையில் மாவீரர்களுக்கு நாம் தலை வணங்க வேண்டும். அவர்கள் இலட்சியத்திற்காக இன்னுயிர்களை மாய்த்தவர்கள். அவர்களின் உயிர் பிரியும்போது ஈழம் மலரும் எனும் கனவோடு அவர்களின் உயிர் பிரிந்திருக்கும். இது ஒரு புறமிருக்க எதற்காகப் போராடுகின்றோம் என்று தெரியாமலே உயிரை மாய்த்த போராளிகள் பலர்.

ஆனால் அவர்கள் உணரவில்லை இலங்கையில் தனி ஈழம், தமிழர்களுக்கான தனி ஒரு நாடு சாத்தியமில்லை இலங்கையில் தமிழீழம் என்பது அடைய முடியாத இலக்கு என்பதை. நான் தனி ஈழத்தை விமர்சிக்கின்றேன் என்று என்னைத் திட்டுவீர்கள். இலங்கையில் தனி ஈழம் அடைய முடியாத இலக்கு என்பதனை பலரும் உணர்ந்திருக்கின்றனர். இலங்கையில் தமிழீழம் என்பது அடைய முடியாத இலக்காகவே இருக்கப் போகின்றது.

ஈழம் மலரும், முள்ளிவாய்க்கால் முடிவல்ல ஆரம்பம் என்பதும், அரசியல் சுகபோகங்களக்காக தமிழ் பிரதேசங்களில் மாவீரர் தின சுவரொட்டிகளை ஒட்டுவதும் மீண்டும் தமிழர்களை அழிவுப் பாதை நோக்கி கொண்டு செல்லும் என்பதில் ஐயமில்லை.

தமிழர் பிரதேசங்களிளே மாவீரர் தின சுவரொட்டிகளை ஒட்டியிருப்பதனால் என்ன நடக்கப்போகின்றது? சுற்றி வளைப்புக்கள் கைதுகள் இடம்பெறப்போகின்றது. இதனால் சித்திரவதைகளை அனுபவிக்கப் போவது அப்பாவி தமிழ் இளைஞர்களே.

ஏதோ ஒரு வகையில் மக்கள் நிம்மதியாக வாழ்ந்து வருகின்றனர். மீண்டும் மக்களை உசுப்பேற்றி பலிக்கடாவாக்க யாரும் முயற்சி செய்யாதீர்கள். இன்னும் பல ஆயிரக் கணக்கான மாவீரர்களை உருவாக்கி அவர்களின் னவுகளையும் கல்லறைகளில் புதைக்க நினைக்காதீர்கள்




Post Comment


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "கல்லறைகளில் புதைக்கப்பட்ட மாவீரர்களின் கனவுகள்"

Post a Comment