Thursday, 7 July 2011

கிழக்கு மாகாண விதவைகளுக்கு கைகொடுக்க முன்வந்துள்ள இந்திய சேவா பெண்கள் அமைப்பு

கிழக்கு மாகாணத்திலே போர், சுனாமி, வறுமை மற்றும் ஏனைய அணர்த்தங்களால் கணவனை இழந்து இருக்கின்ற பெண்களுக்கு அவர்களை வாழ்வாதாரத்தை ஈட்டும் முகமாக கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் இந்திய சேவா பெண்கள் அமைப்புடன் கேட்டுக்கொண்டதற்கு அமைய இந்திய சேவா பெண்கள் அமைப்பானது கிழக்கு மாகாணசபையுடன் இனைந்து கிழக்கு மாகாணத்திலுள்ள விதவைகளின் வாழ்வாதார மேம்பாட்டினை முன்னெடுப்பதற்கு இவர்கள் முன்வந்துள்ளனர்.

 (05.07.2011) மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வந்த இந்திய சேவா பெண்கள் அமைப்பின் முக்கியஸ்த்தர்கள் கிழக்கு மாகாண முதலமைச்சர் சி.சந்திரகாந்தன் அவர்களின் வாசஸ்தலத்தில் சந்தித்து கலந்துரையாடினர். ஆதன் அடிப்படையில் கிழக்கு மாகாணத்திலே உள்ள விதவைகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு பல்வேறு செயற்த்திட்டங்களையும், பயிற்சிகளையும் தாம் வழங்க முன்வந்தமை தொடர்பாக கிழக்கு முதல்வர் சி.சந்திரகாந்தன் அவர்கள் கலந்துரையாடியுள்ளார்.


முதல் கட்டமாக மட்க்களப்பு மாவட்டத்திலே போரினால் பாதிக்கப்பட்ட விதவைகளுக்கு பயிற்சி வழங்குவதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவிலும் இருந்து 40 பயிற்ச்சி போதனா ஆசிரியர்கள் இந்தியா சென்று பயிற்ச்சி பெறும் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டதோடு அப்பயிற்சிநெறி முடிவுற்றதும் உடனடியாக மட்டக்களப்பு மாவட்டத்திலே யுத்தத்தால் பாதிக்கப்பட்ட 800 விதவைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கான பயிற்சி நெறி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


2வருட காலங்களை அடிப்படையாக மேற்படி செயற்த்திட்டத்திற்காக கிழக்கு மாகாணத்திலே கணவனை இழந்த விதவைகளுக்கு சுயதொழில் வாய்ப்புக்களை வளங்கமுடியமென கிழக்கு முதல்வர் சி.சந்திரகாந்தன் தெரிவித்தார். மேற்படி செயற்த்திட்டமானது முற்று முழுதாக இனைந்ததாகவே அமைந்திருக்கும் எனவும் இந்திய சேவா பென்கள் அமைப்பின் சார்பில் கலந்து கொண்ட திருமதி.உமாதேவி சுவாமிநாதன் தெரிவித்தார். கிழக்கு மாகாணசபைக்கும் இந்திய சேவா பெண்கள் அமைப்பிற்குமான ஒப்பந்தம் எதிர்வரும் 2 வாரகாலங்களுக்கு மேற்கொள்ளப்படும்.


இந் நிகழ்வில் கிழக்கு மாகாண சமுகசேவை திணைக்கள பணிப்பாளர் மணிவன்னன், இந்திய சேவா பெண்கள் அமைப்பு உமாதேவி சுவாமிநாதன், வயகல் சோடாலியா, வீனா சர்மா மற்றும் முதலமைச்சரின் செயலாளர்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டார்கள்.read more...

Tuesday, 5 July 2011

மூஞ்சிப் புத்தகத்தில் பெண்ணாக நடித்து பல பெண்களை ஏமாற்றிவரும் இன்னொரு நாதாரி

இந்த வாரம் அரட்டை வாரமாக இருக்கட்டும். பல நாதாரிகளின் முகமூடிகள் விலக்கப்பட வேண்டும்  என்பதற்காகவும்.  மூஞ்சிப் புத்தகத்தில் பல பெண்கள் ஆண்களால் பெண்களின் பெயரில் ஏமாற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

 முன்னைய பதிவில் பெண் பெயரில் பல பெண்களை மூஞ்சிப் புத்தகத்தில் ஏமாற்றிக் கொண்டிருக்கும் பிரியா மகேஸ் பற்றிய அவரது உண்மை முகத்தை தந்திருந்தேன்.


இந்தப்பதிவின் மூலம் பெண் பெயரில் பெண்களை ஏமாற்றும் இன்னொருவர் பற்றிய தகவல்கள்

Sinthuya Sellathurai (Sinthuya Sellathura). எனும் பெயரில் மூஞ்சிப் புத்தகத்தில் இருக்கும் பெண் மீது (பெயர் மாத்திரமே பெண்) நீண்ட நாளாகவே சந்தேகம் இருந்தது எனக்கு.

 எனது மூஞ்சிப் புத்தக நண்பர்களும் இவரது நடவடிக்கைகள் தொடர்பாக சந்தேகத்தை தெரிவித்தனர்.


இவர் இணைப்பில் இருக்கும்போது அவரோடு பல தடவை அரட்டையில் நான் இணைந்தும் பதில் இல்லை.


இரு நாட்கள் சட் பண்ணினார் ஆண் என்பதனை உணர்ந்தேன். அவர் ஆண் என்பதனை நான் அறிந்ததும் அவர் எனக்கு அனுப்பிய தகவலை பாருங்கள்.

தகவலை அப்படியே வெளியிட்டமைக்கு பல தடவை உங்களிடம் மன்னிப்பு கேட்கிறேன். அவை மிக மோசமான வார்த்தைகள். அவரின் உண்மை முகம் தெரிய வேண்டும் என்பதற்காகவே அப்படியே வெளியிடுகிறேன்.
இது அவர் எனக்கு இறுதியாக அனுப்பியது

இவர் இந்தியாவைச் சேர்தவர்....

 

இன்னும் பலரது உண்மை முகங்கள் வெளிவரும்...

read more...

மூஞ்சிப் புத்தகத்தில் பெண்ணாக நடித்து பல பெண்களை ஏமாற்றிவரும் ஆண்... பெண்கள் ஜாக்கிரதை..

இணையம் நல்ல விடயங்களுக்காகப் பயன் படுத்தப்பட்டாலும் சிலர் தவறான நோக்கங்களுக்காக பயன்படுத்தி வருகின்றனர். பலர் பல்வேறு வழிகளில் ஏமாற்றிக் கொண்டு இருக்கின்றனர்.


அதிலும் குறிப்பாக சமூகத்தளங்களில் பலர் ஏமாற்றிக்கொண்டு இருக்கின்றனர். சில ஆண்கள் சமூகத்தளங்களிலே பெண் பெயரில் இருந்து பல பெண்களை ஏமாற்றி வருகின்றனர்.

 பிரியா மகேஸ் எனும் பெயரிலே ஒரு ஆண் மூஞ்சிப் புத்தகத்திலே பல பெண்களை ஏமாற்றி வருகின்றார். ஆயிரத்தக்கும் மேற்பட்டவர்கள் இவர் நண்பர்களாக இருக்கின்றனர்.

இவர் ஒரு பெண் வலைப்பதிவரிடம் சட் செய்தபோதுதான் இவர் பெண் அல்ல ஆண் என்பது தெரிய வந்தது.பெண்களே ஜாக்கிரதையாக இருங்கள்.
read more...

Sunday, 3 July 2011

புலிகள் பயங்கரவாதிகளா? தீவிரவாதிகளா?

எனக்குள் சில சந்தேகங்கள் நீட்ட காலமாக இருக்கின்றன. பயங்கரவாதி தீவிரவாதி எனும் இரு சொற்களையும் நான் அறிந்த நாள் முதல் இந்த சந்தேகங்கள் இருந்து வருகின்றன.


குறிப்பாக தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகள் தீவிரவாதிகள் என்று பல நாடுகள் முத்திரை குத்தியிருக்கின்றன. என் சந்தேகங்கள் இதுதான்.


பயங்கரவாதம் என்பது என்ன தீவிரவாதம் என்பது என்ன இந்த இரண்டு சொற்பதங்களையும் புலிகளுக்கு பயன்படுத்தலாமா? தீவிரவாதிகள் தீவிரவாத கும்பல் என்றெல்லாம் பேசுகின்றனர்.

தீவிரவாதம் எனும் சொற்பதத்தை மோசமான ஒரு  சொற்பதமாக இங்கே பயன்படுத்தப்படுகின்றது. தீவிரவாதிகள் மிக மோசமானவர்களாக சித்தரிக்கப்படுகின்றனர்.

என்னைப் பொறுத்தவரை தீவிரவாதி என்பவன் தான் கொண்ட கொள்கையில் தீவிரமாக இருப்பவன் தீவிரவாதி. அவனது கொள்ளைகள் நல்லவையாக இருக்கலாம். அல்லது தீயவையாக இருக்கலாம்.

புலிகள் தமிழ் மக்களின் உரிமைகளுக்காக தீவிரமாகப் போராடியவர்கள்.  புலிகளுக்கு தீவிரவாதிகள் என்று சொல்வதில் தவறில்லை. ஒரு இனத்தின் உரிமைக்காக போராடியவர்களை இங்கே தீவிரவாதிகள் என்று சொல்லும்போது தவறானவர்களாகவே கருதுகின்றனர்.


 நல்ல கொள்கைகளுக்காக தீவிரமாக செயற்படுபவர்களையும் இங்கே தவறானவர்களாகவே பயங்கரமானவர்களாகவே கருதுகின்றனர். 

 தீவிரவாதம் என்பது என்ன? பயங்கரவாதம் என்பது என்ன?
read more...

கிழக்கு மாகாண சபையில் என்ன நடக்கிறது - வீடியோ இணைப்பு

அண்மையில் கிழக்கு மாகாணத்தில் பரவலாக பேசப்பட்ட விடயம். ஆசிரியர் இடமாற்றம்.  இவ் விடயம் தொடர்பாக மாகாண சபையிலும் காரசாரமாக விவாதிக்கப்பட்டன..


read more...

Saturday, 2 July 2011

நாளைய தலைவர்களின் இன்றைய நிலை

முன்னைய பதிவொன்று மீண்டும்...
இன்று இலங்கையிலே மிஞ்சி இருப்பது என்ன கிராமத்துக்கொரு சிறுவர் இல்லங்களேதான். (அநாதை இல்லம் என்று சொல்லவேண்டாம் அவர்கள் அனாதைகள் இல்லை அனாதைகள் ஆக்கப்பட்டவர்கள்) நாட்டில் நடந்து வந்த உத்த சூழ்நிலையின் காரணமாக இன்று சிறுவர்களே அதிகம் பாதிக்கப்பட்டு இருக்கின்றார்கள்.இவர்கள் தாய் தந்தையரை இழந்த நிலையில் சிறுவர் இல்லங்களிலே ஏங்கிக்கொண்டு இருக்கின்றார்கள் தனது தாய் தந்தையரோடு, உறவினர்களோடு சந்தோசமாக வாழ வேண்டியவர்கள் இன்று பல இன்னல்களுக்கு மத்தியிலும் தமது வாழ் நாளைகளித்துக்கொண்டு இருக்கின்றார்கள். எத்தனை சிறுவர்கள் தாய் பாசத்துக்காக ஏங்கிக்கொண்டு இருக்கின்றார்கள். ஏனைய சிறுவர்கள்போல் தாங்களும் வாழ வேண்டுமே என்று ஏங்கிக்கொண்டு இருக்கின்றார்கள். இந்தச் சிறுவர்களால் தங்களது ஆசா பாசங்களை கட்டுப்படுத்தி எப்படித்தான் வாழ முடயும். சந்தோசமாக வாழ வேண்டிய சிறுவர்கள் இன்று விரக்தி நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள்


சந்தோசமாக தமது வாழ்நாளைகளிக்க வேண்டிய நாளைய நம் தலைவர்கள் சந்தோசமாக சிறுவர் இல்லங்கல்ளிலே வாழ்வார்களா? அவர்களால் படிப்போ அது சார்ந்த செயற்பாடுகளிலோ எப்படி ஈடுபட முடயும். எப்போதும் அவர்களை தாங்கள் அனாதைகள் என்றும் தங்களுக்கு யாரும் இல்லையே என்ற ஏக்கமுமே இருக்கும். சிறுவர் இல்லங்களிலே இருக்கின்ற சிறுவர்கள் தங்களுக்கு தேவையானவற்றை ஏனைய சிறுவர்கள்போல் பெற்றுக்கொள்ளத்தான் முடயுமா


இந்த சிறுவர் இல்லங்களிலே ஆண் பிள்ளைகள் மட்டுமல்ல பெண் பிள்ளைகளும் இருக்கின்றார்கள். இந்த பெண் பிள்ளைகளின் எதிர்காலத்தை பற்றி யோசித்துப்பாருங்களேன். ஆண் பிள்ளைகளோ ஒரு குறிப்பிட்ட வயதை அடைந்ததும் எல்லாம் சரியாகிவிடும் ஆனால் பெண் பிள்ளைகளைப் பொறுத்தவரை பல பிரட்சனைகளை எதிர்நோக்க வேண்டி ஏற்படுகின்றது. தங்களது வயது அதிகரிக்க அதிகரிக்க அவர்களுக்கு கவலையும் விரக்தியும் அதிகரிக்கின்றது. தங்களுக்கு யாரும் இல்லையே என்ற ஏக்கம் வருகின்றது. தங்கள் எதிர் காலத்தை பற்றி சிந்திக்க தொடங்கி மனதை குழப்பிக்கொண்டே இருப்பார்கள்
அவர்களது எதிர்காலத்தை பற்றி அவர்களை விட நாமே சிந்திக்க வேண்டியவர்களாக இருக்கின்றோம். இன்றைய கால கட்டத்தில் பணக்கார வீட்டு பெண்களுக்கே சீதனம் என்ற ஒன்றினால் திருமணம் தள்ளப்பட்டுக்கொண்டு போகும் இந்த காலத்தில் இவர்களின் நிலை பற்றி நாம் சிந்திக்க வேண்டும்

இந்த பெண் பிள்ளைகள் தங்களது பருவ வயதை அடைந்ததும் பல பிரட்சனைகளை எதிர் நோக்குகின்றனர். இன்று நாகரிக மோகத்தில் இளம் பெண்கள் நாகரிகமான உடை, (நடை), அலங்காரங்களோடு திரிவதை கண்டால் இவர்களது மனதிலே எப்படி கவலை வராமல் இருக்கும்.
இந்த சிறுவர்கள், பெண் பிள்ளைகள் பற்றி யாரும் கவலைப்படுவதாகத்தெரியவில்லை அவர்களின் எதிர் காலம் பற்றி எவரும் சிந்திப்பாரும் இல்லை.

இந்த இடத்திலே நான் ஒன்றை குறிப்பிட வேண்டும் நான் இந்த பதிவினை மேற்கொள்ள துண்டியது எனக்கு தெரிந்த ஒரு அக்காவின் தாராள மனசுதான். அவரோ ஒரு பணக்கார குடும்பத்தை சேர்ந்தவர் தேயிலை தோட்டங்கள் எல்லால் இருக்கின்றன அந்தளவிற்கு பணம் படைத்தவர். ஆனால் ஏழைகளுக்கு உதவி செய்பவர். அவர் அடிக்கடி என்னிடம் கூறுவார் இந்த சிறுவர் இல்லங்களில் இருக்கின்ற பெண் பிள்ளைகளின் எதிர்காலம் பற்றி தான் சிந்திப்பதாகவும் கவலை அடைவதாகவும்.


அவர் அண்மையில் என்னிடம் கூறிய ஒருசில விடயங்களை என்னால் நம்ப முடியவில்லை அவருக்கு இரண்டு ஆண் பிள்ளைகள் இருக்கின்றார்கள். அவர்கள் இருவரையும் சிறுவர் இல்லங்களிலே இருக்கின்ற பெண் பிள்ளைகளுக்கே திருமணம் செய்து வைக்க நினைத்து இருப்பதாகவும். இதனால் அந்த பிள்ளையின் உறவுகளை இளந்த கவலை இல்லாமல் போவதோடு அந்த பிள்ளையின் எதிர் காலம் வளம் பெறும் என்றும். தாய் பாசத்துக்காக ஏங்கிய அந்த பிள்ளைக்கு தான் ஒரு தாயக இருக்க போவதாகவும் கூறினார். தனது மகன் கூட சம்மதம் தெரிவித்து விட்டார் என்பது சந்தோசமான விடயம்.


இப்படி எல்லோரும் இருப்பார்களானால் இவர்களின் வாழ்க்கை வளப்படுமல்லவா.
read more...