இந்த தொடர் பதிவினை தொடர்வதற்கு நான் யாரையும் அழைக்கவில்லை. பலர் பதிவிட்டு விட்டார்கள். தொடர விரும்பும் யாரும் தொடரலாம்.
வியாழன், 26 நவம்பர், 2009
என்னைக் கதை சொல்ல சொன்னால்....
இந்த தொடர் பதிவினை தொடர்வதற்கு நான் யாரையும் அழைக்கவில்லை. பலர் பதிவிட்டு விட்டார்கள். தொடர விரும்பும் யாரும் தொடரலாம்.
புதன், 25 நவம்பர், 2009
இன்றைய சிறுவர்களின் கல்வி நிலைதான் என்ன?





இன்னும் பல காரணங்களை சொல்லிக்கொண்டே போகலாம். காரணங்களையும் தடுப்பதற்குரிய வழிவகை என்ன?... அவ்வப்போது உங்களுக்காக வந்து சேரும்.
படங்கள் பல இணையத் தளங்களிலிருந்து பெறப்பட்டவை.
செவ்வாய், 24 நவம்பர், 2009
நமக்காக நாம். மீண்டும் சந்திப்போம்.

திங்கள், 23 நவம்பர், 2009
இவர் பின்னால் ஒரு கூட்டமே இருக்கு
மற்றும் நாளை சாகித்திய விருதினைப் பெறும் எமது வலைப்பதிவர் மேமன் கவி உட்பட அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.
ஞாயிறு, 22 நவம்பர், 2009
இப்படியெல்லாம் நடக்கிறது..
இரண்டு வாகனங்கள் ஒன்றை ஒன்று முந்தி செல்வது, எதிரெதிராக வரும் வாகனங்கள் செல்ல முடியாத நிலை என்பன ஏற்படுகின்றன. இது தொடர்பிலே உரிய அதிகாரிகள் கவனம் செலுத்துவது நல்லதே.
இங்கேயும் போகலாம்..
பேசாத பிள்ளைகளை பேச வைப்பவர்
வெள்ளி, 20 நவம்பர், 2009
திருந்துவார்களா இவர்கள்


புதன், 18 நவம்பர், 2009
தமிழ் மொழியை கொலை செய்து வளர்ந்து வரும் தமிழ் சினிமா.
மகிந்த ராஜபக்ஷ அவர்களும் ஆயிரம் ரூபாவும்
இந்த நாணயத்தாள் சொல்வது என்ன?

வீட்டுக்கு வீடு வானொலிப் பெட்டிக்கருகில்
திங்கள், 16 நவம்பர், 2009
காதலி காதலன்மீது எப்போதும் அன்பாயிருக்க சில ஆலோசனைகள்...

யாரும் என்னை திட்ட நினைத்திடாதிங்க இது ஒரு நகைச்சுவைப் பதிவு.
இப்போது சில வலையுலக நண்பர்கள் எதிர் நோக்குகின்ற பிரச்சனை பற்றி இந்த பதிவுல தரலாம் என்று இருக்கிறன்.
என்ன நம்ம பிரபல பதிவர் ஒருவருக்கு விரைவில் திருமணம் என்று லோஷன் அண்ணா ஒரு பதிவு போட்டதுமே நம்ம இளம் சிங்கங்கள் உசாராகிட்டாங்க. நாங்களும் கல்யாணம் முடிக்கணும் இன்று ஒரு சிலர் அவங்களின்ர அம்மா அப்பாவ கஷ்டப்படுத்திக்கொண்டு இருப்பதாக பதிவர் கோபியால் நடாத்தப்படும் பம்மாத்து FM வானொலியில செய்தி போனது.
சரி என்று நிலமைய ஆராஞ்சி பார்த்தா பல பதிவர்கள் பல சிக்கல்களை எதிர் நோக்குவதை அறிய முடிந்தது. என்ன ஒரு காதலி காதலனோடு எப்பவும் அன்பா இருக்கணும் என்றால் , காதலிக்கு காதலன் மீது பிடிக்கும் விடயங்கள் என்ன என்று அறிய முடியாதிருப்பதாகவும், தான் விரைவிலே காதலில் விழக்கூடிய சாத்தியங்கள் இருப்பதாகவும் நண்பர் கோபி சொன்னார். சொன்னதோடு மட்டுமல்லாமல். காதலிகளுக்கு காதலன் மீது என்ன விடயங்கள் பிடிக்கும் என்று ஒரு ஆய்வு செய்து தரும்படி கேட்டுக்கொண்டார்.
அவரின் பரிதாபம் தாங்க முடியாமல் சுபாங்கன் தலைமையிலே எமது குழு ஆராச்சிகளை மேற்கொண்டது. ஆராச்சியின் முடிவுகளின்படி. காதலன் மீது காதலிகளுக்கு என்ன விடயங்கள் பிடிக்கும் என்ற விபரங்கள் இதோ.
1. காதலி எங்கே போகின்றார், வருகின்றார் என்ற விடயங்களை காதலியிடம் கேட்கக்கூடாது. நீங்கள் அதிகம் வெளியில் செல்லக்கூடாது.
2. நீங்கள் அதிக நேரம் எவருடனும் தொலை பேசியில் உரையாடக்கஊடாது. ஆனால் காதலி யாருடனும் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் கதைக்கலாம். நீங்கள் கண்டுகொள்ளக்கூடாது.
3. நீங்கள் உங்கள் பெண் நண்பிகளோடு காதலி இருக்கும்போது கதைப்பதனை தவிர்த்துக்கொள்ளுங்கள். அல்லது முற்றாக நண்பிகளை மறந்து விடுங்கள். உங்கள் காதலி அவரது நண்பர்களோடு பழகுவதற்கு இடமளியுங்கள்.
4. உங்கள் காதலி அழகில்லை என்றாலும் உன்னைப்போல் அழகி உலகிலில்லை என்று புகழ்ந்து பேசுங்கள்.
5. நீங்கள் காதலிக்க ஆரம்பித்ததும் ஆடம்பரங்களை தவிருங்கள். நீங்கள் அழகாக இருந்தால் ஏனைய பெண்கள் உங்களை அபகரித்து விடுவார்கள் என்ற எண்ணம் உங்கள் காதலிக்கு இருக்கும். நீங்கள் ஆடம்பரமாக இருந்தால் உங்களை நோட்டம்விட ஆரம்பித்து விடுவார். சந்தேகப்பட்டு விடக்கஊடிய சந்தர்ப்பங்கள் இருக்கிறது.
6.உங்கள் காதலிக்கு என்னவெல்லாம் பிடிக்குமோ எல்லாவற்றையும். உங்களிடம் பணமில்லை என்றாலும் எங்காவது கடன் பட்டாவது வாங்கிக் கொடுங்கள். ஆனால் உங்களிடம் பணம் இல்லை என்பதனைக் காட்டிக்கொள்ளவேண்டாம்.
7. அதிகமாக இளம் பெண்கள் இருக்கின்ற இடங்களுக்கு போவதனைத் தவிர்த்துக் கொள்ளுங்கள். அல்லது காதலிக்குத் தெரியாமல் போய் வாருங்கள்.
8. உங்கள் காதலி பலர் மத்தியிலே இருக்கும்போது உங்கள் காதலியைப் பற்றி அவர்களிடம் புகழ்ந்து பேசுங்கள். (காதலி இல்லாத நேரங்களில் திட்டித்தீர்க்கலாம்)
9.நீங்கள் இதற்கு மூன்னர் வேறு யாரையும் காதலித்திருந்தாலும் உங்கள் காதலியிடம் எனக்கு பெண்களைப் பார்க்கவே பிடிக்காது ஆனால் உன்னை எப்பவும் பார்த்துக் கொண்டே இருக்கணும்போல இருக்கு என்பது போன்ற வசனங்களை அடிக்கடி பேசுங்கள்.
10. இதுதான் முக்கியமான விதி முதலில் ஒரு பெண்ணை காதலிக்கவேண்டும்.
வெள்ளி, 13 நவம்பர், 2009
இணையத்தில் காதலித்துச் சம்பாதிக்கலாம்

சம்பவங்கள் உண்மை..... நீயா அவன் என்று கேட்கவேண்டாம். நான் அவனில்லை.
வியாழன், 12 நவம்பர், 2009
நாளைய தீர்ப்பு முதல் வேட்டைக்காரன் வரை... இளைய தளபதி விஜய்




இன்று அரசியலில் ஈடுபடுவது பற்றிப்பேசப்படுகின்றது அரசியலில் இறங்கினால் அவர் தற்போது வைத்திருக்கின்ற பல இரசிகர்களை இழப்பதோடு, அவர் சினிமாவிலே நிலைத்திருக்க முடியாத நிலையும் தோன்றலாம்.
19992 - நாளைய தீர்ப்பு
துணை நடிகை - கீர்த்தனா
இயக்கம் -எஸ். ஏ. சந்திரசேகர்
1993 - செந்தூரப்பாண்டி
துணை நடிகை - யுவராணி
இயக்கம் -எஸ். ஏ. சந்திரசேகர்
1994 - ரசிகன்
துணை நடிகை - சங்கவி
இயக்கம் - எஸ். ஏ. சந்திரசேகர்
1994 - தேவா
துணை நடிகை - சுவாதி
இயக்கம் - எஸ். ஏ. சந்திரசேகர்
1995 - ராஜாவின் பார்வையிலே
துணை நடிகர், நடிகை - இந்திரஜா, அஜித்
இயக்கம் - ஜானகி சௌந்தர்
1995 - விஷ்ணு
துணை நடிகை - சங்கவி
இயக்கம் - எஸ்.ஏ.சந்திரசேகர்
1995 - சந்திரலேகா
துணை நடிகை, நடிகர் - வனிதா விஜய்குமார்
இயக்கம் - நம்பிராஜன்
1996 - கோயம்புத்தூர் மாப்ளே
துணை நடிகை - சங்கவி
இயக்கம் - சி. ரெங்கனாதன்
1996 - பூவே உனக்காக
துணை நடிகை -சங்கீதா, அஞ்சு அரவிந்த்
இயக்கம் - விக்ரமன்
1996 - வசந்த வாசல்
துணை நடிகை - சுவாதி
இயக்கம் - M. R. சசுதேவன்
1996 - மாண்புமிகு மாணவன்
துணை நடிகை - கீர்த்தனா
இயக்கம் - எஸ்.ஏ.சந்திரசேகர்
1996 - செல்வா
துணை நடிகை - சுவாதி
இயக்கம் - ஏ. வெங்கடேசன்
1997 - காலமெல்லாம் காத்திருப்பேன்
துணை நடிகை - டிம்ப்பல்
இயக்கம் - ஆர். சுந்தர்ராஜன்
1997 - லவ் டுடே
துணை நடிகை - சுவலட்சுமி
இயக்கம் -பாலசேகரன்
1997 - ஒன்ஸ் மோர்
துணை நடிகை- சிம்ரன்
இயக்கம் - எஸ்.ஏ.சந்திரசேகர்
இத் திரைப்படத்தில் சிவாஜி கணேசன் முக்கிய வேடமேற்று நடித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது
1997 - நேருக்கு நேர்
துணை நடிகர், நடிகை - சூர்யா, சிம்ரன், கௌசல்யா
இயக்கம் - வசந்த்
1997- காதலுக்கு மரியாதை
துணை நடிகை - சாலினி
இயக்கம் - பாசில்
1998 - நினைத்தேன் வந்தாய்
துணை நடிகைகள் - தேவயானி, ரம்பா
இயக்கம் - கே. செல்வபாரதி
1998 - பிரியமுடன்
துணை நடிகை - கௌசல்யா
இயக்கம் - வின்சென்ட் செல்வா
1998 - நிலாவே வா
துணை நடிகை - சுவலட்சுமி
இயக்கம் - ஏ. வெங்கடேசன்
1999 - துள்ளாத மனமும் துள்ளும்
துணை நடிகை - சிம்ரன்
இயக்கம் - S. எழில்
1999 - என்றென்றும் காதல்
துணை நடிகை - ரம்பா
இயக்கம் - மனோஜ்
1999 - நெஞ்சினிலே
துணை நடிகை -இசா கோபிகர்
இயக்கம் - எஸ்.ஏ.சந்திரசேகர்
1999 - மின்சாரக் கண்ணா
துணை நடிகை - ரம்பா
இயக்கம் - கே. எஸ். ரவிக்குமார்
2000 - கண்ணுக்குள் நிலவு
துணை நடிகை - சாலினி
இயக்கம் - பாசில்
2000 - குஷி
துணை நடிகைகள் - ஜோதிகா, சில்பா செட்டி
இயக்கம் - எஸ். ஜே. சூர்யா
2000 - பிரியமனவளே
துணை நடிகை - சிம்ரன்
இயக்கம் - கே. செல்வபாரதி
2001 - பிரெண்ட்ஸ்
துணை நடிகை, நடிகர் - தேவயானி ,சூர்யா
இயக்கம் - சித்திக்
2001 - பத்ரி
துணை நடிகைகள் - பூமிகா, மோனல்
இயக்கம் - அருண் பிரசாத்
2001 - ஷாஜகான்
துணை நடிகைகள் - ரிச்சா பல்லோடு, மீனா
இயக்கம் - ரவி
2002 - தமிழன்
துணை நடிகை - பிரியங்கா சோப்ரா
இயக்கம் - ஏ. மஜீத்
2002 - யூத்
துணை நடிகைகள் - சந்தியா, சிம்ரன்
இயக்கம் - வின்சென்ட்
2002 - பகவதி
துணை நடிகை - ரீமா சென்
இயக்கம் - ஏ. வெங்கடேஷ்
2003 - வசீகரா
துணை நடிகை - சினேகா
இயக்கம் - கே. செல்வபாரதி
2003 - புதிய கீதை
துணை நடிகைகள் - மீரா ஜாஸ்மின், அமிஷா பட்டேல்
இயக்கம் - கே. பி. ஜெகன்
2003 - திருமலை
துணை நடிகை - ஜோதிகா
இயக்கம் - ரமணா
2004 - உதயா
துணை நடிகை - சிம்ரன்
இயக்கம் - அழகம் பெருமாள்
2004 - கில்லி
துணை நடிகை - திரிஷா
இயக்கம் - தரணி
2004 - மதுர
துணை நடிகைகள் - சோனியா அகர்வால், ரக்ஷிதா, தேஜாஸ்ரீ
இயக்கம் - ஆர். மாதேஷ்
2005 - திருப்பாச்சி
துணை நடிகைகள் - திரிஷா, மல்லிகா
இயக்கம் - பேரரசு
2005 - சச்சின்
துணை நடிகைகள் - ஜெனிலியா, பிபாசா பாசு, Linda Arsenio
இயக்கம் - ஜான் மகேந்திரன்
2005 - சுக்கிரன்
துணை நடிகைகள் - ரவி கிருஷ்ணா, நடாஷா, ரம்பா
இயக்கம் - எஸ்.ஏ.சந்திரசேகர்
2005 - சிவகாசி
துணை நடிகைகள் - அசின், நயன்தாரா
இயக்கம் - பேரரசு
2006 - ஆதி
துணை நடிகை - திரிஷா
இயக்கம் - ரமணா
2007 - போக்கிரி
துணை நடிகைகள் - அசின், முமைத் கான்
இயக்கம் - பிரபு தேவா
2007 -அழகிய தமிழ் மகன்
துணை நடிகைகள் - சிரேயா, நமிதா
இயக்கம் -பரதன்
2008 - குருவி
துணை நடிகைகள் - திரிஷா
இயக்கம் - தரணி
2009 - வில்லு
துணை நடிகை - நயன்தாரா
இயக்கம் - பிரபு தேவா
2009 - வேட்டைக்காரன்
புதன், 11 நவம்பர், 2009
கேள்விக்கென்ன பதில்
விதிகள்:
1.அழைத்தவரை அறிமுகம் செய்தல்.
2.விதிகளைப் பதிவிலிட வேண்டும்.
3.எல்லா ஆங்கில எழுத்தில் உள்ள கேள்விக்கும் பதில் அளிக்க வேண்டும்.
4.பதிவின் முடிவில் நான்கு பேரை மாட்டிவிட வேண்டும்.
5.அந்த நால்வருக்கும் ஓலை அனுப்பவேண்டும்.
6.அழைக்கப் பட்டவர்களையே அழைக்காமல் புதியவர்களை அழைக்க வேண்டும்.
தமிழுக்கே முதலிடம்
அன்புக்குரியவர்கள்: அம்மா, தங்கைகள்,
ஆசைக்குரியவர்: எனக்காகக் காத்திருப்பவள் (எங்கேயோ இருப்பாள்தானே)
இலவசமாய் கிடைப்பது: தாயின் அன்பு
ஈதலில் சிறந்தது: வலது கை கொடுப்பதை இடது கை அறியாதது
உலகத்தில் பயப்படுவது: கடவுளுக்கு மட்டுமே.
ஊமை கண்ட கனவு: பேசுவதாய்
எப்போதும் உடனிருப்பது: துணிவும், தன்னம்பிக்கையும்
ஏன் இந்த பதிவு: நண்பர்களின் அன்பினால்
ஐஸ்வர்யத்தில் சிறந்தது: கல்வி, செல்வம், வீரம்
ஒரு ரகசியம்: இரகசியமாகவே இருக்கட்டுமே. (சொன்னால் அது இரகசியமாகாதே.)
ஓசையில் பிடித்தது: ஒரு நதிக்கரையில் இருக்கும்போது அங்கே வருகின்ற அந்த அருவியின், இயற்கையின் இனிய ஓசை
ஔவை மொழி ஒன்று: அறம் செய்ய விரும்பு.
(அ)ஃறிணையில் பிடித்தது: நிறையவே இருக்கிறது.
1. A – Avatar (Blogger) Name / Original Name : யோகராஜா சந்திரகுமார்
2. B – Best friend? : இல்லாமல் இருக்குமா?
3. C – Cake or Pie? : Cake ரொம்பப்பிடிக்கும்.
4. D – Drink of choice : அடிக்கடி ஏதாவது அருந்துவதுண்டு (அப்படியான பாணங்கள் அல்ல, நான் ரொம்ப நல்லவன்)
5. E – Essential item you use every day? : என்ன பணம்தான் (பணத்தால் எதையும் செய்யலாமல்லவா)
6. F – Favorite color ? : நீலம்
7. G – Gummy Bears Or Worms : இது வேண்டாம்
8. H – Hometown? : மட்டக்களப்பு
9. I – Indulgence? : சொல்லாதே யாரும் கேட்டால்.
10. J – January or February? : இரண்டுமே இல்லை நவம்பர் பிடிக்கும்
11. K – Kids & their name : இன்னும் திருமணமாகவில்லை
12. L – Life is incomplete without : சமுகத்துக்கு ஏதாவது நல்லதை செய்யவேண்டும்.
13. M – Marriage date? இன்னும் இல்லை. பிறந்தது 23. 03
14. N – Number of siblings : எல்லையற்றது...
15. O – Oranges or Apples : இரண்டுமே
16. P – Phobias/Fears? : சொல்லமாட்டேன்
17. Q – Quote for today? : வாழ்ந்து பார்க்க வேண்டும் மனிதனாக
18. R – Reason to smile? :உலகம் போகிற போக்கைப் பார்த்தால் சிரிப்பு வருது.
19. S – Season? : வசந்த காலம்..
20. T – Tag 4 People? : யோகா , தர்சாஜனி ,முனைவர் கல்பனா சேக்கிழார் , சுபானு
21. U – Unknown fact about me? : நீங்களே சொல்லுங்க
22. V – Vegetable you don't like? : பசிவந்தால் எதுவானாலும் சாப்பிடலாம்.
23. W – Worst habit? : அப்படியே விட்டுவிடுகிறேன்.
24. X – X-rays you've had? : இல்லை
25. Y – Your favorite food? : எதுவானாலும் நாவுக்கு சுவையாய் இருந்தால் ஒரு பிடி பிடிக்கலாம்.
26. Z – Zodiac sign? : இது எல்லாம் இரகசியம் வந்தி சோதிடருக்கு தெரிந்தால் ராசி மாற்றங்களை பதிவிட்டுவிடுவார்.
செவ்வாய், 10 நவம்பர், 2009
இப்படியும் பேசலாம்
மனிதனை மனிதன் இல்லாதொழிக்க இந்த கண்டு பிடிப்புத் தேவையா?

படங்களுக்கு நன்றி சசி
திங்கள், 9 நவம்பர், 2009
இவர்கள்தான் அவர்கள்

நண்பர் அக்பர் (சிநேகிதன்) என்னை ஒரு தொடர் பதிவுக்கு அழைத்திருக்கின்றார். சிநேகிதனுக்கு நன்றிகள்.
1 . அரசியல் தலைவர்
பிடித்தவர் : இன்னும் எவரும் இல்லை - சுய நலமின்றி மக்களுக்காக சேவை செய்தவர்கள் இல்லை
பிடிக்காதவர் : கருணாநிதி - தமிழுக்காக, தமிழருக்காக என்று சொல்லிலே தமிழனை ஏமாற்றி அரசியல் நடத்துவது
2 . எழுத்தாளர்
பிடித்தவர் : சுஜாதா
பிடிக்காதவர் : தலைக்கனம் பிடித்தவ எழுத்தாளர்களை
3. கவிஞர்
பிடித்தவர்: பா.விஜய் இவரது பாடல்கள் பல என்னைப் பாதித்ததுண்டு.
பிடிக்காதவர் : அதிகம் இரட்டை அர்த்தங்களோடும், வேற்றுமொழி கலந்தும் பாடல்களை எழுதுவோரை
4. பாடகர்
பிடித்தவர் : ஹரிஹரன்
பிடிக்காதவர் : சந்ரு
5. பாடகி
பிடித்தவர் : சித்ரா
பிடிக்காதவர் : தமிழை தமிலாய் படுபவர்களை
6. இயக்குனர்
பிடித்தவர் : சீமான் - இயக்கிக்கொண்டிருப்பதனால் (எதனை என்று கேட்கவேண்டாம்)
பிடிக்காதவர் : தமிழ் படங்களை தமிழ் படமாக தராதவர்களை
7. நடிகர்
பிடித்தவர் : யாரு நம்ம விஜய்தான்
பிடிக்காதவர் : நடிக்கத் தெரியாதவர்கள்
8. நடிகை
பிடித்தவர் : த்ரிஷா
பிடிக்காதவர் : நயன்தாரா (பொறாமைதான்)
9. விளையாட்டு
பிடித்தது :உதைபந்தாட்டம்
பிடிக்காதது : எதுவுமில்லை
10. பேச்சாளர்
பிடித்தவர் :இருக்கிறார்கள் சொன்னால் பிரச்சனை
பிடிக்காதவர்: தங்களைப் பற்றி அதிகம் பேசுபவர்கள்
இதைத் தொடர இரண்டு முதல் ஐந்து பதிவர்களை அழைக்க .
நான் அழைப்பது.....
பிறந்தநாள் பரிசு பெறுவதற்காக
1. வந்தி
2. கீர்த்தி
3. க.கோபி கிருஷ்ணா.
4. சுபாங்கன்
5. மேனகாசத்தியா
ஞாயிறு, 8 நவம்பர், 2009
கொம்பு முளைத்த பதிவர்கள் யார்?
சனி, 7 நவம்பர், 2009
தமிழர்களாலேயே பறிபோகும் தமிழர் உரிமைகள்
வெள்ளி, 6 நவம்பர், 2009
நீங்கள் எந்த உலகத்தில் இருந்தீர்கள் - கலைஞருக்கு ஒரு கடிதம்
நலம்தானே..... நலமாக இருப்பிர்கள் என்று நம்புகின்றேன்.....
உங்களை நான் அறிந்த நாள் முதல் எனக்குப் பிடித்த முதன்மையான மனிதர்களில் ஒருவராக நினைத்துவந்தேன். இருந்தும் இன்று இலங்கைத் தமிழர்கள் மீதான உங்களின் பாராமுகமும், நடவடிக்கைகளுக்கும் உங்கள் மீதிருக்கின்ற எனது நல்ல அபிப்பிராயங்களை தவிடுபொடியாக்கிவிட்டன.
உங்களின் தமிழ் பற்றே எனக்கு உங்களைப் பிடிப்பதற்குக் காரணம். ஆனால் இன்று பார்க்கின்றபோது உங்களிடம் உண்மையான தமிழ் பற்று இருக்கின்றதா? அல்லது உங்களின் இருப்புக்கான தமிழ் பற்றா என்றெல்லாம் எண்ணத் தோன்றுகின்றது.
தமிழ் மொழியை வளர்ப்பதுபற்றிப் பேசுவது சிரிக்கத் தோன்றுகின்றது. தமிழை வளர்ப்பதற்கு முன்னர் தமிழைப் பேசுகின்ற மக்கள் அழிக்கப்படுவதை நிறுத்த நடவடிக்கை எடுங்கள் அம்மக்களால் தமிழ்மொழி தானாகவே வளர்க்கப்படும்.
வியாழன், 5 நவம்பர், 2009
எல்லோராலும் அவதானிக்கப்படும் இலங்கைப் பதிவர்கள்
இன்று விவாதத்துக்குள்ளாகி இருக்கின்ற இந்தச் சந்திப்பானது, பதிவர் சந்திப்பு அல்ல இருக்கிறம் சஞ்சிகை ஏற்பாடு செய்திருக்கின்ற பதிவர்களுக்கும் அச்சு இலத்திரனியல் ஊடகவியலாலருக்குமிடயிலா சந்திப்பு என்றுதான் வந்தி தெளிவாகப் பதிவிட்டு இருந்தார். நானும் அவ்வாறே பதிவிட்டிருக்கின்றேன். பலரும் புரிந்துகொண்ட விதம் வேறாகிவிட்டது.
வந்தி என்னோடு தொலைபேசியில் பேசும்போது இது ஒரு ஒன்றுகூடலாகத்தான் அமைய இருக்கின்றது என்ற விபரங்களையும் சொல்லி இருந்தார்.
நான் எப்போதும் வந்தி என்றுதான் சொல்வேன். இப்போ வந்தி அண்ணா என்று சொல்ல நினைத்திருக்கின்றேன். எல்லோரும் வந்தியை (............) என்று சொல்வார்கள் நான் அப்படிச் சொல்லமாட்டேன். கனககோபி வயசில தம்பிதான் ஆனா உருவத்தைப் பார்த்தா தாத்தா என்று சொல்ல தோன்றுது. சுபாங்கன் எல்லோருக்கும் தம்பியாக இருக்கலாம்.
நாம் அச்சு, இலத்திரனியல் ஊடகமென்று சொல்கின்றோம். இணையம், ஊடகம் இல்லையா? வலைப்பதிவு ஊடகமில்லையா? நாம் ஏன் வலைப்பதிவர்களை ஊடகங்களிலிருந்து தனியாக்க நினைக்கின்றோம். இங்கே ஊடகம் என்பதன் வரையறை என்ன?
சனி, 31 அக்டோபர், 2009
எங்கள் சந்திப்பு நேரடி ஒலி, ஒளிபரப்பு.... பார்க்க மறந்திடாதிங்க.
இந்தச் சந்திப்பானது நேரடியாக ஒலி, ஒளிபரப்புச் செய்யப்பட இருக்கின்றன. இதன் மூலம் பார்வையாளர்களும் தமது கருத்துக்களை பரிமாறிக்கொள்ள முடியும்.
நேரடி ஒளிபரப்புக்கான சுட்டி இதோ
எவரும் மறந்திடவேண்டாம்.
%5B2%5D.jpg)
முதலாவது பதிவர் சந்திப்புக்கு போகவில்லையே என்ற கவலை இன்னும் போகவில்லை அதுதான் இந்த எதிர்பார்ப்பு. இந்தச் சந்திப்பிலே வலைப்பதிவினூடாக கருத்துக்களை பரிமாறிக்கொண்ட நண்பர்களை நேரடியாக சந்திக்கப்போகின்றேனே என்ற சந்தோசத்தில் இருக்கின்றேன்.
இருக்கிறம் நிர்வாகத்தால் அனுப்பப்பட்ட மின்னஞ்சலிலே சில விடயங்களும், இருக்கிறம் சஞ்சிகை நிறுவனத்தைச் சென்றடைவதற்கான வரைபடமும் அனுப்பப்பட்டிருக்கின்றன. அந்த மின்னஞ்சலிலே குறிப்பிடப்பட்டிருக்கின்ற விடயங்களையும், இருக்கிறம் சஞ்சிகை நிறுவனத்தை சென்றடைவதற்கான வரைபடத்தினையும் தருகின்றேன்.

மேலதிக விபரங்களுக்கு.
"IRUKIRAM"
Ego Publication House (Pvt) Ltd
03, Torington Avenue, Colombo -07
T.P - 0113150836
Fax : 011 2585190
Email : irukiram@gmail.com
Website: www.irukkiram.tk
சரி எல்லோரும் மறந்திடாம வந்திடுங்க... நல்ல பல விடயங்கள் இச் சந்திப்பிலே இடம்பெற இருப்பதாக அறியக்கூடியதாக இருக்கின்றது.
வியாழன், 29 அக்டோபர், 2009
இலங்கையின் தமிழ் ஊடகங்களும் வலைப்பதிவர்களும்.
இலங்கையின் முதலாவது வலைப்பதிவர் சந்திப்பின் பின்னரே வலைப்பதிவர்கள் பக்கம் எல்லோரது பார்வையும் திரும்பியது என்று சொல்லலாம். முதலாவது வலைப்பதிவர் சந்திப்பின்பின் பல நல்ல விடயங்கள் நடந்தேறியிருக்கின்றன. சந்திப்பின் பின்னர் எதனைச் சாதித்தனர் என்று ஒரு சிலர் கேட்பது இலங்கைப் பதிவர்களின் வளர்ச்சியினைத் தாங்கிக்கொள்ள முடியாதவர்களின் பொறாமையின் உச்சகட்ட வெளிப்பாடுதான்.
எதிர்வரும் திங்கட்கிழமை இடம்பெறும் சந்திப்புக்கு பின்னர் ஏனைய அச்சு ஊடகங்களும் பதிவர்களது பதிவுகளுக்கு, பதிவுகளுக்கு, ஆற்றல்களுக்கு இடங்கொடுக்கும் என்ற நம்பிக்கை இருக்கின்றது.
புதன், 28 அக்டோபர், 2009
கிராமியத் தெய்வ வழிபாடும் மூட நம்பிக்கைகளும்
இந்த மூட நம்பிக்கைகள் இந்து சமயத்தின் மீதும், கடவுளின்மீதும் இருக்கின்ற நம்பிக்கையினை இல்லாமல் செய்பவையாக இருக்கின்றன. இந்த மூட நம்பிக்கைகள் பொதுவாக கிராமியத் தெய்வ வழிபாட்டிலே அதிகமாகக் காணப்படுகின்றன.
அண்மையிலே ஒரு ஆலயத்திலே இடம்பெற்ற சில சம்பவங்களை இடுகையிடுகின்றேன். இந்தச் சம்பவங்கள் பலரது விமர்சனத்துக்கும் உள்ளானது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆலயம் ஒரு காளி ஆலயம். பல வருடங்கள் பழமையான ஆலயம். பல சிறப்புக்களை உடைய ஆலயம். அண்மையிலே ஆலயமானது சிறப்பான முறையிலே ஆலயம் புனரமைக்கப்பட்டு. கும்பாபிசேகம் இடம்பெற்றதோடு கடந்த வருடம் முதல் தெய்வம் ஆடி கட்டுச் சொல்லுகின்ற முறையும் ஆரம்பிக்கப்பட்டது.
இந்த சடங்கினைச் செய்வதற்கு வேறு கிராமங்களிலே இருந்து பூசாரிமார் வரவளைக்கப்பட்டனர். அவர்கள் நடந்துகொண்ட விதம் மக்களிடம் இருக்கின்ற கடவுள் நம்பிக்கையினை இல்லாமல் செய்யும் ஒன்றாகவே இருந்தது.
இந்த ஆலயத்திலே பலர் தெய்வம் ஆடினார். பலரை அழைத்து கட்டுச் சொன்னனர். ஆனால் நல்ல விடயங்கள் எதுவும் சொல்லப்பட்டதாகத் தெரியவில்லை. அங்கே சொல்லப்பட்ட விடயங்கள். பலரது எதிர்ப்பினையும் சம்பாதிக்க வேண்டியிருந்தது.
நான் பல ஆலயங்களிலே பார்த்திருக்கின்றேன் சில நிமிடங்களே தெய்வம் ஆடுவார்கள் ஆனால் இந்த ஆலயத்திலே பல மணித்தியாலங்களாக தெய்வம் ஆடப்பட்டது. அங்கே வந்த பக்தர்கள் பலரை அழைத்து தெய்வம் ஆடியவர்களால் சொல்லப்பட்ட விடயங்கள்.
1. எதிர்வரும் வருடம் ஆலயத்திலே சடங்கு நடப்பதற்கு முன்னர் குறிப்பிட்ட பணத்தினை ஆலயத்துக்கு செலுத்தவேண்டும், அல்லது குறிப்பிடுகின்ற வேலைகளை செய்து கொடுக்கவேண்டும். அப்போதுதான் நீங்கள் நினைக்கும் எந்தக் காரியமும் வெற்றியடையும் இல்லையேல் கடவுளின் தண்டனைக்கு ஆளாக நேரிடும் என்று சொல்லப்பட்டது.
இது கடவுளே இலஞ்சம் வாங்குவது போன்று இருக்கின்றது. கடவுளுக்கு நாம் ஒன்றைக் கொடுத்தால்தால் கடவுள் எமக்கு வரமருளுவார் என்றால் எதற்கு அந்தக் கடவுளை வணங்கவேண்டும்.
நாம் நேர்கடன் வைப்பது நாம் நினைப்பதனை கடவுள் நிறைவேற்றிவிட்டார். அவர் நிறைவேற்றியதட்காக நாம் செய்யும் கைமாறாகும். அதனை இங்கே வேறு முறையில் பயன்படுத்த நினைத்துவிட்டனர்.
2. ஒரு இளைஞர் அழைக்கப்பட்டார் அவரிடம் சொல்லப்பட்ட விடயம் எல்லோரையும் ஆச்சரியப்பட வைத்தது. எந்த ஒரு நண்பரோடும் கதைக்கக் கூடாது. என்று அம்மன் மீது சத்தியம் செய்து வாங்கப்பட்டது. அவர் நண்பர்களோடு கதைக்கின்றபோது அவரது படிப்பு தடைப்பட்டு விடும் என்றும் சொல்லப்பட்டது. ஆனால் அவர் படிப்பினை நிறுத்தி பல வருடங்களாகிவிட்டது.
இங்கு அவரை நண்பர்களோடு பழகவேண்டாம் என்று சத்தியம் வாங்குவது பொருத்தமானதா? அவர் இதனால் தனிமைப் படுத்தப்படும்போது அவரது எதிர்கால நிலை என்ன?
3. ஒரு மீன் வியாபாரியின் மனைவி அழைக்கப்பட்டு உங்கள் கணவன் மீன் விற்பனை செய்வதனால் ஆலயத்துக்கு வரக்கூடாது என்று சொல்லப்பட்டது .
இது சரியானதா? இன்று மீன் சாப்பிட்டுவிட்டே ஆலயத்துக்கு செல்வோர் இருக்கின்றனர். மீன் விற்பனை செய்வோர் ஆலயத்துக்கு வரக்கூடாது என்று எங்கே சொல்லப்பட்டிருக்கின்றது? ஆனால் இந்த பூசாரிமார் ஆலய நிகழ்வுகள் இல்லாத நாட்களில் மீன் சாப்பிடுவதாகவும், மது அருந்துவதாகவும் பின்னர் அறிந்துகொண்டேன்.
4. ஒருவர் மது அறிந்துவிட்டு ஆலயத்துக்கு வந்திருந்தார். மது அருந்திவிட்டு ஆலயத்துக்கு வரக்கூடாது என்று தெய்வம் ஆடிய ஒருவர் மோசமான முறையிலே அடித்து தாக்கினார்.
இது நாகரிகமான முறையா? அங்கே தெய்வத்துக்கு மதுக்கொடுத்தல் எனும் போர்வையில் சாராயம் கொடுக்கப்பட்டது. கடவுளே மது அருந்தும்போது ஒரு பக்தன் மது அருந்திவிட்டு வந்தது தவறு என்று அடிப்பது சரியா?
5. இக் கிராமத்திலே ஒரு பகுதியிலே தாழ்த்தப்பட்ட சாதியினர் இருக்கின்றனர். சுவாமி கிராமத்தின் வீதிகளிலே வலம் வருகின்றபோது ஆலய நிர்வாகத்தினரும் இன்னும் சிலரும் இந்த தாழ்த்தப்பட்ட சாதியினர் இருக்கும் பிரதேசத்துக்கு சுவாமியைக் கொண்டு செல்வதற்கு மறுத்துவிட்டனர்.
இங்கே கடவுள் சாதி பார்ககின்றாரா? அல்லது கிராமத்தினை இரண்டாகப் பார்க்கின்றனரா? சாதி என்பது கடவுளால் உருவாக்கப்பட்டதல்ல செய்யும் தொழிலை வைத்தே மனிதனால் உருவாக்கப்பட்டதே சாதி. இன்னும் நாம் சாதி பார்த்துக்கொண்டிருப்பது நல்ல விடயமல்ல.
6. இங்கே கட்டுச் சொல்வதற்கு தெய்வம் ஆடுபவர்களால் அழைக்கப்பட்டவர்களில் 90 வீதமானவர்கள் இளம் பெண்களாகவே இருந்தனர். தெய்வம் ஆடியவர்களும் இளம் வாலிபர்கள்தான்.
இங்கே பலரும் கேட்ட கேள்வி ஏன் ஆண்களை அழைக்க முடியாதா. தெய்வம் இளம் பெண்களுக்கு மட்டுமா அருள் கொடுக்கும்.
7. அங்கே மக்கள் இவர்களையே கடவுளாக மதிக்கப்பட்டனர். அங்கே ஆலயத்திலே இருந்த கடவுளை மக்கள் வணங்கியதனைவிட இவர்களை வணங்கியதே அதிகமாக இருந்தது. பலர் கால்களிலே விழுந்து வணங்கினர். இவர்களைத் தொட்டு கண்களிலே ஒற்றிக் கொண்டனர். ஏன் இந்த மூட நம்பிக்கை?
இன்னும் பல விடயங்கள் இருக்கின்றன...
நான் கேட்பது இந்த ஆலயம் ஆகம விதிப்படி அமைந்தது. முறைப்படி குருவாகப் படித்து தீட்சைபெற்று பல வருடங்களாக பூசை செய்து வருகின்ற ஒரு குருக்களுக்கு காட்சி கொடுக்காத கடவுள் இந்த மந்திரவாதிகளுக்கு காட்சி கொடுத்தாரா? அவர்களோடு மட்டும்தான் பேசுவாரா? ஏன் இந்தப் பூசாரிகள், மந்திரவாதிகள் மக்களையும் கடவுளையும் ஏமாற்றுகின்றனர்
ஏன் இவர்கள் மக்களை ஏமாற்றிப் பிழைப்பு நடத்திக்கொண்டு இருக்கின்றனர். இவர்களை ஏன் சிலர் முன்னிலைப்படுத்திக்கொண்டு இருக்கின்றனர்.
கடவுள் நம்பிக்கை இல்லாதவன் அல்ல கடவுளை 100% நம்புபவன் ஆனாலும் மூட நம்பிக்கையையும், மனிதக் கடவுளர்களையும் துரத்த நினைப்பவன்.
இன்னும் பல பல மூட நம்பிக்கைகள் இந்துக்களிடையே இருக்கின்றன அவ்வப்போது உங்களை வந்து சேரும்.
இதனையும் பாருங்கள்
மதத்தின் பெயரால் பிழைப்பு நடத்துகின்றார்களா?
கடவுளின் பெயரால் கொடுமைகள்.
கடவுள் நேற்று முளைத்த காளானா...
திங்கள், 26 அக்டோபர், 2009
அந்தரங்கம் என்றால் என்ன?
அண்மையிலே நண்பர் சதீஸ் லோஷனுடன் அந்தரங்கம். பகுதி- 1 எனும் தலைப்பிலே ஒரு பதிவிட்டிருந்தார். இப்பதிவிலே ஒலி, ஒளிபரப்பாளரும், வலைப்பதிவருமாகிய லோஷன் அவர்களை பேட்டி கண்டு இருந்தார் சதீஸ். இதிலே லோஷன் தன்னைப் பற்றிய பல விடயங்களைப் சொல்லி இருந்தார்.

.jpg)
.jpg)