Tuesday 11 August 2009

கடவுள் நேற்று முளைத்த காளானா...

மறைந்துவரும் தமிழர் சம்பிரதாயங்கள். எனும் இடுகையிலே தமிழர் சம் பிரதாயங்கள் தொடர்பாகக் குறிப்பிட்டிருந்தேன். அதிலே இந்துக்களின் சமய சம்பிரதாயங்களோடு கூடிய ஒரு விடயத்தைக் குறிப்பிட்டிருந்தேன்.

அந்த இடுகைக்கு நண்பர் வால்ப்பையன் தனது பின்னூட்டத்திலே பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார்.


வால்பையன் சொன்னது…

தமிழர் சம்பிரதாயத்துக்கும், கடவுளுக்கும் சம்பந்தம் இருப்பதாக எனக்கு தெரியவில்லை!
தமிழ் கல் தோன்றி மண் தோண்றா கால்த்திலிருந்து இருக்கிறது!
கடவுள் நேற்று முளைத்த காளான்!
August 7, 2009 8:06 AM

இவரது இக் கருத்துக்குரிய விளக்கத்தினை தனி ஒரு இடுகையாகத் தருவதாக சொல்லியிருந்தேன்.


எந்த ஒரு இனத்தினையோ, சமுகத்தினையோ எடுத்துக் கொண்டால் அவர்களின் சம்பிரதாயங்கலிலே எதோ ஒரு வகையில் சமயம் என்பது செல்வாக்குச் செலுத்துகின்றது.


தமிழ்மொழி என்பது சிறப்பான ஒரு மொழி. வால்ப்பையன் சொல்வதனைப்போல் கல்தோன்றி மண்தோன்றாக் காலத்துக்கு முற்பட்டது தமிழ் மொழி என்று சொல்வதில் பெருமைப்படுகிறேன்.

இந்து சமயத்தைப் பொறுத்தவரை இந்து சமயம் ஆதியும் அந்தமும் இல்லாத ஒன்று. இவ்வாறு இந்து மதம் ஆதியும், அந்தமும் (தொடக்கமும், முடிவும்) இல்லாத ஒரு மதமாக இருக்கின்றபோது இந்து மதத்திலே இருக்கின்ற கடவுளர்கள் எப்படி நேற்று முளைத்த காளானாவது என்பது எனக்குப் புரியவில்லை. எனக்குப் புரியவேண்டிய அவசியமுமில்லை.

தமிழர்களுக்கென்றே தனித்துவமான பல சம்பிரதாயங்கள் இருக்கின்றன. இன்று அவற்றில் பல சம்பிரதாயங்கள் மறைந்து வந்தாலும் சில சம்பிரதாயங்கள் இன்றும் பின்பற்றப்பட்டு வருகின்றன. இந்த சம்பிரதாயங்களுக்கும் தமிழர்கள் சார்ந்த மதங்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கின்றன.

அதிலும் இந்து மதத்தினைப் பின்பற்றுகின்ற தமிழர்களைப் பொறுத்தவரை அவர்களின் சம்பிரதாயங்கள் இந்து மதத்தோடு பின்னிப்பிணைந்த ஒன்றாக இருக்கின்றது.


இந்து மதத்திலே இருக்கின்ற சம்பிரதாயங்களுக்கு தகுந்த காரணங்கள் இருக்கின்றன. அதேபோல் அந்தச் சம்பிரதாயங்களிலே அதிக நம்பிக்கையும் கொண்டவர்கள்தான் இந்துக்கள்.

அதே போன்றுதான் ஏனைய மதத்தினைப் பின்பற்றுகின்றவர்களும், தமது கடவுள் மீது அதிக நம்பிக்கையும் வைத்து இருக்கின்றனர். கடவுள் நேற்று முளைத்த காளான் என்று சொல்வது சொல்பவர்களின் அறியாமைதான். கடவுள் இல்லை என்று சொல்பவர்கள் கூட இப்படிச் சொல்லமாட்டார்கள். எந்த ஒரு மதமும் தாங்களின் மதம் நேற்றுத்தான் உதயமானது என்று சொல்லவில்லை.


தமிழர்களைப் பொறுத்தவரை அவர்கள் பின்பற்றுகின்ற மதம் சார்ந்ததாகவே அவர்களின் சம்பிரதாயங்களும் அமைந்திருக்கின்றன. எந்த ஒரு நிகழ்வாக இருந்தாலும் அவர்களது மதத்தோடு தொடர்புபட்டே அந்தச் சம்பிரதாயங்கள் அமைந்திருக்கின்றன.

தமிழர்களிடையே அதிகம் இடம் பெறுகின்ற நிகழ்வுகளைப் பாருங்கள் அந்த நிகழ்வுகள் அவர்கள் பின்பற்றுகின்ற சமயம் சார்ந்திருப்பதனை காணலாம். உதாரணமாக திருமணத்தை எடுத்துக்கொள்ளுங்கள். இந்துக்களின் சம்பிரதாயத்துக்கும் கிறிஸ்தவர்களின் சம்பிரதாயத்துக்கும் எவ்வளவே வேறுபாடு இருக்கின்றது.

இங்கே சமயம் சார்ந்ததாக அந்தச் சம்பிரதாயங்கள் அமையவில்லையா. சமயம் சார்ந்ததாக சம்பிரதாயங்கள் இல்லை என்றால் ஏன் இந்துக்களின் திருமண சம்பிரதாயத்துக்கும் கிறிஸ்தவர்களின் (இங்கு கிறிஸ்தவர்கள் எனும்போது கிறிஸ்தவ மதத்தினை பின்பற்றும் தமிழர்கள்) சம்பிரதாயத்துக்கும் வேறுபாடு இருக்கின்றது. இரண்டு மதத்தவர்களும் தமிழர்கள்தானே. இங்கே மதம் சார்ந்ததுதான் சம்பிரதாயம் என்பது புலப்படுகின்றதல்லவா?

இன்னும் உதாரணங்கள் சொல்லிக்கொண்டே போகலாம். சம்பிரதாயங்கள் தமிழ் மக்களின் சமயங்களோடு பின்னிப்பிணைந்து விட்டது என்பதே உண்மை. இந்துமத கடவுளர்களோ, ஏனைய கடவுளர்களோ நேற்று முளைத்த காளான்கள் இல்லை என்பதும் உண்மையே.
இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். உங்கள் கேள்விகள் வரும்போது பின்னூட்டத்தில் விளக்கம் தருகிறேன்.

Post Comment


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

124 comments: on "கடவுள் நேற்று முளைத்த காளானா..."

வால்பையன் said...

இவ்ளோ பெரிய பதிவுல திருமணத்தை தவிர வேறு சம்பிரதாயங்கள் எதுவும் குறிப்பிடப்படவில்லை!

எதுக்கும் திரும்பவும் ஒருக்கா படிச்சு பாருங்க!

திருமணசம்பிரதாயங்கள் இடைகாலத்தில் வந்த முறை தான்! பழங்காலத்தில் சேர்ந்தாலே திருமணம் தான்!

வால்பையன் said...

//கடவுள் நேற்று முளைத்த காளான் என்று சொல்வது சொல்பவர்களின் அறியாமைதான். கடவுள் இல்லை என்று சொல்பவர்கள் கூட இப்படிச் சொல்லமாட்டார்கள். எந்த ஒரு மதமும் தாங்களின் மதம் நேற்றுத்தான் உதயமானது என்று சொல்லவில்லை.//

கடவுள் என்பது ஒரு பொருளாக நான் நினைத்து சொல்லவில்லை!
கடவுள் என்ற கற்பனை பாத்திரம் உருவாகி ஒருநாள் ஆகவில்லை என்றேன்!

பூமியின் வயதில் மனித நாகரிகம் உருவானதே கடைசி நொடியில் தான்! அதாவது கடந்த ஐயாயிரம் வருடங்கள் என்பது பூமியின் பலகோடி வருடங்களுக்கு முன் சில நொடிகள் கூட இல்லை என்பது சரியா!

இந்து மதம் ஆதியும், அந்தமும் அற்ற ஒன்றா! அப்போ மற்ற மதங்களும் அப்படி தானே இருக்க வேண்டும்!

கிருஸ்துவம் 2000 வருடம்
இஸ்லாம் 1700 வருடம்

இதுமட்டும் எப்படி!?

சப்ராஸ் அபூ பக்கர் said...

உண்மை தான் சந்ரு, கடவுள் என்பவர் நேற்று முளைத்த காளான் அல்ல.

'த்வம் ஏகம் வரண்யம் த்வம் ஏகம் சரண்யம் த்வம் ஏகம் ஜகத் காரணம் விஸ்வரூபம்' - இந்துமத சுலோகம் (ஸ்தோத்திரம்) (உன்னை மட்டுமே வணங்குகிறோம்; உன்னிடம் மட்டுமே சரணடைகிறோம். உலகைப் படைத்ததன் முழுமுதற்காரணம் நீயே...! நீ மிகப்பெரியவன் ) - இப்படி இந்து மதம் சொல்கிறது. எதற்காக இப்படி சொல்கிறது. கடவுள் இருக்கிறான் என்பதனால் தானே?... பிறகு எப்படி எங்களால் அதை மறுக்க முடியும்?...

இஸ்லாம் மார்க்கம் சொல்கிறது "வானங்களையும், பூமிகளையும் படைத்து சூரியனையும், சந்திரனையும் தன் வசம் வைத்திருப்பவன் யாரெனக் கேட்டால் அவர்கள் இறைவன் என்றே சொல்வார்கள்." - நிச்சயம் ஓர் இறைவன் இல்லாமல் இன்று நானேது?. நாமேது?....

கடவுளே இல்லை என்று சொல்கிறவர்கள் கூட நம்மை மிஞ்சிய ஷக்தி ஒன்று இருப்பதாக சொல்கிறார்கள். ஆனால் அது தான் கடவுள் என்பதை ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்கள்.

ஆனால் ஒரே ஒரு கடவுள் தான் இந்த உலகத்தை படைத்து பரிபாலித்துக் கொண்டிருக்கிறேன். இது மட்டும் உண்மை.

வால்பையன் said...

மதங்களுக்கு ஆணிவேரே கடவுள் தான்!
அதனால் அது)கடவுள்) இருக்குன்னு தான் சொல்வாங்க!

இந்த உலகை படைத்தது கடவுள் என்றால், கடவுளை படைத்தது யார்!?
கடவுள் சுயம்பு என்றால் ஏன் இந்த உலகம் சுயம்புவாக இருக்ககூடாது!?

பதில் ப்ளீஸ்!

இது நம்ம ஆளு said...

தமிழர்களுக்கென்றே தனித்துவமான பல சம்பிரதாயங்கள் இருக்கின்றன.

கடவுளே இல்லை என்று சொல்கிறவர்கள் கூட நம்மை மிஞ்சிய ஷக்தி ஒன்று இருப்பதாக சொல்கிறார்கள். ஆனால் அது தான் கடவுள் என்பதை ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்கள்.

அருமை

Admin said...

//வால்பையன் கூறியது...
இவ்ளோ பெரிய பதிவுல திருமணத்தை தவிர வேறு சம்பிரதாயங்கள் எதுவும் குறிப்பிடப்படவில்லை!

எதுக்கும் திரும்பவும் ஒருக்கா படிச்சு பாருங்க!

திருமணசம்பிரதாயங்கள் இடைகாலத்தில் வந்த முறை தான்! பழங்காலத்தில் சேர்ந்தாலே திருமணம் தான்!//


எனக்கு இந்த இடுகையிலே இரண்டு விடயங்கள் பற்றிச் சொல்லவேண்டி இருந்தது ஒன்று கடவுள் கடவுள் நேற்று முளைத்த காளானா... என்றும் தமிழர் சம்பிரதாயத்துக்கும், கடவுளுக்கும் சம்பந்தம் என்றும் சொல்லவேண்டும். நிறையவே சொல்லவேண்டும். அதுதான் சில விடயங்களை பின்னூட்டமாக தருவதாகச் சொல்லி இருந்தேன்.


//திருமணசம்பிரதாயங்கள் இடைகாலத்தில் வந்த முறை தான்! பழங்காலத்தில் சேர்ந்தாலே திருமணம் தான்!//


எனக்கு இந்த இடுகையிலே இரண்டு விடயங்கள் பற்றிச் சொல்லவேண்டி இருந்தது ஒன்று கடவுள் கடவுள் நேற்று முளைத்த காளானா... என்றும் தமிழர் சம்பிரதாயத்துக்கும், கடவுளுக்கும் சம்பந்தம் என்றும் சொல்லவேண்டும். நிறையவே சொல்லவேண்டும். அதுதான் சில விடயங்களை பின்னூட்டமாக தருவதாகச் சொல்லி இருந்தேன்.


யார் சொன்னது இன்றைய திருமணம்தான் ஆணும் பெண்ணும் நினைத்தால் திருமணம்தான். ஆனால் அந்தக்காலத்தில் அப்படி இல்லை அதட்கேன்று பல சம்ரதாயங்கள் இருக்கின்றன. பல வரலாற்றுச் சான்றுகள் இருக்கின்றன. அந்தக்காலத்தில் ஒரு திருமணம் பேசுவதிலே சமய சம்பிரதாயங்கள் இருக்கின்றன.

வால்பையன் said...

ஒன்று நான் சொன்ன காளான் மேட்டருக்கு மறுப்பு சொல்லி விளக்கம் தாருங்கள்!

எல்லோரும் கும்பிடுகிறார்கள் அதனால இருக்குன்னு சொல்லக்கூடாது!

பழய புத்தகத்துல இருக்கு அதனால இருக்குன்னு சொல்லக்கூடாது!

பழைய பெருசுகளெல்லாம் கும்பிட்டாங்க அதனால இருக்குன்னு சொல்லக்கூடாது!

ரெண்டு!
தமிழர்கள் சம்பிரதாயத்துக்கும் கடவுளுக்கும் என்ன சம்பந்தம்!

திருமணம் என்பது நாகரிகத்திற்கு பின் மனிதர்கள் குடும்ப முறையை பேண கொண்டுவந்தது! அச்சமயம் குழுத்தலைவனே திருமணத்தை நடத்தி வந்தான்!

நாகரிகம் வளர்ச்சியடையாத காலத்தில் அவன் இயற்கையை கண்டு தேவையில்லாமல் பயந்தான் என்பதை விட வேறென்ன தொடர்பு இருக்கிறது மனிதர்களுக்கும் கடவுளுக்கும்!

Admin said...

இன்று மதங்கள் எல்லாம் என்ன சொல்கின்றன இந்த உலகமே இறைவனால் படைக்கப்பட்டன. இறைவனே இந்த உலகத்தை இயக்கிக்கொண்டு இருக்கிறான் என்று. இறைவனால் படைக்கப்பட்ட உலகத்தினை இறைவனே இயக்கிக்கொண்டு இருக்கிறான். இறைவன் சுயமாகத் தோன்றியவன். இந்த உலகமோ உயிர்களோ அவனாலே இயக்கப்பத்டுகொண்டு இருக்கின்றன. இன்று மனிதனால் கண்டுபிடிக்கப்பட்ட தொழினுட்ப சாதனங்களை நாம் தானியங்கி மூலம் இயக்கிக்கொண்டு இருப்பதுபோல் கடவுளும் இந்த உலகத்தை இயக்கிக்கொண்டு இருக்கின்றான்.

Anonymous said...

சந்துரு உங்களுக்குமா கடவுள் நம்பிக்கை இருக்கிறது?
இலங்கையில் நடந்த இனப்படுகொலைகளுக்குப்பிறகுமா?
கடவுள் ஒரு இனமே அழிவதைப் பார்துக்கொண்டிரபப்பாரா?
இனியும் நல்லது நடக்கும் என்று நம்பிக்கை வராதபோது
எப்படி கடவுளை நம்புகிறீர்கள்?

Admin said...

நான் வேற்று மதங்களை இங்கு குறிப்பிட விரும்பவில்லை. ஒவ்வொரு மதத்துக்கும் காலம் சொல்லப்படுகிறது. ஆனால் இந்து மதம் எப்போ தோற்றம் பெற்றது என்று எவராலும் சொல்லமுடியுமா. ஏனைய மதங்களின் கடவுளர்களின் தோற்றம் சொல்லமுடியும் ஆனால் இந்துக்கடவுளர்களின் தோற்றம் எப்போது?

Admin said...

//பெயரில்லா கூறியது...
சந்துரு உங்களுக்குமா கடவுள் நம்பிக்கை இருக்கிறது?
இலங்கையில் நடந்த இனப்படுகொலைகளுக்குப்பிறகுமா?
கடவுள் ஒரு இனமே அழிவதைப் பார்துக்கொண்டிரபப்பாரா?
இனியும் நல்லது நடக்கும் என்று நம்பிக்கை வராதபோது
எப்படி கடவுளை நம்புகிறீர்கள்?//


ஆக்கம் என்று ஒன்று இருக்கும்பூது அழிவு என்று ஒன்றும் இருக்கிறது. இன்று பூமியின் சனத்தொகை என்ன. சரி பிறந்த எவரும் சாக வில்லை என்றால் நிலை எப்படி இருக்கும் என்று நினைத்துப் பாருங்கள். இந்துக் கடவுள்களின் அவதாரங்கள் அதனையே சொல்கின்றன. அது இயற்கையின் நியதி.

நான் பெயரில்லாதவர்களுக்கேல்லாம் பதிலளிப்பதில்லை. பெயரை சொல்லி விவாதியுங்கள் நண்பரே.

Admin said...

நண்பன் வாலுவின் அத்தனை கேள்விகளுக்கும் நான் பதில் தருகிறேன் வாலு... இப்போ எனக்கு நேரம் இல்லாமல் இருக்கிறது இன்று இரவு அனைத்து கேள்விகளுக்கும் பதில் வரும்...

வால்பையன் said...

மதம் என்ன சொல்லுதுன்னு எல்லோருக்கும் தெரியும்!

ஆனால் புத்த மதம் இந்து மதத்தை கொல்ல சொல்வதும்! இஸ்லாமியமதம்(சிலரால்) அதை பின்பற்றாதவர்களை கொல்ல சொல்வதும் ஏன் வந்தது!

கடவுள் என்பதே டுபாக்கூர் என்கிறேன்! மதம் சொல்லுச்சுங்கிறிங்க!

வெயிட் பண்றேன் உங்க பதில்களுக்கு!

தருமி said...

என் பதில் கேட்டு அழைப்பும் அனுப்பி விட்டீர்கள். நான் என்னங்க சொல்லப் போகிறேன். வால் சொல்வது சரி என்றுதானே சொல்வேனென்று தெரியாதா?

எதுக்கும் இதையும்கொஞ்சம் வாசிங்க பதிலும் சொல்லுங்க. எல்லாம் உங்க கேள்விகள்தான்!

//எப்படியோ சாஸ்திரம்னு சொன்னா நம்மாளுக மடங்கிடுவாங்கன்னு பெரியவங்களுக்கு அப்பவே தெரிஞ்சிருக்கு. நிறைய
விஞ்ஞான அடிப்படையான காரியங்களைக் கூட சாஸ்திரம் என்ற பெயரில் சொல்லிச் சென்று விட்டார்கள். //

அதோடு சம்பிரதாயங்கள் (வழக்கங்கள்) வாழ்க்கை ஒட்டியவை. எப்போதோ வந்திருக்கலாம். மதங்கள் (வால்ஸ் ச்ல்றது மாதிரி) ஏதோ ஒரு கால கட்டத்தைச் சார்ந்தது. இந்துமதம் என்பது ஒரு அவியல். அதனாலேயே ஆரம்பம் இல்லை என்கிறோம். ஆனால் ஏதோ ஒரு கால கட்டத்தை ஒட்டியதே.

ஒரே விஷயுமுங்க: எதையுமே சாமி பெயரோடு சேர்த்து சொன்னா சட்டுன்னு நீங்க நம்பிடுவீங்கல்ல ... அதான் சம்பிரதாயம்.

கூப்பிட்டிருக்க வேண்டாமேன்னு தோணுமோ .. ?!

sakthi said...

வித்தியாசமான சிந்தனைகள்

தொடருங்கள்

ramesh sadasivam said...

#வால் பையன்
மனித வரலாற்றுக்கு இரண்டு வகையான விளக்கங்கள் உண்டு.

ஒன்று விஞ்ஞானிகள் காரணமாக இருக்கும் என கருதி சொன்னது.

இரண்டாவது புராணங்களில் உள்ள நான்கு யுகங்களை கொண்டது.
இரண்டாவதின் படி, அகத்தியர் தான் தமிழை தோற்றுவித்தார். அவர் தான் காவேரி பெருக காரணமாக இருந்தார்.

ஆன்மிக அனுபவம் இருந்தால் ஒழிய நீங்கள் இதை நம்ப மறுப்பீர்கள். அதனால் தான் விஞ்ஞானிகளின் விளக்கப் படி மனிதன் பரிணாம வளர்ச்சியில் தோன்றியவன் எனக் கருதி வாதம் செய்கிறீர்கள்.

ஆன்மிகவாதிக்கு பரிணாம வளர்ச்சியிலும் உடன்பாடு உண்டு. இறைவனின் படைப்பாற்றலிலும் உடன்பாடு உண்டு.

தெய்வம் மனிதனாக வரவும் இப்பிரபஞ்சத்தில் சாத்தியம் இருக்கிறது. மனிதன் தெய்வமாக உயரவும் சாத்தியம் இருக்கிறது.

இப்பிரபஞ்சத்தை விட பெரிய அற்புதம் அதுவும் இல்லை. There is no greater miracle than this creation.

அது சில விதிகளுக்கு கட்டுப்பட்டு இயங்குகிறது. அந்த விதிகளைத் தான் விஞ்ஞானிகள் கண்டு பிடிக்கிறார்கள். இவர்கள் புதிதாக எதையும் உருவாக்கவில்லை.

தருமி said...

வர வர எல்லோரும் "ஆன்மீகம் .. ஆன்மீகம்" அப்டின்னு சொல்லிக்கிட்டு இருக்கீங்க. அதுக்கு அர்த்தம் நான் சொன்னது சரியில்லைன்னு சொல்றீங்க. அப்டீன்னா, நீங்களாவது சொல்லிடுங்களேன்........ ப்ளீஸ்!

வால்பையன் said...

அகத்தியர் தான் தமிழை கண்டுபிடித்தாரா!?
அதுக்கு முன்னாடி அது எங்கே ஒளிஞ்சிருந்தது!

சரி அவர் கண்டுபிடித்தது சங்ககால தமிழா!? இக்கால தமிழா?

காவேரியை தோற்றுவித்தது அவர் என்றால், கங்கையை தோற்றுவித்தது யார்?
காக்கா தட்டிவிட்டு கமண்டலத்திலிருந்து காவேரி உருவானதை நீங்கள் நம்புகிறீர்களா?

சாப்பிடிங்களா? நல்லா உடம்பை பார்த்துங்கோங்க சார்!

ramesh sadasivam said...

#வால்பையன்

முதலில் கடவுளை அறிந்து கொள்ளுங்கள் பின்னர் கடவுளின் தோற்றம் குறித்து ஆராயலாம்.

கடவுள் சுயம்பு என்றால் ஏன் இந்த உலகம் சுயம்புவாக இருக்ககூடாது!?

காரணம் இந்த உலகத்தின் முறைகளில் ஒரு தெளிவான திட்டமிடுதல் பின்னிருக்கிறது. அதற்கு புத்திசாலித்தனம் வேண்டும். அதே போல இப்பூமியில் உள்ள எல்லா உயிர்களுக்கும் தேவையானவற்றை வழங்கும் குணமும் இதே பூமிக்கு இருக்கிறது. அதற்கு அன்போடு சிந்திக்கும் ஒரு இதயம் வேண்டும்

இந்த புத்திசாலித்தனம் மற்றும் அன்பின் கலவையன்றி இவ்வுலகம் இயங்குவதில்லை. அந்த புத்திசாலித்தனத்துக்கும் அன்புக்கும் சொந்தமானவரைத் தான் இறைவன் என்கிறோம்.

அந்த புத்திசாலித்தனத்தை அனுகுபவர்கள் விஞ்ஞானிகள்
அந்த அன்பை அனுகுபவர்கள் மெய்ஞ்ஞானிகள்.

தருமி said...

வால்ஸ்,
இதையே கேட்கலாம்னு வந்தா ஏற்கெனவே கேட்டுட்டீங்க. எப்படி இதைக்கூட நம்ப முடியுது - ஒரு மொழி, ஒரு நதி ஒரு தனிமனிதனால் வந்ததும்
எல்லாம் ஒரு சம்ப்ரதாயம்தான்!

Saravanan Trichy said...

வணக்கம் சந்ரு! கடவுள் இருக்கிறாரா ? இல்லையா? என்று எனக்கு தெரியாது! அப்படியே அவர் இருந்தாலும் அவரால் உண்டான ஒரே நன்மை இதை போன்ற விவாதங்கள் மட்டுமே! இதை தவிர அவர் எதற்கும் உபயோகப் பட மாட்டார்! ஏன் அவரால் ஒரு “சுவைன் புளூ” வைரசை கூட அழிக்க முடியாது!

துபாய் ராஜா said...

புலவருக்குள் போட்டியிருக்கலாம்.
சண்டை இருக்ககூடாது.
இது போட்டியா ? சண்டையா ?

எதுவோ ஒண்ணு!!.அட விடுங்கப்பா. ஒவ்வொருத்தருக்கும் ஒவவொரு நம்பிக்கை.

தருமி said...

//..அன்போடு சிந்திக்கும் ஒரு இதயம் வேண்டும்//

:)
human perspective......

ramesh sadasivam said...

காக்கா தட்டி விட்டு காவேரி உருவானதை நான் நம்புகிறேன்.

நீங்கள் பின்னோக்கி சென்று பாருங்கள். இப்பிரபஞ்சமே ஒரு புள்ளியிலிருந்து தோன்றியதை ஒப்புக்கொள்வீர்கள். ஒரு புள்ளியிலிருந்து இவ்வளாவு பெரிய பிரபஞ்சம் தோன்றினால். ரு கமண்டலத்தில் இருந்து காவேரி தோன்றாதா?

தருமி said...

// shri ramesh sadasivam கூறியது...

காக்கா தட்டி விட்டு காவேரி உருவானதை நான் நம்புகிறேன்.//

ஆமென் ........

எல்லாம் முடிஞ்சிருச்சி

ramesh sadasivam said...

தருமி சார். அதை ஆதரிக்கும் நான் கேட்ட கேள்வியை ஏன் புறக்கணிக்கிறீர்கள்.

வால்பையன் said...

எனக்கு புரியாதவைகள் நிறைய இருக்கிறது! நான் ஒன்பதாவது வரை தான் படித்திருக்கிறேன்! அதற்காக எனக்கு தெரியாததை தெரிந்தவர்கள் எல்லாம் கடவுளா?

//புத்திசாலித்தனத்தை அனுகுபவர்கள் விஞ்ஞானிகள்
அந்த அன்பை அனுகுபவர்கள் மெய்ஞ்ஞானிகள்.//

ரெண்டுக்கும் மலையளவு வித்தியாசம் இருக்கிதது! விஞ்ஞானத்தை கற்று கொடுக்கும் ஆசிரியரும் அன்போடு இருக்கலாம்! அன்பு என்பது நம்மிடம் இருப்பது! அதை தனியாக் எங்கு போய் அனுகுவது!

ஒரு புள்ளியிலிருந்து உலகம் உருவானது, சரிதான்!

இதற்காக தனிப்பதிவே போடுவேன் பரவாயில்லையா!?

ramesh sadasivam said...

குட்டி பிரபு

எனக்கு கடவுள் நிறைய உதவியிருக்கிறார். இன்னும் உதவிக் கொண்டிருக்கிறார். நீங்கள் அவர் உதவியை நாடிப் பாருங்கள்.. அவர் கருணையாளர் என்பது புரியும்.

ramesh sadasivam said...

வால்பையன் அவர்களே,

போடுங்கள் விவாதிக்கலாம்.

வால்பையன் said...

//எனக்கு கடவுள் நிறைய உதவியிருக்கிறார். இன்னும் உதவிக் கொண்டிருக்கிறார்.//

கனவிலா, கற்பனையிலா!?

Saravanan Trichy said...

shri ramesh sadasivam சொன்னது…
//அதே போல இப்பூமியில் உள்ள எல்லா உயிர்களுக்கும் தேவையானவற்றை வழங்கும் குணமும் இதே பூமிக்கு இருக்கிறது. அதற்கு அன்போடு சிந்திக்கும் ஒரு இதயம் வேண்டும//"

இன்னிக்கு வரைக்கும் இன்னொரு உயிரை கொன்னு தான சார் நாம சாப்பிட்டு கிட்டு இருக்கோம்! அப்பறம் அன்பு எங்க இருந்து வந்துச்சு!

ramesh sadasivam said...

நிஜத்தில்

வால்பையன் said...

குட்டிபிரபுவுக்கு ஒரு ரிப்பீட்டே!

தருமி said...

தயவு செய்து ஒரு proven scientific factor-யும் புராணக்கதைகளையும் ஒரே தட்டில் வைத்து எடை போடாதீர்கள்.

கொஞ்சூண்டு a brief history of time என்ற Stephen Hawking புத்தகத்தை வாசிக்க முயற்சித்தது உண்டு. அதுக்குப் பெயர்: அறிவியல். சொன்னா சொன்னதை நிரூபிக்கணும். கமண்டலத்தில அதில் எல்லாம் கிடையாது.

எப்போ கமண்டலக் கதையில் நம்பிக்கைன்னு சொல்லிட்டீங்களோ அதுக்குப் பிறகு இந்த மாதிரி நான் பேசுறது அதிகப் பிரசங்கித் தனம்!

ramesh sadasivam said...

அன்பு என்பது கொல்லாமையில் மட்டுமில்லை.

சைவ உணவும் உயிர் தான். தன்னை தற்காத்துக் கொள்ள போராட தெரிந்த ஒரு உயிரை கொல்வதை விட சைவ உணவு மேலானது. நீங்கள் அன்போடு அணுகுவதாயிருந்தால், அசைவ உணவை கை விடலாம். அதற்கான வாய்ப்பு இருக்கிறது.

ramesh sadasivam said...

தருமி சார் எல்லா விஷயங்களையும் விஞ்ஞானம் நிரூபித்துவிடவில்லை.

einstein-ன் e=mc sqaered கூட தவறென்று பின்பு நிரூபிக்கப்பட்டது. ஆனாலும் இன்னும் அதையே அடிப்படையாக கொண்டு தான் பல கணக்குகள் போட்டு வருகிறார்கள்.

நீங்கள் விஞ்ஞானத்தை புத்தகத்தில் படித்துவிட்டு சொல்கிறீர்கள்.

நான் என் உடல் மனம் ஆகியவற்றால் உணார்ந்ததை சொல்கிறேன்.

வால்பையன் said...

//என் உடல் மனம் ஆகியவற்றால் உணார்ந்ததை சொல்கிறேன். //

மூளையை லைட்டா சுரட்டுனா ஒருத்தருக்கு பறக்குற மாதிரி இருக்கும்!
கொஞ்சம் டோஸ் அதிகமாயிருச்சுன்னா தேவலோகமே கன்ணுக்கு தெரியும்!

நாங்க அந்த விளையாட்டுக்கு வர்ரதில்ல!

ramesh sadasivam said...

நான் சுவாமி சின்மயானந்தா புத்த்கத்தை படித்து விட்டு. அதைப் பின் பற்றி, உண்மையென உணார்ந்து பின்பு தான் ஏற்றுக் கொண்டேன்.

Saravanan Trichy said...

shri ramesh sadasivam சொன்னது
//அன்பு என்பது கொல்லாமையில் மட்டுமில்லை//
வேற எதுல சார் இருக்கு? அன்புன்னா என்னன்னே புரியலையே சார்?
கடவுளோட அன்புன்னா என்ன?

ramesh sadasivam said...

#வால் பையன்

மூளை சுரட்டுவதாகா சொல்கிறீர்கள். அதற்கான் முறைகள் என்ன?

அமைதியாக கண்களை மூடி, முதுகுத் தண்டை நேராக்கி அமர்ந்திருப்பதால் மூளையில் கோளாறு ஏற்படும் என விஞ்ஞானம் சொல்கிறதா?

பின் ஏன் மருத்துவர்கள் தியானத்தை பரிந்துரைக்கிறார்கள்?

வால்பையன் said...

//நான் சுவாமி சின்மயானந்தா புத்த்கத்தை படித்து விட்டு. அதைப் பின் பற்றி, உண்மையென உணார்ந்து பின்பு தான் ஏற்றுக் கொண்டேன். //

பிரேமானந்தாவுக்கு நிறைய பக்தர்கள் உண்டு!
ஒன்னை நம்பிதான் ஆவனும்னு நீங்க முடிவு பண்ணிட்ட பிறகு அதை டரியலாக்கும் கேள்விகளுக்கு உள்நோக்கிய பார்வை உங்களுக்கு இருக்காது!

உணருங்கள்னு சொல்லிட்டு போயிருவிங்கன்னு எங்களுக்கு தெரியும்!

ramesh sadasivam said...

குட்டி பிரபு

புரியவில்லை என்பதை ஒப்புக்கொள்கிறீர்கள், இல்லையா? இது தான் ஆன்மிகத்தின் முதல் படி.

இறைவனின் அன்பு, ஒரு உயிர் சாவதை தடுப்பதில் இல்லை. காரணம் சாகும் உயிர் இறைவனிடம் தான் திரும்ப செல்கிறது. வீட்டுக்கு வரும் பிள்ளைக்காக தாய் வருந்துவாளா?

வால்பையன் said...

//ஏன் மருத்துவர்கள் தியானத்தை பரிந்துரைக்கிறார்கள்? //

ஒருநாளைக்கு 16 மணிநேரம் வேலை செய்கிறேன் என்பதை விட தியானம் செய்கிறேன் என்று தான் சொல்லனும்!
ஒன்றில் முழுதாக அர்ப்பனித்து வேலை செய்தாலே தியானம் தான்!

குழப்பம் வந்துவிட்டால் மன உளைச்சல் தன் ஒரு வேலையும் ஓடாது, அவர்களுக்கு தியாணத்தை பரிந்துரைக்கலாம் டாக்டர்கள்!

எனக்கு அதில் உடன்பாடில்லை!

ramesh sadasivam said...

வால் பையன் அவர்களே, நான் அப்படியில்லை. நீங்கள் தெரிந்து கொள்ளும் மனனிலையில் இருந்தால் என்னால் நிச்சயம் உங்களுக்கு புரிய வைக்க முடியும். நீங்கள் தீர்மானங்களை சுமந்தால், நான் அதை எப்படி இறக்கி வைப்பது.

ramesh sadasivam said...

ஆக நீங்கள் விஞ்ஞான அடிப்படையில் செல்லும் மருத்துவர்களாய்யும் ஏற்றுக் கொள்ள மாட்டீர்கள்? :)

சரியாப் போச்சு.

மன ஒருமைப்பாட்டோடு செய்யும் வேலைக்கும் தியானத்திற்கும் நிறைய வித்தியாசம் உண்டு. நான் இரண்டும் செய்திருப்பதால் எனக்கு இரண்டும் தெரியும். நீங்கள் தான் தியானம் செய்ததில்லையே? நீங்கள் அதையும் செய்தால் தானே தங்களுக்கும் வித்தியாசம் தெரியும்?.

வால்பையன் said...

//நீங்கள் விஞ்ஞான அடிப்படையில் செல்லும் மருத்துவர்களாய்யும் ஏற்றுக் கொள்ள மாட்டீர்கள்? :)//

தியானம் என்பது இப்படி தான் செய்யனும் என்று சொல்வதை தான் ஏற்றுகொள்ள மாட்டேன் என்றேன்!

நான் செய்வதே தியானம் என்ற போதே தெரியவில்லையா!?

வால்பையன் said...

//மன ஒருமைப்பாட்டோடு செய்யும் வேலைக்கும் தியானத்திற்கும் நிறைய வித்தியாசம் உண்டு. நான் இரண்டும் செய்திருப்பதால் எனக்கு இரண்டும் தெரியும்.//

இரண்டிற்கும் எனக்கும் வித்தியாசம் தெரியும்!

கற்பனையில்

நீங்கள் இப்போது செவ்வாயை நோக்கி பயணிக்கிறீர்கள், புதனை நோக்கி பயணிக்கிறீர்கள் என மூளை சலவை செய்வது தியானம் என்றால் நான் சொல்வதும் தியானம் தான்!

Saravanan Trichy said...

shri ramesh sadasivam சொன்னது…
//இறைவனின் அன்பு, ஒரு உயிர் சாவதை தடுப்பதில் இல்லை. காரணம் சாகும் உயிர் இறைவனிடம் தான் திரும்ப செல்கிறது. வீட்டுக்கு வரும் பிள்ளைக்காக தாய் வருந்துவாளா?//

என்ன சார் comedy பண்றீங்க! அப்ப ராஜ பக்சே, புஷ் எல்லாம் கடவுளுக்கு ரொம்ப குளோஸ் ரிலேஷன்னு சொல்லுங்க!

Saravanan Trichy said...
This comment has been removed by the author.
ramesh sadasivam said...

நீங்கள் இப்போது செவ்வாயை நோக்கி பயணிக்கிறீர்கள், புதனை நோக்கி பயணிக்கிறீர்கள் என மூளை சலவை செய்வது தியானம் என்றால் நான் சொல்வதும் தியானம் தான்

தாங்கள் ஆன்மிகத்தில் உள்ள போலிகளுக்கும் உண்மையானவர்களுக்கும் இடயே குழப்பிக் கொள்கிறீர்கள்.
என் தியான அனுபவங்கள் அப்படிப் பட்டவை அல்ல.

ramesh sadasivam said...

குட்டி பிரபு

//என்ன சார் comedy பண்றீங்க! அப்ப ராஜ பக்சே, புஷ் எல்லாம் கடவுளுக்கு ரொம்ப குளோஸ் ரிலேஷன்னு சொல்லுங்க!//

நா அப்படி சொல்லல.

ஆனால் படைத்தல் காத்தல் அழித்தல் மூன்றுமே அவன் சக்தியால் தான் நிகழ்கிறது.

முதலில் கடவுள் இருக்கிறாரா இல்லையா? என முடிவெடுப்போம். பிறகு அவர் நல்லவரா கெட்டவரா எனப்து பற்றி பேசலாம்

வால்பையன் said...

//என் தியான அனுபவங்கள் அப்படிப் பட்டவை அல்ல. //

எழுதுங்க!
உங்க ஆசையை ஏன் கெடுப்பானேன்!
ஆனா பழைய மாதிரி கடவுள் வந்து ”பக்தா உன் பக்தியை மெச்சினேன்! உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன” ன்னு சொன்னாருன்னு கதை விடாதிங்க! இந்த மாதிரி காதுல குரல் கேக்குறதுக்கு பேரு சீஸோபெரினியா!

சந்தேகம் இருந்தால் டாக்டர் ருத்ரனை கேட்கலாம்! ஏன் ஒரு டாக்டரிடம் போய் சொல்லி பாருங்களேன்

Saravanan Trichy said...

shri ramesh sadasivam சொன்னது…
//முதலில் கடவுள் இருக்கிறாரா இல்லையா? என முடிவெடுப்போம்//
சார் நான் கடவுள் இல்லன்னு சொல்லவே இல்லையே சார் ! அவர் ஒரு useless fellow-நு தானே சொல்றேன். நீங்க தான் அன்பு , பண்புன்னு ஏதேதோ சொல்றீங்க!

வால்பையன் said...

//அவர் ஒரு useless fellow-நு தானே சொல்றேன்.//

ஹாஹாஹாஹா!

Saravanan Trichy said...

வால் சார் ! என்ன இது?.. இப்படி சிரிக்கிறீங்க!
எனக்கு தான் சார் அவர் useless fellow! உங்களுக்கு எவ்ளோ வாய்ப்பு குடுத்து இருக்கார் மத்தவுங்கள கலாய்க்க!

ramesh sadasivam said...

குட்டி பிரபு

அவர் உங்களுக்கு useless fellow- காரணம் உங்களுக்கு அவரை அணுக தெரியவில்லை.

கழுதைக்கு கம்ப்யூட்டர் useless தான்.

எனினும் கடவுள் கற்பனை என்று சொல்லிக் கொண்டிருந்தவர்கள் இருக்கிறார் ஆனால் useless என்கிற அளவுக்கு வந்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.

ramesh sadasivam said...

//”பக்தா உன் பக்தியை மெச்சினேன்! உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன” ன்னு சொன்னாருன்னு கதை விடாதிங்க! //

இது நடக்காது என்று உங்களால் நம்ப முடியவில்லை. அதற்காக அது நடக்காதென்று பொருளல்ல.

//டாக்டரிடம் சொல்லிப் பாருங்கள்.//

டாக்டருக்கு தெரியாத விஷயங்களும் நிறைய இருக்கின்றன.

தருமி said...

குட்டி பிரபு
உங்க பதிவில பின்னூட்டமிட முடியலை. அதோடு word werification எதுக்கு? என்னன்னு பாருங்க ..

சந்துரு இப்படி உங்கள் பக்கத்தைப் பயன்படுத்தியமைக்கு மன்னிக்க

Saravanan Trichy said...

//shri ramesh sadasivam சொன்னது…
கழுதைக்கு கம்ப்யூட்டர் useless தான்//
கழுதைக்கு இருக்குற அறிவுக்கு computer useless-தான் ஒத்துக்குறேன்! அவர் இருக்காருன்னு சொல்றீங்க அவரோட வேலைதான் என்ன?
"படைத்தல் காத்தல் அழித்தல்"-நு சொல்லிராதிங்க ! கொஞ்சம் detail-ஆ சொல்லுங்க!

ramesh sadasivam said...

//அவர் இருக்காருன்னு சொல்றீங்க //

அவர் இருக்கார்னு நீங்களும் தானே சொன்னீங்க.

//அவரோட வேலைதான் என்ன?//

அவர் தான் அனைத்திற்கும் ஆதாரமாக இருக்கிறார். எப்படி நீங்கள் உங்கள் உடல் முழுதும் நிரம்பி உள்ளீர்களோ அதே போல இறைவன் இந்த பிரபஞ்சம் முழுதும் நிரம்பி உள்ளார். அனைத்தையும் உயிர்ப்போடு வைத்திருக்கிறார். எப்படி உயிர் உடலை விட்டு பிரிந்தால் உடல் இயங்காதோ அதே போல இறைவனின்றி இப்பிரபஞ்சம் இயங்காது.

ramesh sadasivam said...

நீங்கள் உங்கள் உடலின் உயிர்.
இறைவன் இப்பரபஞ்சத்தின் உயிர்.

அதனால் தான் நீங்கள் ஜீவாத்மா.
இறைவன் பரமாத்மா.

தத்வம் அஸி- என்றால் நீயே அது என்று பொருள்.

காரணம் நீங்களும் உயிர் தான். கடவுளும் உயிர் தான்.
நீங்கள் குட்டி, அவர் பிரமாண்டம். அது தான் வித்தியாசம்.

Saravanan Trichy said...

//நீங்கள் உங்கள் உடலின் உயிர்.
இறைவன் இப்பரபஞ்சத்தின் உயிர்.
அதனால் தான் நீங்கள் ஜீவாத்மா.
இறைவன் பரமாத்மா//

அது பரமாத்மா இல்ல சார்! சூரிய வெளிச்சம் ! light energy!
அது இல்லனா ஜீவாத்மா ogayaa தான் !

//தத்வம் அஸி- என்றால் நீயே அது என்று பொருள்//
பாத்திங்களா! கடவுள்னு சொன்னதுமே புரியாத language எல்லாம் எடுத்து விடுறிங்க!

ramesh sadasivam said...

//அது பரமாத்மா இல்ல சார்! சூரிய வெளிச்சம் ! light energy!//

குட்டி பிரபு, நீங்கள் சொல்வது உங்களுக்கே ஏற்புடையதா?

சூரிய வெளிச்சமே படாத இடங்கள் இந்த பிரபஞ்சத்தில் இல்லையா?

சூரிய குடும்பம் என்பது இந்த மஹா படைப்பில் ஒரு துளி தான். எத்தனை சூரியன்கள் இருக்கின்றன? அத்தனைக்கும் இடையில் இயக்கமே இல்லையா? அந்த இயக்கம் எல்லாம் சூரிய வெளிச்சத்தால் தான் நிகழ்கிறதா?

இப்பூமியிலேயே சூரிய வெளிச்சம் இல்லாத துருவங்களில் உயிர்கள் இல்லையா? எஸ்கிமோஸ்கள் எத்தனை நாட்கள் சூரிய வெளிச்சத்தை காண்கிறார்கள்.

சூரியன் பல விஷயங்களுக்கு ஆதாரம் தான்.

சூரியனுக்கு அந்த வெளிச்சம் எப்படி வந்தது?

சூரியன் மத்தியில் இருக்க வேண்டும் என்றும். கிரகங்கள் அதனை சுற்றி வர வேண்டும் என்றும் யார் தீர்மானித்தது.

திட்டமிடுதல் இன்றியே அனைத்தும் நடக்கிறது என கருதுகிறீர்களா?

ramesh sadasivam said...

யார் திட்டமிடுதலும் இன்றி இயற்கை இவ்வளவு சீராக இயங்கி வருவதாக நினைக்கிறீர்களா?

//பாத்திங்களா! கடவுள்னு சொன்னதுமே புரியாத language எல்லாம் எடுத்து விடுறிங்க//

அதுக்குத் தான் அழகான தமிழில் விளக்கம் சொன்னேனே! :)

Pilot said...

shri ramesh sadasivam you are a real star. the way you comment with 'pakkuwam' inspires me. your thoughts are awesome. i m proud to have found a person like you. you make sense wen u comment all the time. keep up your good work. i ll continue commenting on this.

Kala said...

தூங்ககுகின்றவனை எழுப்பலாம் தூங்குவது
போல் பாசாங்கு செய்பவர்களை எழுப்ப முடியுமோ?
அவனின்றி ஓர் அணுவும் அசையாது {அது வாலாக
இருந்தாலும் சரிதான்}எல்லாமே {புரிந்து கொள்ளக்
கூடியவர்களிடம்}விளக்கங்கள் சொல்லலாம் புரியாத...........
புறக்குடத்தில்
ஊற்றிய தண்ணீர்தான்.ஏன்?நம் நேரங்களை வீண்டிப்பான்
கால,நேர,அனுபவங்கள் வரும் போது புரிந்து கொள்ளட்டும்
சந்துரு நான், நீங்கள் நம்மைப் போன்றவர்கள் நம்புகின்றார்கள்
அது போதும். நன்றி.

Sabarinathan Arthanari said...

முதலில் முதன் முதலாக மத செய்திகளை வெளியிடும் சகோ சந்ருக்கு வாழ்த்துக்கள்ெ
இரண்டாவதாக நான் விரும்பும் நண்பர் வால்பையன் போன்ற நேர்மையான பகுத்தறிவு வாதியிடம் இருந்து வாதத்தை ஆரம்பித்துள்ளதற்கு வாழ்த்துக்கள்.

நானும் வால்பையன் ஊருக்கு (ஈரோடு-பள்ளிபாளையம்) பக்கத்து ஊர் தான். எனவே பெரியாரின் புத்தகங்களை விரும்பி படித்தவன் தான். அதன் பிறகு தான் உண்மையான ஆன்மிக விடயங்களுக்கான தேடலும் விடையும் கிடைத்தன.

எனவே பகுத்தறிவு வாதிகள்(உண்மைக்கான தேடல் உள்ளவர்கள் மட்டும்) என்னை பொருத்த வரையில் ஆன்மீகத்தின் முதல் படியில் உள்ளவர்களே.

இங்கு பல முக்கிய விடயங்கள் விவாதிக்க பட்டுள்ளன. 1.கடவுள் 2. இந்து 3. தமிழர் 4. தியானம் 5. பழக்க வழக்கங்கள்

//1. இந்த உலகை படைத்தது கடவுள் என்றால், கடவுளை படைத்தது யார்!?
கடவுள் சுயம்பு என்றால் ஏன் இந்த உலகம் சுயம்புவாக இருக்ககூடாது!?
பதில் ப்ளீஸ்!//

கடவுள்(பிரம்மம்) என்பதும் பிரபஞ்சம் என்பதும் வேறு வேறு அல்ல. கடவுளே பிரபஞ்சமாகியும் நிற்கிறார். இங்கு பிரபஞ்சம் என்பது நம்முடைய உலகம் (பூமி), சூரிய மண்டலம், பால்வெளி, அனைத்து நட்சத்திர மண்டலங்கள் அனைத்தையுமே குறிக்கிறது.

சுருக்கமாக ”யாதுமாகி நின்றாய்” என இந்து மதம் குறிக்கும். இது தான் இந்து மதத்திற்கும்(புத்தம்,சமணம் உள்பட) மற்ற மதத்திற்கும் (யூதம், கிறிஸ்தவம், இஸ்லாமியம்)
உள்ள மிக பெரிய வித்தியாசம்.

//தியானம் என்பது இப்படி தான் செய்யனும் என்று சொல்வதை தான் ஏற்றுகொள்ள மாட்டேன் என்றேன்!
நான் செய்வதே தியானம் என்ற போதே தெரியவில்லையா!?//

தியானம் என்பது பற்றி விளக்கம் அளிக்க விரும்புகிறேன். தியானம் என்பது மன அறிவியல் ஆகும். இதை நம்மால் நிரூபிக்க முடியும்.

வால்பையனுக்கு நான் தியானத்தை நடைமுறையிலேயே உணர்த்த முடியும். உங்களை நீங்களே உணர 10 நிமிடங்கள் செலவளிக்க தயாரா ?
[ஏனெனில் பிறவியேலேயே கண் பார்வை இல்லாதவருக்கு முழு நிலவின் அருமையை விளக்குவது அவருக்கும், விளக்குபவருக்கும் துன்பம் தரும் செயல் அல்லவா?]

பின்னூட்டம் நீள்வதால் எனது இடுகையில் http://www.tamilscience.co.cc/2009/08/10.html தொடரவும்.

Admin said...

கடவுள் நேத்து முளைத்த காளான். அல்லது அண்மையில்தான் தோன்றியவர் என்பதற்குரிய ஆதாரங்களை. அல்லது காரணங்களைச் சொல்லுங்கள் வாலு.....

உங்கள் கேள்விகளுக்குரிய பதில்களை சற்று நேரத்தில் தருகிறேன்.

Kutty said...
This comment has been removed by the author.
Kutty said...
This comment has been removed by the author.
Saravanan Trichy said...

shri ramesh sadasivam சொன்னது…
//சூரிய வெளிச்சமே படாத இடங்கள் இந்த பிரபஞ்சத்தில் இல்லையா?//
சார் நான் சொல்லுறது சூரியனிலிருந்து கிடக்கும் energy மட்டுமே உயிர்களின் ஆதாரம்! எஸ்கிமோக்கள் சாபிடாமலே உயிர் வாழ்ந்தார்களா என்ன? லைட் இல்லாம எந்த ஒரு செடியும் முளைக்காது சார்! அப்புறம் எது சாப்பாடு! உயிர் வாழுறது எல்லாம்!
//சூரியன் மத்தியில் இருக்க வேண்டும் என்றும். கிரகங்கள் அதனை சுற்றி வர வேண்டும் என்றும் யார் தீர்மானித்தது//
யாரும் தீர்மானிக்க வேண்டியதில்ல சார் ! அது தன்னால நடக்குது! அதுதான் இயற்க்கை!

////யார் திட்டமிடுதலும் இன்றி இயற்கை இவ்வளவு சீராக இயங்கி வருவதாக நினைக்கிறீர்களா?//

இயற்க்கை சீராக இயங்கி வருதுன்னு யார் சார் சொன்னது? அது ஆதியில எப்படி இருந்ததோ இன்னும் அப்படிதான் இருக்கிறது. இயற்கையின் சீரற்ற போக்கினால் தான் பல கோடி உயிர்கள்( உயிரினங்கள்) உரு தெரியாமல் அழிந்து விட்டன! இந்த இயற்கையை சகித்து கொண்டு அதற்கேற்றார் போல் தன்னை உரு மாற்றிக்கொண்ட உயிரினங்கள் மட்டுமே இப்போது இந்த உலகில்! அதன் கடைசி மிச்சம் தான் மனிதர்கள்! நாம்!
" வலியது வாழும் "

வால்பையன் said...

ஏற்கனவே இட்ட பின்னூட்டம் காப்பி!
ஏன் கடவுள் நேற்று முளைத்த காளான்!


கடவுள் என்பது ஒரு பொருளாக நான் நினைத்து சொல்லவில்லை!
கடவுள் என்ற கற்பனை பாத்திரம் உருவாகி ஒருநாள் ஆகவில்லை என்றேன்!

பூமியின் வயதில் மனித நாகரிகம் உருவானதே கடைசி நொடியில் தான்! அதாவது கடந்த ஐயாயிரம் வருடங்கள் என்பது பூமியின் பலகோடி வருடங்களுக்கு முன் சில நொடிகள் கூட இல்லை என்பது சரியா!

Eswari said...

@வால்பையன்
குருடனிடம் நிறத்தை பற்றி சொல்பவரும், செவிடனிடம் இசையைப் பற்றி சொல்லுபவர்களும் பைத்தியந்தான் குருடனுக்கும், செவிடனுக்கும். பாவம் அவர்களுக்கு தெரியது ஊனம் அவர்களிடம் இருக்கு என்று.

உங்கள் பதிவில் நா கேட்ட கேவிக்கு பதில் சொல்ல தெரியாமல் வேறொரு பெயரில் வந்து உளறிக்கிட்டு இருந்திங்க. இப்ப இங்கேயுமா?

நீங்கள் செய்யும் கிண்டல், கேலி எல்லாம் ஆன்மீக வாதியான எங்களையே சாரும்.

ஏன் என்றால் நீங்கள் திட்டுவதாலோ, நாங்கள் போற்றுவதாலோ இறைவன் புகழ் உயர்வதில்லை. அதற்க்கெல்லாம் அப்பாற்பட்டவன் இறைவன்.

திரும்பவும் சொல்கிறேன். ஒருவன் தன் தாயிடம் வைத்திருக்கும் நம்பிக்கை போன்றது எங்கள் பக்தி. தேவை இல்லாமல் கேள்வி கேட்கிறேன் ன்னு அதை அசிங்க படுத்தாதிங்க.

Eswari said...

@வால்பையன்..
//ஒன்று நான் சொன்ன காளான் மேட்டருக்கு மறுப்பு சொல்லி விளக்கம் தாருங்கள்! //
கடவுளை காளான் என்றாலும், கல் என்றாலும் பாதிப்பு அவருக்கு இல்லை. அவரை நம்பும் எங்கள் மனம் தான் பாதிக்கும்.

//எல்லோரும் கும்பிடுகிறார்கள் அதனால இருக்குன்னு சொல்லக்கூடாது!//
கடவுளை வணங்குவதால் கிடைக்கும் ஒரு அற்புதம் உள்ளுணர்வு.
உணர்ந்து பார்த்தால் தெரியும் அதன் அற்புதம்.

//வேறென்ன தொடர்பு இருக்கிறது மனிதர்களுக்கும் கடவுளுக்கும்//
சொன்ன மட்டும் புரிய போதாக்கும்

//ரெண்டு!
தமிழர்கள் சம்பிரதாயத்துக்கும் கடவுளுக்கும் என்ன சம்பந்தம்!//
கண்டிப்பா எந்த சம்பந்தமும் இல்லை. சம்பிரதாயத்தின் அர்த்தம் தெரியாததால் வந்த கேள்வி இது.
கடவுள் தான் தெரியாது சம்பிரதாயத்தில் அர்த்தமுமா தெரியாது?

Admin said...

//வால்பையன் கூறியது...
இவ்ளோ பெரிய பதிவுல திருமணத்தை தவிர வேறு சம்பிரதாயங்கள் எதுவும்//



வாலு உங்களின் கேள்விகளுக்கு என்னால் உடனடியாகப் பதில் சொல்ல முடியாமல் போனது இங்கே மின்சாரம் தடைப்பட்டு இருந்தது...

இதோ பதில்கள்....

திருமணம் மட்டுமல்ல எல்லா சம்பிரதாயங்கலுமே சமயத்தோடு பின்னிப்பிணைந்த ஒன்றாகிவிட்டது... ஏராளம் சொல்லலாம். திருமணம் மட்டுமல்ல. ஒரு மனிதனின் மரணத்தை எடுங்கள் அந்த மரணச் சடங்குகள் எப்படி நடக்கின்றன. இந்துக்களின் மரணச் சடங்கு ஒரு விதமாகவும் கிறிஸ்தவர்களின் மரணச் சடங்கு வேறு விதமாகவும் அமையவில்லையா. இருவரின் மரணச் சடங்குகளும் வேறுபடுகின்றதே. இருவரும் தமிழர்கள்தானே இங்கே சமயம்தான் முக்கிய இடம் வகிக்கின்றது.


அடுத்து ஒரு குழந்தை பிறந்தால் எத்தனை சமய சம்பிரதாயங்கள் பார்க்கப்படுகின்றன. உதாரணமாக முதலாவதாக தலை முடி வளிக்கவேண்டும் என்றால் இந்துக்கள் என்னசெய்கிறார்கள் கோவிலிலே கொண்டு வளிக்கின்றார்கள் அதனை ஒரு சமய சடங்காகக்கூட செய்கின்றனர். ஆனால் கிறிஸ்தவர்கள் அப்படிச் செய்கிறார்களா இல்லையே. இங்கு மதத்துக்குத்தானே முன்னுரிமை அளிக்கப்படுகின்றது...

இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்....

Admin said...

//வால்பையன் கூறியது...

இந்து மதம் ஆதியும், அந்தமும் அற்ற ஒன்றா! அப்போ மற்ற மதங்களும் அப்படி தானே இருக்க வேண்டும்!

கிருஸ்துவம் 2000 வருடம்
இஸ்லாம் 1700 வருடம்

இதுமட்டும் எப்படி!?//


இந்து மதம் ஆதியும் அந்தமும் இல்லாத ஒன்று. ஏனைய மதங்களைப் பொறுத்தவரை. புத்தராக இருக்கட்டும்,ஜேசுவாக இருக்கட்டும், அல்லாவாக இருக்கட்டும் எல்லோரும் இறைவனின் தூதர்களாகவே கணிக்கப்படுகின்றது. அவர்களும் ஒரு இறைவனின் படைப்பிலிருந்து ஞானம் பெற்ற இறை தூதர்களே...
அவர்கள் மனிதர்கள் இறைவனால் ஆட்கொள்ளப்பட்டவர்கள் அந்த இறைவன் யார்.

ஏனைய மதங்களின் தோற்றம் சொல்லியிருக்கிறீர்கள் இந்து மதத்தின் கடவுளர்களின் தோற்றம் எப்போது என்று சொல்லுங்கள்.

Admin said...

//வால்பையன் கூறியது...
மதங்களுக்கு ஆணிவேரே கடவுள் தான்!
அதனால் அது)கடவுள்) இருக்குன்னு தான் சொல்வாங்க!

இந்த உலகை படைத்தது கடவுள் என்றால், கடவுளை படைத்தது யார்!?
கடவுள் சுயம்பு என்றால் ஏன் இந்த உலகம் சுயம்புவாக இருக்ககூடாது!?

பதில் ப்ளீஸ்!//

இந்த உலகத்தைப் படைத்தவன் இறைவனே இறைவனை யாரும் படைக்கவில்லை. அவன் சுயம்புவே அவனால் படைக்கப்பட்ட உலகத்தையும், உயிர்களையும் இறைவனால்தான் இயக்கமுடியும்.

Admin said...

//வால்பையன் கூறியது...
மதம் என்ன சொல்லுதுன்னு எல்லோருக்கும் தெரியும்!

ஆனால் புத்த மதம் இந்து மதத்தை கொல்ல சொல்வதும்! இஸ்லாமியமதம்(சிலரால்) அதை பின்பற்றாதவர்களை கொல்ல சொல்வதும் ஏன் வந்தது!

கடவுள் என்பதே டுபாக்கூர் என்கிறேன்! மதம் சொல்லுச்சுங்கிறிங்க!///


மதம் எங்கேயும் எவரையும் கொல்லும்படி எந்த மதத்திலும் சொல்லப்படவில்லை. மதங்கள் நல்லொழுக்கங்களை சொல்லித்தருகின்றன. ஆனால் மனிதனே பேராசை போன்ற கொடிய குணங்களினால் கொலை செய்கின்றான். எந்த மதத்திலே எங்கே கொலை செய்யும்படி குறிப்பிடப்பட்டிருக்கிறது சொல்லுங்கள்..

Admin said...

//தருமி கூறியது...
என் பதில் கேட்டு அழைப்பும் அனுப்பி விட்டீர்கள். நான் என்னங்க சொல்லப் போகிறேன். வால் சொல்வது சரி என்றுதானே சொல்வேனென்று தெரியாதா?//


நான் என் பக்க நியாயங்களுக்காகவும் என் கருத்துக்களை நியாயப் படுத்துவதற்காகவும் அழைக்கவில்லை. நான் எதிர்க் கருத்துக்களையே எதிர் பார்க்கிறேன் அப்போதுதான் கடவுள் இருக்கின்றானா இல்லையா என்ற சரியான தீர்வு கிடைக்கும்.

Eswari said...

@சந்ரு..
உண்மையில் சம்பிரதாயத்திர்க்கும், ஆன்மிகத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. சம்பிரதாயம் என்பது காலம் காலமாக நாம் கடைப்பிடிக்கும் பழக்கம்.
இறைவனை வணங்க எந்த சம்பிரதாயமும் தேவை இல்லை. யானையும், சிலந்தியும், எறும்பும் இறைவனடி சேர (திருஆனைக்கால், எறும்பீஸ்வரர் கோவில்கள்) எந்த சம்பிரதாயத்தை கடைபிடித்தன? கண்ணப்பன் எந்த சம்பிரதாயத்தை கடைபிடித்தான்?

அவர்கள் அளவிற்கு நம்மால் பக்தியை வெளிக்காட்ட முடியாது. ஆதனால் தான் சில பழக்கத்தை ஏற்படுத்தி அதன் மூலம் பக்தியை பெருக்க நம் முன்னோர்கள் கடைபிடித்த யுக்தி தான் ஆன்மீகத்தில் நம் கடைப்பிடிக்கும் சம்பிரதாயம்.

தயவு செய்து நீங்களும் சில மூடர்களை போல இப்படி ஒரு பதிவை போட்டு இறைவனை விவாத பொருள் ஆக்காதிர்கள்.

Admin said...

//தருமி கூறியது...
வர வர எல்லோரும் "ஆன்மீகம் .. ஆன்மீகம்" அப்டின்னு சொல்லிக்கிட்டு இருக்கீங்க. அதுக்கு அர்த்தம் நான் சொன்னது சரியில்லைன்னு சொல்றீங்க. அப்டீன்னா, நீங்களாவது சொல்லிடுங்களேன்........ ப்ளீஸ்!//


சொல்வதில் பிரட்சனை இல்லை சொல்வதை ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மை வேண்டும்...

Admin said...

//Eswari கூறியது...
@சந்ரு..
உண்மையில் சம்பிரதாயத்திர்க்கும், ஆன்மிகத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. சம்பிரதாயம் என்பது காலம் காலமாக நாம் கடைப்பிடிக்கும் பழக்கம்.
இறைவனை வணங்க எந்த சம்பிரதாயமும் தேவை இல்லை. யானையும், சிலந்தியும், எறும்பும் இறைவனடி சேர (திருஆனைக்கால், எறும்பீஸ்வரர் கோவில்கள்) எந்த சம்பிரதாயத்தை கடைபிடித்தன? கண்ணப்பன் எந்த சம்பிரதாயத்தை கடைபிடித்தான்?

அவர்கள் அளவிற்கு நம்மால் பக்தியை வெளிக்காட்ட முடியாது. ஆதனால் தான் சில பழக்கத்தை ஏற்படுத்தி அதன் மூலம் பக்தியை பெருக்க நம் முன்னோர்கள் கடைபிடித்த யுக்தி தான் ஆன்மீகத்தில் நம் கடைப்பிடிக்கும் சம்பிரதாயம்.

தயவு செய்து நீங்களும் சில மூடர்களை போல இப்படி ஒரு பதிவை போட்டு இறைவனை விவாத பொருள் ஆக்காதிர்கள்.//



இங்கே இறைவனை விவாதப் பொருளாக்கப்படவில்லை. இங்கு இரண்டு விடயங்கள் பேசப்படுகின்றன கடவுள் நேற்று முளைத்த காளானா என்பது ஒன்று. மற்றயது நான் சொல்கிறேன் சம்பிரதாயங்கள் சமயத்தோடு பின்னிப்பிணைந்து விட்டன என்றுதான் சொல்கின்றேன்

Eswari said...

பின்னூட்டங்களை இன்னொரு முறை படித்து பாருங்கள். சம்பிரதாயத்தையும், இறைவனையும் சேர்த்து எப்படி குழப்பி இருக்கிறார்கள்/ இருக்கிறீர்கள் என்பது புரியும்.

Eswari said...

//சம்பிரதாயங்கள் சமயத்தோடு பின்னிப்பிணைந்து விட்டன என்றுதான் சொல்கின்றேன்//
இருக்கலாம். ஆனால் சமயம் என்றும் சம்பிரதாயத்துடன் சேர்வதில்லை. சமயம் வேறு சம்பிராதாயம் வேறு.

Admin said...

தமிழர் சம்பிரதாயத்துக்கும், கடவுளுக்கும் சம்பந்தம் இருப்பதாக எனக்கு தெரியவில்லை!

தமிழ் கல் தோன்றி மண் தோண்றா கால்த்திலிருந்து இருக்கிறது!

கடவுள் நேற்று முளைத்த காளான்!

இவாறு பின்னூட்டமிடப்பட்டது இதற்கு விளக்கமளிக்கவேண்டி இருந்தது. கடவுளை இங்கே விவாதப்பொருளாக எடுக்கவில்லை

Menaga Sathia said...

வித்தியாசமான சிந்தனைகள்!!

Admin said...

// Eswari கூறியது...
//சம்பிரதாயங்கள் சமயத்தோடு பின்னிப்பிணைந்து விட்டன என்றுதான் சொல்கின்றேன்//
இருக்கலாம். ஆனால் சமயம் என்றும் சம்பிரதாயத்துடன் சேர்வதில்லை. சமயம் வேறு சம்பிராதாயம் வேறு.//

என்னுடைய http://shanthru.blogspot.com/2009/08/blog-post_07.html இந்த இடுகையிலே சம்பிரதாயங்கள் பற்றிக்குறிப்பிடும்போது சமயத்தோடு சம்பிரதாயங்கள் பின்னிப்பினைந்துவிட்டன என்று குறிப்பிட்டு இருந்தேன் அதற்கு வால்பையனால்

தமிழர் சம்பிரதாயத்துக்கும், கடவுளுக்கும் சம்பந்தம் இருப்பதாக எனக்கு தெரியவில்லை!

தமிழ் கல் தோன்றி மண் தோண்றா கால்த்திலிருந்து இருக்கிறது!

கடவுள் நேற்று முளைத்த காளான்!

இவாறு பின்னூட்டமிடப்பட்டது இதற்கு விளக்கமளிக்கவேண்டி இருந்தது. கடவுளை இங்கே விவாதப்பொருளாக எடுக்கவில்லை

தமிழ் சம்பிரதாயங்கள் சமயத்தோடு பின்னிபிணைந்து விட்டன என்றுதான் சொல்கின்றேன். ஆனால் சமயத்துக்கென்று சில சம்பிரதாயங்கள் இருக்கின்றன என்பதனை மறந்துவிடாதீர்கள்.

Admin said...

சமயத்தை எடுத்துக்கொள்ளுங்கள் சமயத்துக்கென்று எத்தனை சம்பிரதாயங்கள் இருக்கின்றன சரி ஒரு ஆலயத்திலே திருவிழா நடைபெறுவதாக இருந்தால் எத்தனை சமய சம்பிரதாயங்கள் இடம் பெறுகின்றன.

Admin said...

Eswari @...

ஒருவர் கடவுள் இல்லை என்று சொல்கின்றார் அல்லது சமயத்தை பற்றி தவறாகச் சொல்கின்றார் என்றால் அவருக்கு புரிய வைக்கவேண்டியது எமது கடமை அப்போ இந்து சமயத்தைப் பற்றி பிரசாரம் செய்பவர்கள் எல்லாம் கடவுளை விவாதப் பொருளாகவா பயன்படுத்துகின்றனர்.

Admin said...

@ Eswari...

காலங் காலமாக நாம் பின்பற்றுகின்ற சம்பிரதாயங்களும் இருக்கின்றன. சமயம் சார்ந்த சம்பிரதாயங்களும் இருக்கின்றன.

Admin said...

// Eswari கூறியது...
பின்னூட்டங்களை இன்னொரு முறை படித்து பாருங்கள். சம்பிரதாயத்தையும், இறைவனையும் சேர்த்து எப்படி குழப்பி இருக்கிறார்கள்/ இருக்கிறீர்கள் என்பது புரியும்.//


இறைவனே இல்லை என்று குழம்பி இருப்பவர்கள் இதில் குழம்புவதில் தப்பு இல்லையே. அவர்களுக்கு விளக்கம் கொடுக்கவேண்டியது நாம். நான் குழம்பவில்லை...


இங்கு இறைவன், சம்பிரதாயம் இரண்டு விவாதம் நடைபெறும்போது இரண்டையும் பற்றிப் பேசுவதில் தப்பு இருப்பதாகத் தெரியவில்லை...

Anonymous said...

முதல் பதிவிற்கு வாழ்த்துக்கள் சந்ரு.

இங்கு இந்து மதம் பற்றியும், தமிழர்கள் பற்றியும் தீவிர விவாதம் போல தெரிகிறது :-)

பொதுவாக திராவிட இயக்க பைத்தியவாதிகள் தமிழர்களை குழப்புவதற்காகவே தமிழர்களின் பழக்க வழக்கங்களை ஆதியில் இல்லாதது போல தோற்றம் அளிக்க செய்வார்கள்.


//திருமணசம்பிரதாயங்கள் இடைகாலத்தில் வந்த முறை தான்! பழங்காலத்தில் சேர்ந்தாலே திருமணம் தான்!//

நண்பர் வால்பையன் அவர்களது பிடியில் சிக்க வேண்டாமென கேட்டு கொள்கிறேன். வால்பையன் குறிப்பிட்டு உள்ளது திருமண வகைகளில் கந்தர்வ மணம் எனும் ஒரு வகை மட்டும் தான்.

மிக எளிமையான உதாரணம். திருவள்ளுவ நாயனார் கடவுள் வாழ்த்துடன் திருக்குறளை துவங்குகிறார். இது ஒன்றே போதும்.

சங்க காலத்தில் அனைத்து நில மக்களுக்கும் உரிய தெய்வங்கள் இருந்தார்கள். உதா: குறிஞ்சி - மலை காவலரான முருகன்

எந்த ஒரு செயலும் கடவுள் வழிபாடு இல்லாமல் செய்ய பட்டது இல்லை.

Admin said...

//குட்டி பிரபு கூறியது...
shri ramesh sadasivam சொன்னது…
//இறைவனின் அன்பு, ஒரு உயிர் சாவதை தடுப்பதில் இல்லை. காரணம் சாகும் உயிர் இறைவனிடம் தான் திரும்ப செல்கிறது. வீட்டுக்கு வரும் பிள்ளைக்காக தாய் வருந்துவாளா?//

என்ன சார் comedy பண்றீங்க! அப்ப ராஜ பக்சே, புஷ் எல்லாம் கடவுளுக்கு ரொம்ப குளோஸ் ரிலேஷன்னு சொல்லுங்க!//

இந்த உலகும் உயிர்களும் இறைவனால் படைக்கப்பட்டன படைத்தவனே நம்மை இயக்கிக்கொண்டு இருக்கிறான். இறைவனால் படைக்கப்பட்ட அனைத்துமே இறைவனுக்கே சொந்தம். அவனால் படைக்கப்பட்டவைகளை அவனே மீண்டும் அவனே எடுப்பதில் என்ன தப்பு இருக்கிறது. நமது பொருளை நாம் சொந்தம் கொண்டாடுவது போன்று.

இந்துக்களிடம் மறுபிறவி என்ற நம்பிக்கை இருக்கிறது. இறைவனால் படைக்கப்பட்ட உயிர்களை இறைவனே மறுபிறவிக்காக எடுத்திருக்கலாமல்லவா.

இங்கே மகிந்த, புஷ் ஆகியோரை இறைவனோடு ஒப்பிடுவது உங்கள் அறியாமை. இவர்கள் நடத்துவது இறைவனின் தொழில்களா...

Saravanan Trichy said...

சந்ரு
//இந்த உலகும் உயிர்களும் இறைவனால் படைக்கப்பட்டன படைத்தவனே நம்மை இயக்கிக்கொண்டு இருக்கிறான். இறைவனால் படைக்கப்பட்ட அனைத்துமே இறைவனுக்கே சொந்தம். அவனால் படைக்கப்பட்டவைகளை அவனே மீண்டும் அவனே எடுப்பதில் என்ன தப்பு இருக்கிறது. நமது பொருளை நாம் சொந்தம் கொண்டாடுவது போன்று//

இந்த para-ல் "இறைவன்" என்ற வார்த்தைக்கு பதிலாக "இயற்கை" என்று மாற்றி பாருங்களேன். நான் சொல்ல வந்ததும் இதே தான்.
ஒரு உயிர் கொல்லப் படாமல் இன்னொரு உயிர் வாழ முடியாது- இதை இயற்கை என்கிறேன் நான் ! இறைவன் என்கிறீர்கள் நீங்கள்!

//இறைவனால் படைக்கப்பட்ட உயிர்களை இறைவனே மறுபிறவிக்காக எடுத்திருக்கலாமல்லவா//
நீங்களே யூகமாக தான் சொல்கிறீர்கள் ! பின் நான் என்ன சொல்ல?

Admin said...

// குட்டி பிரபு கூறியது...

இந்த para-ல் "இறைவன்" என்ற வார்த்தைக்கு பதிலாக "இயற்கை" என்று மாற்றி பாருங்களேன். நான் சொல்ல வந்ததும் இதே தான்.
ஒரு உயிர் கொல்லப் படாமல் இன்னொரு உயிர் வாழ முடியாது- இதை இயற்கை என்கிறேன் நான் ! இறைவன் என்கிறீர்கள் நீங்கள்!//



இந்துக்கள் பல வடிவங்களிலே இறைவனை வணங்குகின்றனர். இயற்கையைகுஉட இறைவனாக வழிபடுபவர்கள் இந்துக்கள் தெரியுமா நண்பரே..

Admin said...

// குட்டி பிரபு கூறியது...
//இறைவனால் படைக்கப்பட்ட உயிர்களை இறைவனே மறுபிறவிக்காக எடுத்திருக்கலாமல்லவா//
நீங்களே யூகமாக தான் சொல்கிறீர்கள் ! பின் நான் என்ன சொல்ல?//


எனக்கு இறைவன் இருக்கிறான். என்றும் மறுபிறவியிலும் நம்பிக்கை இருக்கிறது. நம்பிக்கை இல்லாத உங்களிடம் மறு பிறவிக்கான அழைப்பாகவும் இருக்கலாம் என்றுதான் சொல்லலாம் ஆனால் அப்படித்தான் என்றால் அதனை ஏற்றுக்கொள்ளப் போகின்றீர்களா இல்லையே.

வால்பையன் said...

//உங்கள் பதிவில் நா கேட்ட கேவிக்கு பதில் சொல்ல தெரியாமல் வேறொரு பெயரில் வந்து உளறிக்கிட்டு இருந்திங்க. இப்ப இங்கேயுமா? //

எந்த கருத்தாக இருந்தாலும் என் பெயரிலேயே தான் உரையாடுவேன்!
கிண்டலும், கேலியும் செய்வதற்கு போலி பெயரில் வருமளவுக்கு இங்கே யார் இருக்கிறார்கள் என காட்டுங்கள்!

முகத்தை மறைந்து உரையாடும் அளவுக்கு நான் இன்னும் கோழையாகவில்லை!

உரையாடல் நிச்சயமாக தொடரும்!

வால்பையன் said...

//ஒருவன் தன் தாயிடம் வைத்திருக்கும் நம்பிக்கை போன்றது எங்கள் பக்தி.//

பீர் ஏற்கனவே சொல்லிட்டார்! மதம் மாறியவர்கள் தங்கள் உண்மையான தாயை கண்டடைவதற்காக வளர்த்த தாயை விட்டு போனவர்கள் என்று!

வளர்த்த தாயை சந்தேகப்படுவதாக அர்த்தமா!?

வால்பையன் said...

//ஏனைய மதங்களின் தோற்றம் சொல்லியிருக்கிறீர்கள் இந்து மதத்தின் கடவுளர்களின் தோற்றம் எப்போது என்று சொல்லுங்கள்.//

இயற்கையை பயந்து வணங்கிய மனிதன் அதற்கு உருவம் கொடுத்ததே இந்து மதத்தின் தோற்றம்!

வால்பையன் said...

//இறைவனே இறைவனை யாரும் படைக்கவில்லை. அவன் சுயம்புவே அவனால் படைக்கப்பட்ட உலகத்தையும், உயிர்களையும் இறைவனால்தான் இயக்கமுடியும். //

முடியும் என்று சொல்லத்தான் முடிகிறது!
ஏன் உலகம் சுயம்புவாக இருக்கக்கூடாது என்பதை யோசிக்க முடியாமல் இருப்பது தான் ஏன் என்று தெரியவில்லை!

Saravanan Trichy said...

சந்ரு சொன்னது…
//இயற்கையைகுஉட இறைவனாக வழிபடுபவர்கள் இந்துக்கள் //
வழிபடுவதால் என்ன பயன்?
காற்று மாசுபடாமல் இருக்குமா? ஓசோனில் ஓட்டை விழாமல் இருக்குமா? நீங்கள் வழிபட்டாலும் வழிபடாவிட்டாலும் எதுவும் மாறப்போவதும் இல்லை . வழிபாடு தேவையா?
வழிபாடு எதற்காக?

Admin said...

//வால்பையன் கூறியது...
ஏற்கனவே இட்ட பின்னூட்டம் காப்பி!
ஏன் கடவுள் நேற்று முளைத்த காளான்!


கடவுள் என்பது ஒரு பொருளாக நான் நினைத்து சொல்லவில்லை!
கடவுள் என்ற கற்பனை பாத்திரம் உருவாகி ஒருநாள் ஆகவில்லை என்றேன்!

பூமியின் வயதில் மனித நாகரிகம் உருவானதே கடைசி நொடியில் தான்! அதாவது கடந்த ஐயாயிரம் வருடங்கள் என்பது பூமியின் பலகோடி வருடங்களுக்கு முன் சில நொடிகள் கூட இல்லை என்பது சரியா!//

என்ன சொல்ல வருகின்றீர்கள் என்பது புரியவில்லை...

கடவுள் நேற்று முளைத்த காளான்! என்று
உங்களால் எப்படிச் சொல்லமுடியும் கடவுள் நேற்று முளைத்தவர் என்பதற்கு என்ன ஆதாரங்கள் இருக்கின்றது நேற்று என்றால் எப்போது ஒரு கால வரையறை சொல்லுங்கள்.

Admin said...

//வால்பையன் கூறியது...
//ஏனைய மதங்களின் தோற்றம் சொல்லியிருக்கிறீர்கள் இந்து மதத்தின் கடவுளர்களின் தோற்றம் எப்போது என்று சொல்லுங்கள்.//

இயற்கையை பயந்து வணங்கிய மனிதன் அதற்கு உருவம் கொடுத்ததே இந்து மதத்தின் தோற்றம்!//


இது எங்கே சொல்லப்பட்டு இருக்கின்றது எப்போது இயற்கையை வழிபடத்தொடங்கினான் என்று சொல்லப்படுகிறது. இந்துக்களின் வழிபாட்டு முறைகளில் இயற்கை வழிபாடும் ஒன்று.

Admin said...

//வால்பையன் கூறியது...
இயற்கையை பயந்து வணங்கிய மனிதன் அதற்கு உருவம் கொடுத்ததே இந்து மதத்தின் தோற்றம்!//


இந்துக்களின் இயற்கை வழிபாட்டுக்கான காரணங்கள் பல ஆனால் இயற்கைக்கு உருவம் கொடுத்ததாக சொல்கின்றீர்களே எப்போது உருவம் கொடுத்தார்கள். எங்கே இதெல்லாம் சொல்லப்பட்டு இருக்கிறது. ஆதியும் அந்தமும் இல்லாததுதான் இந்து மதம். இயற்கைக்கு உருவம் கொடுத்தபோதே இந்து மதத்தின் தோற்றம் என்று சொல்றிங்க அப்போ இந்து மதத்தின் தோற்றம் எத்தனை ஆண்டுகள். யாரால் உருவம் கொடுக்கப்பட்டது.

Admin said...

//வால்பையன் கூறியது...
//இறைவனே இறைவனை யாரும் படைக்கவில்லை. அவன் சுயம்புவே அவனால் படைக்கப்பட்ட உலகத்தையும், உயிர்களையும் இறைவனால்தான் இயக்கமுடியும். //

முடியும் என்று சொல்லத்தான் முடிகிறது!
ஏன் உலகம் சுயம்புவாக இருக்கக்கூடாது என்பதை யோசிக்க முடியாமல் இருப்பது தான் ஏன் என்று தெரியவில்லை!//


இறைவனால்தான் உலகம் உலகம் படைக்கப்பட்டது என்பது புலனாகும்போது. உலகம் சுயம்புவாக இருக்க வேண்டும் என்று யோசிக்க வேண்டிய அவசியமில்லையே.

Admin said...

//குட்டி பிரபு கூறியது...
சந்ரு சொன்னது…
//இயற்கையைகுஉட இறைவனாக வழிபடுபவர்கள் இந்துக்கள் //
வழிபடுவதால் என்ன பயன்?
காற்று மாசுபடாமல் இருக்குமா? ஓசோனில் ஓட்டை விழாமல் இருக்குமா? நீங்கள் வழிபட்டாலும் வழிபடாவிட்டாலும் எதுவும் மாறப்போவதும் இல்லை . வழிபாடு தேவையா?
வழிபாடு எதற்காக?//

ஏன் வழிபடுகின்றார்கள் இயற்கை எங்களுக்கு உதவி செய்கின்றது என்பதற்காக. சரி தைப்பொங்கலிலே உழவன் சுஉரியனுக்கு போங்கள் படைக்கிறான் தனக்கு உதவி செய்த சூரியனுக்கு நன்றி செலுத்துகின்றான். இயற்கையை மனிதன் வழிபடும் நோக்கம் வேறு. இங்கே தனக்கு உதவி செய்த சூரியனுக்கு நன்றி செலுத்துகின்றான்.

இந்துக் கடவுள் இந்த உலகத்தைப் படைத்து எங்களை எல்லாம் படைத்து இயக்கிக்கொண்டு இருக்கின்ற கடவுளை வணங்குவது வேறு.

வால்பையன் said...

எங்கயாவது சொல்லப்பட்டிருந்தாதான் நம்புவேன் என்கிறீகள்!

தனிபதிவாக இடுகிறேன்

Admin said...

நிட்சயமாக நீங்கள் மட்டும் சொல்வதை என்னால் ஏற்றுக்கொள்ளமுடியாது. உங்கள் பதிவை விரைவில் விரைவில் எதிர் பார்க்கிறேன்.

கிருஷ்ண மூர்த்தி S said...

கடவுள் உண்டு, இல்லை என்ற விவாதம் முடிவே இல்லாதது, ஏனென்றால் விவாதித்துக்காண்பது அல்ல அது!அனுவவித்து, அனுபவத்தில் உணர்வது!

வால்பையன் திரு அருண். கடவுளை மறுப்பது, முக்கியமாக அவர் வெறுக்கும் சாதீயப் பிடிமானங்கள், சிதைவுகளால் தான் என்று எனக்குத் தோன்றுகிறது. அதனால் என்ன, கடவுள் அவரை ஒன்றும் கோபித்துக் கொள்ளப் போவதில்லை; அதே மாதிரி கடவுளுக்காக வக்காலத்து வாங்கிக் கொண்டு இங்கே பின்னூட்டம் இட்டவர்களுக்குப் பரிசு தரப் போவதும் இல்லை.

சிலநேரங்களில், நேரெதிர் திசைக் கொடிக்குப் போய்விட்டு, அப்புறம் போகவேண்டிய ஊருக்குப் போவது சிலருடைய அனுபவமாகி விடுகிறது. என்னுடைய அனுபவம் கூட அப்படித்தான், கடவுளை நம்புகிற சூழ்நிலையில் பிறந்து வளர்ந்தேன். ஒரு கால கட்டத்தில், முழு நாத்திகம் பேசி, மறுத்தும் வந்தேன். அனுபவங்கள், சிலவற்றைச் சொல்லிக் கொடுத்ததன் பேரில், கடவுளை நம்புகிறேன், சடங்குகளை அல்ல. மதங்களை ஒரு எல்லைக்கு மேல் பொருட்படுத்துவதும் இல்லை.

ஒவ்வொரு அபிப்பிராயமும், அந்தந்த நேரத்தில் ஏற்படுகிற சம்பவங்களில் எழுந்தாலும், முழுமையான அனுபவம் ஒன்று ஏற்படுவதற்காகக் காத்திருப்பது ஒன்று மட்டுமே நம்முடைய வேலை.

திருமணம் முதலான நிறைய விஷயங்களில், வால்பையன் திரு அருண், அவசர அவசரமாகக் கருத்துச் சொல்லியிருக்கிறார். வார்த்தைக்கு வார்த்தை பதில் சொல்லிக் கொண்டிருப்பதை விட, அவரே, தொடர்ந்து கோள்களின் மூலம் விடைகளைப் பெறட்டும் என்று விட்டுவிட வேண்டியது தான்.

சில அடிப்படையான உணர்வுகளை, ஆன்மிகம் உணர்ந்து கொண்ட அளவுக்கு, அறிவியல் இன்னமும் உணரவில்லை. அறிவியல் பெயரால்,சில கருத்துக்கள் முன் வைக்கப்பட்டிருப்பதை, மேலோட்டமாகத் தெரிந்து கொண்டு நாத்திக வாதம் பேசும் போது, அங்கே பட்டி மன்றம் தான் நடத்த முடியும். கருத்துப் பரிமாற்றமோ, தெரிந்துகொள்வதற்கான புதிய விஷயமோ இருப்பதில்லை.

ramesh sadasivam said...

#குட்டி பிரபு

//இயற்க்கை சீராக இயங்கி வருதுன்னு யார் சார் சொன்னது? அது ஆதியில எப்படி இருந்ததோ இன்னும் அப்படிதான் இருக்கிறது. இயற்கையின் சீரற்ற போக்கினால் தான் பல கோடி உயிர்கள்( உயிரினங்கள்) உரு தெரியாமல் அழிந்து விட்டன! இந்த இயற்கையை சகித்து கொண்டு அதற்கேற்றார் போல் தன்னை உரு மாற்றிக்கொண்ட உயிரினங்கள் மட்டுமே இப்போது இந்த உலகில்! அதன் கடைசி மிச்சம் தான் மனிதர்கள்! நாம்!
" வலியது வாழும் //

இது முற்றிலும் தவறான கருத்து. இயற்கைக்கு பின் தெளிவான நுண்ணறிவும் திட்டமிடலும் இருக்கிறது. பிறப்பை போலவே இறப்பும் திட்டமிடப்படுகிறது. அதே போல சில உயிரினங்கள் அழிவதும் புதிய உயிரினங்கள் தோன்றுவதும் அந்த திட்டத்தின் அடிப்படையில் தான்.

நீங்கள் சூரியனைப் பற்றி அந்த பதில் சொல்வீர்கள் என தெரிந்து தான். சூரியனுக்கு சக்தி எங்கிருந்து கிடைக்கிறதென்று கேட்டேன்?

சூரிய வெளிச்சம் படாத இடங்களில் உயிர் இல்லாமல் இருக்கலாம் ஆனால் இயக்கம் இருக்கிறது.

ramesh sadasivam said...

வால்பையன்
//பூமியின் வயதில் மனித நாகரிகம் உருவானதே கடைசி நொடியில் தான்! அதாவது கடந்த ஐயாயிரம் வருடங்கள் என்பது பூமியின் பலகோடி வருடங்களுக்கு முன் சில நொடிகள் கூட இல்லை என்பது சரியா?//

பூமியின் பலகோடி வருடங்களுக்கு முன் சில நொடிகள் கூட இல்லை என்பது சரிதான். ஆனால். ஐந்தாயிரம் ஆண்டுகளாகத் தான் மனிதனும் மனித கலாச்சாரமும் இருந்ததென்றால் அது தவிர. அதற்கு முன்பும் மனிதர்கள் இருந்திருக்கிறார்கள். அதற்கான சான்று ஆராய்ச்சி செய்பவரிடம் கிடைக்கவில்லை.

ஆதாரம் இல்லை என்பதற்காக ஒரு விஷயம் நடக்கவில்லை என்று பொருள் அல்ல.

ramesh sadasivam said...

//இந்த para-ல் "இறைவன்" என்ற வார்த்தைக்கு பதிலாக "இயற்கை" என்று மாற்றி பாருங்களேன். நான் சொல்ல வந்ததும் இதே தான்.
ஒரு உயிர் கொல்லப் படாமல் இன்னொரு உயிர் வாழ முடியாது- இதை இயற்கை என்கிறேன் நான் ! இறைவன் என்கிறீர்கள் நீங்கள்!//

#குட்டி பிரபு

இயற்கை என்பது என்ன? அது எப்படி இயங்கத் தொடங்கியது?

இயற்கை என்பது இறைவனின் திட்டப்படிதான் இயங்குகிறது.

பகுத்தறிவென்று சொல்லிவிட்டு இயற்கையின் பின்னிருக்கும் திட்டமிடலை நீங்கள் ஏன் புறக்கணிக்கிறீர்கள்?

ramesh sadasivam said...

ஏன் உலகம் சுயம்புவாக இருக்கக்கூடாது என்பதை யோசிக்க முடியாமல் இருப்பது தான் ஏன் என்று தெரியவில்லை!/

சந்ரு

உலகம் சுயம்புவாக இருந்தால் அது எதையும் சார்ந்திருக்காது. ஆனால் இவ்வுலகும் சரி, அது சுற்றிவரும் சூரியனும் சரி, இன்னும் பல கோள்களும் சரி, எல்லாம் ஒன்றை ஒன்று சார்ந்து தான் இயங்குகின்றன.

சுயம்புவாக தோன்றும் ஒன்று மற்றவற்றுக்கு ஆதாரமாக இருக்குமேயன்றி, எதையும் சார்ந்திருக்காது.

இந்த பிரபஞ்சம் முழுதும் ஒரு ஆதார சக்தியை சார்ந்து தான் இருக்கிறது.

கிருஷ்ண மூர்த்தி S said...

வால்பையன் சொன்னது:
"நாகரிகம் வளர்ச்சியடையாத காலத்தில் அவன் இயற்கையை கண்டு தேவையில்லாமல் பயந்தான் என்பதை விட வேறென்ன தொடர்பு இருக்கிறது மனிதர்களுக்கும் கடவுளுக்கும்!"

உண்மை! தேவையில்லாமல் பயந்தான் என்ற இடத்தில் புரியாததால் பயந்தான் என்று மாற்றிப் பாருங்கள், மனிதனுக்கும் கடவுளுக்கும் என்ன தொடர்பு இருக்கிறது என்பதற்கான விடை காணக் கிடைக்கும்.

இந்த எல்லையற்ற பிரபஞ்சத்திலே, நான் தனி இல்லை, தனித்து விடப் படவில்லை, பிரபஞ்சத்தின் ஒவ்வொரு அணுவிலும், அசைவிலும் என்னுடன் இடையறாத தொடர்பு இருக்கிறது என்பதை உணரத்தலைப்பட்ட நேரமே, பயமில்லாமல், புரிந்துகொள்ள ஆரம்பித்ததன் தொடக்கம்.

புரிந்துகொண்ட விதமே கூட அந்த இடத்தில் இரண்டாகப் பிரிந்து தான் நின்றது.

ஒன்று, இதைப் படைத்தவன் ஒருவன் இருக்க வேண்டும், படைப்பிற்குள்ளும், வெளியிலும் பரந்து விரிந்திருக்க வேண்டும்! அதாவது நான் இருக்கிறேன் என்றால், என்னைப் பெற்ற தாயொருத்தி இருக்கிறாள், அவள் என்னுள்ளும் வெளியிலுமாக இருக்கிறாள் என்று சொல்வது, என்னிடமிருப்பதெல்லாம், அவளிடமிருந்து பெறப்பட்டதே, ஆனாலும் அவள் தனியாகவும் [வெளியிலும்] இருக்கிறாள் என்று உணர்வதைப் போலத் தான்.
உடனே ஒரு கேள்வி வரும், என்தாயை எனக்குத் தெரியுமே, நான் பார்த்திருக்கிறேனே என்று! இங்கும் கூட தெரிந்து கொள்ள முடியும், பார்க்க முடியும்!

இரண்டாவதாக, இந்தப் பிரபஞ்சமே ஒரு விபத்து. இதில் எந்தத் திட்டமிடுதலோ, ஒழுங்கோ இல்லை. அதே மாதிரி உயிர் என்பது கூட ரசாயனச் சேர்க்கையில் ஏற்பட்ட ஒரு தற்செயலான விபத்து தான்! ஏதோ ஒரு கட்டத்தில் தன்னைத்தானே mutate இருகூறாகப் பிளந்து கொள்கிற தன்மையுடன் ஒரு செல் உருவாக்கி, வளர்ந்து, வளர்ந்து, மாற்றங்களை அடைந்து, பரிணாம வளர்ச்சியில், இப்போதுள்ள மனிதன் ஈறாக உருவாகியிருக்கிறது. சில அறிவியல் கோட்பாடுகளை அடிப்படையாக வைத்து, உயிர் தோன்றியதே தற்செயலான விபத்து என்று சொல்லும் போது, எல்லாம் ஒரு இயற்கையான தேர்வால் natural selection என்று இருக்கும்போது, அங்கே கடவுள் என்று ஒன்று இல்லை,அது படைப்பது, காப்பது அழிப்பதான வேலைகளைச் செய்வதாக நினைப்பதெல்லாம் சும்மா ஒரு புருடா என்ற ரீதியில் இந்த சிந்தனையோட்டம் போகும்.

இந்த இரண்டு முரண்பாடான சிந்தனைகளுமே கூட ஓரிடத்தில் சந்திக்க நேரிடும் போது,

"நீயும் பொம்மை நானும் பொம்மை
நெனச்சுப் பாத்தா எல்லாம் பொம்மை" என்று பழைய திரைப்படப் பாடல் ஒன்று நினைவிற்கு வருகிறதா?

அங்கே வந்து ஆதிசங்கரர் நிறுவியதாகச் சொல்லப் படும் அத்வைதக் கோட்பாடு "ப்ரஹ்ம சத்யா ஜகன் மித்யா-பிரம்மமே உண்மையானது காணுகின்ற தோற்றமெல்லாம் பொய்யானது" என்று ஒரு தரப்பும், "கண்டதே காட்சி, அது உண்மை! அதைப் படைத்ததாகச் சொல்லப் படும் கடவுள் மாயை" என்று அதையே உல்டா அடித்துச் சொல்கிற இன்னொரு தரப்பும் முட்டிக் கொண்டு நிற்கத் தான் செய்யும்! இது நேற்றும் நடந்தது, இன்றும் நிகழ்கிறது, நாளையும் நடக்கும்!

சரி, வாதம், எதிர்வாதம் என்று மட்டுமே இருந்தால் எப்படி, அதன் முடிவு என்ன, எங்கே என்று கேட்கிறீர்களா?

தொடர்ந்து பேசுவோம்!

supersubra said...

கல் தோன்றி மண் தோன்றா காலத்தில் உயிரியல் ரீதியாக எந்த ஒரு உயர் உயிரினமும் இருந்திருக்க வாய்ப்பில்லை. அதனால் தமிழ் இது ஒரு உவமைக்காகத்தான். தமிழ் தொன்மையான மொழி என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. பூமியில் மனிதன் பிறக்காமலே இருந்தால் சிவனும் இல்லை ஏசுவும் இல்லை அல்லாவும் இல்லை. அதனால் கடவுள் இல்லை என்று அர்த்தமில்லை. மொத்த பிரபஞ்சத்தையும் ஒரு உருவகப்படுத்தும் விதமாகத்தான் கடவுளை அறிய வேண்டும். இதில் வால்பையனும் அடக்கம். பூர்ணமாத் பூர்ணமச்ய என்று ஒரு ஸம்ஸ்க்ரித சுலோகம் உண்டு. அதன்படி முழுமையிலிரிந்து பிரிந்ததும் முழுமைதான்.

Saravanan Trichy said...

Sri ramesh sadasivam...
//பகுத்தறிவென்று சொல்லிவிட்டு இயற்கையின் பின்னிருக்கும் திட்டமிடலை நீங்கள் ஏன் புறக்கணிக்கிறீர்கள்?//
நான் இயற்கையின் திட்டமிடுதலை கண்டு வியந்திருக்கிறேன். ஆனால் அதன் பின்னிருப்பதை என்று சொல்லும் போது ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

திரு,கிருஷ்ணமூர்த்தி அவர்கள் சொன்னது போல "கடவுளை எதிர்பதால் அவரை ஒன்றும் கோபித்துக் கொள்ளப் போவதில்லை; அதே மாதிரி கடவுளுக்காக வக்காலத்து வாங்கிக் கொண்டு இங்கே பின்னூட்டம் இட்டவர்களுக்குப் பரிசு தரப் போவதும் இல்லை".
so அவரை வணங்குவதால் எனக்கு எந்தப் பயனும் இல்லை வணங்காததால் எந்த தீமையும் இல்லை. ஆனால் உங்களை வணங்க கூடாது என்று வற்புறுத்த மாட்டேன்..

Admin said...

உங்கள் விவாதம் தொடரட்டும் நண்பர்களே ... தொடருங்கள்...

குரு said...

என்னை பொறுத்தவரை,

மதம், இறைவன் போன்றவை மனிதனால் இடைக்காலத்தில் உருவாக்கப்பட்டது. இவை மனிதன் செய்யும் நன்மை, தீமைகளுக்கான எல்லை. ஒரு மனிதன் வாழ்கையில் நன்மை செய்தால் மோட்சத்தை அடைவான், தீமை செய்தால் நரகத்தை அடைவான் என்பது போல. இவை மனிதனால் மனிதனுக்காக உருவாக்கப்பட்டவை.

அநேகமா நானும் வால்பையனும்
ஸ்ரீ ஸ்ரீ அம்மா பகவான் தீட்சை பெற்றால் எல்லாம் சரி ஆய்டும்னு நெனைக்கறேன்.

Admin said...

//குரு கூறியது...
என்னை பொறுத்தவரை,

மதம், இறைவன் போன்றவை மனிதனால் இடைக்காலத்தில் உருவாக்கப்பட்டது. இவை மனிதன் செய்யும் நன்மை, தீமைகளுக்கான எல்லை. ஒரு மனிதன் வாழ்கையில் நன்மை செய்தால் மோட்சத்தை அடைவான், தீமை செய்தால் நரகத்தை அடைவான் என்பது போல. இவை மனிதனால் மனிதனுக்காக உருவாக்கப்பட்டவை.

அநேகமா நானும் வால்பையனும்
ஸ்ரீ ஸ்ரீ அம்மா பகவான் தீட்சை பெற்றால் எல்லாம் சரி ஆய்டும்னு நெனைக்கறேன்.//



இந்து மதம் ஆதியும் அந்தமும் இல்லாதது என்று நான் சொல்கிறேன். மதமும், இறைவனும் மனிதனால் தோற்றுவிக்கப்பட்டது என்றால் எப்போது தோற்றுவிக்கப்பட்டது.

அப்போ மனிதனைத் தோற்று வித்தது யார் சொல்லுங்கள்...

supersubra said...

காலை பதிவில் விட்டு போனது

யாருக்கு தெரியும் யார் சொல்ல முடியும்
இவை எல்லாம் எப்படி வந்தன எப்படி உருவாகின என்று
கடவுளர்கள் கூட பின்னால் வந்தவர்கள் தான்
யாருக்கு தெரியும் இந்த தோற்றம் எப்பொழுது நடந்தது என்று

ரிக் வேதத்திலிருந்து பிரபஞ்ச தோற்றம் பற்றிய ஒரு பாடலின் வரி


http://supersubra.googlepages.com/

supersubra said...

அண்டப்பகுதியின் உண்டைப்பிறக்கம்
அளப்பருந்தன்மை! வளப்பெரும் காட்சி!
ஒன்றனுக்கொன்று நின்றெழில் பகரின்,
நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்தன!
இல்நுழை கதிரின் நுண்ணணுப் புரையச்
சிறியனவாகப் பெரியோன் தெரியின்....."

திருவாசகத்திலிருந்து ஒரு பாடல்

About Big Bang Theory

கிருஷ்ண மூர்த்தி S said...

supersubra சொன்னது:
/மொத்த பிரபஞ்சத்தையும் ஒரு உருவகப்படுத்தும் விதமாகத்தான் கடவுளை அறிய வேண்டும். இதில் வால்பையனும் அடக்கம்/

ஐயா வாங்க! நேத்து ராத்திரி தான் நம்ம வால்சுக்கு, சிறந்த சரவேடிப் பதிவர் விருது கொடுத்து ஒரு பதிவு போட்டேன்! அந்தப் பதிவுல, நீங்க வால்பையனை வெகுவா ரசித்துக் கொண்டிருக்கும் படமும் இருக்கிறது.

நீங்க சொல்கிற ஸமுஸ்கிருதமெல்லாம் வால்பையனிடம் எடுபடாது. ஏனென்றால், அவர் தன்னைக் கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே "வாலொடு" முன்தோன்றிய மூத்த குடியாக நினைத்துக் கொண்டிருக்கிறார்:-)

அவர் லாஜிக்கே தனி! சாம்பிளுக்கு,
/இந்து மதம் ஆதியும், அந்தமும் அற்ற ஒன்றா? அப்போ மற்ற மதங்களும் அப்படி தானே இருக்க வேண்டும்!

கிருஸ்துவம் 2000 வருடம்
இஸ்லாம் 1700 வருடம்

இதுமட்டும் எப்படி!? /

இந்து மதம் என்று பரவலாக அழைக்கப் படுகிற தத்துவ தரிசனம், நாத்திகம் பேசும் சாங்கியம் உட்பட
பல்வேறு கூறுகளை உள்ளடக்கியது. இவை என்று பிறந்தவை என்பதை உறுதியாகச் சொல்ல முடியாவிட்டாலும், மிகத் தொன்மையானவை.இவை காட்டும் இறைத்தன்மையைத் தான் ஆதியும் அந்தமும் இல்லாதது என்று சொல்லப்பட்டதே தவிர, இந்தத் தத்துவ மரபில் வந்த ஆசிரியர்கள், அவர்களைப் பின்பற்றி எழுந்த சமயங்களையும் ஆதி அந்தமில்லாததாக சொல்லவில்லை.அப்படி அவருக்கு யாராவது சொல்லியிருந்தால், அல்லது அப்படி வால்பையனாகப் புரிந்து கொண்டிருந்தால், அது முழுத் தவறு.

கிறித்தவம், இஸ்லாம் முதலான மதங்கள், வரலாற்றின் மிக சமீபத்தில் எழுந்தவை, அதுவும் கூட யூதர்களின் பழைமையான நூலாகிய பழைய ஏற்பாட்டை அடிப்படையாகக் கொண்டு, சில பொதுமைத் தன்மைகளை, முன்னவர்களைக் கொண்ட ஆப்ரகாமைட் மதங்கள் என்று ஒரே சொல்லால் குறிக்கப் படுபவை.

ஒரு கருத்தை மறுப்பதற்கும், நிராகரிப்பதற்கும் எவருக்குமே உரிமை உண்டு. மறுப்பதற்கு முன்னால், தான் மறுக்கும் கருத்து என்ன என்பதைப் பற்றிய தெளிவு, அதில் எந்த இடத்தை, எதனால் மறுக்கிறேன், மாறுபடுகிறேன் என்பதையும் விளக்கிச் சொல்லத் தெரிந்திருக்க வேண்டும்.

எடுத்தேன் கவிழ்த்தேன் என்கிற ரீதியில், பொத்தாம்பொதுவாகச் சொல்லிவிட்டுப் போகிற மறுப்புக்களைப் பார்த்தால், வேடிக்கையாகவும் விநோதமாகவும் தான் இருக்கிறது!

வால்பையன் said...

//அநேகமா நானும் வால்பையனும்
ஸ்ரீ ஸ்ரீ அம்மா பகவான் தீட்சை பெற்றால் எல்லாம் சரி ஆய்டும்னு நெனைக்கறேன். //

அவ்வ்வ்வ்வ்வ்

என்ன கொடும சார் இது!

இன்னைக்கு ஈரோட்ல ஒருத்தன்! தான் தான் ஓம் சக்தின்னு காலை கழுவி அந்த தண்ணிய வித்திகிட்டு இருக்கான்!
எனக்கு வேற தீட்சை தரணும்னு சொல்றிங்க!

பணம் அதிகமா செலவாகும் நண்பா!
இன்னைக்கு எல்லாமே காஸ்ட்லி கடவுள் தான்!

Post a Comment