Monday 31 August 2009

தமிழர்கள் என்பதன் அடையாளம் என்ன?

எனது வலைப்பதிவு திருடப்பட்டபோது எனக்கு தெரியப்படுத்திய மற்றும் உதவிய அத்தனை நண்பர்களுக்கும் எனது நன்றிகள் பல.


எனது வலைப்பதிவிலே தமிழ் மொழி தொடர்பாக இடம் பெற்ற விவாதங்கள் மூலம் எனக்கு பல சந்தேகங்களை ஏற்படுத்தியது. என் மனதுக்குள் நானே கேட்டுக்கொண்ட கேள்விகளை உங்களிடம் கேட்கின்றேன்.

ஒரு இனத்தை பிரதிநிதித்துவப் படுத்துவது (அடையாளப் படுத்துவது) என்ன?. ஒருவரை எதனை வைத்துக்கொண்டு இவர் இந்த இனம்தான் என்று மதிப்பிடுகின்றோம்?.

தமிழர்கள் என்று சொன்னால் தமிழர்கள் என்று சொல்வதனை எதனை வைத்துத் தீர்மானிக்கின்றோம். என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. சரி தாய் மொழி தமிழாக இருக்க வேண்டும் என்று சொன்னால் நாம் தமிழ் பேசுகிறோமா? எத்தனைபேர் தமிழை மறந்து இருக்கின்றார்கள். நான் கண்டிருக்கின்றேன். இனறு கொழும்பிலே எத்தனை தமிழ் பிள்ளைகள் தமிழ் தெரியாது. சிங்களம் ஆங்கிலம் மட்டும் தெரிந்து இருக்கின்றார்கள்

தாய் மொழி என்பது எது? தாய் பேசும் மொழியா அப்படி என்றால் எனது தாய் கொழும்பிலே சிறு வயது முதல் இருந்தவர் தமிழ் என்பதே தெரியாது தமிழ் ஒரு நாள் கூட பேசியதில்லை என்றால் என் தாய் மொழி என்ன?


இன்று தமிழ் மொழி தெரியாமல் கொழும்பிலே இருக்கும் அந்த பிள்ளைகளின் பெற்றோரில் சிலருக்கு தமிழ் மொழி தெரியாது அப்போ இவர்களின் தாய் மொழி என்ன?

தமிழர்களுக்கு என்று சில கலாசாரங்கள் இருக்கின்றன என்று சொல்லப்போகின்றீர்ளா? அப்படியானால் தமிழர்கள் என்பதனை அடையாள படுத்தும் அந்தக் கலாசாரங்கள் என்ன? அவை கடைப்பிடிக்கப் படுகின்றனவா? என்பதே எனது கேள்வி.



ஒரு இனத்தை பிரதிநிதித்துவப் படுத்துவது மொழியா, கலாசாரமா, அல்லது வேறு ஏதாவதா? அவை சரியாகக் கடைப்பிடிக்கப் படுகின்றதா? தமிழர்களை பிரதி நிதிப் படுத்துவது என்ன?


உங்கள் பதில்கள் பின்னூட்டங்களாக வரட்டுமே
read more...

Saturday 29 August 2009

கவலையோடும், மனதில் உறுதியோடும் எழுதுகிறேன்.

இன்று பெயரில்லாதவர்களின் (அனானிகளின்) தொல்லை பதிவர்களுக்கு அதிகரித்துவிட்டது. அதிலும் பல நாட்களாக எனக்கு இந்த பெயரில்லாதவரின். தொல்லை அதிகமாகிக் கொண்டே வருகின்றது.

ஆரம்பத்தில் என்னை தாக்கி தேவையற்ற சொத பியார்யோகங்களால் என்னைத் தாக்கி எழுதியவர். நான் வேறு வலைப்பதிவுகளுக்கு போடும் பின்னூட்டத்துக்கும். பெயரில்லாதவர் என்ற பெயரிலே தேவையற்ற விளக்கங்களை கொடுத்துக்கொண்டு வந்தார்.

இன்று அவரின் தொல்லை என் வலைப்பதிவிலும் கை வைத்துவிட்டது. நான் அதிகமாக நேசிக்கும் ஒருவர் பதிவர் லோஷன் அண்ணா. அதே போல் எனக்கு அண்மையில் அறிமுகமானவர்தான் நண்பர் புல்லட் அவர்கள். இவரின் நகைச்சுவை பதிவுகள் எனக்கு பிடிக்கும்

லோஷன் அண்ணாவின் வலைப்திவிலே நேற்று எனது பெயரிலே நண்பர் புல்லட் அவர்களைப் பற்றி தேவையற்ற விதத்திலே பின்னூட்டம் இடப்பட்டு இருந்தது. அதனைப் பார்த்ததும் எனக்கு கவலைதான் வந்தது. இப்படி பலருக்கு எனது பெயரிலே பின்னூட்டம் இடப்பட்டிருக்கின்றது.

அதுமட்டுமல்லாமல் நேற்று இரவு சிறிது நேரம் எனது வலைப்பதிவைக் காணவில்லை (open ஆகவில்லை) நான் அதனை பெரித்து படுத்தவில்லை. இன்று காலை எனது மின்னஞ்சலைப் பார்த்தேன் பலர் மின்னஞ்சல் அனுப்பி இருந்தார்கள். எனது வலைப்பதிவு open ஆகவில்லை என்றும் அதற்குப் பதிலாக http://www.tvs50110.com/ திறக்கப் படுவதாகவும் மின்னஞ்சல் வந்திருக்கின்றது.

அந்த நபர் (அனானி) அத்தோடு எனது பெயரிலே பின்னூட்டம் இடும் பின்னூட்டங்களை சொடுக்கும்போது (கிளிக்) எனது வலைப்பதிவே நேரடியாகத் open ஆகிறது. நான் எந்த தொழினுட்ப அறிவும் இல்லாதவன். ஆரம்பத்தில் நான் ஆரம்பத்திலே வைத்து இருந்த வலைப்பதிவைத் தொலைத்தவன். (மாயமாக மறைந்தது).

ஏன் இந்த வேலைகளைச் செய்கின்றார்கள் நேரடியாகச் சொல்லலாம் நான் எந்த விமர்சனங்களையும் ஏற்றுக்கொள்பவன். ஆனால் சவால் என்று வருகின்றபோது சவால்களை என் வெற்றியின் படிக்கற்களாக மற்ற நினைப்பவன். யாராக இருந்தாலும் என்ன பிரட்சனை என்பதனை நேரடியாகச் சொல்லுங்கள் சரியான விமர்சனங்களாக ஏற்றுக்கொள்ளக்கூடியவையாக இருந்தால் ஏற்றுக்கொள்கிறேன் . அவர்களின் இந்த நடவடிக்கைகள் என்னை இன்னும் எழுதவே தூண்டும் என்றும் எழுதிக்கொண்டே இருப்பேன்.

நான் வலைப்பதிவு தொடர்பில் தொழினுட்ப அறிவு குறைந்தவன். என் வலைப்பதிவு அடிக்கடி open பண்ண முடியாமல் போவதற்கும். எனது வலைப்பதிவினை open பண்ணும்போது வேறு வலைப்பதிவுகள் open பண்ணப்படுவதட்கும். மற்றவர்கள் என் பெயரிலே பின்னூட்டமிடுவதத்கும் என்ன செய்யலாம் என்றும் அதனைத் தடுப்பதற்கும் உரிய வழிகளை அறியத்தரும் படி அனைத்து வலைப்பதிவர்களிடமும் அன்பாக வேண்டிக்கொள்கின்றேன்.

எனது வலைப்பதிவைக் காப்பாற்ற உங்கள் உதவியினை நாடும்


உங்கள் அன்பின்...

சந்ரு
read more...

கேதார கௌரி விரதத்தின் மகிமை கூறும் பாடல்களை பதிவிறக்கிக்கொள்ளலாம்.

இந்துக்களின் விரதங்களிலே சிறப்பான இடத்தினைப் பெறும் விரதங்களில் ஒன்றான கேதார கெளரி விரதத்தின் மகிமையினை கூறும் இறுவட்டு ஒன்றினை எமது கலைஞர்களின் பங்களிப்போடு வெளியிட்டு இருந்தேன்.
பாடல்கள் நல்ல வரவேற்பினைப் பெற்றிருந்தன. அப்பாடல்கள் நீங்களும் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்

கதைச் சுருக்கம்
திருக்கைலாச மலையிலே பரமசிவன், பார்வதி சமேதராக வீற்றிருந்த வேளையிலே. தேவர்களும், முனிவர்களும் அங்கு சென்று இருவரையும் சுற்றி வந்து வணங்கினர். அந்த வேளையிலே அங்கு வந்த பிரிங்கி முனிவர விகடக் கூத்தொன்றை ஆடி அங்கிருந்தவர்களை மகிழ்ச்சி அடையச் செய்த பின்னர். உமாதேவியை விலக்கி விட்டு சிவபெருமானை மட்டும் சுற்றி வந்து வணங்கினர். உமாதேவியை அலட்சியம் செய்த முனிவரின் உடலிலிருந்த சக்தியை உமாதேவி எடுத்துக் கொண்டதனால் பிரிங்கி முனிவர் சபையிலே சோர்ந்து வீழ்ந்தார்.

சிவபெருமான் பிருங்கி முனிவரிடம் தடி ஒன்றைக் கொடுத்து அதனை ஊன்று கோலாகக் கொண்டு நடந்து செல்வதற்கு அனுக்கிரகம் செய்தார். இதனால் ஆத்திரமும் அவதானமும் அடைந்த உமாதேவி சிவபெருமானிடம் கோபித்துக் கொண்டு பூவுலகுக்கு வந்தார்.

ஒரு வில்வ மரத்தடியில் உமாதேவி வீற்றிருந்தார். உமாதேவியின் வருகையால் அந்த வனம் புதுப்பொலிவு பெற்றது. அந்த வனத்திலே வசித்த கௌதம முனிவர் திடிரென ஏற்பட்ட மாற்றத்துக்கான மாற்றத்துக்கான காரணத்தை அறிய முற்பட்டபோது. உமாதேவியைக் கண்டு நடந்த சங்கதிகளை அறிந்து கொண்டார்.

புரட்டாதி மாதம் சுக்கில பட்ச தசமி தொடக்கி இப்பசி மாதம் கிருஷ்ண பட்சம் தீபாவளி அமாவாசை வரையுள்ள கேதரேசுரர் விரத மகிமை பற்றியும் அதனை அனுஷ்டிக்கும் முறைமை பற்றியும் விளக்கமாகக் கூற அம்மை விரதம் நோற்று அர்த்தநாரீஸ்வரர் வடிவமாகினார்.
பதிவிறக்கங்கள்...
read more...

Wednesday 26 August 2009

கடவுளின் பெயரால் கொடுமைகள்.

இந்த இடுகையானது எந்த ஒரு மதத்தினையும் தரக்குறைவாக செல்வதாக எவரும் நினைக்க வேண்டாம். எனது வலைப்பதிவிலே கடவுள் தொடர்பாக இடம் பெற்ற விவாதத்திலே வால்பையன். மற்றும் பலரினால் சில விடயங்கள் பேசப்பட்டன. அதன் தொடராகவே இந்தப் பதிவு.



மதங்கள் மக்களை நல்வழிப் படுத்திக்கொண்டு இருக்கின்றன. மதங்களுக்கென சில கட்டுப்பாடுகள், நடைமுறைகள், சம்பிரதாயங்கள் என்று இருக்கின்றன. அவற்றை மனிதன் கடைப்பிடிப்பதன் மூலம் நல்வழிப் படுத்தப் படுகிறான்.

இன்று மதங்கள் மக்களுக்கு நல்ல கருத்துக்களைச் சொல்கின்றன. மதக் கோட்பாடுகள் சம்பிரதாயங்கள் மூலமாக நல்ல கருத்துக்கள் சொல்லப் பட்டாலும் இதனை வைத்து சிலர் பிழைப்பு நடாத்திக்கொண்டு இருக்கின்றனர்.

தாங்கள் பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக தமக்கு தெரிந்த மந்திரம், தந்திரம், மாயாஜாலம், பொய்ப் பிரச்சாரங்களை எல்லாம் செய்து கொண்டு இருக்கின்றனர். இதனால் இன்று மக்களிடம் இருந்த சமய தத்துவங்கள் மீதான நம்பிக்கை குறைந்து வருவதற்கான காரணங்களாகும்.

அன்று முதல் இன்று வரை மதம் சார்ந்த பல மூட நம்பிக்கைகள் மக்கள் மீது விதைக்கப்பட்டிருக்கின்றன. இந்த மூட நம்பிக்கைகள் எதற்காக வந்தது என்பதனை அறியாத பலரும் அதனைப் பின்பற்றி வருவதோடு அதனை எதிர்ப்போரை ஒரு மதத்துக்கு எதிரானவன் என்று சொல்லும் அளவுக்கு சில மூட நம்பிக்கைகளில் மக்கள் நம்பிக்கை வைத்து இருக்கின்றனர்.

கடவுள் இருக்கின்றானா என்ற விவாதத்திலே கருத்துக்களைச் சொன்ன வால்பையன் போன்றோரின் மூட நம்பிக்கை தொடர்பிலான கருத்துக்களை ஏற்றுக்கொள்ள வேண்டியதாக இருந்தது. (உடன் கட்டை ஏறுதல் போன்றவை) நானும் ஆரம்பத்தில் சில மூட நம்பிக்கைகளைப் பார்த்தபோது. மதத்தின் மீதுதான் வெறுப்பு வந்தது.

பின்னர் இந்து சமய தத்துவங்களையும், மூட நம்பிக்கைகள் எப்படி தோற்றம் பெற்றன என்று அறிந்தபோதுதான். இந்து மத தத்துவங்களின் ஆழ்ந்த கருத்துக்களை அறிந்து கொண்டேன். இந்து மத தத்துவங்கள் மீதான நம்பிக்கையும் அதிகரித்தது.

உடன் கட்டை ஏறுதல் என்பதனை சிலர் இந்து சமயம் சார்ந்ததாக பார்க்கின்றனர். ஆனால் ஒரு சிலரால் ஆரம்ப காலங்களிலே பரப்பப்பட்ட மூட நம்பிக்கைதான். எல்லோரையும் ஒரு விடயத்தினைப் பின்பற்ற வைக்க வேண்டுமாக இருந்தால் கடவுளைச் சொன்னால் எல்லோரும் கடவுளின் பயத்திலே பின்பற்றி விடுவார்கள். அவ்வாறுதான் மதத்தின் மீது பழியினைப் போட்டு பரப்பப்பட்டவையே இந்த உடன் கட்டை ஏறுதல். இந்து மதத்திலே உடன் கட்டை ஏற வேண்டும் என்று எங்கேயும் சொல்லப்பட்டதாக நான் அறியவில்லை.

இன்று மூட நம்பிக்கை என்று எல்லோரும் அதனை விட்டு விட்டோம். பெண்கள் மட்டும் ஏன் உடன் கட்டை ஏற வேண்டும் என்று சொன்னார்கள் ஆண்களும் உடன் கட்டை ஏறி இருக்கலாம் தானே. இதுதான் அன்று அன்று இருந்த பெண் அடிமையும் ஆண் ஆதிக்கமும்.

அடுத்து ஒரு கழுதைக்கும் மனிதனுக்கும், தவளைக்கும் மனிதனுக்கும் திருமணம் செய்து வைத்தால் நினைத்தவை நடை பெரும் எனறு இந்து மதத்திலே எங்கேயும் சொல்லப்படவில்லை இதுவும் மூட நம்பிக்கை மதங்களின் மீது பழிபோடப்பட்டவையே.

உயிர்களைப் பலிகொடுத்தல் என்பதும் மதத்தின், கடவுளின் மீது பழியைப் போட்டு பரப்பப்பட்ட ஒரு மூட நம்பிக்கைதான் இன்று இது எல்லாம் மூட நம்பிக்கை எனறு தூக்கி எறிந்து விட்டோம்.ஆனால் இன்று சில இடங்களில் பயன் படுத்தப் படுவது வருத்தப் பட வேண்டியதே. இது போன்று பல மூட நம்பிக்கைகளை சொல்லலாம்.


இந்து மதத்தினைத் தவிர ஏனைய மதங்களிலே ஒரு மத போதகராக, ஆசானாக வர வேண்டுமாக இருந்தால் அந்தந்த மதம் சார்பாக படித்து தகுதியானவராக இருக்க வேண்டும். ஆனால் இந்து மதத்தைப் பொறுத்தவரை அப்படி இல்லை இன்று மணியினைக் கையில் எடுத்த எல்லோருமே பூசாரிகளாகவும், குருக்களாகவும் தம்மை மகுடம் சுட்டிக் கொள்கின்றனர். இந்து மதத்தைக் கொல்கின்றனர்.

தேவாரம் என்றால் என்ன என்று தெரியாதோர் கூட இன்று பூசாரிகளாக இருக்கின்றனர். இவர்களாலேயே இந்து மத தத்துவங்களை தவறான முறையிலே மக்களுக்கு பரப்புகின்றனர். இவர்களால் இந்து மதம் மட்டுமல்ல இந்து மதம் தொடர்பாகவும் குருமாருக்கான படிப்புக்களையும் படித்து வந்தவர்களின் பெயரும் பாதிக்கப் படுகின்றது.

இன்று தாங்கள் சுக போக வாழ்க்கை வாழ வேண்டும் என்பதற்காக பல ஆசாமிகள் உருவாகிக்கொண்டு இருக்கின்றனர். அவர்கள் மக்களை பொய்ப் பிரச்சாரங்களின் மூலம் மக்களை தீய வழிகளுக்கு திசை திருப்பிக் கொண்டு இருக்கின்றனர். இவர்களாலும் இந்து சமய தத்துவங்கள் திரிவு படுத்தப் படுகின்றன. கடவுள் அப்படிச் செய்கிறார் இப்படிச் செய்கிறார் என்று தமது மாய, மந்திர, தந்திரங்களால் மக்களை தம் பக்கம் இழுக்கின்றனர். அவர்களது மாய விளையாட்டுக்களும் கடவுள் மீதான அளவுக்கு அதிகமான பிரச்சாரங்களும் பலருக்கு மதத்தின் மீது சந்தேகம் வர ஆரம் பிக்கின்றது. அது மதத்தின், கடவுளின் மீதான நம்பிக்கையை குறைக்கின்றது.

இன்று சமயம் சார்ந்ததாக சொல்லப்படுகின்ற பல நம்பிக்கைகள் சிலரால் மக்கள் மீது திணிக்கப்பட்டு மதத்தின் மீது பழியைப் போடுபவைகளாகவே இருக்கின்றன. ஆனால் உண்மையான இந்து மத தத்துவங்களுக்கு, சம்பிரதாயங்களுக்கு உண்மையான காரணங்கள் இருக்கின்றன. அவை மக்களை நல்வழிப் படுத்துகின்றன.

உங்கள் பிரதேசங்களிலே இருக்கின்ற மூட நம்பிக்கைகள் பற்றியும் பின்னூட்டமிடுங்கள். அவற்றை மற்றவர்களும் அறிந்து கொள்ளக் கூடியதாக இருக்கும்.

read more...

இலங்கை வலைப்பதிவர்கள் சந்திப்பின் பின் நடப்பதென்ன.

இலங்கை வலைப் பதிவர் சந்திப்பு சிறப்பான முறையின் நடந்து முடிந்திருக்கின்றது. இன்னும் பதிவர் சந்திப்புத் தொடர்பான பரபரப்பான செய்திகளை தாங்கிய இடுகைகளாகவே வலைப்பதிவுகளில் காண முடிகின்றது.

இன்று அதிகமான வலைப்பதிவுகளிலே இலங்கை வலைப்பதிவர் சந்திப்பு தொடர்பான செய்திகளாகவும் வாழ்த்துக்களாக்கவுமே இருக்கின்றன. வெளிநாட்டு வலைப்பதிவர்கள் கூட இச் சந்திப்பு தொடர்பாக தமது வலைத்தளங்களிலே இடுகையிட்டு இருப்பது இச் சந்திப்பின் வெற்றியையே காட்டுகின்றது.


எனது இந்த இடுகை மூலமாக என் வலைப்பதிவுக்கு வரும் நண்பர்களுக்காக சந்திப்பின் பின்னரான செயற்பாடுகள் பற்றிய சில விடயங்களை பகிர்ந்து கொள்கின்றேன். இன்று பெயரில்லாதவர்களின் (அனானி) தொல்லை இலங்கைப் பதிவர்களுக்கு அதிகரித்து இருக்கின்றது. அவர்களின் தொல்லை என்னையும் விட்டபாடில்லை. ஒரு பெயரில்லாதவர் (அனானி) எனக்கு பின்னூட்டமிட்டு இருந்தார் சந்திப்பிலே என்ன சாதித்தீர்கள் என்றும் தமிழர்களை இழிவு படுத்தும் வார்த்தைகளையும் பயன்படுத்தி இருந்தார். பெயரில்லாதவர்களின் பின்னூட்டங்களை வெளியிட்டு விளக்கம் கொடுக்கும் நான் வெளியிட முடியாத வார்த்தைப்பிரயோகங்களினால் நான் அப்பின்னூட்டத்தை வெளியிடவில்லை. அவரும் இந்த இடுகை மூலம் என்ன சாதித்தோம் என்பதனை அறிந்து கொள்வார். (அறிந்தும் என்ன செய்யப்போகிறார்).

எனக்கு இருந்த வேலைகளை எல்லாம் ஒரு பக்கம் வைத்துவிட்டு வலைப்பதிவுகளிலே பதிவர்கள் சந்திப்புத் தொடர்பாக என்ன சொல்லி இருக்கிறார்கள் என்று ஆவலோடு பார்த்து முடித்தாகிவிட்டது. இன்னும் எழுதுவார்கள். எல்லோருமே வாழ்த்துக்களும் நல்ல விடயங்கள் பேசப்பட்டதாகவும் சில விடயங்கள் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் சந்திப்பினை புகழ்ந்தே இருக்கின்றார்கள். இதுவே சந்திப்பின் வெற்றியினை காட்டுகின்றது.


யாழ்தேவி பற்றிய விவாதம் தேவையற்றது என நினைக்கின்றேன். யாழ் என்பதனை பிரதேச வாதமாக எடுத்துக்கொள்வது நல்லதொரு விடயமல்ல. பதிவர்கள் இதுபற்றி பேசுவதனைவிட வேறு நல்ல விடயங்கள் பற்றி பேசுவது சிறந்ததே. யாழ்தேவியின் நிர்வாகம் இது பற்றி கவனம் செலுத்தட்டுமே. பதிவர்கள் நாம் ஏன் கருத்து மோதல்களில் ஈடுபடுவது.

சந்திப்பிலே இந்தியத் தமிழிலே எழுவது தொடர்பாக பேசப்பட்டது. இலங்கையிலே பேசப்படுகின்ற தமிழ் மொழியினை வேறு நாடுகளிலே வாழும் தமிழர்களே விரும்புகின்றனர். நல்ல பேச்சுத்தமிழ் என்று சொல்கின்றனர். இந்தியத் தமிழர்களே இலங்கைத் தமிழை விரும்புகின்றனர். பதிவுகளிலே இலங்கைத் தமிழிலும், வேற்று மொழிக் கலப்பு இல்லாமலும் பதிவிடுவதோடு பிரதேசபேச்சுத்தமிழை தவிர்ப்பதும் நல்லதே.

சந்திப்பின் பின் பல செயற்பாடுகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. இதிலே புல்லட், வந்தி, ஆதிரை, லோஷன் அண்ணா, இன்னும் பல நண்பர்கள் ஈடுபட்டு வருகின்றனர் அவர்களுக்கு இலங்கைப் பதிவர்கள் அனைவரும் நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளோம்.

இலங்கைப் பதிவர்கள் அனைவரும் ஒன்றாகத் திரட்டப்பட்டு பட்டியல் படுத்தப் பட்டுள்ளது. பட்டியல்களை

http://enularalkal.blogspot.com/2009/08/blog-post_7197.html , http://enularalkal.blogspot.com/2009/08/blog-post_7197.html

இரு பதிவுகளிலும் பெற்றுக்கொள்ள முடியும். பட்டியல் படுத்தப்பட்டவர்களிலே வலைப்பதிவு குறிப்பிடப் படாதவர்கள் தங்கள் வலைப்பதிவுகளை. புல்லட், வந்தி. ஆதிரை, லோஷன் யாரிடமாவது ஒருவருடன் தொடர்பு கொண்டு தங்கள் வலைப்பதிவை இணைத்துக் கொள்ள முடியும். சந்திப்பில் கலந்து கொள்ளாதவர்களும் இவர்களில் ஒருவரை தொடர்புகொண்டு தங்களையும் இணைத்துக்கொள்ள முடியும்.


பதிவர் சந்திப்பின் தீர்மானத்துக்கு அமைய கௌபாய் மது அவர்களினால் இலங்கைத் தமிழ் வலைப்பதிவர் குழுமம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இது பாராட்டப்பட வேண்டிய விடயமே. இதில் இணைந்து கொள்வதன் மூலம் பதிவர்கள் பல நன்மைகளை அடைய முடியும். இக்குழுமத்தில் இணைய http://groups.google.com/group/srilankantamilbloggers எனும் முகவரிக்குச் சென்று தங்களை இணைத்துக் கொள்ளலாம்.


இப்பவே அடுத்த சந்திப்புக்குரிய ஏற்பாடுகள் இடம் பெறுவதாக அறிய முடிகின்றது. நாட்டின் பல பாகங்களிலும் இந்த சந்திப்புக்கள் இடம்பெற இருக்கின்றன. அடுத்த சந்திப்புக்கள் இதனைவிட வெற்றிகரமாக அமையும் என்ற நம்பிக்கை எல்லோரிடமும் இருக்கிறது.


நானும் ஏதாவது செய்ய வேண்டுமே என்ற ஆதங்கம் இருந்தது. சந்திப்பிலே கலந்து கொள்ளவும் முடியவில்லை. சரி இலங்கை தமிழ் வலைப்பதிவர்களின் வலைப்பதிவுகளை பட்டியலிடும் ஒரு வலைப்பதிவினை ஆரம்பிக்கலாமே. என்ற எண்ணம் தோன்றியது. இலங்கை தமிழ் வலைப்பதிவர்கள் எனும் வலைப்பதிவினை ஆரம்பித்துவிட்டேன். http://slnanparkal.blogspot.com/ இதிலே இணைக்கப்படாத நண்பர்கள் பின்னூட்டம் மூலம் தெரியப்படுத்தினால் இணைத்துக்கொள்ள முடியும்


சந்திப்பின் பின்னர் தொடரும் நடவடிக்கைகள் தொடர்பான விடயங்களைபெற
லோஷன் : arvloshan@gmail.com
புல்லட் : bullettheblogger@gmail.com
வந்தி : vanthidevan@gmail.com
ஆதிரை : caskaran@gmail.com

அல்லது http://groups.google.com/group/srilankantamilbloggers செல்லுங்கள்.


வலைப்பதிவர் சந்திப்பு பல வெற்றிகளைப் பெற்று இருக்கின்றது. இலங்கை தமிழ் வலைப் பதிவர்கள் சாதிப்பார்கள் என்கின்ற நம்பிக்கை பிறந்திருக்கின்றது.


சந்திப்பினை ஏற்பாடு செய்த புல்லட், ஆதிரை, லோஷன் அண்ணா , வந்தி ஆகியோருக்கும் கௌபாய் மது மற்றும் ஏனைய நண்பர்களுக்கும் நன்றிகள் பல

தகவல்களுக்கு நன்றிகள் புல்லட் மற்றும் வந்தி
read more...

Monday 24 August 2009

பேச்சுத் தமிழுக்கு இனிமை சேர்க்கும் "கா"

ஒவ்வொரு பிரதேசத்துக்கும் சில தனித்துவமான. பேச்சுத் தமிழ் இருக்கின்றது. ஒருவர் பேசுகின்ற தமிழை வைத்தே அவர் எந்தப் பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்று கண்டு பிடித்து விடலாம். அதிலும் கிராமப் புறங்கள் என்றால் சொல்லவேண்டியதே இல்லை. சில பேச்சுத் தமிழ் சொற்கள் இன்று மறைந்து கொண்டு வந்தாலும் இன்றும் பல சொற்கள் பயன்பாட்டிலே இருப்பதோடு அச் சொற்கள் பேச்சுக்கு இனிமை சேர்ப்பதாக இருக்கின்றன.

மட்டக்களப்பைப் பொறுத்தவரை சில சொற்களோடு "கா" சேர்த்து பயன் படுத்தும் வழக்கம் இருக்கின்றது. (ஏனைய பிரதேசங்களிலும் இருக்கலாம் இருந்தால் பின்னூட்டங்களில் தரலாம் நண்பர்களே)

உதாரணமாக நாம் என்ன நடக்கிறது என்று கேட்பதனை என்னாகா நடக்கிறது என்று பேசுவார்கள். யார் - யாருகா, எப்போ - எப்போகா, வா - வாகா, தெரியுமா - தெரியுமாகா, சாப்பிட்டாச்சா - சாப்பிட்டாச்சாகா போன்று "கா" சேர்த்து பயன் படுத்தப்படுகிறது.

இங்கே பேசுகின்ற போது ஆணுடனோ, பெண்ணுடனோ பேசுவதாக இருந்தாலும் கா போட்டே பேசுகின்றனர். இப்போது இவ்வாறு கா போட்டுப் பேசுவது இளைய சமுதாயத்திடம் குறைவான பயன்பாட்டில் இருந்தாலும். வயது வந்தவர்களாலும், கிராமப்புறங்களிலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

என்ன என்பதற்கும் என்னகா என்பதற்கும் இடையிலே ஒரு அன்பு அல்லது பாசப்பிணைப்பு வித்தியாசங்கள் இருப்பதாக உணரப்படுகின்றது. என்ன என்பதனைவிட என்னகா என்பது பேசுபவர்களுக்கிடையே ஒரு நெருக்கத்தினை ஏற்படுத்துகின்றது. என்ன என்பது நாம் பேசும் தொனியிலே வித்தியாசப் படுகிறது. என்ன என்று கோபமாகவும் கேட்கலாம் சந்தோசமாகவும் கேட்கலாம். என்னகா எனும்போது பெசுபவர்களுக்குள்ளேயான உறவு அல்லது அன்பு நெருக்கமடைவதாக உணர்கின்றனர்.

இன்றும் கிராமப் புறங்களிலும், முதியவர்களாலும் கா சேர்த்து சொற்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இன்னும் பல பிரதேச பேச்சு வழக்குச் சொற்கள் இருக்கின்றன அவற்றையும் அவ்வப்போது பகிர்ந்து கொள்கிறேன்.
read more...

Sunday 23 August 2009

சாதித்து விட்டோம்.


இன்று இலங்கை பதிவர்களுக்கு மறக்க முடியாத ஒரு நாள்
என்றுதான் சொல்ல வேண்டும் எவருமே எதிர்பார்க்காத அளவில் சிறப்பான முறையிலே பதிவர்கள் சந்திப்பு நடந்தேறி இருக்கின்றது...


உண்மையிலேயே எவருமே எதிர் பார்க்கவில்லை இந்த அளவிற்கு வெற்றிகரமாகவும் சிறப்பான முறையிலும் அமையும் என்று. இச் சந்திப்பு இலங்கைப் பதிவர்களுக்கு ஒரு திருப்பு முனையாக அமையும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. பல முக்கிய விடயங்கள் ஆராயப்பட்டிருப்பது இச் சந்திப்பின் சிறப்பம்சமாகும்.

அத்தோடு நேரடி ஒளிபரப்பின் மூலமும் chat மூலமும் பலரது கருத்துக்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டமை சிறப்பம்சமாகும்.

நான் பதிவர்கள் சந்திப்பிலே கலந்து கொள்ள வேண்டும் என்ற ஆதங்கத்தில் இருந்தேன். ஆனால் சில தவிர்க்க முடியாத காரணங்களினால் கலந்து கொள்ள முடியாமல் போனது மிகவும் கவலையினை ஏற்படுத்தியது.


அப்போது நண்பர் மதுவதனன் மௌ. அவர்களினால் எனக்கு கிடைத்த செய்தி என்னை சந்தோசத்தில் உச்சத்துக்கே கொண்டு சென்று விட்டது. நிகழ்வுகள் நேரடி ஒலி, ஒளிபரப்புச் செய்யப்படும் என்பதே அச் செய்தி.


உண்மையாகவே நேரடி ஒளி, ஒலிபரப்பினை பார்த்துக்கொண்டு இருந்தபோது நானும் அந்த சந்திப்பிலே இருந்தது போன்ற ஒரு உணர்வு ஏற்பட்டதுடன் சந்தோசமாகவும் இருந்தது. நேரடி ஒளிபரப்பினை பார்த்துக்கொண்டிருந்தவர்களின் கருத்துக்களும் உள் வாங்கிக் கொள்ளப்பட்டமை சிறப்பம்சமாகும்.

ஏற்பாடு செய்த அத்தனை நண்பர்களுக்கும் நன்றிகள் பல....

நான் இந்தப் பதிவிலே இன்று இடம் பெற்ற முக்கியத்துவம் வாய்ந்த பதிவர்கள் சந்திப்புத் தொடர்பான விபரங்களைத் தருகின்ற நண்பர்களின் பதிவுகளை இணைக்கின்றேன். அவர்களின் பதிவுகளுக்கு சென்று பதிவர் சந்திப்பு தொடர்பான விடயங்களை அறிந்து கொள்ளமுடியும்.

http://ariyalion.blogspot.com/2009/08/blog-post_23.html

http://n-aa.blogspot.com/2009/08/blog-post_23.html (இங்கே சந்திப்பிலே இடம் பெற்ற கருத்துரைகளை ஒலி வடிவில் கேட்கலாம்.. )



அனைவருக்கும் மீண்டும், மீண்டும் நன்றிகள் நண்பர்களே.

பதிவுலகில் சரித்திரம் படைப்போம்.


பட உதவிக்கு நன்றிகள் வந்தி.
சுட்டிகளின் உதவிக்கு நன்றி புல்லட்
read more...

தமிழர்களே சிந்தியுங்கள்...




இன்று தமிழர்களும். தமிழ் மொழியும் ஒழிக்கப்பட வேண்டும் என்று பலர் கங்கணம் கட்டிக்கொண்டு துரிதமாக செயற்பட்டு வருவது ஒரு புறமிருக்க. நாமும் எமது மொழி அழிவதற்கு உறுதுணையாக இருக்கக்கூடாது. எமது மொழியினை வளர்ப்பதற்கு எங்களால் முடிந்தவற்றை நாம் செய்யவேண்டும்.



இன்று தமிழ் ஆர்வலர்கள் அனைவராலும் பேசப்படுகின்ற ஒரு விடயம்தான் மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறையில் ஏற்பட்டுள்ள பனிப்போர் – பதவிப்போர்.... இது பற்றிய முழுமையான விளக்கங்களைத் நண்பர் சுப.நற்குணன் தனது வலைப்பதிவிலே குறிப்பிட்டு இருக்கின்றார் இதனை உங்களோடு பகிர்ந்து கொள்கின்றேன்.

தமிழ்த் துறை சார்ந்த ஆர்வலர்கள் இந்தப் பிரட்சனை தொடர்பில் அக்கறை செலுத்தி எமது மொழியினை வளர்க்கவேண்டும் என்பதே எனது அவா...



நண்பர் சுப.நற்குணன் அவர்களின் வலைப்பதிவிலே......



மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறையில் ஏற்பட்டுள்ள பனிப்போர் – பதவிப்போர் இன்று எல்லாருடைய கவனத்தையும் ஈர்த்துள்ளது. அதுமட்டுமா? தமிழர்களின் அடிவயிற்றில் புளியைக் கரைத்துக் கொண்டிருக்கிறது!


அங்கே ஏற்பட்டுள்ள உட்பகையின் காரணமாக, இந்திய ஆய்வியல் துறையே பறிபோகும் நிலைமை ஏற்பட்டிருக்கிறது. என்றுமே இல்லாத ஒன்றாக, இப்போது அத்துறைக்கு தமிழரல்லாத ஒருவர் தலைவராக நியமிக்கப்படுள்ளார். இதனினும் கொடுமை, ‘இந்திய ஆய்வியல் துறை’ என்ற பெயர் நீக்கப்பட்டு தென்னாசிய ஆய்வியல் துறை என்று மாற்றப்படவுள்ளதாகத் தகவல் கசிந்திருகின்றது.இந்த நிலையில், “இந்திய ஆய்வியல் துறை நிலைநிறுத்தப்பட வேண்டும்; அதன் தலைவராக ஒரு தமிழரே நியமிக்கப்பட வேண்டும்” எனப் பொது இயக்கங்கள் குரல் கொடுக்கத் தொடங்கியுள்ளன. இந்த இழுபறிக்கு என்ன விடிவு? எதுதான் முடிவு?சரி,


சரி, அதற்கென்ன இப்போது என்கிறீர்களா?


தொடர்ந்து அறிய இங்கே http://thirutamil.blogspot.com/2009/08/blog-post_22.html செல்லுங்கள்...
read more...

Saturday 22 August 2009

இலங்கைப் பதிவர்கள் சந்தோசத்தில்.

ஒரு வார காலமாக வலைப்பதிவுப் பக்கம் வர முடியவில்லை. எனது மற்றுமொரு முயற்சியாக மாதாந்தம் சிறுவர் சஞ்சிகை ஒன்றினை வெளியிடுவதற்குரிய ஏற்பாடுகளை செய்து கொண்டு இருப்பதனால் நேரம் என்பது கிடைக்கவில்லை. விரைவில் எனது முயற்சியில் சிறுவர் சஞ்சிகை வெளிவர இருக்கின்றது.
நாட்களை எண்ணிக்கொண்டு இருந்த இலங்கைப் பதிவர்கள் இப்போது நிமிடங்களை எண்ணிக்கொண்டு இருக்கின்றனர். இலங்கைப் பதிவர்கள் அனைவரும் ஆவலோடு எதிர் பார்த்த நாள் நாளை மலர இருக்கின்றது. இலங்கைப் பதிவர்களின் முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு நாளை இடம் பெற இருக்கின்றது.

இலங்கைப் பதிவர் சந்திப்பு தொடர்பான விடயங்களைத் தருகின்ற லோஷன் அண்ணா அவர்களின் பதிவிலிருக்கும் விடயங்களை உங்களோடு பகிர்ந்து கொள்கின்றேன். (http://loshan-loshan.blogspot.com/2009/08/blog-post_22.html)
வர்றீங்க தானே?
இது ஒரு ஞாபகமூட்டல் பதிவு..

நாளை ஞாயிறு காலை ஒன்பது மணிக்கு என்ன வேலை இருந்தாலும் போட்டுவிட்டு ஓடி வந்து விடுங்கள்..

வருவீங்க என்று தெரியும்.. இருந்தாலும் ஒரு நினைவுறுத்தல் தான்..


எல்லா ஏற்பாடுகளும் பூர்த்தி.. பங்கேற்பாளர்கள் (நீங்க தானே முக்கியம்) வந்து நிகழ்ச்சியைப் பூரணப்படுத்தி வெற்றியாக்குவது மட்டும் தான் மிச்சம்..
முதலில் வந்து முந்துவோருக்கு சொகுசான இருக்கைகள், புல்லட் வழங்கும் விசேட உணவுகள் கிடைக்கும்..உண்மையா.. நம்புங்கப்பா.. அட ச்சே இந்த புல்லட் பெயரைப் போட்டால் எதையும் யாரும் நம்புறாங்க இல்லை.. (அதுக்கு தானே ஆரம்பம் முதலே வருவோர் உறுதிப்படுத்துமாறு கேட்டு எண்ணிக்கை எடுத்தோம்)

விஜயகாந்த் ஸ்டைலில் சில புள்ளி விபரங்கள்..


இலங்கையைச் சேர்ந்த பதிவர்கள் பல நூறு.. ;) (இப்ப ஆயிரம் தாண்டும் என்றும் நண்பர்கள் சொல்கிறார்கள்)

அதில் இலங்கையில் இருந்தே பதிவிடுவோர் சில நூறு..
நாம் சேர்ந்து அழைப்பு விட்டது எல்லோருக்கும்..
வாழ்த்து சொன்னவர்கள் பல பேர்..
வருவதாக சொன்னோர் பலர்..
ஒழுங்குபடுத்தலை ஆரம்பித்த அப்பாவிகள் நாலு பேர்..
இப்போ எங்களோடு ஆதரவாக இன்னும் ஒரு நாலைந்து பேர்.. ((பக்க பலமாக இன்னும் பல பேர் - வெளியிலருந்து ஆதரவு ;))


நாங்கள் வருவார்கள் என்று நினைத்தது முதலில் ஒரு 25.(அதுக்கே நொண்டியடிக்கும் என்று பார்த்தோம்.. ஆனா இப்போ.. :))
உறுதிப் படுத்தியோர் மட்டும் இப்போதைக்கு தாண்டியிருக்கிறது 80.
சொல்லாமல் கொள்ளாமல் வரும் அன்புள்ளங்களையும் அழைக்கிறோம்..
பல பயனுள்ள விடயங்கள் பகிரப்படும் ஒரு சந்திப்பாக மாற்ற வரும் உடன்பிறப்புக்களே.. (கட்சி பீலிங் வருதா?) நேரத்துக்கே வாருங்கள்..
நேரத்துக்கு ஆரம்பித்து ஒரு புதிய கூட்ட பரம்பரைப் பரிணாமத்தை ஏற்படுத்துவோம்..


மறந்துடாதீங்க இலங்கை நேரம் (கொழும்பு நேரம்) காலை ஒன்பது மணிக்கு..
கொழும்பு தமிழ் சங்கத்துக்கு வரும் வழி தெரியும் தானே?? தெரியாதவர்கள் வெள்ளவத்தையில் உள்ள உங்கள் உறவுகள் நண்பர்களிடம் கேளுங்கள்.. இல்லையெனில் ஆதிரையின் பதிவில் காட்டப்பட்டுள்ள வரைபடம் பாருங்கள்..


நிறைய சந்தோஷங்கள் எதிர்பாராத எதிர்காலத்துக்கான நல்ல விஷயங்கள் காத்திருக்கின்றன..
Bloggerஇன் பத்தாவது பிறந்த நாள் சிறப்பு நிகழ்ச்சியும் எங்கள் இலங்கைப் பதிவர் சந்திப்பை சிறப்பு செய்து சரித்திரம் படைக்க வைக்கிறது
வர்றீங்க தானே?
எதிர்காலத்துக்கான் பெரிய முயற்சிகளுக்கான இந்த சின்ன முதலடியை நாளை சரித்திரபூர்வமாக்குவோம்..
குறுகிய காலத்தில் இதை சாத்தியப்படுத்திய அத்தனை நண்பர்களுக்கும் நன்றிகள் & வாழ்த்துக்கள்..
மீதி சந்தித்த பிறகு.. ;)
வர்றீங்க தானே?

(இது நம்ம லோஷன் அண்ணாவின் பதிவில் இருந்து )


மேலதிக விபரங்களை அறியக்கூடிய நண்பர்களின் பதிவுகள்...



அனைவரையும் அன்போடு அழைக்கின்றோம்.
நன்றிகள் - லோஷன் அண்ணா
read more...

Friday 14 August 2009

மேல் நாட்டுக் கலாசாரம் தேவையா...

நடையில், உடையில் நாகரீகம் சொல்லும் பெண்... எனும் எனது இடுகையிலே கருத்துரையிட்ட சில நண்பர்களுக்கு விளக்கமளிப்பதற்காகவே இந்த இடுகை. அந்த இடுகையிலே நான் பெண்களை அடிமைப்படுத்தும் படி எழுதி இருப்பதாக அவர்களின் பின்னூட்டம் இருந்தது. அந்த இடுகையையும் பினூட்டங்களையும் வாசித்துப்பாருங்கள் நான் பெண் அடிமை பற்றி எங்கே குறிப்பிட்டு இருக்கிறேன் என்று.

நான் பெண் அடிமை பற்றி அங்கெ பேசவில்லை மேல் நாட்டு நாகரீகம் பற்றித்தான் சொல்லி இருக்கின்றேன். நான் முற்று முழுதாக பெண்களை அடிமைப் படுத்துவதை எதிர்ப்பவன். பெண்களுக்கும் சம உரிமை வேண்டும் என்று சொல்பவன். நான் பெண் அடிமை பற்றிப் பேசுகிறேன் என்று சொல்பவர்கள் எனது பதிவுகளைப் பாருங்கள் புரியும். வேண்டுமென்றால் http://shanthru.blogspot.com/2009/06/blog-post_28.html இங்கே போய் பாருங்கள் என் ஏக்கம் தெரியும்.

ஒரு இனமாகட்டும், சமுகமாகட்டும், மதமாகட்டும் சில நடைமுறைகள், பாரம்பரியங்கள், கலாசாரம் என்று இருக்கின்றது. அதற்கு ஏற்ற மாதிரி இருக்க வேண்டியது ஒவ்வொருவரது கடமை. எதற்காக இந்தக் கட்டுப்பாடுகள் நடைமுறைகள் நம்மை நல்வழிப்படுத்துவதற்காகவே. ஒவ்வொருவரும் தங்கள் விருப்பப்படி கட்டுக்கோப்பு இல்லாமல் இருந்தால் அது மிருகங்கள் போன்றுதான் இருக்கும்.

இன்று மேல் நாட்டு நாகரீகம் எங்களை ஆட்டிப்படைத்துக்கொண்டு இருக்கின்றது. நான் மேல் நாட்டு நாகரீகங்களை எதிர்க்கவில்லை. ஆனால் எமது கலாசாரம் பாரம்பரியங்களை சீர்குலைக்கும் மேல் நாட்டு நாகரீகங்களை எதிர்க்கிறேன். சில மேல் நாட்டு நாகரீகங்களை ஏற்றுக்கொள்ளலாம். அந்த நாகரிகத்தின் தாக்கத்தினைப் பற்றி சிந்தியுங்கள்.

அந்த இடுகையிலே நான் உடை பற்றிச் சொல்லி இருந்தேன். எந்த ஒரு சமூகமும் உடையினைக் குறை, அல்லது உடுத்த வேண்டாம் என்று சொல்லி இருக்கின்றதா இல்லையே. எதற்காக நாம் உடை அணிகின்றோம். அரைகுறை ஆடையுடன் அலைவதைவிட ஆடையின்றி திரியலாமே. சுதந்திரம் இருக்கிறதுதான் சுதந்திரம் இருக்கின்றது என்று சமூகக் கட்டமைப்பை மீறி ஆடையின்றி போக முடியுமா.

நாகரீக ஆடைகளை நாகரீக உலகுக்கு தகுந்தாற்போல் அணிய வேண்டும் . நான் இல்லை என்று சொல்லவில்லை. அரைகுறை ஆடை வேண்டாம் என்றுதான் சொன்னேன். இந்த அரை குறை ஆடையினால் எத்தனை பிரட்சனை. அவர்களை பார்த்து யாராவது ஆண்கள் ஏதும் சொல்லிவிட்டால் ஆண்கள் மீது குற்றம் சுமத்தி விடுவார்கள். யார் மீது குற்றம் அரை குறை ஆடை இன்றி தமிழ் கலாசார ஆடை அணிந்து செல்கின்ற பெண்களுக்கு ஆண்கள் அளவுக்கு அதிகமான தொல்லைகொடுக்கின்றார்களா . இல்லையே, அரை குறை ஆடை அணிபவர்களிடம் கேட்கின்றேன் நீங்கள் அணிந்திருப்பது எதற்கு அதனையும் அகற்றி விடலாமே.

பெண்களை மட்டும் நான் குற்றம் சொல்லவில்லை இன்று இளைஞர்களும் வெளிநாட்டு நாகரீக மோகத்தினால் தானும் சீரழிந்து தனது சமுகத்தையும் சீரழிக்கின்றனர். போதைப்பொருள் பாவனை இன்று எந்தளவு அதிகரித்து இருக்கின்றது. இதனால் அவர்கள் மட்டுமா இந்தச் சமூகமுமே பாதிக்கப் படுகிறது. இது தேவையா?.

இப்படிப்பட்ட வெளிநாட்டுக் கலாசாரங்களைத்தான் நான் எதிர்க்கிறேன். ஆனால் சில மேல் நாட்டுக் கலாசாரங்களை நாம் அறிந்திருக்க வேண்டும் பின்பற்ற வேண்டும். நான் இல்லை என்று சொல்லவில்லை. இன்று மேல் நாட்டுக் கலாசாரம் ஏதோ ஒரு வகையில் அவசியமாகிவிட்டது. அதற்காக வேண்டப்படாத மேல் நாட்டு கலாசாரங்களை பின்பற்றுவதை கைவிடுங்கள் என்பதுதான் என் கருத்து.

இதனை பெண் அடிமை பேசுகிறேன் என்று சொல்லவேண்டாம். என்ன சொல்கிறேன் என்பதனை புரிந்து கொண்டு விவாதியுங்கள்.
இதுபோன்ற தேவையற்ற மேல் நாட்டுக் கலாசாரங்கள் தேவையா என்பதுதான் என் கேள்வி உங்கள் கருத்துக்கள் பின்னூட்டங்களாக வாரட்டுமே...

உங்கள் விவாதங்கள் வெறுமனே பொழுது போக்குக்கான விவாதமாக இல்லாமல் மாற்றுக் கருத்துக்களுக்கு தீர்வு கிடைக்கின்ற விவாதங்களாக அமையட்டும்.
read more...

Thursday 13 August 2009

நடையில், உடையில் நாகரீகம் சொல்லும் பெண்...


(சும்மா கிறுக்கல்... )
நான் வேலையில்லாதவனென்று
தரகரிடம் சிக்கனமான
பெண் பார்க்கச் சொன்னேன்.
பார்த்துவிட்டார் அதிகம்
சிக்கனமான பெண்ணை
சிக்கனம் உடையில் மட்டுமே...

படித்ததில் பிடித்தது...

கட்டைப் பாவாடை
அணிந்து செல்லும்
குட்டைப் பெண்ணே - நீ
வெட்டை வெளியில்
செல்லும்போது - ஒரு
வெடிப்புச் சத்தம்
கேட்குமென்றால் - உன்
நிலையை என்னிப்பார்
மானம் கெட்டவள் என்று
பிறர் தூற்ற ....
வேணாமடி- இந்த
வெளிநாட்டு மோகம்
வேரோடு சாய்க்கும்
உன் குடும்பத்தையும்......


லொள்ளு....


எனக்கு தரகர் பார்த்த பெண்ணை முதலில் நான் தூரத்தில் நின்றுதான் பார்த்தேன்.

அவளோ என்னைவிட உயரமாக இருந்தாள். நான் அவள் என்னைவிட உயரம் எனக்கு வேண்டாம் என்றேன். தரகர் சொன்னார் அவளின் உயரத்தைக் குறைக்கலாம். அவளின் காலணியை கழட்டி விட்டால் போதும் என்றார்.
read more...

Tuesday 11 August 2009

கடவுள் நேற்று முளைத்த காளானா...

மறைந்துவரும் தமிழர் சம்பிரதாயங்கள். எனும் இடுகையிலே தமிழர் சம் பிரதாயங்கள் தொடர்பாகக் குறிப்பிட்டிருந்தேன். அதிலே இந்துக்களின் சமய சம்பிரதாயங்களோடு கூடிய ஒரு விடயத்தைக் குறிப்பிட்டிருந்தேன்.

அந்த இடுகைக்கு நண்பர் வால்ப்பையன் தனது பின்னூட்டத்திலே பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார்.


வால்பையன் சொன்னது…

தமிழர் சம்பிரதாயத்துக்கும், கடவுளுக்கும் சம்பந்தம் இருப்பதாக எனக்கு தெரியவில்லை!
தமிழ் கல் தோன்றி மண் தோண்றா கால்த்திலிருந்து இருக்கிறது!
கடவுள் நேற்று முளைத்த காளான்!
August 7, 2009 8:06 AM

இவரது இக் கருத்துக்குரிய விளக்கத்தினை தனி ஒரு இடுகையாகத் தருவதாக சொல்லியிருந்தேன்.


எந்த ஒரு இனத்தினையோ, சமுகத்தினையோ எடுத்துக் கொண்டால் அவர்களின் சம்பிரதாயங்கலிலே எதோ ஒரு வகையில் சமயம் என்பது செல்வாக்குச் செலுத்துகின்றது.


தமிழ்மொழி என்பது சிறப்பான ஒரு மொழி. வால்ப்பையன் சொல்வதனைப்போல் கல்தோன்றி மண்தோன்றாக் காலத்துக்கு முற்பட்டது தமிழ் மொழி என்று சொல்வதில் பெருமைப்படுகிறேன்.

இந்து சமயத்தைப் பொறுத்தவரை இந்து சமயம் ஆதியும் அந்தமும் இல்லாத ஒன்று. இவ்வாறு இந்து மதம் ஆதியும், அந்தமும் (தொடக்கமும், முடிவும்) இல்லாத ஒரு மதமாக இருக்கின்றபோது இந்து மதத்திலே இருக்கின்ற கடவுளர்கள் எப்படி நேற்று முளைத்த காளானாவது என்பது எனக்குப் புரியவில்லை. எனக்குப் புரியவேண்டிய அவசியமுமில்லை.

தமிழர்களுக்கென்றே தனித்துவமான பல சம்பிரதாயங்கள் இருக்கின்றன. இன்று அவற்றில் பல சம்பிரதாயங்கள் மறைந்து வந்தாலும் சில சம்பிரதாயங்கள் இன்றும் பின்பற்றப்பட்டு வருகின்றன. இந்த சம்பிரதாயங்களுக்கும் தமிழர்கள் சார்ந்த மதங்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கின்றன.

அதிலும் இந்து மதத்தினைப் பின்பற்றுகின்ற தமிழர்களைப் பொறுத்தவரை அவர்களின் சம்பிரதாயங்கள் இந்து மதத்தோடு பின்னிப்பிணைந்த ஒன்றாக இருக்கின்றது.


இந்து மதத்திலே இருக்கின்ற சம்பிரதாயங்களுக்கு தகுந்த காரணங்கள் இருக்கின்றன. அதேபோல் அந்தச் சம்பிரதாயங்களிலே அதிக நம்பிக்கையும் கொண்டவர்கள்தான் இந்துக்கள்.

அதே போன்றுதான் ஏனைய மதத்தினைப் பின்பற்றுகின்றவர்களும், தமது கடவுள் மீது அதிக நம்பிக்கையும் வைத்து இருக்கின்றனர். கடவுள் நேற்று முளைத்த காளான் என்று சொல்வது சொல்பவர்களின் அறியாமைதான். கடவுள் இல்லை என்று சொல்பவர்கள் கூட இப்படிச் சொல்லமாட்டார்கள். எந்த ஒரு மதமும் தாங்களின் மதம் நேற்றுத்தான் உதயமானது என்று சொல்லவில்லை.


தமிழர்களைப் பொறுத்தவரை அவர்கள் பின்பற்றுகின்ற மதம் சார்ந்ததாகவே அவர்களின் சம்பிரதாயங்களும் அமைந்திருக்கின்றன. எந்த ஒரு நிகழ்வாக இருந்தாலும் அவர்களது மதத்தோடு தொடர்புபட்டே அந்தச் சம்பிரதாயங்கள் அமைந்திருக்கின்றன.

தமிழர்களிடையே அதிகம் இடம் பெறுகின்ற நிகழ்வுகளைப் பாருங்கள் அந்த நிகழ்வுகள் அவர்கள் பின்பற்றுகின்ற சமயம் சார்ந்திருப்பதனை காணலாம். உதாரணமாக திருமணத்தை எடுத்துக்கொள்ளுங்கள். இந்துக்களின் சம்பிரதாயத்துக்கும் கிறிஸ்தவர்களின் சம்பிரதாயத்துக்கும் எவ்வளவே வேறுபாடு இருக்கின்றது.

இங்கே சமயம் சார்ந்ததாக அந்தச் சம்பிரதாயங்கள் அமையவில்லையா. சமயம் சார்ந்ததாக சம்பிரதாயங்கள் இல்லை என்றால் ஏன் இந்துக்களின் திருமண சம்பிரதாயத்துக்கும் கிறிஸ்தவர்களின் (இங்கு கிறிஸ்தவர்கள் எனும்போது கிறிஸ்தவ மதத்தினை பின்பற்றும் தமிழர்கள்) சம்பிரதாயத்துக்கும் வேறுபாடு இருக்கின்றது. இரண்டு மதத்தவர்களும் தமிழர்கள்தானே. இங்கே மதம் சார்ந்ததுதான் சம்பிரதாயம் என்பது புலப்படுகின்றதல்லவா?

இன்னும் உதாரணங்கள் சொல்லிக்கொண்டே போகலாம். சம்பிரதாயங்கள் தமிழ் மக்களின் சமயங்களோடு பின்னிப்பிணைந்து விட்டது என்பதே உண்மை. இந்துமத கடவுளர்களோ, ஏனைய கடவுளர்களோ நேற்று முளைத்த காளான்கள் இல்லை என்பதும் உண்மையே.
இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். உங்கள் கேள்விகள் வரும்போது பின்னூட்டத்தில் விளக்கம் தருகிறேன்.

read more...

Monday 10 August 2009

இலங்கைப் பதிவர்களுக்கோர் அழைப்பு.

இலங்கைப் பதிவர்களிடையே தப்போது அதிகமாகப் பேசப்படுகின்ற விடயம்தான் இலங்கைப் பதிவர்கள் சந்திப்பு. சந்திப்புக்கான நேரம், இடம், நோக்கங்கள் என்பன தீர்மானிக்கப் பட்டுவிட்டன.


எதிர்வரும் 23.08.2009 ஞாயிற்றுக்கிழமை காலை 09.00 மணிக்கு கொழும்பு தமிழ் சங்க வினோதன் மண்டபத்திலே இடம்பெற இருக்கின்றன.

இப் பதிவர் சந்திப்பு இலங்கைப் பதிவர்களுக்கோர் முக்கிய திருப்பு முனையாக அமைய இருக்கின்றன. நீண்ட காலமாக எதிர் பார்க்கப்பட்ட விடயம் தற்போது கை கூடியிருக்கிறது.

இச் சந்திப்பிலே பல முக்கிய விடயங்கள் பற்றி ஆராயப்பட இருக்கின்றன.

மேலதிக விளக்கங்களுக்கும் தகவல்களுக்கும் பின்வருவோரைத் தொடர்பு கொள்ளவும்.
லோஷன் : arvloshan@gmail.com
புல்லட் : bullettheblogger@gmail.com
வந்தி : vanthidevan@gmail.com
ஆதிரை : caskaran@gmail.com



இந்த பதிவர்கள் சந்திப்புக்கு வலைப்பதிவாளர்கள், புதிதாக வலைப்பதிபவர்கள், வலையுலக வாசகர்கள், பின்னூட்டமிடுபவர்கள் என அனைவரும் அன்புடன் அழைக்கப்படுகின்றனர்.

சந்திப்புத் தொடர்பான அனைத்து விபரங்களையும் லோஷனின் வலைப்பதிவில் பார்வையிடவும்.

அனைவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

read more...

Sunday 9 August 2009

மற்றுமோர் இலக்கு நோக்கிய பயணத்தின் ஆரம்பம்.


கடவுள் இருக்கிறான் என்றொரு தரப்பினரும். இல்லை என்றொரு தரப்பினரும் விவாதித்துக்கொண்டிருக்கின்றனர். ஒவ்வொரு சாராரும் தத்தமது பக்கக் கருத்துக்களை சொல்கிறார்கள். எது எப்படி இருப்பினும் இந்து மதத்துக்கென்று தனிச் சிறப்புக்கள் இருக்கின்றன.



எனது புதியதொரு முயற்சியாக இந்து சமயம் சார்ந்த பல விடயங்களை உங்களோடு பகிர்ந்து கொள்வதற்காக இந்து என்கின்ற புதிய வலைப்பதிவினை ஆரம்பித்திருக்கின்றேன். உங்கள் ஆதரவினை அந்த வலைப்பதிவிற்கும் வழங்குவீர்கள் என்ற நம்பிக்கையில் அந்த வலைப்பதிவிற்கும் உங்களை அன்பாக அழைக்கின்றேன்.


உங்கள் அன்பின்...

சந்ரு

read more...

Saturday 8 August 2009

விரைவில் இலங்கை பதிவர் சந்திப்பு..... பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்....

இலங்கையில் வலைப்பதிவர் சந்திப்பு மிக விரைவில் இடம்பெற இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டு இருக்கின்ற இந்த வேளையில். பதிவர் சந்திப்பு தொடர்பான தகவல்களை வெளியிடும் ஊடகவியலாளர் சந்திப்பொன்று இலங்கையின் பிரபல பதிவர் சட்டத்தின் மகன் தலைமையில் மறைவான இடம் ஒன்றில் இடம் பெற்றன. ஊடகவியலாளர் சந்திப்பிலே சொல்லப்பட்ட விடயங்களை தருகிறேன்.


சட்டத்தின் மகன் தனது ஒரு நிமிட பேச்சில் தனக்கு நேரம் இல்லாத காரணத்தினால் மேலதிக விபரங்களை பதிவர் சந்திப்புக்கான ஏற்பாடுகளில் மும்முரமாக ஈடுபட்டுவரும் ரவை அவர்கள் தருகிறார் என்று சொல்லி அமர நினைத்தவர் அமராமலே வெளியேறிவிட்டார்.

இந்தச் சந்திப்பிலே இலங்கையின் பிரபல பதிவர்கள் பலர் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது. ரவை கூறுகையில்... இங்கே வந்திருக்கும் எந்த ஊடகவியலாளரும் எந்தக் கேள்விக்களும் கேட்கக் கூடாது. நாங்கள் சொல்வதை மட்டும் கேளுங்கள் என்று கூறிவிட்டுத் தொடர்ந்தார்.


இந்த பதிவர் சந்திப்பிலே பல முக்கிய பதிவர்கள் பங்கு பற்றுவதனால் ஏனைய ஏற்பாடுகளை விட பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கே முக்கியத்துவம் கொடுக்கப்படுவதாகவும். பாதுகாப்பு விடயங்களை தான் ஏற்றிருப்பதாகவும் கூறினார்.

பாதுகாப்பு காரணங்களுக்காக சந்திப்புக்கான இடம், நேரம் தப்போதைக்கு வெளியிட முடியாது எனவும் கூறினார். கடல் ஏறும் பதிவர் தலைமையில் விசேட பாதுகாப்புக்குழு அமைக்கப் பட்டிருப்பதோடு. கொழும்பின் முக்கிய வீதிகள் நாளை முதல் போக்குவரத்துக்குத் தடை செய்யப்படுவதோடு. சந்தேகத்துக்கிடமான நபர்களையோ வாகனங்களையோ கண்டால் பதிவர்கள் ஒளிந்து கொள்வதற்குரிய ஏற்பாடுகளும் நடை பெறுவதாகக் கூறினார்.

அத்தோடு பதிவர் சந்திப்பு இடம் பெறுவதற்கு ஒரு வாரத்துக்கு முன்னரே. யாழ்ப்பாணம், வவுனியா, மட்டக்களப்பு போன்ற இடங்களில் இருந்து கொழும்புக்கு வரும் வாகனங்கள் பாதுகாப்புக் காரணங்களுக்காக தடை செய்யப்படும் என்றார். பதிவர் சந்திப்பின் போது வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் உண்மையான தகவல்களை வெளியிடுவார்கள் என்ற காரணத்தினால் அனுமதிக்கப்படுவதில்லை என்றும் உள்ளூர் ஊடகவியலாளர்கள் இலங்கையின் ஊடக சுதந்திரத்தை கடைபிடித்து தாம் தரும் செய்திகளை மட்டும் வெளியிடுமாறும் கூறினார்.


இது இவ்வாறிருக்க கொழும்பிலே இருக்கும் உணவகமொன்றில் பல பதிவர்கள் கூடி பதிவர் சந்திப்பு தொடர்பாக பல விடயங்களை ஆராய்ந்து இருப்பதாக நம்பத்தகாத ரோட்டோரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

இதில் பல விடயங்கள் ஆராயப்பட்டு இருக்கின்றன. ஊடக அனுசரனைக்காக ஒரு வானொலியினை அழைக்கவேண்டும் என்றபொழுது வாந்தி எடுக்கும் பதிவர் சில ஊடகங்களில் பலர் தமிழை கொலை செய்கின்றனர். தமிழை வளர்க்கக்கூடிய ஒரு வெற்றி நடை போடும் வானொலி ஒன்றை அழைப்பது என்றும் முடிவேடுக்கப்பட்டிருக்கின்றது.

அடுத்து பதிவர்களை செங்கம்பளம் விரித்து வரவேற்கவேண்டும் என்றும் அதற்கான பொறுப்பினை தொடர் பதிவொன்றினை ஆரம்பித்து இருப்பதோடு பெயரில்லாதவர்களின் தொல்லைகளால் இது யாரோ ஒருவனின் சதி... சதி... ஷ் என்று சொல்லிக்கொண்டு இருக்கும் பதிவரிடம் ஒப்படைக்கப்பட்டு இருக்கின்றது.


மேடையினை அலங்கோலப் படுத்தும் பொறுப்பினை மகிழுந்தில் தீ வைத்த பதிவரிடம் வழங்கப்பட்டபோது அவர் யாழ்ப்பாணம் போக இருப்பதால் வேறு ஒருவருக்கு வழங்கும் படியும் கூறி இருக்கிறார். உணவு பற்றிப்பேசுகின்றபோது மிகவும் குறைந்த விலையிலே பெறக்கூடிய உணவுகளைப் பெறுவதென்றும். அதனால் ஏற்படும் வியாதிகளை கவனிப்பதற்கு ஊசி போடும் மூத்த பதிவரும் தெரிவு செய்யப்பட்டு இருக்கின்றனர்.


குளிர்பானங்கள் வழங்குவதற்கு இனிய இசையோடு வரும் பதிவர் மகளிர் அனித்த தொலைவியிடம் ஒப்படைக்கப்பட்டபோது அவரால் சாப்பிட மட்டுமே தெரியும் என்று மறுத்துவிட்டாராம். ஒரு ஓரத்தில் ஒதுங்கி இருந்த சுபமான ஒரு அங்கத்தினை உடைய பதிவர் தனக்கு பாதுகாப்பில் நம்பிக்கை இல்லாததால் தான் சந்திப்பு இடம் பெறும் இடத்திலே ஆரம்ப ஏற்பாடாக பதிவர்கள் ஓடி ஒழிப்பதற்கு சில பெட்டிகளை வைப்பதாகவும் கூறி இருக்கிறார்

அத்தோடு பல பதிவர்கள் எந்தவித திரட்டிகளிலும் இணைந்து கொள்ளாது இருப்பதாகவும். அவர்களை கண்டு பிடிப்பதற்கு ட்வீட்டும் இணையத் தளம் ஒன்றில் அழகான அ நடிகைக்கு வலை விரித்த பதிவரிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டதும் தனக்கு நேரம் இல்லை என்று சொல்லி இருக்கின்றார். திரட்டிகளில் இணைந்து கொள்ளாது இருக்கும் பதிவர்களை கண்டு பிடிப்பதெட்கென மூன்று குழுக்கள் அமைக்கப்பட்டன.


இவை எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டிருந்த துருப்பிடிக்காத மகன் பதிவர் பதிவர் சந்திப்பிலே பதிவர்கள் வேற்று மொழி பேசக்கூடாது என்றும் பேசினால் அவர்கள் தமிழ் பதிவர்களாக ஏற்றுக்கொள்ளப்பட மாட்டார்கள் என்றார்.



சுமார் ஒன்பது மணித்தியால சந்திப்பிலே இந்த முடிவுகள் எடுக்கப்பட்டு இருக்கின்றன.


இது எல்லாம் ஒரு நகைச்சுவைக்காக மட்டுமே.

விரைவில் இலங்கை பதிவர் சந்திப்பு ஒன்று இடம்பெற இருக்கின்றது முதல் கட்டமாக கொழும்பு பதிவர்கள் சந்திப்பு இடம் பெறுவதற்கான ஏற்பாடுகள் இடம் பெறுகின்றன.
read more...

Friday 7 August 2009

மறைந்துவரும் தமிழர் சம்பிரதாயங்கள்.

தமிழர்களுக்கென்று சில கலை, கலாச்சார பாரம்பரியங்கள் இருக்கின்றன. அவை இன்று மறைந்து வருவதைக் காண முடிகின்றது. ஆனாலும் இவற்றைப் பற்றி எல்லாம் அறிவதிலே எனக்கு ஆர்வம் அதிகமே.


அன்று தமிழர்களிடையே பல சமயம் சார்ந்த சம்பிரதாய நிகழ்வுகள் இடம் பெற்று இருக்கின்றன. மந்திர, தந்திர, மாய வித்தைகள் ஒரு புறமிருக்க சமயம் சார்ந்த பல நிகழ்வுகள் இடம் பெற்றிருக்கின்றன. ஆனால் அதன் எச்சங்களைகூட இன்று காண முடியவில்லை.


தமிழ் மக்களைப் பொறுத்தவரை சமய சம்பிரதாயங்கலிலே அதிக நம்பிக்கை கொண்டவர்களே. நான் நான் பலரிடம் கேட்டு அறிந்து கொண்டவற்றை உங்களோடு பகிர்ந்து கொள்கின்றேன்.


நான் பிறந்து வளர்ந்தது ஒரு விவசாயக் கிராமம் எனது கிராமத்திலே அன்று நடை பெற்ற ஆனால் இன்று அதன் எச்சங்களே இல்லாத சில நிகழ்வுகளை உங்களோடு பகிர்ந்து கொள்கின்றேன்.


எனது ஊரிலே பிரசித்தி பெற்ற ஆலயம் ஒன்று இருக்கிறது. (மட்டக்களப்பு, களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலயம்) கிராம மக்களின் வயட்காணிகள் நிறைந்திருக்கும் பகுதியிலே ஆலயம் அமைந்திருக்கின்றது. ஆலயத்துக்கும் வயற்காணிகளுக்கும் நெருங்கிய தொடர்புண்டு.

வேளாண்மைக்கு பூச்சி புழுக்களின் தாக்கம் ஏற்படும்போது கோவில் மடைப்பள்ளி சாம்பலை எடுத்துவயலுக்கு தூவினர். அதற்குக் கட்டுப்படாதவிடத்து பிள்ளையாரை அபிசேகம் பண்ணிய நீரை எடுத்து தெளித்தனர்


சமய ஆசாரத்துடன் பட்டினியாக இருந்த போடியார் ஒருவர் ஒரு பிடி மிளகை வாயினுள் அடக்கி தீர்த்தக் குடத்தை தொழிலோ, தலையிலோ சுமக்க ஏனைய போடிமார் அவருக்கு வெள்ளை மேற்கட்டி பிடிக்க, மணி ஓசையுடன் ஐயர் சங்கு ஊத, பறைமேளம் ஒலிக்க, வடக்கிலிருந்து தெக்கு நோக்கி நீர் பாச்சும் ஒவ்வொரு வாய்க்காலிலும் மிளகு கொஞ்சத்தை சப்பித் துப்பி தீர்த்த நிறையும் கொஞ்சம் ஊ.ற்றுவர். இதுவே தீர்த்தமெடுத்தல் என்பதாகும்.

வயல் அறுவடைக்குத் தயாரானபோது குருக்கள், ஐயர், காவலாளிகள் சகிதம் சென்று வயத் போடிமாருக்கு பொங்கத் பிரசாதம் வழங்குவதுசம்பிரதாயமாகும். சிறுபோக நெல் விளைவுற்ற பருவத்தில் பன்றிக் காவலுக்கு இரவில் தகரம் கொண்டு செல்வதும் கடமையில் தவறியோருக்கு தண்டனை வழங்குவதும் இறுக்கமான கட்டுப்பாடாக இருந்திருக்கின்றது.


அறுவடையின் பின் ஆண்டுதோறும் பிள்ளையார் கோவிலடியில் வட்டை அமுது என்ற மாபெரும் அன்னதானம் நடைபெறும். போடிமார் தமது வயல் பரப்புக்கேற்ற அரிசி, தேங்காய், தயிர், மரக்கறி வகைகள், காசு என்பவற்றை எல்லாம் சேர்ப்பர்.

கோவில் குருக்கள் குளக்கட்டில் உள்ள ஒரு இடத்தில் அமர்ந்திருப்பார். போடிமார் குடை, மேளதாளம், மணியோசை, சங்கொலி என்பவற்றுடன் சென்று கோவித்த பாவனையில் இருக்கும் குருக்களை சமாதானப் படுத்தி திருவமுதுக்கு எழுந்தருளப் பண்ணுவார். திருவிழா ஊர்வலம் போல் நடைபெறும் இவ விழாவில் பொதுமக்களும் பங்குபற்றி மகிழ்வர்.


சிவபெருமான் சிறுத்தொண்டரிடம் பிள்ளைக் கறியமுது கேட்ட சம்பவத்தை நினைவூட்டுவதாக இன் நிகழ்வு இடம் பெற்றிருக்கின்றது.

சிவபெருமான் சிறுத்தொண்டரிடம் பிள்ளைக் கறியமுது கேட்ட சம்பவத்தை நினைவூட்டுவதாக இன் நிகழ்வு இடம் பெற்றிருக்கின்றது.



மறைந்து வரும் தமிழர் நம் சம்பிரதாயங்கள் இன்னும் பல அவ்வப்போது உங்களை வந்து சேரும்.
read more...

Thursday 6 August 2009

தமிழர்கள்தான் சிந்திக்க வேண்டும்

அண்மைக்காலமாக எனது வலைப்பதிவிலே தமிழ் மொழிக்கொலை பற்றியே பேசப்படுகின்றன பலரும் நல்ல ஆரோக்கியமான கருத்துக்களை வழங்கி வருகின்றார்கள். நான் இதனை விடுத்து வேறு விடயத்துக்கு சென்றாலும். நண்பர்கள் விடுவதாக இல்லை. நண்பர் ஜெகநாதன் பல கேள்விகளை கேட்டு இருக்கின்றார். அவருக்கு சில விளக்கங்களை அளிக்கவேண்டியிருக்கின்றது. அதற்காகவே இந்த இடுகை.


ஜெகநாதனால் கேட்கப்பட்ட கேள்விகள் இதோ..



ஜெகநாதன் கூறியது...
மொழி கலப்புப் பற்றி.. மொழியின் அளப்பெரிய சிற்பம்சம் அது ஒன்றை ஏற்கும் போது ஒன்றை மற்றதுக்கு கொடுத்தும் விடுகிறது. Cashew nut கதை தெரியும்தானே?மொழிக்கலப்பு பரஸ்பர கைகுலுக்கல் மாதிரிதான். மொழியை எந்த ஒரு வேற்று மொழியும் ஊருடுவி அழிக்க முடியாது (அல்லது இப்படி​செத்துப்​போன மொழிகளின் பட்டியல் எனக்குத் தெரியாது)கிரேக்க, லத்தீன் வார்த்தைகளை நீக்கிவிட்டால் ஆங்கில அகராதி பாக்கெட் நாவல் சைஸ்தான் வரும்.
கம்பீரமாக, பெருந்தன்மையாக இந்த வார்த்தையின் மூலம் கிரேக்கம், இது லத்தீன், இது ப்ரெஞ்சில இருந்து வந்ததுன்னு போட்டு ஆங்கில அகராதிகள் வெளியிடப்படுகின்றன. மொழிக்கலப்பு ஆங்கில மொழியை ​கொன்றுவிடும் என்று நினைத்திருந்தால் 'சூரியன் மறையாத தேசத்துக்காரர்கள்' சும்மா இருந்திருப்பார்களா?உதாரணத்துக்கு ஒரு ஆங்கில வார்த்தை pariah (பறையா) இதற்கு ஆங்கிலத்தில் வழங்கப்படும் அர்த்தம்: A person who is rejected (from society or home) இப்போது சொல்லுங்கள் இது தமிழிலிருந்துதானே போயிருக்க வேண்டும்?இன்னும் நிறைய சொல்லலாம்..
மொழி பற்றிய புத்தகங்களைக் கூட படித்து விட்டு விவாதத்தை ​தொடரலாம் (A History of Language - by Steven Fischer, Race and Language‎ by André Lefèvre, Language and Politics - by Noam Chomsky, மீனாட்சிசுந்தரனார், வையாபுரி பிள்ளை, ஜியு போப், சி. ஜேசுதாசன்....) பட்டியல் பெருசு.. இந்தப் புத்தங்களை படிக்காமலும் நாம் இதை நகர்த்தி ​செல்லலாம்..
ஆனால் எங்கு? எதற்கு?நீங்கள் உங்கள் உழைப்பை பணயமாக்கி நிறைய எழுதலாம்.. படிப்பவர்களும், அருமை சந்ரு, தமிழ்​மொழி நீங்கள் ​கொண்ட பற்று வியக்க​வைக்கிறது, ஆச்சரிய மூட்டுகிறது, கிச்சுகிச்சு மூட்டுகிறது, நல்ல முயற்சி என்ற ரீதியில் பின்னூட்டம் போட்டுவிட்டு ​வேறு மொக்கைளை படிக்கப் ​போயிடுவாங்க. ​போயி மீ த பர்ஸ்ட்டேய்ய், செம மெர்ஸலாயிட்டேன் கண்ணு, சூப்பர்ப், ரிப்பீட்டேய்... என்று பின்னூட்டங்கள் ​போட்டுத் தள்ளுவாங்க!!
வேற்று​மொழி வார்த்தைகளை ஒரு மொழி​கொண்டிருக்கிறது என்றால், இந்த மொழியிலிருந்தும் சில வார்த்​தைகள் அங்கு​போயிருக்கும்.நீங்கள் மற்றவர் மீது பன்னீர் தெளிக்கும்​போது உங்கள் மீதும் சில துளிகள் விழுந்து விடுகின்றன! அல்லவா?​மற்றபடி,​மொழி​கொண்டிருக்கிற அருஞ்சொற்களை இழந்துவிடாமல், அழித்துவிடாமல் அவைகளை மீட்​டெடுக்க​வேண்டிய கடமை நமக்கானது (இதில் புது வார்த்தைகள் வேறு சேர்க்கணுமா என்ன?)
பரவலான, உலகத்தரத்திலான, எல்லா தரப்புகளினாலும் (மொழியியல், தொழில்நுட்பம், மருத்துவம், கல்வி, ஆட்சியியல், சமூகவியல்...) அங்கீகரிக்கப்பட்ட ஒரு பொதுவான தமிழ் அகராதி நிறுவப்பட​வேண்டும். இது​போன்ற முயற்சிகள்தான் மொழியை செழுமையாக்கும். ஒரு பிரபலமான ஆங்கில அல்லது வேற்று மொழி சார்ந்த புது சொல்லுக்கு இணையான தமிழ் சொல் பொதுமையாக்கப்பட ​வேண்டும். யார் வேண்டுமானாலும் ​வேற்று மொழி வார்த்தைக்கு இணையான​சொல்லை உருவாக்கலாம் (Coinage) என்ற நிலை மாற​வேண்டும்.மொழியில் coinage (புது வார்த்தைகளை உருவாக்குதல்) மிகவும் முக்கியமானது. ஆனால் அது தெருவுக்கு தெரு மாறுபடுவதாய் இங்கு இருக்கிறது.
internet என்பதுக்கு இணையம், இணையதளம், வலைத்தளம், ஊடுவலை இப்படி நிறைய இணை வார்த்தைகள் காணப்படுகின்றன. இது ஒரு சின்ன உதாரணம். இந்த மாதிரி குழப்பத்தை தவிர்த்து பொதுவான ஒற்றைப் பதம் நிறுவப்பட வேண்டும்.மருத்துவ துறையில் இந்த மாதிரி மாற்றுப் பதங்கள் இருந்தால் என்னாகும்? ஆபரேஷன் நடக்கும் இடத்தில் மாற்றுப் பதங்கள் விளைவிக்கும் குழப்பத்தால் ​பேஷண்ட் இறந்தே விடக்கூடும்.
பொழுது​போக்கு, இலக்கியம் தொடர்பான துறைகளில் அதிகமாக coinage இருப்பது அதன் வீச்சு, தாக்கம் ஆகியவை சாதாரணமாக இருப்பதால்தான். போர், மருத்துவம், ஆட்சி போன்ற துறைகளில் இது ஆபத்தையே விளைவிக்கும்.பொதுவான, உலகத்தரத்திலான, நடுமையான தமிழ் சொல்லகராதி நிறுவப்படும் வரை அன்னிய மொழி ஊருடுவலை யாரும் தடுத்த நிறுத்த முடியவே முடியாது. இதனால் மொழி கொலை என்பது சாத்தியமற்றது.

August 1, 2009 6:54 AM



ஜெகநாதன் கூறியது...
அன்பு சந்ருவுக்கு நட்புநாள் நல்வாழ்த்துக்கள்! என்னங்க என் கருத்தைப் பற்றி ஏதாவது சொல்வீங்கன்னு பாத்தா, பதிலையே காணோம்? ​​கோபமாயிட்டீங்களோ? சரி, விடுங்க, அங்க இலங்கையில் ரத்தினபுரின்னு ஏதாவது ஊரு இருக்கா என்ன?
August 2, 2009 6:46 பம்



நாங்கள் இந்த விடயம் தொடர்பாக பேசிக்கொண்டே போகலாம். உடனாடியாக பதில் தருவதற்கு நேரம் இடம் கொடுக்கவில்லை நண்பரே. எனக்கு எந்தக் கோபமும் இல்லை.

.நான் எனது இடுகைகளிலே வலியுறுத்தி வந்த விடயம் நான் வேற்று மொழிகளை எதிர்ப்பவனோ, வெறுப்பவனோ அல்ல என்று. எமது தமிழ் மொழியிலே வேற்று மொழிகள் தேவையற்ற விதத்திலே கலப்பதனையே எதிர்க்கிறேன். அன்று நாம் பயன் படுத்திவந்த பல இனிய தமிழ் சொற்கள் இன்று பயன் பாட்டிலே இருக்கின்றதா? இல்லையே அவற்றுக்கு பதிலாக நாம் ஆங்கில வார்த்தைகளையே பயன் படுத்துகின்றோம்.இதனையே நான் எதிர்க்கிறேன்.

அதற்காக நான் விஞ்ஞான தொழிநுட்ப, புதிய கண்டுபிடிப்பு சொற்களுக்கு உடனடியாக தமிழ் சொற்கள் அறிமுகப் படுத்த வேண்டும் என்றும் வாதிடவில்லை. அவற்றுக்கு கணணி அல்லது கணினி, இணையம் போன்ற சொற்கள் பாவனையில் வந்ததைப்போல் காலப்போக்கில் பாவனைக்கு வரலாம். இன்று இணையம் என்பதற்கு பல சொற்கள் பயன் படுத்தப்படுவது உண்மைதான். அது பாரிய குழப்பத்தை, பிரட்சனையை ஏற்படுத்தியதாக தெரியவில்லை.

தமிழ் மொழியிலே சொற்களுக்கு பஞ்சமில்லை ஒரு சொல்லுக்கு எத்தனையோ ஒத்த கருத்துச் சொற்கள் இருக்கின்றன. உதாரணமாக நாம் சந்திரனுக்கே எத்தனை ஒத்த கருத்துச் சொற்களை பயன் படுத்துகின்றோம். (நிகண்டு இதற்கு ஆதாரம்). அதே போன்றுதான் இணையம், கணணி போன்ற சொற்களுக்கும் பல ஒத்தக்கருத்துச் சொற்கள் வருவதில் தப்பு இல்லை.
என்னால் பல புத்தகங்களை ஆதாரம் காட்டி வாதிட முடியும் அதேபோல் வேற்று மொழிக்கலப்பு தமிழ் மொழியை கொலை செய்யவில்லை என்றும் வாதிட முடியும் அதுவல்ல என் வாதம் தேவையற்ற விதத்திலே தமிழ் மொழியோடு வேற்று மொழி கலப்பதனால் தமிழ் மொழி சீரழிக்கப்படுகின்றது என்பதேதான்.


நான் தமிழ் மொழியோடு புதிய தமிழ் சொற்களை அறிமுகம் செய்ய வேண்டும் என்று சொல்லவில்லை. ஏற்கனவே பயன்படுத்தப்பட்டு வந்த இனிய தமிழ் சொற்களை பாவனைக்கு மீண்டும் கொண்டு வரவேண்டும் என்றுதான் சொன்னேன்.



இலங்கையைப் பொறுத்தவரை அன்று தொடருந்து, சிற்றுந்து, உலங்குவானூர்தி, துவிச்சக்கர வண்டி, மிதி வண்டி, காலுந்து, வெதுப்பி, குளிர்களி.போன்ற பல இனிய சொற்கள் அன்று மக்களின் பயன்பாட்டிலே இருந்தன ஆனால் அவை இன்று பயன் பாட்டில் இருப்பது குறைவு அப்படிப்பட்ட சொற்களையே நான் பயன் பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று சொல்கின்றேன். புதிய சொற்களை கண்டு பிடித்து பயன் பாட்டுக்கு கொண்டுவர தமிழ் மொழியிலே சொற்களுக்கு பஞ்சமில்லை. நாம்தான் அறியாமல் இருக்கின்றோம். இச் சொற்களை பயன்போட்டுக்கு கொண்டுவர முடியும் என்பதே எனது வாதம்.


என்னால் கூட சில மொழிகள் தமிழிலிருந்துதான் தோற்றம் பெற்றன என்று வாதிட முடியும். சிங்களம் கூட தமிழ் மொழியிலிருந்துதான் தோற்றம் பெற்றது என்று என்னால் வாதிட முடியும். சிங்களத்திலே எத்தனை சொற்கள் தமிழ் சொற்களை ஒத்த சொற்கள் பயன்படுத்தப் படுகின்றன. உதாரணமாக ஊஞ்சல், பாடலை நாம் சிந்து என்று சொல்வதுண்டு, காலை நேரத்தினை நாம் உதயம் என்று சொல்வதுண்டு, என்னும் ஏராளமான சொற்கள். இவற்றுக்கு சிங்களத்திலே என்ன சொற்கள் பயன் படுத்தப்படுகின்றன என்று யோசித்துவிட்டு சொல்லுங்கள் சிங்களம் தமிழிலிருந்துதானே வந்திருக்க வேண்டும்.


என்வாதம் இதுவல்ல எந்த மொழி எந்த மொழியிலிருந்து வந்தது என்பதல்ல. தமிழ் மொழியோடு வேற்று மொழிகள் தேவையற்ற விதத்தில கலப்பதை தடுக்கவேண்டும் என்பதே என் கருத்து.

எது எப்படி இருப்பினும் தமிழன் தமிழனாகவும், தமிழ்மொழி தமிழ் மொழியாகவும் இருந்தால் சரிதான்.

இரத்தினபுரி என்று இலங்கையிலே இரத்தினக் கற்களுக்கு பிரசித்தி பெற்ற இடம் இருக்கிறது. இலங்கைக்கு அந்நியச் செலாவணியை ஈட்டித்தரும் இடம், பல உயர் தரமான இரத்தினக் கற்கள் இங்கே கிடைக்கின்றன இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்போகலாம். ...

read more...

ரோபோக்களின் துணையுடன் இருதய சத்திர கிச்சை

இன்றைய விஞ்ஞான வளர்ச்சியின் காரணமாக பல்வேறுபட்ட தேவைகளுக்கு ரோபோக்கள் பயன்படுத்தப் பட்டு வருகின்றன.


ரோபோக்களின்உதவியுடன் மிகவும் இலகுவான முறையிலே இருதய சத்திர சிகிச்சையினை வெற்றிகரமாக நடத்தியுள்ளனர் சென்னை மருத்துவர்கள். இருதய அறுவைச் சிகிச்சையில் ரோபோக்களை பயன் படுத்துவது முக்கிய திருப்பம் எனவும், இருதய அறுவைச் சிகிச்சையினை ரோபோக்களின் உதவியோடு மேற்கொள்வது நோயாளிகளுக்கு பல வசதிகள் காணப்படுவதாகவும் மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.


இந்த அறுவைச் சிகிச்சை முறை மூலமாக சென்னையில் உள்ள செட்டிநாடு ஹெல்த் சிட்டி மருத்துவமனை மருத்துவர்கள் இரண்டு இளைஞர்களுக்கு இருதய அறுவைச் சிகிச்சையினை வெற்றிகரமாக நடத்தியுள்ளனர்.


இந்த அறுவைச் சிகிச்சை மூலம் குறைந்த அளவு திசுக்களே சேதமடைவதால் குறைந்தளவு இரத்த விரயமே ஏற்படுவதாகவும். இதனால் நோயாளிக்கு குறைந்த அளவு இரத்தம் ஏற்றினால் போதுமானது என்றும், இவனை பயன் படுத்துவதனால் நோயாளிக்கு வலி குறையும் என்றும், அறுவைச் சிகிச்சையின்போது வெளியேறும் இரத்தத்தின் அளவு குறைவு என்பதனால் நோயாளிக்கு பெரிதும் உதவியாக இருக்கும் என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.


இந்த அறுவைச் சிகிச்சையின் மூலம் குறைந்தளவு பகுதிகளே சேதமடைவதுடன் போடப்படும் தையல் உறுதியானதாக இருக்கும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
read more...

Wednesday 5 August 2009

உலகம் போகிற போக்கை பார்த்தால் சிரிப்பு வருது....

குதிரை வலு, குதிரை வலு என்று சொல்றானுகளே அது எங்கள விட வேகமா இருக்கிறதா என்று பார்ப்போம். நீயும் பின்னால வா மச்சான் உன்னை முந்துதா என்று பார்ப்போம்..
மனுசங்க எங்கள வைத்து பிழைப்பு நடத்த நாங்க எப்படி எல்லாம் கஷ்டப்படவேண்டி இருக்கு...
நான் உங்கள் மூதாதயர்களில் ஒருவன் என்பதை மறந்து விடாதிங்க, நாங்கள் எங்கள் சேட்டைகளை மறந்துவிட்டோம். நீங்கள் அதைச் செய்வதை பார்க்கும் போது வெட்கமாக இருக்கிறது.. திருந்துவீர்களா நீங்கள் எமது வாரிசுகள் என்று சொல்வதற்கே வெட்கமாக இருக்கிறது...
என்ன யோசிக்கிறிங்க... இதுதான் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கண்டம்விட்டு கண்டம் பாயும் அதிக குதிரை வலு கொண்ட விமானம்........... அப்படின்னு சொல்றவங்களும் இருப்பாங்க...
என்ன பார்வை...
இதுதான் வீதிகள சுத்தமா வைத்துக்கணும் என்று சொல்வதோ....

நாங்கள் இணை பிரியாத நண்பர்கள்.. ஆனா உங்களைப்போல எங்களுக்குள்ள மனசுல ஒன்று பேச்சில ஒன்று இல்லங்க...

எனக்கும் பறக்க வேணும் என்று ஆசைதான்... அதுக்காக இப்படியா செய்வது... மனுசனுங்க அறிவு பின்னால்தான் என்று சொல்லுவாங்களே அது இதுதானோ...

படங்கள் - வேறு இணையத்தளங்களில் பெறப்பட்டவை.
read more...

இதெல்லாம் சரியா பிழையா...


ஊடகங்களில் தமிழ் கொலை செய்யப் படுகிறதா என்ற இடுகையின் தொடர் பதிவாக வந்த தமிழ் மொழியை வளர்ப்பது யார்... தமிழ் மொழியை கொலை செய்வது யார் எனும் இடுகை மூலம் பலரும் பலதரப்பட்ட நல்ல கருத்துக்களை பின்னூட்டமாக வழங்கி இருந்தனர் அந்தக் கருத்துரைகளும் பல தமிழ் ஆர்வலர்களின் வேண்டுகொளுக்கிணங்க ஒரு இடுகையாக வருகிறது...
வெ.இராதாகிருஷ்ணன் கூறியது...அற்புதமான கட்டுரை. எனது நாவலைப் பார்த்துவிட்டு நிறைய எழுத்துப் பிழைகள் இருக்கின்றன, இருந்தாலும் ஆங்கில வார்த்தைகள் தவிர்க்கப்பட்டு இருக்கின்றன என ஒருவர் குறிப்பிட்டார். தமிழ் நாவலில் ஆங்கிலம் கலப்பது என்பது சரி எனும் மனநிலைக்குத் தள்ளப்பட்டதால்தான் அப்படி ஒரு எண்ணம் அவருக்கு வந்திருக்க வேண்டும்.பொதுவாக எழுத வரும்போது எழுத்து இலக்கணம் அறிந்து எழுதுவது எழுத்துக்கு அழகைக் கூட்டித்தரும். ஆனால் எழுத்து இலக்கணம் படித்து எழுதும் அளவுக்கு என்னை இன்னமும் தயார்படுத்திக்கொள்ளவில்லை. ஆனால் இது ஒரு மனக்குறையாகவே இருக்கிறது. மேலும் வலைப்பூக்களில் எழுதப்படும் தமிழ் கண்டு வேதனைப்படத்தான் முடிகிறது. கொச்சையான வார்த்தைகளை இச்சையுடன் எழுதித் தீர்க்கிறார்கள். வசைபாடுவது என இருந்தாலும் தமிழில் அழகுடன் எழுதும்போது அவை முகச்சுளிப்புதனை உருவாக்குவதில்லை.தமிழை வளர்க்க வெகு சிலரே பாடுபடுகிறார்கள். எண்ணங்களை கொண்டுச் சேர்க்க அலங்கார மொழித் தேவையில்லை என்கிற நிலைக்கு மொழி சீர்குலைந்து போய்க்கொண்டிருக்கிறது.
முனைவர்.இரா.குணசீலன். கூறியது...நான் தமிழ் மொழி தவறாக உச்சரிப்பதனையும், ஆங்கில வார்த்தைகள் தேவையற்று அதிகம் பயன் படுத்துவதனையும் முற்றாக வெறுப்பவன். தமிழை தமிழாக பயன் படுத்த நினைப்பவன்/மிகவும் மகிழ்வாகவுள்ளது.

முனைவர்.இரா.குணசீலன் கூறியது...சில அறிவிப்பாளர்கள் இனிய தமிழை மறந்து அளவுக்கு அதிகமாக ஆங்கில வார்த்தைகளை பயன் படுத்துவது என். இவர்களுக்கு தமிழ் தெரியாதா. தமிழ் தெரியவில்லை என்றால் ஏன் தமிழ் அறிவிப்பாளராக வந்தார்கள். ஆங்கில அறிவிப்பாளராக போயிருக்கலாம்தானே. இவர்கள் விடுகின்ற தவறுகளும் ஓட்டு மொத்த அறிவிப்பாளர்களையும் பாதிக்கும் என்பதை இவர்கள் உணர்ந்து திருந்துவதே நல்லது (திருந்துவார்களா) /திருந்த வேண்டும்....எனது இவ்விடுகையைப் பார்த்தீர்களா?http://gunathamizh.blogspot.com/2009/04/blog-post_28.html
நேசமித்ரன் கூறியது...சந்த்ரு ஆக்க பூர்வமான கட்டுரை மிக மகிழ்வளிக்கிறது
வந்தியத்தேவன் கூறியது...// நான் மேலே குறிப்பிட்ட தொடருந்து, சிற்றுந்து, உலங்குவானூர்தி, துவிச்சக்கர வண்டி, மிதி வண்டி, காலுந்து, வெதுப்பி, குளிர்களி.. போன்ற சொற்களை அறிமுகப்படுத்திய பெருமைக்குரியவர் லோஷன் என்று சொன்னால் மிகையாகாது.//மன்னிக்கவும் லோஷன் அறிவிப்பாளராக வரமுன்னரே இந்தச் சொற்கள் பாவனைக்கு வந்துவிட்டன. வீணாக நல்லதொரு அறிவிப்பாளரின் பெயரைக் கெடுப்பதுபோல் இப்படி எழுதுகிறீர்கள். சிலவேளை லோஷனினால் உங்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டிருக்கலாம்.
பழமைபேசி கூறியது...புலவர்கள் இடது கோடியிலும், ஊடக மற்றும் எழுத்தாளர்கள் வலது கோடியிலும் இருந்து கொண்டு சாமான்யனைத் தமிழிடமிருந்து பிரிக்கிறார்கள். தமிழா விழித்துக் கொள்!
வந்தியத்தேவன் கூறியது...சந்து காலத்தின் தேவைக்கேற்ற கட்டுரை பல இலத்திரனியல் ஊடகவியளாலர்கள் இன்றைக்கு வலைப்பதிவாளர்களாகவும் இருக்கிறார்கள். அவர்களுக்கு இதன் தொடுப்பை அனுப்புங்கள். அதே நேரம் தமிழ் மொழிக்கு தாங்கள் தான் பலம் என்கின்ற நிறுவனம் நிச்சயம் தங்களை மாற்றாமாட்டார்கள். நிகழ்ச்சிகளுக்கு ஆங்கிலத்தில் பெயர் வைக்குமளவிற்க்கு அவர்களுக்கு மொழிமேல் வெறுப்பு. சிறந்த தமிழ்ப் பேச்சாளர்களைத் தேடுகின்றார்கள் அந்நிககழ்ச்சியின் பெயர் ஆங்கிலத்தில். நீங்கள் இன்னொரு ஊடகத்தில் வேலை செய்வதால் நேரடியாக ஊடகங்களின் பெயர்களை கூறுவதைத் தவிர்க்கின்றேன்.இன்னொரு ஜெயம்கொண்ட வானொலியில் இரவில் விளையாட்டுச் செய்திகளைத் தொகுத்துத்தருபவர் அவசரமாக அடுத்த வேலைக்கு போவதைப்போல மிகவும் அவசரமாக வாசிப்பார். முற்றுப்புள்ளி கால்ப்புள்ளி எதுவும் இல்லை. அதுமட்டுமல்ல சிலவேளைகளில் எழுவாய், பயனிலை கூட இருப்பதில்லை. இலங்கை அணி பற்றிச் சொல்லிக்கொண்டே இங்கிலாந்து அணியின் தகவல்களையும் சேர்த்துச் சொல்லி நேயர்களைக் குழப்புகின்றார்.
சந்ரு கூறியது...//வந்தியத்தேவன் கூறியது... // நான் மேலே குறிப்பிட்ட தொடருந்து, சிற்றுந்து, உலங்குவானூர்தி, துவிச்சக்கர வண்டி, மிதி வண்டி, காலுந்து, வெதுப்பி, குளிர்களி.. போன்ற சொற்களை அறிமுகப்படுத்திய பெருமைக்குரியவர் லோஷன் என்று சொன்னால் மிகையாகாது.//மன்னிக்கவும் லோஷன் அறிவிப்பாளராக வரமுன்னரே இந்தச் சொற்கள் பாவனைக்கு வந்துவிட்டன. வீணாக நல்லதொரு அறிவிப்பாளரின் பெயரைக் கெடுப்பதுபோல் இப்படி எழுதுகிறீர்கள். சிலவேளை லோஷனினால் உங்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டிருக்கலாம்.//ஆரம்ப காலங்களிலே இந்த சொற்கள் பயன்பாட்டில் இருந்தாலும். அவற்றை ஊடகந்கலிலெ பயன் படுத்துவது மிக மிகக் குறைவாக இருந்தது என்றே சொல்ல வேண்டும். லோஷன் இதற்கு முதல் பணியாற்றிய உஉடகத்தில்தான் செய்தி அறிக்கைகளில் இந்த சொல்லை பயன்படுத்துவதை கட்டாயப்படுத்தி நடைமுறைப்படுத்தினார்கள் இதில் லோஷன் மட்டுமல்ல அந்த வானொலியின் ஒரு குழு மேற்கொண்டு இருந்தது. அவர்களால்தான் மக்கள் மத்தியில் பிரபல்யப் படுத்தப்பட்டது. அதற்கு முதல் ஊடகங்களிலே பயன் படுத்துவது அரிதாகவே இருந்தது. உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி நண்பரே...
LOSHAN கூறியது...நல்லதொரு கட்டுரை,, தமிழார்வமுள்ளதால் உங்கள் ஆதங்கம் எல்லாம் கொட்டி இருக்கிறீர்கள்..எனினும் மிகப்பெரிய தவறு ஒன்று விட்டுள்ளீர்கள்..நான் உங்களுக்கு ஏற்கெனவே தனிப்பட்ட மின்னஞ்சல் மூலமாக சொல்லி இருந்தேன்..நீங்கள் மேற்குறிப்பிட்ட தமிழ் கலை சொல் வடிவங்களை நான் அறிமுகப்படுத்தவில்லை..எனக்கு முன்னரே அவை பாவனையில் இருந்தன.. ஆனால் அதிகமாக செய்திகளில்.. எமது கூட்டு முயற்சியால்(செய்தி & நிகழ்ச்சிப் பிரிவு) மேலும் அவற்றை செய்திகளில் மட்டுமல்லாமல் நிகழ்ச்சிகளிலும் கொண்டு வந்தோம்..வந்தி சொல்லி இருப்பது மிகச் சரி..chandhru இவ்வாறான தகவல்கள் தரும்போது முன்னோடிகளை மறப்பது அவர்களை அவமதிப்pathu போலானதாகும்.நான் வெகுவிரைவில் இந்த ஊடகங்களில் தமிழ்ப் பிரயோகம் பற்றி எழுதியே ஆகவேண்டும் என்பது போல் இருக்கிறது.வந்தி, மற்ற வானொலிகள் பற்றி நான் விமர்சிப்பது முறையல்ல.. எனினும் எங்களைப் பொறுத்தவரை நேரப் பிரச்சினை ஒரு மிகப்பெரிய சிக்கல்.. முடியுமான கொஞ்ச நேரத்தில் கிடைக்கிற அத்தனை விளையாட்டுத் தகவல்களையும் கொடுக்க வேண்டுமென்பதிலேயே அந்த ஜெயம் கொண்ட எமது வானொலியின் அறிவிப்பாளருக்கு அவசரம்.எனினும் தொடர்ந்து நீங்கள் செவிமடுப்பது மகிழ்ச்சி..சந்துரு, இன்று எனக்கிருந்த அவசர வேலைகளின் மத்தியிலும் உங்கள் பதிவில் பிழை கண்டதாலேயே உடனடியாகப் பின்னூட்டமிட்டேன்.
வந்தியத்தேவன் கூறியது...//சந்ரு கூறியது...ஆரம்ப காலங்களிலே இந்த சொற்கள் பயன்பாட்டில் இருந்தாலும். அவற்றை ஊடகந்கலிலெ பயன் படுத்துவது மிக மிகக் குறைவாக இருந்தது என்றே சொல்ல வேண்டும். லோஷன் இதற்கு முதல் பணியாற்றிய உஉடகத்தில்தான் செய்தி அறிக்கைகளில் இந்த சொல்லை பயன்படுத்துவதை கட்டாயப்படுத்தி நடைமுறைப்படுத்தினார்கள் இதில் லோஷன் மட்டுமல்ல அந்த வானொலியின் ஒரு குழு மேற்கொண்டு இருந்தது. அவர்களால்தான் மக்கள் மத்தியில் பிரபல்யப் படுத்தப்பட்டது. அதற்கு முதல் ஊடகங்களிலே பயன் படுத்துவது அரிதாகவே இருந்தது.//யாழ்ப்பாணத்தில் நாம் சர்வசாதாரணமாக 90களின் ஆரம்பங்களில் இந்தச் சொற்களைப் பாவித்தோம். அப்போதுதான் பெரும்பாலான கடைகளின் பெயர்கூட தமிழில் மாறியிருந்தது. சுபாஷ் வெதுப்பகம், ஸ்ரீ மைதிலி நகைப்பூங்கா, மருதம் உந்துருளி நிலையம். லிங்கம் குளிர்களி நிலையம் என பல நிறுவனங்கள் தங்கள் பெயர்களை மாற்றினார்கள். சக்தியின் ஆரம்பகாலத்தில் திரு,எழில்வேந்தனும் லோஷனும் இணைந்து நடத்திய வணாக்கம் தாயகம் நிகழ்ச்சியில் ஆங்கிலவார்த்தைகளுக்கான தமிழ்ப் பெயர்கள், ஊர் பெயர் காரணங்கள் போன்ற பல சுவாரஸ்யமான நிகழ்ச்சிகள் நடத்தியபோது இந்தப்பெயர்களை அடிக்கடி பாவித்தார்கள். சிலவேளை வடக்குகிழக்கு தவிர்ந்த ஏனைய பிரதேச மக்களுக்கு இவர்களினால் இந்தப்பெயர்கள் பரவலாக வெளிக்கொணரப்பட்டிருக்கலாம்.
சந்ரு கூறியது...நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மையே வந்தியத்தேவன் இன்று என்ன பேசுகின்றோம் என்று தெரியாமலே சில அறிவிப்பாளர்கள் பேசுவதை பார்த்திருக்கின்றோம். விளையாட்டு செய்திகளை வாசிக்கும் அறிவிப்பாளர்கள் சிலர் பிழை விடுவதற்குக் காரணன் என்னை பொறுத்தவரை அவர்கள் இன்னுமொரு அறிவிப்பாளர் விளையாட்டுச் செய்தி வாசிப்பதுபோல் தாங்களும் வாசிக்க வேண்டும் என்று நினைக்கின்றார்கள். ஆனால் அது விளையாட்டு செய்தியாக இல்லாமல் மற்றவரை தொந்தரவு செய்யும் செய்தியாக மாறுகிறது. இது எல்லா அறிவிப்பாளர்களும் விடு தவறு இல்லை. ஒரு சிலர் விடும் தவறுதான். ஆனால் அவர்களோ தங்களை விட வேறு எவரும் இல்லை என்று தலைக்கனம் பிடித்து நடப்பதனையும் நான் கண்டு கொள்ளாமல் இல்லை. உங்கள் தமிழ் பற்றை பாராட்டுகிறேன் நண்பரே. இவற்றை பார்த்தாவது திருந்துவார்களா இவர்கள். உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி நண்பரே...
வந்தியத்தேவன் கூறியது...//வந்தி, மற்ற வானொலிகள் பற்றி நான் விமர்சிப்பது முறையல்ல.. எனினும் எங்களைப் பொறுத்தவரை நேரப் பிரச்சினை ஒரு மிகப்பெரிய சிக்கல்.. முடியுமான கொஞ்ச நேரத்தில் கிடைக்கிற அத்தனை விளையாட்டுத் தகவல்களையும் கொடுக்க வேண்டுமென்பதிலேயே அந்த ஜெயம் கொண்ட எமது வானொலியின் அறிவிப்பாளருக்கு அவசரம்.//லோஷன் அனைவருக்கும் நேரம் பிரச்சனைக்குரியது. பத்திரிகைகளில் விளையாட்டுச் செய்திகளைத் தேடிப்படிப்பது கஸ்டம். சகல பத்திரிகைகளிலும் அதற்கென பிரத்தியேக பக்கம் இருப்பினும் நேரம் கிடைக்காதவர்கள் தங்கள் மற்ற வேலைகளுடன் வானொலிகேட்டுக்கொண்டே என்னவும் செய்யலாம், இதுதான் வானொலிக்கும் தொலைக்காட்சிக்கும் உள்ளவித்தியாசம். பெரும்பாலும் நான் பயணம் செய்யும் போது ஏதாவது ஒரு வானொலி பெரும்பாலும் ஜெயம் கொண்ட வானொலி கேட்பது வழக்கம். அப்படிக்கேட்கும் போது பல‌வேளைகளில் புதிய பல செய்திகளை விளையாட்டுப் பகுதியில் தருவார்கள். அந்த வானொலியில் அறிவிப்பாளர்கள் பலர் மூன்றெழுத்துபபெயர் கொண்டவர்களாக இருப்பதால் அவரின் பெயரை சூசகமாக குறிப்பிடமுடியாது. அவர்மட்டும் தான் பெரும்பாலும் அவசரகதியில் செய்திகளைத் தருபவர், ஏனையவர்கள் கொஞ்சம் ஆறுதலாகத் தான் செய்திகள் தருகின்றார்கள். சம்பந்தப்பட்டவர்கள் ஆவண செய்தார்கள் என்றால் என்னைப்போன்ற வானொலி நேயர்களுக்கு நல்ல செய்திகள் பல கிடைக்கும்.

சந்ரு கூறியது...மன்னிக்க வேண்டும் லோஷன் அண்ணா... அவசரத்தில் தவறு விட்டு விட்டேன். மக்கள் மத்தியிலே பிரபல்யப்படுத்திய பெருமை என்றே குறிப்பிட்டிருக்க வேண்டும்.

வந்தியத்தேவன் கூறியது...இதனைவிட இன்னொரு விடயம் சந்ரு பெரும்பாலான செய்தி வாசிப்பவர்கள்(குறிப்பாக தொலைக்காட்சிகளில்) நாட்டு நடப்புகள், வெளிநாட்டுத் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள் பெயர்களை கடித்துக் குதறுவார்கள். ஜெனீவாவை நாடென்ற மிகப்பெரிய பிரபலமும் நம் நாட்டில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருக்கின்றார். இவர்களுக்கு செய்தியின் விடயம் முதலே தெரிந்திருந்தால் ஓரளவு சில இடங்களில் தவறு வந்தால் சமாளிக்கலாம். ஒருமுறை ஒரு தொலைக்காட்சியில் வீரேந்திர சேவாக்கை வீரேந்திர வெசாக் என வாசித்தார்கள். அந்த செய்திவாசிக்கும் காலம் வெசாக் காலம். இன்றைக்கும் அந்த செய்திவாசிப்பாளினி திரையில் வந்தால் வீட்டில் அவரை வெசாக் என்றே அழைப்போம். தவறுகள் பலருக்கும் ஏற்படும் ஆனால் சில தவறுகள் செய்தியின் அர்த்ததையே மாற்றிவிடும். ஒரு பிரபல எழுத்துஊடகத்தில் ஒருமுறை முன்னாள் ஜனாதிபதி அவர்கள் நாடு திரும்பியதை " ஜனாதிபதி சனியன் நாடு திரும்புகின்றார்" என செய்தியாக வெளியிட்டார்கள். சனியன்று என்பது றுவை அச்சுப்பேய் தின்று சனியனாகிவிட்டது. அதேபோல் பிரபல அமைச்சரின் 45 பிறந்தநாளை "அமைச்சருக்கு இன்று 45" எனவும் செய்தியிட்டார்கள்.
dharshini கூறியது...நான் 3,4 வருடங்களுக்கு முன்பெல்லாம் இலங்கை வானொலி அதிகமாக கேட்டுக்கொன்டிருப்பேன்.. அதன் முக்கிய காரனமே அழகான தமிழ் உச்சரிப்புகளே என்னை கவர்ந்தது. சரியாக சொன்னீர்கள் சந்ரு.
நிலாமதி கூறியது...தமிழ் மொழியின் பற்றுள்ள உங்களது ஆக்கம் மிக நன்று பிழைகளை பிழை என்றே தெரியாதவர்களும் இருக்கிறார்கள். காலபோக்கில் ஆங்கில உச்சரிப்பே தமிழாகி விடுகிறது . அது தமிழ் சொல் அல்ல என்றே தெரியாமல் இருக்கிறது. வானொலிகளில் உண்மை தமிழை புகுத்தும் உங்க நட்புகளுக்கு என் பாராட்டை தெரிவித்து விடுங்கள். மொழி வளர்ச்சி பெற்றால் தான் தமிழ் வளரும். தமிழை வளர்ப்போம் தமிழனாக் வாழ்வோம். தமிழ் வாழ்க .

சந்ரு கூறியது...நான் இந்த இடத்திலே சில விடயங்களை குறிப்பிட்டாக வேண்டும் தொடருந்து, சிற்றுந்து, உலங்குவானூர்தி, துவிச்சக்கர வண்டி, மிதி வண்டி, காலுந்து, வெதுப்பி, குளிர்களி.. போன்ற சொற்களை அறிமுகப் படுத்திய பெருமை லோஷனையும் அவரது குழுவினையும் சாரும் என்று குறிப்பிட்டிருந்தேன். வந்தி குறிப்பிட்டது போல் யாழ்ப்பாணம் போன்ற பகுதிகளிலே ஆரம்ப காலங்களில் இந்தச் சொற்கள் பாவனையில் இருந்தது உண்மையே. காலப்போக்கில் நாகரீகம் என்ற போர்வையில் இந்த சொற்கள் மறக்கப்பட்டு வந்தது என்பது உண்மையே. இச் சொற்களை பாவிப்பது மிகவும் அரிதாக இருந்த வேளை இச் சொற்களை மீண்டும் பாவனைக்கு கொண்டுவர வேண்டும் என்று லோஷன் இதற்கு முன்னர் பணியாற்றிய வானொலி நிலையத்தின் ஒரு குழுவினரின் முயற்சியின் பயனாக அந்த வானொலியின் செய்திகளில் இந்த சொற்கள் பயன்படுத்துவது வழக்கத்திற்கு வந்தது. மக்களின் பயன் பாட்டில் இருந்து மருவி வந்த இந்த சொற்களை மீண்டும் மக்கள் மத்தியில் பிரபல்யப்படுத்தியவர்களுள் லோஷனும் அவர்களது ஒரு குழுவினரும் என்பது மறுக்கமுடியாது. நேற்று லோஷன் அண்ணா எனக்கு அனுப்பிய மின்னஞ்சலில் தனது பெயரை குறிப்பிட வேண்டாம் என்று சொல்லி இருந்தார். என்பதனையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

வந்தியத்தேவன் கூறியது...சந்ரு உங்களுக்கான சில பதில்கள் இந்தப் பதிவில் இருக்கின்றது. http://enularalkal.blogspot.com/2009/07/blog-post_29.html

குறை ஒன்றும் இல்லை !!! கூறியது...//தமிழ் மொழியை வளர்ப்பது யார்? தமிழ் மொழியை கொலை செய்வது யார்?..//மற்ற மொழி கற்றவர் கூட கற்க ஆசைப்படும் தமிழ் மொழியை கொலை செய்வது தமிழர்களான நாமே !!!

வால்பையன் கூறியது...//விடயத்துக்கு//இது விஷயம்!சரி வடமொழி எழுத்து வேணாம்!விசயம்னு சொல்லலாமே!ஏன் விடயம்!அப்போ விஷத்தை விடம்னு சொல்லுவிங்களா?(நன்றி:ஆதிமூலகிருஷ்ணன்)
பெயரில்லா கூறியது...//வால்பையன் சொன்னது…//விடயத்துக்கு//அப்போ விஷத்தை விடம்னு சொல்லுவிங்களா?//வால்ப்பையன் அவர்களே விஷத்துக்கு விடம் என்ற தமிழ்ப் பெயர் இருப்பது தங்களுக்குத் தெரியாதா? ஆலகாலவிசமுண்ட சிவனை விடமுண்ட கண்டன் என்பார்கள். என்ன செய்வது ஆங்கிலத்திலே தவழ்ந்து ஆங்கிலேயர்கள் போல வாழ நினைக்கின்ற வான்கோழிகளுக்கு எங்கள் தமிழ் சிரிப்பாகத் தான் இருக்கும்.

வால்பையன் கூறியது...//ஆங்கிலத்திலே தவழ்ந்து ஆங்கிலேயர்கள் போல வாழ நினைக்கின்ற வான்கோழிகளுக்கு எங்கள் தமிழ் சிரிப்பாகத் தான் இருக்கும்.//நான் ஊமையா பொறந்துருக்க வேண்டியது தெரியாத்தனமா பேசறா மாதிரி பொறந்துட்டேன்!மத்தபடி எனக்கு தெரிந்ததெல்லாம் தமிழ்,தமில்,தமிள்,டமில் மட்டுமே!

Maximum India கூறியது...தமிழ் மொழி மீது உங்களுக்கு இருக்கும் அக்கறையையும் அன்பையும் பார்க்கும் போது ஆச்சரியமாக உள்ளது. உங்களைப் போன்றவர்கள் பல்லாயிரம் காலம் கட்டிக் காத்த நமது தமிழ் இன்னும் பல ஆயிரம் ஆண்டு காலம் வாழும் என்பது திண்ணம். சமீபத்தில் ஒரு பன்னாட்டு நிகழ்ச்சி ஒன்றில் ஒரு இலங்கை தமிழ் பெண்ணை சந்தித்தேன். அவருடைய தமிழை கேட்க ஆனந்தமாக இருந்தது. அவரை திரும்பத் திரும்ப தமிழில் உரையாட சொல்லி அமுதெனும் தமிழை புசித்தேன். தமிழை இன்று தூய்மை மாறாமல் வைத்திருப்பதில் பெரிய பங்கு இலங்கைத் தமிழர்களுக்குத்தான் உரியது என்று நினைக்கிறேன்.இன்னும் பல நல்ல பதிவுகள் இட வாழ்த்துக்கள்.அதே சமயம், பாரதி சொன்ன படி, பல நுண்ணிய கலைகள் இன்று உலகம் முழுக்க உருவாகிக் கொண்டே வருகின்றன. அந்த கலைகளை தமிழர்கள் கற்க வேண்டும். அந்த கலைகள் உருவாகி உள்ள மொழிகளை மதிக்க வேண்டும், அந்த மொழிகளை கற்க வேண்டும் மற்றும் அவற்றிலுள்ள நல்ல கருத்துக்களை தமிழுக்கு கொண்டு வந்து தமிழை இன்னும் வளமாக்க வேண்டும். வளமாகும் தமிழ் மூலம் தமிழரின் வாழ்வும் வளமாக வேண்டும். தமிழைப் போலவே தமிழர் நல்வாழ்வின் மீதும் அக்கறை கொண்ட எனது இந்த கருத்துக்களில் எந்த ஒரு மாறுதலும் இல்லை. நன்றி.

ஜெட்லி கூறியது...நண்பர் சந்துரு,உங்கள் கருத்துக்கள் அனைத்தையும் வழிமொழிகிறேன்.ஆனால் நீங்கள் சொல்வது போல் சில அறிவிப்பாளர்கள் தமிழ் மொழியை கொலை செய்வது உண்மை மற்றும் ஆங்கில மொழியை பின்பற்றுவதும் உண்மை......அவர்களாகவே திருந்த வேண்டும் அல்லது அவர்களின் மேல் அதிகாரிகள் முயற்சி செய்ய வேண்டும்.அவர்களுக்கு தேவை பணம்,,,,, அவ்வளவே......

sakthi கூறியது...தொடருந்து, சிற்றுந்து, உலங்குவானூர்தி, துவிச்சக்கர வண்டி, மிதி வண்டி, காலுந்து, வெதுப்பி, குளிர்களி..அழகுத்தமிழ்

sakthi கூறியது...அருமையான கட்டுரை

அக்பர் கூறியது...நல்லதொரு கட்டுரை சந்ரு,மொழியை வளர்ப்பதிலும் , தேய்ப்பதிலும் ஊடகங்களின் பங்கு அதிகம் உண்டு.

Ravee (இரவீ ) கூறியது...நல்ல பதிவு... வாழ்த்துக்கள்.

jothi கூறியது...சந்ரூ இந்த மாதிரி ஒரு கட்டுரை படிக்கிறதே சந்தோசமாய் இருக்கிறது,.. காரணம் சுத்த தமிழில் எழுத நிறைய வார்த்தைகள் தெரியவில்லை. ஒரு நல்ல பதிவை தந்தமைக்கு

அத்திவெட்டி ஜோதிபாரதி கூறியது...நிறைய தகவல்களைக் கொண்ட நல்ல கட்டுரை சந்துரு.

ஆ.ஞானசேகரன் கூறியது...//ஊடகங்களால் முடியாதது எதுவும் இல்லை. தமிழை வளர்ப்பதிலே பல ஊடகவியலாளர்கள் பாடுபட்டிருக்கின்றார்கள். அதன் பயனாகவே இன்று இந்தச் சொற்கள் மக்களால் பயன்படுத்தப் படுகின்றன.//உண்மைதான் நண்பா.. இன்னும் வேற்று மொழி சொற்களை களைய வேண்டும் என்பதுதான் என் கோரிக்கை. அப்படிபட்டி சேவையை ஊடகங்களால் மட்டுமே செய்ய முடியும் அதற்கு அரசின் பரிந்துரைகளும் அவசியம்.என்னுடைய இடுகை இந்த அளவிற்கு தாக்கம் ஏற்படுத்துள்ளது மிக்க மகிழ்ச்சியே. இதுவும் ஒரு நல்ல நோக்கம் என்பதே இதன் சிறப்பு... பாராட்டுகள் நண்பா..

KABEER ANBAN கூறியது...தங்களது கவலை நியாமானதே. தமிழை வளர்க்காமல் போனாலும் தொலைக்காமல் இருந்தால் அதுவே பெரும் சேவை. :)இதே கருத்தில் எனது பழைய கட்டுரை ஒன்றை முள்ளால் எடு என்ற தலைப்பில் காணலாம்///தமிழை கொலை செய்வதில்லை சில அறிவிப்பாளர்கள் இருக்கின்றார்கள் ///'கொலை செய்வதென்றே’ என்று வந்திருக்க வேண்டுமோ ? வாழ்த்துக்கள்

சூர்யா ௧ண்ணன் கூறியது...நல்லதொரு கட்டுரை சந்ரு,//மொழியை வளர்ப்பதிலும் , தேய்ப்பதிலும் ஊடகங்களின் பங்கு அதிகம் உண்டு.//தமிழார்வமுள்ள நம் பதிவர்கள் உள்ள வரையில்,மெல்லத் தமிழ் இனி சாகாதுவெல்லத் தமிழ் இனி வெல்லும்.

ஆ.ஞானசேகரன் கூறியது...ஊடகங்கள் மூலம் பல கலைச்சொற்கள் மக்களை சென்றுள்ளதை நான் ஒப்புக்கொள்கின்றென். அதே சமயம் தமிழில் கலந்துள்ள வடமொழி சொல், ஆங்கிலம், மேலும் பக்கத்து மாநில மொழி சொற்கள் கலந்துள்ளது. ஏன் இலங்கை தமிழில் சிங்களம் கலந்தும் இருக்கு என்பதும் உண்மைதான். இவற்றை எல்லாம் தனி ஒரு மனிதனால் திட்டம் போட்டி மாற்றம் கொண்டு வரமுடியாத காரியம். ஆனால் ஊடகங்களால் அப்படிப்பட்ட மாற்றத்தை எழிதாக கொண்டு வர முடியும் என்பதுதான் என் எண்ணங்கள். அதை ஏன் செய்யக்கூடாது? அரசும் ஏன் பரிந்துரை செய்யக்கூடாது? என்ற கேள்விகள்தான்.. ஒரு சில ஊடகங்கள் அப்படிபட்ட சேவைகளை செய்வது, உங்களை போன்றவர்கள் செய்வதும் பாராட்டக்கூடியது. அதே சமயம் போதிய அளவிற்கு எல்லா ஊடகங்களும் செய்ய மறுக்கப்படுகின்றதுதான் வேதனை...நல்ல இடுகை நண்பா பாராட்டுகள்
Suresh Kumar கூறியது...அருமையான இடுகை எதுவுமே நடைமுறையில் இருந்தால் சில நாட்கள் கடினமாக இருக்கலாம் பின்னர் பழகி விடும் . தமிழ் வார்த்தைகளை ஏட்டிலே வைப்பதை விட நடை முறையில் கொண்டு வந்தால் தான் அனைவரும் அறிய முடியும் . அது ஊடகங்களால் மட்டும் தான் முடியும் . இதை போன்ற விழிப்புணர்வு இடுகைகள் பல எழுதி ஊடக்னகளுக்கு அறிவுறுத்துவோம்
அ.மு.செய்யது கூறியது...அதிரடி பதிவு...விவாதங்களை வேடிக்கை பார்த்து விட்டு வருகிறேன்.
RAD MADHAV கூறியது...நல்ல இடுகை நண்பா பாராட்டுகள்.....
பெயரில்லா கூறியது...சந்ரு இதைப் பற்றிப் பேசப்பேச பேசிக்கொண்டும்,எழுத எழுத எழுதிக்கொண்டும் இருக்கலாம் முடிவு கிடையாது.இந்த இடுகையை பார்தாவதுதிருந்தினால் நன்று.சுட்டிக் காட்டுவதில்தவறில்லை தொடருங்கள்.ரி.கே
S.A. நவாஸுதீன் கூறியது...அ.மு.செய்யது சொன்னது…அதிரடி பதிவு...விவாதங்களை வேடிக்கை பார்த்து விட்டு வருகிறேன்.நானும்
இளைய அப்துல்லாஹ் கூறியது...உண்மையில் ஐரோப்பாவில் இருக்கும் தமிழ் ஊடகங்கள் நல்ல தமிழில் உரையாடுகின்றன. இலங்கை தமிழ் பத்திரிகைககள் நல்ல மொழி வளத்தை இன்னும் பாதுகாக்கின்றன. தமிழக இலத்திரனியல் ஊடகங்களை விட்டு விடுவோம். மக்கள் தொ காட்சி நல்லது. ஊடகங்கள்தான் மொழிக்கு ஆதாரம்உங்கள் கருத்து மிக்க நல்லது
Mrs.Faizakader கூறியது...உங்களுக்கு தமிழ்மொழி மீது இருக்கும் அன்பையும் அக்கறையையும் பார்க்கும் போது வியப்பாக உள்ளது. மிகவும் அருமையான கட்டுரை.
ஜெகநாதன் கூறியது...அன்பு சந்ரு,சீரிய முயற்சி. வாழ்த்துக்கள்! நான் நினைப்பது, 1. மொழி மற்ற மொழிகளோடு இணக்கமாக இருப்பது அதன் வளர்ச்சியைக் குறிக்கும்2. பேச்சுத் தமிழில் மொழிக்கலப்பை பாவேந்தர் பாரதிதாசன் ஆதரித்திருக்கிறார்!!3. இலத்திரனியல் என்றால் என்ன? இந்த வார்த்தையின் வயது என்ன? இந்தமாதிரி அருஞ்சொற்பொருள்களின் அகராதி எங்கு கிடைக்கும்? இணையத்தில் ஓசியில் கிடைக்குமா? (​மெர்ஸலாகிறது-க்கு இணையத்தில விளக்கம், அர்த்தம் கிடைக்குது)3.5. தங்கள் கருத்துக்கு மாற்றாகவோ, இல்லை மனதைப் புண்படுத்துவதாகவோ இருப்பின் இதற்கு மேல் படிக்காதீங்க! எனக்கு மொழித் தூய்மையை விட சந்ருவின் அன்புதான் முக்கியம்.4. //மொழி கலப்பதை தடுப்பதிலும், தமிழ் மொழியை வளர்ப்பதிலும் ஊடகங்களின் பங்கு அளப்பெரியது// ​நல்ல கருத்து. ஆனால், ஊடகம் இந்த அளவுகோலில் செயல்பட்டால் ​மொழியறிவு இருக்கும் தொழிலறிவு வளராது. (flightக்கு தமிழ் வார்த்தை இருக்கு, cockpit, fins, rudder, propeller. kinetic velocity, aerofoil, போன்ற தொழில் நுட்பங்களுக்கு புதுசாத்தான் உருவாக்கணும் - அதிலேயும் ஒரே அர்த்ததுக்கு பல பிரயோகங்கள் வர வாய்ப்புள்ளது) ஊடகங்கள் என்பதைவிட கல்விமுறை என்பதே மொழிச்செழுமைக்கு முக்கியமானது ​5. யெஸ். மொழிப்பாதுகாப்பு என்று யாரும் மந்திரித்துவிட்டால், நம்பிடாதீங்க சந்ரு. மொழி யாராலும் பாதுகாக்கபட வேண்டியதில்லை. ​செழுமைப்படுத்தப்பட வேண்டியது. 5.1. ஸாரி. எனக்கு அவ்வளவா சுத்தத் தமிழ்ல எழுதத் தெரியாது - வராது.5.2. இதுமாதிரியான தமிழ்ல எழுதுனா படிக்கிறது ஈஸியா இருக்கும்னு நினைக்கிறேன்5.3. ஒரு வார்த்தைய கொடுத்து இது அக்மார்க் தமிழ் வார்த்தைதான் தரப்பரிசோதனை ​செய்யவும் தெரியாது.5.4. சந்திப்பிழைகளை(ச்?)) சந்திக்கிறேன் - இதுக்கும் இணையத்தில தேடுறேன் - தெரிந்தால் சொல்லவும்5.5. சீரியஸ் இடுகையில லந்து பண்றான்னு நினைக்காதீங்க, இப்பவும் சந்ருவின் அன்புதான் முக்கியம்னு சொல்லிக்கிறேன்.. ​தொடரப் போறீங்களா!!?(.....)(இங்கு பின்னூட்டம் ​போடாமல் இதன் முந்திய இடுகையில் போட்டுவிட்டேன்)
ஜெகநாதன் கூறியது...6. மொழிப்​பெயர்ப்புகளால கூட மொழி​செழுமையாகும்னு நினைக்கிறேன். என்னை தமிழிலில் ஆர்வமா இலக்கியத்தைப் படிக்கத் தூண்டியது, காமிக்ஸ் புத்தகங்கள் அப்புறம் ரஷ்ய இலக்கியங்கள். 6.5 காமிக்ஸ்ல டெக்ஸ்வில்லர், ஹுப்ஹுப்ஹீரே, நவ்ஜோ, பிஸ்டல் பின் ரஷ்ய இலக்கியத்தில வர்ற கெழாக்குகள், வோட்கா, இனியாக்​போன்ற பதங்களும் ​பொருள்களும் பிற​மொழிக்கலப்புதானே? ஆனா இதை தவிர்த்து இந்த இலக்கியத்தை அணுக சாத்தியமான்னு தெரியலே. 7. ​மொழிக்கலப்புன்னா ஏன் இங்கிலீஷை மட்டும் நினைக்கிறோம்? சாவி (திறவுகோல்தான்) ஒரு டச்சு வார்த்தைன்னு கேள்விப்பட்டிருக்கேன்8. நான் பொறியியல்... வேணாம் மெக்கானிக்கல் இன்ஜினீரிங் படிச்சிருக்கேன். இன்னும் ​மேற்படிப்பெல்லாம் படிக்க வேண்டியிருக்கு. முனைவர் பட்டம் வரைக்கும் கூட ​போகலாம்! இதுவரைக்கும் டிப்ளமோ தாண்டி தமிழ் பாடபுத்தகத்தில வந்ததில்ல (அந்த தமிழுக்கு இங்கிலீஷையே படிச்சுக்கலாம்) இந்த மாதிரி டெக்னிக்கல் படிப்புக்கு நான் இங்கிலீஷைதான் கட்டிண்டு அழணும். அப்படி தமிழ்ல இன்ஜினியரிங் பி. ஹெச்டி பண்ண வழியிருக்கா சொல்லுங்க?8.1. எனக்கு(ம்) ழ,ல,ள உச்சரிப்பெல்லாம் சுத்தமா வராது. ​8.2. ல - பிரச்சினையில்ல8.3. குவாட்டர் மாதிரி அடிச்சிருந்தேன்னா ழ நழ்ழாவே வரும்8.4. ள - யாராச்சும் பாடம் எடுத்தா உண்டு8.5. எழுதும் போது எந்த பிரச்சினையும் இல்லை9. நான் உன்னைய இங்கிலீஷ் படிக்க வேணாம்னு சொல்லலியேன்னு கேக்கறீங்கதானே? இப்படி பிற​மொழியில் பலவருஷம் படிச்சு, கேட்டு, எழுதிக்கிட்டு இருந்தா அந்த மொழி​யோட தாக்கம் தாய்மொழியிலும் வரத்தானே செய்யும்? இங்க யார அல்லது எத குத்தம் சொல்றது?
ஜெகநாதன் கூறியது...10. மொழி​பெயர்க்கிறவங்க ஏன் தொழில்நுட்பம் பக்கம் அதிக கவனம் எடுக்கிறதில்ல? நான் ஒரேயொரு ரஷ்ய மொழிப்​பெயர்ப்பு அறிவியல் புத்தகம் படிச்சிருக்கேன் (ரிலேட்டிவிட்டி பத்தி லெந்தாவு எழுதினது)10.1. இந்த மொழிப் பெயர்ப்பு ஆளுகளுக்கு ஒரு ஆணியக் கூட சுத்தியல் வச்சு அடிக்கத் ​தெரியாது. அப்புறம் எப்படி டெக்னிகல் பக்கம் வருவாங்க?10.2. அதுக்கு தொழில்நுட்ப வல்லுநர்கள், மொழியியல் ஆய்வாளர்கள் என ஒரு sync up ​வேணும். எப்ப / எப்படி சாத்தியப்படும்னு தெரியலே (நடந்திருந்தால் தெரியப்படுத்துக)10.3. சைனாக்காரங்க நல்ல​வேளையா இங்கிலீஷ் இப்பத்தான் ஒழுங்கா கத்து, வாய் வழியா பேச டிரை பண்றாங்க. இத ஒரு நூற்றாண்டு முன்னாடியே செஞ்சிருந்தாங்கன்னா, ITல அவங்க நம்பர்.1 ஆயிருப்பாங்க. கம்ப்யூட்டர் இந்தியாவில இப்படிப் பரவியிருக்காது. நம்ம கருத்துக்களை போற​போக்கில இடுகையா போட சான்ஸே இருந்திருக்காது. வேணா எழுதி ஏதாவது பத்திரிக்கைக்கு போஸ்ட் பண்ணிட்டு நகத்தை கடிச்சிட்டு உக்காந்திருக்கலாம்.10.4. பிற​மொழிக்கலப்பில்லாம எழுதறதும் பேசறதும் ஒரு வித்தையா எடுத்துச் செய்ய ஆரம்பிச்சவங்க நிறைய பேரு இலக்கியத்தில காணாம போயிருக்காங்க (பேரெல்லாம் தெரியாது - அந்தளவுக்கு காணாம போயிருக்காங்க..!)10.5. எப்படிச் சொல்றேன்னா, வாசகனுக்கு இணக்கமான நடையில எழுதறவங்கதான் நிலைத்து நிற்கிறார்கள் (சுஜாதா எனக்குத் தெரிஞ்சு ஒரு ஆங்கில வார்த்தை கூட இல்லாமா ஒரு கதை எழுதியிருக்காரு, என்ன பேரு சொல்லுங்க பாப்பம்? கி.ரா எழுத்து அப்படியே வட்டாரம் + பிற மொழிக்கலப்பு இருக்கு.. ஆனா இதைத் தவிர்த்திட்டு அந்த இலக்கியத்தை எழுத முடியுமா?)10.6. மொழி​ஒரு சாதனம். நல்ல இலக்கியம்தான் ஒரு மொழியை மேம்படுத்தும். 10.6.1. தயவுசெஞ்சு வரிஞ்சு கட்டிக்கிட்டு சண்டைக்கு வராதீங்க - ஏன்னா என் கருத்து சுதந்திரம் இந்த பயத்தாலேயே பாதிக்கப்படுது (அ) பாதி செத்திடுது!10.7. ஒரு வார்த்தையோட மூலம் என்னன்னு தேடிக்கிட்டு போனா.. வரலாறு, கல்வெட்டு, ​போர்-படையெடுப்பு, பிராகிருதி மொழி, பாலி, சமஸ்கிருதம், சரஸ்வதி ஆறுன்னு தாறுமாறா ஓடி எங்கியோ போயி நிக்க வேண்டியதா போயிடும்10.8. ஆவணம், படிப்பு, ஆய்வு, சுயஅர்ப்பணிப்பு, தீவிரம், களப்பணி, பல்துறை அறிவு - இந்த மாதிரி எந்த கூறுகளும் இல்லாம தமிழ் பாதுகாப்பு - தூய்மைன்னு பேசறவங்க (10.6.1க்கு போயிட்டு வந்து தொடரவும்) தான் தமிழ் மொழியின் பேராபத்து. மொழிய வச்சு அரசியல் பண்றவங்கள நாமதான் அடையாளம் தெரிஞ்சுக்கணும்.10.9. ஒரு மொழிக்கு மொழிக்கொலைங்கிறது பிற​மொழிக்கலப்பால வராது (அ. முத்துலிங்கம் எழுதின ஒரு கதை உயிர்மையில் வந்தது. படிச்சுப்பாருங்க) பிற மொழி பற்றிய அறிவு இல்லைங்கிறதுதான் தற்கொலைக்கு சமம்.10.10. கடைசியா (அப்பாடா..!) ஒரு குட்டிக்கதை: ஒருத்தன் குளக்கரை பக்கமா புதையல் இருக்குன்னு தெரிஞ்சு பூமியத் தோண்ட ஆரம்பிச்சானாம்.​தோண்டுனான் ​தோண்டுனான் தோண்டிக்கிட்டே இருந்தானாம். அவன் பண்ணுனது பரவலா தோண்டாம ஒரே குழியையே ஆழமா தோண்டிக்கிட்டு இருந்ததுதான். கடைசிலே பாத்தா குழிதான் ஆழமாச்சு. புதையல் கிடைக்கலே. தோண்டுனது போதும்டா மேலே ஏறலாம்னு பாத்தா ​ரொம்ப ஆழமாயிருக்கு. கத்தி கத்தி பாத்தான். பாவம் யாருக்குமே கேக்கலே.
வந்தியத்தேவன் கூறியது...//. //மொழி கலப்பதை தடுப்பதிலும், தமிழ் மொழியை வளர்ப்பதிலும் ஊடகங்களின் பங்கு அளப்பெரியது// ​நல்ல கருத்து. ஆனால், ஊடகம் இந்த அளவுகோலில் செயல்பட்டால் ​மொழியறிவு இருக்கும் தொழிலறிவு வளராது. (flightக்கு தமிழ் வார்த்தை இருக்கு, cockpit, fins, rudder, propeller. kinetic velocity, aerofoil, போன்ற தொழில் நுட்பங்களுக்கு புதுசாத்தான் உருவாக்கணும் ‍ //ஜெகநாதன் எங்கள் நாட்டிலை கணிதம் இரசாயணவியல் பெளதீகவியல் எல்லாம் தமிழில் தான் படித்தோம். நீங்கள் மேலே கூறிய வார்த்தைகளுக்கான தமிழ் எம்மிடம் இருக்கின்றது. தேடிப்பிடித்துதான் தரவேண்டும்.
சந்ரு கூறியது...ஜெகநாதன் உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் முதலில் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன்.. நான் இந்த இடுகையோடு
இந்த விடயத்துக்கு முற்றுப் புள்ளி வைக்கலாம் என்று நினைத்திருந்தேன். பலரும் பல்வேறு பட்ட கருத்துக்களை முன்வைத்துக்கொண்டு இருக்கின்றனர். இன்னும் சில விடயங்களை என்னால் தெளிவு படுத்தப்பட வேண்டி இருக்கின்றது. ஆகவே நான் எனது அடுத்த பதிவில் இது தொடர்பான சில விடயங்களை தெளிவு படுத்துகின்றேன்.
என்.கே.அஷோக்பரன் கூறியது...நல்ல கட்டுரை. நானும் இதைப் பற்றி நிறையக் கவலைப்பட்டிருக்கின்றேன். எல்லாவற்றிலும் கொடுமை என்ன தெரியுமா? தமிழில் 10வீதம் ஆங்கிலம் கலந்தால் பரவாயில்லை ஆனால் இவர்கள் பேச்சில் ஆங்கிலத்தில் 10வீதம் தமிழல்லவா கலந்திருக்கிறது....இந்தப் பதிவைப் படித்தீர்களா? நேரமிருந்தால் படித்துப்பாருங்கள் - http://nkashokbharan.blogspot.com/2009/07/blog-post_07.html
சந்ரு கூறியது...//என்.கே.அஷோக்பரன் கூறியது... நல்ல கட்டுரை. நானும் இதைப் பற்றி நிறையக் கவலைப்பட்டிருக்கின்றேன். எல்லாவற்றிலும் கொடுமை என்ன தெரியுமா? தமிழில் 10வீதம் ஆங்கிலம் கலந்தால் பரவாயில்லை ஆனால் இவர்கள் பேச்சில் ஆங்கிலத்தில் 10வீதம் தமிழல்லவா கலந்திருக்கிறது....இந்தப் பதிவைப் படித்தீர்களா? நேரமிருந்தால் படித்துப்பாருங்கள் - http://nkashokbharan.blogspot.com/2009/07/blog-post_07.html//இப்பொழுதுதான் பார்த்தேன் நண்பரே உங்கள் ஆதங்கமும் இதேதான். உரியவர்கள் திருந்தினால் சரிதான்.அல்லது தமிழ் மொழிக் கொலையினை நிறுத்தினால் சரிதான்.
நண்பர் ஜெகநாதனுக்குரிய பதில்கள் தமிழ் மொழி தமிழ் மொழியாகவே இருக்கிறதா... எனும் இடுகையிலே இருக்கிறது....
read more...