Tuesday, 4 August 2009

வந்தவர்கள் என்ன சொல்லியிருப்பார்கள்...

ஊடகங்களில் தமிழ் கொலை செய்யப் படுகிறதா.. எனும் எனது இடுகை மூலம் பலரும் தமது ஆக்கபூர்வமான கருத்துக்களை பின்னூட்டமாக வழங்கி இருந்தனர்.

பலர் மின்னஞ்சல் மூலமாகவும் தமது கருத்துக்களை வழங்கி இருந்தனர். பல தமிழ்த்துறை சார்ந்தவர்களும் மின்னஞ்சல் அனுப்பியிருந்தனர். எனது பதிவிலே இருக்கின்ற பின்னூட்டங்களை எல்லோரும் பார்க்க வாய்ப்பு இல்லை பின்னூட்டங்களை ஒரு இடுகை பலர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க பின்னூட்டங்கள் இடுகையாக..

பிரபா சொன்னது…
ரொம்ப முக்கியமான விஷயம் சந்ரு, திருந்துவார்கள் என்றால் சரி,,,,,,,

நட்புடன் ஜமால் சொன்னது…
எழுதுகையில்பழைய முறையினை தான் நான் இன்னும் கடைபிடிக்கின்றேன்.இணையத்தில் இன்னும் வரவில்லை.பார்ப்போம் ...

ஹேமா சொன்னது…
சந்ரு தமிழ்மொழி பற்றிய அக்கறையும் கவலையும் நிறைய இருக்கு உங்கள் பதிவிலும் மனதிலும்.சந்தோஷமாயிருக்கு சந்ரு.உங்களைப்போல இளைஞர்கள் தமிழில் அக்கறை இருக்கிறவரை தமிழின் வளைச்சிக்குக் குறைவேயில்லை.மக்கள் தொலைக்காட்சியில் ஜேம்ஸ் வசந்தன் நடாத்தும் தமிழில் பேசலாம் வாருங்கள்.வந்தால் ஒரு பொற்காசு.எப்படி!எங்கள் தாய்த்தமிழில் பேச பணம் கொடுத்து ஊக்கம் கொடுக்கிறார்கள்.ஆனால் அதிலும் 98%வீதமானோர் தோற்றே போகிறார்கள்.இது கவலைக்குரிய விஷயம்தான்.ஆனால் ஈழத்தைப் பொறுத்தவரை இந்தப் பிரச்சனை குறைவு என்றே நினைக்கிறேன்.ஆனால் ஆங்கிலம் கலக்காமல் கதைக்கும் எங்களைப் பரிகாசம் செய்கிறார்களே.என்னசெய்யலாம் சந்ரு !
நாணல் சொன்னது…
நல்ல பதிவு...

நிலாமதி சொன்னது…
காலபோக்கில் தமிழ் திசைமாறி விடுமோ என்று அச்சம் உள்ளது தமிழ் நாடில் வலது இடது என்று ஆட்டோ காரன் கூட ஆங்கிலத்தில் சொன்னால் தான் புரிந்து கொள்கிறான் தமிழும் ஆங்கிலமும் கலந்த வாழ்க்கையாய் போச்சு உங்களை போன்றவர்களின் முயற்சியால் தமிழ் வாழவேண்டும் .நல்லதொரு பதிவு பாராட்டுக்கள்.

பெயரில்லா சொன்னது…
வானொலி{அறிவிப்பாளர்கள்} சிங்கையில் 96.8ல் அழகாக தமிழ்மணக்கிறது,தவழ்கிறது. உலக {சில}தொலைக்காட்சிகளில்தான் கொடிகட்டிப் பறக்கிறது ஆங்கிலம் அதிலும் பேட்டி காண்பதென்றால்சொல்லவே வேண்டாம் ஒன்றிரண்டு சொல்தான் தமிழ் வரும்.திருந்துவார்களா?திருத்தமுடியுமா? என்னதான் இருந்தாலும்நம்ம...பி.எச் அப்துல்ஹமீத் அவர்களை மறக்க முடியுமா?
ரி.கே

மயில் சொன்னது…
உங்கள் பதிவில் இருக்கும் அக்கறை ரொம்ப நல்லா இருக்கு. பிழையின்றி எழுதுத முயற்சி செய்யனும்... ம்ம்.. நன்றி

கும்மாச்சி சொன்னது…
சந்த்ரு உங்கள் கருத்துடன் ஒத்துப்போகிறேன். இன்றைய ஊடகங்களுக்கு மொழியை கட்டிக் காப்பதில் பெரும் பங்கு இருக்கிறது.

ஸ்ரீராம். கூறியது...
மொழி பற்றி பேசும்போது சற்று உணர்ச்சி வசப்படுகிறோம் என்று தோன்றுகிறது. 'ழ'கர, 'ல'கர, 'ள'கர, உச்சரிப்பு சரியாக வராமல் பிரபல நடிகர்கள் முதல் 'தமிழை உயிராகக் கொண்ட' அரசியல் வாதிகள் வரை சிரமப் படுவதைப் பார்க்கிறோம். அது சரிதான். தெளிவாக, பிழை இல்லாமல் பேசவேண்டும் என்பதுவரை சரி. ஆனால், எல்லாவற்றையும் தமிழ்ப் படுத்துகிறேன் என்று 'படுத்துவது' சரியா? உங்கள் பதிவிலேயே 'இலத்திரனியல்' என்ற வார்த்தையின் பொருள் என்ன என்று எதனை பேருக்குப் புரியும்? மிக கவனமாக ஷ வைத தவிர்த்து ட வாக்கினால் போதுமா? மனிதன் இன்னும் இல்லை ஆடைகளோடு வாழவில்லை. காலத்தோடு சேர்ந்து சில மாறுதல்களை ஏற்றால்தான் வளர முடியும் என்பது என் பணிவான கருத்து.

வந்தியத்தேவன் கூறியது...
தமிழகத்துடன் ஒப்பிடும்போது நாம் எவ்வளவோ மேல். சில விஷச் சக்திகள் தமிழ் மொழியைக் கொல்வதற்கென்றே கங்கணம் கட்டிக்கொண்டிருக்கிறார்கள். எழுத்தூடகங்களை விட இலத்திரனியல் ஊடகங்களோ மொழியை வளர்க்க முன்னிற்கவேண்டும் ஆனால் இலங்கையில் இலங்கை ஒளிபரப்புக்கூட்டுத்தாபனத்தின் தென்றல் கூட ஆங்கிலமோகத்திற்க்கு கொஞ்சம் கொஞ்சமாக ஆளாகிக்கொண்டுவ்ருகிறது. ஏனைய வானொலிகளை விமர்சிப்பதே பாவம். ஒரு வானொலி கொஞ்சம் கொஞ்சமாக வெற்றி பெற்றுக்கொண்டுவந்தாலும் சில அறிவிப்பாளினிகள் தமிழில் பேசுகின்றோம் என மொழியைக் கொல்கிறார்கள். தொலைக்காட்சிபற்றிச் சொல்லத்தேவையில்லை. தலைவிரிகோலமாக ஒரே ஒரு அறிவிப்பாளினியை வைத்து பெரும்பாலான நிகழ்ச்சிகளை கொல்கிறார்கள். நிறையப் பேசலாம் ஆனால் ஊடக நண்பர்கள் கோவித்துக்கொள்வார்கள். ஏனென்றால் குறைகளைச் சுட்டிக்காட்டினால் அவர்களுக்கு பிடிக்காது. ஒரு எழுத்தூடகத்தில் ஒரு தொலைக்காட்சியை ஒவ்வொரு வாரமும் கிழிப்பார்கள் ஆனால் அவர்கள் திருந்துகிறபாடாக இல்லை. காரணம் அந்த தொலைக்காட்சியின் முகாமையாளருக்கு தமிழ் தெரியாது.

வந்தியத்தேவன் கூறியது...
ரி,கே அவர்கள் சொன்னதுபோல சிங்கையில் மட்டுமல்ல மலேசியா வானொலிகளிலும் தமிழ் கொடிகட்டிப்பறக்கிறது. சில உலகத் தொலைக்காட்சிகளின் விபச்சாரத்தைப் பார்த்து இலங்கை இலத்திரனியல் ஊடகங்களும் அவர்களின் போக்குக்கு விபச்சாரம் செய்யவிழைகிறார்கள். முளையில் கிள்ளினால் நன்மை கிடைக்கும் இல்லையென்றால் அடுத்த தலைமுறை பன்னித் தமிழ் பேசவேண்டிய நிர்ப்பந்தத்திற்க்கு ஆளாகும்.

பெயரில்லா கூறியது...
சந்ரு என்பது சரியா? சந்த்ரு என்றல்லவா இருக்கவேண்டும்.. --anvarsha..

குறை ஒன்றும் இல்லை !!! கூறியது...
தமிழோ, தமிழரோ கொலை செய்யப்படுவது பற்றி என்ன சொல்ல.....

நேசமித்ரன் கூறியது...
நல்ல சிந்தனை நான் அன்வர்ஷா சொன்னதையும் கேட்க வேண்டும் என்று நினைத்திருந்தேன் தவறில்லையே..?

வால்பையன் கூறியது...
இணையத்தால் தான் தமிழ் கொஞ்சமாவது வாழ்கிறது!படித்த பின் எழுத வாய்ப்பு கிடைக்காத எனக்கு வலைத்தளம் ஒரு வரப்பிரசாதம்!தவறு ஆரம்பத்தில் வரத்தான் செய்யும் உங்களை போல் தமிழ் ஆர்வலர்கள் திருந்தினால் திருந்திகொள்வோம்!

பழமைபேசி கூறியது...
நன்றி... அவ்வப்போது இதுபோன்ற இடுகைகளைக் காணும் போது எழுதுவோருக்கும் இயல்பாய் தமிழ் வந்துவிடும்.

அஜுவத் கூறியது...
சாதாரணமாக பேசும் போது மொழிநடை வேறுபடுகின்றது என்றால் செய்திவாசிப்பாளர்கள் கூட தமிழை கொலை செய்கிறார்கள் பாருங்களேன்.

எவனோ ஒருவன் கூறியது...
நல்ல கருத்துக்கள்.மற்றவர்களை என்ன சொல்ல... நாம் நம் நடையில் கொஞ்சம் முயற்சி செய்வோம்.

எவனோ ஒருவன் கூறியது...
//உங்கள் கருத்துரை சேமிக்கப்பட்டது.தளத்தில் உங்கள் கருத்துரை தோன்றுவதற்கு சில நிமிடங்கள் ஆகலாம். பின் தடமறிதல் கருத்துரை...குழுவிலகவும்22 கருத்துரைகள்இந்த விண்டோவை மூடுக கருத்துரை வடிவத்திற்கு தாவவும்ஒரு அடையாளத்தைத் தேர்வு செய்கவெளியேறுபின் தடமறிதல் கருத்துரைகள் பெயரில்லா//சிலர் பேச மட்டுமே செய்வர். பரவாயில்லை, நீங்கள் செயலிலும் காட்டுகிறீர்கள்.

ஆ.ஞானசேகரன் கூறியது...
//பழமைபேசி சொன்னது…நன்றி... அவ்வப்போது இதுபோன்ற இடுகைகளைக் காணும் போது எழுதுவோருக்கும் இயல்பாய் தமிழ் வந்துவிடும்.//வழிமொழிகின்றேன்...

ஆ.ஞானசேகரன் கூறியது...
நல்ல இடுகை நண்பரே!... நானும் நல்ல தமிழில் எழுத முயற்சிக்கின்றேன்... 15 வருடங்களுக்கு பின் தமிழில் அதுவும் இணையத்தில் எழுதுகின்றேன். பிழைகள் வருகின்றது.. பிழையின்றி எழுத முயற்சிக்கின்றேன்....

Maximum India கூறியது...
அன்புள்ள சந்துரு தமிழை வளர்க்க வில்லையென்றாலும் தமிழை கொலை அதுவும் தமிழர்களே கொலை செய்யக் கூடாது என்ற உங்கள் கருத்து ஏற்றுக் கொள்ளத் தக்கது. அதே சமயம், தமிழ் படுத்துகிறோம் என்ற போர்வையில் ஏற்கனவே வழக்கத்தில் உள்ள தமிழ் சொற்களை சிலர் புதிதாக மாற்றி அமைப்பதையும் என்னால் ஏற்றுக் கொள்ள முடிய வில்லை. மேலும் புதிய கருத்துக்கள் தமிழுக்குள் நுழையும் போது, அந்த கருத்துக்கள் உருவான மொழிச்சொற்களை பயன்படுத்துவதில் தவறில்லை. கருத்துக்கள் தமிழருக்கும் நன்கு தெளிவான பிறகு அதற்கான தமிழ் சொற்கள் தானாகவே உருவாகி விடும். கருத்துக்கள் தெளிவடையும் முன்னரே அவற்றுக்கான தமிழ் சொற்களை திணிக்க முனைவது ஒருவித தெளிவற்ற நிலையையே உருவாக்கும். உதாரணத்திற்கு பொருளாதாரம் பற்றி அதிகம் எழுதும் நான், ஒவ்வொரு பொருளாதார கருத்துக்கும் தமிழ் வார்த்தை தேடிக் கொண்டிருந்தால், எழுத வந்ததே மறந்து போய் விடும் அபாயம் உள்ளது. எனவே, முதலில், பாரதி சொன்னபடி திக்கு எட்டிலும் இருந்து பல கலைகள் தமிழுக்கு கொண்டு வந்து சேர்ப்போம். அந்த கலைகள் தமிழர்களிடம் வளர்ந்தால் தமிழ் தானாகவே வளர்ந்து விடும்.நன்றி.

லவ்டேல் மேடி கூறியது...
நல்ல பதிவு.....

Suresh கூறியது...
Miga arumaiyana pathivu ennaiyai nan sariparthkkola uthaviya pathivu Indraya sulnilaigalukku thevaiyana pathivum kuda.. Here tamil font problem enna seiya intha idukaikku tamil la than type pananum nu nenachane

Suresh Kumar கூறியது...
நல்ல அருமையான பதிவு அறிய தந்ததற்கு நன்றிகள் இனி தொடர்ந்து உங்கள் பதிவை படிப்பேன் .

துபாய் ராஜா கூறியது...
நல்லதொரு பகிர்வு.வாழ்த்துக்கள்.//ஊடகங்களால் முடியாதது எதுவும் இல்லை வெதுப்பகம், தொடருந்து, உந்துருளி, மகிழுந்து போன்ற சொற்கள் மக்கள் மத்தியிலே பிரபல்யமாக்கப் பட்டது ஊடகங்களால்தான் ஏனைய சொற்களையும் மக்கள் மத்தியிலே பிரபல்யப்படுத்துவதொடு தமிழ் மொழியினை ஊடங்களால் வளர்க்க முடியும் என்பதே உண்மை//உண்மையான உண்மை.

LOSHAN கூறியது...
இப்போதெல்லாம் தமிழ் கொலை என்று பேச்சு வந்தாலே வானொலி தொலைக்காட்சிகளைப் பந்தாடிப் பாய்வது ஒரு வழக்கமாகிப் போய்விட்டது. இதிலும் உண்மை இல்லாமல் இல்லை!தனிப்பட்ட ரீதியில் நான் முடியுமானவரை தமிழ்கொலைகளில் ஈடுபடுவதில்லை. என் சார்ந்தவர்களையும் கூடுமானவரை திருத்தி சீர்ப்படுத்திக் கொண்டே இருக்கிறேன். ஆனால் அது மிக சிரமமான காரியம்.இப்போதெல்லாம் நேர்முகப் பரீட்சைகள் குரல் தேர்வுகளில் செம்மையான உச்சரிப்புடையோரையும் தமிழறிவும் உணர்வும் கொண்டவர்களை தேர்ந்தெடுப்பதே பெரும் முயற்சியுடைய காரியமாக இருக்கிறது.நண்பா வந்தியத்தேவா – என்னைப் பற்றித் தெரியும் தானே... நான் விமர்சனங்களை சந்திக்கத் தயங்காதவன்..அவை நேர்மை உண்மையாக இருக்கும் பட்சத்தில.தவறுகள் சுட்டிக்காட்டப்படும் போது ஓத்துக்கொண்டு திருத்திக் கொள்ளும் ஒரு சீர்மையான கலாசாரத்தில் நம்பிக்கையுள்ளவன் நான்.வானொலியில் பேச்சுத் தமிழைப் பயன்படுத்தினாலும் அதிலும் கூட உச்சரிப்பில் மிக்க கவனம் செலுத்தவேண்டும் என்பதை நான் முன்பு சூரியனைத் தலைமை தாங்கி நடத்தியபோதும் இப்போது வெற்றிக்கு முகாமையாளராக இருக்கும் போதும் அனைவருக்கும் வலியுறுத்தி வருகிறேன்.எனினும் ஆங்கிலக் கலப்பு பல இடங்களில் அவசியம். அத்தியாவசியம். வேண்டுமானால் அறிவிப்பாளர்களில் சிரேஷ்டர் அனுபவம் வாய்ந்தவர்; முதன்மையானவர்; என்று நாம் அனைவரும் ஏற்கின்ற திரு அப்துல் ஹமீத் அவர்களைக் கேளுங்கள்.சில சொற்களைக் கஷ்டப்படுத்தித் தமிழ்ப்படுத்தி - படுத்தாமல் அவ்வவ்வாறே ஆங்கிலத்தில் பயன்படுத்தவது இலகுவானது.. விளங்கக் கூடியது.இல்லையெனில் தமிழ் செந்தமிழாக அன்றி கொடுந்தமிழாகிவிடும்.Hi, Byeபோன்ற அனாவசிய சொற்களையோ...வேண்டுமென்றே வலிந்து புகுத்தப்படும் சில Fashion சொற்களையோ நான் சொல்லவில்லை.சந்துரு நல்லதொரு விஷயத்தை சொல்லியுள்ளீர்கள்... ஒரு இளம் ஒலிபரப்பாளர் இதுபற்றி சிந்தித்திருப்பது மகிழ்ச்சி & நிம்மதி.ஊடகவியலாளர்களின் இது சம்பந்தமான போக்கு பற்றி எனது மனக் குமுறல்களை வெளிப்படையாக விரைவில் கொட்டுவேன்..பதிவாக

சந்ரு கூறியது...
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி நிலாமதி

சந்ரு கூறியது...
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி ரி.கே

சந்ரு கூறியது...
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி மயில்

சந்ரு கூறியது...
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி கும்மாச்சி...

சப்ராஸ் அபூ பக்கர் கூறியது...
அருமையான பதிவு சந்ரு, ஆனால் இன்னும் ஊடகங்களில் தமிழ் கொலையாளிகள் இருப்பது தான் மனக் கவலையான விடயமாக இருக்கிறது... திருத்துவார்கள், திருந்துவார்கள் என நினைக்கிறேன்....வாழ்த்துக்கள் சந்ரு.....

சந்ரு கூறியது...
நாகரிகம் மாறுகின்றது என்பதற்காக எமது பாரம்பரியங்களையும், தமிழின் தனித்துவங்களையும் தொலைப்பதா... உங்களுக்கான் பதில்கள் எனது அடுத்த பதிவில் எதிர் பாருங்கள்... வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி ஸ்ரீராம்..

சந்ரு கூறியது...
உங்களுக்கான் பதில்கள் எனது அடுத்த பதிவில் எதிர் பாருங்கள்... வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி வந்தியத்தேவன்

சந்ரு கூறியது...
சிங்கை, மலேசியாவில் மட்டுமல்ல இலங்கையிலும் சில ஒலிபரப்பாளர்கள் தமிழை வளர்ப்பதிலே ஈடுபடுகின்றார்கள் என்பது மட்டும் உண்மையே... வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி வந்தியத்தேவன்..

வந்தியத்தேவன் கூறியது...
தெரியும் தெரியும் அதுதான் ஒருவரியில் உங்கள் ஊடகத்தில் இருப்பவர்களின் தவறுகளைச் சுட்டிக்காட்டினேன். ஒருமுறை அல்லது இருமுறை ஒரு தவறு நடந்தால் பரவாயில்லை ஆனால் அடிக்கடி ஒரே தவறைச் சிலர் விடுகிறார்கள். முற்றுமுழுதான செந்தமிழ்ச் நிகழ்ச்சிகள் நாம் கேட்கவில்லை. ஹாய், பாய் பைன் தேவையா? அதே நேரம் உங்கள் வானொலிப்பெட்டியின் சத்தத்தைக் குறையுங்கள் என பல அறிவிப்பாளர்கள் அழகாக எடுத்துரைக்கும்போது சில ரேடியோ என்பார்கள், ஒரு சில ஆங்கிலச் சொற்கள் மொழியுடன் கலந்துவிட்டன அவற்றை ஒன்றும் செய்யமுடியாது. ஆனால் இந்திய ஊடகங்களைப் பார்த்து யாருக்கு இந்தப்பாடல் டெலிகேட் செய்கிறீர்கள் என ஒரு தொலைக்காட்சியில் ஒருவர் கேட்கிறார். தொலைக்காட்சியை உடைக்கத்தான் மனம் வரும். சந்ரு கோடுபோட்டிருக்கிறார். ஊடகங்களில் நிகழும் மொழிக்கொலைகள் பற்றி சில நாட்களில் எழுதுகின்றேன். உங்கள் கருத்துகளை அங்கேயும் தெரிவியுங்கள். பின்னூட்டத்தில் முழுவதுமாக எழுதினால் பலரிடம் சிலவேளைகள் சென்றடையாது.

வந்தியத்தேவன் கூறியது...
//சந்ரு கூறியது...சிங்கை, மலேசியாவில் மட்டுமல்ல இலங்கையிலும் சில ஒலிபரப்பாளர்கள் தமிழை வளர்ப்பதிலே ஈடுபடுகின்றார்கள் என்பது மட்டும் உண்மையே... //நிச்சயமாக எம்மவர்கள் தான் அதில் முன்னோடிகளாக இருந்தார்கள். முன்னர் பலராக இருந்தது இப்போ சிலராக மாறிவிட்டது ஆகவே சிலரால் நம் தமிழ் இலங்கையிலும் கொல்லப்படுகிறது.

சந்ரு கூறியது...
என்னுடைய பெயர் சந்ரு என்பதே சரி நான் சிறு வயது முதல் இப்படியே எழுதுகிறேன். நாம் ஆங்கிலத்தில் shanthru என்று எழுதி தமிழுக்கு மாற்றினால் சந்த்ரு என்றே வரும். நான் இதற்காக என் பெயரில் மாற்றம் செய்ய விரும்பவில்லை....வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி anvarsha..

சந்ரு கூறியது...
//குறை ஒன்றும் இல்லை !!! சொன்னது… தமிழோ, தமிழரோ கொலை செய்யப்படுவது பற்றி என்ன சொல்ல.....//தமிழ், தமிழர் இரண்டும் தமிழரால் கொலை செய்யப்படுவதுதான் கவலைக்குரிய விடயம். வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி நண்பா...

சந்ரு கூறியது...
//நேசமித்ரன் சொன்னது… நல்ல சிந்தனை நான் அன்வர்ஷா சொன்னதையும் கேட்க வேண்டும் என்று நினைத்திருந்தேன் தவறில்லையே..?//என்னுடைய பெயர் சந்ரு என்பதே சரி நான் சிறு வயது முதல் இப்படியே எழுதுகிறேன். நாம் ஆங்கிலத்தில் shanthru என்று எழுதி தமிழுக்கு மாற்றினால் சந்த்ரு என்றே வரும். நான் இதற்காக என் பெயரில் மாற்றம் செய்ய விரும்பவில்லை....வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி நண்பா...

சந்ரு கூறியது...
//வால்பையன் சொன்னது… இணையத்தால் தான் தமிழ் கொஞ்சமாவது வாழ்கிறது!படித்த பின் எழுத வாய்ப்பு கிடைக்காத எனக்கு வலைத்தளம் ஒரு வரப்பிரசாதம்!தவறு ஆரம்பத்தில் வரத்தான் செய்யும் உங்களை போல் தமிழ் ஆர்வலர்கள் திருந்தினால் திருந்திகொள்வோம்!//நீங்கள் சொல்வதுபோல் இன்று வலையுலகமும் மாற்றங்களை அதாவது தமிழை வளர்ப்பதிலே பங்கு வகிக்கின்றது விடயம். வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி நண்பா...

சந்ரு கூறியது...
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி பழமைபேசி

சந்ரு கூறியது...
உங்களுக்கான் பதில்கள் எனது அடுத்த பதிவில் எதிர் பாருங்கள்... வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி அஜுவத்

சந்ரு கூறியது...
//எவனோ ஒருவன் சொன்னது… நல்ல கருத்துக்கள்.மற்றவர்களை என்ன சொல்ல... நாம் நம் நடையில் கொஞ்சம் முயற்சி செய்வோம்.//வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி நண்பா...

சந்ரு கூறியது...
இன்று வலைப்பதிவுகளிலே நீங்கள் குரிப்பிடுவதுபோல் பல தமிழ் சொற்களை பாவிக்கின்றோம் இந்த சொற்களை எங்களால் உணர முடியும் போது ஏன் ஏனைய சொற்களையும் நாம் பயன் படுத்த முடியாது... விடயம். வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி எவனோ ஒருவன்

சந்ரு கூறியது...
//ஆ.ஞானசேகரன் சொன்னது… //பழமைபேசி சொன்னது…நன்றி... அவ்வப்போது இதுபோன்ற இடுகைகளைக் காணும் போது எழுதுவோருக்கும் இயல்பாய் தமிழ் வந்துவிடும்.//வழிமொழிகின்றேன்...July 27, 2009 1:02 PM ஆ.ஞானசேகரன் சொன்னது… நல்ல இடுகை நண்பரே!... நானும் நல்ல தமிழில் எழுத முயற்சிக்கின்றேன்... 15 வருடங்களுக்கு பின் தமிழில் அதுவும் இணையத்தில் எழுதுகின்றேன். பிழைகள் வருகின்றது.. பிழையின்றி எழுத முயற்சிக்கின்றேன்....வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி நண்பா...

சந்ரு கூறியது...
//Maximum India சொன்னது… அன்புள்ள சந்துரு தமிழை வளர்க்க ............. உங்களுக்குரிய எனது பதிலை அடுத்த இடுகையில் எதிர் பாருங்கள்.... வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி நண்பா...

சந்ரு கூறியது...
//லவ்டேல் மேடி சொன்னது… நல்ல பதிவு.....//வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி

சந்ரு கூறியது...
வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி Suresh...

சந்ரு கூறியது...
வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி Suresh kumar
சந்ரு கூறியது...
வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி துபாய் ராஜா

அக்பர் கூறியது...
கண்டிப்பாக சரிசெய்ய வேண்டிய விசயம்.
ஜெஸ்வந்தி கூறியது...
அருமையான பதிவு. என்னை அழைத்ததற்கு நன்றி. உங்கள் மற்றைய பதிவுகளை பின்னர் வந்து படிக்கிறேன்.
Starjan ( ஸ்டார்ஜன் ) கூறியது...
கலக்கல் பதிவு
சந்ரு கூறியது...
உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி LOSHAN அண்ணா...

சந்ரு கூறியது...
உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி சப்ராஸ்

சந்ரு கூறியது...
மீண்டும் உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி வந்தியத்தேவன்....
சந்ரு கூறியது...
//அக்பர் சொன்னது… கண்டிப்பாக சரிசெய்ய வேண்டிய விசயம்//உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி நண்பா

சந்ரு கூறியது...
உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி ஜெஸ்வந்தி

சந்ரு கூறியது...
//Starjan ( ஸ்டார்ஜன் ) சொன்னது… கலக்கல் பதிவு//உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி நண்பா
jothi கூறியது...
//"பிலைகள்" இருக்கிறது திருத்துங்கள்என்று//நல்ல வேளை "பிள்ளைகள்" என்று சொல்லவில்லையே சந்தோஷப்படுங்கள்


சந்ரு கூறியது...
// jothi கூறியது... //"பிலைகள்" இருக்கிறது திருத்துங்கள்என்று//நல்ல வேளை "பிள்ளைகள்" என்று சொல்லவில்லையே சந்தோஷப்படுங்கள்//வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி jothi...
சத்ரியன் கூறியது...
//தமிழ் மொழி இன்று பல மொழிக் கலப்பினால் பாதிக்கப்பட்டு வருவதாக இன்று பலரும் குற்றம் சுமத்திக்கொண்டு...//இதில் சிறு மாற்றம். தமிழில் பிற மொழி கலப்பு என்பது பன்னெடுங்காலமாகவே இருந்து வருவதாகவே தெரிகிறது. ஆனாலும், தற்போது ஆங்கிலமொழி சற்று கூடுதலாகவே ஆக்கிரமித்துக் கொண்டு வருகிறது என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.அதற்கான காரணங்களைப் பட்டியலிட்டுக் கொண்டிருப்பதைவிட நம் தாய்மொழியின் சிறப்பை மிகமிக எளிமையாக இளைஞர்களிடம் (குறிப்பாக சிறுவர்களிடம்) கொண்டு சேர்க்க வேண்டியது நமது தலையாயக் கடமையாகக் கருத வேண்டும்.முதலில், பெற்றோர்கள் மிகப்பெரும் தவற்றினைச் செய்துக் கொண்டிருக்கின்றார்கள். அடுத்த இடத்தைப் பிடிப்பவர்கள் நம் மொழி ஆசிரியர்கள். பெரும்பாலும், பாடசாலைகளில் ஒரு புள்ளி, கமா, தொடர்ப்புள்ளி...இப்படிப்பட்ட தவறுகளுக்கு மதிப்பெண் குறைப்பதோடல்லாமல், வகுப்பில் எழுப்பி நிறுத்தி ஆசிரியரே கேலி செய்யும் காட்சிகளும் அரங்கேறவேச் செய்கிறது.இது போன்ற செயல்கள் சிறுவர்களின் மனத்தில் (மொழியின்பாலும்) ஒருவித வெறுப்புணர்வை உண்டாக்கி விடுகிறது.என்னதான் என்றாலும் அடுத்தவர்களைக் குறைக்கூறுவதைத் தவிர்த்து நம் மொழியை செம்மையாக வைத்திருப்பது நமது கடமை.உங்களின் ஆர்வம் மகிழ்ச்சியாய் இருக்கிறது ...சந்த்ரு.!

சந்ரு கூறியது...
உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள் சத்ரியன்....
தமிழ்மொழி தமிழ் மொழியாகவே இருக்கட்டும் உங்களுக்கான பதில்களை அடுத்த பதிவில் தருகிறேன்.....

இதுதான் அந்த இடுகைக்கு கிடைத்த கருத்துரைகள். பலரது வேண்டுகோளுக்கிணங்க ஒரு பதிவாக தந்திருக்கின்றேன்.

Post Comment


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

32 comments: on "வந்தவர்கள் என்ன சொல்லியிருப்பார்கள்..."

சப்ராஸ் அபூ பக்கர் said...

சிறப்பானதொரு தொகுப்பு சந்ரு... (அது எப்படி சந்ரு இப்படி பதிவு எழுதனும்னு ஐடியா பண்றீங்க?....)

வாழ்த்துக்கள்......

சந்ரு said...

//சப்ராஸ் அபூ பக்கர் கூறியது...
சிறப்பானதொரு தொகுப்பு சந்ரு... (அது எப்படி சந்ரு இப்படி பதிவு எழுதனும்னு ஐடியா பண்றீங்க?....)

வாழ்த்துக்கள்......//

//நல்லதொரு தொகுப்பு...// அப்பாடா அது போதும்...

இது நம்ம வாசகர்கள் கொடுத்த பரிந்துரைகள்தான்...
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி சப்ராஸ்...

நட்புடன் ஜமால் said...

இது ஒரு நல்ல முயற்சி தான் ...

S.A. நவாஸுதீன் said...

நல்ல பகிர்வு. அருமை

நேசமித்ரன் said...

இந்த அணுகுமுறையும் பொறுமையான பதில்களும்
பதிவை பதிவின் பதில்களில் இருந்து உருவாக்கும் லாவகமும்
அருமை "சந்ரு "

Mrs.Menagasathia said...

நல்லதொரு பதிவு.பகிர்வுக்கு நன்றி சந்ரு!!

வந்தியத்தேவன் said...

நல்லதொரு தொகுப்பு. உங்களின் இன்னொரு பதிவிற்கு கொஞ்சம் வேலைப் பளுவினால் பதில் போடமுடியவில்லை. இன்றைக்கு முயற்சிக்கின்றேன். ஏனென்றால் அந்தப் பதிவிற்க்கு சும்மா பதில்போடமுடியாது ஏதாவது சில விடயங்களைத் தேடித்தான் பதில்போடவேண்டும்.

குடந்தை அன்புமணி said...

வித்தியாசமாக பின்னூட்டங்களையெல்லாம் தொகுத்து அனைவரின் கருத்துக்களையும் அறியச் செய்த தங்களுக்குக்கு நன்றி. அனைவரின் கருத்துகளும் ஆதரவாகவே இருப்பது மனதிற்கு மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது. தொடரட்டும் இந்த வெற்றிக் கூட்டணி. பயமெதற்கு இனி...

குறை ஒன்றும் இல்லை !!! said...

மிக நல்ல முயற்சி.. நன்றி..

அக்பர் said...

நல்ல தகவல். நன்றி.

ஜெகநாதன் said...

அட! பின்னூட்டங்களே ஒரு இடுகையாய்...! ம்ம்ம்.. இந்த பிள்ளை ​பொழச்சுக்கும்பா! நல்ல முயற்சி! பாராட்டுக்கள் சந்ரு!

ஹேமா said...

சந்ரு,நினைத்துப் பார்க்கமுடியாத தொகுப்பு அருமை.

சந்ரு said...

//நட்புடன் ஜமால் சொன்னது…
இது ஒரு நல்ல முயற்சி தான் ...//


உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி நண்பரே...

இது நம்ம ஆளு said...

எப்படி இப்புடி

ரூம் போட்டு யோசிபிங்களோ

அருமை

சந்ரு said...

//S.A. நவாஸுதீன் சொன்னது…
நல்ல பகிர்வு. அருமை//


உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி நண்பரே...

சந்ரு said...

//ஆ.ஞானசேகரன் சொன்னது…
மிக நன்று//

உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி நண்பரே...

சந்ரு said...

//நேசமித்ரன் சொன்னது…
இந்த அணுகுமுறையும் பொறுமையான பதில்களும்
பதிவை பதிவின் பதில்களில் இருந்து உருவாக்கும் லாவகமும்
அருமை "சந்ரு "//


உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி நண்பரே...

சந்ரு said...

//Mrs.Menagasathia சொன்னது…
நல்லதொரு பதிவு.பகிர்வுக்கு நன்றி சந்ரு!!//


உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி சத்தியா...

சந்ரு said...

//வந்தியத்தேவன் சொன்னது…
நல்லதொரு தொகுப்பு. உங்களின் இன்னொரு பதிவிற்கு கொஞ்சம் வேலைப் பளுவினால் பதில் போடமுடியவில்லை. இன்றைக்கு முயற்சிக்கின்றேன். ஏனென்றால் அந்தப் பதிவிற்க்கு சும்மா பதில்போடமுடியாது ஏதாவது சில விடயங்களைத் தேடித்தான் பதில்போடவேண்டும்.//


உங்களது ஆக்கபூர்வமான கருத்துக்களையும் "விரைவில்" எதிர் பார்க்கிறேன்.

உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி நண்பரே...

சந்ரு said...

//குடந்தை அன்புமணி சொன்னது…
வித்தியாசமாக பின்னூட்டங்களையெல்லாம் தொகுத்து அனைவரின் கருத்துக்களையும் அறியச் செய்த தங்களுக்குக்கு நன்றி. அனைவரின் கருத்துகளும் ஆதரவாகவே இருப்பது மனதிற்கு மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது. தொடரட்டும் இந்த வெற்றிக் கூட்டணி. பயமெதற்கு இனி...//


தமிழுக்காக பலர் இருப்பது நின்மதியே...

உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி நண்பரே...

சந்ரு said...

//குறை ஒன்றும் இல்லை !!! சொன்னது…
மிக நல்ல முயற்சி.. நன்றி..//அப்படியா....

உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி நண்பரே...

சந்ரு said...

//அக்பர் சொன்னது…
நல்ல தகவல். நன்றி.//


தமிழைப் பற்றி பேசுகிறோம் அல்லவா நல்ல தகவலாகவேதானே இருக்கும்...

உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி நண்பரே...

சந்ரு said...

//ஜெகநாதன் சொன்னது…
அட! பின்னூட்டங்களே ஒரு இடுகையாய்...! ம்ம்ம்.. இந்த பிள்ளை ​பொழச்சுக்கும்பா! நல்ல முயற்சி! பாராட்டுக்கள் சந்ரு//


அப்படித்தான் நினைக்கிறேன்... காத்திருங்கள்!!!!!... எதற்கு?.. விரைவில்!!!!!!

உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி நண்பரே...

சந்ரு said...

//ஹேமா சொன்னது…
சந்ரு,நினைத்துப் பார்க்கமுடியாத தொகுப்பு அருமை.//


உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி ஹேமா...

சந்ரு said...

//இது நம்ம ஆளு கூறியது...
எப்படி இப்புடி

ரூம் போட்டு யோசிபிங்களோ

அருமை//


இதுக்கெல்லாமா.. அப்படி யோசிக்கிறிங்க...

உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி நம்மவரே..

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

செந்தமிழ் நாடென்னும் போதினிலே இன்ப‌

தேன் வந்து பாயுது காதினிலே


இப்படியெல்லாம் இருக்க வேண்டிய தமிழ் இப்போ ?...

Anonymous said...

அருமையான முயற்சி சந்ரு

சந்ரு said...

//Starjan ( ஸ்டார்ஜன் ) கூறியது...
செந்தமிழ் நாடென்னும் போதினிலே இன்ப‌

தேன் வந்து பாயுது காதினிலே


இப்படியெல்லாம் இருக்க வேண்டிய தமிழ் இப்போ ?...//

எங்கோ போய்க்கொண்டிருக்கிறது... தடுத்து நிறுத்தவேண்டியது நம் கைகளில்தான இருக்கின்றது....

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி...

சந்ரு said...

//சின்ன அம்மிணி கூறியது...
அருமையான முயற்சி சந்ரு//


வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி சின்ன அம்மிணி...

பிரியமுடன்.........வசந்த் said...

தமிழ் தமிழன் அப்பிடின்னு சொல்ற சந்ரு batticolaவ முதல்ல மட்டக்களப்புன்னு மாத்துங்க சந்ரு..

அட்வைஸ்தான் ஊர்பேர் சொல்றதுக்கு ஏன் வெக்கம்?

சந்ரு said...

//பிரியமுடன்.........வசந்த் கூறியது...
தமிழ் தமிழன் அப்பிடின்னு சொல்ற சந்ரு batticolaவ முதல்ல மட்டக்களப்புன்னு மாத்துங்க சந்ரு..

அட்வைஸ்தான் ஊர்பேர் சொல்றதுக்கு ஏன் வெக்கம்?//


நான் வலைப்பதிவு ஆரம்பித்தபோது எனக்கு வலைப்பதிவு பற்றி எதுவுமே தெரியவில்லை, அப்பொழுது நான் batticaloa என்று போட்டுவிட்டேன் காரணம் எனக்கு அப்போது தமிழிலே தட்டச்சி செய்வதிலே பல சிக்கல்களை எதிர் நோக்கினேன். பின்னர் அதனை நான் மட்டக்களப்பு என்று மாற்றிவிட மறந்துவிட்டேன்.

நான் இதுவரையில் நான் ஆங்கிலத்தில் போட்டு இருப்பதை கவனிக்கவில்லை. சுட்டிக்காட்டியமைக்கு நன்றி வசந்த்...

நான் தமிழன் என்று சொல்வதற்கோ தமிழ் மொழியை பேசுவதற்கோ ஊர் பெயர் சொல்லுவதட்கோ வெட்கப்பட்டவன் அல்ல. அப்படி நான் சொல்ல வெட்கப்படுபவனாக இருந்தால் நான் தமிழனாக இருக்க முடியாது....

நான் எனது வலைப்பதிவிலே வேற்று மொழிகளைப் பயன்படுத்துவதை முடிந்தவரை தவிர்த்து வருகிறேன்.

தமிழ் மீது பற்றுள்ள ஒரு தன்மானத் தமிழனாக வாழவேண்டும் என்பதே என் அவா. தமிழ் மொழி வளர்ச்சிக்காக என்னால் முடிந்ததைச் செய்வேன்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வசந்த்..

Post a Comment