Sunday, 31 May 2009

கிறுக்கல்கள்...

எனது தொலைந்துபோன வலைப்பதிவில் நான் பதிவு செய்த கவிதை ஒன்று புதிய வலைப்பதிவில் மீண்டும் உங்களுக்காக...

ஏன் இந்தக்
கவிஜர்கள் எல்லாம்
பெண்களின் கண்களை
பற்றி பாடுகிறார் என்று
யோசித்த நாட்கள் பல
இன்று நானே - உன்
கண்களை பற்றி
கவிதை எழுதுகிறேன் - உன்
கண்களினால்தான் - நான்
வாழ்ந்துகொண்டிருக்கிறேன்

பெண்களின் கண்களில்
இத்தனை சக்தி
இருப்பதை இன்றுதான்
உணர்கிறேன்
உன்னை காதலிப்பதால்

இந்த உலகத்தில்கூட
ஒரு பெண்ணின்
கடைக்கண் பார்வை
பட்டு இருக்கிறது
போலும் இவ்வளவு
வேகமாக சுற்றுகின்றதே...

நான் நினைக்கிறேன்
இரவுகள் கூட
இருளாக இருப்பது - நீ
தூங்கி விடுவதால்
உன் பார்வை
படாததனால்தானோஎன்னவோ...

எனக்கு ஒருஆசை
இருக்கிறதுஉன்னை
பாலை வனத்துக்கு
அழைத்து செல்லவேண்டும்
பாலைவனம்கூட
பசுமையாகிவிடுமல்லவா...
read more...

Saturday, 30 May 2009

இலங்கையில் தொடரும் அடாவடிகளும் அட்டூழியங்களும்...

இன்று இலங்கையில் அதிகம் மலிந்து இருப்பது கொலை, களவு, ஆட்கடத்தல், சிறுவர் இல்லங்கள், அகதி முகாம்கள். இப்படி கெட்டவைகளை அடுக்கிக்கொண்டே போகலாம் இவைகளை பார்க்கும் பொது ஏன் இலங்கையில் பிறந்தோம் என்றாகி விட்டது. அதுவும் என் தமிழனாய் பிறந்தோம் இன்று நினைக்க தோன்று கின்றது...

அண்மைய நாட்களில் நடந்த சில சம்பவங்களை இந்த பதிவினுடாக தருகின்றேன்.

சித்திரை மாதம் என்றாலே தமிழர்கள் வாழ்வில் வசந்த காலம்தான் இலங்கையில் அது இல்லை இன்று நினைக்கின்றேன். விடயத்துக்கு வருகிறேன். சித்திரைமாதம் என்றதும தமிழர்களது கலாச்சார நிகழ்ச்சிகள் விளையாட்டு விழாக்கள் என்பன நடப்பது அனைவரும் அறிந்தது. கிராமங்கள் என்றால் சொல்லவே தேவை இல்லை. ஒரே குதுக்கலாம்தான்.

நானும் கிராமப்புறத்தை சேர்ந்தவன்தான். கிராமிய கலை கலாச்சாரங்கலொடு பின்னிப்பினைந்தவன்.ஈடுபாடு அதிகம் என்று சொல்லலாம்.

எனது கிராமத்தில் ஒரு விளையாட்டு விழாவிற்கு எனக்கும் அழைப்பு வந்திருந்தது.அந்த விளையாட்டு விழா மிக பிரமாண்டமான முறையில் அன்றைய தினத்துக்கு முன் தினமே விளையாட்டு மைதானம் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இத்தநைக்கும் காரணம் அது ஒரு விளையாட்டு விழா மட்டுமன்றி ஒரு கலாச்சார விழாவிம் கூட. அது ஒரு அரச சார்பற்ற நிறுவனத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. அதில் பல கிராமங்களை சேர்ந்தவர்கள் பங்குபற்ற இருந்தார்கள்.

நானும் கலை நிகழ்வு நடை பெறுவதற்கு முதல் நாளே சென்று துரிதமான ஏற்பாடுகள் நடை பெறுவதை பார்த்தவன். மிக அழகாக பார்வையாளர்கள் இருந்து பார்ப்பத்தட்குரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.

கலை நிகழ்வு இடம்பெறும் தினம் சென்றேன். முதல் நாளில் செய்யப்பட்ட ஏற்பாடுகள் எதுவும் இல்லை. அனைத்தும் அலங்கோலமாக அடித்து நொறுக்கப்பட்டு இருந்தன.

அங்கெ நின்றவர்களிடம் விசாரித்தேன். பலரும் பல தரப்பட்ட கருத்துக்களை சொன்னார்கள்.

இத்தனைக்கும் முதல் ஒன்றை சொல்லவேண்டும் நிகழ்வு நடைபெற இருந்த விளையாட்டு மைதானம் கிராமத்துக்கு சொந்தமல்ல பிரதேச சபைக்கு சொந்தமானது. இந்த நிகழ்வில் பல கிராமங்களை சேர்ந்தவர்கள் பங்கு பெறுகின்றார்கள்...

அங்கெ நின்றவர்கள் சொன்ன கருத்துக்கள்......

கிராமத்தின் தலைவருக்கு அழைப்பிதழ் கொடுக்கப்படவில்லை....
கிராமத்தில் உள்ள விளையாட்டு கழகத்துக்கு அழைப்பிதழ் கொடுக்கப்படவில்லை...
கிராமத்தில் உள்ள முக்கிய நபர்களுக்கு அழைப்பிதழ் கொடுக்கப்படவில்லை...
இதனால்தான் யாரோ இப்படி இரவோடு இரவாக செய்து இருக்கிறார்கள்... என்று சொன்னார்கள் எனக்கு சிரிப்புத்தான் வந்தது..

பொது விளையாட்டு மைதானத்தில் பிரதேச சபையிடம் அனுமதி பெற்று நடைபெறும் விழாவுக்கு கட்டாயம் கிராமத்தின் தலைவருக்கோ விளையாட்டு கழகத்துக்கோ அழைப்பிதழ் கொடுக்க வேண்டியது அவசியமா. எதை முடிவெடுக்க வேண்டியது ஏற்பாட்டாளர்கள் அல்லவா.

இத்தநைக்கும் முன் இந்த அரச சார்பற்ற நிறுவனம் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எல்லாவிதமான வசதிகளுடன் வீடுகளை அமைத்துக்கொடுத்த ஒரு நிறுவனமாகும் பல சமுக செயற்பாடுகளில் ஈடுபடும் ஒரு நிறுவனம்...

இப்படிப்பட்ட காட்டுமிராண்டித்தனமான செயலால் அந்த விழா இடம்பெறவில்லை அனைவரும் ஏமாற்றத்துடன் திரும்பினர். இப்படி காட்டுமிராண்டித்தனமான வேலை செய்பவர்கள் இருக்கத்தான் வேண்டுமா.

நேற்று நடந்த ஒரு சம்பவம்...

ஒரு கிராமம் அங்கே ஒரு சாதாரண குடும்பம் தாய் தந்தை வயது போய் விட்டது இதனால் மகள் ஒரு சிறு கடை வைத்து நடாத்தி அன்றாட வாழ்க்கையை நடாத்திக்கொண்டு இருக்கிறார்.

இந்த கடையில் சுதந்திரமாக ஆயுதங்களுடன் நடமாடி மக்களை விரட்டும் சிலர் தொலைபேசி அட்டைகளை கடனுக்கு வாங்குவதுண்டு பல ஆயிரம் ரூபாய்கள் அவர்கள் கொடுக்கவேண்டி இருக்கிறது நேற்று கடனுக்கு கேட்டபொழுது அந்த பெண் கடனுக்கு இல்லை. ஏற்கனவே நீங்கள் நிறைய காசு தர வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்.

அவர் கடனுக்கு இல்லை என்று சொன்னதனால் அவருக்கு கிடைத்த தண்டனை அவர் 1 ம திகதிக்குமுன் கடையை முட வேண்டும்

இது எந்த விதத்தில் ஞாயம் அவர் கடன் வாங்கி கடை வைத்து நடத்துகின்றார். இந்த கடயினால்தான் தமது அன்றாட வாழ்க்கை போகிறது.
அவர் தட்கொலை செயும் அளவில் இருக்கிறார். இந்த அடாவடித்தனங்களை கேட்க யாரும் இல்லையா....


read more...

Friday, 29 May 2009

தொல்லை தரும் தொலைபேசி கலாச்சாரம்... ...

இன்று கையடக்கத்தொலைபேசி இல்லாமல் வாழ்க்கை இல்லை என்றாகி விட்டது. கையடக்கத்தொலைபேசி சேவை வழங்கும் நிறுவனங்களும் போட்டி போட்டுக்கொண்டு தமது பாவனயளர்களுக்கு பல்வேறு சேவைகளை வழங்கி வருகின்றன. இந்த கையடக்க தொலைபெசிப்பாவனயால் நன்மைகள் இருந்த போதும் சில தீமைகளும் இருக்கத்தான் செய்கின்றன.

எது எப்படி இருப்பினும் இந்தப்பதிவில் எனது நண்பர்களுக்குள் நிகழ்ந்த சில கையடக்கத்தொலைபேசி உரையாடல் தொடர்பான சுவாரஸ்யமான பல சம்பவங்களை பகிர்ந்து கொள்கிறேன்.

இன்று இலங்கையில் வலயமைப்புகளிடையே பல ஆயிரக்கணக்கான நிமிடங்கள் வெளித்செல்லும் அழைப்புகள் இலவசம் என்றதுமே எனது நண்பர்களுக்கு சந்தோசம் சொல்லவே தேவை இல்லை. எனக்கும்தான்....
நானும் நண்பர்களும் அடிக்கடி எங்கள் ஊரில் இருக்கும் ஒரு பிரசித்தி பெற்ற ஆலயத்துக்கு வெள்ளிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் செல்வோம் கடவுளின் தரிசனத்துக்காக அல்ல வேறு தரிசனம் கிடைப்பதுக்காக. இரு நாட்களிலும் பக்தர்கள் அதிகமாக வருவார்கள். அதனால் எப்படியோ சென்று விடுவோம்.
அங்கு ஆலயத்துக்கு வரும் பக்தர்களுக்கு உதவி செய்வது. என்ன உதவி என்று கேட்காதிங்க சொல்றன் பொங்கல் பொங்கி கொடுப்பது..... இதிலும் எனது நண்பர்கள் படு கில்லாடிகள் அழகான பெண் பிள்ளைகளுடன் வந்திருக்கும் பக்தர்களுக்கு அதிகமாகவே உதவி செய்வார்கள்.

அது மட்டுமல்ல அந்த பெண் பிள்ளைகளுடன் எப்படியோ கதைத்து தொலைபேசி இலக்கத்தை வாங்கிக்கொள்வார்கள். இனி என்ன நடக்கும் நான் சொல்லத்தேவை இல்லை....

இப்போ விடயத்துக்கு வருகிறேன் ஒருஞாயிற்றுக்கிழமை நண்பர்களும் நானும் கோவிலுக்கு சென்றிருந்தோம். ஆலயத்தில் நடந்த சில உண்மை சம்பவங்கள்.....

ஆலயத்தில் பொங்கல் பானைகள் பக்கத்தில் பக்கத்தில் இருக்கும் ஒரு நண்பன் ஒரு இடத்திலும் மற்ற நண்பன் என்னொரு இடத்திலும் இருக்கிறார்கள் ஒரு நண்பன் மற்ற நண்பனிடம் அழைப்பை எடுத்து சொன்னான் அடுப்பு எரியவில்லை பாருடா என்று அவர்களுக்கு இடைப்பட்ட துரம் 5 மீற்றர்தான்.

எனது ஒரு நண்பனின் ஒரு நண்பி ஆலயத்துக்கு வந்து இருந்தார். அப்பொழுது பூசை நேரம் எனது நண்பர் தனது நண்பிக்கு அழைப்பை எடுத்தார். அவர் அந்த நண்பியிடம் கேட்டார் என்ன கேட்டு கும்பிடுறிங்க எனக்கும் ஒரு நல்ல கேர்ள் பிரென்ட் கிடைக்கணும் எண்டு கும்பிடுங்க என்று.

கடவுளுக்கே கோல் பண்ணி பேசுவாங்க போல இருக்கிறது....
விட்டுக்கு வந்தா விடுறாங்களா இரவில் நித்திரை செய்வதுக்கு. இரவு பகலாக மிஸ் கோல் நள்ளிரவில் கோல் பண்ணி தேவை இல்லாமல் கதைத்து வெறுப்பு ஏற்றுவது

என்னும் ஒரு பழக்கம் பல பசங்களிடம் இருக்கிறது யாராவது பெண் பிள்ளைகளின் தொலைபேசி இலக்கத்தை எப்படியோ எடுத்துன் மிஸ் கோல் பண்ணுவது இரவிலே தூங்க விடாமல் வெறுப்பு ஏற்றுவது
பசங்க மட்டுமா நம்ம சில பெண்களும்தான் சில பொண்ணுகளுக்கு இரவில் கோல் பண்ணினா வேய்டிங்தான் இரவு 12 , 01 மணிக்கும் வேயிட்டிங்க்தான்... என்னதான் நடக்கிறதோ தெரியல்ல... என்னும் சொல்லிக்கொண்டே போகலாம்.

எங்க போய் முடயுமோ தெரியல்ல இந்த கையடக்க தொல்லைபேசி கலாச்சாரம்

நடப்பது நல்லபடியாக நடக்கட்டும்....
read more...

Thursday, 28 May 2009

எனது கிறுக்கல்களில் சில...

எனது வைரஸ் விளையாடிய வலைப்பதிவில் நான் பதிவு செய்த கவிதைகலில் சில புதிய வலைப்பதிவில் உங்களுக்காக....

என் விரல்களுக்கு
ஏற்பட்ட அவசரத்தில்
தொலைபேசியில்
இலக்கங்களை
தவறாக
அழுத்தியதால் -என்
விரல்களை
திடடினேன் -அன்று
இன்று என்
விரல்களுக்கு -நன்றி
சொல்கிறேன் -அந்த
அழைப்பில்
கிடைத்தவள் - நீ
என்பதனால்
உன் முகம்
தெரியாதவன் -நான்
உன் அகம்
தெரிந்தவன் -நான்
உன்னோடு
பேசுவது -என்
தொலைபேசிக்கே
பொறாமை வந்துவிட்டது போல
அடிக்கடி இயங்க
மறுக்கின்றது.-அது
நினைக்கவில்லை
இப்போ -
என் இதயத்தில் -நீ
இருப்பதை.

***************************************************************************************
உன் தரிசனம்
கிடைக்குமென
காத்திருந்தேன்
பல காலம்
கிடைத்தது
ஏமாற்றம் - இன்று
எனக்கு தூக்கமே
அதிகம்-நீ
கனவிலாவது
வருவாயல்லவா...

read more...

Wednesday, 27 May 2009

கிராமிய கலைகள்...

எனது தொலைந்து போன வலைத்தளத்தில் மலையக நாட்டுப்புற பாட்டு தொடர்பான பதிவுகள் நண்பர்கள் முலமாக நல்ல வரவேற்பு கிடைத்தது. புதிய வலைப்பதிவினுடாக பல புதிய பதிவுகள் போடா வேண்டும் ஆனால் நேரம் கிடைப்பதில்லை. அடுத்த பதிவுகளில் தமிழர்களுக்கே உரித்தான கலை கலாச்சார பாரம்பரியங்கள் பற்றி எல்லாம் பார்க்க இருக்கின்றேன். குறிப்பாக இன்று மருவிவருகின்ற கிராமியக்கலைகள் பற்றி பதிவுகள் வர இருக்கின்றது. மட்டக்களப்புக்கே உரித்தான பல கலைகள் தொடர்பாகவும் கலைஜர்கள் பற்றயும் விரைவில் எதிர் பாருங்கள்...
read more...

Sunday, 24 May 2009

எனது வலைப்பதிவு மாயமானது இருந்தும் புதிய வலைப்பதிவில் உங்களை சந்திக்கின்றேன் பல புதிய விடயங்களை உங்களோடு பகிர்ந்து கொள்ள இருக்கின்றேன் அத்தோடு எனது முந்திய பதிவுகளும் உங்களை வந்து சேர இருக்கின்றது எனது முந்திய பதிவின் சில கவிதைகள் புதிய வலைப்பதிவில்....
நான் ஒருபோதும்
மரணத்துக்கு பயந்தவனல்ல
இன்று பயப்படுகின்றேன்.
நான் மரணித்தால் - என்
இதயத்திளிருக்கும் - உன்
நினைவுகளும்
என்னுடன் சேர்ந்து
மரணித்துவிடும் என்பதால் .
*************************************************************************************
உன் இதயத்தில்
ஓரிடம் கேட்டு
தவமிருந்தேன்
பலகாலம்
இன்றுதான்
அறிந்தேன்
உன் இதயம்
உன்னிடம்
இல்லை என்று............
**************************************************************************************
என் கவிதைகள்
பிடிக்கும்
என்றுசொன்னாய்
தினமும் எழுதினேன்
அத்தனையையும்
பத்திரப்படுத்தினாய்
இன்றுதான்
அறிந்தேன் -நி
பத்திரப்படுத்தியது-உண்
காதலனுக்கு
கொடுப்பதறகாகவேன்று-இன்று
என் பேனா
எழுத மறுக்கிறது
உன் இதயத்தில்
நான் இல்லை
என்பதனால்.
*************************************************************************************
read more...

Thursday, 21 May 2009

என்னுடைய வலைப்பதிவுக்கு என்ன நடந்தது என்ன என்று தெரிய வில்லை எனது வலைப்பதிவை காணவில்லை. இருந்தாலும் புதிய பெயருடன் எனது வலைப்பதிவை தொடக்கி இருக்கிறேன் தொடர்ந்து பல விடயங்களை பகிர்வதோடு முடிந்தவரை முன்னைய பதிவுகளும் உங்களை வந்து சேரும் காத்திருங்கள்...
read more...