Friday 29 May 2009

தொல்லை தரும் தொலைபேசி கலாச்சாரம்... ...

இன்று கையடக்கத்தொலைபேசி இல்லாமல் வாழ்க்கை இல்லை என்றாகி விட்டது. கையடக்கத்தொலைபேசி சேவை வழங்கும் நிறுவனங்களும் போட்டி போட்டுக்கொண்டு தமது பாவனயளர்களுக்கு பல்வேறு சேவைகளை வழங்கி வருகின்றன. இந்த கையடக்க தொலைபெசிப்பாவனயால் நன்மைகள் இருந்த போதும் சில தீமைகளும் இருக்கத்தான் செய்கின்றன.

எது எப்படி இருப்பினும் இந்தப்பதிவில் எனது நண்பர்களுக்குள் நிகழ்ந்த சில கையடக்கத்தொலைபேசி உரையாடல் தொடர்பான சுவாரஸ்யமான பல சம்பவங்களை பகிர்ந்து கொள்கிறேன்.

இன்று இலங்கையில் வலயமைப்புகளிடையே பல ஆயிரக்கணக்கான நிமிடங்கள் வெளித்செல்லும் அழைப்புகள் இலவசம் என்றதுமே எனது நண்பர்களுக்கு சந்தோசம் சொல்லவே தேவை இல்லை. எனக்கும்தான்....
நானும் நண்பர்களும் அடிக்கடி எங்கள் ஊரில் இருக்கும் ஒரு பிரசித்தி பெற்ற ஆலயத்துக்கு வெள்ளிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் செல்வோம் கடவுளின் தரிசனத்துக்காக அல்ல வேறு தரிசனம் கிடைப்பதுக்காக. இரு நாட்களிலும் பக்தர்கள் அதிகமாக வருவார்கள். அதனால் எப்படியோ சென்று விடுவோம்.
அங்கு ஆலயத்துக்கு வரும் பக்தர்களுக்கு உதவி செய்வது. என்ன உதவி என்று கேட்காதிங்க சொல்றன் பொங்கல் பொங்கி கொடுப்பது..... இதிலும் எனது நண்பர்கள் படு கில்லாடிகள் அழகான பெண் பிள்ளைகளுடன் வந்திருக்கும் பக்தர்களுக்கு அதிகமாகவே உதவி செய்வார்கள்.

அது மட்டுமல்ல அந்த பெண் பிள்ளைகளுடன் எப்படியோ கதைத்து தொலைபேசி இலக்கத்தை வாங்கிக்கொள்வார்கள். இனி என்ன நடக்கும் நான் சொல்லத்தேவை இல்லை....

இப்போ விடயத்துக்கு வருகிறேன் ஒருஞாயிற்றுக்கிழமை நண்பர்களும் நானும் கோவிலுக்கு சென்றிருந்தோம். ஆலயத்தில் நடந்த சில உண்மை சம்பவங்கள்.....

ஆலயத்தில் பொங்கல் பானைகள் பக்கத்தில் பக்கத்தில் இருக்கும் ஒரு நண்பன் ஒரு இடத்திலும் மற்ற நண்பன் என்னொரு இடத்திலும் இருக்கிறார்கள் ஒரு நண்பன் மற்ற நண்பனிடம் அழைப்பை எடுத்து சொன்னான் அடுப்பு எரியவில்லை பாருடா என்று அவர்களுக்கு இடைப்பட்ட துரம் 5 மீற்றர்தான்.

எனது ஒரு நண்பனின் ஒரு நண்பி ஆலயத்துக்கு வந்து இருந்தார். அப்பொழுது பூசை நேரம் எனது நண்பர் தனது நண்பிக்கு அழைப்பை எடுத்தார். அவர் அந்த நண்பியிடம் கேட்டார் என்ன கேட்டு கும்பிடுறிங்க எனக்கும் ஒரு நல்ல கேர்ள் பிரென்ட் கிடைக்கணும் எண்டு கும்பிடுங்க என்று.

கடவுளுக்கே கோல் பண்ணி பேசுவாங்க போல இருக்கிறது....
விட்டுக்கு வந்தா விடுறாங்களா இரவில் நித்திரை செய்வதுக்கு. இரவு பகலாக மிஸ் கோல் நள்ளிரவில் கோல் பண்ணி தேவை இல்லாமல் கதைத்து வெறுப்பு ஏற்றுவது

என்னும் ஒரு பழக்கம் பல பசங்களிடம் இருக்கிறது யாராவது பெண் பிள்ளைகளின் தொலைபேசி இலக்கத்தை எப்படியோ எடுத்துன் மிஸ் கோல் பண்ணுவது இரவிலே தூங்க விடாமல் வெறுப்பு ஏற்றுவது
பசங்க மட்டுமா நம்ம சில பெண்களும்தான் சில பொண்ணுகளுக்கு இரவில் கோல் பண்ணினா வேய்டிங்தான் இரவு 12 , 01 மணிக்கும் வேயிட்டிங்க்தான்... என்னதான் நடக்கிறதோ தெரியல்ல... என்னும் சொல்லிக்கொண்டே போகலாம்.

எங்க போய் முடயுமோ தெரியல்ல இந்த கையடக்க தொல்லைபேசி கலாச்சாரம்

நடப்பது நல்லபடியாக நடக்கட்டும்....




Post Comment


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

8 comments: on "தொல்லை தரும் தொலைபேசி கலாச்சாரம்... ..."

Subankan said...

அட்டா, நீங்க நம்ம பிளாஸ்டர் ஆளா, சொல்லவே இல்ல. இது மட்டுமா?, இந்த பிளாஸ்ரர் வந்ததுதான் வந்திச்சு, ஆளாளுக்கு நம்பர மாத்திட்டு கோல் பண்ணி, யாரோ மாதிரிக் கதைப்பதும், பிறகு கேட்டால் அலுப்படிச்சனான்டா என்பதும், எழுத்த் தொடங்கினால் தொடர்கதையே எழுதலாம். அப்படியே நம்ம பக்கமும் கொஞ்சம் வந்திட்டுப் போங்க.

Admin said...

உங்கள் வருகைக்கு நன்றி நண்பா..

உங்கள் பக்கமும் அடிக்கடி வருகிறேன். உங்கள் பக்கம் நல்ல பயனுள்ள பக்கம்களை தாங்கி வருகிறதே....

அடிக்கடி எனது பக்கமும் வாருங்கள்...

அவன்யன் said...

நம்ம பசங்க சுலபமா வழுக்கி விழறாங்க நண்பா. சில பெண்கள் கைபேசியை உபயோகபடுத்துவதை பார்த்தால் நம்மளுக்கு சிரிகிறதா அழுவறதா தெரியிலே

Admin said...

உங்கள் வருகைக்கு நன்றி நண்பா...

நீங்க சொல்வதும் சரிதான் தனி ஒரு தொடர் எழுதலாம்.....

உங்கள் பக்கமும் எப்பவே வருகிறேன்..

என்பக்கமும் அடிக்கடி வந்து போங்கள்

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

நல்ல பதிவுங்க.. ஆனா செல்போன் உபயோகிக்கறவங்க திருந்துனாத்தான் உண்டு...

Admin said...
This comment has been removed by the author.
Admin said...

நன்றி சுபாங்கன் உங்கள் வருகைக்கு....

தொடருங்கள்...
உங்கள் வலைப்பக்கமும் வருகிறேன்....

உங்கள் கருத்துக்கு நன்றி நண்பா...

Siyam said...

வணக்கம் அண்ணா
ரொம்ப நல்லாவே எழுதுறிங்க தொல்லை தரும் தொலைபேசி கலாச்சாரத்தை .
பற்றி அண்ணா நீங்க எப்படி?...................?,...................

Post a Comment