Tuesday 24 August 2010

இணையத்தில் காதலித்துச் சம்பாதிக்கலாம்

இன்று இணையத்திலே பலரையும் கட்டிப்போட்ட்டிருக்கின்ற ஒன்றுதான் இணைய அரட்டை. இந்த அரட்டைகள் மூலம் நல்ல பல சம்பவங்கள் இடம்பெறுவதோடு. சில சுத்துமாத்து வேலைகளும் இடம் பெற்றுக்கொண்டுதான் இருக்கின்றன.

இன்று பல சமுகத்தளங்கள் இருக்கின்றன. அதன் மூலம் பலர் தமது நண்பர்கள் வட்டத்தை அதிகரித்துக்கொண்டே இருக்கின்றனர். இதன் மூலம் காதல், திருமணம், வியாபாரம் என்று நல்ல பல விடயங்கள் நடை பெற்றாலும் இன்று பலர் இணைய அரட்டையே வாழ்க்கை என்று தினமும் அரட்டையிலேயே தமது காலத்தை வீணடித்துக்கொண்டு இருக்கின்றனர்.
இங்கே அரட்டை அடிப்போர் பலர் தமது உண்மையான விபரங்களை விடுத்து பொய்யான தகவல்களைத்தான் பகிர்ந்து கொள்கின்றனர் என்பது வேறு விடயம். சில ஆண்கள் பெண்களின் பெயரிலே அரட்டை அடித்து பல சுத்துமாத்து வேலைகள் செயவோருமுண்டு.

சிலர் இந்த அரட்டைகளைப் பயன் படுத்தி நிறையவே சம்பாதித்துக்கொண்டிருக்கின்றனர். இதிலே சில பெண்கள் ஆண்களை காதலிப்பதாக நடித்து அவர்களிடமிருந்து பணங்களை பெற்று பின்னர் ஏமாற்றி வருகின்ற சம்பவங்களும் நடந்துகொண்டு வருகின்றன.

நான் இணையத்திலே உலாவ வந்த ஆரம்பத்திலே வலைப்பதிவுகள் பற்றி எல்லாம் தெரியாது. நண்பர்கள் மூலமாக சில சமுக வலையமைப்புகள் பற்றி அறிந்தேன். அவ்வப்போது அந்த இணையத்தளங்களிலே அரட்டையோடு என்பொழுது போகும்.

இத் தளங்களிலே அதிகமாக ஆண்கள் என்றால் பெண் நண்பர்களை வைத்துக் கொள்வார்கள். பெண்கள் ஆண் நண்பர்களை வைத்துக் கொள்வார்கள். ( ஈநேன்று தெரியவில்லை தெரிந்தவங்கள் சொல்லுங்கள்) ஆனால் நான் ஆண், பெண் என்று பாகுபாடின்றி எல்லா நண்பர்களையும் இணைத்துக்கொண்டேன். ஆனால் என்னிடம் இருக்கின்ற ஒரு கெட்ட குணம் எல்லோரையும் நம்பிவிடுவது.

இந்த அரட்டையிலே இருக்கின்ற பொய் நண்பர்களையும் இவர்களின் சுத்துமாத்துக்களையும் அறிந்தபோது அரட்டைப் பக்கமே போவதில்லை. அவ்வப்போது போய் என்ன என்ன நடக்கிறது என்று பார்த்துவருவதுமுண்டு.

இப்போ சொல்ல வந்த விடயத்துக்கு வருகிறேன். அரட்டை மூலம் எனக்கு பல நண்பர்கள் கிடைத்தனர். ( நான் நண்பனின் கதை என்று சொன்னால் நம்பவா போறிங்க அதுதான் எனக்கு என்று ஆரம்பிக்கிறேன்) இதிலே சில வெளிநாட்டு நண்பிகள் நெருக்கமானார்கள். அதிலே ஒரு நண்பி எப்போதும் இணைய இணைப்பிலே இருப்பார். எப்போதும் என்னோடு அரட்டை அடித்துக்கொண்டே இருப்பார்.

இவரது நண்பர் வட்டத்திலே பல ஆயிரக்கணக்கான நண்பர்கள் இருக்கின்றனர். எவரும் பெண்கள் இல்லை. மிகவும் அழகானவர், என்னுடைய வலைப்பதிவை பார்த்து கருத்துக்களைச் சொல்வார். அடிக்கடி என்னைப் பற்றி புகழ ஆரம்பித்துவிட்டார். பின்னர் என்னைக் காதலிப்பதாக அடிக்கடி சொல்வார். நான் இப்போத்துதான் பச்சிளம் பாலகன் என்பதனால் முடியாது என்று சொல்லிவிட்டேன்.

இக்கால கட்டத்திலே இவரது நட்புவட்டத்திலே இருக்கின்ற இலங்கையைச் சேர்ந்த மத்திய கிழக்கு நாடொன்றிலே இருக்கின்ற ஒரு நண்பரை நான் எனது நட்பு வட்டத்திலே இணைத்துக் கொண்டேன். அந்த நண்பரும் என்னோடு நல்ல நெருக்கமான நண்பரானார்.

அடிக்கடி என்னோடு பேசும் ஒரு நண்பராக மாறிவிட்டார். அப்போது அந்த நண்பர் என்னிடம் நான் குறிப்பிட்ட அந்த பெண் தன்னை இரண்டு வருடங்களாகக் காதலிப்பதாகவும் மாதாமாதம் அந்த பெண்ணுக்கு தான் பணம் அனுப்புவதாகவும் சொன்னார். நான் அவரிடம் எதுவும் சொல்லவில்லை

மறுபுறத்திலே அந்தப்பெண் என்னிடம் விருப்பம் கேட்டு என்னை விடுவதாக இல்லை. அடிக்கடி அவசரமாக பணம் தேவைப்படுகின்றது. என்றெல்லாம் பேசுவார் நான் காதில் கேட்காதது போன்று இருந்து விடுவேன்.

இவர் நிறையப்பேரை ஏமாற்றி வருகின்றார் என்பது மட்டு எனக்கு புரிந்துகொள்ள முடிந்தது. இவரை பற்றி ஆராய வேண்டு மென்று நினைத்தேன் இவரது நண்பர் வட்டத்திலே இருக்கின்ற பலரை என் நண்பர் வட்டத்திலே இணைத்தேன். அப்போது பலரை இந்தப் பெண் காதலிப்பதாக அறியக் கிடைத்தது. நான் எவரிடமும் இந்தப்பெண் பற்றிய விடயங்களை சொல்லவில்லை.

அவர் தனக்கொரு வலைப்பதிவு உருவாக்கித்தரும்படி அடிக்கடி என்னிடம் கேட்பதுண்டு. நான் உங்கள் மின்னஞ்சல் முகவரி, கடவுச் சொல் என்பவற்றை தாருங்கள் என்று கேட்டு வங்கிக் கொண்டேன். வலைப்பதிவு உருவாக்கியக் கொடுப்பது என் நோக்கமல்ல இவரது ஏமாற்று வேலைகளை அறிய வேண்டும் என்பதே என் எண்ணம்.

உடனடியாக நான் அவரது மின்னஞ்சலை பார்த்தபோது பலரிடமிருந்து நிறையவே பணம் பெற்றிருப்பது அறிய வந்தது. அவர் பலரை காதலிப்பதாக நடித்துக்கொண்டிருக்கின்றார். பலர் இவருக்கு மாதாந்தம் பணம் அனுப்பிக்கொண்டிருக்கின்றனர். என்பதும் தெரிய வந்தது.



உடனடியாக நான் மத்திய கிழக்கிலே இருக்கின்ற இலங்கையைச் சேர்ந்த நண்பருடன் தொடர்புகொண்டு விபரங்களைச் சொன்னேன் அவர் நம்பவே இல்லை. அவரால் அவள் மீதான காதலிலிருந்து வெளியே வர முடியவில்லை.

அந்த நண்பரைப் பற்றி நினைக்கும்போது இன்றும் நான் கவலைப் படுவதுண்டு. அவரது குடும்பம் சாதாரண ஏழைக் குடும்பம். தந்தை இறந்துவிட்டார். தாய், இரு தங்கைகள் அவர்களைப் பார்க்கின்ற பொறுப்பு இவரிடமே. இவர் செய்தவை தனது வருமானத்தில் அரை வாசியை அந்தப் பெண்ணுக்கும் அரை வாசியை தாய்க்கு அனுப்புவதும். இன்று அந்தப் பெண்ணின் தொடர்பு இல்லாமல் போய்விட்டதாகவும் அந்தப் பெண்ணால் நிறையவே இழந்திருப்பதாகவும் கூறினார்.

இவர் மாத்திரமல்ல இன்று பல இளைஞர்கள் இவ்வாறு ஏமாற்றப்பட்டுக் கொண்டு இருக்கின்றனர். பல சமுக இணையத்தளங்களிலே பல பெண்கள் காதல் எனும் போர்வையில் இளைஞர்களை சிக்கவைத்து பணம் பறித்துக்கொண்டிருக்கின்றனர். இணையத்திலே அரட்டை அடிப்பவர்கள் நிதானமாக சிந்தித்து செயற்படுவது நல்லதே.



சம்பவங்கள் உண்மை..... நீயா அவன் என்று கேட்கவேண்டாம். நான் அவனில்லை.
read more...

Saturday 21 August 2010

இதெல்லாம் ஒரு ஊடகம்.

ஊடகங்கள் பக்கச் சார்பின்றி செயற்பட வேண்டும் ஆனால் சில ஊடகங்கள் தாங்கள் சுய இலாபம் தேடுவதற்காக சமூகங்களுக்கிடையே பிரிவினையினை
ஏற்படுத்தி வருவதோடு தமது அரசியல் இருப்பை தக்க வைத்துக் கொள்ள எதனையும் செய்யத் துணியும் சில அரசியல்வாதிகளின் சந்தர்ப்பவாத
அரசியலுக்கு துணைபோகும் பல ஊடகங்கள் இருக்கின்றன.

அண்மையிலே மட்டக்களப்பு ஆரையம்பதியிலே இடம்பெற்ற ஒரு நிகழ்விலே கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் ஆற்றிய
உரையினை முற்றிலும் திரிவு படுத்தி தமிழ்வின் இணையத்தளம் செய்தியினை வெளியிட்டிருந்தது.

நான் ஒரு முதலமைச்சராக இன்றி பழைய பிள்ளையானாக மாற வேண்டி வரும்: எச்சரிக்கிறார் கிழக்கு மாகாண முதலமைச்சர் எனும் தலைப்பிலே எழுதப்பட்டிருக்கும் அச் செய்தியில். 18.08.2010ம் திகதி கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களின் பிறந்த தினத்தையொட்டி மட்டக்களப்பு ஆரையம்பதியிலுள்ள
ஆரையம்பதி சமூக அபிவிருத்திச் சங்கத்தின் ஏற்பாட்டில் முதலமைச்சரை வரவேற்று வாழ்த்துவதற்காக ஒரு விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. என்றும்
அங்கே மகஜர் ஒன்று முதலமைச்சரிடம் கையளிக்கப்பட்டதாகவும். முதலமைச்சர் பேசும்போது “முஸ்லிம் மக்களுக்கான மாதிரிக் கிராமம் அமைக்கப்படுவதை யாராலும்
தடுக்க முடியாது. இதையும் மீறி தடுக்கும் முயற்சியில் யாராவது தமிழர்கள் ஈடுபட்டால்
அதை எதிர்கொள்வதற்கு நான் ஒரு முதலமைச்சராக இன்றி பழைய பிள்ளையானாக மாற வேண்டி வரும்” என உரத்த குரலில் எச்சரிக்கை விடுத்தார். என்றும்
குறிப்பிடப் பட்டிருக்கின்றது.

இது முற்றிலும் தவறான ஒரு செய்தியாகும் இந்த நிகழ்வுகளிலே நானும் கலந்து கொண்டேன்.

 உண்மையில் நடந்தவை என்ன...


18.08.2010ம் திகதி கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களின் பிறந்த தினத்தையொட்டி பிறந்தநாள் நிகழ்வும் முதலமைச்சரின் இரண்டு
வருட அபிவிருத்திப் பணிகளின் தொகுப்பு இறுவட்டு வெளியீடும் மட்டக்களப்பு மாநகர சபை மண்டபத்திலே இடம்பெற்றது.

பிறந்தநாள் நிகழ்வு
ஆரையம்பதியில் இடம்பெறவில்லை. மட்டக்களப்பு ஆரையம்பதியிலுள்ள ஆரையம்பதி சமூக அபிவிருத்திச் சங்கத்தின் ஏற்பாட்டில்
எந்த ஒரு நிகழ்வும் ஆரையம்பதியில் இடம்பெறவில்லை.



ஆரையம்பதியிலே மதலமைச்சரின் பிறந்த தினத்தன்று நெக்டெப் திட்டத்தின் மூலம் இரண்டு கோடி செலவில் இளைஞர் வள நிலையம் முதலமைச்சரினால்
திறந்து வைக்கப்பட்டது. இங்கே பிறந்தநாள் நிகழ்வு இடம்பெறவில்லை. இத்திறப்பு விழாவினை ஆரையம்பதி பிரதேச செயலகத்தினர் ஏற்பாடு செய்திருந்ததோடு
பிரதேச செயலாளர் தனபாலசுந்தரம் அவர்களின் தலைமையிலேதான் நிகழ்வு இடம்பெற்றது.


அந்த நிகழ்வில் முதலமைச்சர் உரையாற்றும்போது. காங்கேயனோடையில் அமைக்கப்பட இருக்கின்ற மாதிரிக் கிராமம் தொடர்பாக தான் இப்போது
ஒரு முடிவெடுக்க முடியாது எனவும் தான் ஒரு முதலமைச்சராக இருந்து பக்கச் சார்பான முறையிலே முடிவெடுக்க முடியாது. இரு இனத்தவரினுடைய உரிமை கௌரவம்
என்பவற்றுக்கு மதிப்பளித்து தான் செயற்பட வேண்டும் என்றும் இந்த மாதிரிக் கிராமம் அமைக்கப்படும் பிரதேசம் தங்களுடையது என்று தமிழர்களும்
முஸ்லிம்களும் உரிமை கோரி வரும் நிலையில் இதன் உண்மை நிலையினை அறிய தான் ஒரு குழுவினை அமைத்து ஆராய்ந்து வருவதாகவும் கூறினார்.

மேலும் இப்பிரச்சினையை ஒரு சில அரசியல்வாதிகள் இரு சமுகங்களுக்கிடையே விரிசலை ஏற்படுத்தி தமது இருப்பினை தக்க வைத்து
அரசியல் ஆதாயம் தேட முற்படுகின்றனர். அதேபோல் சில அதிகாரிகளும் தமது ஊழலை மூடி மறைப்பதற்காக இரு சமூகங்களையும் மோதவிட்டு வேடிக்கை பார்க்க
நினைக்கின்றனர் என்றும் குறிப்பிட்டார்.

ஊடகங்கள் சமூகங்களுக்கிடையே பிரச்சினைகளை ஏற்படுத்தும் பொய்யான செய்திகளை தவிர்க்க வேண்டும். இவ்வாறான பல பொய்யான பிரச்சாரங்கள் மூலம் எமது
தமிழ் சமூகம் பல அவலங்களை சந்தித்திருக்கின்றது. இது போன்ற பொய்யாய செய்திகள் மூலம் இரு சமூகங்களையும் மோதவிட்டு வேடிக்கை பார்க்க நினைப்பதை
ஊடகங்களும் சந்தர்ப்பவாத அரசியல்வாதிகளும் நிநுத்திக் கொள்ள வேண்டும்.
read more...

Sunday 15 August 2010

தமிழ்க்கட்சிகளின் அரங்கம்

தமிழ் கடசிகளின் அரங்கம் 5வது தடவையாகவும் (14.08.2010) மட்டக்களப்பில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சி. சந்திரகாந்தன் தலைமையில் கூடியுள்ளது.

இவ் அரங்கத்துக்கு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி உறுப்பினர்கள் பலரும் தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் ஆனந்த சங்கரி, தமிழர் தேசிய ஜனநாயகக் கூட்டமைப்பு சார்பாக சிவாஜிலிங்கம், ஈழம்கள் ஜனநாயகக் கட்சி சார்பில் சந்திரகுமார் மற்றும் இராசமாணிக்கம், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி பத்மநபா அணி சார்பாக துரைரெட்ணம், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி சார்பாக சதானந்தம் இராகவன் மற்றும் தனபாலசிங்கம், ஈழ ஏதிலிகள் மறுவாழ்வுக் கழகத் தலைவர் சந்திரகாசன், ஈரோஸ் சார்பாக உதயவேல் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு அமைப்பு விடுக்கப்பட்டும் கலந்து கொள்ளவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

கடந்த தமிழ் கட்சிகளின் இரங்கத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கமைய தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு விடுக்கப்பட்ட அமைப்புக்கு
அவர்கள் உத்தியோகபூர்வமான பதிலளிக்காமையினையிட்டு அரங்த்தில் கவலை வெளியிடப்பட்டுள்ளது.

இன்றைய தமிழ் கட்சிகளின் அரங்கத்தில் தமிழ் மக்கள் எதிர் நோக்குகின்ற உடனடித் தேவைகள் குறித்து ஆராயப்பட்டுள்ளதாகவும், அரசாங்கத்தின் கவனத்துக்கு கொண்டு சென்று சாத்தியமான வழியில் விரைவாகத் தீர்வை பெற்றுக் கொடுப்பது குறித்து தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அவைகளாவன....

1. அர்த்தமுள்ள மீள் குடியேற்றம்.

2. உட்கட்டமைப்புடன் கூடிய மீள் கட்டுமானம்.

3. உயர் பாதுகாப்பு வலயங்கள். மீள் குடியேற்றங்கள்.

4. மக்களின் வாழ்விடங்களில் அமைக்கப்படும் இராணுவக் குடியேற்றங்கள்.

5. முழுமையான சிவில் நிர்வாகத்தினை ஏற்படுத்தல்.

6. ஆயுதப் போராட்டத்தினால் உடமைகளை உறவுகளை அங்கங்களை இழந்த மக்களுக்கு நட்ட ஈடுகளைப் பெற்றுக் கொடுத்தல்.

7. வடகிழக்கு உட்பட தமிழ் பேசும் பகுதிகளில் இனப்பரம்பலில் மாற்றத்தை ஏற்படுத்தும் செயற்பாடுகளைத் தடுத்து நிறுத்தல்.

8. யுத்தம் இடம் பெற்ற காலப்பகுதியில் கடைப்பிடிக்கப்பட்ட பாதுகாப்பு நடைமுறைகளைத் தளர்த்துதல்.

9. மீள் குடியேற்றத்தினை வெளிப்படையாகச் செய்வதுடன் அதை மக்கள் பிரதிநிதிகள் சர்வதேச உள்ள+ர் தொண்டு நிறுவனங்களின் பங்களிப்பை பெற்றுக் கொள்ளல்.

10. இனப்பிரசிசினை தீர்வுக்கு மாகாண சபைகளுக்கென பரிந்துரை செய்யப்பட்டிருக்கின்ற அரசியல் அமைப்பிலுள்ள 13 வது அரசியல் அதிகாரங்களை
முழுமையாக அமுல் படுத்துதல் ஆரோக்கியமான முன் முயற்சியாக அமையும்.

11. அடுத்து வரும் கட்டங்களில் தமிழ் கட்சிகளின் அரங்கத்தில் முஸ்லிம் மலையக கட்சிகளை இணைப்பது குறித்து ஆராயப்படும்.

12. தடுத்து வைக்கப்பட்டிருக்கின்ற அரசியல் கைதிகள் இறுதி யுத்த நடவடிக்கையின்போது சரணடைநடத கைது செய்யப்பட்ட போராளிகளின் விபரங்களை வெளிப்படுத்துவதுடன் அவர்களின் விடுதலைக்கு ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுத்தல்.
read more...

Thursday 12 August 2010

பறிபோகும் தமிழர் பிரதேசங்கள்

வடக்கு கிழக்கு மாகாணங்களிலே தமிழர்களது நிலங்கள் திட்டமிட்டு வேறு இனத்தவர்களினால் அபகரிக்கப் படுவதாக குற்றம் சாட்டப்படுகின்றது.
குறிப்பாக வடக்கு கிழக்கு மாகாணங்களிலே சிங்களவர்களும் முஸ்லிம்களும் தமிழர் பிரதேசங்களிலே குடியமர்த்தப் படுவதாக குற்றம்
சுமத்தப்படுகின்றது.

வடக்கு கிழக்கிலே திட்டமிட்டு இலங்கை அரசாங்கம் சிங்களவர்களை குடியேற்றி வருவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பினர் குற்றம்
சுமத்துகின்றனர். இவர்கள் குற்றம் சுமத்துவதோடு நின்றுவிடாது இக் குடியேற்றங்களை தடுப்பதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டிய
பொறுப்பு இருக்கின்றது.

ஆனால் இது தொடர்பில் குற்றச்சாட்டுக்களையும் கண்டனங்களையும் தவிர ஆக்கபூர்வமாக எதனையும் செய்வதாக தெரியவில்லை

அண்மையிலே 4தமிழ் மீடியாவிலே இடம் பெற்ற செய்தி...


சிறிலங்காவின் வடக்கு, கிழக்கு பிரதேசங்களிலே பரவலாக புத்த விகாரைகளும், சிங்களக் குடியேற்றங்களும், ஏற்படுத்தப்பட்டு வருவதாகவும், இதனால் அப்பகுதியில் வாழும் தமிழ மக்கள் அச்சமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


குறிப்பாக வடக்க கிழக்கு பிரதேசங்களில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்து சிறிலங்கா இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசமாக மாற்றம் பெற்றுள்ள பகுதிகளிலேதான் இவ்வாறான நடவடிக்கைகள் பரவலாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அறியப்படுகிறது.


இவ்வாறு நடைபெறும் விகாரைகள் அமைப்பும், சிங்களக் குடியேற்றமும், மிக நுட்பமாக ஏற்புடுத்தப்பட்டு வருவதாகவே அவதானிக்கப்பட வேண்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்படகிறது.


இராணுவ காவலரண்களை அண்டிய பகுதிகளிலே சிறு, சிறு விகாரைகள் அமைக்கப்படுகின்றன. இவ் விகாரைகளிலே பெளத்த மதம் சார்ந்த நிகழ்வுகள் அவ்வப்போது இடம் பெற்று வருகின்றன. எதிர் காலத்தில் இவ் விகாரைகள் பாரிய விகாரைகளாக உருவெடுக்கக்கூடிய சாத்தியங்கள் இருப்பதாக மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.


இது தொடர்பாக அரசாங்கத்திலே அங்கம் வகிக்கின்ற அரசியல்வாதிகள் கருத்துத் தெரிவிக்கின்றபோது இராணுவ முகாம்களிலே இருக்கின்ற இராணுவ விரர்களின் வணக்கஸ்தலமாக மட்டுமே இந்த விகாரைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. வேறு நோக்கங்களுக்காக அமைக்கப்படவில்லை என்று குறிப்பிடுகின்றனர்


இதுபோலவே தமிழ் பிரதேசங்களில் இராணுவ முகாம்களுக்கு பக்கத்தில் சிங்கள குடியேற்றங்களை ஏற்படுத்துவதற்கு திட்டமிடப்படுவதாக மக்கள் அச்சம் கொண்டுள்ளனர். வடக்கு கிழக்கிலே இருக்கின்ற இராணுவ முகாம்களுக்கு அருகிலே இருக்கின்ற காணிகளிலே பல சிங்கள குடியேற்றங்கள் ஏற்படுத்தப் பட்டிருப்பதாக சொல்லப்படுகின்றது.
ஒரு இராணுவ முகாமை எடுத்துக் கொண்டால் அந்த இராணுவ முகாமுக்கு அருகில் இருக்கின்ற காணியிலே அந்த இராணுவ முகாமைச் சேர்ந்த இராணுவ வீரர்களின் குடும்பங்கள் தற்காலிக கூடாரங்கள் அமைக்கப்பட்டு தங்க வைக்கப்பட்டிருப்பதாகவும் எதிர் காலத்திலே இப்பிரதேசங்கள் முற்று முழுதாக சிங்களப் பிரதேசங்களாக மாறக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அப்பிரதேச மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

நன்றிகள் 4தமிழ் மீடியா


இது ஒரு புறமிருக்க முஸ்லிம்களாலும் தமிழர் நிலப்பரப்புக்கள் அபகரிக்கப்படுவதாக தமிழ் மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
அண்மையில் மட்டக்களப்பு ஆரையம்பதி மக்கள் முஸ்லிம்கள் தமிழர் பிரதேசங்களை அபகரிப்பதை நிறுத்த வேண்டும் எனக்கோரி
உண்ணாவிரதம் ஒன்றினை மேற்கொண்டனர்.

உண்ணாவிரதம் இடம்பெற்ற இடத்துக்கு சென்ற கிழக்கு மாகாண முதலமைச்சரிடம் மக்களால் மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டது அதனை
அப்படியே தருகின்றேன்.


01. மண்முனை பிரதேச சபைக்குரிய வடக்கு எல்லையினுள் காத்தான்குடி நகர சபை அத்து மீறி நிருவாகம் செய்வது உடன் நிறுத்தப்பட வேண்டும்.


02. மண்முனைப்பற்று பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட பகுதியியில் நீதி மன்றத்தினால் தீர்ப்பு வழங்கப்பட்டதன்படி அரச காணிகளிலுள்ள காத்தான்குடி முஸ்லிம்களும் வேறு பிரதேச முஸ்லிம்களும் உடன் வெளியேற்றப்படவேண்டும். மேலும் இவ்வாறான குடிNயுற்றங்கள் இனிமேலும் இடம்பெறக்கூடாது.


03. கோயில்குளம் பகுதியில் நீர் வினியோகத்திட்டம் அமுல்படுத்தப்படுவதால் பிரதேசத்தில் நீர் வற்றும் நிலை ஏற்படும் இதனால் எமது ஜீவனோபாயமான பயிர்ச்செய்கை அழிவுறும் என்பதால் இச் செயற்றிட்டம் உடனே நிறுத்தப்படவேண்டும்.


04. காங்கேயன் ஓடை வீட்டுத்திட்டம் காங்கேயனோடை மக்களுக்கு அவரவர் வளவினுள்ளேயே கட்டிக்கொடுக்க வேண்டும். பள்ளிவாயல் காணி என்ற பேரில் மாவிலங்குதுறையில் இடம்பெறும் குடிNயுற்றம் உடன் நிறுத்தப்படவேண்டும்.


05. திண்மக்கழிவு சேகரிப்பு இடம் ஒன்று காத்தான்குடி நகரசபையால் எமது பிரதேசத்தில் ஆரம்பிக்க ஏற்பாடாகி வருகின்றது அது உடன் நிறுத்தப்படவேண்டும்.


06. மாவிலங்குதுறையில் பள்ளிவாயல் காணி என்ற பேரில் பரம்பரையாக வாழ்ந்து வரும் தமிழ் மக்களை அப்புறப்படுத்தும் நடவடிக்கை உடனடியாக நிறுத்தப்படவேண்டும்.


07. தமிழர்களின் பூர்வீக பிரதேசமான ஆரையம்பதியில் கடற்கரைப்பிரதேசத்தினுள் ஆட்சி உறுதிகளையும் போலியான ஆவணங்களையும் வைத்து குடியிருப்புக்களை ஏற்படுத்துவது நிறுத்தப்படவேண்டும்.



read more...

Saturday 7 August 2010

திருமணத்தின் பின்னும் பெண்களை கவர சில ஆலோசனைகள்


என்னுடைய முன்னைய இடுகை ஒன்று மீண்டும் உங்களுக்காக.... எல்லோருக்கும் பயனுள்ள ஆலோசனைதானே ...
01. உங்களுக்கு திருமணம் நடந்த விடயத்தை திருமண நாள் அன்றோடு மறந்து விடுங்கள், உங்களுக்கு திருமணம் நடந்து விட்டது என்று தெரியாதவர்களுக்கு திருமணம் நடந்த விடயத்தை தெரியப்படுத்த வேண்டாம்.

02 . மனைவி பிள்ளைகளோடு வெளியில் செல்வதை தவிருங்கள்.

03. நீங்கள் எப்போதும் திருமணமாகாத இளம் நண்பர்களோடு மட்டுமே பழகுங்கள். அப்போது மற்றவர்கள் உங்களையும் திருமணமாகாத ஒருவர் என்று நினைத்து விடுவார்கள்.

04. எப்போதும் நாகரிகமான ஆடைகளை அணியுங்கள் அடிக்கடி இளம் பெண்கள்  அதிகம் நடமாடும் இடங்களுக்கு சென்று உங்கள் வழமையான சில்மிசங்களை செய்யுங்கள்.

05. இளம் பெண்களுக்கு உதவிகள் தேவைப்படும்போது அந்தப் பெண்கள் உங்களிடம் உதவி கேட்காமலேயே நீங்களாகவே சென்று உதவி செய்யுங்கள். அப்போது அந்தப் பெண்ணின் மனதிலே இலகுவில் இடம் பிடிக்கலாம்.

06. சில காலம் குழந்தை பெறுவதை தவிர்க்க வேண்டும். காரணம் பிள்ளைகளின் தொல்லை அதிகமாகும் அப்போது வெளியில் நீங்கள் கல்யாணமானவர் என்பது தெரிய வரலாம். அப்போது இளம் பெண்கள் உங்களை கண்டாலே ஓடி விடுவார்கள்.

07. உங்கள் மனைவி வெளியில் சென்று வருவதற்கு ஒரு காரினையும் (மகிழுந்து) ஒரு சாரதியையும் ஏற்பாடு செய்து வையுங்கள். ( உங்கள் மனைவியை அந்த சாரதி ஏற்பாடு செய்தால் நான் பொறுப்பல்ல)

08. மூஞ்சி   புத்தகத்தில் (face book) அதிகம், பெண் நண்பிகளை தேடிக்கொள்ளுங்கள்.அல்லது அதிகம் பெண் நண்பிகளை சேர்க்க துடிக்கும் சந்ரு போன்றோரின் ஆலோசனைகளைப் பெறுங்கள்.

09. திருமண, பிறந்தநாள் போன்ற விசேட நிகழ்வுகளுக்கு மனைவியுடன் செல்வதை தவிர்த்து தனியாக செல்லுங்கள். ஏல்லும்போது கம்பிரமான தோற்றத்தோடு செல்லுங்கள். அங்கேயும் பல இளம் பெண்களை கவர முடியும்.

10. இதுதான் மிக முக்கியமான ஒன்று ஏற்கனவே திருமணமான மூத்த பதிவர்கள் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்று அவர்களது அனுபவத்துடன் கூடிய ஆலோசனைகளை பெறுங்கள்.
read more...