Saturday, 29 August 2009

கவலையோடும், மனதில் உறுதியோடும் எழுதுகிறேன்.

இன்று பெயரில்லாதவர்களின் (அனானிகளின்) தொல்லை பதிவர்களுக்கு அதிகரித்துவிட்டது. அதிலும் பல நாட்களாக எனக்கு இந்த பெயரில்லாதவரின். தொல்லை அதிகமாகிக் கொண்டே வருகின்றது.

ஆரம்பத்தில் என்னை தாக்கி தேவையற்ற சொத பியார்யோகங்களால் என்னைத் தாக்கி எழுதியவர். நான் வேறு வலைப்பதிவுகளுக்கு போடும் பின்னூட்டத்துக்கும். பெயரில்லாதவர் என்ற பெயரிலே தேவையற்ற விளக்கங்களை கொடுத்துக்கொண்டு வந்தார்.

இன்று அவரின் தொல்லை என் வலைப்பதிவிலும் கை வைத்துவிட்டது. நான் அதிகமாக நேசிக்கும் ஒருவர் பதிவர் லோஷன் அண்ணா. அதே போல் எனக்கு அண்மையில் அறிமுகமானவர்தான் நண்பர் புல்லட் அவர்கள். இவரின் நகைச்சுவை பதிவுகள் எனக்கு பிடிக்கும்

லோஷன் அண்ணாவின் வலைப்திவிலே நேற்று எனது பெயரிலே நண்பர் புல்லட் அவர்களைப் பற்றி தேவையற்ற விதத்திலே பின்னூட்டம் இடப்பட்டு இருந்தது. அதனைப் பார்த்ததும் எனக்கு கவலைதான் வந்தது. இப்படி பலருக்கு எனது பெயரிலே பின்னூட்டம் இடப்பட்டிருக்கின்றது.

அதுமட்டுமல்லாமல் நேற்று இரவு சிறிது நேரம் எனது வலைப்பதிவைக் காணவில்லை (open ஆகவில்லை) நான் அதனை பெரித்து படுத்தவில்லை. இன்று காலை எனது மின்னஞ்சலைப் பார்த்தேன் பலர் மின்னஞ்சல் அனுப்பி இருந்தார்கள். எனது வலைப்பதிவு open ஆகவில்லை என்றும் அதற்குப் பதிலாக http://www.tvs50110.com/ திறக்கப் படுவதாகவும் மின்னஞ்சல் வந்திருக்கின்றது.

அந்த நபர் (அனானி) அத்தோடு எனது பெயரிலே பின்னூட்டம் இடும் பின்னூட்டங்களை சொடுக்கும்போது (கிளிக்) எனது வலைப்பதிவே நேரடியாகத் open ஆகிறது. நான் எந்த தொழினுட்ப அறிவும் இல்லாதவன். ஆரம்பத்தில் நான் ஆரம்பத்திலே வைத்து இருந்த வலைப்பதிவைத் தொலைத்தவன். (மாயமாக மறைந்தது).

ஏன் இந்த வேலைகளைச் செய்கின்றார்கள் நேரடியாகச் சொல்லலாம் நான் எந்த விமர்சனங்களையும் ஏற்றுக்கொள்பவன். ஆனால் சவால் என்று வருகின்றபோது சவால்களை என் வெற்றியின் படிக்கற்களாக மற்ற நினைப்பவன். யாராக இருந்தாலும் என்ன பிரட்சனை என்பதனை நேரடியாகச் சொல்லுங்கள் சரியான விமர்சனங்களாக ஏற்றுக்கொள்ளக்கூடியவையாக இருந்தால் ஏற்றுக்கொள்கிறேன் . அவர்களின் இந்த நடவடிக்கைகள் என்னை இன்னும் எழுதவே தூண்டும் என்றும் எழுதிக்கொண்டே இருப்பேன்.

நான் வலைப்பதிவு தொடர்பில் தொழினுட்ப அறிவு குறைந்தவன். என் வலைப்பதிவு அடிக்கடி open பண்ண முடியாமல் போவதற்கும். எனது வலைப்பதிவினை open பண்ணும்போது வேறு வலைப்பதிவுகள் open பண்ணப்படுவதட்கும். மற்றவர்கள் என் பெயரிலே பின்னூட்டமிடுவதத்கும் என்ன செய்யலாம் என்றும் அதனைத் தடுப்பதற்கும் உரிய வழிகளை அறியத்தரும் படி அனைத்து வலைப்பதிவர்களிடமும் அன்பாக வேண்டிக்கொள்கின்றேன்.

எனது வலைப்பதிவைக் காப்பாற்ற உங்கள் உதவியினை நாடும்

உங்கள் அன்பின்...

சந்ரு

Post Comment

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

55 comments: on "கவலையோடும், மனதில் உறுதியோடும் எழுதுகிறேன்."

நட்புடன் ஜமால் said...

கவலை வேண்டாம் நண்பரே!

இதை சரி செய்திடலாம்.

sakthi said...

ஆம் பல சம்யங்களில் உங்கள் வலை பதிவு வருவதில்லை

நமது நண்பர்கள் கண்டிப்பாக தீர்வு சொல்வார்கள்

கவலை வேண்டாம் சகோ

வந்தியத்தேவன் said...

என்ன நடந்தது? உங்கள் பழைய வலை எங்கே? பொறுங்கள் சந்ரு சில நாட்களில் அவர்களை இனம் கண்டுகொள்ளமுடீயும்.

S.A. நவாஸுதீன் said...

இதுபோன்ற அனுபவம் நண்பர் சக்கரை சுரேஷுக்கும் ஏற்பட்டது. சில விஷமிகள் செய்யும் வேலை. விடுங்கள் சந்ரு. அவர்கள் தானே சலிப்பு ஏற்பட்டு ஓய்ந்து விடுவார்கள்

வேந்தன் said...

கவலை அளிக்கின்றது :(((
விரைவில் திர்வுகிடைக்க பதிபவர்கள் உதவுவார்கள்.

குடந்தை அன்புமணி said...

உங்கள் வேதனைகள் புரிகிறது. நண்பர்கள் தக்க ஆலோசனைகள் நிச்சயம் தருவார்கள்.

குறை ஒன்றும் இல்லை !!! said...

நண்பரே!!! உங்கள்ஆ னுமதி இல்லாமல் எந்த பெயரிலியையும் பின்னூட்டமிட அனுமதிக்க வேண்டாம்.அது நல்ல கருத்தோ அல்லது உங்களை திட்டுவதோ எதையும் அனுமதிக்க வேண்டாம்..

கமெண்ட் மாடுரேசன் வைக்கவும்..

Mrs.Menagasathia said...

கவலை படாதீங்க சந்ரு,நமது சகோதரர்கள் நிச்சயம் வழி சொல்வார்கள்.ராஜ் சொல்கிறமாதிரி கமெண்ட் மாடுரேசன் வைங்க.அது தான் நல்லது

கானா பிரபா said...

வணக்கம் சந்ரு

மறுமொழி மட்டுறுத்தலை வையுங்கள். இணையத்தில் சைக்கோ நடமாட்டம் தாராளமாக இருக்கின்றது. அவர்கள் எதையும் சொல்லி விட்டுப் போவார்கள், அதையெல்லாம் போடவோ அலட்டிக் கொள்ளவோ வேண்டாம்.

கானா பிரபா said...

மற்றவர்களள உங்கள் பெயரில் பின்னூட்டம் இடுவதை தடுப்பது மிகக் கடினம், ஒரே வழி அந்தந்தப் பதிவர்கள் பொறுப்புணர்வோடு பின்னூட்டம் யார் இட்டாலும் மறுபரிசீலனை செய்து வெளியிட வேண்டும்.

Jawarlal said...

டாக்டர் புரூநோவும் ஏறக்குறைய இதே மாதிரி எழுதியிருக்கிறார்.

http://kgjawarlal.wordpress.com

Anonymous said...

கவலை வேண்டாம் தோழா..வேற என்ன சொல்வதென்றே தெரியலை..தொழில் நுட்பம் பற்றி நம் நண்பர்கள் உதவுவார்கள் நம்பிக்கையோடு இருங்கள்

ஹேமா said...

சீ...ஏன் இப்பிடி.

ilangan said...

பெயரில்லாதவர் பெயரில்லாமலே போக என் பிரார்தனைகள். தாங்கள் அதிகமாக அரசியல் பதிவு எதுவும் எழுதுவதில்லையே பிறகெப்படி......

நிலாமதி said...

சற்று பொறுமையாக இருங்கள்.நண்பர்கள்வழி சொல்வார்கள்.விரைவில் நிம்மதிபெருமூச்சுவிடுவீர்கள்.நட்புகள் துணையிருக்க ப்யம் வேண்டாம் .
இப்படிஅறிவிப்பு கொடுத்துட்டீங்க இனி வாலாட்டமாட்டார்கள்.

பிரியமுடன்...வசந்த் said...

சந்ரு டோண்ட்வொர்ரி

சீக்கிரம் சரியாயிடும் நம் நட்புக்கள் உதவுவார்கள்

Ammu Madhu said...

சந்ரு கவலை படாதீங்க...கண்டிப்பாக கமென்ட் மாடரேஷன் வைங்க..என் தோழியிடம் இது பற்றி கேட்டுள்ளேன் ஏதேனும் தகவல் தெரிந்தால் சொல்கிறேன்..உங்களுடைய ப்ளாகர் அக்கவுண்டில் உள்ள பாஸ்வர்ட்டை அடிக்கடி மாற்றிக்கொண்டே இருங்கள்..

அன்புடன்,
அம்மு.

கிருஷ்ணமூர்த்தி said...

இதுக்குப் பெரிய தொழில் நுட்பமெல்லாம் வேண்டாம் சந்ரு! திறந்த வீட்டில், எல்லாம் தான் நுழையும்! கதவைச் சாத்தி, பூட்டி வைக்கிறோம் இல்லையா? அதேமாதிரி பின்னூட்டப் பெட்டியைத் திறந்தே வைக்காமல், ஒரு கட்டுக்குள், அதாவது முதலில் மட்டுறுத்தல், இன்னின்னார்தான் பின்னூட்டம் இட முடியும் என்று வரையறை செய்தல் இதெல்லாம் இந்த மாதிரிப் பிரச்சினையைத் தீர்க்க உதவும்.

கமென்ட் மாடரேஷன் வைத்தால் எப்படி கமென்ட் எழுதறது..அப்புறம் வாரேன்னு என்னுடைய ஒரு பதிவில் நீங்கள் எழுதிய பின்னூட்டம் நினைவு வருகிறதா?

இதெல்லாம் மிகவும் சிறிய பிரச்சினை! தானாகவே ஓய்ந்து விடும்!

தொடர்ந்து எழுதுங்கள்! அனானிகளுக்காகவுமே :-))

’டொன்’ லீ said...

மறுமொழி மட்டுறுத்தலை போடுங்கள்....

சந்ரு said...

எனது வலைப்பதிவு விசமிகளால் மாற்றங்கள் செய்யப்பட்டு. open பண்ணமுடியாமல் இருந்தபோது. எனக்கு உடனடியாக அறியத்தந்த அத்தனை நண்பர்களுக்கும். ஆலோசனைகளை வழங்கிய நண்பர்களுக்கும் எனது நன்றிகள்.

சந்ரு said...

//நட்புடன் ஜமால் கூறியது...
கவலை வேண்டாம் நண்பரே!

இதை சரி செய்திடலாம்.//உங்கள் ஆலோசனைகள்தான் எனக்கு முதலில் கை கொடுத்தது நன்றிகள் நண்பா..

சந்ரு said...

//sakthi கூறியது...
ஆம் பல சம்யங்களில் உங்கள் வலை பதிவு வருவதில்லை

நமது நண்பர்கள் கண்டிப்பாக தீர்வு சொல்வார்கள்

கவலை வேண்டாம் சகோ//

அறியத்தந்த அத்தனை நண்பர்களுக்கும் உங்களுக்கும் நன்றிகள்

சந்ரு said...

//வந்தியத்தேவன் கூறியது...
என்ன நடந்தது? உங்கள் பழைய வலை எங்கே? பொறுங்கள் சந்ரு சில நாட்களில் அவர்களை இனம் கண்டுகொள்ளமுடீயும்.//யார் என்பதனை விரைவில் வெளியிடலாம் என்று நினைக்கிறேன்.

உங்கள் வருகைக்கு நன்றிகள் நண்பா.

சந்ரு said...

//S.A. நவாஸுதீன் கூறியது...
இதுபோன்ற அனுபவம் நண்பர் சக்கரை சுரேஷுக்கும் ஏற்பட்டது. சில விஷமிகள் செய்யும் வேலை. விடுங்கள் சந்ரு. அவர்கள் தானே சலிப்பு ஏற்பட்டு ஓய்ந்து விடுவார்கள்//

வருகைக்கும், கருத்துக்களுக்கும், ஆலோசனைகளுக்கும் நன்றிகள்.

சந்ரு said...

//வேந்தன் கூறியது...
கவலை அளிக்கின்றது :(((
விரைவில் திர்வுகிடைக்க பதிபவர்கள் உதவுவார்கள்.//

பல பதிவர்கள் உதவி செய்திருக்கின்றார்கள் நண்பா சந்தோசம்.

வருகைக்கும், கருத்துக்களுக்கும், ஆலோசனைகளுக்கும் நன்றிகள்.

சந்ரு said...

//குடந்தை அன்புமணி கூறியது...
உங்கள் வேதனைகள் புரிகிறது. நண்பர்கள் தக்க ஆலோசனைகள் நிச்சயம் தருவார்கள்.//பல பதிவர்கள் உதவி செய்திருக்கின்றார்கள் நண்பா சந்தோசம்.

வருகைக்கும், கருத்துக்களுக்கும், ஆலோசனைகளுக்கும் நன்றிகள்.

சந்ரு said...

//குறை ஒன்றும் இல்லை !!! கூறியது...
நண்பரே!!! உங்கள்ஆ னுமதி இல்லாமல் எந்த பெயரிலியையும் பின்னூட்டமிட அனுமதிக்க வேண்டாம்.அது நல்ல கருத்தோ அல்லது உங்களை திட்டுவதோ எதையும் அனுமதிக்க வேண்டாம்..

கமெண்ட் மாடுரேசன் வைக்கவும்..//

வருகைக்கும், கருத்துக்களுக்கும், ஆலோசனைகளுக்கும் நன்றிகள்.

சந்ரு said...

//Mrs.Menagasathia கூறியது...
கவலை படாதீங்க சந்ரு,நமது சகோதரர்கள் நிச்சயம் வழி சொல்வார்கள்.ராஜ் சொல்கிறமாதிரி கமெண்ட் மாடுரேசன் வைங்க.அது தான் நல்லது//வருகைக்கும், கருத்துக்களுக்கும், ஆலோசனைகளுக்கும் நன்றிகள்.

சந்ரு said...

//கானா பிரபா கூறியது...
வணக்கம் சந்ரு

மறுமொழி மட்டுறுத்தலை வையுங்கள். இணையத்தில் சைக்கோ நடமாட்டம் தாராளமாக இருக்கின்றது. அவர்கள் எதையும் சொல்லி விட்டுப் போவார்கள், அதையெல்லாம் போடவோ அலட்டிக் கொள்ளவோ வேண்டாம்.//

நான் அவர்கள் கருத்துக்களை கணக்கிலேடுப்பதில்லைதான் அண்ணா அதுதான் வலைப்பதிவில் கை வைத்து இருக்கிறார்கள்.

சந்ரு said...

//கானா பிரபா கூறியது...
மற்றவர்களள உங்கள் பெயரில் பின்னூட்டம் இடுவதை தடுப்பது மிகக் கடினம், ஒரே வழி அந்தந்தப் பதிவர்கள் பொறுப்புணர்வோடு பின்னூட்டம் யார் இட்டாலும் மறுபரிசீலனை செய்து வெளியிட வேண்டும்.//

எனது வலைப்பதிவிலே அதிகமாக விவாதங்கள் இடம் பெறுவதனாலேயே நான் கமெண்ட் மாடுரேசன் வைக்கவில்லை. கமெண்ட் மாடுரேசன் வைக்கும் போது விவாதங்களிலே ஈடுபடுவோருக்கு நம்பிக்கைத் தன்மை இருக்காது. அத்தோடு உடனுக்குடன் நேரடியாக விவாதங்களில் ஈடுபடுவது தடைப்படுகிறது. அதனாலே நான் கமெண்ட் மாடுரேசன் வைக்கவில்லை.

நான் அதிகமான நேரந்களில் இணையத்திலே இருப்பதனால் அடிக்கடி பின்னூட்டந்களைப் பார்த்துக்கொள்ள முடிகிறது.

வருகைக்கும், கருத்துக்களுக்கும், ஆலோசனைகளுக்கும் நன்றிகள்.

சந்ரு said...

//Jawarlal கூறியது...
டாக்டர் புரூநோவும் ஏறக்குறைய இதே மாதிரி எழுதியிருக்கிறார்.

http://kgjawarlal.wordpress.com//

வருகைக்கும், கருத்துக்களுக்கும், ஆலோசனைகளுக்கும் நன்றிகள்.

சந்ரு said...

//தமிழரசி கூறியது...
கவலை வேண்டாம் தோழா..வேற என்ன சொல்வதென்றே தெரியலை..தொழில் நுட்பம் பற்றி நம் நண்பர்கள் உதவுவார்கள் நம்பிக்கையோடு இருங்கள்//

பல நண்பர்கள் உதவி செய்திருக்கின்றார்கள்.

வருகைக்கும், கருத்துக்களுக்கும், ஆலோசனைகளுக்கும் நன்றிகள்.

சந்ரு said...

//ஹேமா கூறியது...
சீ...ஏன் இப்பிடி.//

வருகைக்கும், கருத்துக்களுக்கும், ஆலோசனைகளுக்கும் நன்றிகள்.

சந்ரு said...

//ilangan கூறியது...
பெயரில்லாதவர் பெயரில்லாமலே போக என் பிரார்தனைகள். தாங்கள் அதிகமாக அரசியல் பதிவு எதுவும் எழுதுவதில்லையே பிறகெப்படி......//

நான் தமிழ் மொழி தொடர்பாக எழுதிய இடுகைகளுக்கே அவரது தேவையற்ற பின்னூட்டங்கள் இருந்தது.

வருகைக்கும், கருத்துக்களுக்கும், ஆலோசனைகளுக்கும் நன்றிகள்.

சந்ரு said...

//நிலாமதி கூறியது...
சற்று பொறுமையாக இருங்கள்.நண்பர்கள்வழி சொல்வார்கள்.விரைவில் நிம்மதிபெருமூச்சுவிடுவீர்கள்.நட்புகள் துணையிருக்க ப்யம் வேண்டாம் .
இப்படிஅறிவிப்பு கொடுத்துட்டீங்க இனி வாலாட்டமாட்டார்கள்.//

நன்றிகள் உங்களுக்கு. எனது வலைப்பதிவு open ஆகவில்லை என்று எனக்கு முதன் முதலில் அறியத்தந்ததே நீங்கள்தான்.

வருகைக்கும், கருத்துக்களுக்கும், ஆலோசனைகளுக்கும் நன்றிகள்.

சந்ரு said...

//பிரியமுடன்...வசந்த் கூறியது...
சந்ரு டோண்ட்வொர்ரி

சீக்கிரம் சரியாயிடும் நம் நட்புக்கள் உதவுவார்கள்//

பல நண்பர்கள் உதவி செய்திருக்கின்றார்கள்.

வருகைக்கும், கருத்துக்களுக்கும், ஆலோசனைகளுக்கும் நன்றிகள்.

சந்ரு said...

//Ammu Madhu கூறியது...
சந்ரு கவலை படாதீங்க...கண்டிப்பாக கமென்ட் மாடரேஷன் வைங்க..என் தோழியிடம் இது பற்றி கேட்டுள்ளேன் ஏதேனும் தகவல் தெரிந்தால் சொல்கிறேன்..உங்களுடைய ப்ளாகர் அக்கவுண்டில் உள்ள பாஸ்வர்ட்டை அடிக்கடி மாற்றிக்கொண்டே இருங்கள்..

அன்புடன்,
அம்மு.//

வருகைக்கும், கருத்துக்களுக்கும், ஆலோசனைகளுக்கும் நன்றிகள்.

சந்ரு said...

//கிருஷ்ணமூர்த்தி கூறியது...
இதுக்குப் பெரிய தொழில் நுட்பமெல்லாம் வேண்டாம் சந்ரு! திறந்த வீட்டில், எல்லாம் தான் நுழையும்! கதவைச் சாத்தி, பூட்டி வைக்கிறோம் இல்லையா? அதேமாதிரி பின்னூட்டப் பெட்டியைத் திறந்தே வைக்காமல், ஒரு கட்டுக்குள், அதாவது முதலில் மட்டுறுத்தல், இன்னின்னார்தான் பின்னூட்டம் இட முடியும் என்று வரையறை செய்தல் இதெல்லாம் இந்த மாதிரிப் பிரச்சினையைத் தீர்க்க உதவும்.

கமென்ட் மாடரேஷன் வைத்தால் எப்படி கமென்ட் எழுதறது..அப்புறம் வாரேன்னு என்னுடைய ஒரு பதிவில் நீங்கள் எழுதிய பின்னூட்டம் நினைவு வருகிறதா?

இதெல்லாம் மிகவும் சிறிய பிரச்சினை! தானாகவே ஓய்ந்து விடும்!

தொடர்ந்து எழுதுங்கள்! அனானிகளுக்காகவுமே :-))//

வருகைக்கும், கருத்துக்களுக்கும், ஆலோசனைகளுக்கும் நன்றிகள்.

ஆ.ஞானசேகரன் said...

தெரிந்தவர்கள் கண்டிப்பாக சொல்லுவார்கள் என்று நம்புகின்றேன்

ஆ.ஞானசேகரன் said...

தொடர்ந்து எழுதுங்கள் நண்பா

சப்ராஸ் அபூ பக்கர் said...

நிச்சயமாக இது சில விஷமிகளுடைய செயல் தான். அவர்களே அதனை நிறுத்திக் கொள்வார்கள் சந்ரு. கவலையை விடுங்கள்....

ஸ்ரீராம். said...

கவலைக்கும் பதட்டத்துக்கும் தேவை இல்லை. அனானி தொந்தரவு எங்கும் உள்ளதுதான். தரக் குறைவான விமர்சனங்களை வெளியிடாதீர்கள். முக்கியமாக பதில் சொல்லாதீர்கள். வலைப் பாக்கம் தொலைந்து கூட போகுமா? ஆச்சர்யம்தான். அனைத்துப் பதிவர் மாநாடு சமீபத்தில்தான் நடத்தி உள்ளீர்கள். எல்லோருடனும் கலந்து பேசி அனானிகளை மதிப்பதில்லை என்று முடிவெடுங்கள்.

யாழினி said...

ஆச்சரியமாக இருக்கிறது சந்ரு அத்துடன் பயமாகவும் உள்ளது. ஏன் இவ்வாறாக எல்லாம் செய்கிறார்கள்? தைரியமாக இருங்கள். உங்கள் மனத்துணிவு நிட்சயம் வெற்றியைத் தரும்.

வந்தியத்தேவன் said...

//எனது வலைப்பதிவிலே அதிகமாக விவாதங்கள் இடம் பெறுவதனாலேயே நான் கமெண்ட் மாடுரேசன் வைக்கவில்லை. கமெண்ட் மாடுரேசன் வைக்கும் போது விவாதங்களிலே ஈடுபடுவோருக்கு நம்பிக்கைத் தன்மை இருக்காது. அத்தோடு உடனுக்குடன் நேரடியாக விவாதங்களில் ஈடுபடுவது தடைப்படுகிறது. அதனாலே நான் கமெண்ட் மாடுரேசன் வைக்கவில்லை. //

சந்ரு சரியான கருத்துத்தான் ஆனால் நாம் 24 மணி நேரமும் இணையத்துடன் இணைந்திருக்கமுடியாது, நாம் இணைய இணைப்பில் இல்லாத வேளைகளில் நித்திரைகொள்ளும் வேளைகளிலும் விசமிகள் கைவரிசையைக் காட்டிவிடுவார்கள். ஆகவே இந்த நேரத்தில் இடம்பெறும் விவாதங்களில் அவர்களி விசமக் கருத்துகளோ கெட்டவார்த்தைப் பிரயோகங்களோ இருக்கும் போது ஏனையவர்கள் இந்தக் கருத்துக்களைப் பார்க்கும்போதோ படிக்கும்போதோ சஞ்சலப்படுவார்கள்.

இந்த நிலை மாறவேண்டும் என்றால் அவர்களை மாடரேசன் மூலம் தடுப்பதே சிறந்த வழி.

ஜெகநாதன் said...

அது யாரு அனானிகள்?? ​ரேஸ்கல்ஸ்!? அக்பர் கவுஸர் கிட்ட இருந்து யுனானி கீரை வாங்கி அடிச்சிட்டு விட்டுடுவேன்! நீங்க பயப்படாதேயும் சந்ரு! இவங்க அனானிகள் இல்லை அஞ்ஞானிகள்!

யோ வாய்ஸ் said...

இதே போல் ஒரு பிரச்சினை கார்க்கியின் சாளரமச் வலைக்கும் நடந்தது. அவரது ப்ளாக்கர் அக்கவுண்டும் திருடப்பட்டு மீண்டும் கிடைத்தது. அவர் அதில் இதிலிருந்து தப்ப ஆலோசனைகள் சில தந்துள்ளார். அதை கொஞ்சம் வாசியுங்கள். முடிந்தால் அவருக்கு மின்மடல் அனுப்பி இது சம்பந்தமான அறிவுறுத்தல்களை பெற்றுக் கொள்ளுங்கள். அந்த பதிவின் முகவரி

http://www.karkibava.com/2009/07/blog-post_22.html

சந்ரு said...

//’டொன்’ லீ கூறியது...
மறுமொழி மட்டுறுத்தலை போடுங்கள்....//உங்கள் ஆலோசனைகளையும் கருத்தில் எடுத்திருக்கின்றேன்.

வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிகள்.

சந்ரு said...

//ஆ.ஞானசேகரன் கூறியது...
தெரிந்தவர்கள் கண்டிப்பாக சொல்லுவார்கள் என்று நம்புகின்றேன்
தொடர்ந்து எழுதுங்கள் நண்பா//

தொடர்ந்தும் எழுத இருக்கின்றேன்.

வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிகள்.

சந்ரு said...

//சப்ராஸ் அபூ பக்கர் கூறியது...
நிச்சயமாக இது சில விஷமிகளுடைய செயல் தான். அவர்களே அதனை நிறுத்திக் கொள்வார்கள் சந்ரு. கவலையை விடுங்கள்....//

வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிகள்.

சந்ரு said...

//ஸ்ரீராம். கூறியது...
கவலைக்கும் பதட்டத்துக்கும் தேவை இல்லை. அனானி தொந்தரவு எங்கும் உள்ளதுதான். தரக் குறைவான விமர்சனங்களை வெளியிடாதீர்கள். முக்கியமாக பதில் சொல்லாதீர்கள். வலைப் பாக்கம் தொலைந்து கூட போகுமா? ஆச்சர்யம்தான். அனைத்துப் பதிவர் மாநாடு சமீபத்தில்தான் நடத்தி உள்ளீர்கள். எல்லோருடனும் கலந்து பேசி அனானிகளை மதிப்பதில்லை என்று முடிவெடுங்கள்.//

அனானிகளின் கருத்துக்களை நான் கணக்கிலெடுப்பதில்லை நண்பா. ஆனால் வலைப்பதிவில் அவர்களின் கைவரிசை வருவதுதான் கவலைக்குரிய விடயம்.

வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிகள்.

சந்ரு said...

//யாழினி கூறியது...
ஆச்சரியமாக இருக்கிறது சந்ரு அத்துடன் பயமாகவும் உள்ளது. ஏன் இவ்வாறாக எல்லாம் செய்கிறார்கள்? தைரியமாக இருங்கள். உங்கள் மனத்துணிவு நிட்சயம் வெற்றியைத் தரும்.//

இவர்களின் இந்தச் செயல்கள் என்னை இன்னும் எழுதத் தூண்டி இருக்கிறது.

வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிகள்.

சந்ரு said...

//வந்தியத்தேவன் கூறியது...
//எனது வலைப்பதிவிலே அதிகமாக விவாதங்கள் இடம் பெறுவதனாலேயே நான் கமெண்ட் மாடுரேசன் வைக்கவில்லை. கமெண்ட் மாடுரேசன் வைக்கும் போது விவாதங்களிலே ஈடுபடுவோருக்கு நம்பிக்கைத் தன்மை இருக்காது. அத்தோடு உடனுக்குடன் நேரடியாக விவாதங்களில் ஈடுபடுவது தடைப்படுகிறது. அதனாலே நான் கமெண்ட் மாடுரேசன் வைக்கவில்லை. //

சந்ரு சரியான கருத்துத்தான் ஆனால் நாம் 24 மணி நேரமும் இணையத்துடன் இணைந்திருக்கமுடியாது, நாம் இணைய இணைப்பில் இல்லாத வேளைகளில் நித்திரைகொள்ளும் வேளைகளிலும் விசமிகள் கைவரிசையைக் காட்டிவிடுவார்கள். ஆகவே இந்த நேரத்தில் இடம்பெறும் விவாதங்களில் அவர்களி விசமக் கருத்துகளோ கெட்டவார்த்தைப் பிரயோகங்களோ இருக்கும் போது ஏனையவர்கள் இந்தக் கருத்துக்களைப் பார்க்கும்போதோ படிக்கும்போதோ சஞ்சலப்படுவார்கள்.

இந்த நிலை மாறவேண்டும் என்றால் அவர்களை மாடரேசன் மூலம் தடுப்பதே சிறந்த வழி.//

உங்கள் ஆலோசனைகளை கருத்திலெடுத்து இருக்கிறேன்.

வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிகள்.

சந்ரு said...

//ஜெகநாதன் கூறியது...
அது யாரு அனானிகள்?? ​ரேஸ்கல்ஸ்!? அக்பர் கவுஸர் கிட்ட இருந்து யுனானி கீரை வாங்கி அடிச்சிட்டு விட்டுடுவேன்! நீங்க பயப்படாதேயும் சந்ரு! இவங்க அனானிகள் இல்லை அஞ்ஞானிகள்!//

வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிகள்.

சந்ரு said...

//யோ வாய்ஸ் கூறியது...
இதே போல் ஒரு பிரச்சினை கார்க்கியின் சாளரமச் வலைக்கும் நடந்தது. அவரது ப்ளாக்கர் அக்கவுண்டும் திருடப்பட்டு மீண்டும் கிடைத்தது. அவர் அதில் இதிலிருந்து தப்ப ஆலோசனைகள் சில தந்துள்ளார். அதை கொஞ்சம் வாசியுங்கள். முடிந்தால் அவருக்கு மின்மடல் அனுப்பி இது சம்பந்தமான அறிவுறுத்தல்களை பெற்றுக் கொள்ளுங்கள். அந்த பதிவின் முகவரி

http://www.karkibava.com/2009/07/blog-post_22.html//

உண்மைதான் நண்பா அன்று கார்க்கியின் வலைப்பதிவுக்கு இப்படி நடந்தபோது நான் உண்மையாகவே நம்பவில்லை அப்படி நடக்குமா என்று யோசித்தேன். இன்று எனக்கு நடந்தபோதுதான். தெரிகிறது.

சுட்டியை அறியத்தந்தமைக்கு நன்றிகள் நண்பா.

சுப.நற்குணன் said...

நண்பரே, இங்கு நண்பர்கள் பலர் கூறியுள்ள தகவுரைகளைச் செயல்படுத்திப் பாருங்கள்.

இனி கூடுதல் கவனத்தோடு செயல்படவும்.

Post a Comment