Saturday 31 December 2011

முஸ்லிம்கள் மனிதாபிமானமற்றவர்களா?



பல முஸ்லிம் பதிவர்களும் ஒரு சில தமிழ் பதிவர்களும் நான் இட்ட எனும் பதிவிற்கு போர்க்கொடி தூக்கியிருந்தனர். காரணம் நான் முஸ்லிம் எனும் வார்த்தை பயன்படுத்தி இருப்பதனால் ஒட்டு மொத்த முஸ்லிம்களையும் தவறானவர்களாக குறிப்பதாக சொல்லி இருந்தனர். (

ஆண்களின் காம வெறிக்கு இரையாகும் தமிழ் பெண்கள்)


குறித்த பதிவில் நான் குறிப்பிட்ட சம்பவங்கள் மூன்றிலும் சம்பந்தப் பட்டவர்கள் பல முஸ்லிம்கள். ஒருவர் பிரச்சினைக்குரியவர் என்றால் நான் முஸ்லிமகள்; என்று எழுதியது தவறுதான். பல முஸ்லிம் நபர்களை முஸ்லிம்கள் என்று சொல்லாமல் தமிழர்கள் என்று சொல்வதா?

முஸ்லிம்கள் என்று சொல்லிவிட்டேன் என்பதற்காக கொதித்தெழுந்தவர்கள் பாதிக்கப்பட்ட பெண்கள் பற்றி நினைத்தார்களா? கற்பமடைந்த 15 வயது சிறுமியின் நிலை எதிர்காலம் பற்றி சிந்தித்தார்களா? குற்றமானவர்கள் என நிருபிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக வக்காளத்து வாங்கும் ஒரு இனமா முஸ்லிம்கள் என்று எண்ணத் தோன்றுகின்றது. பாதிக்கப்பட்டவர்களுக்காக குரல்கொடுக்காது தவறு செய்தவர்களை பல்லாக்கில் வைத்து சுமக்கும் அளவிற்கு இருக்கின்றார்கள்.

எனது சமூகத்தின் பிரச்சினைகளை மாத்திரம் வெளி உலகுக்கு  கொண்டு வருவதற்காக மாத்திரமே எழுதுபவன் நான் பொழுது போக்குக்காக அல்ல. அதிக ஹிட்ஸ் வாங்க வேண்டும் என்ற எண்ணமும் எனக்கில்லை. நல்ல வாசகர்கள் நான்குபேரை சென்றடைந்தாலுமே போதும். குறித்த எனது பதிவு தமிழ் மணத்தில் சூடான இடுகைகள் பகுதியின் உச்சம்வரை சென்றதை சிலர். ஹிட்ஸ் பெறுவதற்காக இப்படி எழுதுகிறேன் என்று சொல்லி இருந்தனர். இப்பதிவு மட்டுமல்ல பல பதிவுகள் சூடான இடுகைகளின் உச்சம்வரை சென்று வந்த பதிவுகள்தான். 

இன்னுமொரு நண்பர் மூஞ்சிப் புத்தகத்தில் குறிப்பிட்டிருந்தார். என்னுடைய வலைப்பதிவை வந்து பார்த்தாராம் எல்லாமே கில்மா பதிவுகள்தானாம் உண்மையிலேயே இவர் குருடராகத்தான் இருக்க வேண்டும் என் பதிவுகளை கில்மா பதிவுகள் என்று சொலகிறார். கில்மா பதிவுகளை இவரால் பட்டியல் படுத்த முடியுமா?

முஸ்லிம்கள் என்று நான் எழுதினேன் என்பதற்காக எனக்கு எதிராக எழுதிய எனும் பதிவரே ஈழத்தமிழர்கள் பற்றி தவறாக எழுதிக் கொண்டிருக்கின்றார். இதுதான் அவரின் மனிதாபிமானமா? பார்க்க http://pinnoottavaathi.blogspot.com

இது ஒரு புறமிருக்க ஒரு சமூகம் சீரழிக்கப்படும்போது பொறுத்திருக்க முடியுமா? 15 வயது  சிறுமிக்கு ஏற்பட்ட நிலை ஒரு முஸ்லிம் சிறுமிக்கு தமிழர் ஒருவர் வயிற்றில் பிள்ளையைக் கொடுத்திருந்தால் முஸ்லிம்கள் என்ன செய்திருப்பார்கள்? பல தமிழர்களை வெட்டிக் கொன்றிருப்பார்கள். வரலாற்றுப்  பக்கங்க் பாடம்.

எமது சமூகத்தின் வறுமையை பயன்படுத்தி பணத்தினைக் கொடுத்து பல முஸ்லிம்கள் தமது காம இச்சையினை தீர்த்துக் கொள்கின்றனர் இது ஒரு புறமிருக்க கிழக்கு மாகாணத்திலே இருக்கின்ற தமிழர்கள் முஸ்லிம் சமூகத்தின் அடக்கு முறைகளுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றனர். இவை வெளி உலகிற்கு வருவதில்லை. எந்த ஒரு ஊடகங்களும் இவற்றை வெளியிடுவதில்லை.

வெளிவராத பல விடயங்களை தருகின்றேன்..
இப்போது தொடர்ச்சியாக தமிழ் முஸ்லிம்களுக்கிடையில் பிரச்சினையாக இருக்கும் விடயம்

மட்டக்களப்பு மண்முனைப்பற்று பிரதேச சபைக்கட்பட்ட தமிழ் பிரதேசங்கள் பலவற்றை முஸ்லிம்கள் கைப்பற்றியுள்ளமை அத்துடன் காத்தான்குடி முஸ்லிம் பிரதேசத்தின் எல்லையினை ஆரையம்பதி தமிழ் பிரதேசத்திற்குள் கொண்டுவந்திருக்கின்றமை.

இப்பொழுது கடும் பிரச்சினையாக இருக்கின்ற விடயம் காத்தான்குடி நகரசபைக் குப்பைகளை மண்முனைப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட ஆரையம்பதி பிரதேசத்தில் கொட்டுதல்

இக் குப்பைகள் மட்டக்களப்பு தேசியக் கல்வியக் கல்லூரிக்கு பின்னால் மக்கள் குடியிருப்புப் பகுதிகளில் அத்துமீறி கொட்டப்படுகின்றன

இக் குப்பைகளில் அதிகமானவை விலங்குகள் வெட்டப்படகின்ற கழிவுகள்

இங்கு குபபைகள் கொட்டக்கூடாது என்று தடை செய்யப்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு நடந்துவரும் நிலையிலும் அத்துமீறி குப்பைகளை கொட்டி வருகின்றனர்

அண்மையில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஆரையம்பதியை சேர்ந்த பிரசாந்தன் அவர்களும் மண்முனைப்பற்று பிரதேச சபைத் தவிசாளர் கிறிஸ்டினா சாந்தன் அவர்களும் காத்தான்குடி நகரசபை குப்பைகளுடன் ஆரையம்பதி பிரதேசத்தில் கொட்டுவதற்காக வந்த குப்பைவண்டிகளை திருப்பி அனுப்பினார்கள்

கடந்த 3 நாட்களுக்கு முன்னர் பெருந்தொகையான மிருகங்கள் வெட்டப்பட்ட கழிவுகளை ஏற்றிக்கொண்டு (மாட்டுக் குடல்) வந்த குப்பை வண்டிகளை மண்முனை பற்று பிரதேசசபை தவிசாளர் கிறிஸ்டினா சாந்தன் தடுத்து நிறுத்தினார். இதனால் கோபமடைந்த காத்தான்குடி நகரசபை தவிசாளர் கிறிஸ்டினா சாந்தனுடன்  சண்டை பிடித்திருக்கின்றார்

ஆனாலும் கிறிஸ்டினா சாந்தன் விடவில்லை 10 மணிக்கு வந்த வண்டிகள் 1 மணி வரைக்கும் பிரதான வீதியிலேயே மறித்து வைத்திருந்தார்

இவ்வாறான தமிழர் நிலப்பகுதிகளை முஸ்லிம்கள் பிடிப்பதும் வேண்டுமென்று அத்துமீறி குப்பைகளை தமிழர் பிரதேசங்களில் கொட்டுவதும் எந்த அளவில் நியாயம். இலங்கை முஸ்லிம்கள் மட்டுமா இப்படி என்று பார்த்தால் அரபு நாடுகளிலும் முஸ்லிம்கள் மனிதாபிமானமற்றவர்கள்தான் என்பதனை நானே உணர்ந்து கொண்டேன்.

நான் கட்டாரில் நான்கரை மாதங்கள் இருந்தபோது கட்டாரில் இருக்கின்ற தமிழர்கள்  மோசமாக முஸ்லிம்களால் நடாத்தப்படுகின்ற விடயங்களை நேரடியாக அவதானித்தேன். அனுபவித்தேன். நான் கட்டார் நாட்டுக்கு  கட்டார் அரசாங்கத்தினுடைய கம்பனி ஒன்றிற்கு உயர் பதவிக்காகச் சென்றிருந்தேன் விபரம் இங்கே வேலை வழங்கப்படாதபோது தினமும் கட்டாரில் இருக்கின்ற பல அரச அதிகாரிகளின் அலுவலகங்களுக்கு சென்று எமது நிலையினை எடுத்துக் கூறினோம் எங்களை அடித்து விரட்டும் நிலைக்கு தள்ளப்பட்டோம் அலுவலகங்களிலே. 
பார்க்க 

வெளிநாடுவரைக்கும் துரத்தி வந்த ஏழரைச் சனியன்.

எமது தமிழ் தொழிலாளர்களுக்கு கத்தாரிகள் செய்கின்ற வேலைகள் கொடுரங்கள் எண்ணிலடங்கா. ஒரு நாள் எனது நண்பர்கள் சிலர் வீதியால் சென்று கொண்டிருக்கும்போது பல கட்டார் இளைஞர்கள் பொலித்தின் பெகளில் சிறுநீரை (நமது பாஸையில் மூத்திரம்) எடுத்து முகத்தில் எறிந்துவிட்டனர்.

எமது தமிழர்கள் பலர் குப்பை பொறுக்கும் தொழிலை செய்கின்றனர். வீடுகளில் இருக்கும் குப்பைகளையும் எடுக்க வேண்டும். எமது தொழிலாளர்கள் அங்கே பெறுகின்ற பழைய பொருட்களை விற்பதுண்டு கத்தாரிகள் என்ன செய்வார்கள் தெரியுமா? வேண்டுமென்று மலத்தினை ஒரு பையில் எடுத்து அழகாகப் பாதி செய்து வைத்துவிடுவார்கள். எமது உறவுகள் நல்ல பொருளென்று எடுத்து விடுவார்கள்.

இவ்வாறு சொல்லிக்கொண்டே போகலாம்...

முஸ்லிம்கள் மனிதாபிமானமற்றவர்களா?

read more...

Tuesday 27 December 2011

சத்தியமா சொல்கிறேன் சுயபுராணம்தான்..


ஒருவரின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும்போது அது மற்றவர்களுக்கு படிப்பினையாக அமையும். இங்கே பகிரப்பட இருக்கும் விடயம். கட்டார் நாட்டுக்கு தொழிலுக்காகச் சென்று ஏமாற்றப்பட்டு கட்டார் நாட்டிலே சரியாக நான்கரை மாதங்கள் உணவின்றி தங்க இடமின்றி பரிதவித்த ஒரு பரதேசியின் கதை?

யார் அந்தப் பரதேசி வேறு யாருமல்ல நான்தான். இங்கே பகிரப்பட இருக்கின்ற விடயங்கள் நான் கட்டார் நாட்டிலிருந்து இலங்கைக்கு வந்த நாளிலிருந்து எழுத நினைத்தது. வலைப்பதிவு பக்கம் வருவதற்கு மனம் இடம் கொடுக்கவில்லை. இங்கே பகிரப்படுகின்ற விடயங்கள் கட்டாருக்கு நான் சென்று நான்கரை மாதங்கள் பட்ட துயரங்கள் கட்டார் நாட்டிலே வேலைக்காகச் சென்றிருக்கின்ற எமது உறவுகள் அனுபவிக்கின்ற படுகின்ற கஸ்ரங்களை மற்றவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்பதே எனது நோக்கம்.

எமது பிரதேசங்களிலே வெளிநாட்டுக் காசு படும்பாடு வாய்விட்டுச் சொல்ல முடியாது. வெளிநாட்டிலிருந்து கணவன் பணம் அனுப்பிவிட்டால் வங்கிக்குச் சென்று பணத்தினை எடுத்து அத்தனை பணத்தினையும் செலவு செய்துவிட்டு சில தினங்கள் சென்றதும் பட்டினி கிடக்கின்ற பலரை பார்த்திருக்கின்றேன். பலர் அப்பணத்தில் சிறு தொகைப் பணத்தையாவது சேமிப்போம் என்று நினைக்கமாட்டார்கள். அதிகமானவர்கள் இப்பணத்தினை ஆடம்பரத்திற்காக செலவு செய்கின்றனர்.


நான் கட்டாருக்கு செல்ல முன்னர் வெளிநாட்டில் இருப்பவர்களின் குடும்பங்கள் படும் பாட்டைப் பார்த்து கவலைப்படுவதுமுண்டு. நானும் வெளிநாடு போனால் உழைத்து நிம்மதியாக இருக்கலாமே என்று. காரணம் நான் மிகவும் வறிய கஸ்ரப்பட்ட குடும்பத்தில் பிறந்தவன். எனது தந்தை என்னுடைய பத்து வயதில் இறந்தவிட்டார் குடும்ப சுமையை பொறுப்பினை பத்து வயதில் நான் ஏற்க வேண்டிய சூழல். ஏழைகள் கஸ்ரப்பட்டவர்கள் பக்கம் எவர் பார்வையும் திரும்புவதில்லைதானே.

என் தந்தை இறந்த அன்று பத்து வயதிலேயே என் சந்தோசமும் தொலைந்துவிட்டது தேடிக்கொண்டிருக்கின்றேன். இன்னும் காணவில்லை.குடும்ப சுமையை நான் ஏற்கவேண்டிய கட்டாயத்தின் தேவை பல கஸ்ரங்களுக்கு மத்தியில் வாழ்ந்துவரும் வெளிநாட்டில் இருப்பவர்களின் குடும்பங்களைப் பார்க்கின்றபோது நானும் வெளிநாடு சென்றால் நிம்மதியாக வாழலாம் என்று எனக்குள் எண்ணம் தோன்றும் போதெல்லாம் அம்மாவிடம் சொல்வேன் வெளிநாடு போகப் போகிறேன் என்று அம்மா போகவேண்டாம் என்று சொல்லிவிடுவார்.

இருந்தாலும் பல கஸ்ரங்களுக்கு மத்தியில் படித்து பட்டம் பெற்றும் Nவுலை தேட சென்றால் வேலைக்கு இலட்சக் கணக்கில் பணம் கேட்கின்றனர். என்னைப் போன்ற கஸ்ரப்பட்டவர்களின் நிலை திண்டாட்டம். பணக்காரர்களுக்கு கொண்டாட்டம். பணமிருந்தால் வேலை.

கட்டார் நாட்டில் மேற்பார்வையாளர் வேலை இருக்கின்றது. இலங்கை ரூபா 150000 என்று அறிந்தேன். முகவரைத் தொடர்புகொண்டு வெளிநாடு செல்வதற்கு எனது பாஸ்போட் விபரங்களைக் கொடுத்தேன் ஆனாலும் வீட்டில் நான் செல்வது எவருக்கும் விருப்பமில்லை.

வீசாவும் வந்துவிட்டது. போவதில்லை என்று முடிவெடுத்துவிட்டு இருக்கின்றபோது. முகவரிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது வெளிநாட்டுக்கு செல்வதாக இருந்தால் நாளை கொழும்புக்கு வரவேண்டும். வரவில்லை என்றால் வீசா காசு 350000 இலங்கை ரூபாவை தந்துவிட்டு நில்லுங்கள். என்று சொன்னார் போவதாக முடிவெடுத்தேன். எவரிடமும் சொல்லவில்லை எனது நண்பர்களிடமும் கூட சொல்லவில்லை. காரணம் அந்தக் காலகட்டத்தில் என் பொருளாதார நிலை கடும் மோசமாக இருந்தது. நான் விரக்தி மனநிலையில்தான் இருந்தேன் என்று சொல்லலாம்.

இலங்கையிலிருந்து கட்டாருக்கு இரவு 07.25 க்கு விமானம் புறப்பட்டது என்று நினைக்கின்றேன். இரவு நேரத்தில்தான் கட்டாரில் விமானத்திலிருந்து கட்டார் மண்ணில் காலடி எடுத்து வைத்தேன். வீட்டிலிருந்து கட்டார்  செல்லும்வரை அழுதுகொண்டு சென்ற நான் கட்டார் விமான நிலையத்தை விட்டு வெளியே வந்தபொழுது மனதிலே சற்றுச் சந்தோசம் வந்தது. என்னுடன் ஆரம்பகாலம் முதல் என்னுடன் நெருங்கிய நண்பர்களாக இருந்த எல்லோரும் வெளிநாடு சென்றுவிட்டனர். நான் மட்டும்தான் இலங்கையில் இருந்தேன். விமான நிலையத்தில் என் நண்பர்கள் மாத்திரமல்ல எனது கிராமத்தைச் சேர்ந்த கட்டாரில் இருக்கின்ற அனைவரும் வந்திருந்தனர்.

கட்டார் விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்து நான் முதன் முதலாக பார்த்த விடயம் விபத்து ஒன்று. இரண்டு கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதுண்டு நசிந்து இருக்கின்றது. இரண்டு காரிலும் இருந்தவர்கள் இறந்துவிட்டனர் இறந்தவர்களை காரை வெட்டி எடுக்கும் காட்சிதான் கட்டாரில் நான் முதலில் கண்ட காட்சி. ( அதுவரைக்கும் கண்ணை மூடிக்கொண்டா இருந்தாய் என்று கேட்க வேண்டாம் விமான நிலையத்தைவிட்டு வெளியே வந்ததும் நடந்த சம்பவம் மறக்க முடியாத முதல் சம்பவம்)

தொடர்ந்தும் எமது சொந்தங்கள் படம் அவலங்களை பார்த்து கண் கலங்கிய நாட்களை எமது சொந்தங்களின் அவலங்களை தொடரும் பதிவுகளில் தருகிறேன். சொல்லக்கூடாத ஆனாலும் சொல்லப்பட வேண்டிய பல விடயங்களை பகிர்ந்து கொள்ள இருக்கின்றேன் காத்திருங்கள் நண்பர்களே.


read more...

Sunday 25 December 2011

இலங்கைப் பதிவர்களின் அராஜகமும் தலைக்குமேல் ஏறிய ஏழரைச் சனியனும்

இது என்னுடைய 400 வது பதிவு


Christmas Myspace Graphics

அனைத்து நண்பர்களுக்கும் இனிய நத்தார் வாழ்த்துக்கள்.



நான் பதிவுலகிற்கு வந்து நிறைய விடயங்களை கற்றிருக்கின்றேன். பல மனச் சங்கடங்களை எதிர் கொண்டீருக்கின்றேன். என் வாழ்க்கையின் எல்லா விடயங்களிலும் தலைக்கு மேல் ஏறிக்கொண்டிருக்கும் ஏழரைச் சனியன் வலைப்பதிவிரும் என்னை விடுவதாக இல்லை.
நான் வலைப்பதிவில் எழுதுவதும் அடிக்கடி காணாமல் போவதும் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. எல்லாம் என் குடும்ப சூழ்நிலை. அது ஒரு பக்கம் இருக்கட்டும் விடயத்துக்கு வருகின்றேன் எனது இந்த 400 வது பதிவிலே சில விடயங்களை மனம் விட்டு பேச நினைக்கின்றேன்.
இலங்கையில் அதிகமாக அனானித் தாக்குதலுக்கு இலக்கான பதிவர் நானாகத்தான் இருக்க முடியும். 400 பதிவுகளை தந்திருந்தாலும் நான் எதனையும் சாதிக்கவுமில்லை. தலைக்கனமும் எனக்கு இல்லை. புதிய பதிவர்களை ஊக்கப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் உடையவன் பலரை ஊக்கப்படுத்தி இருக்கின்றேன். 

இப்போதெல்லாம் அதிகமான நேரம் இணையத்தில் எனது பொழுதைப் போக்கினாலும் வலைப்பதிவெழுத மனம் வருவதில்லை. காரணம் நான் வாங்கிய அனானித் திட்டுக்களும். இலங்கை பதிவர்களின் போக்கும் ஒரு காரணமாகும்.

இப் பதிவில் என்னைப் பற்றி சில விடயங்களை சொல்லிக் கொள்ள விரும்புகின்றேன். இவ் வலைப்பதிவினை வெறுமனே பொழுது போக்குக்காக இல்லாமல் எமது சமூகத்தின் அவலங்களையும் பிரச்சினைகளையும் வெளிப்படத்தும் ஒரு தளமாகவே பயன் படுத்துகின்றேன். தொடர்ச்சியாக எமது சமூகத்தின் பிரச்சினைகளை எழுதி வருகின்றேன். 

ஒவ்வொருவருக்கும் கருத்துச் சுதந்திரம் இருக்கின்றது. ஒவ்வொருவருக்கும் வௌ;வேறு மாற்றுக் கருத்துக்கள் இருக்கும் கருத்துக்களை கருத்துக்களால் வெல்ல வேண்டும். மாற்றுக் கருத்துக்கள் இருக்கின்றபோதுதான் உண்மைகள் வெளிவரும். எனது கருத்துக்களை நான் எனது வலைப்பதிவில் எழுதுகின்றபோது அக் கருத்துக்களில் எங்கே தவறிருக்கின்றது என்பதனை சுட்டிக்காட்டினால் நான் ஏற்றுக் கொள்ள தயங்கப் போவதில்லை. 

நான் மறைக்கப்பட்ட துரோகங்கள் எனும் அரசியல் சார்ந்து தொடர் பதிவொன்றை எழுதியிருந்தேன். அத் தொடர் பதிவினை ஒரு சிலர் எதிர்த்தனர் பொய்யான தகவல்களை வழங்குவதாக. எந்த இடத்திலே பொய் இரக்கின்றது என்று சுட்டிக் காட்டச் சொன்னேன் குற்றம் சாட்டிய எவரும் எது பொய்யான தகவல்கள் என்று சுட்டிக்காட்டவில்லை. ஆனாலும் ஆதாரமாக தொடர்ந்த பதிவுகளில் 24 க்கு மேற்பட்ட புத்தகங்களையும் கட்டுரைகளையும் ஆதாரம் காட்டியிருந்தேன்.

குறித்தவர்கள் என்னை குற்றம் சாட்டுவதற்காகவும் என்னுடன் ஏனையவர்கள் பகைத்துக் கொள்வதற்காகவும் கையாண்ட விடயம் நான் பிரதேச வாதம் பேசுகின்றேன் என்பதாகும். நான் மட்டக்களப்பைச் சேர்ந்தவன் என்பதனாலும் அரசியல் சார்ந்து தொடர்பதிவு எழுதியதனாலும் பிரதேசவாதம் பேசுகின்றான் என்று; என்னுடன் பதிவர்களை மோதவிட்டு வேடிக்கை பார்க்க நினைத்தவர்களும் இருக்கின்றனர். 

ஆனாலும் என்னுடைய மறைக்கப்பட்ட துரோகங்கள் எனும் தொடர் பதிவிற்கு எதிர்த்த குழுவினரைத் தவிர பலர் மத்தியிலே வரவேற்பு இருந்தது. அத் தொடர் பதிவானது கடந்தகால அரசியல் வரலாறுகளை புரட்டிப் பார்க்கும் ஒரு பதிவாக அமைந்திருந்தது. 60 பகுதிகளுக்குமேல் எழுதி இருந்தேன். இந்த இடத்தில் ஒன்றை சொல்கின்றேன் நான் பொய்களை எழுதுகிறேன் என்று என்னுடன் சண்டைக்கு வந்தவர்கள் எந்த இடத்தில் பொய் சொல்லி இருக்கின்றேன் என்பதனை இப்பொழுதாவது சுட்டிக்காட்ட முடியுமா?

இது ஒருபுறமிருக்க இலங்கையின் பதிவர்களின் நடவடிக்கைகளைப் பார்க்கும்போது வெட்கித் தலைகுனியவேண்டிய நிலையில் இருக்கின்றது. ; இலங்கையிலிருந்து புதியவர்கள் பலர் பதிவுலகத்துக்கு வந்துகொண்டிருக்கின்றனர். நல்ல பல பதிவுகளைத் தந்துகொண்டிருக்கின்றனர். அவர்கள் பாராட்டப்பட வேண்டியவர்கள். 

இலங்கையில் வலைப்பதிவர்களிடையே ஒற்றுமை இல்லை. பல குழுக்களாக செயற்பட்டுக் கொண்டிருக்கும் நிலை காணப்படுகின்றது. பல புதிய பதிவர்கள் வந்திருக்கின்றபோதிலும் பழையவர்களுக்கும் புதியவர்களுக்குமிடையில் ஒரு புரிந்துணர்வு இல்லாத நிலை காணப்படுகின்றது. 

இலங்கையின் இன்றைய நிலையினைப் பொறுத்தவரையில் எவ்வளவோ முக்கியமான விடயங்களை பதிவிட வேண்டிய அவசியமிருக்கின்றது. இருந்தும் வெறுமனே மொக்கைப் பதிவுகளையும் கும்மிப் பதிவுகளையும் எழுதிக் கொண்டிருக்கின்றனர். பதிவெழுதுவது எதை எழுதுவதென்பது அவரவர் விருப்பம். ஆனாலும் இவ்வாறான பதிவெழுதுபவர்கள் தாங்கள்தான் இலங்கையின் சிறந்த பதிவர்கள் என தங்களை காட்டிக்கொள்ள நினைப்பதுதான் கேலிக்கிடமானது. இலங்கை பதிவர்களைப் பொறுத்தவரை ஒருவரை ஒருவர் மாறிமாறி தங்களை தாங்களே புகழ்ந்து எழுதிக் கொள்ளும் செயற்பாடு இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது.

இலங்கையின் புதிய தமிழ் வலைப்பதிவர்களிடம் கேட்கின்றேன். இலங்கை தமிழ் வலைப்பதிவர் குழுமம் என்று ஒன்று இருக்கின்றது. அதில் பலர் சேர்ந்து கொள்ளாமல் இருக்கின்றனர். சேர்ந்து கொள்ளாமல் இருப்பதற்கான காரணம் என்ன? குறித்த சிலரே குழுமத்தில் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றனர். பலர் இக் குழுமத்தில் இணைந்து கொள்ளவில்லையாயின் எதற்காக இலங்கை தமிழ் வலைப் பதிவர் குழுமம் என்று சொல்ல வேண்டும். 

இலங்கை தமிழ் மக்களின் சமூக கலை கலாசார பாரம்பரியங்களை ஆவணப்படுத்த வேண்டிய அவசியம் இருக்கின்றது. எமது கலை கலாசார பாரம்பரியங்கள் இன்று அழிவடைந்து வருகின்றன. இவற்றை பேணிப் பாதுகாக்க வேண்டும் எனும் நோக்குடன்தான் ஈழத்து முற்றம் எனும் தளம் உருவாக்கப்பட்டது என்று நினைக்கின்றேன். இதில் பல இலங்கை பதிவர்கள் பதிவிட்டுக் கொண்டிருக்கின்றனர்.

நானும் ஈழத்து முற்றத்திலே பதிவிடவேண்டும் சந்தர்ப்பம் கிடைக்காதா என்று எதிர் பார்த்துக் கொண்டிருந்தபோது எனக்கும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. ஆனாலும் அது நிலைக்கவில்லை. மிக மிகக் குறிகிய காலமே ஈழத்து முற்றத்தில் உறுப்புரிமையுடன் இருக்க முடிந்தது நான்கு இடுகைகளே இட்டிருக்கின்றேன். 

நான் எனது வலைப்பதிவில் அரசியல் சார்ந்து எழுதியதனால் ஈழத்து முற்றத்திற்கான எனது உறுப்புரிமை என்னிடம் சொல்லாமலே பறிக்கப்பட்டது. அரசியல் பதிவெழுதும் அல்லது மாற்றுக் கருத்துள்ள ஒருவனுக்கு தனது சமூகம் சார்ந்த கலை கலாசாரம் சார்ந்த விடயங்களை எழுத உரிமை இல்லiயா? அல்லது அவன் எழுதக் கூடாதா? 

இன்று இலங்கை தமிழ் வலைப்பதிவர்களிடையே அதிகம் பேசப்படுகின்ற விடயம் ஈழவயல் ஈழவயலானது பல நோக்கங்களுக்காக உருவாக்கப்பட்டிருப்பது பாராட்டத்தக்க விடயம். ஈழத்தின் கலை கலாசார பாரம்பரியங்களை ஆவணப்படுத்தும் தளமாகவும். தளத்தில் பதியப்படும் விடயங்களை நூலுருவில் ஆவணப்படுத்தல். நிதியம் ஒன்றினை ஆரம்பித்து பல சமூக சேவைகளைச் செய்யவும் என்று பல நல்ல நோக்கங்களோடு உருவாக்கப்பட்டிருப்பதாக ஈழவயல் குழுவினர் அறிவித்திருக்கின்றனர். இவர்களின் இச் சேவை பாராட்டத்தக்கது.

ஆனாலும் சிலர் ஈழவயல் தளத்தின் வருகையை பொறுத்துக் கொள்ள முடியாமல் கொக்கரித்துக் கொண்டிருக்கின்றனர். ஈழத்து முற்றம் இருக்கும்போது ஈழவயல் எதற்கு என்று கேட்கின்றனர். ஈழத்து முற்றம் புதியவர்களை உள்வாங்குவதுடன் சரியாக செயற்பட்டிருந்தால் இன்னொரு தளத்தின் தேவை உணரப்பட்டிருக்காது. 

ஈழத்து முற்றம் இருக்கும்போது எதற்கு ஈழவயல்  என்று கேட்டிவர்களின் மனநிலையை பார்த்தீர்களா? தமிழர்களின் கலை கலாசார பாரம்பரியங்களை எழுத பல தளங்கள் இருந்தால் எமக்குத்தானே பெருமை. இவர்கள் வரவேற்க வேண்டியவர்கள். எதிர்க்கின்றனர். உண்மையான நல்ல மனமுள்ளவர்கள் நல்ல விடயம் இரண்டிலும் பதிவிடுவோம் என்று வரவேற்றிருக்க வேண்டும்.

ஒரு சிலர் வேண்டுமென்று திசை திருப்பி என்னுடன் சில பதிவர்களை மோதவிட்டு பிரச்சினைகளை ஏற்படுத்த நினைக்கின்றனர். ஈழவயல் தளம் சந்ருவுக்காகவா உருவாக்கப்பட்டது என்று இலங்கை வலைப்பதிவர் குழுமத்திலே கேள்வியினைத் தொடுத்து விவாதத்ததை என் பக்கம் திசை திருப்பியிருந்தனர். இது எனக்காக உருவாக்கப்பட்ட தளமல்ல. புதிய தளத்தின் தேவை உணரப்பட்டதன் வெளிப்பாடாக ஈழவயல் குழுமத்தினர் உருவாக்கியிருக்கின்றனர். என்னிலும் என் எழுத்துக்களிலும் நம்பிக்கை இருந்தால் ஈழவயல் குழுமத்தினர் என்னை அழைக்கட்டும். அழைத்தார்களானால் அவர் என்ன நோக்கத்திற்காக ஈழவயலினை உருவாக்கினார்களோ அந் நோக்கத்திற்கமைய செயற்படுவேன்.

இன்று இலங்கையைப் பொறுத்தவரை பதிவர் சந்திப்பு ஒன்று மிக மிக அவசியம் இலங்கைப் பதிவர்கள் சந்திப்புப்பற்றி சிந்திக்க வேண்டும். இச் சந்திப்பு மட்டக்களப்பில் இடம்பெறுவது நல்லதென நான் நினைக்கின்றேன். காரணம் நான் மிகவும் கவலைப்படுகின்ற விடயம் மட்டக்களப்பு அம்பாரை மாவட்டங்களில் பதிவெழுதுபவர்கள் மிக மிகக் குறைவு இதற்கு காரணம் வலைப்பதிவு பற்றி பலருக்கு தெரியாது. மட்டக்களப்பிலே பதிவர் சந்திப்பு ஒன்றினை செய்கின்றபோது ஒரு விழப்புணர்வினை ஏற்படுத்த முடியும். (இதனையும் பிரதேசவாத முத்திரை குத்த வேண்டாம்)

இனிவரும் காலங்களில் தொடர்ந்தும் பதிவிட நினைத்திருக்கின்றேன். இன்று முதல் உங்கள் பதிவுகளுக்கும் வலம் வர இருக்கின்றேன்.




read more...

Saturday 24 December 2011

சில கல்வி அதிகாரிகளின் செயலால் பாதிக்கப்படும் ஒட்டுமொத்த கல்விச் சமூகம்


அண்மையில் கிழக்கு மாகாணத்தில் அடம்பெற்ற ஆசிரியர் இடமாற்றத்தில் பாரிய குறைபாடுகளும், குளறுபடிகளும் இருப்பதாக ஆசிரியர் சமூகம் குற்றஞ்சாட்டிக்கொண்டு இருப்பதுடன். ஆர்ப்பாட்டங்களிலும் இறங்கியிருக்கின்றனர்.

உண்மையிலேயே இவ் இடமாற்றம் பாரிய குறைபாடுகளையும் குளறுபடிகளையும் கொண்டிருக்கின்றது. பல ஆசிரியர்கள் அநீதியான முறையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். பல வருடங்களாக கஸ்ரப்பிரதேசங்களில் மற்றும் வெளி மாவட்டங்களில் கடமையாட்டிய பல ஆசிரியர்கள் மீண்டும் வேறு மாவட்டங்களுக்கும் அதி கஸ்ரப் பிரதேசங்களுக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

அதேபோல் அதிகாரிகளின் குடும்ப உறவினர்களுக்கு கூடுதலான சலுகைகள் வழங்கப்பட்டிருக்கின்றன. உதாரணமாக பட்டிருப்பு கல்வி வலயத்திலே பாரிய குளறுபடிகள் இடம்பெற்றிருக்கின்றன. குறித்த கல்வி அதிகாரியின் குடும்ப உறவினர்களுக்கு கூடுதலான சலுகைகள் வழங்கப்பட்டிருக்கின்றன. கல்வி அதிகாரியின் உறவினர்கள் அண்மையில் இருக்கின்ற பாடசாலைகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டு உறவினர்கள் இடமாற்றம் செய்யப்பட பாடசாலையில் இருக்கின்ற ஆசிரியர்கள் அதிகஸ்ர மற்றும் வெளி மாவட்டங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டிருக்கின்றனர்.பல வருடங்களாக 5 வருடங்களுக்கு மேலாக அதி கஸ்ர மற்றும் வெளி மாவட்டங்களில் கடமையாற்றும் ஆசிரியர்கள் பலர் இவ் இடமாற்றத்தில் உள்வாங்கப்படமல் இருக்கின்றனர்.

இவ் இடமாற்றம் தொடர்பில் நான் பொய்யான குற்றச் சாட்டுக்களை முன் வைக்கின்றேன் என்று யாராவது என்னை குற்றம் சாட்டினால் பெயர் விபரங்களுடன் ஆதாரத்துடன் உண்மையான விபரங்களையும் வெளியிட நான் தயங்கப் போவதில்லை.

இது ஒருபுறமிருக்க கிழக்கு மாகாண கல்விச் சமூகம் எனும் பெயரில் ஒரு அறிக்கை வெளியிடப் பட்டிருக்கின்றது அவ் அறிக்கையில் குறிப்பிடப்பட்ட விடயங்களை அப்படியே தருகின்றேன்.

அண்மையில் கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்ற ஆசிரியர் இடமாற்றமானது பல குறைபாடுகளைக் கொண்டுள்ளது. இதனால் மாணவர்கள் ஆசிரியர்கள் பெற்றோர்கள் என முழுக் கல்விச் சமூகமும் பெரும் பாதிப்புக்களை எதிர் நோக்கியுள்ளனர். எனவே மேற்படி இடமாற்றத்தில் இடம்பெற்ற குறைபாடுகளாக...

01. கஸ்ரப் பிரதேசங்களில் கடமையாற்றிய ஆசிரியர்களை மீண்டும் கஸ்ரப் பிரதேச பாடசாலைகளில் அதுவும் வெளி மாவட்டங்களில் எதுவித விடுதி வசதிகளுமற்ற பாடசாலைகளில் மத கலாசார விடயங்களில் மாறுபட்ட முஸ்லீம் பாடசாலைகளில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளமை.

02. கணவன் ஒரு மாவட்டத்திலும் (அம்பாரை) மனைவி இன்னொரு மாவட்டத்திலும் (கிண்ணியா மூதூர்) இடமாற்றம் இடம்பெற்றுள்ளது. இவர்களின் சொந்த வாழ்விடம் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளதனால் இவர்களின் பிள்ளைகளின் எதிர்காலமும் இவர்களை தங்கி வாழும் இவர்களது பெற்றோர்களின் எதிர்காலமும் கேள்விக் குறியாகவுள்ளது.
03. இவ் இடமாற்றம் செய்யும்போது அதிகாரிகளதும் அதிபர்களினதும் தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களும் இவ் ஆசிரியர் இடமாற்றத்தில் தாக்கம் செலுத்தியுள்ளது.

04. இவ்விடமாற்றத்தின்போது பதில் கடமை புரிவதற்கான எந்த ஒழுங்கு முறையும் இடம்பெறவில்லை. கஸ்ரப்பிரதேசத்தில் வேலை செய்யவில்லை எட்டு வருடம் பூர்த்தி செய்துள்ளனர் என்ற காரணங்கள் காட்டப்பட்டு இடமாற்றம் இடம்பெற்றாலும் பதில் கடமை ஒழுங்குகள் செய்யப்படவில்லையாதலால் பாதிக்கப்படுவது மாணவர்களே.

05. இவ் இடமாற்றம் க.பொ.த (உத) வகுப்புக்களில் கற்பிக்கும் ஆசிரியர்களும் உள்வாங்கப்பட்டுள்ளனர். ஆனால் உயர்தரம் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு இடமாற்றம் உயர்தர வகுப்பின் புதிய கல்வியாண்டிலே இடம்பெற வேண்டும். ஆனால் அவர்களுக்கும் ஜனவரி மாதத்திலேயே இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதால் பதில் கடமை இல்லாத நிலையில் இடமாற்றம் செய்யப்பட்ட ஆசிரியர் இல்லாத பட்சத்தில் பாதிக்கப்படுவது மாணவர்களே ஆகும்.

06. இலங்கையில் ஆசிரியர்களுக்கு இடமாற்றம் சம்பந்தமான சுற்று நிரூபம் பொதுவானதாகும். இங்கு மாகாண பாடசாலைகளில் கடமையாற்றும் ஆசிரியர்கள் அதிகாரிகளினதும் அதிபர்களினதும் விருப்பு வெறுப்புக்கேற்ப இடமாற்றம் இடம்பெறும்போது தேசியப் பாடசாலைகளில் கடமையாற்றும் ஆசிரியர்கள் வாழ் நாள் பூராகவும் ஒரே பாடசாலைகளில் அதுவும் நகரப் பாடசாலைகளில்கடமையாற்றுவது பெரும் குறைபாடாகும்.

07. இடமாற்றத்தின்போது பாடவாரியான ஆசிரியர் சமப்படுத்தல் இடம்பெற வேண்டும் ஆனால் இவ் இடமாற்றத்தின்போது ஆசிரியர் சமப்படுத்தல் இடம்பெறவில்லை. சில பாடசாலைகளில் பாடங்களுக்கு மேலதிக ஆசிரியர்களும் சில பாடங்களில் பற்றாக்குறை நிலவுவது இவ் இடமாற்றத்தில் காணக்கூடியதாகவுள்ளது.

08. இவ் இடமாற்றத்தில் மத்திய கல்வி அமைச்சர் தொடக்கம் பாடசாலை அதிபர்வரை இதில் சம்பந்தப் படுவதனால் இவ் ஆசிரியர் இடமாற்றத்தில் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் தமது மனக்குறையை யாரிடம் முறையிடுவது என்று தெரியாமல் திண்டாடிக் கொண்டிருக்கின்றனர். காரணம் ஒரு அதிகாரியிடம் முறையிடும்போது இன்னொரு அதிகாரியே இதில் சம்மந்தப்ப்டுள்ளார் என தப்பிக் கொள்ளும் நிலையும் இவ் இடமாற்றத்தில் காணப்படுகிறது.

09. இவ் ஆசிரியர் இடமாற்றம் புள்ளித்திட்ட அடிப்படையில் இடம்பெற்றதாகக் கூறப்பட்டாலும் இப் புள்ளித் திட்டம் இதுவரை பகிரங்கமாக வெளிப்படுத்தப் படாமையும் இவ் இடமாற்றத்தின் குறைபாடாகும்.

10. சில கல்வி வலயங்களில் ஆசிரியர்களின் nhதழிற்சங்கம் இவ் இடமாற்ற சபைகளில் இடம்பெற வேண்டும் என்ற நியதி பின்பற்றப்படாமையால் சில ஆசிரிய தொழிற்சங்கங்கள் போர்க்கொடி தூக்கியுள்ளமை இவ் இடமாற்றத்தின் குறைபாடாகும்.

11. இவ் இடமாற்றத்தின் போது சில பாடசாலைகளில் ஒரே நேரத்தில் பல ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யும்போது பதில் கடமை இல்லாத நிலையில் பாதிக்கப்படுவது அப்பாடசாலையின் கல்விச் சமூகமாகும்.
எனவே மேற்படி குறைபாடுகளால் தற்போது கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்ற ஆசிரியர் இடமாற்றத்தினை உடனடியாக தடுத்தி நிறுத்தி மேற்படி குறைபாடுகளை போக்கும் முகமாக ஆசிரிய இடமாற்றத்தினை வழங்குமாறு அவ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

read more...

Friday 23 December 2011

தமன்னாவுடன் குத்தாட்டம் எப்படி? தனுஷிடமே கேளுங்கள்



மன்னிக்கவும் நண்பர்களே... இப்பதிவின் தலைப்பைப் பார்த்து என்னைத் திட்ட வேண்டாம். இத்தலைப்பு ஹிட்சுக்காக எழுதப்பட்டதல்ல ஒரு உயிரைக் காப்பாற்றுவதற்காகப் போடப்பட்டது. உதவுங்கள் என்று தலைப்புப் போட்டால் அப்பதிவை எவரும் பார்ப்பதாக இல்ல. தயவு செய்து நண்பர்களே உதவ முடிந்தவர்கள் உதவுங்கள்.

வலைப்பதிவு எழுதும் நாம் எழுத்துக்களுடன் நின்று விடாது சமூகத்திற்காக ஏதாவது செய்ய வேண்டும். சில பதிவர்கள் இதனைச் செய்து வருகின்றனர். நானும் சமூக சேவை செய்து வருபவன் எனும் வகையில் உங்களிடம் ஒரு கோரிக்கையை முன்வைக்கின்றேன். 

 தற்போது உயர்தரம் படித்துக் கொண்டிருக்கும் ஒரு மாணவனுக்கு இருதய நோய் இருக்கின்றது. உடனடியாக இருதய சத்திரசிகிச்சை செய்ய வேண்டிய நிலையில் இருக்கின்றார். உடனடியாக சத்திரசிகிச்சை செய்யாவிட்டால் உயிராபத்து ஏற்படும் நிலையில் இருக்கின்றார். இருதய சத்திர சிகிச்சைக்காக இலங்கை ரூபா ஐந்து இலடசத்திற்குமேல் செலவாகும்.


ஆனாலும் அம்மாணவனின் குடும்பம் மிகவும் வறிய நிலையில் இருக்கின்றது. நல்ல எண்ணம் கொண்டவர்கள் இவரின் உயிரைக் காக்க உதவி செய்யுங்கள். இவர் மட்டக்களப்பு களுதாவளையைச் சேர்ந்தவர் பெயர் இராஜேந்திரம் நிமல்ராஜ் மட்களுதாவளை மகா வித்தியாலயத்தில் உயர்தரம் படிக்கின்றார். மாணவனின் உயிரைக்காக்க உதவ நினைப்பவர்கள் என்னைத் தொடர்பு கொள்ளுங்கள் நேரடியாக குறித்த மாணவனுடன் தொடர்புபடுத்தி விடுகிறேன்.

எனது மின்னஞ்சல் :-shanthruslbc@gmail.com
 தொலைபேசி இலக்கம் : - 0094778548295







read more...

தனுஷ் தமன்னாவுடன் மது அருந்திக்கொண்டு குத்தாட்டம் (வீடியோ இணைப்பு)

இன்று சிறுவர் முதல் பெரியவர்கள் வரை எல்லோர் வாயிலும் முணு முணுக்கும் பாடல் கொலவெறிப் பாடல்தான். பட்டி தொட்டியெல்லாம் ஒலித்துக் கொண்டிருக்கின்றது. இப்பாடல் ஒலிப்பதனைக் கேட்டாலே எனக்கு கோபம் வருவதுண்டு. இப்பாடலை 100 வீதம் எதிர்ப்பவர்களில் நானும் ஒருவன் இது ஒரு புறமிருக்கட்டும்.

துமன்னாவின் பிறந்த நாள் விழாவில் நடந்த மதுவிருந்தில் பங்கேற்ற தனுஷ் பூனம் பாஜ்வாவுடன் கொலைவெறிப் பாடல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் நடிகை தமன்னாவின் பிறந்தநாள் விழா பார்ட்டி நட்சத்திர கொட்டலில் நடந்துள்ளது. மது அருந்திக் கொண்டு கொலவெறி பாடுகிறார் தனுஷ் ஒரு பக்கம் முகம் முழுக்க கேக் க்ரீம் பூசிக் கொண்டு மதுக்கிண்ணத்தை ஏந்திபடி தமன்னாவும்இ இன்னொரு பக்கம் நடிகை பூனம் பாஜ்வாவும் ஆட்டம் போடுகிறார்கள்




பின் இணைப்பு

தயவு செய்து நல் உள்ளம் படைத்தவர்கள் உதவுங்கள்...

வலைப்பதிவு எழுதும் நாம் எழுத்துக்களுடன் நின்று விடாது சமூகத்திற்காக ஏதாவது செய்ய வேண்டும். சில பதிவர்கள் இதனைச் செய்து வருகின்றனர். நானும் சமூக சேவை செய்து வருபவன் எனும் வகையில் உங்களிடம் ஒரு கோரிக்கையை முன்வைக்கின்றேன். 

 தற்போது உயர்தரம் படித்துக் கொண்டிருக்கும் ஒரு மாணவனுக்கு இருதய நோய் இருக்கின்றது. உடனடியாக இருதய சத்திரசிகிச்சை செய்ய வேண்டிய நிலையில் இருக்கின்றார். உடனடியாக சத்திரசிகிச்சை செய்யாவிட்டால் உயிராபத்து ஏற்படும் நிலையில் இருக்கின்றார். இருதய சத்திர சிகிச்சைக்காக இலங்கை ரூபா ஐந்து இலடசத்திற்குமேல் செலவாகும்.


ஆனாலும் அம்மாணவனின் குடும்பம் மிகவும் வறிய நிலையில் இருக்கின்றது. நல்ல எண்ணம் கொண்டவர்கள் இவரின் உயிரைக் காக்க உதவி செய்யுங்கள். இவர் மட்டக்களப்பு களுதாவளையைச் சேர்ந்தவர் பெயர் இராஜேந்திரம் நிமல்ராஜ் மட்களுதாவளை மகா வித்தியாலயத்தில் உயர்தரம் படிக்கின்றார். மாணவனின் உயிரைக்காக்க உதவ நினைப்பவர்கள் என்னைத் தொடர்பு கொள்ளுங்கள் நேரடியாக குறித்த மாணவனுடன் தொடர்புபடுத்தி விடுகிறேன்.

எனது மின்னஞ்சல் :-shanthruslbc@gmail.com
 தொலைபேசி இலக்கம் : - 0094778548295







read more...

Wednesday 21 December 2011

உயிரைக் காப்பாற்றுங்கள்...


வலைப்பதிவு எழுதும் நாம் எழுத்துக்களுடன் நின்று விடாது சமூகத்திற்காக ஏதாவது செய்ய வேண்டும். சில பதிவர்கள் இதனைச் செய்து வருகின்றனர். நானும் சமூக சேவை செய்து வருபவன் எனும் வகையில் உங்களிடம் ஒரு கோரிக்கையை முன்வைக்கின்றேன். 

 தற்போது உயர்தரம் படித்துக் கொண்டிருக்கும் ஒரு மாணவனுக்கு இருதய நோய் இருக்கின்றது. உடனடியாக இருதய சத்திரசிகிச்சை செய்ய வேண்டிய நிலையில் இருக்கின்றார். உடனடியாக சத்திரசிகிச்சை செய்யாவிட்டால் உயிராபத்து ஏற்படும் நிலையில் இருக்கின்றார். இருதய சத்திர சிகிச்சைக்காக இலங்கை ரூபா ஐந்து இலடசத்திற்குமேல் செலவாகும்.


ஆனாலும் அம்மாணவனின் குடும்பம் மிகவும் வறிய நிலையில் இருக்கின்றது. நல்ல எண்ணம் கொண்டவர்கள் இவரின் உயிரைக் காக்க உதவி செய்யுங்கள். இவர் மட்டக்களப்பு களுதாவளையைச் சேர்ந்தவர் பெயர் இராஜேந்திரம் நிமல்ராஜ் மட்களுதாவளை மகா வித்தியாலயத்தில் உயர்தரம் படிக்கின்றார். மாணவனின் உயிரைக்காக்க உதவ நினைப்பவர்கள் என்னைத் தொடர்பு கொள்ளுங்கள் நேரடியாக குறித்த மாணவனுடன் தொடர்புபடுத்தி விடுகிறேன்.

எனது மின்னஞ்சல் :-shanthruslbc@gmail.com
 தொலைபேசி இலக்கம் : - 0094778548295







read more...

Tuesday 20 December 2011

தமிழ் பெண்களின் கற்புக்கள் சூறையாடப்படும் இடமாக மட்டக்களப்பு பேருந்து நிலையம்

மட்டக்களப்பில் இடம்பெறுகின்ற விபச்சாரம் தொடர்பாக நான் எழுதிய பதிவிற்கு ஒரு சிலர் என்னை திட்டித் தீர்த்திருந்தனர்.  பதிவை பார்க்க அவர்களுக்கு சில விடயங்களை நான் குறிப்பிட்டாக வேண்டும். ஒன்றை மட்டும் புரிந்து கொள்ளுங்கள். உண்மையான ஆதாரங்களுடன் வெளியிட்டிருக்கின்றேன் சம்பவங்களை. முஸ்லிம் அல்ல தமிழனாக இருந்தாலும் நான் வெளியிட தயங்கப்போவதில்லை.

அங்கே என்னால் உறுதிப்படுத்தப்பட்டு சுட்டிக் காட்டப்பட்ட விடயங்கள், சம்பவங்களுடன் முஸ்லிம் இளைஞர்கள் சம்மந்தப்பட்டிருப்பதனால் முஜ்லிம்கள் என்று குறிப்பிட்டிருந்தேன். அவர்களின் விபரங்களையும் தெளிவாக குறிப்பிட்டிருக்கின்றேன். இங்கு பலர் சம்பந்தப்பட்ட விடயங்களை குறிப்பிட்டிருப்பதனால் எனது சொற்பிரயோகம் தவறாவை அல்ல.

நான் முஸ்லிம்களுக்கு எதிராக எழுதியதாகச் சொல்பவர்கள் பாதிக்கப்பட்ட தமிழ் பெண்கள் தொடர்பில் எதுவும் பேசாதது ஏன்? அது ஒரு புறமிருக்க நான் முஸ்லிம்களுக்கு எதிராக எழுதியதாக குற்றம் சொல்பவர்கள். இலங்கையிலிருந்து வலைபபதிவெழுதும் ஒரு முஸ்லிம்  தமிழர்களை மோசமானவர்களாக சித்தரித்து எழுதும்போது மௌனம் சாதித்தது ஏன்? அவற்றையும் சுட்டிக்காட்டியிருக்கலாம்தானே.

எது எப்படி இருப்பினும் இவ்வாறான சமூக சீர்கேடுகள் தொடர்பாக நாம் அவதானித்துக் கொண்டே இருப்போம், முஸ்லிம் அல்ல தமிழனாக இருந்தாலும் ஆதாரங்களுடன் வெளியிடத் தயங்கமாட்டேன்.

மட்டக்களப்பு பேருந்து நிலையத்தில் இடம்பெற்ற விடயம் தொடர்பான விபரங்களை தருகின்றேன்.
 ஒழுக்க சீர்கேட்டு சம்பவங்கள் அதிகம் இடம்பெறுகின்ற இடமாக மட்டக்களப்பு மத்திய பேருந்து நிலையம் விளங்குவது குறிப்பிடதக்கது .அதிலும் அங்குள்ள போன் திருத்தும் விற்பனை செய்யும் கடைகளிலே அதிகம் ஒழுக்க சீர்கேடு இடம்பெறுகின்றது . அந்த வகையில் மட்டக்களப்பு மத்திய பேருந்து நிலையத்திலே இருக்கின்ற Asian Phone Shop முஸ்லிம் உரிமையாளரும் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவது தொடர்பில் பல ஆதாரபூர்வமான தகவல்களுடன் நிருபிக்கப்பட்டிருக்கின்றது.

 அண்மையில் மட்டக்களப்பு பேருந்து நிலையத்தில் இருக்கும் Asian Phone Shop க்கு வந்த பெண்னை கடை உரிமையாளர் மோட்டார் சைக்கிளில் ஏற்றிக் கொண்டு சென்றுள்ளார். இதனை அவதானித்து பின் தொடர்ந்த சிலர் கடை உரிமையாளரை கையும் களவுமாக சவுக்கடி எனும் இடத்தில் வைத்து பிடித்துள்ளனர் அத்தடன் இதற்கு முன்பும் இவர் பல பாடசாலை மாணவிகளையும பெண்களையும் அழைத்து சென்றுள்ளார்.  இது போன்று பல சம்பவங்கள் இடம் பெற்றுள்ளது.  இதற்காகவே தமது கடையினை பயன்படுத்தி வருகின்றதாக அறிய முடிகின்றது.  அத்துடன் பெண்களை பரிமாற்றும் மத்திய நிலையமாகவும் மத்திய பேருந்து நிலையம் விளங்குவகின்றது.

இவ்விடயம்  தொடர்பாக தொடர் முறைப்பாடுகளும் தொடர்ந்து கிழக்கு மாகாண முதலமைச்சருக்கு
கிடைத்ததன் அடிப்படையில் பஸ் நிலைய கடை உரிமையாளர்களுக்கான கூட்டம் அண்மையில்(18.12.2011) அன்று முதலமைச்சர் வாசஸ்தலத்தில் இடம்பெற்றது
அங்கு இது தொடர்பில் விரிவாக கலந்துரையாடப் பட்டதாக அறியமுடிகிறது இதணடிப்படையில் குறித்த போன் கடையில் ஒழுக்க சீர்கேட்டு சம்பம் இடம் பெற்றது உறதிப்படுத்தப் பட்டதால் அணைத்து வேண்டு கோளின் அடிப்படையிலும் மட்டு . பஸ் நிலையத்தில் ஒழுக்க சீர்கேடு இடம்பெற்றதாக கூறப்படும் போன் கடையின் அனுமதிப் பத்திரத்தை ரத்து செய்யுமாறு மாநகர சபைக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் உத்தரவு இட்டுள்ளார் இனி வரும் காலங்களில் பஸ் நிலையத்தில் இடம் பெறும் சம்பவங்களை தடுப்பதற்கான நடவடிக்கை தொடர்பிலும் ஆராயப் பட்டுள்ளது இந்த கூட்டத்தில் மாநகர மேயர் , கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பூ .பிரசாந்தன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இவ்விடயம் தொடர்பில் விசாரணைகளை முதலமைச்சர், மாகாணசபை உறுப்பினர், மேஜர், பிரதிமேஜர் உட்பட சமூக ஆர்வலர்கள் பலரும் உடனடியாக விசாரணைகளை மேற்கொண்டார். குறித்த கடையில் தொடர்ந்தும் இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெற்று வருவது ஆதார பூர்வமாக நிருபிக்கப்பட்டனைத் தொடர்ந்து கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் குறித்த கடையின் அனுமதிப்பத்திரத்தை ரத்துச் செய்யும்படி மாநகர மேஜருக்கு உத்தரவிட்டதனையடுத்து குறித்த போன் கடையின் உத்தரவுப் பத்திரம் ரத்துச் செய்யப்பட்டுள்ளது.
இவ்விடயம் தொடர்பில் உடனடி நடவடிக்கைகளை மேற்கொண்ட கிழக்கு மாகாண முதலமைச்சர், கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பூ.பிரசாந்தன், மட்டக்களப்பு மாநகர மேஜர், பிரதிமேஜர் உட்பட அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதோடு சிறு சிறு விடயங்களுக்கெல்லாம் அறிக்கைவிட்டுக் கொண்டிருக்கும் அரசியல்வாதிகள் இவ்வாறான சமூக சீர்கேடுகள் தொடர்பில் மௌனிப்பது ஏன்? இவர்களும் இவ்வாறான செயற்பாடுகளுக்கு உடந்தையாக இருக்கின்றனரா?



read more...

Monday 19 December 2011

சொன்னால் வெட்கக்கேடு

தற்போது லண்டனில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற இளம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஆளுமை விருத்தி கருத்தரங்கிற்க தமிழ் தேசிய கூட்டமைப்பினர்களுக்கும் அழைப்ப விடுக்கப்பட்டிருந்தது. இதன் போது தங்களது கட்சி சார்பில் யாரை அனுப்புவது என விவாதித்துக்கொண்டிருக்கும் போது பிரச்சனை வெடித்தது. 
அதாவது மட்டக்களப்பு மாவட்டத்திலே அதிகபடியான வாக்குகளைப்பெற்று தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் பாராளுமன்றத்திற்கு தெரிவான பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் கூறினார் இளம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்குத்தான் இந்த செயலமர்வு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது. அகவே 40வயதுக்கு கீழ்ப்பட்டவர்கள்தான் செல்லமுடியும் எனவே நான் செல்வதுதான் சிறந்தது என தனது கருத்தை முன் வைத்தார்.
அப்போது ஆவேசமாக வடக்கு மாகாண தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் சுமத்திரன் அவர்கள் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினரை பார்த்து உணக்கு என்ன தெரியும், இங்கிலீஸ் தெரியாத உணக்கு அங்கு என்ன வேலை? அங்கே உள்ள கோயிலில் பூசை செய்வதற்கு உண்மையான பிராமணர்கள் (வடக்கு) இருக்கின்றார்கள். அவர்கள் அதனை சரியாக செய்வார்கள். நீ செல்ல வேண்டிய அவசியம் இல்லை. என உரத்த குரலில் கூச்சலிட்டார்.
இருவருக்குமிடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டு சண்டைவரை சென்றது. பாருங்கள் லண்டனிலே தமிழர்கள்தான் இவர்களுக்கு செயலமர்வை ஏற்பாடு செய்திருக்கின்றார்கள். அங்கே தமிழில் பேசினால் என்ன? தமிழ் தமிழ் என கூக்குரலிடும் இவர்கள் தமிழ் பேசுவதற்குக்கூட முன்னுரிமை அளிக்கவில்லை.
வேதனை, வெட்கம், அவமானம்………
குறிப்பு:- யோகேஸ்வரன் மட்டக்களப்பான்தானே ஆகவே அப்படித்தான்    இருப்பார்கள் பாணிகள்…….
இன்ரர்நெஷ்னல் அலேட் என்கின்ற அமைப்பினால் 40 வயதுக்கு உட்பட்ட பாரளுமன்ற உறுப்பினர்களுக்கான பயிற்சிப் பட்டறை ஒன்று பிரித்தானியாவில் இடம்பெற்றுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான உரிமைகள், மக்கள் தொடர்பாடல், முகாமைத்துவம், பல்லினச்சமூகங்களுடனான உறவைபேணுதல் போன்ற விடயங்களில் இளம் பாராளுமன்ற உறுப்பினர்கள் எவ்வாறு தம் ஆற்றலை வழர்த்துக்கொள்வது என்ற பயிற்சியை வழங்குவதே இப்பட்டறையின் நோக்கமாகும்.
இப்பயிற்சிக்காக நமது பாராளுமன்றிலிருந்தும் 40 வயதுக்குட்பட்டவர்களை இன்ரர்நெஷ்னல் அலேட் சார்பாக வன் ரெக்ஸ்ட் இனிசியேட் என்கின்ற நிறுவனம் ஒருங்கிணைக்கும் வேலையினைச் செய்துள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியிலிருந்து 3 உறுப்பினர்கள், ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து 2 பாராளுமன்ற உறுப்பினர்கள்இ அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸிலிருந்து 1 பாராளுமன்ற உறுப்பினர் என மேற்படி நிகழ்வுக்காக தெரிவு செய்யப்பட்டிருந்ததுடன் அவர்கள் தற்போது பிரித்தானியாவில் தங்கியுள்ளனர். அவர்களுடன் பாராளுமன்ற உறுப்பினர் அல்லாத தமிழர் ஒருவரும். யார் இந்த தமிழர்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்து மேற்படி குழுவிற்கான தெரிவு என்ற விடயம் வந்தபோது கூட்டமைப்பில் 40 வயதுக்கு குறைவான பாராளுமன்ற உறுப்பினராக உள்ள ஒரே ஒருவர் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன். அவர் இப்பயிற்சியினை பெற்றுக்கொள்ளும் நோக்கில் தலைமையிடம் அனுமதி கோரியபோது யோகேஸ்வரனின் செவிப்பறை வெடித்துள்ளது. ஆங்கிலம் தெரியாமல் லண்டன் சென்று மானத்தை கப்பலேற்ற போறீரோ என கேட்டகப்பட்டாராம்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு இத்துடன் நின்று விடவில்லை பாராளுமன்ற உறுப்பினரின் இடத்திற்கு பிரதேச சபைச் தலைவர் ஒருவரை அனுப்புவதற்கு தீர்மானித்துள்ளது. அத்தேர்வு எவ்வாறு இடம்பெற்றது. அவர் சுரேஸ் அணியைச் சேர்ந்தவரா? சம்பந்தன் அணியைச் சேர்ந்தவரா? அன்றில் சுபந்திரனுக்கு மிகவும் நெருக்கமானவரா என்பதெல்லாம் கேட்க்கக்கூடாது.
வலிகாமம் வடக்கு பிரதேச சபைத் தலைவர் ஆங்கிலம் பேசுவாராம் எனச்சொல்லி பிரித்தானிய வீசாவிற்கு அனுப்பியுள்ளார்கள். குறிப்பிட்ட நிகழ்வு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கானது என்ற கூறப்பட்டு வீசா நிராகரிக்கப்பட்டுள்ளது. சுகிர்தர் என்ற வலி வடக்கு பிரதேச சபைத்தலைவர் பாஸ்போர்டில் றிஜெக்ட் சீலை குத்தி கொண்டு வெளியில் வந்தவுடன், பிறிதொருவர் வெளியில் பாஸ்போர்டுடன் நின்றுள்ளார். அவருக்கு வீசா வழங்கப்பட்டுள்ளது. அவர் குறிப்பிட்ட குழுவுடன் லண்டன் சென்று மேற்படி பயிற்சியில் கலந்து கொண்டுள்ளார்.
இவர் யார்? இவர் பெயர் ரகு பாலச்சந்திரன். சுமந்திரனின் நெருங்கிய சகாவாம்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பும் தேசியமும் எங்கே போகின்றது. மக்கள் பிரதிநிதி ஒருவரை ஆங்கிலம் தெரியாது என நிராகரிக்கின்றார்கள். அதேநேரம் ஆங்கிலம் தெரிந்தவர் என பாராளுமன்ற உறுப்பினர் அல்லாதவர் ஒருவரை வீசா கேட்டு அனுப்புகின்றார்கள். பிரித்தானியா வீசாவை நிராகரிப்பதற்கு காரணம் பாராளுமன்ற உறுப்பினர் இல்லை என சொல்லப்பட்டுள்ளது. ஆனால் பாராளுமன்ற உறுப்பினர் அல்லா சுமந்திரனின் சகாவிற்கு அதே நிகழ்வில் பங்கேற்பதற்கு வீசா வழங்கப்பட்டுள்ளது.
பின்தங்கிய பிரதேசத்திலிருந்து , மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதி பின்தங்கியவராகவே இருக்கவேண்டும். ஆங்கிலம் பேசத்தெரிந்த மேல்தட்டு வர்க்கத்தினராகிய நாங்கள் சகலவற்றையும் பார்த்துக்கொள்வோம் , மக்கள் எங்களுக்கு வாக்குப்போட வேண்டும், அத்துடன் நீங்கள் தெரிவு செய்கின்றவர்கள், நாங்கள் சொல்லற பக்கத்துக்கு தலையாட்டவும், கைதூக்கவும் தயாராகவிருக்கவேண்டும்இ மீறினால் செவிப்பறை வெடிக்கும் எனச் செயல்படுகின்றது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமை. 
read more...

Thursday 15 December 2011

விபச்சார விடுதியாக மாறும் மட்டக்களப்பு பேருந்து தரிப்பிடம்

தொடர்ந்து படிக்க... http://shanthru.blogspot.com/2011/12/blog-post_14.html
read more...

Saturday 3 December 2011

கருத்துக்களை கருத்துக்களால் வெல்ல முடியாத முதுகெலும்பு இல்லாதவர்கள்



அனைவருக்கும் கருத்துச் சுதந்திரம் இருக்கின்றது. ஒருவரின் கருத்தில் உடன்பாடு இல்ல என்றால் நாம் நம் கருத்துக்களை சொல்லலாம். அதனை விடுத்து முட்டாள்தனமான நாகரிகமற்ற செயற்பாடுகளில் ஈடுபடுவது மனிதனின் பண்பல்ல அவன் மனிதனுக்குப் பிறந்தவனாக இருக்க முடியாது. ஒரு இணையத்தளத்தை ஹக் பண்ணுவதன் மூலம் ஒருவரின் ஒரு சமூகத்தின் கருத்துக்களை இல்லாமல் செய்து விடலாம் என்பது முட்டாள் தனமானது.

 ஒரு இணையத்தளத்தில் எழுதப்படுகின்ற விடயத்தில் உங்களுக்கு உடன்பாடு இல்லயென்றால் உங்கள் கருத்துக்களை சொல்லங்கள் அதை விடுத்து அவ் இணையத் தளத்தை முடக்க நினைப்பது அவ் இணையத் தளத்தை முடக்க நினைப்பவர்களின் முட்டாள் தனம். ஒரு இணையத்தளத்தை முடக்குவதன் மூலம் அவர்களின் உண்மைக் கருத்துக்களை ஒடுக்கி விடலாம் என நினைப்பதும் முட்டாள் தனமே.


கருத்துக்களை கருத்துக்களால் வெல்வோம்.


read more...

Thursday 1 December 2011

குடும்ப சுமையை குறைக்க வேலைக்குச் சென்ற 15 வயது தமிழ் சிறுமிக்கு வயிற்றில் சுமையைக் கொடுத்த பாதகன்

அண்மையில் நடந்த சில சம்பவங்களை இங்கு குறிப்பிட்டாகவேண்டும். படுவான்கரைப் பிரதேசத்தைச் சேர்ந்த இரு இளம் பெண்களை முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த இருவர் தமது உடல் இச்சைகளைத் தீர்த்துக் கொள்வதற்காக ஆட்டோவில் கூட்டிச் செல்லும்போது மடக்கிப் பிடிக்கப்பட்டனர். அந்த இரு இளம் பெண்களையும் விசாரித்தபோது அவர்கள் குடும்பநிலை மிகவும் மோசமான நிலையில் இருப்பதை அறிய முடிந்தது. அத்தோடு அவர்கள் தினமும் இவ்வாறு சென்றால்தான் கிடைக்கும் பணத்தில் தமது குடும்பத்தின் அன்றாட உணவுத் தேவையினைக்கூட பூர்த்தி செய்ய முடியும் என்ற நிலையில் இருப்பதனையும் அறிய முடிந்தது.
அதேபோல் வேப்பவெட்டுவான் உசன மலையைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஒருத்தியையும் அவளது சித்தியையும் புகையிலைத் தோட்டத்தில் வேலை பெற்றுத் தருவதாக ஏறாவூரைச் சேர்ந்த வெள்ளையன் என்று அழைக்கப்படுகின்ற இஸ்மாயில் அவர்கள் மூன்று மாதங்களுக்கு முன்னர் அழைத்துச் சென்றிருக்கின்றார். இதுவரை ஒரு நாள் சம்பளமாக 300 ரூபாவும், ஒரு சட்டையும் செருப்பும் வாங்கிக்கொடுத்து வயிற்றில் பிள்ளையையும் கொடுத்திருக்கின்றார். 15 வயது சிறுமி மூன்று மாத கர்ப்பிணியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இச் சிறுமி தந்தையை இழந்தவர் குடம்பத்தில் 10 பேர் குடும்ப சுமையை குறைக்க வேலைக்கு சென்றவருக்கு வயிற்றிலும் சுமை.


செய்திகளை கேட்க..
அன்று மாகாண சபை முறமையை எதிர்த்தவர்கள் இன்று மாகாணசபையை கைப்பற்ற ஆசைப்படுவது ஏன by puthiyavidiyal
மட்டக்களப்பில் முதல் முறையாக அறிவிப்பாளர் பயிற்சிநெறி திங்கட்கிழமை ஆரம்பம் by puthiyavidiyal வெளிநாடுகளில் இருந்து வீர வசனம் பேசி மக்களை மீண்டும் அழிவுப்பாதைக்கு இட்டுச்செல்ல வேண்டாம் by puthiyavidiyal
read more...