Monday 19 December 2011

சொன்னால் வெட்கக்கேடு

தற்போது லண்டனில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற இளம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஆளுமை விருத்தி கருத்தரங்கிற்க தமிழ் தேசிய கூட்டமைப்பினர்களுக்கும் அழைப்ப விடுக்கப்பட்டிருந்தது. இதன் போது தங்களது கட்சி சார்பில் யாரை அனுப்புவது என விவாதித்துக்கொண்டிருக்கும் போது பிரச்சனை வெடித்தது. 
அதாவது மட்டக்களப்பு மாவட்டத்திலே அதிகபடியான வாக்குகளைப்பெற்று தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் பாராளுமன்றத்திற்கு தெரிவான பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் கூறினார் இளம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்குத்தான் இந்த செயலமர்வு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது. அகவே 40வயதுக்கு கீழ்ப்பட்டவர்கள்தான் செல்லமுடியும் எனவே நான் செல்வதுதான் சிறந்தது என தனது கருத்தை முன் வைத்தார்.
அப்போது ஆவேசமாக வடக்கு மாகாண தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் சுமத்திரன் அவர்கள் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினரை பார்த்து உணக்கு என்ன தெரியும், இங்கிலீஸ் தெரியாத உணக்கு அங்கு என்ன வேலை? அங்கே உள்ள கோயிலில் பூசை செய்வதற்கு உண்மையான பிராமணர்கள் (வடக்கு) இருக்கின்றார்கள். அவர்கள் அதனை சரியாக செய்வார்கள். நீ செல்ல வேண்டிய அவசியம் இல்லை. என உரத்த குரலில் கூச்சலிட்டார்.
இருவருக்குமிடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டு சண்டைவரை சென்றது. பாருங்கள் லண்டனிலே தமிழர்கள்தான் இவர்களுக்கு செயலமர்வை ஏற்பாடு செய்திருக்கின்றார்கள். அங்கே தமிழில் பேசினால் என்ன? தமிழ் தமிழ் என கூக்குரலிடும் இவர்கள் தமிழ் பேசுவதற்குக்கூட முன்னுரிமை அளிக்கவில்லை.
வேதனை, வெட்கம், அவமானம்………
குறிப்பு:- யோகேஸ்வரன் மட்டக்களப்பான்தானே ஆகவே அப்படித்தான்    இருப்பார்கள் பாணிகள்…….
இன்ரர்நெஷ்னல் அலேட் என்கின்ற அமைப்பினால் 40 வயதுக்கு உட்பட்ட பாரளுமன்ற உறுப்பினர்களுக்கான பயிற்சிப் பட்டறை ஒன்று பிரித்தானியாவில் இடம்பெற்றுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான உரிமைகள், மக்கள் தொடர்பாடல், முகாமைத்துவம், பல்லினச்சமூகங்களுடனான உறவைபேணுதல் போன்ற விடயங்களில் இளம் பாராளுமன்ற உறுப்பினர்கள் எவ்வாறு தம் ஆற்றலை வழர்த்துக்கொள்வது என்ற பயிற்சியை வழங்குவதே இப்பட்டறையின் நோக்கமாகும்.
இப்பயிற்சிக்காக நமது பாராளுமன்றிலிருந்தும் 40 வயதுக்குட்பட்டவர்களை இன்ரர்நெஷ்னல் அலேட் சார்பாக வன் ரெக்ஸ்ட் இனிசியேட் என்கின்ற நிறுவனம் ஒருங்கிணைக்கும் வேலையினைச் செய்துள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியிலிருந்து 3 உறுப்பினர்கள், ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து 2 பாராளுமன்ற உறுப்பினர்கள்இ அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸிலிருந்து 1 பாராளுமன்ற உறுப்பினர் என மேற்படி நிகழ்வுக்காக தெரிவு செய்யப்பட்டிருந்ததுடன் அவர்கள் தற்போது பிரித்தானியாவில் தங்கியுள்ளனர். அவர்களுடன் பாராளுமன்ற உறுப்பினர் அல்லாத தமிழர் ஒருவரும். யார் இந்த தமிழர்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்து மேற்படி குழுவிற்கான தெரிவு என்ற விடயம் வந்தபோது கூட்டமைப்பில் 40 வயதுக்கு குறைவான பாராளுமன்ற உறுப்பினராக உள்ள ஒரே ஒருவர் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன். அவர் இப்பயிற்சியினை பெற்றுக்கொள்ளும் நோக்கில் தலைமையிடம் அனுமதி கோரியபோது யோகேஸ்வரனின் செவிப்பறை வெடித்துள்ளது. ஆங்கிலம் தெரியாமல் லண்டன் சென்று மானத்தை கப்பலேற்ற போறீரோ என கேட்டகப்பட்டாராம்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு இத்துடன் நின்று விடவில்லை பாராளுமன்ற உறுப்பினரின் இடத்திற்கு பிரதேச சபைச் தலைவர் ஒருவரை அனுப்புவதற்கு தீர்மானித்துள்ளது. அத்தேர்வு எவ்வாறு இடம்பெற்றது. அவர் சுரேஸ் அணியைச் சேர்ந்தவரா? சம்பந்தன் அணியைச் சேர்ந்தவரா? அன்றில் சுபந்திரனுக்கு மிகவும் நெருக்கமானவரா என்பதெல்லாம் கேட்க்கக்கூடாது.
வலிகாமம் வடக்கு பிரதேச சபைத் தலைவர் ஆங்கிலம் பேசுவாராம் எனச்சொல்லி பிரித்தானிய வீசாவிற்கு அனுப்பியுள்ளார்கள். குறிப்பிட்ட நிகழ்வு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கானது என்ற கூறப்பட்டு வீசா நிராகரிக்கப்பட்டுள்ளது. சுகிர்தர் என்ற வலி வடக்கு பிரதேச சபைத்தலைவர் பாஸ்போர்டில் றிஜெக்ட் சீலை குத்தி கொண்டு வெளியில் வந்தவுடன், பிறிதொருவர் வெளியில் பாஸ்போர்டுடன் நின்றுள்ளார். அவருக்கு வீசா வழங்கப்பட்டுள்ளது. அவர் குறிப்பிட்ட குழுவுடன் லண்டன் சென்று மேற்படி பயிற்சியில் கலந்து கொண்டுள்ளார்.
இவர் யார்? இவர் பெயர் ரகு பாலச்சந்திரன். சுமந்திரனின் நெருங்கிய சகாவாம்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பும் தேசியமும் எங்கே போகின்றது. மக்கள் பிரதிநிதி ஒருவரை ஆங்கிலம் தெரியாது என நிராகரிக்கின்றார்கள். அதேநேரம் ஆங்கிலம் தெரிந்தவர் என பாராளுமன்ற உறுப்பினர் அல்லாதவர் ஒருவரை வீசா கேட்டு அனுப்புகின்றார்கள். பிரித்தானியா வீசாவை நிராகரிப்பதற்கு காரணம் பாராளுமன்ற உறுப்பினர் இல்லை என சொல்லப்பட்டுள்ளது. ஆனால் பாராளுமன்ற உறுப்பினர் அல்லா சுமந்திரனின் சகாவிற்கு அதே நிகழ்வில் பங்கேற்பதற்கு வீசா வழங்கப்பட்டுள்ளது.
பின்தங்கிய பிரதேசத்திலிருந்து , மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதி பின்தங்கியவராகவே இருக்கவேண்டும். ஆங்கிலம் பேசத்தெரிந்த மேல்தட்டு வர்க்கத்தினராகிய நாங்கள் சகலவற்றையும் பார்த்துக்கொள்வோம் , மக்கள் எங்களுக்கு வாக்குப்போட வேண்டும், அத்துடன் நீங்கள் தெரிவு செய்கின்றவர்கள், நாங்கள் சொல்லற பக்கத்துக்கு தலையாட்டவும், கைதூக்கவும் தயாராகவிருக்கவேண்டும்இ மீறினால் செவிப்பறை வெடிக்கும் எனச் செயல்படுகின்றது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமை. 

Post Comment


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "சொன்னால் வெட்கக்கேடு"

Post a Comment