Tuesday, 27 December 2011

சத்தியமா சொல்கிறேன் சுயபுராணம்தான்..


ஒருவரின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும்போது அது மற்றவர்களுக்கு படிப்பினையாக அமையும். இங்கே பகிரப்பட இருக்கும் விடயம். கட்டார் நாட்டுக்கு தொழிலுக்காகச் சென்று ஏமாற்றப்பட்டு கட்டார் நாட்டிலே சரியாக நான்கரை மாதங்கள் உணவின்றி தங்க இடமின்றி பரிதவித்த ஒரு பரதேசியின் கதை?

யார் அந்தப் பரதேசி வேறு யாருமல்ல நான்தான். இங்கே பகிரப்பட இருக்கின்ற விடயங்கள் நான் கட்டார் நாட்டிலிருந்து இலங்கைக்கு வந்த நாளிலிருந்து எழுத நினைத்தது. வலைப்பதிவு பக்கம் வருவதற்கு மனம் இடம் கொடுக்கவில்லை. இங்கே பகிரப்படுகின்ற விடயங்கள் கட்டாருக்கு நான் சென்று நான்கரை மாதங்கள் பட்ட துயரங்கள் கட்டார் நாட்டிலே வேலைக்காகச் சென்றிருக்கின்ற எமது உறவுகள் அனுபவிக்கின்ற படுகின்ற கஸ்ரங்களை மற்றவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்பதே எனது நோக்கம்.

எமது பிரதேசங்களிலே வெளிநாட்டுக் காசு படும்பாடு வாய்விட்டுச் சொல்ல முடியாது. வெளிநாட்டிலிருந்து கணவன் பணம் அனுப்பிவிட்டால் வங்கிக்குச் சென்று பணத்தினை எடுத்து அத்தனை பணத்தினையும் செலவு செய்துவிட்டு சில தினங்கள் சென்றதும் பட்டினி கிடக்கின்ற பலரை பார்த்திருக்கின்றேன். பலர் அப்பணத்தில் சிறு தொகைப் பணத்தையாவது சேமிப்போம் என்று நினைக்கமாட்டார்கள். அதிகமானவர்கள் இப்பணத்தினை ஆடம்பரத்திற்காக செலவு செய்கின்றனர்.


நான் கட்டாருக்கு செல்ல முன்னர் வெளிநாட்டில் இருப்பவர்களின் குடும்பங்கள் படும் பாட்டைப் பார்த்து கவலைப்படுவதுமுண்டு. நானும் வெளிநாடு போனால் உழைத்து நிம்மதியாக இருக்கலாமே என்று. காரணம் நான் மிகவும் வறிய கஸ்ரப்பட்ட குடும்பத்தில் பிறந்தவன். எனது தந்தை என்னுடைய பத்து வயதில் இறந்தவிட்டார் குடும்ப சுமையை பொறுப்பினை பத்து வயதில் நான் ஏற்க வேண்டிய சூழல். ஏழைகள் கஸ்ரப்பட்டவர்கள் பக்கம் எவர் பார்வையும் திரும்புவதில்லைதானே.

என் தந்தை இறந்த அன்று பத்து வயதிலேயே என் சந்தோசமும் தொலைந்துவிட்டது தேடிக்கொண்டிருக்கின்றேன். இன்னும் காணவில்லை.குடும்ப சுமையை நான் ஏற்கவேண்டிய கட்டாயத்தின் தேவை பல கஸ்ரங்களுக்கு மத்தியில் வாழ்ந்துவரும் வெளிநாட்டில் இருப்பவர்களின் குடும்பங்களைப் பார்க்கின்றபோது நானும் வெளிநாடு சென்றால் நிம்மதியாக வாழலாம் என்று எனக்குள் எண்ணம் தோன்றும் போதெல்லாம் அம்மாவிடம் சொல்வேன் வெளிநாடு போகப் போகிறேன் என்று அம்மா போகவேண்டாம் என்று சொல்லிவிடுவார்.

இருந்தாலும் பல கஸ்ரங்களுக்கு மத்தியில் படித்து பட்டம் பெற்றும் Nவுலை தேட சென்றால் வேலைக்கு இலட்சக் கணக்கில் பணம் கேட்கின்றனர். என்னைப் போன்ற கஸ்ரப்பட்டவர்களின் நிலை திண்டாட்டம். பணக்காரர்களுக்கு கொண்டாட்டம். பணமிருந்தால் வேலை.

கட்டார் நாட்டில் மேற்பார்வையாளர் வேலை இருக்கின்றது. இலங்கை ரூபா 150000 என்று அறிந்தேன். முகவரைத் தொடர்புகொண்டு வெளிநாடு செல்வதற்கு எனது பாஸ்போட் விபரங்களைக் கொடுத்தேன் ஆனாலும் வீட்டில் நான் செல்வது எவருக்கும் விருப்பமில்லை.

வீசாவும் வந்துவிட்டது. போவதில்லை என்று முடிவெடுத்துவிட்டு இருக்கின்றபோது. முகவரிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது வெளிநாட்டுக்கு செல்வதாக இருந்தால் நாளை கொழும்புக்கு வரவேண்டும். வரவில்லை என்றால் வீசா காசு 350000 இலங்கை ரூபாவை தந்துவிட்டு நில்லுங்கள். என்று சொன்னார் போவதாக முடிவெடுத்தேன். எவரிடமும் சொல்லவில்லை எனது நண்பர்களிடமும் கூட சொல்லவில்லை. காரணம் அந்தக் காலகட்டத்தில் என் பொருளாதார நிலை கடும் மோசமாக இருந்தது. நான் விரக்தி மனநிலையில்தான் இருந்தேன் என்று சொல்லலாம்.

இலங்கையிலிருந்து கட்டாருக்கு இரவு 07.25 க்கு விமானம் புறப்பட்டது என்று நினைக்கின்றேன். இரவு நேரத்தில்தான் கட்டாரில் விமானத்திலிருந்து கட்டார் மண்ணில் காலடி எடுத்து வைத்தேன். வீட்டிலிருந்து கட்டார்  செல்லும்வரை அழுதுகொண்டு சென்ற நான் கட்டார் விமான நிலையத்தை விட்டு வெளியே வந்தபொழுது மனதிலே சற்றுச் சந்தோசம் வந்தது. என்னுடன் ஆரம்பகாலம் முதல் என்னுடன் நெருங்கிய நண்பர்களாக இருந்த எல்லோரும் வெளிநாடு சென்றுவிட்டனர். நான் மட்டும்தான் இலங்கையில் இருந்தேன். விமான நிலையத்தில் என் நண்பர்கள் மாத்திரமல்ல எனது கிராமத்தைச் சேர்ந்த கட்டாரில் இருக்கின்ற அனைவரும் வந்திருந்தனர்.

கட்டார் விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்து நான் முதன் முதலாக பார்த்த விடயம் விபத்து ஒன்று. இரண்டு கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதுண்டு நசிந்து இருக்கின்றது. இரண்டு காரிலும் இருந்தவர்கள் இறந்துவிட்டனர் இறந்தவர்களை காரை வெட்டி எடுக்கும் காட்சிதான் கட்டாரில் நான் முதலில் கண்ட காட்சி. ( அதுவரைக்கும் கண்ணை மூடிக்கொண்டா இருந்தாய் என்று கேட்க வேண்டாம் விமான நிலையத்தைவிட்டு வெளியே வந்ததும் நடந்த சம்பவம் மறக்க முடியாத முதல் சம்பவம்)

தொடர்ந்தும் எமது சொந்தங்கள் படம் அவலங்களை பார்த்து கண் கலங்கிய நாட்களை எமது சொந்தங்களின் அவலங்களை தொடரும் பதிவுகளில் தருகிறேன். சொல்லக்கூடாத ஆனாலும் சொல்லப்பட வேண்டிய பல விடயங்களை பகிர்ந்து கொள்ள இருக்கின்றேன் காத்திருங்கள் நண்பர்களே.


Post Comment


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

3 comments: on "சத்தியமா சொல்கிறேன் சுயபுராணம்தான்.."

Anonymous said...

rombavum nanri.itu migavum payan ulla pativutan.adutu yeppotu yelutuveergal yena aarvam melidugiratu.

பிரபா -விழியும் செவியும் said...

வணக்கம் நண்பா, உன் முயற்சிகளையும் உன் திறமைகளையும் அருகில் இருந்து பார்த்தவன் என்ற வகையில் சொல்கிறேன், உன் முயற்சிகள் அனைத்தும் மிக விரைவில் வெற்றி பாதையை நோக்கி நகரும். நிச்சயமா உன் கட்டார் பயணம் பற்றி அறிந்தேன், கவலையான அதேவேளை கசப்பான அனுபவம், கட்டாருக்கு சென்று நாம் உறவுகள் நிறைய கச்ட்டப்படுகுற அதே வேலை, கட்டாருக்கு செல்வதற்காக அவர்கள் இங்கு படும் பாடு மிக கொடுமையானது என்று , அதில் ச்னுபவ பட்ட என் நண்பன் ஒருத்தன் , அண்மையில் தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டான், அந்த தகவல்களை நான் விரைவில் பதிவிடுகிறேன். நன்றி . மீண்டும் நம்பிக்கையோடு வாழ்த்துகிறேன். உனக்கு வெற்றி நிச்சயம்.

RADIO FOR FREE VOICES நீதி மற்றும் சமத்துவத்துக்கான பெண்களின்‌ குரல் said...

RADIO FOR FREE VOICES
நீதி மற்றும் சமத்துவத்துக்கான பெண்களின்‌ குரல்.

Post a Comment