Saturday 19 January 2013

உப்புச் சிறட்டைக்குள் மூக்கைப் புதைத்து சாக வேண்டிய தமிழ் அறிவிப்பாளர்கள்

வணக்கம் அன்பு நண்பர்களே. நலமா மிக நீண்ட இடைவேளைக்குப் பின்னர் புதிய ஆண்டில் பதிவுப்பக்கம் வந்திருக்கின்றேன். முகப்புத்தகத்தில் ஒரு நண்பரால் பகிரப்பட்ட ஒரு வீடியோ இந்தப் பதிவினை என்னை எழுதத்தூண்டியது.

நான் வாழ்ந்த பிரதேசம் மின்சாரமே இல்லாத ஒரு பகுதி. எப்பொழுதும் என்னுடன் பற்றறியில் இயங்கும் ஒரு வானொலி இருக்கும் அது 24 மணித்தியாலமும் வேலை செய்துகொண்டே இருக்கும். நான் படிக்கும்போதுஅதுவும் என் அருகிலிருந்து படித்துக்கொண்டே இருக்கும். 

நான் சிறு வயது முதல் சிற்றலைவரிசையில் (SW) பல தமிழ் வானொலி நிலையங்களைச் செவிமடுப்பதுண்டு. சிங்கப்பூர் வானொலிக்கழகம் ஒலி 96.8 ஒவ்வொரு இரவிலும் கேட்பதுண்டு (இப்போதும் அடிக்கடி இணையத்தில் கேட்பதுண்டு) மிகவும் சிறப்பான நிகழ்ச்சிகள் நான் நினைக்கின்றேன் சில நிகழ்சிகளுக்கு வித்திட்டவர்கள் இவர்கள்தான்.

1997 க்கு முன்னர் சிங்கப்பூர் வானொலிக்கழகம் ஒலி 96.8 ல் ஒலிபரப்பான நிகழ்சிகளை ஒத்த நிகழ்ச்சிகளை பின்நாளில் பல வானொலிகளில் அவதானித்தேன். நானும் அறிவிப்பாளராக வரவேண்டும் என்ற ஆசைய தூண்யது சிங்கப்பூர் வானொலியே.

அதே போன்று அடிக்கடி மலேசிய வானொலியையும் கேட்டிதுண்டு. சிறப்பான நிகழ்சிகள். 

அதே போன்று குறித்த ஒரு நேரத்தில் சீன வானொலியை திருப்பி விடுவேன். சீனர்களால் செய்யப்படுகின்ற தமிழ் சேவையினை பார்த்து வியந்திருக்கின்றேன். உண்மையிலேயே அவர்கள் தமிழ் பேசுகின்ற விதம் கேட்பதற்கு அருமையாக இருக்கும். அன்று கலையரசி என்கின்ற அறிவிப்பாளர்மீது நான் கோப்பட்டிருக்கின்றேன். 

ஏன் கஸ்ரப்பட்டு தமிழ் பேசுகிறாள் ஒரு தமிழச்சியாக இருந்து என்று. இப்பொழுதுதான் அறிகிறேன் அவர் ஒரு சீனப்பெண் என்பதனை. 

நாம் வெட்கித்தலை குனியவேண்டி இருக்கின்றது. எவ்வளவு அழகாக தமிழ் பேசுகின்றார் இந்தச் சீனப்பெண். தமிழ் மொழியை வளர்க்க எவ்வாறு கஸ்ரப்படுகின்றார். ஆனால் கேடுகெட்ட எமது தமிழ் அறிவிப்பாளர்கள் தமிழை கொலை செய்கின்றார்கள். 

கீழே இருக்கின்ற வீடியோவைப் பார்த்தாவது திருந்துவார்களா? தமிழ்மொழிக் கொலைஞர்கள்
read more...