Tuesday, 27 October 2009

அந்தரங்கம் என்றால் என்ன?

எப்பொழுதோ எழுத நினைத்தது நேரம் இடம் கொடுக்காததால் இன்று இடுகையாக வருகின்றது.


அண்மையிலே நண்பர் சதீஸ் லோஷனுடன் அந்தரங்கம். பகுதி- 1 எனும் தலைப்பிலே ஒரு பதிவிட்டிருந்தார். இப்பதிவிலே ஒலி, ஒளிபரப்பாளரும், வலைப்பதிவருமாகிய லோஷன் அவர்களை பேட்டி கண்டு இருந்தார் சதீஸ். இதிலே லோஷன் தன்னைப் பற்றிய பல விடயங்களைப் சொல்லி இருந்தார்.

இந்த இடுகைக்கு சில அனானிகள் திட்டித் தீர்த்து இருந்தனர். தலைப்பு தவறானது என்றும் வேறு அர்த்தத்தினைக் கொடுப்பதாகவும் குறிப்பிட்டு இருந்தனர். அவர்கள் அந்தரங்கம் என்பதனை தவறான கண்ணோட்டத்தில் பார்க்கின்றனர் என்பதனை மட்டும் என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. எல்லோரும் ஆவலோடு எதிர் பார்த்த லோஷன் பற்றிய தொடர் பதிவு இன்னும் வரவில்லை.

அந்தரங்கம் என்பது என்ன? இந்த இடத்திலே பயன் படுத்தப்பட்டது சரியா? தவறா? என்னைப் பொறுத்தவரை இதனை தீர்மானிக்க வேண்டியது சதீஸ், மற்றும் லோஷன் இருவருமே இதில் நாம் அந்தரங்கம் எனும் சொல் பயன்படுத்த முடியாது என்று சொல்ல முடியாது.

அந்தரங்கம் என்பது வெளியிடப்படாத, வெளிவராத தகவல்களாக அமையலாம். இது எந்தத் தகவலாகவும் அமையலாம். அந்தரங்கம் எனும்போது நாம் தவறான எண்ணத்தோடு நோக்குவது தவறானது. நல்ல பல விடயங்கள் இதுவரை வெளியிடப்படாத விடயங்கள் வெளியிடப்பட்டிருக்கலாமல்லவா? இங்கே அந்தரங்கம் என்பது லோஷனால் இதுவரை வெளியிடப்படாத விடயங்கள் இந்த பேட்டியிலே வெளியிடப்பட்டிருக்கலாம். அது எந்த விடயமாகவும் அமையலாம்.

அப்பதிவுக்கு பின்னூட்டமிட்டிருப்போரின் பின்னூட்டத்தைப்பார்க்கும்போது. அந்தரங்கம் என்பதை வேறு விதமாக நோக்கியிருந்தனர். அப்படியானால் ஒருவரின் அந்தரங்க செயலாளர் எனும்போது நாம் தவறான கண்னோட்டத்தில் பார்ப்பதில்லையே. அப்படி இருக்கும்போது ஏன் இங்கே மட்டும் தவறான கண்ணோட்டத்தில் பார்க்கின்றோம்.

இத் தலைப்பு தவறானது என்று சொல்வோர் அந்தரங்கம் என்பதற்கான வரைவிலக்கணத்தினைச் சொல்லவும்.

நண்பர் சதீஸிசிடமிருந்து லோஷன் பற்றிய தொடர் பதிவையும் விரைவில் எதிர்பார்க்கின்றேன்

Post Comment


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

18 comments: on "அந்தரங்கம் என்றால் என்ன?"

ஹேமா said...

சந்ரு,அந்தரங்கம் என்றால் மறைவு என்றுதானே பொருள்.அது பாலியலுக்கு மட்டுமென்று இல்லையே.எந்த ஒரு மறைவான விஷயத்தையும் சொல்லலாம்.
ரகசியம் அந்தரங்கமெல்லாம் பாதுகாப்பானவை.எனக்கு வரைவிலக்கணம் தெரியவில்லை.
அலுவலக அந்தரங்கக் காரியதரிசியும் என்பதும் அப்படித்தான்.ரகசியத்தைப் பாதுகாப்பவர்.

தியாவின் பேனா said...

இருவருக்கிடையே நடப்பது
சமரசம்
வெளியில் தெரிந்தால்
அது சரசம்
உள்ளிருக்கும்வரை
அந்தரங்கம்
அது
வெளியே போனால்
அது அரங்கம்


சும்மா பொழுதுபோக்காக எழுதினேன்

யோ வாய்ஸ் (யோகா) said...

ஏன் திடீரேன இப்படி ஒரு சந்தேகம்.

Kala said...

சந்ரு! எனக்கு தெரிந்தவரை..
அந்தரங்கம்____{நெருங்கிய ஒரு சிலரைத்
தவிர ஒருவர் வாழ்வில்}பிறர் அறிய
வேண்டாதது.
இன்னும் சொல்வதென்றால்..
பிறர் அறியாதவிதம்,ரகசியம்,உட்கருத்து
என்று பொருள் படும்.

சந்தர்பத்தை பொறுத்து அமையும் சொல்
உ+ம் நான் உன்னுடன் அந்தரங்கமாய் பேச
வேண்டும்,._நாம் அந்தரங்கமாய் செயல்பட
வேண்டும்.__நாம் அந்தரங்கமாய் நடந்து
கொள்ளவேண்டும்.__நான் சொல்வது
அந்தரங்கமாய் இருக்க வேண்டும்.
இன்னும்....சொல்லலாம்

ஸ்ரீராம். said...

அந்தரங்கம் யாவுமே சொல்வதென்றால் பாவமே...

அந்தரங்கம் யாவும் அந்த ரங்கன் அறிவான்...!!

LOSHAN said...

அந்தரங்கம் என்பதை தனிப்பட்ட ரகசியம் என்றும் பொருள் கொள்ளலாம்..
நாம் சாதாரண வழக்கில் பாலியலையும் இணைத்தே பழக்கப் படுத்திக் கொண்டோம்.

என்னிடம் சதீஸ் இது பற்றிக் கேட்டபோது எனக்குப் பிழை என்று படாததால் சரி என்றேன்..

நிலாமதி said...

அந்தரங்கம் என்பது தனிப்பட்ட என் பொருள் படும் .
லோஷனுடன் தனித்துவமான் சந்திப்பு .....என தலைப்பு போட்டு இருக்கலாம்.

வால்பையன் said...

மூக்கு புடப்பா இருந்தா இப்படியெல்லாம் யோசிக்க தோணுமாம்!

வால்பையன் said...

மூக்கு புடப்பா இருந்தா இப்படியெல்லாம் யோசிக்க தோணுமாம்!

வேந்தன் said...

லோஷன் அண்ணா சொல்வது போல் அந்தரங்கம் என்றால் பாலியல் விடயங்களாகவே நினைக்கின்றோம். :(((

ஆ.ஞானசேகரன் said...

நண்பா நீங்கள் சொல்வதும் சரிதான்... கண்ணதாசன் "அரங்கமும் அந்தரங்கமும்" என்ற புத்தகம் எழுதியுள்ளார்..... இதில் அந்தரங்கம் என்ன சொல்லுகின்றது?

SShathiesh said...

இந்த பதிவில் பதில் சொல்ல வேண்டிய கடப்பாடு எனக்கும் உண்டு. பல நண்பர்கள் என்னுடைய அந்த பதிவில் பின்னூடம் இட்டிருந்தனர். ஆனால் இன்னும் எனக்கு அதுக்கு நேரம் கிடைக்காததால் பதிலிட முடியவில்லை, இப்போ சந்த்ரு மூலம் அந்த வாய்ப்பு கிடைத்திருப்பது சந்தோசம்.
/எல்லோரும் ஆவலோடு எதிர் பார்த்த லோஷன் பற்றிய தொடர் பதிவு இன்னும் வரவில்லை/
=>
நேரப்பிரச்சனை காரணமாக அடுத்த தொடர் தாமதாமாகின்றது. மிக விரைவில் புத்துணர்ச்சியுடன் வருவேன்.
/என்னைப் பொறுத்தவரை இதனை தீர்மானிக்க வேண்டியது சதீஸ், மற்றும் லோஷன் இருவருமே இதில் நாம் அந்தரங்கம் எனும் சொல் பயன்படுத்த முடியாது என்று சொல்ல முடியாது./
=>
இந்த தலைப்பு வைக்கமுன் லோஷன் அண்ணாவுடன் இது பற்றி பேசினேன். எந்த விரசமும் இருக்கவில்லை. சிலரின் பார்வையில் தப்பான ஒரு வார்த்தையாக அது இருக்கின்றது. ஆனால் அதையும் ஆழமாக் சென்று பார்த்தால் புரியும் என நம்புகின்றேன்நண்பர்கள் தங்கள் கருத்துக்களை சொல்லி உள்ளனர் இதில் தவறில்ல்லை.

நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள் என் பெயரை சதீஸ் என பாவிக்கின்றீர்கள் சதீஷ் என்பதே சரி என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கின்றேன். பின்நூட்டவாதிகளின் பின்னூட்டங்களுக்கும் பதில் சொல்லப்போகின்றேன்.

வால்பையன் said...

//என் பெயரை சதீஸ் என பாவிக்கின்றீர்கள் சதீஷ் என்பதே சரி என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கின்றேன். //

”ஷ்”க்கும், “ஸ்”க்கும் உள்ள வித்தியாசம் என்ன நண்பரே!?

LOSHAN said...

ஷ் அன்றால் ஷ்.. ஸ் என்றால் ஸ் .. ;)
அப்பிடித்தானே சதீஷ்? ;)

சுசி said...

வித்யாசமான தலைப்பு... ஒரு வேளை 'லோஷனின் அந்தரங்கம்'னு வந்திருந்தா பிரச்சனை இல்லையோன்னு தோணுது.
மத்தபடி எழுத்து அவங்க அவங்க சுதந்திரம்...

நூத்தி மூணு பேர் பின் தொடர ஆரம்பிச்சாச்சு... வாழ்த்துக்கள் சந்ரு.

SShathiesh said...

லோஷன் அண்ணா நீங்கள் சொன்னதேதான். என் பெயரை உச்சரிக்கும் போது இருக்கும் வேறுபாடுதான் அது வால்பையன். புரிந்திருக்கும் என நினைக்கின்றேன். ஏனெனில் உங்களுக்கு அதிக தமிழ் அறிவு உண்டு என்பதை நீங்களே சொல்லாமல் சொல்லி இருக்கின்றீர்கள்.

உங்களிடம் ஒரு கேள்வி. உங்கள் பெயர் வால்பையன் என குறிப்பிட்டீர்கள் உண்மையில் தமிழில் அப்படி வருமா என சிந்தித்ததுண்டா. நீங்கள் உங்கள் பெயரை முறையாக தமிழில் எழுதுவதென்றால் வாற்பையன் என தான் எழுத வேண்டும். உங்கள் பெயரில் இருக்கும் பிழையே தெரியாத நீங்கள் என் பெயரின் உச்சரிப்பு தெரியாமல் இரண்டு எழுத்துக்கும் வித்தியாசம் கேட்டதுக்கு நான் என்ன செய்வேன்.

கனககோபி said...

//LOSHAN கூறியது...
அந்தரங்கம் என்பதை தனிப்பட்ட ரகசியம் என்றும் பொருள் கொள்ளலாம்..
நாம் சாதாரண வழக்கில் பாலியலையும் இணைத்தே பழக்கப் படுத்திக் கொண்டோம்.

என்னிடம் சதீஸ் இது பற்றிக் கேட்டபோது எனக்குப் பிழை என்று படாததால் சரி என்றேன்..//
லோஷன் அண்ணாவே சொல்லிவிட்டதால்,
That's all, full stop.

(அன்ட்ரூ ஸ்ரோஸ் பாணியில் சொல்வதென்றால்)

மருதமூரான். said...

////அந்தரங்கம் என்பது வெளியிடப்படாத, வெளிவராத தகவல்களாக அமையலாம். இது எந்தத் தகவலாகவும் அமையலாம். அந்தரங்கம் எனும்போது நாம் தவறான எண்ணத்தோடு நோக்குவது தவறானது////

தங்களின் கூற்று சரிதான் சந்ரு.

Post a Comment