Wednesday, 21 October 2009

சரியா? தவறா? ஒண்ணுமே புரியல்ல

எனது மலையக மக்களின் வாழ்வியலோடு பின்னிப்பிணைந்த நாட்டுப்புறப் பாடல்கள் எனும் இடுகை இருக்கிறம் சஞ்சிகையிலே பிரசுரிக்கப்பட்டிருக்கின்றது. இருக்கிறம் சஞ்சிகையின் ஆசிரியருக்கும், தொடர்புடைய அனைவருக்கும் எனது நன்றிகள்.

எனக்கு பல நாட்களாக இருந்து வந்த சந்தேகங்களை உங்களிடம் கேட்கின்றேன். உங்களிடம் இருந்து எனது சந்தேகத்துக்கான தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில்.

பலராலும் பழமொழிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. பழமொழி பொய்க்காது என்றெல்லாம் சொல்லப்படுகின்றது.....

நான் பயிற்சி அறிவிப்பாளராக இருந்தபோது. ஒரு ஆலயத்திலே நடைபெறுகின்ற திருவிழா நிகழ்வுகளை நேரடி ஒலிபரப்பு செய்வதற்கு அயத்தங்களைச் செய்தேன் அப்போது எமது உயரதிகாரி என்னை நேரடி ஒலிபரப்பு செய்யவேண்டாம் அந்தக் கோவில் பிரசித்திவாய்ந்தது நீ பயிற்சி அறிவிப்பாளர் "முதல் கோணல் முற்றிலும் கோணலாகிவிடும்" என்று சொன்னார்.
நான் என்னில் தவறில்லை எனும்போது எதனையும் தட்டிக் கேட்பவன். நான் விடவில்லை நான் அவருக்கு சொன்ன பதில் "வெற்றியின் முதல்படி தோல்வியாக" இருக்கட்டுமே என்றேன். அவருக்கு கோபம் வந்துவிட்டது என்னோடு சண்டை செய்ய ஆரம்பித்துவிட்டார். நானும் விடவில்லை நேரடி ஒலிபரப்பு செய்தேன். முதல் நேரடி ஒளிபரப்பே நல்ல வரவேற்பைப் பெற்றது. இன்று அந்த அதிகாரி எமது வானொலியில் இல்லை என்றாலும் அவர் இருக்கும்வரை என்னை அவர் கண்ணில் காட்ட முடியாது.

எனது சந்தேகம் என்னவெனில். வெற்றியின் முதல்படி தோல்வி என்கின்றோம். அதேபோல் முதல் கோணல் முற்றிலும் கோணல் என்கின்றோம். இது இரண்டும் முரணாக இருப்பது போன்று உணர்கின்றேன்.

வெற்றியின் முதல்படி தோல்வி எனும்போது. எமது முயற்சியின் முதல்படி தோல்வியாக அமைந்தாலும் அது வெற்றிக்கான படிக்கற்களாக அமையவேண்டும் அந்தத் தோல்வி எம்மை வெற்றியின் பக்கம் அயராத முயற்சியின் மூலமும். விட்ட தவறுகளைத் திருத்தி வெற்றி பெறுவதற்கான ஒரு நம்பிக்கையை ஊட்டுகின்றது.

முதல் கோணல் முற்றிலும் கோணல் எனும்போது நாம் ஒரு செயலைச் செய்யும்போது அந்தச் செயல் தோல்வியானால் மீண்டும் முயற்சிக்கத் தோன்றும் ஒருவருக்கு உச்சாகத்தை ஊட்டுவதாக இல்லாமல் அவரை அந்தச் செயலை கைவிடும் அளவுக்கு கொண்டு செல்கின்றதல்லவா?

அன்று என்னை நேரடி ஒலிபரப்பு செய்ய மறுத்தபோது நான் செய்யப்போகிறேன் என்று சண்டை பிடிக்காமல் இருந்திருந்தால் என் திறமைகள் மறைக்கப்பட்டிருக்கலாம். நானும் முதல் கோணல் முற்றிலும் கோணலாகிவிடலாம் என்று விட்டிருந்தால் என் திறமைகள் மறைக்கப்பட்டிருக்கும்.

"வெற்றியின் முதல்படி தோல்வி", "முதல் கோணல் முற்றிலும் கோணல்" இரண்டுமே முரண் படுவதாகவே உணர்கின்றேன். உங்கள் கருத்துக்களை எதிர் பார்க்கின்றேன்.

அடுத்து "ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே" என்று நாம் அடிக்கடி பயன்படுத்துவது மட்டுமல்ல திரைப்படப் பாடல்கள்கூட வந்திருக்கின்றன. இதனை பலரும் மனிதர்களின் உருவாக்கத்துக்கும், அழிவுக்கும் காரணம் பெண்ணே என்றுதான் கருதுகின்றோம். இது தவறான கருத்து என்று நான் நினைக்கின்றேன். இதன் பொருள் வேறு. ஏன் ஆண்களால் அழிவு இல்லையா? "ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே" உங்கள் விளக்கங்களையும் எதிர் பார்க்கின்றேன்.

Post Comment

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

14 comments: on "சரியா? தவறா? ஒண்ணுமே புரியல்ல"

Anonymous said...

சந்ரு அதிகமாக வானொலிகளைப் பற்றி குற்றம் சுமத்தும் நீங்கள் பணியாற்றும் வானொலியிலே இருக்கின்ற பிழைகளை அறிவதில்லையா? உங்கள் வானொலி விடுகின்ற தவறுகளையும் சுட்டிக்காட்டலாமல்லவா?

நீங்கள் பணியாற்றும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன பிறை எப்.எம் ஒரு சமுகம் சார்ந்த வானொலியா? இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் பிராந்திய சேவையாக ஆரம்பிக்கப்பட்ட இந்தச் சேவை நாட்டின் பல பாகங்களிலே ஒலித்துக்கொண்டிருக்கின்றது. இந்த வானொலி ஒரு சமுகம் சார்ந்த நிகழ்சிகளையே அதிகம் ஒளிபரப்புகின்றன.

குறிப்பாக முஸ்லிம் நிகழ்சிகளே அதிகம் இடம் பெறுகின்றன. காலை எட்டு மணிமுதல் பத்து மணிவரை முஸ்லிம் நிகழ்சிகள் ஒலிபரப்பப் படுகின்றன. அத்தோடு இடையிடையே பல முஸ்லிம் நிகழ்சிகள் வந்து போகின்றன. அத்தோடு முஸ்லிம்களின் முக்கிய நிகழ்வுகள் நடைபெறுகின்றபோது. (நோன்புப் பெருநாள் போன்றவை) மூன்று, நான்கு நாட்கள் தொடர்ச்சியாக முஸ்லிம் நிகழ்சிகள் இடம்பெறுகின்றன.

வேறு மாதம் சார்ந்த நிகழ்சிகள் இடம் பெறுவதில்லை ஏன் ஆரம்பகாலங்களிலே அவ்வப்போது சில இந்து ஆலயங்களிலே நேரடி ஒலிபரப்பு இடம் பெற்றன. இன்று அதுவும் இல்லை. இதுவரை ஒரு நாளாவது ஒரு கிறிஸ்தவ நிகழ்சி செய்திருக்கின்றீர்களா. ஏன் இந்தப் பாகுபாடு. காலை நேரத்தில்கூட பக்திப்பாடல்களை ஒலிபரப்பலாம்தானே அதுகூட செய்வதாக இல்லை.

இன்று உங்கள் வானொலியிலே 30 க்கு மீட்பட்ட முஸ்லிம் அறிவிப்பாளர்கள் இருக்கின்றனர். ஆனால் ௨,3 தமிழ் அறிவிப்பாளர்களே இருக்கின்றனர் இவர்கல்குஉட ஒரு சில நாட்களே நிகழ்சி செய்கின்றனர். இந்த பாகுபாடு ஏன். தமிழ் அறிவிப்பாலர்களுக்குத் தட்டுப்பாடா? அல்லது இது முஸ்லிம் சமுகம் சார்ந்த வானொலியா?

கலைஜர்கள் பற்றிப் பேசுகின்றிஇர்கள் நீங்கள் உங்கள் வானொலியில் தமிழ் கலைஜர்களுக்கு இடம் கொடுக்கின்ரிர்களா? முற்றுமுழுதாக முஸ்லிம் கலைஜர்களில் பேட்டிகளே இடம்பெறுகின்றன. அத்தோடு முஸ்லிம்களின் கலை நிகழ்சிகளே ஒலிபரப்பப்படுகின்றன.

முஸ்லிம்களின் சின்னச் சின்ன விடயங்கள் எல்லாம் நேரடி ஒலிபரப்புச் செய்யப்படும்போது தமிழர்கள் சார்ந்த எந்தவொரு விடயமும் ஒலிபரப்புச் செய்யப்படாதது வேதனைக்குரியது.

பிறை எனும்போது முஸ்லிம்கள் சார்ந்ததாகவே எல்லாராலும் நோக்கப்படும் ஏன் இந்த பிறை எனும் பெயரை மாற்ற முடியாதா? தமிழர்களுக்கும் பிறை எப்.எம் இல் உரிய இடத்தினை வழங்க உரிய அதிகாரிகள் மறுக்கின்றனரா?

உங்கள் நிகழ்சிகள் தரமானவைதான் இருந்தாலும் முஸ்லிம் சமுகம் சார்ந்ததாகவும் தமிழ் சமுகம் புறக்கணிக்கப்படுவதும் வேதனைக்குரிய விடயமே. உங்கள் பதிலை எதிர் பார்க்கின்றேன்.

யோ வாய்ஸ் (யோகா) said...

சந்ரு எனக்கும் இந்த பழமொழிகளில் பல பிரச்சினைகளுள்ளன.

ஸ்ரீராம். said...

அவரவர்கள் தங்கள் அனுபவம் வாயிலாக உணர்ந்ததை சொல்லி விட்டுப் போய் விட்டார்கள். எந்த அனுபவத்தில் நாம் இருக்கிறோமோ அந்த இடத்தில் நாம் உரியதை எடுத்துக் கொள்கிறோம்.

வால்பையன் said...

பழமொழிகள் பொழுது போகாத திண்ணை வீணர்கள் சொல்லி வைத்தது!

Subankan said...

பழமொழிகள் பொய்க்காது என்பதிலெல்லாம் எனக்கு நம்பிக்கை கிடையாது. இவை அனுபவங்களில் சொல்லப்பட்டவை. இன்று மாறிவரும் உலகம் இவற்றையும் ஒருநாள் புரட்டிப்போட்டுவிடும்.

இறக்குவானை நிர்ஷன் said...

“வெற்றியின் முதல்படி தோல்வி” - இது ஒரு பழமொழி அல்ல. இது நாமாக உருவாக்கிக்கொண்ட ஒரு கூற்று. எனினும் இதில் உண்மை இருக்கிறது. எந்தவொரு கருமத்தைச் செய்யும் போதிலும் தோல்வியைக் கண்டு நாம் தயங்கி நிற்கக் கூடாது. தோல்வியை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் வேண்டும் என்பதை இது கூறுகிறது. (எனினும் வெற்றியின் முதல்படி எப்போதும் தோல்வியாக இருக்கும் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. முதல்படியே வெற்றியின் அத்திபாரமாகவும் இருக்கலாம்)

“முதல்கோணல் முற்றிலும் கோணல்” - என்பது பழமொழி. அதாவது ஆன்றோர் சொல்லிச்சென்றது. இதன் கருத்தினை செயலைக் கொண்டு ஆராய்தல் தவறு. இது பராயத்தைப் பொறுத்தது. இளம் பராயத்தில் நாம் வழிதவறிப் போனோமானால் இறுதிவரை அதன் தாக்கம் இருந்துகொண்டே தான் இருக்கும். அது பல வழிகளிலும் எமது வாழ்க்கையை சிதைத்து விடும் என்பதுதான் இந்தப் பழமொழியின் அர்த்தம்.

ஆக,
வெற்றியின் முதல்படி தோல்வி என்பது செயலை அடிப்படையாகக் கொண்டது. முதல்கோணல் முற்றிலும் கோணல் என்பது பராயத்தை அடிப்படையாகக் கொண்டது.

“ஆவதும் பெண்ணாலே, அழிவதும் பெண்ணாலே” – ஆதிகாலம் தொட்டு சமுதாயக் கட்டமைப்பில் பெண்களின் பங்கு பெரிதும் இருந்துவந்திருக்கிறது. அதேபோல் பெண்கள் மீதான மோகமும் அதிகமாக இருந்துவருகிறது. பெண்களால் சாம்ராஜ்யம் இழந்தது முதல் யுத்தம் நடந்தது, நகர் எரிந்தது வரை ஏராளமான சம்பவங்களை குறிப்பிடலாம். அதேபோன்று சமுதாயத்தை அதன் பாரம்பரியங்களிலிருந்து நழுவாமலும் விழுமியங்களை சரிவர பேணுவதிலும் பெண்களின் பங்களிப்பு அதிகமாக இருந்து வந்துள்ளது. அதனால் தான் பெரியோர்கள் பெண்களை தீ இற்கு ஒப்பிட்டார்கள். தீயால் ஆக்கவும் முடியும் அழிக்கவும் முடியும்.

ஆண்களால் அழிவு ஏற்படுகிறதுதான். ஆனால் பெரும்பாலும் அந்த அழிவின் முதல்படியில் பெண் இருக்கலாம். அல்லது ஒரு பெண்ணால் அந்த அழிவை கட்டுப்படுத்தாமல் இருந்திருக்கலாம்.

சமுதாயம் பெண்களுக்கு கொடுத்துள்ள முக்கியத்துவத்தை தான் இந்த பழமொழி எடுத்தியம்புகிறதே தவிர எதிர்மறையான சிந்தனைக்காக அல்ல.

சுசி said...

நிர்ஷனின் கருத்தை அப்படியே வழி மொழிகிறேன்...
சந்திரிக்கா.. சோனியா... அழிவுக்கு உதாரணம்....

கனககோபி said...

பழமொழிகளில் நமக்குத் தேவையானவற்றை மட்டுமம் எடுத்துக் கொள்வது சிறந்தது....
விளக்கம் தேடப் போனால் நாம் தான் குழம்பிவிடுவோம்....

இது பற்றி ஓர் நகைச்சுவை...

நாம் சோம்பறிகளாக இருக்க வேண்டும் என மகாத்மா காந்தி சொன்னார்...

சோம்பறித்தனம் தான் எமது முதல் எதிரி. -ஜவகர்கால் நேரு

நம் எதிரிகளை நாம் நேசிக்க வேண்டும் - காந்தி....

இப்போது என்ன செய்வது...

ஹா ஹா ஹா.....

புதியவர்களுக்கு வழிவிடும் தன்மையை நாம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்....

ஹேமா said...

சந்ரு பழமொழிகள் அந்தந்த நேரத்தில் யார் எதற்குப் பாதிக்கப்படுகிறார்களோ அந்த நேரத்தில்சொல்லிவிட்டுப் போன ஒன்று.எதற்கும் முயற்சியும் அக்கறையுமே வெற்றிக்கு வழிகாட்டி.

சி. கருணாகரசு said...

ஆவதும் பெண்ணாலே...ஆம் குடும்பத்தில் நல்லவை ஆவது பெண்ணாலே!!

அழிவதும் பெண்ணாலே...ஆம் குடும்பத்தில் கெட்டவை அழிவது பெண்ணாலே!!

பதிவு அருமை.

Anonymous said...

மட்டக்களப்பில் நடப்பதென்ன... எப்ப வரும்?

Kala said...

சந்ரு எனக்கு தெரிந்தவரையில் சில.....
“முதல் கோணல் முற்றிலும்
கோணல்”
இது பழமொழியாகவே இருக்காது
என நான் நினைக்கின்றேன்.
அப்படி இருந்தாலும்...எல்லாவற்றுக்கும்
{விடயங்களுக்கும்} இது பொருந்தாது
எதையும் செய்யும் முன் சிந்திச்சு
செய்யாவிட்டால் தப்பாகிவிடும்
அதனால் ...கவனமுடன் செய்
என்பதற்கு எச்சரிக்கை கூற்றாக
இருக்கலாம்!{உ+ம்}நாம் கணக்கு
செய்யும் போது சரியாகச் செய்தால்தான்
சரியான விடை கிடைக்கும்.ஒன்றைத்
தவறவிட்டால்...தப்பான விடைதான்.

“ஆவதும் பெண்ணாலே
அழிவதும் பெண்ணாலே”
நன்மை ஆவதும் பெண்ணால்..
தீமை அழிவதும் பெண்ணால்..

இன்னும்சில.....
“பெண் புத்தி பின் புத்தி”

புத்தி__கூர்மை,ஆற்றல்,அறியும் திறன்
பின்னால் நடக்கப் போவதையும்
முன்னாடிக் கூறுபவர் .

“முடவன் கொம்புத் தேனுக்கு
ஆசைபடலாமா”

முடவன்-தற்போது மாறி வழக்கத்தில்
இருக்கும் சொல்

“முதுவர் கொம்புத் தேனுக்கு....
என்று வரும்
முதுவர்{காட்டுவாசி}வேடுவர்,வேடர்
என்றும் சொல்லலாம்.

மலைமேல்இருக்கும் மரத்தில்
இருப்பதுதான் கொம்புத்தேன்{மலைத்தேன்}
மலையேறி பின்மரமேறி பல சிரமங்கள்
பட்டுத்தான்{அம்பு வில்லால் துளையிட்டு}
அதிலிருந்து {ஒழுகி}வரும் தேனை கீழுருந்து
பிடித்து எடுப்பார்களாம்.
{எட்டாமல் உயரத்தில் இருப்பதை..
பலபல கஷரங்கள் பட்டுக் கிடைப்பவைதான்.}

“சட்டியில் இருந்தால்அகப்பையில் வரும்”

சஷ்டி {கந்தசஷ்டி}இருந்தால் அகப் பை
கருப் பை{ கந்தசஷ்டி விரதம் இருந்தால்
பிள்ளை இல்லாதவர்குகு அந்தப் பாக்கியம்
கிடைக்கும்.}

எனக்கு தெரிந்த விளக்கங்கள் தான்
அப்புறம் அது,இது கேட்டு வம்புக்கு
வரக்கூடாது.

ஆ.ஞானசேகரன் said...

//எனது மலையக மக்களின் வாழ்வியலோடு பின்னிப்பிணைந்த நாட்டுப்புறப் பாடல்கள் எனும் இடுகை இருக்கிறம் சஞ்சிகையிலே பிரசுரிக்கப்பட்டிருக்கின்றது. இருக்கிறம் சஞ்சிகையின் ஆசிரியருக்கும், தொடர்புடைய அனைவருக்கும் எனது நன்றிகள்.//

வாழ்த்துகல் நண்பா

சந்ரு said...

//பெயரில்லா பெயரில்லா கூறியது...

சந்ரு அதிகமாக வானொலிகளைப் பற்றி குற்றம் சுமத்தும் நீங்கள் பணியாற்றும் வானொலியிலே இருக்கின்ற பிழைகளை அறிவதில்லையா? உங்கள் வானொலி விடுகின்ற தவறுகளையும் சுட்டிக்காட்டலாமல்லவா?

நீங்கள் பணியாற்றும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன பிறை எப்.எம் ஒரு சமுகம் சார்ந்த வானொலியா? இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் பிராந்திய சேவையாக ஆரம்பிக்கப்பட்ட இந்தச் சேவை நாட்டின் பல பாகங்களிலே ஒலித்துக்கொண்டிருக்கின்றது. இந்த வானொலி ஒரு சமுகம் சார்ந்த நிகழ்சிகளையே அதிகம் ஒளிபரப்புகின்றன.

குறிப்பாக முஸ்லிம் நிகழ்சிகளே அதிகம் இடம் பெறுகின்றன. காலை எட்டு மணிமுதல் பத்து மணிவரை முஸ்லிம் நிகழ்சிகள் ஒலிபரப்பப் படுகின்றன. அத்தோடு இடையிடையே பல முஸ்லிம் நிகழ்சிகள் வந்து போகின்றன. அத்தோடு முஸ்லிம்களின் முக்கிய நிகழ்வுகள் நடைபெறுகின்றபோது. (நோன்புப் பெருநாள் போன்றவை) மூன்று, நான்கு நாட்கள் தொடர்ச்சியாக முஸ்லிம் நிகழ்சிகள் இடம்பெறுகின்றன.

வேறு மாதம் சார்ந்த நிகழ்சிகள் இடம் பெறுவதில்லை ஏன் ஆரம்பகாலங்களிலே அவ்வப்போது சில இந்து ஆலயங்களிலே நேரடி ஒலிபரப்பு இடம் பெற்றன. இன்று அதுவும் இல்லை. இதுவரை ஒரு நாளாவது ஒரு கிறிஸ்தவ நிகழ்சி செய்திருக்கின்றீர்களா. ஏன் இந்தப் பாகுபாடு. காலை நேரத்தில்கூட பக்திப்பாடல்களை ஒலிபரப்பலாம்தானே அதுகூட செய்வதாக இல்லை.

இன்று உங்கள் வானொலியிலே 30 க்கு மீட்பட்ட முஸ்லிம் அறிவிப்பாளர்கள் இருக்கின்றனர். ஆனால் ௨,3 தமிழ் அறிவிப்பாளர்களே இருக்கின்றனர் இவர்கல்குஉட ஒரு சில நாட்களே நிகழ்சி செய்கின்றனர். இந்த பாகுபாடு ஏன். தமிழ் அறிவிப்பாலர்களுக்குத் தட்டுப்பாடா? அல்லது இது முஸ்லிம் சமுகம் சார்ந்த வானொலியா?

கலைஜர்கள் பற்றிப் பேசுகின்றிஇர்கள் நீங்கள் உங்கள் வானொலியில் தமிழ் கலைஜர்களுக்கு இடம் கொடுக்கின்ரிர்களா? முற்றுமுழுதாக முஸ்லிம் கலைஜர்களில் பேட்டிகளே இடம்பெறுகின்றன. அத்தோடு முஸ்லிம்களின் கலை நிகழ்சிகளே ஒலிபரப்பப்படுகின்றன.

முஸ்லிம்களின் சின்னச் சின்ன விடயங்கள் எல்லாம் நேரடி ஒலிபரப்புச் செய்யப்படும்போது தமிழர்கள் சார்ந்த எந்தவொரு விடயமும் ஒலிபரப்புச் செய்யப்படாதது வேதனைக்குரியது.

பிறை எனும்போது முஸ்லிம்கள் சார்ந்ததாகவே எல்லாராலும் நோக்கப்படும் ஏன் இந்த பிறை எனும் பெயரை மாற்ற முடியாதா? தமிழர்களுக்கும் பிறை எப்.எம் இல் உரிய இடத்தினை வழங்க உரிய அதிகாரிகள் மறுக்கின்றனரா?

உங்கள் நிகழ்சிகள் தரமானவைதான் இருந்தாலும் முஸ்லிம் சமுகம் சார்ந்ததாகவும் தமிழ் சமுகம் புறக்கணிக்கப்படுவதும் வேதனைக்குரிய விடயமே. உங்கள் பதிலை எதிர் பார்க்கின்றேன்.//

உங்கள் குற்றச்சாட்டுக்களை நான் முற்றாக மறுக்கவில்லை விரைவில் எனது பதிலை ஒரு பதிவிடுகிறேன்.

Post a Comment