Tuesday 27 April 2010

இருந்த இடத்திலிருந்து இலகுவாக அதிகம் சம்பாதிக்க சில வழிகள்.

இன்று பலரும் எப்படி இலகுவாக அதிகம் உழைக்கலாம் என்று சிந்தித்துக் கொண்டிருக்கின்றனர். அவர்களுக்காகவே இலகுவாக இருந்த இடத்திலேயே இருந்து அதிகம் சம்பாதிக்கக் கூடிய சில வழிகளைத் தருகின்றேன். இது ஒரு நகைச்சுவைப் பதிவுபோல் இருந்தாலும் எல்லோரும் சிந்திக்க வேண்டிய பதிவு.

இதோ வழிகள்...

1. ஆசாமியாக மாறலாம்.....

இதன் மூலம் பல்வேறு வழிகள் மூலம் கோடி கோடியாய் சம்பாதிக்கலாம். எப்படி என்று சொல்ல வேண்டிய அவசியமில்லை இப்போ எல்லோருக்கும் தெரியும்தானே. பணம் சம்பாதிப்பது ஒருபுறமிருக்க ஆண்டவன் படைச்சான் என்கிட்ட கொடுத்தான் என்னை அனுபவி ராஜாண்ணு அனுப்பி வைத்தான் என்று நிறையவே அனுபவிக்கலாம்

2. வட்டிக்குக் கொடுக்கலாம்....

இன்று வட்டிக்குக் கொடுத்து உழைப்பது இருந்த இடத்திலிருந்த அதிகம் உழைக்கும் ஒரு தொழிலாகிவிட்டது. 100 க்கு 10 வீதம் மாதம் அறவிடுபவர்கள் ஒருபுறமிருக்க. வங்கிகள் வியாபார நிலையங்களுக்கு பக்கத்தில் இருக்கம் சிலர் அவசர பணத் தேவைகளுக்காக வட்டிக்குக் கொடுக்கின்றனர்.

ஒரு மணித்தியாலயத்துக்குள் அவர்களுக்கு பணத்தைக் கொடுக்க வேண்டும். வட்டியாக ஒரு இலட்சத்தக்கு இரண்டாயிரம் கொடுக்க வேண்டும்.

இது ஒரு புறமிருக்க சிலரோ ஏழைகளின் அவசரத் தேவைக்கு பணத்தைக் கொடுத்துவிட்டு அவர்களின் வீடு காணி போன்ற சொத்தக்களை அபகரிக்கின்றனர்.


3. அரசியல்வாதியாகலாம்......

இது அதிகம் சம்பாதிக்கின்ற ஒரு வழியாகும். பல வழிகளிலும் உழைக்க முடியும். ஒரு நிரந்தர கொள்கை இன்றி நமது சுகபோக வாழ்க்கைக்கு ஏற்றாற்போல் கொள்கைகளை அடிக்கடி மாற்றிக் கொள்ளலாம். ஏழைகளுக்கு வருகின்ற உதவிகளைக்கூட நாம் சுருட்டிக் கொள்ளலாம்.

அரசியல்வாதியாகி எப்படி உழைக்கலாம் என்று ஒரு தொடர் பதிவே எழுதலாம். வேண்டுமானால் பின்னர் பட்டியலிடுகிறேன்.

மக்களுக்காகவே சேவை செய்து வாழ்கின்ற அரசியல்வாதிகளும் இல்லாமல் இல்லை.

4. உயரதிகாரியாகலாம்....

இதன் மூலம் நாம் கடமையாற்றும் நிறுவனத்திலே இருக்கின்ற வேலை வாய்ப்புக்களை பணக்கார வர்க்கத்தினருக்கு பெருந்தொகை பணத்தை வாங்கிவிட்ட வேலைவாய்ப்புக்களை வழங்கலாம். கஸ்ரப்பட்டு படித்து நல்ல முறையிலே தகுதியோடு இருப்பவர்களைப் பற்றி எமக்கு கவலையில்லை பணமே எமக்கு முக்கியம்.

அதனைவிட நமக்கு கீழே வேலை செய்கின்ற பெண்களை நமது தேவைகளுக்கும் பயன் படுத்திக் கொள்ளலாம். (எல்லா அதிகாரிகளும் அப்படியல்ல)

5. வியாபாரியாகலாம்....

நிறைய வழிகளில் உழைக்க முடியும். பட்டியலிடாமல் ஒரு உதாரணத்தை மட்டும் செல்கிறேன்.

ஒரு மரக்கறி வியாபாரியால் செய்யப் படும் கொடுமை இது. எனது கிராமம் ஒரு விவசாயக் கிராமம். ஒரு கிலோ வெண்டிக்காய்க்கு வியாபாரியால் விவசாயிக்கு 15 ரூபா வழங்கப் படுகிறது. ஆனால் அந்த வியாபாரி சந்தையில் ஒரு கிலோ 50 ரூபாவுக்கு விற்பனை செய்கின்றார்.

இரவு பகல் கஸ்ரப் பட்ட விவசாயிக்கு 15 ரூபா ஓரிரு மணித்தியாலத்துக்குள் வியாபாரிக்கு 35 ரூபா விவசாயிக்கு வரும் 15 ரூபாவில் உரம் நிரிறைத்தல் ஏனைய செலவுகள் போனால் 5 ரூபா கூட மிஞ்சப் போவதில்லை.

6. மந்திரவாதியாகலாம்.....

மந்திர மாய ஜாலங்கள் மூலம் நிறையவே சம்பாதிக்கலாம். சூனியம் மூலம் அதிகம் உழைத்தக் கொண்டிருக்கின்றனர். ஒருத்தருக்கு நான் சூனியம் செய்ய வேண்டும் என்றால் ஒரு மந்திர வாதியை பிடித்து செய்யலாம். மந்திரவாதியோ என்னிடம் ஒரு தொகைப் பணத்தை வாங்குவார்.

நான் கூனியம் செய்தவர் சூனியம் பலிக்க ஆரம்பித்ததும் உடனே அந்த மந்திரவாதியைத்தான் நாடுவார் சூனியம் எடுப்பதற்கு. மந்திரவாதி அவரிடம் ஒரு தொகைப் பணத்தை வாங்கிவிட்டு சூனியத்தை எடுத்து வீடுவார். மீண்டும் நான் சூனியம் செய்ய மந்திரவாதியிடம் செல்வேன் இப்படி ஒரு சக்கரமாக தொடரும்.


7. பிச்சைக்காரனாகலாம்...

இதன் மூலம் பல பொய்களைச் சொல்லி மக்களை ஏமாற்றி பிழைப்பு நடாத்துவதோடு உண்மையான பிச்சைக்காரர்களின் பிழைப்பையும் கெடுக்க முடியும.

இன்னும் பல வழிகளைச்சொல்லிக் கொண்டே போகலாம்...


இவை அனைத்தும் உண்மையாகவே நடக்கும் விடயங்கள்.... நாம் சிந்திக்கவேண்டிய விடயங்கள்.
read more...

Saturday 24 April 2010

யாருக்காகக் காத்திருக்கிறேன்?...


காத்திருப்பின்
அருமை
இன்றுதான்
தெரிகிறது
உன்னோடு
வரும் - உன்
தோழி வரவில்லையே.....

உன்னோடு - இன்று
நான் பேசிய
ஒரு சில
நிமிடங்கள்- பல
வருடங்கள்
பேசியதுபோல்
வாழ்க்கையே
வெறுத்துவிட்டது - என்
அருகில் - உன்
தோழி இல்லை
என்பதனால்....

இனிமேலாவது -நீ
வரவில்லை
என்றாலும் - உன்
தோழியை
அனுப்பிவிடு
அவளுக்காக
காத்திருக்கிறேன்.....

*************************************

நேற்று - நீ
சொன்னாய் - என்
இதயம்
பிடித்திருக்கிறது
என்று - இன்றுதான்
புரிந்து கொண்டேன்
நேற்றைய
என் கவிதையின்
தலைப்பு
இதயம் என்று....
read more...

Friday 23 April 2010

கருணா அம்மான் பிரதி அமைச்சராகிவிட்டார்.....

பிரதி அமைச்சர்கள் விபரம்

Salinda Dissanayake ==  PlantationIndustries Deputy Minister

Dilan Perera  ==  Public Administration and Home Affairs Deputy Minister

Susantha Puchinilame  ==Fisheries and Aquatic Resources Deputy Minister

Lakshman Yapa Abeywardena == Economic Development Deputy Minister

Chandrasiri Gajadeera ==  Finance and Planning Deputy Minister

Jagath Pushpakumara == Agriculture Deputy Minister

T.B. Ekanayaka  ==  Education Deputy Minister


Mahinda Amaraweera ==  Health Deputy Minister


Rohitha Abeygunawardena  == Ports and Aviation Deputy Minister


S.M. Chandrasena == Irrigation and Water Resources Management Deputy Minister


Gunaratne Weerakoon ==   National Heritage and Cultural Affairs Deputy Minister

Mervyn Silva == Mass Media and Information Deputy Minister

Pandu Bandaranaike == Indigenous Medicine Deputy Minister

Jayaratne Herath == Industry and Commerce Deputy Minister


Dayashritha Tissera ==  Ports and Aviation Deputy Minister

Duminda Dissanayaka ==  Posts and Telecommunication Deputy Minister


Ranjith Siyambalapititya == Economic Development Deputy Minister


Lasantha Alagiyawanna  == Construction, Engineering Services, Housing and Common Amenities Deputy Minister


Rohana Dissanayake == Transport Deputy Minister


H.R. Mithrapala ==  Livestock Development Deputy Minister


Nirmala Kotelawala == Highways Deputy Minister


Premalal Jayasekara ==  Power and Energy Deputy Minister


Geethanjana Gunawardena ==  External Affairs Deputy Minister


Vinayagamoorthy Muralitharan ==  Resettlement Deputy Minister


Indika Bandaranaike ==  Local Government and Provincial Councils Deputy Minister


Muthu Sivalingam ==  Economic Development Deputy Minister


Siripala Gamlath ==  Lands and Land Development Deputy Minister


W.B. Ekanayake  == Disaster Management Deputy Minister


Chandrasiri Suriyarachchi ==  Social Services Deputy Minister


Neomal Perera ==  Co-operative and Internal Trade Deputy Minister


Sarath Gunawardena  == State Resources and Enterprise Development Deputy Minister


Nandimithra Ekanayake ==  Higher Education Deputy Minister


Nirupama Rajapaksa ==  Water Supply and Drainage Deputy Minister


Lalith Dissanayaka == Technology and Research Deputy Minister


Sarana Gunawardena ==  Petroleum Industries Deputy Minister


Reginold Cooray  == Justice Deputy Minister


Vijithamuni Zoysa ==  Rehabilitation and Prison Reforms Deputy Minister
  M.L.A.M. Hisbullah ==  Child Development and Women’s Affairs Deputy Minister


Weerakumara Dissanayaka == Traditional Industries and Small Enterprise Development Deputy Minister
read more...

இலங்கையின் பதிய அமைச்சர்கள் விபரம்

இலங்கையில் நடைபெற்ற பொதுத்தேர்தலை தொடந்து 37 அமைச்சரவை அமைச்சர்களும் 39 பிரதி அமைச்சரவை அமைச்சர்களும் ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்றுள்ளனர்.

மஹிந்த ராஜபக்ஷ ==>> பாதுகாப்பு,நிதி,துறைமுக மற்றும் நெடுஞ்சாலைதுறை

மைத்திரிபால சிறிசேன ==>>> சுகாதார அமைச்சர்

ஜி.எல்.பீரிஸ் ==>> வெளிவிவகாரத்துறை அமைச்சர்

சுசில் பிரேம் ஜெயந்த ==>> பெற்றோல் மற்றும் கனியவளத்துறை அமைச்சர்

தினேஷ் குணவர்த்தன ==>>  நீர்பாசன மற்றும் வடிகால்துறை அமைச்சர்

ரிஷாத் பதியுதீன் ==>> தொழில் அபிவிருத்தி அமைச்சர்

ஏ.எல்.எம்.அதாவுல்லா ==>> உள்ளூராட்சி மற்றும் மாகாணசபை அமைச்சர்

சம்பிக்க ரணவக்க ==>> மின்சாரத்துறை அமைச்சர்

விமல் வீரவன்ஸ ==>> வீடமைப்புதிட்ட மற்றும் மக்கள் நலன்புரி அமைச்சு

சுமேத ஜெயசிங்க ==>> பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர்

குமார வெல்ஹம ==>>  போக்குவரத்துத்துறை அமைச்சர்

மஹிந்தயாப்பா அபயவர்த்தன ==>> விவசாயத்துறை அமைச்சர்.

சி.பி.ரத்னாயக்க ==>> விளையாட்டுத்துறை அமைச்சர்.

ஜனக்க பண்டார தென்னக்கோன் ==>> நில மற்றும் நில அபிவிருத்தித்துறை அமைச்சர்

பீலிக்ஸ் பெரேரா ==>> சமூகவேவை மற்றும் சமூகநலத்துறை அமைச்சர்.

பஷில் ராஜபக்‌ஷ ==>> பொருளாதார அபிவிருத்தி அமைச்சர்.

பந்துல குணவர்த்தன ==>> கல்வி அமைச்சர்
ரட்ணசிறி விக்ரமநாயக்க ==>> அரச முகாமைத்துவ மற்றும் சீர்திருத்தல் அமைச்சு.
நிமல் சிறிபாலடி சில்வா ==>> நீர்பாசன மற்றும் வடிகால்துறை அமைச்சு.

ஏ.எச்.எம்.பௌசி ==>> அனர்த்த முகாமைத்துவ அமைச்சர்.

டளஸ் அழக பெரும ==>> இளைஞர் விவகார மற்றும் தொழில்வாய்ப்பு அமைச்சர்

டி.எம்.ஜெயரட்ன ==>> பௌத்த மற்றும் சமய விவகாரத்துறை அமைச்சர்

டி.இ.டபள்யூ.குணசேகர ==>> புணருதாரண மற்றும் சிறைச்சாலை அமைச்சர்

ரஜித சேனரத்ன ==>> மீன்பிடிவளத்துறை அமைச்சர்

அதவுத செனவிரத்ன ==>> நீதி அமைச்சர்

பியசேன ஹமஹே ==>> தேசிய வைத்திய அமைச்சர்

எஸ்.பி.நாவீன ==>> தேசிய மொழி அமைச்சர்

ஜோன்ஸ்டன் பெர்னாந்து ==>> கூட்டுறவு அமைச்சர்

காமினி லொக்குகே ==>> தொழிலாளர் உறவு மற்றும் பாதுகாப்பு அமைச்சர்

மில்ரோய் பெர்னாந்து ==>> மீள்குடியமர்வு அமைச்சர்

ஜீவன் குமாரதுங்க ==>> தபால் மற்றும் தொலைத்தொர்பு அமைச்சர்

பவித்ரா வன்னியாரச்சி ==>> தேசிய விழாக்கள் மற்றும் காலாச்சார அமைச்சர்

அநுரபிரிய தர்ஷன யாப்பா ==>> சுற்றுப்புரச்சூழல் அமைச்சர்

திஸ்ஸ ஹரலியத்த ==>> சமூக அபிவிருத்தி மற்றும் பெண்கள் விவகார அமைச்சர்

பி.தயாரத்ன ==>> வர்த்தக அபிவிருத்தி அமைச்சர்

டக்ளஸ் தேவானந்தா ==>>பாரம்பரிய தொழில்சார் மற்றும் சிறி உட்கட்டமைப்பு அமைச்சர்

டபள்யூ.டி.ஜே.செனவிரத்ன ==>>மக்கள் மற்றும் உறைவிட விவகார அமைச்சர்

மஹிந்த சமரசிங்க ==>> பயிர்ச்செய்கை அமைச்சர்
read more...

கண்களால் கைது செய்யப் பட்டேன்

ஏன் இந்தக்
கவிஞர்கள் எல்லாம்
பெண்களின் கண்களை
பற்றி பாடுகிறார் என்று
யோசித்த நாட்கள் பல
இன்று நானே - உன்
கண்களை பற்றி
கவிதை எழுதுகிறேன் - உன்
கண்களினால்தான் - நான்
வாழ்ந்துகொண்டிருக்கிறேன்

பெண்களின் கண்களில்
இத்தனை சக்தி
இருப்பதை இன்றுதான்
உணர்கிறேன்
உன்னை காதலிப்பதால்

இந்த உலகத்தில்கூட
ஒரு பெண்ணின்
கடைக்கண் பார்வை
பட்டு இருக்கிறது
போலும் இவ்வளவு
வேகமாக சுற்றுகின்றதே...

நான் நினைக்கிறேன்
இரவுகள் கூட
இருளாக இருப்பது - நீ
தூங்கி விடுவதால்
உன் பார்வை
படாததனால்தானோஎன்னவோ...

எனக்கு ஒருஆசை
இருக்கிறதுஉன்னை
பாலை வனத்துக்கு
அழைத்து செல்லவேண்டும்
பாலைவனம்கூட
பசுமையாகிவிடுமல்லவா...
read more...

Thursday 22 April 2010

விதவையின் கண்ணீரில்

இன்று பெண் தலைமை தாங்கும் குடும்பம் அதிகமாக இருக்கின்றது. அதிலும் கிழக்கு மாகானத்திலேதான் பெண் தலைமை  தாங்கும் குடும்பம் அதிகமாக இருக்கின்றது. இதற்குக் முக்கிய காரணம் நாட்டில் நீண்ட காலமாக இடம்பெற்ற யுத்தமேதான்.

கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரை கணவனை இழந்த, விதவைகள் அதிகம் காணப்படும் ஒரு பிரதேசமாகும். யுத்தத்தின் மூலம் உயிரிழந்தவர்கள், காணாமல் போனோர், கடத்தப்பட்டோர், இனம் தெரியாதோரால் சுடப்பட்டவர் என்று பட்டியல் நீண்டு கொண்டே செல்லும்.

இந்த விதவைகளைப் பொறுத்தவரை. பல்வேறுபட்ட கஷ்டங்களை எதிர் நோக்கி  வருகின்றனர். அதிகமாக விதவைகளைப் பொறுத்தவரை பணக்கார வர்க்கத்தை செர்ந்தவர்களைவிட மிகவும் வறிய குடும்பங்களை சேர்ந்தவர்களே அதிகம்.

இவர்களேதான் தனது குடும்பத்தை தலைமை தாங்கி வழி நடத்துவதோடு. உழைத்து தனது குடும்பத்தையும் காப்பாற்ற வேண்டிய பொறுப்பில் சொல்லொண்ணா துயரங்களை எதிர் நோக்கி வருகின்றனர்.

அதிகமான விதவைகளுக்கு நிரந்தர வருமானம் என்பது இல்லை. கூலித் தொழில் செய்து வந்தாலும் குடும்ப செலவை கவனிப்பதா தனது பிள்ளைகளைப் படிப்பிப்பதா என்ற பிரச்சினை இருக்கின்றது.

நன்றாக படிக்கின்ற பல பிள்ளைகள் படிக்க வசதியின்றி படிப்பை இடை நடுவில் கைவிட்டிருக்கின்றார்கள். ஆனாலும் சிலர் இரவு பகல் உழைத்து பல நாள் பட்டினி இருந்து தமது பிள்ளைகளை நல்ல நிலைக்கு கொண்டு வருகின்றனர். இது எல்லா தாயாலும் முடியாத  காரியமே.

கஸ்ரப் பட்டு தனது பிள்ளைகளை படிப்பித்து நல்ல ஒரு நிலைக்கு கொண்டு வந்தால் வேளை வாய்ப்பு இல்லை வேளை பெறுவதென்றால். படிப்புக்கோ, பட்டத்துக்கோ முன்னுரிமை இல்லை. பணமுள்ளவனுக்கும், பணத்துக்குமே முன்னுரிமை கொடுக்கப் படுகின்றது. இந்த நிலை மாற்றப்பட வேண்டும்.

இவர்கல் வாழ்க்கையில் விடிவு கிடைக்க வேண்டும். இவர்கள் சந்தோசப் படுகின்ற  நாட்கள் மிக மிகக் குறை வென்றுதான் சொல்ல வேண்டும். இவர்களுக்காக அரசாங்கம் பல திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் ஒவ்வொரு பொறுப்புள்ள அதிகாரியும் இவர்கள் நலனில் அக்கறை கொள்ள வேண்டும்.

நானும் பத்து வயது முதல் தந்தையை இழந்து தாயின் அரவணைப்பில் பல்வேறு கஸ்ரங்களுக்கு மத்தியில் வாழ்ந்தவன் என்பதனால் ஒவ்வொரு தாயின் வேதனையையுன் அறிந்தவன்.
read more...

Wednesday 21 April 2010

பெண்கள் ஆண்களை தங்கள் பின்னால் அலைய வைப்பது எப்படி சில ஆலோசனைகள்.

ஆண்களுக்குத்தான் அதிகமாக ஆலோசனைகள் வழங்குகிறேன் ஆனால் பெண்களுக்கும் நல்ல ஆலோசனை தரவேண்டும் என்று பல பெண்கள் வேண்டிக்கொண்டனர். சில நன்பிகளோ என்னோடு பேசுவதே இல்லை அவர்களுக்காகவே இந்த ஆலோசனைகள்.

இன்று சில (பல) பெண்கள் ( பெண்கள் என்னை திட்டவேண்டாம் எல்லோரும் இல்லை என்று சொல்ல்கிறேன்). ஆண்களை ஏதோ ஒரு வகையில் தன் பின்னால் அலைய வைக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். சில அப்பாவி ஆண்கள் நாய் போல் அலைந்து. கடைசியில் எல்லாம் இழந்து, எல்லாம் புரிந்து..... என்னவோ எல்லாம் நடக்குது...

சில பெண்கள் தங்கள் நண்பிகளிடம் கேட்டுக்கொள்வார்கள் "அடப்பாவி எப்படிடி இப்படி உன்னாலமட்டும் இப்படி ஆண்களை உன் பின்னால அலைய வைக்க முடியும் என்று" அது பெரிய வேலை இல்லை தங்களால் முடியவில்லையே என்று கவலைப்படுபவர்களுக்காகவே இந்த ஆலோசனைகள்.

பெண்கள் ஆண்களை தன் பின்னால் அலைய வைப்பது எப்படி

01 . ஆண்களைக் காணும்போது கடைக்கண் பார்வை பார்த்துவிட்டு ஒரு புன்னகை செய்தால் போதும்.

02. ஆண்கள் இருக்கும் அல்லது ஆண்கள் அதிகம் இருக்கின்ற இடங்களில் அடிக்கடி நடமாடுங்கள். அங்கே இருக்கின்ற ஆண்களைத்தான் நீங்கள் பார்க்க வருவதுபோல் பாவனை செயுங்கள்.

03 . அடிக்கடி வாகனங்களில் பயணம் செய்பவர் நீங்களாக இருந்தால் வாகனத்தில் வருகின்ற ஆண்களின் முகத்தை ஒரு தடவை பார்த்து சிறிய புன்னகை... அவ்வளவுதான் உங்களை பின்தொடர்வோர் அதிகமாகிவிடுவார்கள்.

04 . நீங்கள் இணையத்தில் அரட்டையடிப்பவரா? அப்படியாயின் ஆண் அரட்டை நண்பர்களுக்கு ஒரு ஹாய் (hi ) சொன்னால்போதும் உங்களை ஒரு தேவதையாக நினைத்துவிடுவார்கள்.

05 . நீங்கள் தமிழ் கலாசார ஆடைகளை தவிர்த்து நவீன நாகரிக அரை, குறை ஆடைகளோடு பவனி வாருங்கள் உங்கள் பின்னால் நாயும் அலையும்.

06 . எப்பவும் உங்கள் கையில் கைத்தொலைபேசி இருக்கட்டும். ஆண்கள் உங்கள் தொலைபேசி இலக்கத்தை கேட்கும்போது கொடுத்துவிடுங்கள். நீங்கள் அடிக்கடி ஆண்களின் தொலைபேசி இலக்கங்களுக்கு ஒரு missed call (தவறவிட்ட அழைப்பு) பண்ணினால் போதும். ஆண்கள் அழைப்பை எடுத்தால் நீங்கள் பேசவேண்டாம் அல்லது ஹாய் மட்டும் சொல்லிவிட்டு துண்டித்து விடுங்கள்.

07 . ஆண் நண்பர்களோடு பேசும்போது நெருக்கமாக காதலிப்பதுபோல் பேசிக்கொள்ளுங்க. எல்லா நண்பர்களோடும் இப்படியே பழகுங்கள் அவர்கள் உங்களை காதலிக்க ஆரம்பித்தால் நீங்கள் காதலிக்கவில்லை என்றாலும் நீங்கள் காதலிக்கவில்லை என்ற விடயத்தை தெரியப்படுத்த வேண்டாம். வழமையாக நெருக்கமாக பழகுவது போன்றே பழகுங்கள்.

08. உங்களிடம் பலர் காதலை வெளிப்படுத்தி உங்கள் சம்மதம் கேட்டிருக்கலாம், கேட்கலாம் அப்போது முடியாது என்று சொல்லவேண்டாம். பின்னர் சொல்கிறேன் என்று கேட்பவர்கள் எல்லோரிடமும் சொல்லிவிடுங்கள்.

09. உங்களோடு சில பெண் நண்பிகளை வைத்துக் கொள்ளுங்கள். அவர்கள் உங்கள் கதை கேட்டுத்தான் செயற்படுவது போன்று காட்டிக்கொள்ளுங்கள். இந்த நண்பிகளையும் உங்கள் ஆண் நண்பர்களுக்கு அறிமுகம் செய்யுங்கள். ஆனால் அந்த நண்பிகளை உங்கள் ஆண் நண்பர்களோடு தனிப்பட்ட தொடர்பு வைத்துக்கொள்ள விடவேண்டாம்.

10 . இதுதான் முக்கியமானது.... எங்களைப் போன்றவர்களிடம் இது மாத்திரமல்ல எதனை செய்தாலும் நாங்கள் பெண்கள் பின்னால் அலையமாட்டோம். ஆனால் பெண்களைத்தான் எங்கள் பின்னால் அலைய வைப்போம். எங்களைப் போன்றவர்களிடம் உங்கள் வேலையே காட்டி நேரத்தை வீணடித்து எங்கள் பின்னால் நீங்கள் அலைவதைத் தவிர்த்துக்கொள்ளுங்கள்.
read more...

Tuesday 20 April 2010

திருமணத்தின் பின் ஒரே பெண்ணைப் பார்த்தபடி அலுப்படிக்காமல் மெயின்டெய்ன் பண்ணுவது எப்படி?

திருமணத்தின் பின் ஒரே பெண்ணைப்பார்த்தபடி அலுப்படிக்காமல் மெயின்டெய்ன் பண்ணுவது எப்படி ? என்று  பல நண்பர்கள் தலையைப் பிய்த்துக் கொண்டிருக்கின்றனர் அவர்களுக்கான ஆலோசனைகள் மீண்டும் இடுகையாக வருகிறது...

1. மனைவியை அடிக்கடி அழகுக்கலை நிலையத்துக்கு அனுப்பவேண்டும்.

2. மனைவி பாட்டியானாலும் நாகரிக ஆடைகளை எப்பொழுதும் அணியவேண்டும். உதாரணமாக தொடை மற்றும் ஏனைய கண்ணுக்குகுளிர்ச்சியைத் தரக்கூடிய, உடற்பாகங்களை வேளிக்காட்டக்கூடிய ஆடைகளை அணிய வேண்டும்.

3. நீங்கள் அதிகம் விரும்பி ரசிக்கின்ற நடிகை நடித்து புதிதாக வெளிவருகின்ற படங்களிலே அந்த நடிகை எப்படி கவர்ச்சி காட்டி நடித்திருக்கின்றாரோ அதேபோல் உங்கள் மனைவியையும் கவர்ச்சியாக உடை மற்றும் ஏனைய நாகரிகச் செயற்பாடுகளிலும் ஈடுபடச் செய்தல்.

4. அடிக்கடி உங்கள் கணனிக்கு மாற்றுகின்ற வோல் பேபர்களில் அந்த நடிகைகள் எப்படி இருக்கிறார்களோ அதேபோல் உங்கள் மனைவியையும் போட்டோ எடுத்து உங்கள் கணனிக்கு இந்த போட்டோக்களை மாற்றிக்கொள்ளலாம்.

5. பாட்டிமாரை (அறுபது வயதுக்கு மேற்பட்டவர்களை) நண்பிகளாக வைத்துக்கொள்வதோடு அடிக்கடி அவர்களைச் சந்தித்து பல மணி நேரம் பொழுதைக்கழிக்க வேண்டும். (எந்த ஒரு இளம் நண்பிகளும் இருக்கக்கூடாது.)

6. தன்னைவிட இருபது வயது குறைந்த பெண்ணை திருமனை செய்யலாம்.(மனைவியை நீங்கள் எப்போதும் பார்த்துக்கொண்டு இருக்கலாம் மனைவி உங்களைவிட வேறு ஒருவரைப் பார்த்தால் அதற்கு நாங்கள் பொறுப்பல்ல)

7. நடிகைகளைப்பற்றி பேசுகின்ற அல்லது நடிகைகளின் அந்தமாதிரிப்படங்களின் களஞ்சியமாக இருக்கின்ற வலைப்பதிவுகளுக்கு போவதைத் தவிர்த்து நல்ல வலைப்பதிவுகளுக்கு அடிக்கடி போய் வரலாம்.

8. தினமும் பின்னேரங்களில்  பெண்கள் அதிகமாக நடமாடும் Majestic City , போன்ற இடங்களுக்கு சென்று பெண்களோடு சேட்டை செய்வதனைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும். வேண்டுமானால் முதியோர் இல்லங்களுக்குப் போய் வரலாம்.

9. உங்கள் அலுவலகத்தில் இளம் பெண்கள் ஆண்களைப்போல் ஆடை அணியவேண்டும்என்ற கொள்கையினைக்கொண்டு வரலாம். (இதன் மூலம் பெண்களை பார்ப்பதனால் உங்களுக்கு வரும் பெண்கள் மீதான மோகத்தினைத் தவிர்த்துக் கொள்ளலாம்.)

10. மனைவிமீது வெறுப்பு வரும்போது வேறொரு மனைவியை மாற்றிக்கொள்ளலாம். (இதனால் மனைவிமீது வெறுப்பின்றி புது மனைவியோடு சந்தோசமாக இருக்கலாம் இங்கு எத்தனை மனைவி என்பது முக்கியமானதல்ல மனைவியோடு சந்தோசமாக இருப்பதே முக்கியத்துவப்படுத்தப்படுகின்றது.)

இதனைக் கடைப்பிடித்தால் பெண்கள் மீதான உங்கள் மோகம் குறைவடைந்து உங்கள் மனைவிமீது அதிகம் அன்பு, ஆசை வரும்.

இது போன்ற ஆலோசனைகள் தேவைப்படுவோர் எம்மைத் தொடர்பு கொள்ளவும்.
தொடர்ந்து நண்பர்களுக்கான ஆலோசனைகள் வரும்...
read more...

Friday 16 April 2010

இதயத் திருடி

என் விரல்களுக்கு

ஏற்பட்ட அவசரத்தில்
தொலைபேசியில்
இலக்கங்களை
தவறாக
அழுத்தியதால் -என்
விரல்களை
திடடினேன் -அன்று
இன்று என்
விரல்களுக்கு -நன்றி
சொல்கிறேன் -அந்த
அழைப்பில்
கிடைத்தவள் - நீ
என்பதனால்
உன் முகம்
தெரியாதவன் -நான்
உன் அகம்
தெரிந்தவன் -நான்
உன்னோடு
பேசுவது -என்
தொலைபேசிக்கே
பொறாமை வந்துவிட்டது போல
அடிக்கடி இயங்க
மறுக்கின்றது.-அது
நினைக்கவில்லை
இப்போ -என்
இதயத்தில் -நீ
இருப்பதை.

இதயத் திருடி
read more...

Thursday 15 April 2010

சிந்தனைச் சிதறல்கள்...

கற்பனை

என்றாலே - என்ன
என்று
தெரியாமல்
இருந்தேன் - இன்று
எனக்கு
கற்பனைகளே
அதிகமாகிவிட்டது
உன்னைப்பற்றி
மட்டுமே.....


*****************************

உறங்கிக்கிடந்த -என்
கற்பனைகளை
தட்டி எழுப்பி
சிறகடித்து
பறக்கவிட்டு
சின்னாபின்னமாய்
சிதறடித்தாய் -இன்று
என்னைப்பற்றி
சிந்திக்காமல்
இருப்பதேன்...
read more...

Wednesday 14 April 2010

இதயம்

எனது ஆரம்பகாலக் கிறுக்கல்கள் மீண்டும்  இடுகையாக
என் இதயச்

சுமைகளை
இறக்கி வைக்க
நினைத்தேன் -அதுதான்
தந்துவிட்டேன் - என்
இதயத்தை
உன்னிடமே....

******************************

என் இதயம்

உன்னிடமே
இருக்கட்டும்
அதுதான்
பாதுகாப்பானது
தந்தால் - அதை
வேறு யாருக்காவது
கொடுத்து
விடுவேன்..... - அது
உன் தங்கையாகக்
கூட இருக்கலாம்

********************************

என்னிடம்

இருக்கும் - உன்
இதயம்
என்னோடு
சண்டை
செய்கிறது
உன்னிடம்
வருவதற்கு - என்
இதயம்
உன்னிடம்
இருப்பதனால்...
read more...

Saturday 3 April 2010

மட்டக்களப்பில் பல இடங்களில் நவலோகா வைத்திய சாலையின் இலவச மருத்துவ முகாம்.

read more...

Friday 2 April 2010

நான் ரெடி நீங்க ரெடியா? வாங்க பார்க்கலாம்

வலைப்பதிவுகளைப் பார்த்து வந்தபோது ஒரு  வலைப்பதிவில் இருந்த இடுகை  ஒன்றை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளவேண்டும் என்ற எண்ணம் வந்தது.

இலங்கையிலே தேர்தல் பிரச்சாரங்கள் அதிகரித்திருக்கும் இந்த நிலையில் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தேர்தல் பிரசார மேடைகளிலே தமிழ் தேசிய கூட்டமைப்பினரால்தான் தமிழ் மக்கள்  இன்று படு குழியில் தள்ளப் பட்டிருக்கின்றார்கள் என்று குற்றம் சாட்டி வருகின்றார்.

ஆனால் மறு புறத்தில் தேர்தல் மேடைகளில் வீர வசனம் பேசிக்கொண்டிருக்கின்றனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பினர்.

உங்கள் கருத்துக்களுக்காக அந்த பதிவை தருகிறேன்.
தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் ஒவ்வொரு கட்சியும் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றன. அண்மையில் பெரிய கல்லாற்றில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் ஒன்று நடை பெற்றது. இதனை பெரிய கல்லாறு சங்கங்கள், மன்றங்கள், பொது அமைப்புக்கள் ஏற்பாடு செய்திருந்தன.

இப் பிரச்சாரக் கூட்டத்துக்கு கிழக்கு மாகான முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் . தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் சின்னா மாஸ்ரர். கிழக்கு மாகான சபை உறுப்பினர் பூ. பிரசாந்தன், மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை தவிசாளர் சிவகுணம், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் வேட்பாளர்கள் வீ. ஆர். மகேந்திரன், எஸ். ஆர். மணிவண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பெரிய கல்லாற்றை பிறப்பிடமாகக் கொண்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா (நவம்) தமிழரசுக் கட்சியின் தலைமை வேட்பாளராகப் போட்டி இடுகின்றார் என்பது இங்கே குரிப்பிடப்படப் பட வேண்டிய விடயம் . இருந்த போதிலும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் இந்த பிரச்சாரக் கூட்டத்துக்கு பெருமக்ளவான பொது மக்கள் கலந்து கொண்டனர். குட்டமைப்பின் தலைமை வேட்பாளரது ஊரிலேயே கூட்டமைப்புக்கு ஆதரவு இல்லை என்பது இதன் முலம் அறியக் குடியதாக இருந்தது.

கிழக்கு மாகாணசபை முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அக் கூட்டத்திலே ஆற்றிய உரை அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் வீர வசனங்கள் பேசிப் பேசியே தமிழ் மக்களை உசுப்பேத்தி தாங்கள் சுகபோக வாழ்க்கை வாழ்வதற்காக தமிழ் மக்களை ஏமாற்றி வருகின்றனர். அதிலும் குறிப்பாக மட்டக்களப்பு தமிழ் மக்களை ஏமாற்றி கிழக்கு மாகான அபிவிருத்தியிலே தடையாக இருக்கின்றவர்கள் இந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைமைத்துவங்களே

இன்று தமிழர்களை படு குழியில் தள்ளியவர்களும் இந்த குட்டமைப்பினரே. மீண்டும் மக்களை ஏமாற்றி தாம் சுகபோக வாழ்க்கை வாழ்வதற்காக மக்களிடம் வீர வசனம் பேசிக்கொண்டிருக்கின்றார்கள் மக்கள் இவர்களின் வார்த்தை ஜாலங்களை நம்பிவிடக் கூடாது. தமிழர்கள் அதிலும் கிழக்கு மாகான தமிழர்கள் சிந்தித்து செயற்பட வேண்டிய காலமிது.

இன்று கிழக்கு மாகாணத்திலே ஒரு தலைமை உருவாகி இருக்கின்றது. கிழக்கு மாகான சபை மூலம் எமது பிரதேசங்கள் அபிவிருத்தி செய்யப்படுகின்றன எமது மக்கள் நிம்மதியான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். கிழக்கு மாகான மக்களின் நெருப்பிலே குளிர் காய நினைக்கும் வடக்குத் தலைமைகள் கிழக்கு மாகான சபையை ஏற்றுக் கொள்ளவில்லை கிழக்கு மாகான சபையினையும் இல்லாது ஒழிப்பதற்கான முயற்சிகளிலே ஈடுபட்டு வருகின்றனர்.

இன்று அதிகம் விதவைகளை, பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்கள் அதிகம் உள்ள மாவட்டம் மட்டக்களப்பு இந்த நிலை எதனால் வந்தது? இதற்கு யார் காரணம்? இதற்கு முழுக் காரணமுமே இந்த கூட்டமைப்பினரும் வடக்கு தலமைகளுமே.

மாற்றுக் கருத்துடையோர்களை கொலை செய்யக் காரணமாக இருந்தவர்களும் இவர்களே. தமிழ் வீரம் பேசிப் பேசியே மட்டக்களப்பு மக்களை பலிக்கடாவாக்கும் இந்த கூட்டமைப்பினர் வடக்கு மக்களுக்காக மட்டுமே குரல் கொடுக்கின்றனர். மட்டக்களப்பு மக்கள் குடும்பம், குடும்பமாக சுடப் படுகின்றபோது குரல் கொடுத்தார்களா?

கிழக்கிலே ஒரு தலைமைத்துவம் உருவாக வேண்டும் புறக்கணிக்கப்படும் கிழக்கு மாகாணம் அபிவிருத்தி செய்யப்படவேண்டும் என்று நாம் புலிகள் அமைப்பில் இருந்து பிரிந்து வந்த போது வன்னிப் புலிகளால் படைஎடுக்கப்பட்டு எமது இளைஞர்கள் பலர் கொலை செய்யப் பட்டபோது கொலைகளை நிறுத்தி இருக்கலாம்தானே.

தமிழர்களை படு குழியில் தள்ளியவர்கள் இந்த கூட்டமைப்பினரும் வன்னித் தலமைகளுமே. மீண்டும் மட்டக்களப்பு மக்களை பலிக்கடாவாக்கும் முயற்சியிலே கூட்டமைப்பின் தலைமை வேட்பாளரும் அவரோடு சார்ந்தவர்களும் ஈடுபட்டு வருகின்றனர். மக்கள் சிந்தித்து செயற்பட வேண்டிய காலமிது என்று பேசியதோடு தமிழர்களை படுகுழியில் தள்ளி தமிழர்களின் அழிவுக்கு காரணமானவர்கள் இந்த கூட்டமைப்பினரே இதை இல்லை என்று மறுப்பார்களானால் மட்டக்களப்பு மாவட்ட கூட்டமைப்பு தலைமை வேட்பாளர் தன்னுடன் நேரடியான பகிரங்க விவாதத்துக்கு வந்து தாங்கள் தமிழர்களின் அழிவுக்கு காரணம் இல்லை என்று சொல்லட்டும் என்று சவால் விடுத்தார்.
read more...