கவிஞர்கள் எல்லாம்
பெண்களின் கண்களை
பற்றி பாடுகிறார் என்று
யோசித்த நாட்கள் பல
இன்று நானே - உன்
கண்களை பற்றி
கவிதை எழுதுகிறேன் - உன்
கண்களினால்தான் - நான்
வாழ்ந்துகொண்டிருக்கிறேன்
பெண்களின் கண்களில்
இத்தனை சக்தி
இருப்பதை இன்றுதான்
உணர்கிறேன்
உன்னை காதலிப்பதால்
இந்த உலகத்தில்கூட
ஒரு பெண்ணின்
கடைக்கண் பார்வை
பட்டு இருக்கிறது
போலும் இவ்வளவு
வேகமாக சுற்றுகின்றதே...
நான் நினைக்கிறேன்
இரவுகள் கூட
இருளாக இருப்பது - நீ
தூங்கி விடுவதால்
உன் பார்வை
படாததனால்தானோஎன்னவோ...
எனக்கு ஒருஆசை
இருக்கிறதுஉன்னை
பாலை வனத்துக்கு
அழைத்து செல்லவேண்டும்
பாலைவனம்கூட
பசுமையாகிவிடுமல்லவா...
4 comments: on "கண்களால் கைது செய்யப் பட்டேன்"
சொன்னால் நம்ப முடியாததை...
அனுபவம் வந்தால் தான் நம்ப
முடியுமா?
கவிஞரே இத்தனை சக்தி பெண்களின்
கண்களுக்குண்டா?நல்ல ஆராட்சிக்
கவிஞர்தான் நீங்கள்
சந்ரு நல்ல கவிவரிகள் வரவர
முன்னேன்றம் தென்படுகிறது.....!!!!????
நன்றி
பாலை வனம் சற்றுப் பெரிய ஆசை தான் ......பார்வைக்கே இப்படி என்றால்..அவள் உங்களுக்கு கிடைக்கக் வாழ்த்துக்கள்.
சந்ருக்கும் காதல் வந்தாச்சு.
அடிக்கடி காதல் கவிதைகளோடு கலக்குறார்.இனி !
கண்களினால் கைதுசெய்யப்பட்ட "கண்"ணாளன். வாழ்த்துக்கள்.
Post a Comment