இலங்கையிலே தேர்தல் பிரச்சாரங்கள் அதிகரித்திருக்கும் இந்த நிலையில் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தேர்தல் பிரசார மேடைகளிலே தமிழ் தேசிய கூட்டமைப்பினரால்தான் தமிழ் மக்கள் இன்று படு குழியில் தள்ளப் பட்டிருக்கின்றார்கள் என்று குற்றம் சாட்டி வருகின்றார்.
ஆனால் மறு புறத்தில் தேர்தல் மேடைகளில் வீர வசனம் பேசிக்கொண்டிருக்கின்றனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பினர்.
உங்கள் கருத்துக்களுக்காக அந்த பதிவை தருகிறேன்.
இப் பிரச்சாரக் கூட்டத்துக்கு கிழக்கு மாகான முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் . தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் சின்னா மாஸ்ரர். கிழக்கு மாகான சபை உறுப்பினர் பூ. பிரசாந்தன், மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை தவிசாளர் சிவகுணம், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் வேட்பாளர்கள் வீ. ஆர். மகேந்திரன், எஸ். ஆர். மணிவண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பெரிய கல்லாற்றை பிறப்பிடமாகக் கொண்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா (நவம்) தமிழரசுக் கட்சியின் தலைமை வேட்பாளராகப் போட்டி இடுகின்றார் என்பது இங்கே குரிப்பிடப்படப் பட வேண்டிய விடயம் . இருந்த போதிலும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் இந்த பிரச்சாரக் கூட்டத்துக்கு பெருமக்ளவான பொது மக்கள் கலந்து கொண்டனர். குட்டமைப்பின் தலைமை வேட்பாளரது ஊரிலேயே கூட்டமைப்புக்கு ஆதரவு இல்லை என்பது இதன் முலம் அறியக் குடியதாக இருந்தது.
கிழக்கு மாகாணசபை முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அக் கூட்டத்திலே ஆற்றிய உரை அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் வீர வசனங்கள் பேசிப் பேசியே தமிழ் மக்களை உசுப்பேத்தி தாங்கள் சுகபோக வாழ்க்கை வாழ்வதற்காக தமிழ் மக்களை ஏமாற்றி வருகின்றனர். அதிலும் குறிப்பாக மட்டக்களப்பு தமிழ் மக்களை ஏமாற்றி கிழக்கு மாகான அபிவிருத்தியிலே தடையாக இருக்கின்றவர்கள் இந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைமைத்துவங்களே
இன்று தமிழர்களை படு குழியில் தள்ளியவர்களும் இந்த குட்டமைப்பினரே. மீண்டும் மக்களை ஏமாற்றி தாம் சுகபோக வாழ்க்கை வாழ்வதற்காக மக்களிடம் வீர வசனம் பேசிக்கொண்டிருக்கின்றார்கள் மக்கள் இவர்களின் வார்த்தை ஜாலங்களை நம்பிவிடக் கூடாது. தமிழர்கள் அதிலும் கிழக்கு மாகான தமிழர்கள் சிந்தித்து செயற்பட வேண்டிய காலமிது.
இன்று கிழக்கு மாகாணத்திலே ஒரு தலைமை உருவாகி இருக்கின்றது. கிழக்கு மாகான சபை மூலம் எமது பிரதேசங்கள் அபிவிருத்தி செய்யப்படுகின்றன எமது மக்கள் நிம்மதியான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். கிழக்கு மாகான மக்களின் நெருப்பிலே குளிர் காய நினைக்கும் வடக்குத் தலைமைகள் கிழக்கு மாகான சபையை ஏற்றுக் கொள்ளவில்லை கிழக்கு மாகான சபையினையும் இல்லாது ஒழிப்பதற்கான முயற்சிகளிலே ஈடுபட்டு வருகின்றனர்.
இன்று அதிகம் விதவைகளை, பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்கள் அதிகம் உள்ள மாவட்டம் மட்டக்களப்பு இந்த நிலை எதனால் வந்தது? இதற்கு யார் காரணம்? இதற்கு முழுக் காரணமுமே இந்த கூட்டமைப்பினரும் வடக்கு தலமைகளுமே.
மாற்றுக் கருத்துடையோர்களை கொலை செய்யக் காரணமாக இருந்தவர்களும் இவர்களே. தமிழ் வீரம் பேசிப் பேசியே மட்டக்களப்பு மக்களை பலிக்கடாவாக்கும் இந்த கூட்டமைப்பினர் வடக்கு மக்களுக்காக மட்டுமே குரல் கொடுக்கின்றனர். மட்டக்களப்பு மக்கள் குடும்பம், குடும்பமாக சுடப் படுகின்றபோது குரல் கொடுத்தார்களா?
கிழக்கிலே ஒரு தலைமைத்துவம் உருவாக வேண்டும் புறக்கணிக்கப்படும் கிழக்கு மாகாணம் அபிவிருத்தி செய்யப்படவேண்டும் என்று நாம் புலிகள் அமைப்பில் இருந்து பிரிந்து வந்த போது வன்னிப் புலிகளால் படைஎடுக்கப்பட்டு எமது இளைஞர்கள் பலர் கொலை செய்யப் பட்டபோது கொலைகளை நிறுத்தி இருக்கலாம்தானே.
தமிழர்களை படு குழியில் தள்ளியவர்கள் இந்த கூட்டமைப்பினரும் வன்னித் தலமைகளுமே. மீண்டும் மட்டக்களப்பு மக்களை பலிக்கடாவாக்கும் முயற்சியிலே கூட்டமைப்பின் தலைமை வேட்பாளரும் அவரோடு சார்ந்தவர்களும் ஈடுபட்டு வருகின்றனர். மக்கள் சிந்தித்து செயற்பட வேண்டிய காலமிது என்று பேசியதோடு தமிழர்களை படுகுழியில் தள்ளி தமிழர்களின் அழிவுக்கு காரணமானவர்கள் இந்த கூட்டமைப்பினரே இதை இல்லை என்று மறுப்பார்களானால் மட்டக்களப்பு மாவட்ட கூட்டமைப்பு தலைமை வேட்பாளர் தன்னுடன் நேரடியான பகிரங்க விவாதத்துக்கு வந்து தாங்கள் தமிழர்களின் அழிவுக்கு காரணம் இல்லை என்று சொல்லட்டும் என்று சவால் விடுத்தார்.
9 comments: on "நான் ரெடி நீங்க ரெடியா? வாங்க பார்க்கலாம்"
meenagathil unga padathai micoda partha nerame vilangichu neenga ippidi TMVP pakkam pesuveengannu.
nalla irungada.
இப்ப என்ன சொல்ல வர்றீங்க?
கிழக்கான் கிழக்கான் தான்.சுயமானம் இல்லாத துரோகிகள் தானே.
நீங்களும் இப்ப பிள்ளையான்டை ஆள் தானே இப்பிடித் தான் பேசுவீர்.
கொஞ்ச நாள் வலைப்பதிவு சண்டை.பிறகு தமிழ் எண்டு கத்தல்.இப்ப அரசியல்.
நடத்தும் உம்மடை நாடகங்களை.
எப்ப தேர்தலில் நிக்கப் போறீர்?
//பெயரில்லா கூறியது...
meenagathil unga padathai micoda partha nerame vilangichu neenga ippidi TMVP pakkam pesuveengannu.
nalla irungada.//
பெயரில்லாதவர்களுக்கு பதில் இல்லை.
//உண்மைத் தமிழன் கூறியது...
இப்ப என்ன சொல்ல வர்றீங்க?
கிழக்கான் கிழக்கான் தான்.சுயமானம் இல்லாத துரோகிகள் தானே.
நீங்களும் இப்ப பிள்ளையான்டை ஆள் தானே இப்பிடித் தான் பேசுவீர்.
கொஞ்ச நாள் வலைப்பதிவு சண்டை.பிறகு தமிழ் எண்டு கத்தல்.இப்ப அரசியல்.
நடத்தும் உம்மடை நாடகங்களை.
எப்ப தேர்தலில் நிக்கப் போறீர்?//
சில உண்மைகளை சொல்ல வருகிறேன். உண்மைகளை சொல்ல வந்தவர்களை மிரட்டி அடக்கி, ஒடுக்கி, துரோகி பட்டம் வழங்கும் ஒரு கூட்டத்தாலேதான் தமிழன் இந்த நிலைக்கு ஆளானான் என்பது உண்மை.
நான் எந்தவொரு இயக்கம் சார்ந்தவனோ, புலிகள் சார்ந்தவனோ இல்லை. புலிகளுக்கு ஆதரவாகவோ அல்லது வேறு இயக்கங்களுக்கு ஆதரவாகவோ எழுதியவன் அல்ல ஆனால் தமிழ் மக்கள் அடக்கி, ஒடுக்கப்படுகின்றபோது அந்த அடக்கு முறைகளை எழுதி இருக்கின்றேன்.
மடடக்களப்பானுக்கு தமிழ் பற்று இருக்கக் கூடாதா? தமிழனைப் பிறந்த ஒவ்வொருவனுக்கும் தமிழ் பற்று இருக்கவேண்டும். தமிழ் மொழி கொலை செய்யப்படக் கூடாது என்று விரும்புபவன் நான்.
இன்றைய அரசியலின் மட்டக்களப்பின் உண்மை நிலை என்ன? இந்தப் பதிவிலே தமிழ் தேசிய கூட்டமைப்பினரை குற்றம் சாட்டி எழுதப் பட்டிருக்கின்றது. நானும் இந்தக் குற்ற சாட்டுக்களை ஏற்றுக் கொள்கிறேன்.
முதலிலே தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் (T.M.V.P) கட்சியையும் அதன் செயற் பாடுகளையும் இங்கே குறிப்பிட்டாக வேண்டி இருக்கின்றது. கிழக்கு மாகாணம் புறக்கணிக்கப் படுகிறது, கிழக்கு மாகாணம் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும், கிழக்கு மாகாணத்துக்கு ஒரு தலைமை உருவாக வேண்டும் என்று புலிகள் அமைப்பிலிருந்து கருணா பிரிந்து வந்தபோது அவரோடு பிரிந்து வந்தவரே தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமாகிய சிவநேசதுரை சந்திரகாந்தன்.
பிரிந்து வந்தபோது கருணாவின் செயற்பாடுகள் பிரிந்து வந்ததன் நோக்கத்தை விட்டு விலகி வேறு திசை நோக்கி சென்றபோது கருணாவின் இந்த நடவடிக்கைகள் காரணமாக கருணாவில் இருந்து பிரிந்து (T.M.V.P) கட்சியை கட்டியெழுப்பி மாகாண சபை அமைத்து பல அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றது.
T.M.V.P ஒரு இயக்கம் என்கின்ற ஒரு நிலையை மாற்றி படித்தவர்கள், புத்திஜீவிகள் போன்றோர்கள் கட்சியிலே உள் வாங்கப்பட்டு இன்று ஒரு அரசியல் கட்சியாக கிழக்கு மாகாண சபை மூலம் மக்களுக்காக பல சேவைகளை செய்து வருகின்றது.
இந்தக் கட்சியை நீங்கள் வெறுப்பதற்குரிய காரணம் என்ன? கிழக்கிலே ஒரு கட்சி உருவாகக் கூடாதா? ஒரு கட்சிக்கு கிழக்கிலே தலைமைத்துவம் இருக்கக் கூடாதா? கிழக்கு மாகாண சபை மூலம் கிழக்கு மாகாண சபை அபிவிருத்தி செய்யப் படக் கூடாதா?
தமிழரசுக் கட்சி மட்டக்களப்பு தமிழர்களுக்காக என்ன செய்தது சொல்லுங்கள்? இரவோடு இரவாக பல குடும்பங்கள் சுடப்பட்டபோது ஒரு பாராளுமன்ற உறுப்பினராவது குரல் கொடுத்தாரா? எப்போதாவது மட்டக்களப்பு தமிழர்கள் கொலை செய்யப்பட்டபோது குரல் கொடுத்தார்களா?
பிரதேச வாதத்தை முற்றாக வெறுக்கின்றேன். ஆனால் பிரதேச வாதத்தையே அரசியல் துருப்பு சீட்டாக பயன் படுத்தும் கூட்டமைப்பு தலைவர்களே தமிழர்களின் இந்த நிலைக்கு காரணம்.
பிரதேச வாதம் தூண்டும் ஒரு பதிவு போல இருக்கு. பதிவு செய்த நீங்களும் அதை பேசியவர்களும் ஒன்னு புரியணும். கூட்டமைப்பின் தலைமை யார் எண்டு தெரியும் தானே? அவர் என்ன வடக்கத்தயனோ? அவர் கிழக்கு காரர் தானே. இல்ல திருமலை கிழக்கு எண்டு சொல்றியளோ? உங்கள் பதிவினை ரொம்ப நாளாய் படித்து வாறன். இப்படி ஒரு பதிவு தேவையா? அல்லது நீங்களும் அரசியலில் இறங்கி விட்டீர்களா?
:-(
நல்லாக் கேட்டீங்க தமிழன். திருகோணமலை கிழக்கு இல்லையா?
சம்பந்தன் தானே கூட்டமைப்பின் தலைவர்?
அப்போ இவ்வளவு நாளுமன் இப்போது நீங்கள் சேர்ந்துள்ள TMVP கட்சி மகிந்தருக்கு வாழ் பிடிச்சுதே அதுக்கு என்ன சொல்லப் போறீங்க சந்துரு?
நல்லா அடிச்சு மாறுறீங்க ஐய்யா.
அரசியல்வாதியா நல்லா உழைக்க வாழ்த்துக்கள்.
ஆனால் பிரதேசவாதம் பேசி மக்களை ஏமாற்றாதீர்கள்.
//தமிழன் கூறியது...
பிரதேச வாதம் தூண்டும் ஒரு பதிவு போல இருக்கு. பதிவு செய்த நீங்களும் அதை பேசியவர்களும் ஒன்னு புரியணும். கூட்டமைப்பின் தலைமை யார் எண்டு தெரியும் தானே? அவர் என்ன வடக்கத்தயனோ? அவர் கிழக்கு காரர் தானே. இல்ல திருமலை கிழக்கு எண்டு சொல்றியளோ? உங்கள் பதிவினை ரொம்ப நாளாய் படித்து வாறன். இப்படி ஒரு பதிவு தேவையா? அல்லது நீங்களும் அரசியலில் இறங்கி விட்டீர்களா?//
சம்பந்தரின் வாழ்க்கை பற்றி நன்கு அறிந்து கெள்ளுங்கள். தனக்கு சொந்தமான காணிகளை சிங்களவர்களுக்கு விற்றவர்தான் இந்த சம்பந்தர்.
இன்று மட்டக்களப்பு வாக்காளர்கள் குழப்பத்தில் தள்ளப் பட்டிருக்கிறார்கள். உண்மை நிலை என்ன என்பது மற்றவர்களுக்கு தெரிய வேண்டும் என்பதற்காகவே இந்தப் பதிவுகள்.
தமிழன், உண்மைத் தமிழன்....
உங்களுக்குரிய பதில்கள்...
உண்மை சொல்லும் வரலாறும், வரலாறு சொன்ன உண்மைகளும்…..
http://muthalvarone.blogspot.com/2010/04/01.html
Post a Comment