கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரை கணவனை இழந்த, விதவைகள் அதிகம் காணப்படும் ஒரு பிரதேசமாகும். யுத்தத்தின் மூலம் உயிரிழந்தவர்கள், காணாமல் போனோர், கடத்தப்பட்டோர், இனம் தெரியாதோரால் சுடப்பட்டவர் என்று பட்டியல் நீண்டு கொண்டே செல்லும்.
இந்த விதவைகளைப் பொறுத்தவரை. பல்வேறுபட்ட கஷ்டங்களை எதிர் நோக்கி வருகின்றனர். அதிகமாக விதவைகளைப் பொறுத்தவரை பணக்கார வர்க்கத்தை செர்ந்தவர்களைவிட மிகவும் வறிய குடும்பங்களை சேர்ந்தவர்களே அதிகம்.
இவர்களேதான் தனது குடும்பத்தை தலைமை தாங்கி வழி நடத்துவதோடு. உழைத்து தனது குடும்பத்தையும் காப்பாற்ற வேண்டிய பொறுப்பில் சொல்லொண்ணா துயரங்களை எதிர் நோக்கி வருகின்றனர்.
அதிகமான விதவைகளுக்கு நிரந்தர வருமானம் என்பது இல்லை. கூலித் தொழில் செய்து வந்தாலும் குடும்ப செலவை கவனிப்பதா தனது பிள்ளைகளைப் படிப்பிப்பதா என்ற பிரச்சினை இருக்கின்றது.
நன்றாக படிக்கின்ற பல பிள்ளைகள் படிக்க வசதியின்றி படிப்பை இடை நடுவில் கைவிட்டிருக்கின்றார்கள். ஆனாலும் சிலர் இரவு பகல் உழைத்து பல நாள் பட்டினி இருந்து தமது பிள்ளைகளை நல்ல நிலைக்கு கொண்டு வருகின்றனர். இது எல்லா தாயாலும் முடியாத காரியமே.
கஸ்ரப் பட்டு தனது பிள்ளைகளை படிப்பித்து நல்ல ஒரு நிலைக்கு கொண்டு வந்தால் வேளை வாய்ப்பு இல்லை வேளை பெறுவதென்றால். படிப்புக்கோ, பட்டத்துக்கோ முன்னுரிமை இல்லை. பணமுள்ளவனுக்கும், பணத்துக்குமே முன்னுரிமை கொடுக்கப் படுகின்றது. இந்த நிலை மாற்றப்பட வேண்டும்.
இவர்கல் வாழ்க்கையில் விடிவு கிடைக்க வேண்டும். இவர்கள் சந்தோசப் படுகின்ற நாட்கள் மிக மிகக் குறை வென்றுதான் சொல்ல வேண்டும். இவர்களுக்காக அரசாங்கம் பல திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் ஒவ்வொரு பொறுப்புள்ள அதிகாரியும் இவர்கள் நலனில் அக்கறை கொள்ள வேண்டும்.
நானும் பத்து வயது முதல் தந்தையை இழந்து தாயின் அரவணைப்பில் பல்வேறு கஸ்ரங்களுக்கு மத்தியில் வாழ்ந்தவன் என்பதனால் ஒவ்வொரு தாயின் வேதனையையுன் அறிந்தவன்.
2 comments: on "விதவையின் கண்ணீரில்"
நீங்கள் அறிந்தவரை சிலரை வலைப்பதிவின் மூலம் வெளிப்படுத்துங்கள். நாங்கள் உதவிசெய்கிறோம். ஊர்கூடித்தானே தேர் இழுக்கவேண்டும் ?
அன்னையை போல் ஒரு தெய்வம் உண்டோ?.....தாயாய் .....தந்தையாய் .....நல் ஆசானாய்.....வழி நடத்துபவள். பதிவுக்கு நன்றி
Post a Comment