Tuesday, 27 April 2010

இருந்த இடத்திலிருந்து இலகுவாக அதிகம் சம்பாதிக்க சில வழிகள்.

இன்று பலரும் எப்படி இலகுவாக அதிகம் உழைக்கலாம் என்று சிந்தித்துக் கொண்டிருக்கின்றனர். அவர்களுக்காகவே இலகுவாக இருந்த இடத்திலேயே இருந்து அதிகம் சம்பாதிக்கக் கூடிய சில வழிகளைத் தருகின்றேன். இது ஒரு நகைச்சுவைப் பதிவுபோல் இருந்தாலும் எல்லோரும் சிந்திக்க வேண்டிய பதிவு.

இதோ வழிகள்...

1. ஆசாமியாக மாறலாம்.....

இதன் மூலம் பல்வேறு வழிகள் மூலம் கோடி கோடியாய் சம்பாதிக்கலாம். எப்படி என்று சொல்ல வேண்டிய அவசியமில்லை இப்போ எல்லோருக்கும் தெரியும்தானே. பணம் சம்பாதிப்பது ஒருபுறமிருக்க ஆண்டவன் படைச்சான் என்கிட்ட கொடுத்தான் என்னை அனுபவி ராஜாண்ணு அனுப்பி வைத்தான் என்று நிறையவே அனுபவிக்கலாம்

2. வட்டிக்குக் கொடுக்கலாம்....

இன்று வட்டிக்குக் கொடுத்து உழைப்பது இருந்த இடத்திலிருந்த அதிகம் உழைக்கும் ஒரு தொழிலாகிவிட்டது. 100 க்கு 10 வீதம் மாதம் அறவிடுபவர்கள் ஒருபுறமிருக்க. வங்கிகள் வியாபார நிலையங்களுக்கு பக்கத்தில் இருக்கம் சிலர் அவசர பணத் தேவைகளுக்காக வட்டிக்குக் கொடுக்கின்றனர்.

ஒரு மணித்தியாலயத்துக்குள் அவர்களுக்கு பணத்தைக் கொடுக்க வேண்டும். வட்டியாக ஒரு இலட்சத்தக்கு இரண்டாயிரம் கொடுக்க வேண்டும்.

இது ஒரு புறமிருக்க சிலரோ ஏழைகளின் அவசரத் தேவைக்கு பணத்தைக் கொடுத்துவிட்டு அவர்களின் வீடு காணி போன்ற சொத்தக்களை அபகரிக்கின்றனர்.


3. அரசியல்வாதியாகலாம்......

இது அதிகம் சம்பாதிக்கின்ற ஒரு வழியாகும். பல வழிகளிலும் உழைக்க முடியும். ஒரு நிரந்தர கொள்கை இன்றி நமது சுகபோக வாழ்க்கைக்கு ஏற்றாற்போல் கொள்கைகளை அடிக்கடி மாற்றிக் கொள்ளலாம். ஏழைகளுக்கு வருகின்ற உதவிகளைக்கூட நாம் சுருட்டிக் கொள்ளலாம்.

அரசியல்வாதியாகி எப்படி உழைக்கலாம் என்று ஒரு தொடர் பதிவே எழுதலாம். வேண்டுமானால் பின்னர் பட்டியலிடுகிறேன்.

மக்களுக்காகவே சேவை செய்து வாழ்கின்ற அரசியல்வாதிகளும் இல்லாமல் இல்லை.

4. உயரதிகாரியாகலாம்....

இதன் மூலம் நாம் கடமையாற்றும் நிறுவனத்திலே இருக்கின்ற வேலை வாய்ப்புக்களை பணக்கார வர்க்கத்தினருக்கு பெருந்தொகை பணத்தை வாங்கிவிட்ட வேலைவாய்ப்புக்களை வழங்கலாம். கஸ்ரப்பட்டு படித்து நல்ல முறையிலே தகுதியோடு இருப்பவர்களைப் பற்றி எமக்கு கவலையில்லை பணமே எமக்கு முக்கியம்.

அதனைவிட நமக்கு கீழே வேலை செய்கின்ற பெண்களை நமது தேவைகளுக்கும் பயன் படுத்திக் கொள்ளலாம். (எல்லா அதிகாரிகளும் அப்படியல்ல)

5. வியாபாரியாகலாம்....

நிறைய வழிகளில் உழைக்க முடியும். பட்டியலிடாமல் ஒரு உதாரணத்தை மட்டும் செல்கிறேன்.

ஒரு மரக்கறி வியாபாரியால் செய்யப் படும் கொடுமை இது. எனது கிராமம் ஒரு விவசாயக் கிராமம். ஒரு கிலோ வெண்டிக்காய்க்கு வியாபாரியால் விவசாயிக்கு 15 ரூபா வழங்கப் படுகிறது. ஆனால் அந்த வியாபாரி சந்தையில் ஒரு கிலோ 50 ரூபாவுக்கு விற்பனை செய்கின்றார்.

இரவு பகல் கஸ்ரப் பட்ட விவசாயிக்கு 15 ரூபா ஓரிரு மணித்தியாலத்துக்குள் வியாபாரிக்கு 35 ரூபா விவசாயிக்கு வரும் 15 ரூபாவில் உரம் நிரிறைத்தல் ஏனைய செலவுகள் போனால் 5 ரூபா கூட மிஞ்சப் போவதில்லை.

6. மந்திரவாதியாகலாம்.....

மந்திர மாய ஜாலங்கள் மூலம் நிறையவே சம்பாதிக்கலாம். சூனியம் மூலம் அதிகம் உழைத்தக் கொண்டிருக்கின்றனர். ஒருத்தருக்கு நான் சூனியம் செய்ய வேண்டும் என்றால் ஒரு மந்திர வாதியை பிடித்து செய்யலாம். மந்திரவாதியோ என்னிடம் ஒரு தொகைப் பணத்தை வாங்குவார்.

நான் கூனியம் செய்தவர் சூனியம் பலிக்க ஆரம்பித்ததும் உடனே அந்த மந்திரவாதியைத்தான் நாடுவார் சூனியம் எடுப்பதற்கு. மந்திரவாதி அவரிடம் ஒரு தொகைப் பணத்தை வாங்கிவிட்டு சூனியத்தை எடுத்து வீடுவார். மீண்டும் நான் சூனியம் செய்ய மந்திரவாதியிடம் செல்வேன் இப்படி ஒரு சக்கரமாக தொடரும்.


7. பிச்சைக்காரனாகலாம்...

இதன் மூலம் பல பொய்களைச் சொல்லி மக்களை ஏமாற்றி பிழைப்பு நடாத்துவதோடு உண்மையான பிச்சைக்காரர்களின் பிழைப்பையும் கெடுக்க முடியும.

இன்னும் பல வழிகளைச்சொல்லிக் கொண்டே போகலாம்...


இவை அனைத்தும் உண்மையாகவே நடக்கும் விடயங்கள்.... நாம் சிந்திக்கவேண்டிய விடயங்கள்.

Post Comment


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

9 comments: on "இருந்த இடத்திலிருந்து இலகுவாக அதிகம் சம்பாதிக்க சில வழிகள்."

SShathiesh-சதீஷ். said...

இதிலே நீங்கள் எந்த வகை.

அக்பர் said...

சொன்ன வழிகள் அனைத்தும் அருமை. ஆனா இதை விட ஈசியா ஒரு வழி இருந்தா சொல்லுங்களேன்.

சிரிப்பாக இருந்தாலும். நீங்கள் சொல்வது அனைத்தும் வேதனை கலந்த உண்மைகள்.

சுசி said...

பிளாகரா இருந்து சம்பாதிக்க முடியாதா சந்ரு??

Mrs.Menagasathia said...

எப்படி இப்படிலாம்???

Anonymous said...

அட்வைஸ் இல்ல சொந்த அனுபவம் போல் இருக்கு....
ஹாட் நியூஸ்: சுவாமி நிதியானந்தவின் குரு நீங்கள்தான் என நம்பதகுந்த வட்டார தகவல்......

ஸ்ரீராம். said...

ஆசாமியாக மாறி, வட்டிக்கு கொடுத்து அரசியல்வாதியாகி, வியாபாரியாகி, கம்பெனி ஆரம்பித்து உயரதிகாரியாகி, குறுக்கு வழி நாடி மந்திரவாதியாகி, வொர்க் அவுட் ஆகலேன்னா பிச்சைக் காரனாகலாம்...சரியா சந்ரு..?

கலா said...

சந்ரு ஏழு வழிகளிலும் முயற்சி
செய்து பார்க்கலாம்....என
உத்தேசம் எனக்கு!!
வழி காட்டியவரே நன்றி

Ranjith said...

இப்பொழுது நீங்கள் இன்டெர்நெட்டில் எளிமையாக சம்பாதிக்கலாம். அதுவும் விளம்பங்ரகளைப் பார்ப்பதற்காக….

$ முதலீடு இல்லை. முயன்று பாருங்கள்.


$ தினமும் பத்து நிமிடங்கள் போதும்.

மேலும் விபரங்களுக்கு,
www.easypanam.weebly.com

Anonymous said...

மற்றவற்றில் கொஞ்சம் ரிஸ்க் இருக்கு.ஆனால் கடைசி வழியில் எந்த பிரச்சனையும் இல்லைமல்லக்க படுத்து யோசிசிசிங்களா

Post a Comment