Thursday, 30 June 2011

களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையாரின் சந்நிதியில்...

தற்போது திருவிழா நடைபெற்றுக் கொண்டிருக்கும். கிழக்கிலங்கையிலே பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றான களுதாவளைப் பிள்ளையார். ஆலயத்தின் சிறப்புக்களை பகிர்ந்து கொள்ளும்படி பலர் வேண்டிக் கொண்டார்.எதை எழுதுவது எதை விடுவது என்று தெரியவில்லை ஏராளமாக எழுதிக் கொண்டே போகலாம். இவ் ஆலயம் தானாகத் தோன்றிய லிங்கத்தை உடைய ஆலயம். கிக்கு மாகாணத்தில் இரு ஆலயங்களிலே சிவலிங்கம் கருவறையில் இருக்க  பிள்ளையாராக வழிபடும் ஆலயங்கள் இருக்கின்றன. மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயம் ஒன்று. மற்றும் களுதாவளைப்பிள்ளையார் ஆலயம்.

 இவ் ஆலயத்தில் இருக்கின்ற லிங்கம் ஆரம்பத்தில் சிவனாகவும் முருகனாகவும். இப்போது பிள்ளையாராகவும் வழிபடப்பட்டு வருகின்றது.


களுதாவளை சுயப்புலிங்கப்பிள்ளையார் ஆலயத்தைப் பொறுத்தவரை பன்னெடுங்கால வரலாற்றினைக் கொண்ட ஆலயம். மூவின மக்களும் வந்து செல்லும் ஆலயம். இவ் ஆலயத்தின் வரலாற்றினை களுதேவாலய கல்வெட்டு விரிவாகச் சொல்கின்றன.


பல அற்புதங்கள் நடந்து வருவது பலரும் அறிந்தது. குறிப்பாக வாய் பேசாத பிள்ளைகளை பிள்ளைகளை பேச வைக்கின்ற பிள்ளையார் எனும் பெருமைக்குரியவர். இப் பிள்ளையார்.


வாய் பேசாத பிள்ளைகள் பேச வேண்டும் என்று நேர்கடன் வைத்து சில தினங்களிலே அந்தப் பிள்ளை பேசுகின்ற அதிசய சம்பவங்கள் நடந்து வருகின்றன.


நான் பல வருடங்களாக ஆலய நிகழ்வுகளை நேரடி ஒலிபரப்பு செய்து வருபவன். அவ் வேளையில் ஒரு திருவிழாவின்போது ஒரு பெண்ணை எதேற்சையாக சந்தித்து வானொலியில் பிள்ளையாரின் பெருமைகளை சொல்லுங்கள் ஏன் இந்த ஆலயத்துக்கு வருகிறீர்கள் என்று கேட்டேன்.


அவர் சொன்ன கதைகளை என்னால் நம்ப முடியவில்லை. தன்னுடைய மூத்த மகள் 10 வயது வரைக்கும் வாய் பேசவில்லை என்றும் களுதாவளைப் பிள்ளையாருக்கு நேர்கடன் வைத்து சில தினங்களில் பிள்ளை பேசியதாகவும் குறிப்பிட்டதுடன்.  தனது இன்னொரு மகள் மிகவும் நோய்வாய்ப்பட்டு இனிமேல் உயிரோடு இருக்கமாட்டார் என்று டாக்டர்களால் கைவிடப்பட்ட பிள்ளை நெர்கடன் வைத்ததும் நோய் தீர்ந்ததாகக கூறினார்.


இதே போல் பல சம்பவங்கள் இடம் பெற்றிருக்கின்றன. தற்போது ஆலயத் திருத்தப்பணிகள் இடம்பெற்று வருகின்றன.

ஆலயம் பற்றிய மேலதிக விடயங்களையும் பெருமைகளையும் அறிய..


http://ghaditham.com/varalaaru/kaluthaavalai/index.htmlread more...

யாரை நம்பாவிட்டாலும் இவரை நம்புங்கள்....

கிழக்கிலங்கையிலே பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றான மட்டக்களப்பு   களுதாவளை பிள்ளையார் ஆலய திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகின்றது.

எதிர்வரும் 07.07.2011 தீர்த்தோற்சவ நிகழ்வு இடம்பெற இருக்கின்றது. எதிர்வரும் 5ம் திகதிக்கு முன்னர் நான் நாட்டுக்க செல்ல இருப்பதனால். திருவிழாவிற்கு செல்ல முடியும்.

கடந்த 6 வருடங்களாக ஆலய திருவிழா நிகழ்வுகளை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தென்றல் மற்றும் பிறை FM இரண்டிலும் ஆலய நிகழ்வுகளை நேரடி ஒலிபரப்பு செய்து வந்தேன்.

இவ்வருடம் இணையத்தினூடாக இணையத் தொலைக்காட்சியிலே நேரடி ஒழிபரப்பு செய்யத்திட்டமிட்டிருக்கின்றேன். இருந்தும் நான் நாட்டுக்கு செல்ல இன்னும் சில வேலைகள் பூர்த்தி செய்யப்படவேண்டி இருக்கின்றது.

நாட்டுக்கான எனது பயணம் பின் தள்ளப்பட்டாலும் நண்பர் சிதறல்கள் ரமேஸ் மூலம் நேரடி ஒழிபரப்பு செய்யப்படும். நானும் ரமேஸ் அவர்களும் சேர்ந்துதான் இந்த நேரடி ஒழிபரப்பு செய்ய திட்டமிட்டிருக்கின்றோம்.


களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையாரின் பெருமைகளை எடுத்துச்சொல்லும் பாடல்களடங்கிய பல இறுவட்டுக்கள் வெளிவந்திருக்கின்றன. அவற்றில் இரு பாடல்களை உங்களுக்காகத் தருகின்றேன்.

பாடல் 01


பாடல் 02
Get this widget | Track details | eSnips Social DNA

பாடல் சுட்டி


காடந்தகால திருவிழாக் காட்சிகள் சில..
இவ்வருட திருவிழாக் காட்சிகள்.

படங்கள் அத்தனையும் திருட்டுப் படங்கள். நண்பர் ரமேஸ் அவர்களின் மூஞ்சிப் புத்தகத்தில் திருடினேன்.
read more...

Wednesday, 29 June 2011

நல்லது நடக்கப்போகுது

 கிழக்கிலங்கையிலே பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றாக இருந்து வாய் பேசாத பிள்ளைகளை பேச வைக்கும் பிள்ளையார் என்று சிறப்புப் பெற்ற மட்டக்களப்பு களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலய வருடாந்த உற்சவம் இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றது.எனக்கு கலைத்துறையில் ஈடுபாடு அதிகம் கடந்த 4 வருடங்களுக்கு முன்னர் பக்திப்பாடல்களின் தொகுப்பாக ஒரு இறுவட்டினை வெளியிட்டிருந்தேன். கேதார கெளரி விரதத்தின் மகிமை கூறும் அப்பாடல்களை வீடியோவாக வெளியிட இருக்கின்றேன்.

இவ் இறுவட்டு என் முதல் முயற்சியாக வெளிவந்திருந்தது. பாடலைக் கேளுங்கள் உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள். பாடலைப் பற்றிய உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்.
Get this widget | Track details | eSnips Social DNA 


read more...

Tuesday, 28 June 2011

டேய்..... எங்களைப் பார்த்தாவது திருந்துங்கடா

தலைப்பை பார்த்து என்னைத் திட்ட வேண்டாம். படங்களைப் பாருங்கள்.


எத்தன பேர எவ்வளவோ செய்திருக்கம். கடவுள் நம்மள இங்க தள்ளிவிட்டுத்தானே...


வாடா மச்சான். மனிதன்தான் நிம்மதியா இல்ல நம்மளாவது சந்தோசமா நண்பர்களா இருப்பம்.

இந்த மனிதனுகள் எங்களைப் பார்த்தாவது திருந்துவார்களா?


இல்ல மச்சான்... இந்த மனிதன் திருந்தமாட்டான். திருந்துறவனா இருந்தா எப்பவோ திருந்தி இருப்பான்..  திருந்தாத ஜென்மங்கள்.

4 சணல் வீடியோ 4 சணல் வீடியோ என்று சொல்றாங்களே என்ன என்று பார்ப்போம் என்று பார்த்தா இவ்வளவு நடந்திருக்கா...... மனிதன் நம்மளவிட கொடுரமானவனா இருக்கிறானே... 


மற்றுமோர் அழிவிற்கான ஒத்திகை இப்போதே பார்க்கப்படுகிறதா 

கடவுளே நீதானப்பா இந்த மனிதனை எல்லாம் காப்பாற்றணும்.. அடுத்த வருடம் திருவிழாவுக்கு மொட்டை போட்டு தூக்குக்காவடி எடுப்பன்.

நிறைய மனிதர்களை முட்கம்பி வேலிக்குள் அடைத்து வைத்திருக்கிறார்களாம்... நம்மளையும். அடைத்துவிடுவானுகள்... வேலி பாய இப்பவே பயிற்சி எடுப்போம்.என்னதான் நடக்கும் நடக்கட்டுமே இருட்டினில் நீதி மறையட்டமே தன்னாலே வெளிவரும் தயங்காதே.... 


இவரும் புலனாய்வு வேலைகளில் ஈடுபடுகிறாராம்.


மனிதன் நம்மட நிலைக்கு வந்திட்டான் நம்ம மனிதனின் நிலைக்கு போவோம்

??????????????
அட்.... கடவுளே நமக்கு இருக்கிற நிம்மதி இந்த மனிதர்களுக்கு இல்லையே.... மனிதன் நம்ம செய்றதெல்லாம் செய்றான்... மனிதன் செய்றத நம்ம செய்து பார்ப்போமே...


ஒண்ணமில்ல உள்ளே என்ன இருக்கு என்று செக் பண்றார்.

முதலைக்கே அங்க ஆசை வந்தால் நம்ம சாரு......வுக்கே ஆசை வராதா?


read more...

Sunday, 26 June 2011

சாரு... சாரு... சாரு.... என்னத்த சாதிச்சாரு இந்த சாரு...

இன்று பரவாலாக பேசப்படுகின்ற எழுதப்படுகின்ற விடயம். சாரு பற்றிய விடயம். சாரு ஒரு தமிழ் பெண்ணோடு தகாத முறையில் அரட்டை (சாட்) செய்தார் என்பதுதான்.
யார் இந்த சாரு? எதற்காக இந்த அழவுக்கு நீங்கள் அவருக்கு இலவச விளம்பரம் கொடுக்கிறிங்க. இங்கே யார் மீது தவறு இருக்கின்றது. சாரு மீதா... அல்லது அந்த தமிழ் பெண்மீதா? அல்லது போட்டி போட்டுக்கொண்டு இப்பிரச்சினையை எழுதும் எம்மீதா?

நான் சாரு பக்கமும் இல்லை. அந்தப் பெண் பக்கமும் இல்லை. இருவர்மீதும் தவறு இருக்கின்றது. சாருவைப்பற்றிய இந்த விடயத்தை ஏன் இப்படி போட்டி போட்டுக்கொண்டு எழுதுகிறார்களோ தெரியவில்லை. இதேபோல் எத்தனையோ பல விடயங்கள் தினமும் நடந்துகொண்டிருக்கின்றன.

சாரு பற்றிய இந்த அரட்டை விடயம் வெறுமனே சாருவை பழிவாங்கும் நோக்கோடு செய்யப்பட்டதோ. அல்லது உருவாக்கப்பட்டதோ அல்ல. இது சாரு அல்ல அவர் பெயரில் வேண்டுமென்று சாருவின் நற்பெயரை கெடுப்பதற்காக செய்யப்பட்ட ஒரு வேலையும் அல்ல.

சாருவே தன்னுடைய இணையப்பக்கத்தில் அந்தப்பெண்ணைப்பற்றி எழுதி இருப்பதே இதற்கு சான்றாகும்.


பொதுவாகவே சாருவை எனக்கு பிடிக்காது. இவரை ஏன் இந்த அளவிற்கு தூக்கிப்பிடிக்கின்றீர்கள். இவரைவிட சிறந்த எழுத்தாளர்கள்  இருக்கின்றனர் என்பதனை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.

அரட்டை விடயத்துக்கு வருகின்றேன். உணர்ச்சிகள் ஆசைகள்  என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் இருக்கின்றது. சாருவுக்கு உணர்ச்சிகள் ஆசைகள் இல்லாமல் இல்லை. அவற்றை ஒவ்வொரு மனிதனும் கட்டப்படத்திக் கொள்ள வேண்டும்.

ஆனால் பலர் கட்டுப்படுத்த முடியாமல் வம்பில் மாட்டியிருக்கின்றனர். அதே போன்றுதான். சாருவும் தன் உணர்ச்சியினையும் ஆசைகளையும் கட்டுப்படுத்த முடியாமல் வம்பில் மாட்டியிருக்கின்றார்.

இப் பெண்மீது தவறு இல்லை என்று சொல்பவர்களே. இந்தப் பெண் மீது தவறு இல்லை என்று நீங்கள் எப்படிச் சொல்கின்றீர்கள். ஒரு பெண் சமூகத்தளங்களில் நண்பர்களுடன் அரட்டையடிப்பது இன்று சர்வ சாதாரணமாகிவிட்டது.

சாரு அரட்டையில் இப் பெண்ணுடன் ஆரம்பத்தில் சாதாரணமாக அரட்டை அடித்திருக்கின்றார். பின்னர் அவரது கேள்விகள் திசைமாறி இருக்கின்றன. இந்த நேரத்தில் சில விடயங்களை சிந்திக்க வேண்டும்.

என்னுடன் மூஞ்சிப் புத்தகத்தில் நண்பியாக இருக்கின்ற ஒரு தமழ் பெண்ணுடன்  அரட்டை  அடிக்கின்றேன். ஆரம்பத்தில் சாதாரணமாக அரட்டை அடித்த நான் என் கேள்விகளின் போக்கு மாறுகின்றது. அவளின் அவளின் உள் ஆடைகளின் அளவு வேறு விடயங்கள் பற்றி கேட்கின்றேன் என்றால் என் கேள்விக்கான போக்கை அறிந்த உண்மையான தமிழ் பண்பாடுடைய பெண் என்ன செய்வாள்? என்ன செய்ய வேண்டும்.

என்னை விட்டு விலகுவது சரியா? அல்லது என்னோடு அரட்டை அடிப்பது சரியா? உங்கள் மனைவியோ  மகளோ தங்கச்சியோ இப்படிப்பட்ட ஒருவனோடு நண்பனாய் இருப்பதை அரட்டை அடிப்பதை விரும்புவீர்களா?

அவர் எழுத்தாளர் சமூக அந்தஸ்து உள்ளவர் அவர் நட்பை முறித்துக்கொள்ள கூடாது என்பதற்காக அந்தப்பென் தொடர்ந்து அரட்டை அடித்திரக்கலாம் என்று ஒரு நண்பர் கூறினார். நல்ல அந்தஸ்தில் இருப்பவர் என்பதற்காக  நாம் எதனையும் செய்யலாமா. எங்களுக்கென்று ஒரு பண்பாடு இருக்கின்றது.

சாரு தவறான முறையில் கேள்விகளைக் கேட்க ஆரம்பித்ததுமே அவரது நட்பை உடனே நிறுத்தி இருப்பார்கள் மரியாதையான பெண்கள். ஒரு தடவை மட்டுமல்ல பல தடவை சாரு தவறாக பேசி இருக்கின்றார். தவறாகப் பேசும் ஒருவருடன் ஏன் மீண்டும் மீண்டும் அரட்டை செய்ய வேண்டும்.

யாதார்த்தத்தை சிந்தியுங்கள் நீங்களும்தான். ஒரு பெண்ணிடம் இவ்வாறு பேசுகின்றபோது. அந்தப் பெண்ணிடமிருந்து சிறிது எதிர்ப்பு வந்து அப்பெண் உங்களுடன் தொடர்ந்து பேசினால் என்ன செய்வீர்கள். அவளுக்கு விருப்பம் இருக்கின்றது பேசத் தயங்குகின்றாள் என்று மீண்டும் மீண்டும் பேச நினைப்பீர்கள். இங்கே அந்தப்பெண் சாருவுடனான அரட்டையை நிறுத்தி இருக்கலாம்.

சாரு தவறாக பேசுகின்றார் என்று தெரிந்தும். எதற்காக அந்தப்பெண் சாருவுடன் அரட்டை  அடிக்க வேண்டும். இந்தப் பெண் செய்ததெல்லாம் சரியா? உங்கள் வீட்டுப்பெண் இப்படி எல்லாம் ஒருவருடன் செய்யப்போகிறேன் என்றால் நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா?

மொத்ததத்தில் இருவர் மீதும் தவறு இருக்கின்றது. ஒருவரை ஒருவர் குற்றம் சுமத்தி எழுதிக் கொண்டிருப்பதை நிறுத்திவிட்டு இன்னும் எழுதவேண்டிய பல விடயங்கள் இருக்கின்றன அவற்றை எழுதுங்கள்.

இங்கே சாரு யார்? அவரைவிட தரமான எமுத்தாளர்கள் இருக்கின்றனர். இவரது இந்தச் செயல்களை நியாயப்படத்த முயல்பவர்களே உங்கள் வீட்டுப் பெண்ணுடன் சாரு இப்படி நடந்திருந்தால். நீங்கள் சாருவை வாழ்த்துவீர்களா? திட்டித்தீர்ப்பீர்களா?

அவ்வப்போது எத்தனை பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்படுகின்றனர். சித்தரவதை செய்யப்படுக்ன்றனர். இது சமூகத்தில் உயர்ந்த இடத்தில் இருப்பவர்களினால்கூட மேற்கொள்ளப்படுகின்றன. அவை வெறும் செய்திகளோடு நின்று விடுகின்றன.

இங்கே இந்த அரட்டை விடயத்தை தூக்கிப்பிடித்துக் கொண்டு எழுதுபவர்களே  இந்த விடயத்துக்கு காட்டும் அக்கறைபோன்று அவைகளைப்பற்றியும் அக்கறையுடன் எழுதி இருக்கின்றீர்களா? (ஒரு சிலர் எழுதி இருக்கின்றீர்கள்)

ஒரு பெண்னுடன் தவறாக அரட்டை அடித்த விடயத்தை சமூக அக்கறையுடன் எழுதும் உங்கள் சமூக அக்கறையினை பாராட்டுகிறேன். இலங்கையில் எண்ணிலடங்கா பெண்கள் மானபங்கப்படுத்தப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கின்றனர். அவர்களின் அந்த கொடுரமான கொலையைப்பற்றி இந்த அக்கறையுடன் எழுதி இருக்கின்றீர்களா? ஒருசிலர் எழுதி இருக்கின்றீர்கள்

சாருவின் விடயத்தை இந்தளவிற்கு துருவித் துருவி ஆராய்ந்து எழுதும் நீங்கள் இலங்கை தமிழர்கள் பிரச்சினைபற்றியும். தொடர்ந்து எழுதலாம்தானே?

சாருவை பிரபலமாக்க நினைக்கின்றீர்களா?
read more...

Saturday, 25 June 2011

உரிமை இழந்தோம் உடமை இழந்தோம் உணர்வை இழக்கலாமா?

நான் பழைய பாடல்களை இரசிப்பவன். (என் வயதை அந்தப்பாடல்களோடு ஒப்பிட வேண்டாம் நான் இப்பதான் சின்னப் பையன்.) அதிலும் குறிப்பாக தத்துவப்பாடல்கள் என்றால் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருப்பேன்.


நான் பணியாற்றிய வானொலியில் 4, 5 வருடங்கள் தொடர்ந்து பழைய பாடல் நிகழ்ச்சியினை செய்தேன். வாரம் ஒரு நாள் தத்துவப்பாடல்களை ஒலிபரப்புவேன்.  அந்த நிகழ்ச்சி அதிக நேயர்கள் கேட்கும் நிகழ்ச்சியாக நல்ல வரவேற்புக்கிடைத்தது.


அப்போது நான் நிகழ்ச்சிகளிலே அதிகம் ஒலிபரப்பிய பாடல்கள் சிலவற்றை உங்களுக்காகத் தருகின்றேன். எனக்கு மிகவும் பிடித்த பாடல்கள். உங்களுக்கும் பிடிக்கும் என்று நினைக்கின்றேன்.


என் மனநிலை சரியில்லையென்றால் இப்பாடல்களைக் கேட்பேன். மனதுக்கு நிம்மதியாக இருக்கும்.read more...

காதலிப்பவர்களை எந்த பகுதிக்குள் சேர்ப்பது?

எனக்கு நீண்ட நாட்களாக இருக்கின்ற சந்தேகம். கல்யானம் முடித்தவர்கள் கல்யாணம் முடிக்காதவர்கள் என்று இரண்டு பிரிவு இருக்கின்றது. இதில் காதலித்துக் கொண்டிருப்பவர்களை எந்தபகுதிக்குள் அடக்குவது.

ஊரில் விழையாட்டுப் போட்டிகள்  நடைபெறும்போது கயிறு இழுத்தல் போட்டிகள் இடம்பெறும். திருமணமான ஆண்களுக்கும் திருமணமாகாத ஆண்களுக்கும் போட்டி நடைபெறும்.

 இதில் காதலித்திருப்பவர்கள். காதலித்து திருமணம் நடைபெறாமல் காதலி வீட்டுக்கு போய் வருபவர்கள். (என்னைப் போன்றவர்கள் :) )  எந்த அணியில் சேர்வது என்பதுதான் பிரச்சினை.

கயிறு இழுத்தல் போட்டியின்போது இவர்களை எந்த பகுதிக்குள் சேர்ப்பது என்று பிரச்சினைகள் வருவதுண்டு.  போட்டியை இரத்து செய்த சம்பவங்களும் இதனால் இடம்பெற்றிருக்கின்றன.

காதலிப்பவர்கள் திருமணமாகாத அணியில் சேர்ந்து விடுவார்கள். திருமணமான அணியினர் அவர்களை திருமணமாகாத அணியில் சேர விடமாட்டார்கள். இதில் காதலிப்பவர்கள் காதலி வீட்டுக்கு போய் வருபவர்கள் இருப்பர். ஆனால் திருமணமாகி இருக்காது.

இவர்களை எந்த பகுதிக்குள் சேர்ப்பது....

பட உதவி -: கூகிள்
read more...

Friday, 24 June 2011

திருமணமான வலைப்பதிவர்கள் மனைவியிடம் இருந்து தப்பிக் கொள்வது எப்படி... சில ஆலோசனைகள்

பதிர்களுக்கு பல்வேறுபட்ட பிரச்சினைகள் இருக்கின்றன அவற்றையும் தாண்டி பதிவிட்டுக் கொண்டிருக்கின்றனர். அதிலும் குறிப்பாக பதிவர்களுக்கு வீட்டில்தான் தொல்லைகள் அதிகம். திருமணம் முடித்த பதிவர்கள் என்றால் சோல்லித்தான் தெரிய வேண்டுமா. மனைவியின் திட்டல்கள் பிள்ளைகளின் தொல்லைகள் என்று ஏராளம்.என்று ஓரு பதிவெழுதி இருக்கின்றார். சிலவேளை இது அவரது உண்மைச் சம்பவமாக இருக்கலாம் என்று நம்பத்தகாத வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

உண்மையில் திருமணம் முடித்த பதிவர்கள் பல்வேறுபட்ட கஸ்ரங்களுக்கு மத்தியில் பதிவிட்டு வருகின்றனர். அவர்கள் மனைவியிடம் தப்புவதென்றால் கடினமான விடயமே. யாரிடம் தப்பித்துக் கொண்டாலும் மனைவியிடம் தப்புவதென்றால் கடினம்தான்.

 திருமணமான ஆண் பதிவர்கள் மனைவியிடம் இருந்து திட்டுவாஙஙகாமல் இருக்க. தப்பித்துக் கொள்வதற்காக சில ஆலோசனைகளை சொல்லலாமே என்று நினைக்கின்றேன்.

01.  மனைவிமாரைப் பொறுத்தவரை தான் சமைத்துக்கொண்டிருக்கும்போது கணவன் கணிணி முன்னால் பதிவெழுதிக் கொண்டிருந்தால். அடுப்பைவிட மனைவிதான்  அதிகம் எரிந்து கொண்டிருப்பார். இதனால் சமைக்கும் பொறுப்பை நீங்களே ஏற்றுக் கொள்ளுங்கள் அல்லது மனைவிக்கு சமையலில் உதவி செய்யுங்கள்.

02.  உங்கள் மனைவியைப்பற்றி புகழ்ந்து அவ்வப்போது வலைப்பதிவில் எழுதுங்கள். அவரைப்பற்றி எழுதி இருப்பதை மனைவியிடம் காண்பியுங்கள். அப்போது இன்னும் அதிகமாக வலைப்பதிவெழுத மனைவியே உங்களை ஊக்கப்படுத்துவார்.

03.  மனைவிக்கும் ஒரு கணிணி வாங்கிக் கொடுத்து அவரையும் வலைப்பதிவாளராக மாற்றிவிடுங்கள். பிரச்சினைகள் வராது ஆனால் மனைவியும் 24 மணித்தியாலமும் கணிணி முன்னால் இருந்தால் நான் பொறுப்பல்ல. சில வேளை நீங்கள் வெளியில்தான் சாப்பிடவேண்டி வரும். அல்லது மனைவிக்கு எழுதத்தெரியாதென்றால் மனைவி பெயரில் நீங்களே எழுதுங்கள்.

04.  மனைவி வீட்டுவேலை சமையல்வேலை எல்லாம் செய்து பிள்ளைகளையும் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றால்தான் மனைவிமார் கொதித்தெழுவார்கள். காரணம் இப்போதைய பிள்ளைகளை வைத்துக்கொள்வதே பெரிய விடயம். பிள்ளைகளை வெளியில் எங்காவது அனுப்பிவிடுங்கள். அல்லது அவர்களையும் வலைப்பதிவாளராக மாற்றி விடுங்கள். 

05.  வீட்டுக்கு வேலைக்காரி ஒருத்தியை வைத்துக் கொள்ளுங்கள்.( நீங்கள் அல்ல வீட்டு வேலைக்கு) அப்போது மனைவிக்கு வேலைகள் குறையும் உங்கள்மீது கோபப்படமாட்டார்.  வேலைக்காரி உங்கள் வேலைக்காரியானால் நான் பொறுப்பல்ல.

06.  அலுவலகத்துக்கு செல்பவர்கள் தாம் வலைப்பதிவு எழுதுவதாக காட்டிக் கொள்ளாமல் அலுவலக வேலைகள் செய்வதாக மனைவியிடம் சொல்லலாம். சில மனைவிமார் அலுவலக வேலைகளை வீட்டில் செய்தால் வேலையை விடச் சொல்லக்கூடும் கவனமாக இருங்கள்.

07.   வலைப்பதிவின் மூலம் அதிக வருமானம் வருவதாக சொல்லிக் கொள்ளுங்கள். வருமானத்தை மனைவி கேட்டால் வேறு வழிகளில் கொடுப்பதற்கு ஆயத்தமா இருக்க வேண்டும்.

08.   தொடர்ந்து வீட்டிலே இருக்காமல் நண்பர்களின் வீட்டுக்கு சென்று இணையத்தை பயன்னடுத்தலாம்.  நண்பர் வீட்டில் உங்களால் ஏற்படும் பிரச்சினைக்கு நாம் பொறுப்பல்ல.

09.   நீங்கள் ஏதாவது படித்துக் கொண்டிருப்பவரானால். இணையத்திலே தேடிப்படிப்பதாக மனைவியிடம் சொல்லிக் கொள்ளுங்கள்.

10.  எல்லாவற்றுக்கும்மேல் மனைவியின் தேவைகளை அறிந்து அவர் சொற்படி நடந்து அவர் விருப்பங்களை நிறைவு செய்யுங்கள். மனைவியே உங்களுக்கு வலைப்பதிவு ஆலோசகராக இருப்பார். 

திருமணமாகாத பதிவர்களே திருமணத்தைப்பற்றி சிந்திக்கும்போது கவனமாக இருங்கள் 

பட உதவி - கூகிள்
read more...

வெளிநாடுவரைக்கும் துரத்தி வந்த ஏழரைச் சனியன்.

சொர்க்கமே என்றாலும் அது நம் ஊரு போல வருமா எனம் பாடல்தான் இப்போது என்னுள் ஒலித்துக்கொண்டிருக்கின்றது. இன்று நான் கட்டாரில் வேலையற்ற பட்டதாரியாக திண்டாடிக் கொண்டிருக்கின்றேன். சிறு வயதுமுதல் ஏதேதோ எல்லாம் சாதிக்க வேண்டும் என்று நினைத்து எதனையும் சாதிக்க முடியவில்லை.

காரணம் குடும்ப சூழல். சாதாரண குடும்பத்தில் பிறந்த எனக்கு எனது 10 வயதிலே தந்தை இறந்ததும் குடும்பசுமை என்னிடமே. அன்று முதல் பணத்தின் அருமையும் கஸ்ரம் என்றால் என்ன என்பதனையும் உணர்ந்து கொண்டேன். இதனால் இழந்தவை ஏராளம் கல்வி உட்பட.

முடிந்தவரை படித்து பட்டம் பெற்றால் நாட்டிலே வேலையில்லா திண்டாட்டம். வயிற்றுப் பிழைப்பக்காய் வெளிநாடு செல்வோம் என்று வட்டிக்கு கடன் வாங்கி வெளிநாட்டுக்கு வந்தால் இங்கே எனக்கு முன் வந்துவிட்டது என்னைப்பிடித்த ஏழரைச் சனியன்.
கட்டாருக்கு வந்து எதிர்வரும் 1 ம் திகதி 4 மாதமாகிறது. எதிர்வரும் 27ம் திகதி மீண்டும்  இலங்கைக்கு செல்வதற்குரிய ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. கட்டாருக்கு வந்து 4 மாதங்களிலும் என்ன நடந்தது என்று விரிவாக இங்கே இருக்கின்றது. சென்று பாருங்கள்.

கட்டாரில் திண்டாடும் இலங்கைப் பட்டதாரிகள்


நாம் எல்லோரும் நாட்டில் இருந்து வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு என்ன நல்லா உழைத்துக் கொண்டிருக்கின்றனர். என்று நினைக்கின்றோம். அனால் அவர்கள் படும் வேதனைகளும் கஸ்ரங்களும் எண்ணிலடங்கா. அவற்றைப்பற்றியெல்லாம் விரிவாக பதிவிட இருக்கின்றேன். இப்போது பதிவிடும் மனநிலையிலும் நான் இல்லை.

இன்று காலையில் நாம் வேலைவாய்ப்புக்காக வந்த அரச நிறுவனத்தின் அலுவலகத்திற்கு சென்றிருந்தோம். அலுவலக உயரதிகாரிகள் வேலை வழங்கப்படாது நாட்டுக்கு செல்லுங்கள். என்று சொல்லிவிட்டனர்.

எங்களுக்கு குறிப்பிட் நிறுவனத்தினால் நேர்முகப்பரிட்சை வைக்கப்பட்டு வீசா அடிக்கப்பட்டு அடையாள அட்டைகூட வழங்கியிருக்கின்றனர். 

 நேர்முகப் பரிட்சைகூட எங்களை கேலி செய்வதுபோன்றுதான் அமைந்திருந்தது. எங்கள் தகைமைக்குரிய ஆவணங்கள்கூட பார்க்கப்படவில்லை.

என்னிடம் கேட்கப்பட்ட கேள்வி நாட்டில் என்ன வேலை செய்தாய். நான் ஊடகத்தில் வேலை செய்தேன் என்றேன். அப்போ இங்கே எதற்காக வந்தாய் அந்த வேலையை செய்திருக்கலாம்தானே என்றார். 

இன்னும் ஒருவரிடம் தகைமைக்குரிய ஆவணங்களை பார்க்கவோ அல்லது கேள்விகளோ இன்றி 24 + 13 = ? இதுதான் அவருக்கு எழுதிக் கொடுத்து விடை காணச் சொல்லப்பட்டது. அவர் 37 என்று எழுதிக் கொடுத்ததும் ஓகே... குட்.. குட்... போகலாம் என்று அனுப்பிவிட்டார்.

இது ஒருபுறமிருக்க இன்னொருவர் சாரதியாக வந்து கட்டாரில் கனரக வாகன சாரதி அனுமதிப்பத்திரம் பெற்று (சாரதி பயிற்சிப்பாடசாலையில் கற்று) குறித்த நிறுவனத்துக்கு சாரதியாக வேலையில் சேர்ந்து ஒன்றரை மாதமாகிவிட்டது. அவரை இன்னொரு வேறு நாட்டுக்காரரிடம் ஒப்படைத்து இவருக்கு குறிப்பிட்ட வாகனத்தை ஒட்டுவதற்கு பயிற்சி வழங்கும்படி  சொல்லப்பட்டிருக்கின்றது.


ஆனால் இவர் ஒழுங்காக வாகணம் ஓட்டவில்லை என்று பலமுறை மோசமான முறையில் தாக்கப்பட்டிருக்கின்றார். ஒன்றரை மாதத்தின் பின் இவர் சரியாக வாகனம் ஓட்டவில்லை என்று கூறி. அவர் கட்டாருக்கு வந்த வேலைவாய்ப்பு முகவர் நிலையத்திடம் ஒப்படைத்த இருக்கின்றனர் நாட்டுக்கு அனுப்ப சொல்லி. ஒன்றரை மாதங்கள் வேலை செய்ததற்கு எந்தவித கொடுப்பனவுகளும் இல்லை.

இவர் சாரதி பயிற்சி பாடசாலையில் சாரதி பயிற்சி பெற்றவர்.  இவருக்கு மீண்டும் பயிற்சி கொடுக்க வேண்டிய அவசியமில்லை.

இத்தனைக்கும்மேல் நாங்கள் வந்த வேலை என்னவென்றால் கழிவுப் பொருட்களைக் கொண்டு பசளை தயாரிக்கும் ஒரு திட்டத்துக்கு. முன்னர் கழிவுப்பொருட்களை பசளை தயாரிக்கும் திட்டம் இங்கே இருந்தாலும். எங்களை புதிதாக உருவாக்கப்பட இருக்கின்ற திட்டத்துக்கே எடுத்திருந்தனர்.

இப்புதிய திட்டத்தக்குரிய ஆரம்ப வேலைகள் இந்த வருடத்தில் நிறைவடையாது என்பதனை அறியக்கூடியதாக இரக்கின்றது. 

எது எப்படி இருப்பினும் இங்கு வேலைக்கு வந்தவர்கள் அனைவரம் மிகவும் கஸ்ரப்பட்டவர்கள். தங்கள் குடும்ப கூழ்நிலை காரணமாக வந்தவர்கள். பல இலட்சங்களை வட்டிக்கு வாங்கி வந்தவர்கள். அவர்கள் நாட்டுக்கு சென்றால் பல்வேறுபட்ட பிரச்சினைகளை எதிர் நோக்கவேண்டிவரும்.

மிக விரைவில் சொந்த நாட்டிலிருந்து பதிவிடலாம். சொந்தங்களோடு சேரப்போகின்றோம் என்கின்ற நிம்மதிப் பெருமூச்சு ஒருபுறமிருக்க பல இலட்சங்களை இழந்து கடனாளியாக நாட்டக்கு சேல்கின்றோமே என்பதனை நினைக்கும்போது...........................
read more...

Wednesday, 22 June 2011

காம லீலைகள் அரங்கேறும் களம்இணையத்தினைப் பொறுத்தவரை நல்ல பல விடயங்களுக்காக பயன்பட்டாலும் தீயபல விடயங்களும் இடம்பெறாமலும் இல்லை. இது ஒவ்வொருவரும் இணையத்தினைப் பயன் படுத்தும் நோக்கத்தினைப் பொறுத்தது.

 இன்று சமூகத்தளங்களின் பயன்பாடு அதிகரித்தவிட்ட இந்த நிலையில். நல்ல பல விடயங்கள் இந்த சமூகத்தளங்கள் மூலமாக நடந்தேறி இருக்கின்றன. பல நல்ல நட்புக்கள் கிடைத்திருக்கின்றன. பல திருமணங்கள் நடந்திருக்கின்றன. பல குடும்பங்கள் பிரிந்திருக்கின்றன.

இது ஒரு புறமிருக்க நல்ல விடயங்களுக்கு இந்த சமூகத்தளங்களை பயன்படுத்துவோர் ஒரு புறமிருக்க இன்னொரு புறத்தில் பல காம லீலைகள் அரங்கேறிக்கொண்டு இருக்கின்றன.

இந்த சமூக இணையத்தளங்களில் சிலர் தமது காம வக்கிரங்களை தீர்த்துக் கொள்ளும் ஒரு தளமாக பயன் படுத்திக் கொள்கின்றனர். இதில் சாதாரண ஒரு மனிதனில் இருந்து பெரிய அந்தஸ்தில் இருப்பவர்கள் மக்கள் மத்தியிலே நன்மதிப்பைப் பெற்றவர்களும் இல்லாமல் இல்லை.

இந்த சமூகத்தளங்களிலே அரட்டைகளில் ஈடுபடுபவர்கள் தமது காம வேட்கைகளை தீர்த்துக் கொள்ள குரல் வீடியோ அரட்டைகளை நாடுகின்றனர்.

ஒரு நண்பியை இணைத்துக் கொண்டால் அவரோடு சில நாட்கள் சாதாரணமாக உரையாடுவதும் பின்னர் அவர்களை தம் வசப்படத்தி வீடியோ மற்றும் குரல் அரட்டைகளை செய்து வருகின்றனர்.

அதனோடு பலர் நின்று விடுவதில்லை நேரடியாகக்கூட அவர்கள் சந்தித்து தமது காமத்தை தீர்த்துக் கொள்கின்றனர்.

காம உணர்ச்சி என்பது அனைவருக்கும் இருக்கின்றது அவற்றை கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். ஆனால் பலர் கட்டுப்படுத்த முடியாமல் வரம்பு மீறுபவர்களும் இருக்கின்றனர்.

பெண்களைப் பொறுத்தவரை கட்டுப்படுத்தும் தன்மை அதிகம் என்று நினைக்கின்றேன். இணைய அரட்டையிலே நண்பர்களாக இருக்கின்ற ஒரு ஆணும் பெண்ணும்  பேசுக்கொள்கின்றபோது அந்த அண் பெண்ணிடம் செக்ஸ் கதைகளை கதைக்க முற்படும்போது. அந்தப் பெண் நல்ல நடத்தை உள்ள ஒரு பெண்ணாக இருப்பினும் சந்தர்ப்ப சூழ்நிலையில் அவளும் அதற்கு சம்மதிக்கின்றாள்.

அரட்டையிலே அவள் இருக்கின்ற சூழ்நிலையைப் பொறுத்து அது அமைகின்றது. எப்படிப்பட்ட ஒருவராக இருந்தாலும் ஆசை என்பது வந்துதானாகும். நல்ல நெருங்கிய நண்பர்களாக இருக்கின்றபோது நண்பர் கேட்கின்றபோது மறுத்துக் கொள்ள முடியாமல் சம்மதித்தவர்களும் இல்லாமல் இல்லை.

நானும் பல சமூகத்தளங்களிலே பெண் பெயரிலே இருக்கின்றேன். ஏன் என்று கேட்கின்றிங்களா? புலனாய்வு வேலைகள் செய்வதென்றால் நமக்கு றொம்ப பிடிக்குமே அதுதான்.

பல முக்கியமானவர்களை நண்பர்களாக இணைத்திருக்கின்றேன். சமூகத்துக்கு நலலதைச் செய்கின்றேன். நல்லதை எழுதுகின்றேன். என்று சொல்பவர்கள் பலர் என்னுடன் (பெண் பெயருடைய என்னுடன்) நண்பர்களாக இருக்கின்றனர்.

அவர்களா இவர்கள் என்று பல தடவை நான் யோசித்ததுண்டு. அவர்கள் மீதிருந்த நல்லலெண்ணம் இல்லாமல் போய்விட்டது. உனக்கில்லடி உபதேசம் ஊருக்குத்தாண்டி என்பது போன்று இருக்கின்றது அவர்களின் செயல்.

சில வேளைகளில் அவர்கள் பற்றிய விடயங்களை வெளியிடலாம் என்று நினைப்பதுண்டு.

அரட்டைக்கென்று இருக்கின்ற சில இணையத்தளங்களிலே நான் அவ்வப்போது வலம் வருவதுண்டு அதுவும் பெண் பெயரிலே. அங்கே நடை பெறுகின்ற விடயங்களை அறியவேண்டும் என்பதற்காக. அந்த அரட்டை இணையத்தளங்களிலே செக்ஸ் அரட்டைக்கு மட்டுமே அதிகமானவர்கள் வருகின்றனர்.

அந்த இணையத்தளங்களில் பெண் பெயரில் சென்றதுமே அங்கே அரட்டையில் இருக்கின்ற எல்லோரும் எங்களுடன் அரட்டைக்கு வருவார்கள் எவரும் நல்ல விடயம் பேசமாட்டார்கள். அவர்கள் போடுகின்ற முதல் வசனம் செக்ஸ் பேச முடியுமா? என்னை பார்க்கப் போறிங்களா? உங்களைப் பார்க்கலாமா?

இந்த அரட்டை இணையத்தளங்களிலே பல ஆண்களும் பெண்களும் செக்ஸ் அரட்டை செய்வதற்கென்றே வருகின்றனர்.

எப்படியெல்லாம் சமூகம் சீரழிகின்றது. சீரளிக்கப்படகின்றது. சமூகத்தை திருத்தவதாக. சமூகத்துக்காக செயற்படுவதாக இருந்து திரைமறைவில் காம லீலைகளில் ஈடுபடுபவர்களே திருந்துங்கள். எமது சமூகம் சீரழிகிறது.

நீ நல்லவனா என்று கேட்க வேண்டாம்.

எம்மை நாமே சுயபரிசோதனை செய்துகொள்வோம் 


இதனையும் பார்க்கலாம்.

இணையத்தில் காதலித்துச் சம்பாதிக்கலாம்

read more...

தோழியை காதலியாக்குவது எப்படி? சில ஆலோசனைகள்

நல்ல நட்புக்கள் கிடைப்பதென்பது அரிது அதனையும் மீறி கிடைத்துவிட்டால். அந்த நட்பை பிரிவதென்பது மிகவும் கடினமான விடயம். அதிலும் ஆண்பெண்  நட்பென்பது எப்டித்தான் இணைபிரியாத நண்பர்களாக இருந்தாலும் சந்தர்ப்ப சூம்நிலைகள் அவர்களைப் பிரித்துவிடும்.


சில ஆண் நண்பர்கள் தனது நெருங்கிய நண்பி தன் வாழக்கைத் துணையாக வர வேண்டுமென்று நினைப்பார்கள். அந்த நண்பியை காதலிக்க தொடங்கிவிடுவார்கள். ஆனால் அந்த நண்பி தனது நண்பரை ஒரு நெருங்கிய நண்பராகத்தான் பார்ப்பார். இதனால் அந்த நண்பிக்கும் தன்மீது காதல்  வர வைக்க வேண்டும் அதற்கு என்ன செய்வது என்று நாம் பலர் திண்டாடிக்கொண்டிருப்போம்.

அந்த நண்பியிடம் நேரடியாக உடனே காதலைச் சொன்னால் சில வேளைகளில் அந்த நண்பியை இழக்க வேண்டியும் வரலாம். இதற்காக அந்த நண்பியை நம் பக்கம் காதல் வர வைக்க வெண்டியதுதான்.

எப்படி காதல்  நம்மீது காதல்வர வைப்பது என்று கேட்கின்றீர்களா. அவசரப்படாதிங்க ஒவ்வொன்றா சொல்கின்றேன்.


01. உங்கள் நம்பிக்கு தேவைப்படும் உதவிகளை அவர் உங்களிடம் கேட்காமலே செய்து கொடுங்கள்.

       நீங்கள் கணவனாக வந்தால் தன்னை நன்றாக பார்த்துக்கொள்வார் என்று உங்கள்மீது ஓர் ஈர்பு அவளுக்கு உண்டாகும்.


02. உங்கள் நண்பிக்கு பிடிக்காத வி்யங்களை விட்டுவிடுங்கள். உங்கள் நண்பிக்கு எது பிடிக்குமோ அதனை அடிக்கடி செய்யுங்கள்.


03.  உங்கள் நண்பியோடு மட்டுமே நட்பாக இருங்கள் வேறு பெண்களோடு நட்பாக இருக்க வேண்டாம். அல்லது பெண்களோடு பழகுவதை நிறுத்திக் கொள்ளுங்கள். அல்லது உங்கள் நண்பிக்கு தெரியாமல் பெண்களோடு நட்பை வைத்துக் கொள்ளுங்கள்.


         தனது நெருங்கிய நண்பனோ அல்லது காதலனோ வேறு பெண்களோடு பேசக்கூடாது எனும் மனநிலை பெண்களுக்கிருக்கின்றது.


04.  நண்பியின் இன்ப துண்பங்களில் பங்கெடுத்துக் கொள்ளுங்கள். எந்தவொரு நல்ல விடயமோ கெட்ட விடயமோ நண்பிக்கோ அவரது குடும்பத்துக்கோ நடந்துவிட்டால் அங்கே முதலில் நிட்பவர் நீங்களாக இருங்கள்.


05.  உங்கள் உடல் நலன் பேணுவதனை விட உங்கள் நண்பியின் உடல் நலத்தில் அக்கறை காட்டுங்கள். நண்பிக்கு தலைவலிதான் வந்தாலும் அது உங்களுக்கு ஏற்பட்டதுபோல் உணர்ந்துகொள்ளுங்கள்.


    அப்போது அவர் நினைப்பார் நிங்கள் தனது எதிர்கால துணையாக வந்தால் தன்னில் அதிக அக்கறை காட்டுவீர்கள் என்று உங்கள் மீது காதல் எற்படும்.


06.  உங்கள் நண்பியை உங்கள் குடும்பத்தில் ஒருவர்போல் பார்த்துக் கொள்ளுங்கள். உங்கள் குடும்பத்தவர்களுக்கு நீங்கள் என்ன வாங்கினாலும் நண்பிக்கும் வாங்குங்கள் ( என்ன குடும்பத்தவர்கள்தான் உங்களுக்கு வாங்கித்தருகிறார்களா)  புதுவருடத்துக்கு உடுப்பு எடுப்பதாக இருந்தால்கூட நண்பிக்கும் எடுங்கள்.


07.  உங்கள் நண்பியை அவளின் விட்டில் அவளது குடும்பத்தினர் கவனிப்பதனைவிட நீங்கள் அதிகம் கவனியுங்கள். அப்போது உங்கள் மீது அதிக அன்பு உண்டாகும்.

08. உங்கள் வீட்டவர்களுடன் சகஜமாக பழக விடுவதுடன். உங்கள் குடும்பத்தாருடன் வெளியிடங்களுக்கு சென்றுவர அனுமதியுங்கள். அப்போது உங்கள் வீட்டவர்களை நண்பி கவர்வதோடு நண்பிக்கும் உங்கள் வீட்டவர்கள்மீது நல்லெண்ணம் உண்டாகும்.


09. உங்கள் நண்பியின் வீட்டவர்களுடன் மிகவும் நெருக்கமாகப் பழகுங்கள். அவர்களுக்கு உங்கள்மீது அதிக நம்பிக்கை வரவேண்டும் அதனோடு உங்கள்மீது நல்லபிப்பிராயமும் இருக்க வேண்டும். 


   அப்போதுதான் உங்கள் காதல் அவர்களுக்கு தெரிய வந்தாலும் அவர்கள் முட்டுக்கட்டையாக இருக்காமல் பச்சைக்கொடி காட்டுமளவுக்கு அவர்களோடு பழகிக் கொள்ளுங்கள்.


10. நண்பியும் நீங்களும் அடிக்கடி வெளி இடங்களுக்கு சென்று வாருங்கள்.


       அப்போதுதான் சமூகம் உங்களையும் உங்கள் நண்பியையும் தொடர்பு படுத்தி கட்டுக்கதைகள் கட்டும். அது உங்களுக்கு இலகுவாக இருக்கும்.


இது மட்டுமல்ல இன்னும் இருக்கின்றது சந்தர்ப்பம் வரும்போது சொல்லின்றேன்.என் அனுபவமா என்று மட்டும் கேட்கவேண்டாம்.read more...

Tuesday, 21 June 2011

தமிழ் மொழி தமிழ் மொழியாகவே இருக்கிறதா? தமிழா நீ பேசுவது தமிழா?

இது என்னுடைய முந்திய இடுகை ஒன்று நேற்று நண்பர் சதிஸின் இடுகை ஒன்றை பார்த்ததுமே இந்த இடுகையை மீண்டும் இடுகையிடவேண்டும் என்ற எண்ணம் உதித்தது.  


பல சிறப்புக்களை கொண்ட தமிழ் மொழி இன்று பல மொழிக் கலப்பினால் பாதிக்கப்பட்டு வருவதாக இன்று பலரும் குற்றம் சுமத்திக்கொண்டு இருக்கின்றனர். தமிழ் மொழியை வளர்ப்பதிலே ஊடகங்களின் பங்கு இன்றியமையாத ஒன்றாகும் ஊடகங்களால் பாரிய மாற்றங்களை ஏற்படுத்த முடியும்.

தமிழ் மொழியோடு பிற மொழி கலப்பதை தடுப்பதிலும், தமிழ் மொழியை வளர்ப்பதிலும் ஊடகங்களின் பங்கு அளப்பெரியது. தமிழ் ஊடகங்கள் தமிழ் மொழியை வளர்ப்பதனையும் தமது நோக்கங்களிலே ஒன்றாக கடைப்பிடிக்க வேண்டும். இன்று பல ஊடகங்களும் ஊடகவியலாளரும் தமிழ் மொழியை வளர்ப்பதிலே ஆர்வம் காட்டிவரும் நேரம் சில ஊடகங்களிலே தமிழ் பயன்பாட்டைப் பார்க்கின்றபோது எல்லோருமே கவலைப்பட வேண்டிய விடயமாக இருக்கின்றது.

நாகரிக உலகில், நாமும் மாற வேண்டும் என்பதற்காக எமது தமிழ் மொழியினை மாற்றி அமைக்க முடியுமா. இன்று தமிழோடு ஆங்கில சொற்களை பயன்படுத்துவது ஒரு நாகரிகமாக மாறிவிட்டது. ஏன் தமிழ் மொழியில் பேசுவதிலே என்ன இருக்கிறது எமது மொழியை நாமே பயன்படுத்த வெறுக்கிறோம். இதற்கு சொல்லும் குற்றச்சாட்டு உண்மையான தமிழ் சொற்கள் எல்லோருக்கும் தெரியாது என்று சொல்லி விடுவார்கள். நான் வேற்று மொழிகளை குற்றம் சாட்டவில்லை ஆங்கிலம் முக்கிய மொழியாக இருக்கலாம் எமது மொழியை மறப்பதா ஆங்கிலம் பேசவேண்டிய இடங்களில் பேசுவது தப்பு இல்லை. ஆனால் சிலர் பேசுவார்கள் தமிழ் வார்த்தைகள் 25 வீதமே கூட இருக்காது. இவர்கள் பேசுவது ஆங்கிலம் தெரியாத பாமர மக்களாக இருந்தாலும் அவர்களது பேச்சிலே மாற்றம் இருக்காது.

தந்தை பெரியார் அவர்களின் அச்சு எழுத்துக்களில் சிக்கனம் காரணமாக உருவானதுதான் தமிழ் சீர்திருத்த எழுத்துகள். னா, ணா, னை, ணை, லை, ளை போன்ற எழுத்துகள் சீர்திருத்தப்பட்டது. இவற்றை மறைந்த தமிழக முதல்வர் டாக்டர் MGR அவர்களால் அரசில் பரிந்துரை செய்யப்பட்டது. இன்று இவைகள் பயன்பாட்டில் இருக்கின்றது. நேற்று என் நண்பர்களிடம் பழைய னா, ணா, னை, ணை, லை, ளை எழுதிக்காட்டுங்கள் என்றேன். அவர்களால் ஞாபகத்திற்கு கொண்டு வரமுடியவில்லை அந்த அளவிற்கு மறக்கடிக்கபட்டுள்ளது.

மாற்றத்தை கொண்டு வர முடியும் என்பது உண்மையே. இதனை 100 வீதம் ஊடகங்களினால் சாத்தியப் படுத்த முடியும். பல ஊடகங்கள் இதில் வெற்றியும் கண்டன பல ஊடகவியலாளர்கள் தமிழை வளர்ப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றனர். வெதுப்பகம், தொடருந்து, மகிழுந்து போன்ற பல தமிழ் சொற்களை இப்பொழுது ஊடகங்களில் பாவிப்பதனை பார்க்கும்போது சந்தோசமாக இருக்கின்றது. இதனை மக்கள் மத்தியிலே பிரபல்யப் படுத்தியது ஊடகங்களே. அப்படி இருக்கும் போது ஏனைய சொற்களையும் நாம் பயந்படுத்தும்போது மக்களும் பயன்படுத்த ஆரம்பித்து விடுவார்கள் என்பதே உண்மை.

இன்று பலரது குற்றச் சாட்டாகவும் இருப்பது சில இலத்திரனியல் ஊடகங்களிலே தமிழ் கொலை செய்யப்படுகின்றன என்பதே. உண்மையும் அதுதான் தமிழை வளர்க்க வேண்டியவர்கள். நேயர்களோடு பேசும்போது அதிகமாக ஆங்கில சொற்களை பிரயோகிப்பது ஏன். நான் அதிகம் அவதானித்த விடயம் சாதாரண ஆங்கிலம் தெரியாத மக்களோடும் ஆங்கிலத்தில் பேசுவது. இன்று தொலைபேசி பாவனை அதிகரித்து விட்டதனால் கிராமப்புற மக்கள் இலத்திரனியல் ஊடகங்களுக்கு தொலைபேசி அழைப்பினை எடுப்பது அதிகரித்து விட்டது. ஆனால் அவர்களை புரிந்து கொண்டு தமிழிலே பேசுவதை தவிர்த்து ஆங்கில வார்த்தைகளோடு சில அறிவிப்பாளர்கள் விளையாடுவதுதான் ஏன்.

சிலர் தாங்கள் ஆங்கில வார்த்தைகள் பயன்படுத்தவில்லை என்றால் மற்றவர்கள்தன்னை கீழ்த்தரமாக நினைப்பார்கள் என்று நினைக்கின்றனர். நவின உலகுக்கு ஊடகங்களும் மாறத்தான் வேண்டும். அதற்காக நாம் தமிழை சாகடிப்பதா. இன்று சில ஊடகங்களிலே சில அறிவிப்பாளர்கள் லகர, ழகர வேறுபாடு தெரியாமலே தமிழை கொலை செய்கின்றனர். இவர்கள் தமிழை வளர்ப்பவர்களா. எத்தனையோ திறமையானவர்கள் இருக்கும்போது ஏன் இவர்கள் உள் வாங்கப்பட்டனர். தமிழை வளர்க்க தமிழ் ஊடகங்கள் முன்வர வேண்டும்.

ஒரு போட்டி ஒரு தொலைக்காட்சியிலே நடந்தது அதிலே நடுவர் போட்டியாளரிடம் சொன்னார் உங்கள் தமிழ் உச்சரிப்பில் "பிலைகள்" இருக்கிறது திருத்துங்கள்என்று இவர் பிழை திருத்துகிறாரா. அல்லது தமிழ் கொலை செய்கிறாரா. அவரே தமிழ் கொலை செய்யும் போது எப்படி மற்றவரை திருத்துவது.

ஊடகங்களால் முடியாதது எதுவும் இல்லை வெதுப்பகம், தொடருந்து, உந்துருளி, மகிழுந்து போன்ற சொற்கள் மக்கள் மத்தியிலே பிரபல்யமாக்கப் பட்டது ஊடகங்களால்தான் ஏனைய சொற்களையும் மக்கள் மத்தியிலே பிரபல்யப்படுத்துவதொடு தமிழ் மொழியினை ஊடங்களால் வளர்க்க முடியும் என்பதே உண்மை.

ஒரு சிலர் செய்கின்ற தவறுக்காக எல்லோரையும் குற்றம் சொல்வது சரியல்ல. தமிழ் கொலை செய்கின்ற ஊடகங்களும் ஊடகவியலாளரும் திருந்த வேண்டும். என்பதோடு நாகரிக மோகத்தில் தமிழ் மொழியோடு வேற்று மொழிகளை கலப்பதனையுமே நான் தவறு என்று சொல்கிறேன்.

வானொலி, தொலைக்காட்ட்சி போன்றவற்றிலே அறிவிப்பாளர்கள் விடுகின்ற மொழி உச்சரிப்பு, வேற்றுமொழிக் கலப்பு தொடர்பாகவே பலரும் பேசி இருந்தனர். இந்த இடத்திலே ஒன்றைக் குறிப்பிட வேண்டும் நானும் ஒரு ஊடகவியலாளன்தான், ஒரு அறிவிப்பாளன். நான் தமிழ் மொழி தவறாக உச்சரிப்பதனையும், ஆங்கில வார்த்தைகள் தேவையற்று அதிகம் பயன் படுத்துவதனையும் முற்றாக வெறுப்பவன். தமிழை தமிழாக பயன் படுத்த நினைப்பவன்

ஒரு சிலர் குறிப்பிட்டிருந்தார்கள் நாமும் நாகரிகத்துக்கு ஏற்றாற்போல் மாற வேண்டுமென்று. நான் மாற வேண்டும் என்பதனை ஏற்றுக் கொள்கின்றேன். ஆனால் எமது தமிழ் பாரம்பரியங்களையும், தமிழ் மொழியின் சிறப்பினையும் நாகரிகமென்ற போர்வையில் சாகடிப்பதா.

நான் வேற்று மொழிகளை முற்றாக புறக்கணிக்க வேண்டுமென்று சொல்லவில்லை. ஆங்கில மொழியினை பயன் படுத்த வேண்டிய இடங்களுக்கு பயன்படுத்தத்தான் வேண்டும். அதற்காக தேவையற்ற விதத்தில் அதிகமாக பயன்படுத்தலாமா. இன்று ஆங்கில மொழியினை தமிழ் மொழியோடு பயன் படுத்துவது அதிகரித்து வருகின்றது. அன்று ஒரு பத்து வீதமாக இருந்தது என்று வைத்துக் கொள்வோம் இன்று இருபது வீதமாக அதிகரித்து விட்டது என்றால் எதிர் காலத்தில் தமிழோடு ஆங்கில மொழி பயன்பாடு அறுபது வீதமாக அதிகரித்து விட்டது என்று வைத்துக் கொள்வோம் அந்த மொழியினை தமிழ் மொழி என்பதா அல்லது வேறு ஒரு மொழி என்பதா? போகிற போக்கில் நடக்காமல் விடலாம் என்று சொல்ல முடியாது. தமிழ் மொழி மறைகின்ற நிலைக்கு தமிழர்களாகிய நாம் பங்காளிகளாக இருக்கலாமா.

சில ஆங்கில சொற்களை நாங்கள் பயன்படுத்தியே ஆகவேண்டும். இருந்தாலும் எமது தமிழ் மொழியிலே பல இனிய சொற்கள் இருக்கின்றன. ஒரு சிலரின் குற்றச் சாட்டு சில தமிழ் சொற்கள் எல்லோருக்கும் தெரியாது அதனால் ஆங்கில சொற்களை பயன்படுத்துகிறோம் என்று. இக் கருத்தினை முற்று முழுதாக ஏற்றுக்கொள்ள முடியாது.

இன்று இலங்கையின் ஊடகங்களிலே தொடருந்து, சிற்றுந்து, உலங்குவானூர்தி, துவிச்சக்கர வண்டி, மிதி வண்டி, காலுந்து, வெதுப்பி, குளிர்களி.. இன்னும் பல.. இனிய தமிழ் சொற்கள் பாவிக்கப்படுகின்றன. (வெளிநாட்டை பொறுத்தவரை எப்படி என்பது தெரியவில்லை) இந்த சொற்களை பாமர மக்கள் முதல் படித்தவர்கள் வரை எல்லோரும் இன்று ஏற்றுக் கொள்கின்றனர். இந்த சொற்களின் அறிமுகம் எப்போது வந்தது?. ஆரம்பகாலத்தில் இருந்து ஊடகங்களிலே அடிக்கடி  பயன்படுத்தப்பட்டு வந்ததா என்றால் இல்லை. அதிகமானவர்களுக்கு அன்று இந்த சொற்கள் தமிழிலே இருக்கின்றது என்பதே தெரியாது. என்னையும் சேர்த்து.

ஊடகங்களால் முடியாதது எதுவும் இல்லை. தமிழை வளர்ப்பதிலே பல ஊடகவியலாளர்கள் பாடுபட்டிருக்கின்றார்கள். அதன் பயனாகவே இன்று இந்தச் சொற்கள் மக்களால் பயன்படுத்தப் படுகின்றன.

ஊடகங்களிலே இது போன்ற பாவனையில் இல்லாத சொற்களை அறிமுகம் செய்கின்றபோது காலப்போக்கில் பாவனைக்கு கொண்டு வர முடியும். அதற்காக எல்லாச் சொற்களையும் வேற்று மொழிச் சொற்களையும் தமிழ் படுத்த முடியாது என்பதனையும் ஏற்றுக் கொள்கிறேன். அவற்றை ஒரு பக்கம் வைத்துவிட்டு தேவையற்ற வேற்றுமொழி கலப்பை தவிர்க்க வேண்டும் என்பதே எனது கருத்து.

என் நாம் இன்று வலைப்பதிவுகளிலே இடுகை, அமுக்கவும் போன்ற இனிய சொற்களை பாவிக்கின்றோமே. இன்று இணையமும் கூட ஒரு வகையில் தமிழை வளர்க்கின்றது என்று சொல்லலாம்.

அடுத்து வானொலி, தொலைக்காட்சிகளிலே தமிழ் கொலை செய்யப்படுகின்றன என்ற விடயத்துக்கு வருகின்றேன். நவின உலகத்துக்கு ஏற்றாற்போல் இன்று எல்லாமே மாறி வருகின்றன இதற்கு வானொலி தொலைக்காட்சிகளும் விதிவிலக்கல்ல. கடுமையான போட்டித்தன்மைகளுக்கு மத்தியிலே தாம் நிலைத்திருக்க வேண்டுமானால். காலத்துக்கேற்ற சில மாற்றங்களையும் இன் நிறுவனங்கள் செய்ய வேண்டிய தேவை இருக்கின்றது.

இதற்காக இவர்கள் நினைத்த எதனையும் செய்யலாமா இன்று சிலர் தாம் நினைத்தபடி மாறுதல் என்ற பெயரில் தமிழ் கொலை செய்து கொண்டு இருக்கின்றனர். வானொலி, தொலைக்காட்சிகளின் போட்டித்தன்மை காரணமாக நிலைத்திருக்க வேண்டுமானால் சில ஊடக நிறுவனங்கள் மாற்றங்களை செய்யத்தான் வேண்டும். இன்று பல ஊடக நிறுவனங்கள் பேச்சுத்தமிழை பயன்படுத்துகின்றன. பேச்சுத்தமிழில் பேசுகின்றபோது எல்லோருக்கும் இலகுவாக விளங்கிக் கொள்ளமுடியும். இது ஒரு புறமிருக்க இதனை ஒரு சாட்டாக வைத்து வேற்று மொழி கலந்து பேசுவதை சில அறிவிப்பாளர்கள் கடைப்பிடிப்பதுதான் கவலைக்குரிய விடயம்.

சில அறிவிப்பாளர்கள் விடுகின்ற தவறுகளை சொல்வதென்றால் அதற்கென ஒரு வலைப்பதிவு தொடக்கி எழுதிக்கொண்டே போகலாம். அறிவிப்பாளர்கள் எல்லோரும் பிழை விடுவதில்லை, தமிழை கொலை செய்வதில்லை சில அறிவிப்பாளர்கள் இருக்கின்றார்கள் லகர ழகர ளகர தெரியாமல் திண்டாடுகின்றனர். அது மட்டுமல்ல சில தமிழ் சொற்கள் அவர்களின் வாயில் இருந்து வருவதற்கு கஸ்ரப்படுகிறது.

சில அறிவிப்பாளர்கள் இனிய தமிழை மறந்து அளவுக்கு அதிகமாக ஆங்கில வார்த்தைகளை பயன் படுத்துவது என். இவர்களுக்கு தமிழ் தெரியாதா. தமிழ் தெரியவில்லை என்றால் ஏன் தமிழ் அறிவிப்பாளராக வந்தார்கள். ஆங்கில அறிவிப்பாளராக போயிருக்கலாம்தானே. இவர்கள் விடுகின்ற தவறுகளும் ஓட்டு மொத்த அறிவிப்பாளர்களையும் பாதிக்கும் என்பதை இவர்கள் உணர்ந்து திருந்துவதே நல்லது (திருந்துவார்களா?)

தமிழ் மொழியின் சிறப்புக்கள் பற்றி எழுதிக்கொண்டே போகலாம். அத்தனை சிறப்பு வாய்ந்தது தமிழ் மொழி. வேற்று மொழிகளை தமிழோடு தேவையற்ற முறையிலே அதிகமாகப் பிரயோகிக்கப்படுகிறது ஏன் என்பதுதான் எனது கேள்வி.

வேற்று மொழி பேசுபவர்கள் எமது தமிழ் மொழியினை தங்கள் மொழியோடு கலந்து பயன் படுத்துகிறார்களா. இல்லையே சில தமிழ் சொற்களை எல்லாராலும் புரிந்து கொள்ள முடியாது என்று சொல்கின்றார்கள். அப்படி என்றால் தமிழ் மொழிக்கு சொற் பஞ்சம் இருக்கிறதா?

எமது தமிழ் அறிஞர்கள் எல்லோரும் ஏனைய மொழிகளையும் படிக்கவேண்டும் என்று சொன்னார்களே தவிர தமிழ் மொழியோடு கலந்து பயன் படுத்தும் படி சொல்லி இருக்கின்றார்களா.

இன்று பல சிறப்புக்கள் மிக்க எமது தமிழ் மொழியின் சில சொற்களை புரிந்து கொள்ள முடியவில்லை என்றால் அதற்கு யார் காரணம். நாம்தான் காரணம். நாகரிகமென்ற போர்வையில் வேற்று மொழிகளின்பால் நாம் ஈர்க்கப்பட்டதே முக்கிய காரணம்.

இன்று நாம் தமிழ் இலக்கியங்களை வெறுப்பதற்கு என்ன காரணம் அதிலே பயன்படுத்தப்பட்டிருக்கின்ற சொற்களுக்கு விளக்கம் தெரியாமையே முக்கிய காரணம். நான் கேட்கின்றேன் அன்று தமிழ் அறிஞர்கள் மக்களிடம் பாவனையில் இல்லாத சொற்களை ஏன் பயன்படுத்தவேண்டும். அன்று அந்தச் சொற்கள் பயன் பாட்டில் இருந்ததே காரணம். அன்று இலக்கியங்களிலே வேற்று மொழி கலப்பு இருந்ததா?. இல்லையே.

ஆனாலும் இன்று கிராமப் புறங்களிலே அந்தச் சொற்களை எமது முன்னோர்கள் பயன் படுத்துவதை கானக்கூடியதாக இருக்கின்றது. இன்றைய நாகரிகம்தான் எம்மை மாற்றிவிட்டது.

சில சொற்களுக்கு தமிழ் படுத்த முடியாது என்பதனை ஏற்றுக் கொள்கின்றேன். வளர்ச்சி அடைந்து வருகின்ற நாடுகளின் விஞ்ஞான கண்டு பிடிப்பு, அவர்களின் பொருட்களுக்கு எங்களால் தமிழ் சொல்லை தேடிக்கொண்டு இருக்கமுடியாதுதான். ஆனால் காலப்போக்கில் அதற்கும் தமிழ் சொற்களை அறிமுகப் படுத்த முடியுமல்லவா. computer என்பது தமிழ் வார்த்தை இல்லை அது காலப்போக்கில் கணணி அல்லது கணினி என்று நாம் தமிழ் படுத்தவில்லையா.

சில தமிழ் சொற்களுக்கு அகராதிகளைத்தான் தேடி பொருள் கண்டுபிடிக்க வேண்டும் என்று சொல்கிரிஇர்கள். அப்படி என்றால் அன்று இலக்கியங்களை எல்லோரும் படித்தார்கள். அன்று குருகுல முறையிலே ஒரு குருவின் வழிகாட்டலுக்கமைய படித்தவர்களே எமது தமிழ் அறிஞர்கள் பலர்.

அன்று அவர்கள் அகராதியும் கையுமாகவா திரிந்தார்கள். இல்லையே இந்தச் சொற்கள் பாவனையில் இருந்தது என்பதே உண்மை. சரி அவர்கள் அகராதி கொண்டுதான் படித்தார்கள் என்றால் இன்று ஏன் எங்களால் அந்த அகராதிகளை எங்களால் பயன்படுத்த முடியாது.

அன்று எமது தமிழ் மொழிச் சொற்கள் பயன்பாட்டில் இருந்தது என்பது புலனாகின்றது. இதற்கும் காரணம் நாமேதான்.

சரி புத்தகங்கள் தமிழில் இல்லை என்றால் அது யாரில் தவறு இருக்கிறது. தமிழிலே புத்தகங்களை எழுதுவதற்கு தமிழிலே நல்ல பொறியியலாளர்கள் இல்லையா. இருக்கிறார்கள் ஆனால் அவர்கள் தமிழ் மொழியை விட்டு விலகி ஆங்கில மொழியின்பால் சென்றதே காரணம்.

எனது கேள்வி இன்று கணணி மென் பொருட்கள் கூட தமிழிலே அதுவும் அற்புதமான தமிழ் சொகளைக்கொண்டு வடிவமைக்கப் படுகின்ற போது தமிழிலே சில துறைகளுக்கு புத்தகங்கள் இல்லை என்பது ஏன். உலகத்துக்கே நல்லா கருத்துக்களை சொல்லக்குகூடிய எத்தனையோ புத்தகங்களுக்கு சொந்தம் கொண்டாடுகிறது தமிழ் மொழி. ஆனால் நாமே இன்று தமிழ் மொழியினை கொலை செய்து கொண்டு இருக்கின்றோம்.


தமிழ் மொழியினை வளர்க்க வேண்டும். தமிழ் மொழி தமிழ் மொழியாக பயன்படுத்த வேண்டும் என்பதே எனது அவா.
read more...

Monday, 20 June 2011

வறுமையிலும் திறமை

நடைபெற்று முடிந்த க.பொ.சா.த. உயதரப் பரீட்சையிலே மட்டக்களப்பு மாவட்த்தைச் சேர்ந்த மாணவி ரி. தேவப்பிரியா கலைப்பிரிவில் அதிசிறப்பு சித்திபெற்று எமது மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.


மட்/வின்சன்ட் மகளிர் உயாதரப் பாடசாலையில் கல்வி கற்ற  ரி. தேவப்பிரியா என்ற மாணவியே மேற்படி சாதனையினை புரிந்துள்ளார். இவர் கடந்த உயாதரப் பரீட்சையிலே கலைப்பிரிவில் தோற்றி மாகாண மட்டத்திலே முதலாவது இடத்தினையும் அகில இலங்கை ரீதியில் 13வது இடத்தினையும் பெற்றுள்ளார். இவர் மட்டக்களப்பு திராய்மடு (சுவிஸ் கிராமம்)  கிராமத்திலே வசித்து வரும் மிகவும் வறுமைக்குடும்பத்தினைச் சோந்த ஓர் மாணவி என்பது குறிப்பிடத்தக்கது.

 இவர் மிகவும் வறிய குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரைப் போன்ற பல திறமைவாய்ந்த மாணவர்கள் வறுமையான குடும்பத்தில் பிறந்ததன் காரணமாக கல்வியை இடை நடுவிலே கைவிட்ட பல சம்பவங்கள் இடம் பெற்றிருக்கின்றன.

இவரைப் பொறுத்தவரை மிகவும் வறிய குடும்பத்தில் பிறந்தவர். இவரது கல்வியை இவர் தொடரவேண்டும். அதற்கு அவரது குடும்ப வறுமை சூழல் தடையாக இருக்கக்கூடாது அவரது எதிர்கால கல்வி நல்லபடி அமைய சமூகம் உறுதுணையாக இருக்க வேண்டும்
read more...

இலங்கை மீதான பொருளாதாரத்தடையினால் பாதிக்கப்படப்போவது அப்பாவித் தமிழர்களே..

இன்று உலக நாடுகளிலே இலங்கை மீதான பொருளாதாரத்தடை பற்றிப் பேசப்படுகின்றன. பரவலாக அனைத்து தமிழர்களுமே பொருளாதாரத்தடை கொண்டுவர வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றனர். இலங்கைத் தமிழர்களும் கூட.

இலங்கையின் இராணுவத்தினர் இறுதி யுத்தத்தின்போது அப்பாவி தமிழ் மக்களை கொடுரமாக கதறக்கதற கொன்றழித்தது. இது இன்று அம்பலமாகி இருக்கின்றது. இதன் காரணமாக இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்கவேண்டும் என்று சொல்லப்படுகின்றது. அதற்கான ஏற்பாடுகளும் இடம்பெற்று வருகின்றன.
பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டால் அதனால் ஏற்படுகின்ற மக்கள் யார் என்பதனை யாராவது சிந்தித்தார்களா? அப்பாவி மக்களே இதனால் பாதிக்கப்படப் போகின்றனர்.

அதிலும் குறிப்பாக தமிழ் மக்களே அதிகம் பாதிக்கப்பட்ப்போகின்றனர். பொருளாதாரத்தடை விதிக்கப்படுகின்றபோது தமிழ் மக்கள் வாழ்கின்ற பிரதேசங்களுக்கான வினியோகங்கள் மட்டுப்படுத்தப்படும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

யுத்தம் நடைபெற்ற காலங்களில் வடக்கு மக்கள் எவ்வாறு பொருட்தட்டுப்பாட்டை  எதிர் நோக்கினர் என்பதனை நாம் அறிவோம். இலங்கையில் பொருளாதாரத்தடை இல்லாத காலத்திலே வடக்கிலே பொருட்களின் விலைகள் எவ்வாறு உயர்ந்திருந்தன என்பதனை நாம் அறிவோம்.

பொருளாதாரத்தடை வருகின்றபோது இலங்கையிலே பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படுகின்றபோது. இலங்கை அரசாங்கம் என்ன செய்யும் தமிழர் பிரதேசங்களுக்கான  வினியோகத்தை இடை நிறுத்தும் அல்லது மட்டுப்படுத்தும்.
இவ்வாறு செய்யாது என்று சொல்ல முடியாது. இலங்கையின் பேரினவாத அரசாங்கங்கள் கடந்த காலங்களில் எமக்கு பல பாடங்களை படிப்பித்திருக்கின்றன.

தமிழர் பிரதேசங்கள் யுத்தத்தால் அழிவடைந்து அருக்கின்றது. இன்றைய தேவை என்ன? யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை கட்டியெழுப்புவதும். பாதிக்கப்பட்ட மக்களை நல்ல நிலைக்கு கொண்டு வருவதுமே.

பொருளாதாரத்தடை விதிக்கின்றபோது இவை சாத்தியமாகுமா? பொருளாதாரத்தடை இல்லாதபோதே தமிழர்களை ஓரக்கண்ணால் பார்க்கும் இலங்கை அரசாங்கம் பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டால் தமிழர்களுக்கு என்ன செய்யப்போகிறது.

பொருளாதாரத் தடை பற்றிப் பேசுபவர்கள் இவைகளைச் சிந்தியுங்கள் இலங்கை தமிழ் மக்கள் தொடர்ந்தும் அவலங்களை சந்திக்க வேண்டும் என்று விரும்புகின்றிர்களா?

இது இலங்கை அரசுக்கு ஆதரவாக எழுதப்பட்டதல்ல. தமிழர்களின் நலனுக்காக எழுதப்பட்டது.
read more...

Sunday, 19 June 2011

சணல் 4 வீடியோவும் கொலைவெறி நாய்களும் தமிழின நாய்களும்

இன்று பரவலாகப் பேசப்படுகின்ற எழுதப்படுகின்ற விடயம் சணல் 4 வீடியோ விடயமாகும். அந்த வீடியோவை என்னால் முழுமையாகப் பார்க்க முடியவில்லை.

எம் இனத்தை கதறக்கதற சித்திரைவதை செய்து வாய்விட்டுச் சொல்ல முடியாத வேலைகளைச் செய்கின்றனர். அந்த வீடியோவைப் பார்த்து எம் தமிழர்கள் கதறி அழுகின்ற விதத்தினை வைத்து கேலி செய்து ஒருவர் பதிவெழுதி இருந்தார். இவர் மனிதப்பிறவிதானா?

இங்கே வெளியிடப்பட்ட வீடியோ புலிகளுக்கு ஆதரவானதல்ல. ஒரு இனம் எப்படி சித்திரவதை செய்யப்பட்டு அழிக்கப்படுவதை காட்டுகின்ற ஆவணம். இது புலிகளுக்கு ஆதரவாக வெளியிடப்பட்டதல்ல.

இன்று தமிழர்களுக்கு ஆதரவாக எங்கு குரல் கொடுக்கப்பட்டாலும். ஏன் அதனை சிலர் புலிகளுக்கு ஆதரவானதாக மாற்றி திசைதிருப்ப நினைக்கின்றனர்.

புலிகளுக்கு எதிரானவர்கள் இருக்கலாம். அவர்கள் இந்த வீடியோவை பொய்யானவை என்று கூறுவதில் நியாயமில்லை. புலிகளுக்கு எதிரானவர்கள் தமிழர்களுக்கும் எதிரானவர்கள் என்று தங்களைக் காட்டிக்கொள்ள நினைக்கின்றனரா?

நம் இனம் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டிருக்கின்றது. கொலைகாரர்களுக்கு எதிராக குரல்கொடுக்கவேண்டிய கடமை ஒவ்வொரு தமிழனுக்கும் இருக்கிறது. அப்படி இல்லையேல் அவன் தமிழனாக இருக்க முடியாது.

புலிகளுக்கு எதிரானவர்கள் இருக்கலாம் மாற்றுக்கருத்துடையவர்கள் இருக்கலாம். நானும் பல விடயங்களில் மாற்றுக் கருத்துடையவன்தான். இங்கே புலிகளுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டிய நேரமல்ல தமிழர்களை கதறக்கதற கொலை செய்த காட்டு மிராண்டிகளுக்கு எதிராக நியாயத்துக்காக போராடவேண்டிய நேரமிது.

இங்கே தாங்கள் புலிகளுக்கு எதிரானவர்கள் மாற்றுக்கருத்துடையவர்கள் மட்டக்களப்பான் யாழ்ப்பாணத்தான் என்ற பாகுபாடு வேண்டாம் தமிழனுக்காக குரல் கொடுப்பொம் அழிக்கப்பட்ட எம் இனத்தின் நீதிக்காகக் குரல்கொடுப்போம்.

வெறுமனே அரசியல் இலாபத்தக்காகவும் மாற்றுக் கருத்துடையவர்கள் புலிகளுக்கு எதிரானவர்கள் என்பதற்காகவும் தமிழினத்துக்கு எதிராக தமிழனாகப் பிறந்த எவரும் நிற்கவேண்டாம்.

இந்த வீடியோவிற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் ஒரு முறைக்கு பல முறை வீடியோவைப் பாருங்கள் அப்போதாவது உங்கள் கல் நெஞ்சு கரையட்டும். அப்படியும் கரையவில்லையேல் எம் இனத்தை கதறக்கதற சித்திரவதை செய்து உடல் வேட்டையாடும் அந்த நாய்களுக்கும் உங்களுக்கும் வித்தியாசமில்லை.
இந்த நிலை உங்கள் மனைவி பிள்ளைகள் அக்கா தங்கைகளக்கு ஏற்பட்டிருந்தால் எப்படி இருக்கும் என்பதனை சிந்தித்தப் பாருங்கள். இந்த நேரத்தில் எங்களுக்குள் இருக்கின்ற கசப்புணர்வுகளை மறந்து  இதற்காவது ஒன்று படுங்கள்.


இது புலிகளுக்கு ஆதரவாக எழுதப்பட்டதாக நினைக்க வேண்டாம். நம் தமிழினத்துக்காக எழுதப்பட்டது.

read more...

Saturday, 18 June 2011

நாடு கடந்தும் நடுத்தெருவில்


இலங்கையிலிருந்து கட்டார் நாட்டுக்கு தொழில் வாய்ப்பிற்காக வந்த இலங்கைப்பட்டதாரிகள் வேலையற்று கட்டாரில் பல மாதங்களாக திண்டாடுவதாக முன்னர் பதிவிட்டிருந்தேன்.

முன்னைய பதிவு

கட்டாரில் திண்டாடும் இலங்கைப் பட்டதாரிகள்


பட்டதாரிகள் மட்டுமல்ல பல தொழிலாளர்கள் பல மாதங்களாக கட்டாருக்கு வேலைக்கு வந்து தங்குவதற்கு இடமோ உணவோ இன்றி பல கஸ்ரங்களை எதிர் நோக்கி வருகின்றனர்.
பட்டதாரிகள் போன்றுதான் இவர்களுக்கும் வீசா அடிக்கப்பட்டு அடையாள அட்டைகள் என்பன வழங்கப் பட்டுள்ளன.ஆனால் தங்குவதற்கு இடமோ உணவோ வழங்கப்படவில்லை.


இதே நிலைதான் பட்டதாரிகளுக்கும் ஏற்பட்டிருக்கின்றது. 4 5 மாதங்களாக உணவின்றி தங்க இடமின்றி பல அவலங்களை சந்தித்த தொழிலாளர்கள் நாட்டுக்கு அனுப்பப்படுகின்றனர்.
நாட்டுக்கு அனுப்புவதற்கான காரணம் வயது அதிகம் 30 வயதுக்குள் இருக்கவேண்டும் என்று சொல்லப் படுகின்றது. அனைவரும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர் நிலையத்தினால்
வந்தவர்கள் முகவர் நிலையத்தால் வயதுக் கட்டுப்பாடுகள் பற்றி எதுவும் சொல்லப்படவில்லை.

சரி முகவர் நிலையம் தவற விட்டுவிட்டதென்றால். அவர்களை 4 5 மாதங்கள் எதற்காக உணவின்றி தங்குவதற்கு இடமின்றி வைத்திருக்க வேண்டும். வீசா அடையாள அட்டைகளை வழங்கும்போது
அவர்களின் வயதை அறியாமல் கண்ணை முடிக்கொண்டா செய்தார்கள். இவர்களின் வயது கண்ணுக்குத் தெரியவில்லையா? இவை அனைத்துக்கும் மேல் இது ஒரு கட்டார் அரசாங்க நிறுவனம்.

இது ஒருபுறமிருக்க உயர் பதவிகளுக்காக வந்த இலங்கைப் பட்டதாரிகளையும் விரைவில் நாட்டுக்கு அனுப்பப்படப் போவதாக பேசப்படுகின்றது. இங்கு வேலைவாய்ப்பிற்காக வந்தவர்கள்
பணக்காரர்களல்ல பல இலட்சங்களை முகவர் நிலையங்களுக்கு வழங்கி வந்தவர்கள். அதிகமானவர்கள் வட்டிக்கு கடடி;வாங்கி வந்தவர்கள். அவர்களின் நிலை மிக மோசமானது.

வேலை வாய்ப்பிற்காக வந்த அனைவரையும் குறிப்பிட்ட அரச நிறுவனத்தினால் உடனடியாக பொறுப்பேற்கப்பட்டு வீசா அடிக்கப்பட்டு அடையாள அட்டையும் வழங்கப்பட்டன. ஆனால்
வேலையோ உணவோ தங்குமிடமோ எதுவும் வழங்கப்படவில்லை இன்று 4 5 மாதங்கள் சென்றபின் நாட்டுக்கு திருப்பி அனுப்புவதில் என்ன நியாயம் இருக்கின்றது.

நாட்டுக்கு திருப்பி அனுப்புபவர்கள் எதற்காக தொழிலாளர்களை பொறுப்பேற்று அடையாள அட்டை வழங்க வேண்டும் இத்தனை மாதங்கள் கஸ்ரப்பட வைத்திருக்க வேண்டும்.

பல தொழிலாளர்கள் நாட்டுக்கு அனுப்பப்பட்டுவிட்டனர். இன்னும் பலர் திருப்பி அனுப்பப்பட இருக்கின்றனர்.

நானும் அவர்களில் ஒருவன்
 
read more...

Thursday, 16 June 2011

ஒரு பெண் வேசியாகிறாள். 18 +

காட்சிப் பொருளாக்கப்பட்ட பெண்கள்எனும் பதிவின் தொடராகவே இடம் பெறுகின்றது. ஒரு பெண் ஒரு பெண் தன் கணவனைத் தவிர வேறு ஓருத்தருடன் பாலியல் ரீதியில் தொடர்பு வைத்திருந்தால் அவளை வேசி என்று சமூகம் சொல்கின்றது. ஆனால் ஒரு ஆண் எத்தனை பேருடன் தொடர்பு வைத்திருந்தாலும் அவனைப்பற்றி எவரும் கணக்கெடுப்பதில்லை.

 ஒரு பெண் பலருடன் தொடர்பு வைத்துக் கொள்ள பல காரணங்கள் இருக்கின்றன. பலர் இதனை ஒரு தொழிலாக செய்து வருகின்றனர். பண்டைய தமிழ்ச்சமூகத்தில் "தாசித் தொழில்" என்று அழைக்கப்பட்டு வந்தது

 பாலியல் தொழில் செய்யும் பெண்ணைத் தமிழில் விலைமகள், வேசி, பொதுமகள், கணிகை, அல்லது விபச்சாரி என அழைக்கப்படுகின்றனர். 
பெண்களைப் பொறுத்தவரையில். தான் விபச்சாரத்துக்கோ அல்லது பல ஆண்களுடனோ பாலியல் தொடர்பு வைத்துக் கொள்வதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. பலர் இதனை ஒரு தொழிலாகச் செய்கின்றனர். இதற்கும் பல காரணங்கள் இருக்கின்றன. வறுமை வேலையில்லாப் பிரச்சினை என்று
சொல்லிக் கொண்டே போகலாம்.

இதனை தொழிலாகச் செய்கின்ற விலை மாதர்களை நாடி பல பணம் படைத்தவர்கள் வருகின்றனர். இதன்,முலம் விலை மாதர்கள் அதிகமான வருமானத்தை
ஈட்டுவதோடு அதிக வருமானம் பெறும் ஒர தொழிலாகவும் இத் தொழில் இருக்கின்றது.இத் தொழிலைச் செய்பவர்கள் விலை மாதுகள் என்றால் இவர்களை
நாடிச் செல்கின்ற ஆண்களை என்னவென்று சொல்வது.

இன்று இலங்கையைப் பொறுத்தவரையில் எல்லோராலும் சொல்லப்படுகின்ற விடயம் சமுக சீர்கேடு அதிகரித்திருக்கின்றன என்ற குற்றச்சாட்டாகும்;. இக்
இக் குற்றச்சாட்டு முற்றிலும் உண்மையானது. நான் பல இடங்களுக்கு சென்று வருகின்ற ஒருவன் பல விடயங்களையும் பல சமுக சீர் கேடுகளையும் கண்முன்னே கண்டிருக்கின்றேன். இந்த சமுக சீர் கேடுக்கான காரணம். உள்நாட்டு யுத்தமும் வேலையின்மையும். வறுமையுமாகும்.

இவை தொடர்பிலே சில விடயங்களையும் சம்பவங்களையும் குறிப்பிட விரும்புகின்றேன். என்னால் நேரடியாக அவதானிக்கப்பட்ட அறியப்பட்ட விடயங்கள் 

 
இவை ஒரு 20 வயதுடைய பெண் தன்னுடைய கணவனை யுத்தத்தின் போது பறிகொடுத்து விட்டார். அந்த பெண்ணுக்கு 3 வயதில் ஒரு குழந்தையும் இருக்கின்றது. கணவனை இழந்ததும் தனிமைப் படுத்தப்பட்டுவிட்டாள்இ

இவளுக்கு தொழிலும் இல்லை. இன்னொருவனை திருமணம் செய்வதற்கும் சமுகம் இடம் கொடுக்கவில்லை. இவள் வாழ்ககையை எவ்வாறு கொண்டு
நடாத்துவது. தன் பிள்ளையை நல்ல நிலைக்கு கொண்டு வருவது. அவள் இன்னொரு திருமணம் செய்ய எத்தணித்தபோது அவளது சமுகம் அதனை
ஏற்றுக் கொள்ளவில்லை.

அவள் வாழ வேண்டிய வயது அவள் திருமணம் செய்து இரண்டு வருடங்கள்தான் கணவனோடு வாழ்ந்திருப்பாள். தான் தனிமைப் படுத்தப் பட்டமை ஒருபுறம்
பொருளாதார நிலை ஒருபுறமிருக்க. அவளுக்கு இப்போது வயது 20. காம உணர்ச்சிகள் என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் இருக்கின்றது. கணவனோடு இரண்டுவருடங்கள் மட்டுமே வாழ்ந்த இந்த இளம் பெண்ணுக்கு கணவணை இளந்த பின் காம உணர்ச்சி இல்லாமல் போய் விடுமா?

இந்தப் பெண்ணின் வாழ்க்கை கணவனை இழந்ததோடு முடிந்துவிட்டதா? ஏன் இந்த சமுகம் இவைகளைப்பற்றி சிந்திப்பதாக இல்லை. இவளை சமுகம் இன்னொரு
திருமணம் செய்யவேண்டாம் என்று கட்டப்படுத்தியதன் எதிரொலி இன்று தனிமையில் இருக்கும் அவளது வீட்டுக்கு தினம் ஒரு ஆண் சென்று வருகின்றான்.
இவள் இவ்வாறு செல்லக் காரணம் அவளது சமுகமே.

இவள் மட்டுமல்ல யுத்தத்தின்போது கணவனை இளந்த பல இளம் பெண்களின் நிலை இதுதான். இவர்கள் விலை மாதுகள் அல்ல தன் இளம் வயதிலே கணவனை

இழந்துவிட்டார்கள். தன் காம உணர்வுகளை கட்டுப்படுத்த முடியாமல் பல ஆண்களை நாடுகின்றனர். இது சமுக சீரளிவு என்று சொல்லமுடியுமா. கணவன் இறந்ததோடு அவளுக்கு ஆசாபாசங்கள் இருக்கக்கூடாதா?

கணவனை இழந்ததும் பெண்கள் திருமணம் செய்யக்கூடாது என்று சொல்லும் சமுகம். ஒரு ஆணின் மனைவி இறந்துவிட்டால் உடனடியாக அவனுக்கு
மறுமணம் செய்து வைக்கின்றனரே இது எந்த வகையில் நியாயமானது. ஆண்களுக்கு மட்டும்தான் ஆசாபாசங்கள் இருக்கின்றதா?

இது ஒரு புறமிருக்க சமுக சீர்கேடு தொடர்பிலே நான் அதிகம் அவதானித்த விடயம் கணவன் வெளிநாட்டிலே இருக்கின்ற பெண்கள் வேறு ஆணுடன்

அல்லது பல ஆண்களுடன் தொடர்பு வைத்திருக்கின்றனர். எல்லா பெண்களும் அவ்வாற இல்லை ஒரு சிலர் இருக்கின்றனர்.

இவர்கள் இவ்வாறு தொடர்பு வைத்திருக்க காரணம் என்ன. பணத்தக்காக இவர்கள் மற்றவர்களுடன் செக்ஸ் தொடர்பு வைத்துக் கொள்ளவில்லை.

தமது காம உணர்ச்சிகளை திர்த்துக் கொள்வதற்காகவே வேறு ஆண்களை நாடுகின்றனர். இங்கே யார் தவறு செய்கின்றனர். தமது மனைவியின்
உணர்வுகளை புரிந்து கொள்ளக்கூடிய அவளது கணவன் விடுகின்ற தவறுதான் காரணம்.

நாங்கள் ஒரு பிரதேசத்திலே இரவு 9 மணிக்குப் பின்னர் வீதியில் நிற்பதற்கு பயப்படுவதுண்டு. நிற்பதே இல்லை நின்ற பலர் இராணுவத்தினரால் அடி வாங்கிய சம்பவங்களும்

இடம் பெற்றிருக்கின்றன.

 

அந்த வீதியிலே இருக்கின்ற ஒரு பெண்ணின் கணவன் வெளிநாட்டில் இருக்கின்றார். அவள் இப்போது பலருடன் தொடர்பு. இரவு 9 மணிக்குப்பின்
இராணுவத்தினரின் ஆட்சி அவளது வீட்டில் நடக்கும். அவள் அவ் வீட்டில் தனிமையில் இருப்பவள். இவள் வேசியானதற்கு யார் காரணம்? இதே நிலை பல பெண்களுக்கு இது ஒருபுறமிருக்க ஒரு இளம் பெண் அவளுக்கு பொருளாதார சிக்கல் இல்லை குடுப்பநிலை அப்படி. திருமணம் செய்ய வேண்டிய வயது ஆனால் திருமணம் செய்யவில்லை
தினம் ஒருத்தனுடன் உல்லாசமாக இருக்கின்றாள். இது இவள் செய்யும் தவறுதான். தன் கணவன் தன்னை திரப்திப் படுத்தவில்லை என்பதற்காக வேறு ஆண்களை நாடுகின்ற பெண்களும் இருக்கின்றனர்.

இவை எல்லாம் ஒரு புறமிருக்கட்டும் ஒரு பெண் இன்னொருவனுடன் தொடர்பு வைத்திரந்தால் அவளை வேசியாகக் காட்டும் சமுதாயம் ஒரு ஆண் எத்தனை பெண்களுடன்தொடர்பு வைத்திருந்தாலும் அவனைப்பறிறி பேசாதது ஏன்? ஒரு ஆண் பல பெண்களுடன் தொடர்பு வைத்திருந்தால் அதனை அவனது வீரத்துக்கு ஒப்பிடுபவர்களும் அல்லாமல் இல்லை.


யாவும் உண்மை  சம்பவங்கள்...
தொடரும்...


read more...

Tuesday, 14 June 2011

கச்சதீவு யாருக்கு? இலங்கை இந்திய அரசியல்வாதிகளின் காய் நகர்த்தல்கள்

பாக்கு நீரிணையில் இருக்கும் கச்சதீவு இலங்கைக்கு சொந்த மான ஒரு தீவு. இத்தீவின் நிர்வாகம் இலங்கையின் இறை மைக்கு உட்பட்டதாக அமைந்திருக்கிறது.


தமிழ்நாட்டின் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா கச்சதீவை மீண்டும் இந்தியா இலங்கையிடம் இருந்து பறித்து தமிழ்நாட்டின் ஒரு பிரதேசமாக இணைத்துக் கொள்ள வேண்டுமென்று மேற்கொள்ளும் போராட் டம் என்றுமே வெற்றியடையப் போவதில்லை என்று கடற்றொழில், நீர்வள அபிவிருத்தித் துறை அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.


இந்தியா சர்வதேச சட்டங்களை மதித்து நடக்கும் உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடாகும். எனவே, இந்திய அரசாங்கம் எக் காரணம் கொண்டும் செல்வி ஜெயலலிதாவின் கோரிக்கைக்கு செவிமடுத்து செயற்படப் போவதில்லை. இலங்கைக்கும் இந்தியா விற்கும் இடையிலான பல்லாண்டு காலம் நிலைத்திருக்கும் நல்லுற வும், பரஸ்பர ஒத்துழைப்பும் கச்சதீவு பிரச்சினையினால் என்றுமே சீர்குலைந்துவிடாது எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.


1974ம் ஆண்டில் இந்தியாவின் பிரதம மந்திரியாக இருந்த இந்திரா காந்தி அம்மையாருக்கும், இலங்கைப் பிரதம மந்திரி சிறிமாவோ பண்டாரநாயக்க அம்மையாருக்கும் இடையிலிருந்த நட்புறவும், ஒத்துழைப்பு காரணமாகவே இந்திய அரசாங்கம் கச்சதீவு இலங் கைக்கு தான் சொந்தமானது என்ற தீர்க்கமான சரியான முடிவை எடுத்து, அதனை அவ்வாண்டில் நிறைவேற்றப்பட்ட இந்திரா – சிறிமாவோ ஒப்பந்தத்தின் மூலம் இலங்கைக்கு தாரைவார்த்துக் கொடுத்தது.


இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடும் வரையில் இலங்கை, இந்திய கடற் றொழிலாளர்கள் கடலில் நீண்டநேரம் மீன்பிடித்த பின்னர் கச்சதீவு கரையில் இறங்கி, அங்கு சில மணித்தியாலங்கள் ஓய்வெடுத்து தாங்கள் கொண்டுவந்த ஆகாரத்தை சமைத்து வயிறாற புசித்த பின்னர் மீண்டும் ஆழ்கடலுக்கு சென்று மீன்பிடிப்பார்கள்.


இத்தகைய சந்தர்ப்பங்களில் இலங்கை மீனவர்களுக்கோ, இந்திய மீன வர்களுக்கோ இடையில் எக்காரணம் கொண்டும் கசப்புணர்வு களோ, வன்முறைகளோ ஏற்பட்டதில்லை. அதற்கு காரணம் கச்ச தீவில் இருக்கும் ஒரே ஒரு கட்டடத்தில் அமைந்திருக்கும் புனித அந்தோனியாரின் சிறிய தேவாலயமாகும். அங்கு மீனவர்கள் இந்துக் களாகவோ, கிறிஸ்தவர்களாகவோ இருந்தாலும் கடலில் தங்களை வழிகாட்டி காப்பாற்றும் தெய்வமாக மதிக்கும் புனித அந்தோனியாரின் திருப்பாதங்களில் மண்டியிட்டு அவரது ஆசிர்வாதத்துடனேயே தங்கள் கடற்றொழிலை ஆரம்பிப்பதுண்டு.

ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதத்தில் நடைபெறும் கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவில் இலங்கையிலிருந்தும், இந்தி யாவில் இருந்தும் நூற்றுக்கணக்கான மக்கள் சென்று கலந்து கொள் வார்கள். இந்த சந்தர்ப்பத்தில் இந்தியர்கள் தங்கள் கைவசமுள்ள சேலை போன்ற பலதரப்பட்ட பொருட்களை அங்கு கொண்டு வந்து இலங்கைப் பயணிகளுக்கு விற்பனை செய்வார்கள். அது போன்று இலங்கையரும் இந்தியாவில் அன்று தட்டுப்பாடக இருந்த தேங்காய் எண்ணெய், சவர்க்காரம் போன்ற பொருட்களை இந்தியர்களுக்கு விற்பனை செய்வார்கள்.


இரு நாட்டு மக்களுக்கிடையில் இருந்த இந்த நல்லுறவு இலங்கையில் பயங்கரவாதம் தோன்றிய பின்னரே பாதிப்பிற்குள்ளானது. அதற்கு பின்னரே பாதுகாப்பு காரணங்களுக்காக இலங்கை கடற்படையி னரின் கெடுபிடிகளும் ஆரம்பமாகின.


70ம் ஆண்டு தசாப்தத்தில் சிறிமாவோ பண்டாரநாயக்க அம்மையா ரின் அரசாங்கம் இலங்கைக்கு வெளிநாட்டிலிருந்து உப உணவுப் பொருட்களின் இறக்குமதியை முற்றாக தடை செய்த போது, இலங்கையில் ஒரு இறாத்தல் செத்தல் மிளகாய் 45ரூபாவுக்கு விற் பனையாகியது. இது ஒரு பெரும் விலை அதிகரிப்பு என்பதனால் அன்று மக்கள் செத்தல் மிளகாய்க்கு பதில் மிளகையே காரத்தை அதிகரிப்பதற்காக பயன்படுத்தினார்கள்.


இந்த கச்சதீவு திருவிழா காலத்தில் இந்தியர்கள் ஒரு இறாத்தல் மிள காயை 4 ரூபாவிற்கு கச்சதீவில் விற்கும் போது அவற்றை எமது மக்கள் மகிழ்ச்சியுடன் வாங்கிக் கொள்வார்கள். கச்சத்தீவு இவ்விரு நாடுகளின் நட்புறவின் மையமாக அன்று விளங்கி வந்தது.


தமிழ் நாட்டின் அரசியல்வாதிகள் கச்சதீவையும், கடற்றொழிலாளர்களின் பிரச்சினையையும் அரசியலாக்கி தமிழ்நாட்டு மக்களின் அவதான த்தை திசைதிருப்பி மாநில அரசாங்கத்தின் பலவீனங்களை மறை த்துவிட எத்தனிக்கின்ற போதிலும் கச்சத்தீவுப் பிரச்சினை இலங்கை இந்திய நல்லுறவுக்கு எவ்வித பாதிப்புகளையும் ஏற்படுத்தப் போவதில்லை என்று டாக்டர் ராஜித்த சேனாரத்ன மேலும் தெரி வித்துள்ளார்.


இன்றும் கூட கச்சதீவு இலங்கையின் இறைமையின் கீழ் வரும் ஒரு பிரதேசமாக இருக்கின்ற போதிலும் அங்கு இந்திய மீனவர்கள் அனுமதியின்றி வந்து தங்கியிருந்து செல்வதற்கு இந்த கச்சதீவு உடன்படிக்கை இடமளிக்கிறது. இவ்விதம் இந்திய மீனவர்களுக்கு கச்சதீவிற்கு வந்து செல்வதற்கு பூரண உரிமையை இருக்கின்ற போதிலும் தமிழ்நாட்டின் மாநில அரசாங்கம் கச்சத்தீவின் மீது உரிமை கொள்வதற்கு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்து நாம் உண்மையிலேயே வேதனை அடைகின்றோம்.


பயங்கரவாதம் ஒழிக்கப்பட்ட பின்னர் இலங்கையில் மீண்டும் நிரந்தர அமைதியும், சமாதானமும் நிலைகொண்டிருக்கும் இவ்வேளையில் தமிழ் நாட்டிலுள்ள சில அரசியல் தலைவர்கள் கச்சத்தீவு விடயத் தில் அரசியல் இலாபம் தேட எத்தனிக்கும் முயற்சிகளை இனி மேலாவது கைவிட வேண்டும். இது இரு நாடுகளுக்கிடை யிலான நல்லுறவு மேலும் சிறப்புற்று விளங்குவதற்கு உதவியாக அமையும்.

நன்றிகள் - உண்மைகள்
read more...

Monday, 13 June 2011

காட்சிப் பொருளாக்கப்பட்ட பெண்கள்

பெண்கள் பற்றிய தொடர் பதிவொன்றை முன்னர் இடுகையிட்டிருந்தேன். அதன் தொடராக பதிவெழுத இருக்கின்றேன். அத்தொடரை தொகுத்து ஒரு பதிவாக தருகின்றேன்.


இப் பதிவு ஆண்களையோ, பெண்களையோ குற்றம் சொல்வதற்காக அல்ல. என்னால் அறியப்பட்ட  சில சம்பவங்களும் நான் என்னக்குள்ளே கேட்டுக்கொண்ட கேள்விகளுமே

இன்று பெண்ணடிமை பற்றி பேசப்பட்டாலும். பெண்களுக்கு எதிரான  வன்முறைகளுக்கு எதிராகா பல்வேறுபட்ட அமைப்புக்கள் குரல்கொடுத்து வந்தாலும். இன்று பெண்ணடிமை இன்று இல்லையா என்று கேட்டால். பதில் கேள்விக்குறிதான்.

இன்று பெண்ணடிமை இல்லை, பெண்களுக்கு எதிரான வன்முறைகள் இல்லை என்று சொல்ல முடியாது. பெண்ணடிமை என்று சொன்னாலே எல்லோரும் பெண்களை ஆண்கள்தான் அடிமைப் படுத்துகின்றனர் என்று கருத்திலெடுத்துக் கொள்கின்றனர். ஆண்கள் மட்டுமல்ல இன்று பெண்களை பெண்களே அடிமைப் படுத்துகின்ற நிலை பரவலாக இருக்கின்றது. பெண்கள் பல்வேறு வழிகளிலே பல்வேறு காரணங்களுக்காக  அடிமைப் படுத்தப் படுவதோடு வன்முறைகளுக்கும் ஆளாக்கப் படுகின்றனர்.

 பெண்களை ஏன் நாம் இரண்டாம் நிலைக்கு தள்ளுகின்றோம். பெண்களும் எங்களைப் போன்ற மனிதர்களேதான்.  அவர்களுக்கும் எல்லோர்போலவும் சம உரிமை இருக்கின்றது. ஆனால் என்ன செய்கின்றோம் பெண்களை சிலர் (பெண்கள் உட்பட) அடக்கியாள நினைக்கின்றோம். இதனால் சில பெண்கள் தாங்களாகவே பெட்டிப்பாம்பாக வீட்டுக்குள்ளேயே அடங்கி விடுகின்றனர்.

இந்த அடக்கு முறைகளையும் மீறி ஒரு பெண் தலை நிமிர்ந்து வாழ நினைத்தால், அடக்கு முறைகளுக்கும், சவால்களுக்கும் முகம் கொடுத்து அவள் சம உரிமையோடு முன்னேற நினைத்தால் அவளை தவறான கண்ணோட்டத்தில் பார்க்கின்ற சமூகமும் இருக்கின்றது. இதனால் அந்தப் பெண்ணால்  தொடர்ந்துதான் முன்னேற முடியுமா?

பெண்களுக்கு சில சமுக கட்டுப்பாடுகள் இருக்கின்றன. அதேபோல் ஆண்களுக்கும் கட்டுப்பாடுகள் இருக்கின்றன. ஆனால் பெண்கள் அந்த கட்டுப்பாட்டை சிறிது மீறினாலே   அவளைப் பற்றி இலவச விளம்பரம் செய்கின்ற மனிதர்களும் ஊடகங்களும் சில ஆண்கள் செய்கின்ற காம லீலைகளை ஏன் அரங்கேற்ற மறுக்கின்றன.

இன்று எத்தனை போலிசாமியார்களுக்கு எத்தனை ஊடகங்கள் விலைபோய் இருக்கின்றன. அவர்களின் காம லீலைகளை அரங்கேற்றலாம்தானே. அதனை விடுத்து ஒரு பெண் தெரிந்தோ தெரியாமலோ ஒரு தவறை செய்தால் ஏன் அவளை மட்டும் நடத்தை கெட்டவள் என்ற பெயர் சூட்ட வேண்டும்.

ஒரு பெண் விபச்சாரத்தில் ஈடுபட்டால் என்றால் அவளை கைது செய்து விபச்சாரி எனும் பட்டத்தோடு. உலகிக்கே அவளை மானம் கெட்டவள் என்று வெளிச்சம் போட்டுக்காட்டும் இந்த ஊடகங்களும் நபர்களும் ஏன் அந்த பெண்ணுடன் விபச்சாரத்தில் ஈடுபட்ட ஆணை வெளிச்சத்துக்கு கொண்டுவர மறுக்கின்றது.

பெண் தவறு செய்தால் நடத்தை கெட்டவள். ஆண் தவறு செய்தால் நல்லவனா?  ஒரு ஆண் ஒரு விபச்சாரியிடம் போகவில்லை என்றால் அவள் எப்படி விபச்சாரி ஆகமுடியும். இங்கே பெண்ணில் மட்டும் தவறில்லை. ஆண்களிலும் தவறு இருக்கின்றது. அதனை விடுத்து பெண்களுக்கு மட்டும் விபச்சாரி பட்டம் வழங்குவது என்ன நியாயம் இருக்கிறது?

இன்று பெண்களை காட்சிப் பொருளாக பார்க்கின்ற நிலை இருக்கின்றது.  பெண்கள் காட்சிப் பொருளாக பயன்படுத்தப் படாத இடம் இல்லை என்றேதான் சொல்லவேண்டும். கணவன் மட்டுமே கண் காணும் அழகை சில பெண்கள் காட்சிப் பொருளாக விற்றுக்கொண்டு இருக்கின்றனர்.

 விளம்பரங்களிலே அரை குறை ஆடைகளோடு ஒரு பெண் வந்தால்தான் அந்த பொருளுக்கு நல்ல விற்பனை வாய்ப்புக்கள் கிடைக்கும் என்ற நிலைக்கு வந்துவிட்டது. எப்படிப்பட்ட ஒரு தரமற்ற பொருளையும் ஒரு பெண்ணை அரை குறை ஆடைகளோடு காட்டி அதிக கேள்வியை ஏற்படுத்தி பொருளை இலகுவாக விற்க முடியும் என்ற நிலை தோன்றிவிட்டது.

இன்று வெளிநாடுகளில் மட்டுமல்ல எமது நாட்டை எடுத்துப் பாருங்கள் வீதிகளிலே இருக்கின்ற விளம்பரப் பலகைகளில் அதிகமானவை எப்படி இருக்கின்றன. இந்த சமுக சீர்கேடு தேவைதானா? அது அவர்களின் சுதந்திரம் என்று சொல்ல வேண்டாம் ஒருவரின் சுதந்திரம் மற்றவரின் மூக்குவரை செல்லாதவரைக்கும்தான். சுதந்திரம் இருக்கலாம் ஆனால் ஒரு சமுகத்தின் கலாசாரத்தை பதிக்காத வகையில் அந்த சுதந்திரம் இருக்க வேண்டும்.

சில விடயங்களைப் பேசுகின்றபோது சில எதிர்ப்புக்கள் வரலாம் என்பதனால் மேலோட்டமாக முந்திய இடுகையிலே  மேலோட்டமாக சில விடயங்களை குறிப்பிட்டு இருந்தேன். இருந்தாலும் இத்தொடருக்கு பாரிய ஆதரவு இருப்பது சந்தோசப்பட வேண்டிய விடயமாக இருக்கின்றது. இன்னும் விரிவாக ஆராயலாமே, தொடர்ந்து எழுதுங்கள் என்று பலரும் வேண்டிக்கொண்டதுக்கு இணங்க அனைத்து விடயங்களையும் சற்று விரிவாக ஆராயலாம் என்று இருக்கிறேன்.
அத்தோடு கடந்த இடுகையிலே கருத்துரைகளிலே சிலர் கேட்ட கேள்விகளுக்குரிய விளக்கங்களை. இங்கே கொடுக்கவும் இருக்கிறேன்.


பெண்ணடிமைத் தனமென்பது எங்கிருந்து ஆரம்பிக்கின்றது? பெண்களுக்கு எதிரான  வன்முறைகள் எங்கே ஆரம்பிக்கின்றன என்று பார்த்தால் ஒரு பெண்ணுக்கு தன் வீட்டிலேயும் குடும்பத்திலேயும்தான் ஆரம்பிக்கின்றது. அதனையும் விட ஒரு படி மேலே சென்று பார்ப்போமானால். பெண்களுக்கு எதிரான  வன்முறைகள் பெண் பிறப்பதற்கு முன்னரே கருவிலேயே ஆரம்பித்து விடுகின்றன. எத்தனை பெண் பிள்ளைகள் கருவிலேயே அழிக்கப்பட்டிருக்கின்றன, அழிக்கப் பட்டுக்கொண்டிருக்கின்றன.


எதற்காக இந்த பெண் பிள்ளைகள் கருவிலேயே அழிக்கப்படவேண்டும். இதற்கு அந்த பெண்ணும் காரணமாக இருக்கின்றாளே எனும்போது நாம் வெட்கித்தலை குனிய வேண்டி இருக்கின்றது. கருவிலே இருப்பது ஆண் குழந்தை என்றால் சந்தோசப்படும் பெண் கருவிலிருப்பது பெண் குழந்தை என்றால் அதனை அளக்க நினைப்பது ஏன். தானும் ஒரு பெண்தான் என்பதனை மறந்து விடுகின்றாளா?


சரி ஒரு பெண்குழந்தை பிறந்து விட்டது என்றால். அவளை எந்தளவு அடக்கி ஒடுக்க முடியுமோ எந்தளவுக்கு  அடக்கி ஒடுக்க நினைக்கும் சமூகமும் இல்லாமல் இல்லை. ஆண்களுக்கும், பெண்களுக்கும் சில சமூகக் கட்டுப்பாடுகள் இருக்கின்றன. ஆனாலும் இங்கே நடப்பது என்ன பெண்களை பெண்களை வெளியில் செல்ல விடாமல் பெட்டிப்பாம்பாக வீட்டுக்குள்ளேயே அடக்கி வைக்கின்ற எத்தனை பெற்றோர் இருக்கின்றனர். 


பெண் என்றால் அடுப்படிக்கு மாத்திரமே என்று சொல்லுகின்ற எத்தனையோ பெற்றோர் இருக்கின்றனர். இவர்களின் இந்த மூட எண்ணங்களால் எத்தனையோ பெண்கள் கல்வி இழந்து, தனது வாழ்க்கையையே தொலைத்து நிக்கின்றனர். 


இத்தனையையும் தாண்டி ஒரு பெண் திருமணம் என்று ஒரு படி சென்றுவிட்டால். சில கணவன்மார்களால் படுகின்ற சித்திர  வதைகள்தான் எத்தனை?  போதாக்குறைக்கு மாமியாரும் வந்து சேர்ந்து விடுவார். தன் மனைவியை அடிமைபோல் நடாத்துகின்ற எத்தனை கணவன்மார்களை பார்த்திருக்கின்றோம், தனக்கு சமைத்துப் போடுவதற்கும், தனது உடல் சுகத்துக்குமே பெண் என்று பெண்ணை ஒரு போகப் பொருளாக பார்க்கின்றவர்கள் எத்தனை  பேர் இருக்கின்றனர். (மனைவியை தெய்வம்போல் போற்றுகின்ற கணவன்மாரும் இல்லாமல் இல்லை) மாமியார்கள் விட்டார்களா பெண்களை எத்தனை பாடுபடுத்துகின்றனர். இந்த மாமியார்கள் ஒன்றை புரிந்து கொள்கின்றார்களா தானும் ஒரு பெண்தான் என்பதனை. 

முந்திய இடுகையிலே நண்பர் ரோஸ்விக் தனது கருத்திலே ...

கூர்ந்து நோக்குங்கள் எல்லா இடங்களிலும் பணம் ஒழிந்திருப்பது தெரியும். பெண் பணத்திற்காக விபச்சாரம் செய்கிறாள். பெண்களை விபச்சாரி என்று எழுதும்போது தான் பத்திரிக்கைகள் அதிகம் விற்கிறது. அங்கும் பணம். மாடலிங் மற்றும் திரைத்துறையில் அதிக பணம் பெற வேண்டி இவர்கள் ஆடை அவில்பிற்கு தயாராகிறார்கள். அதன் மூலம் படமும் நிறைய பணம் ஈட்டும் என்பதால் தயாரிப்பாளர்களும் உடன் படுகிறார்கள்.

பெண்களை இது போன்ற காரியங்களில் இருந்து வெளி வர சொல்லுங்கள். கட்டாயப்படுத்தும் ஆண்களை கால்களுக்கிடையில் மிதிப்போம். 
பெண்களை இது போன்ற விஷயங்களில் ஈடு படக்கூடாது என்று தடை போட்டால்.... அதற்கும் ஒரு கூட்டம் வரும், எங்கள் சுதந்திரம் பறிக்கப்படுகிரதேன்று....

பெண்களின் அழகு ஆண்களை மட்டுமல்ல... பெண்களையும் கவரக்கூடியது என்று நீங்கள் கருதினால், சில பெண்களை விளம்பரத்தில் இருந்து மட்டுமல்ல... விபச்சாரத்தில் இருந்தும் வெளிக்கொணர முடியாது. 

என்று சொல்லி இருந்தார் உண்மைதான் இன்று பணத்துக்காக மனிதன் எதனையும் செய்யத்துணிந்து விட்டான். விளம்பரம் சினிமா போன்ற துறைகளிலே தனது கவர்ச்சியைக் காட்டி பிழைப்பு நடாத்துகின்ற , எல்லா பெண்களிலும் நாம் தவறு சொல்ல முடியாது. எத்தனை பெற்றோர் பணத்துக்கு ஆசைப்பட்டு தனது பிள்ளை விரும்பாமலே சினிமா துறைக்குள் நுளைத்திருக்கின்றார்கள். சரி ஒரு பெண் தவறான முறையில் செல்கின்றாள் என்றால் அதனை முடிந்தவரை பெற்றோரால் தடுக்க முடியும் ஆனால் சில பெற்றோரின் அசமந்த போக்கினாலே இன்று பல பெண்கள் இத்துறைகளை நாடிச்செல்ல வேண்டி இருக்கின்றது.

இன்று விபச்சாரிகளாக இருக்குமதிகமான பெண்கள் பணத்துக்காகவே இந்த தொழிலை செய்கின்றனர். பெற்றோரால் கைவிடப்பட்டு, கணவனால் கைவிடப்பட்டு, சொந்தங்களால் தூக்கி எறியப்பட்டு தான் வாழ வழியின்றி இத் தொழிலுக்கு வந்த பெண்களே அதிகம். இந்த இடத்திலே இப்படிப்பட்ட பெண்களை நாம் எந்த வகையில் குற்றம் சொல்ல முடியும். இவள் சார்ந்த சமுகத்தின் மீதுதான் குற்றம் இந்த சொல்லவேண்டும். 

சரி அந்தப் பெண் தெரிந்தோ தெரியாமலோ தவறு செய்துவிட்டாள். எல்லாவற்றையும் விட்டு தடைகளை எல்லாம் தகர்த்தெறிந்துவிட்டு வெளி உலகுக்கு வருகின்றாள். அப்போது இந்த சமுகம் அவளை ஏற்கின்றதா? இல்லையே நடத்தை கெட்டவள் என்று ஒதுக்கி வைக்க நினைக்கின்றது. அவள் மணம் திருந்தி வந்துவிட்டாள் அவளை சமுகத்தில் ஒருத்தியாக ஏற்றுக்கொள்கிறதா சமுகம்? இல்லையே.

ஆனால் ஒரு பெண் இவ்வாறான நடவடிக்கைகளினால் நடத்தை கெட்டவனாக இருந்தால் அடுத்த நிமிடமே மறந்து விடுகின்றோம் ஏன் இந்த நிலை. நண்பர் கோபி தனது கருத்துரையிலே  சொன்னதுபோல் பெண் செய்கின்றபோது விபச்சாரமாகவும் ஆண்கள் செய்கின்றபோது ஆண்மையாகவும் பார்க்கின்றது இந்த சமுகம்.
ஒரு ஆணுடன் அதிகமாகப் பேசினாலே கட்டுக்கதைகள் கட்டி கெட்டவள் என்று பட்டம் கொடுக்கும் சமுகம் ஒரு ஆண் வீரம் பேசுவான் நான் அவளோடு அப்படி நடந்தேன், இவளோடு இப்படி நடந்தேன் என்று. இதனை கேட்டு இரசிக்கிறது நம் சமுகம். இது எந்த விதத்தில் நியாயமானது. ஏன் நாம் பெண்களை இந்த அளவுக்கு பெண்களை பார்க்கின்றோம்.

மதுவதனன் மௌ. தனது கருத்திலே....


//பதிவுகளில் பெண்களின் கவர்ச்சிப் படத்தைப் போடுவதில் எனக்கு சிறிதும் உடன்பாடில்லை. என்ன செய்வது ஆண்கள் ரசிக்கிறார்கள் என்பதற்காக கவர்ச்சிப் படத்தைப் போடுகிறார்கள்.


ஒவ்வொரு முறையும் பதிவுகளில் போடப்படும் கவர்ச்சிப் படங்களைப் பார்க்கும்போதெல்லாம், அதைப் பார்க்கும் பெண்கள் என்ன சிந்திப்பார்கள் என்பதுதான் எனது மனதில் ஓடும்.//


என்று தனது ஆதங்கத்தை சொல்லி இருந்தார். ஒருவரை நாம் இதனைப் பதிவிட வேண்டாம் என்று சொல்ல முடியாது. இருந்தாலும் பெண்களின் அரை குறை ஆடைகளுடனான கவர்ச்சிப் படங்களை போட்டு பதிவிடும்போது இளைஜர்கள் வலைப்பதிவுக்கு வருவது அதிகம்தான். ஆனாலும் எல்லோரும் வர மாட்டார்கள். இந்த படங்களை பார்த்ததுமே சங்கடப்படுகின்றவர்கள் எத்தனையோ பேர் இருக்கின்றனர். 


வீதிகளிலே விளம்பரப் பலகைகளில் இருக்கும் படங்களைவிடவா நாங்கள் போடுவது அசிங்கம் என்று கேட்கலாம் ஆனாலும் வீதிகளிலே இருக்கின்ற அந்த படங்களைப் பார்த்து செய்வதறியாது மனதை சன்சலப்  படுத்திக்கொண்டு போகின்ற எத்தனையோ பெண்கள் இருக்கின்றனர். ஒரு பதிவர் நல்ல விடயங்களை பதிவிட்டிருந்தாலும் இந்த படங்களால் அந்த பதிவையே பார்க்காதவர்களும் இருக்கின்றனர். 


படம் பார்க்க வருபவர்களைவிட எங்கள் கருத்துக்களுக்காக வருபவர்களே எங்களுக்கு முக்கியம். இப்படிப்பட்ட படங்களை போடுகின்ற வலைப்பதிவுகளை குடும்பத்தோடு இருந்து பார்க்கின்றவர்கள் பார்ப்பதற்கு முன்வரமாட்டார்கள்.

இத்தொடர் நான் நினைத்ததனைவிட பலரும் பாராட்டி இருப்பதோடு தொடரும்படியும் கருத்துரைகளில் மாத்திரமல்ல சிலர் மின்னஞ்சல்களும் அனுப்பி இருந்தார்கள். அதிலே சிங்கப்பூரிலிருந்து வந்த ஒரு மின்னஞ்சலிலே இத்தொடரி  பாராட்டியிருப்பதோடுதொடு பல விடயங்களை கேள்விகளாக கேட்கப்பட்டிருக்கின்றன. அந்த கேள்விகளுக்கான ஏன் பார்வையிலான பதில்கள் அடுத்த பகுதியில் தருகின்றேன்.
இத் தொடர் பதிவு தொடர்பாக எனக்கு மின்னஞ்சலில் வந்த சில கேள்விகளும் அதற்குரிய என் கருத்துக்களும் உங்களுக்காக. மின்னஞ்சல் நீளமானதாகையால் முக்கியமான பகுதியை மட்டுமே தருகிறேன்.
//மனைவியை இழந்தால் கணவனுக்கு ஏதாவது பட்டம் உண்டா?...............................?
ஒரு பெண் கற்பழிக்கப் பட்டாள் ...என்றால் அது யாரால்?..................?
ஒரு பெண் மானபங்கம் படுத்தப்பட்டாள் அது யாரால்?......................?
தனக்குப் பிறந்த மகளுடன் தந்தை தகாத உறவு  இதற்கு காரணம் யார்?..............?

பெண்கள் விலைமாது ஆவதற்கு சில ஆண்களே காரணம்.அவர்கள் விலைமாதர்கள் என்று தெரிந்தும்,தேடிப்போவதும் ஆண்களே! அவர்கள் தேடிப்போவதால் தான் அத் தொழில் நடக்கின்றது எந்த ஒரு ஆண்மகனையும் போகமல் இருக்கச் சொல்லுங்கள் பார்க்கலாம்  முடியுமா?எந்த ஒரு ஆண் மகனும் போகாமல் இருந்தால் விபச்சாரி இல்லை,விபச்சாரம் இல்லை விலைமாது இல்லை .இதற்கு காரணம் யார்?.............?//

அவர் முதலாவதாக கேட்ட கேள்வி கணவனை இழந்தால் அந்த பெண்ணுக்கு கொடுக்கும் பட்டம் கைம்பெண், விதவை. மனைவியை இழந்தால் கணவனுக்கு ஏதாவது பட்டம் கொடுக்கிறார்களா என்று கேட்டு இருந்தார்.  மனைவியை இழந்த கணவனை தபுதாரன் என்று சொல்கிறோம் ஆனால் இப்படி ஒரு தமிழ் சொல் இருப்பது மட்டுமே ஆனால் பயன்படுத்துவது குறைவு.

இந்த சமுகத்திலே கணவனை இழந்த பெண்கள் வெகுவாகவே பாதிக்கப் படுகின்றனர். பொருளாதார நிலைமை சிக்கல்கள் ஒருபுறமிருக்க. சமூகம் இவர்களை ஓரம் கட்ட நினைக்கின்றது, அதிகமான விடயங்களிலே கட்டுப்பாடுகளை விதிக்கின்றது.

கணவனை இழந்த பெண் ஒரு நல்ல காரியத்துக்கு செல்ல முடியாது, நல்ல காரியம் நடைபெறும் இடத்திலிருந்து விலக்கி வைத்தல், நல்ல காரியத்துக்கு செல்கின்றபோது அந்த பெண் முன்னால் வந்தால் சகுனம் என்று சொல்வது. இது எல்லாம் எந்த வகையில் நியாயம்.


ஆனால் மனைவியை இழந்த ஒரு ஆணுக்கு இந்த கட்டுப்பாடுகள் இருக்கிறதா? இல்லையே மனைவியை இழந்த ஆண்கள் இந்த நிகழ்வுகளிலே முக்கியமானவர்களாக இருப்பார்கள் ஆனால் தனது சகோதரிக்கோ குடும்ப உறுப்பினர்களுக்கோதிருமணம் போன்ற  நல்ல விடயங்கள் நடை பெறும்போது இந்த பெண்கள் ஒதுக்கப் படுகின்றார்கள். அவர்களால் தான் பங்கு கொள்ளவில்லையே என்று அழுவதைத் தவிர வேறு வழியில்லை.

ஒரு பெண் கணவனை இழந்தால் பல கட்டுப்பாடுகள், குடும்பத்தில் பொருளாதார பிரச்சினைகள்,  பிள்ளைகளை வளர்த்து நல்ல வழிக்கு கொண்டு வரவேண்டும் என்று. ஒரு திருமணம் செய்ய நினைத்தால் எத்தனை கொடுமைகள் நடக்கின்றது. மறுமணம் செய்ய முடியாது என்று எத்தனை கட்டுப்பாடுகள். மீறியும் அந்தப் பெண் ஒருவரை திருமணம் செய்தால் நடத்தை கெட்டவள் என்ற பட்டத்துடன். அவளை ஒதுக்கியும் வைக்கின்றனர்.

ஆனால் ஒரு ஆண் மனைவியை இழந்தால் மனைவி இறந்து ஒரு மாதம் செல்ல முன்னரே அடுத்த திருமணம் செய்யவும் ஆதரிக்கின்றது இந்த சமூகம். மனைவியை இல்;அந்த ஒரு ஆண் எத்தனை திருமணம் செய்யவும் ஆதரிக்கும் சமூகம் ஏன் பெண்களை மட்டும் தனது குடும்ப நிலை காரணமாக மறுமணம் செய்ய நினைக்கும் போது மறுக்கிறது.


சில பெற்றோரோ ஒரு ஆணின் மனைவி இறந்துவிட்டால் உடனடியாக அந்த ஆணுக்கு வேறு பெண்ணை தேட ஆரம்பித்து விடுகின்றனர். ஆனால் இதே பெற்றோர் ஒரு பெண்ணின் கணவன் இறந்துவிட்டால் அவளை ஒதுக்கி வைப்பதுதான் ஏன்?

அவர் கேட்ட அடுத்த கேள்வி ஒரு பெண் மானபங்கப் படுத்தப் படுவது யாரால் என்று. ஒரு பெண் ஒரு ஆனால் மானபங்கப் படுத்தப் பட்டால், பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப் பட்டால். அந்தப் பெண் இந்த இடத்திலே தவறு செய்கிறாளா இல்லையே அப்பாவியான பெண் ஆனால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்துகிறான் ஆனால் எந்த தவறும் செய்யாத அந்தப் பெண்ணை வித்தியாசமான கண்ணோட்டத்துடன் பார்க்கிறது இந்த சமூகம். அதுமட்டுமல்ல பாலியல் வல்லுறவு செய்த அந்த ஆணின் செயலை மறுகணமே மறந்து அந்த ஆணை நல்ல மனிதனாக பார்ப்பவர்களும் இருக்கின்றனர்.

தனது பிள்ளையையே பாலியல் வல்லுரவுக்குத் படுத்தும் எத்தனை தந்தைகள் இருக்கின்றனர். எத்தனை சகோதரர்கள் இருக்கின்றனர். இப்படியோப்பட்ட தந்தை, சகோதரர்களால் எத்தனை பெண்கள் இறந்திருக்கின்றனர், வாழ்க்கையை தொலைத்து தவிக்கின்றனர்.

விபசாரிகள் பற்றி அவர் குறிப்பிட்ட விடயங்கள் உண்மைதான். சில தவிர்க்க முடியாத காரணங்களால்  பெண்கள் விலை மாதர்களாக வந்துவிட்டார்கள். முக்கிய காரணம் பணம் உழைக்க வேண்டும் என்பதுதான். அப்படித்தான் அவர்கள் வந்தாலும் ஆண்கள் அவர்களை நாடி செல்லாவிட்டால் விலை மாதர்கள் இருக்க முடியாதுதானே.

இன்று பணக்கார வர்க்கத்தை சேர்ந்த சில ஆண்கள் என்ன செய்கிறார்கள். சில நல்ல பெண்களை பணத்தைக் காட்டியே ஆசையை வளர்த்து தங்களது உடல் இச்சைகளை தீர்த்து கொள்வதற்காக பயன்படுத்துகின்றனர். தாங்கள் எந்தளவு வேண்டுமோ அந்த அளவுக்கு அனுபவித்துவிட்டு அந்த பெண்ணை கைவிடுகின்றனர். இந்தப் பெண் தனது உடல் இச்சைகளை அடக்கிக்கொள்ள முடியாமல் மற்றவர்களை நாடிச்செல்ல நினைக்கின்றாள். இதனால் இவள் விலை மாதராகின்றாள்

read more...