நல்ல நட்பு கிடைப்பதென்பது அரிது. நல்ல நட்பு கிடைத்துவிட்டால். பிரிவது மிக மிக கஸ்ரம்தான். இருந்தபோதும் நல்ல நண்பர்கள் சில சந்தர்ப்ப சூழ்நிலைகளால்
பிரிய வேண்டிய சந்தர்ப்பங்கள் ஏற்படுவதுண்டு. அதிலும் குறிப்பாக ஆண்பெண் நட்பு என்பது கேள்விக்குறியான விடயமாக இருப்பதுண்டு.
ஆணும் பெண்ணும் நெருங்கிய நண்பர்களாக இருப்பார்கள். ஆனால் அவர்கள் விரும்பாமலேயே சில சந்தர்ப்ப சூழ்நிலைகள் அவர்களை பிரிவிற்கு இட்டுச் செல்வதுண்டு
பல நெருங்கிய நண்பர்கள் அவர்கள் விரம்பாமலேயே பிரிவை சந்தித்திருக்கின்றனர். பல காலம் நண்பர்களாக பிரிக்கவே முடியாத நிலையில் இருந்த நண்பர்களின்
பிரிவைப் பார்த்திருக்கின்றோம்.
ஆண் பெண் நண்பர்கள் பிரிவென்பது அதிகமாக பெண்ணுக்கு திருமணம் ஏற்படுகின்றபோது நிகழ்கின்றது. திருமணம் என்று வருகின்றபோது நட்பு விடயத்திலும் பல
விட்டுக் கொடுப்புக்களை செய்யவேண்டி இருக்கின்றது. அதையும் தாண்டி நட்பு தொடர வேண்டுமென்றால் பல பிரச்சினைகளையும் எதிர்நோக்கவேண்டிய நிலைக்கும்
தள்ளப்படுகின்றாள் அப் பெண். இதே நிலை ஆண்களுக்கும் இல்லாமல் இல்லை இருக்கின்றது ஆனால் மிக மிக அரிது.
ஏன் இவர்கள் நட்புக்கள் தொடர்வதை விரும்புகின்றனர் இல்லை தன் வாழ்க்கைத் துணைமீது சந்தேகப் படுகின்றனரா? சிலர் தான் யாருடனும் நட்பு வைத்துக் கொள்ளலாம்
தன் துணை நட்புக்களை இழக்க வேண்டும் என்று விரும்புகின்றனர். இவ்வாறான மன நிலைகள் மாறவேண்டும். நட்புகள் நிலைக்கவேண்டும்.
இதற்கு மாறாக பல நட்புக்கள் திருமணத்தின்பின் தொடர்வதுமுண்டு.
உண்மைச் சம்பவம் ஒன்று
ஒரு ஆணும் பெண்ணும் பத்து வருடங்களுக்கு மேலாக நல்ல நண்பர்களாக இருக்கின்றனர். ஆண் மிகவும் கஸ்ரப்பட்ட குடும்பத்தை சேர்ந்தவர். பெண் வசதியான குடும்பத்தை சேர்ந்தவர்
எல்லா நிறைய உதவிகள் செய்திருக்கின்றார். பொருளாதார ரீதியிலும். கஸ்ரம் என்று வருகின்றபோது முதலில் நிற்பவர் அப் பெண்ணாகத்தான் இருப்பார்.
அவர் எதையும் எதிர் பார்த்து உதவி செய்வதில்லை நல்ல நட்டு மட்டுமே. அவர்கள் நட்பு என்பது பிரிக்க முடியாத ஒன்றாகிவிட்டது. தன் வீட்டில் விசேடமான ஏதாவது
உணவு சமைத்தால்கூட அவருக்கும் ஒரு பங்கு நிட்சயம் இருக்கும். அவருக்கு மட்டுமல்ல அவர் குடும்பத்தோடும் மிக நெருக்கமாக பழகுவார் அவர்களின் குடும்பத்தில் ஒருவர்போல்
இது இவ்வாறிருக்க அப் பெண்ணுக்கு திருமணம் நடற்துவிட்டது. பெண்ணின் கணவர் சொல்லிவிட்டார் தாராளமாக நண்பர்களாக இருக்கலாம் நான் தடை போடமாட்டேன் என்று
நட்பு முன்னர்போலவே தொடர்ந்தது. இந்த நேரத்தில் ஆணுக்கு திருமணம் நடைபெற்றது. இவர்களின் நட்பு நன்கறிந்தவர்தான் அவரை திருமணம் செய்திருக்கின்றார். அவர்கள் நட்பின்
ஆழமும் அறிந்தவர்.
ஓரிரு வருடங்கள் பிரச்சினை இல்லை. இப்போது அவர்களிடையே அடிக்கடி பிரச்சினை ஏற்படுவதுண்டு. அப்பெண் சொல்கின்றார் நட்பை நிறுத்தவேண்டும் என்று. அவரோ முடியாது
என்கின்றார். இத்தனைக்கும்மேல் இவர் மிக உயர்ந்த பதவியில் இருப்பவர்.
நான் இந்த நிலைக்கு வரக்காரணம் என் நண்பிதான் அவரின் நட்பை இழக்க முடியாது என்கின்றார் அவர். அவரது படிப்பு விடயமாக இருக்கட்டும் எதற்கும் நிறையவே உதவி செய்தவர்.
தன் உயர்விற்கு காரணமான நட்பை இழப்பதா? மனைவி சொல்லே மந்திரமென்று இருப்பதா?....
எது சரி எது தவறு
நண்பர்களின் புது முயற்சி
நண்பர் செந்தூரன் வலையுலகு முலமாக எனக்கு அறிமுகமான நல்ல நண்பர். வலைப்பதிவுகள் எழுதுவது அரிது என்றாலும் தான் வானொலித்துறையில் அதிக ஈடுபாடு கொண்டவர்
தான் ஒரு வானொலி ஆரம்பிக்க வேண்டும் என்று பல முயற்சிகள் செய்தவர். அவரின் முயற்சி வெற்றியடைந்திருக்கின்றது.
இணைய வானொலி (சஞ்ஜீவ ஒலி ) ஒன்றை ஆரம்பித்து சிறப்பாக தனது நண்பர்களுடன் சேர்ந்து செய்து வருகின்றார். அவரின் முயற்சிக்கு எமது வலைப்பதிவர் என்கின்ற ரீதியில் அவருக்கு வாழ்த்துக்கள்.
புதிய வானொலி புதியவர்கள் இருந்தபோதும் சிறப்பாக செய்கின்றனர்.
புதுமைகள் படைக்க வாழ்த்துக்கள்
14 comments: on "ஆண் பெண் நட்பு திருமணத்தின் பின்னும் தொடர்வது சரியா தவறா?"
நல்ல பதிவு. நட்பு என்கிற வார்த்தைக்குள் விட்டுக்கொடுப்பதும், பிரிதலும் கூட அடங்கியிருக்கிறது என்று நினைக்கிறேன்.
இது குறித்து எழுதவேண்டுமானால் நிறைய, நிதானித்து எழுத வேண்டும்,
i have not time now., lets see in future!
wishes
இதற்க்கு என்ன தீர்வு என்பதை நட்புக்கள் கூடி ஆராய்ந்தால் நல்ல தெளிவு பிறக்கும் எனக்கூறலாம்!
புரிந்துணர்வற்றவர்கள் இவர்கள்.
ஆணும், பெண்ணும் இருவரும் பழகும் விதத்தில் உள்ளது .
திருமணத்தின் பின்பும் அவர்களின் நட்பு தொடருமானால் வரவேற்கத்தக்கது . எனினும் அது மற்றவர்கள் சந்தேகப்படும்படி இல்லாமல் இருக்க வேண்டும் என்று நான் நினைக்கின்றேன் .
திருமணத்திற்கு பின் தோழர் அல்லது தோழியின் பார்ட்னர் விரும்பவில்லை எனில் பழக்கத்தை தொடராமல் இருப்பதே அந்த நட்புக்கு நாம் செய்யும் மரியாதை.
//மருதமூரான். கூறியது...
நல்ல பதிவு. நட்பு என்கிற வார்த்தைக்குள் விட்டுக்கொடுப்பதும், பிரிதலும் கூட அடங்கியிருக்கிறது என்று நினைக்கிறேன்.ll
நிட்சயமாக... வருகைக்கும் கருத்துக்களுக்ளுக்கும் நன்றிகள்
// ஷர்புதீன் கூறியது...
இது குறித்து எழுதவேண்டுமானால் நிறைய, நிதானித்து எழுத வேண்டும்,
i have not time now., lets see in future!
wishes//
கட்டாயமாக எழுதுங்கள்..
வருகைக்கும் கருத்துக்களுக்ளுக்கும் நன்றிகள்
//Nesan கூறியது...
இதற்க்கு என்ன தீர்வு என்பதை நட்புக்கள் கூடி ஆராய்ந்தால் நல்ல தெளிவு பிறக்கும் எனக்கூறலாம்!//
வருகைக்கும் கருத்துக்களுக்ளுக்கும் நன்றிகள்
//வடலியூரான் கூறியது...
புரிந்துணர்வற்றவர்கள் இவர்கள்.//
வருகைக்கும் கருத்துக்களுக்ளுக்கும் நன்றிகள்
//Pavi கூறியது...
ஆணும், பெண்ணும் இருவரும் பழகும் விதத்தில் உள்ளது .
திருமணத்தின் பின்பும் அவர்களின் நட்பு தொடருமானால் வரவேற்கத்தக்கது . எனினும் அது மற்றவர்கள் சந்தேகப்படும்படி இல்லாமல் இருக்க வேண்டும் என்று நான் நினைக்கின்றேன்.//
உங்கள் கருத்துக்களோடு உடன்படுகிறேன்.
வருகைக்கும் கருத்துக்களுக்ளுக்கும் நன்றிகள்
//சிநேகிதன் அக்பர் கூறியது...
திருமணத்திற்கு பின் தோழர் அல்லது தோழியின் பார்ட்னர் விரும்பவில்லை எனில் பழக்கத்தை தொடராமல் இருப்பதே அந்த நட்புக்கு நாம் செய்யும் மரியாதை.//
வருகைக்கும் கருத்துக்களுக்ளுக்கும் நன்றிகள்
நட்பென்பதை திருமணத்துக்கு முன் பின் என்று வரையரத்தால் அது நட்பே இல்லை
எனக்குத் தெரிந்த நிறைய பேர்கள் இங்கு ஆரோக்யமான நட்புடன் இருக்கிறார்கள் சந்ரு...!
Post a Comment