Wednesday 22 June 2011

தோழியை காதலியாக்குவது எப்படி? சில ஆலோசனைகள்

நல்ல நட்புக்கள் கிடைப்பதென்பது அரிது அதனையும் மீறி கிடைத்துவிட்டால். அந்த நட்பை பிரிவதென்பது மிகவும் கடினமான விடயம். அதிலும் ஆண்பெண்  நட்பென்பது எப்டித்தான் இணைபிரியாத நண்பர்களாக இருந்தாலும் சந்தர்ப்ப சூம்நிலைகள் அவர்களைப் பிரித்துவிடும்.


சில ஆண் நண்பர்கள் தனது நெருங்கிய நண்பி தன் வாழக்கைத் துணையாக வர வேண்டுமென்று நினைப்பார்கள். அந்த நண்பியை காதலிக்க தொடங்கிவிடுவார்கள். ஆனால் அந்த நண்பி தனது நண்பரை ஒரு நெருங்கிய நண்பராகத்தான் பார்ப்பார். இதனால் அந்த நண்பிக்கும் தன்மீது காதல்  வர வைக்க வேண்டும் அதற்கு என்ன செய்வது என்று நாம் பலர் திண்டாடிக்கொண்டிருப்போம்.

அந்த நண்பியிடம் நேரடியாக உடனே காதலைச் சொன்னால் சில வேளைகளில் அந்த நண்பியை இழக்க வேண்டியும் வரலாம். இதற்காக அந்த நண்பியை நம் பக்கம் காதல் வர வைக்க வெண்டியதுதான்.

எப்படி காதல்  நம்மீது காதல்வர வைப்பது என்று கேட்கின்றீர்களா. அவசரப்படாதிங்க ஒவ்வொன்றா சொல்கின்றேன்.


01. உங்கள் நம்பிக்கு தேவைப்படும் உதவிகளை அவர் உங்களிடம் கேட்காமலே செய்து கொடுங்கள்.

       நீங்கள் கணவனாக வந்தால் தன்னை நன்றாக பார்த்துக்கொள்வார் என்று உங்கள்மீது ஓர் ஈர்பு அவளுக்கு உண்டாகும்.


02. உங்கள் நண்பிக்கு பிடிக்காத வி்யங்களை விட்டுவிடுங்கள். உங்கள் நண்பிக்கு எது பிடிக்குமோ அதனை அடிக்கடி செய்யுங்கள்.


03.  உங்கள் நண்பியோடு மட்டுமே நட்பாக இருங்கள் வேறு பெண்களோடு நட்பாக இருக்க வேண்டாம். அல்லது பெண்களோடு பழகுவதை நிறுத்திக் கொள்ளுங்கள். அல்லது உங்கள் நண்பிக்கு தெரியாமல் பெண்களோடு நட்பை வைத்துக் கொள்ளுங்கள்.


         தனது நெருங்கிய நண்பனோ அல்லது காதலனோ வேறு பெண்களோடு பேசக்கூடாது எனும் மனநிலை பெண்களுக்கிருக்கின்றது.


04.  நண்பியின் இன்ப துண்பங்களில் பங்கெடுத்துக் கொள்ளுங்கள். எந்தவொரு நல்ல விடயமோ கெட்ட விடயமோ நண்பிக்கோ அவரது குடும்பத்துக்கோ நடந்துவிட்டால் அங்கே முதலில் நிட்பவர் நீங்களாக இருங்கள்.


05.  உங்கள் உடல் நலன் பேணுவதனை விட உங்கள் நண்பியின் உடல் நலத்தில் அக்கறை காட்டுங்கள். நண்பிக்கு தலைவலிதான் வந்தாலும் அது உங்களுக்கு ஏற்பட்டதுபோல் உணர்ந்துகொள்ளுங்கள்.


    அப்போது அவர் நினைப்பார் நிங்கள் தனது எதிர்கால துணையாக வந்தால் தன்னில் அதிக அக்கறை காட்டுவீர்கள் என்று உங்கள் மீது காதல் எற்படும்.


06.  உங்கள் நண்பியை உங்கள் குடும்பத்தில் ஒருவர்போல் பார்த்துக் கொள்ளுங்கள். உங்கள் குடும்பத்தவர்களுக்கு நீங்கள் என்ன வாங்கினாலும் நண்பிக்கும் வாங்குங்கள் ( என்ன குடும்பத்தவர்கள்தான் உங்களுக்கு வாங்கித்தருகிறார்களா)  புதுவருடத்துக்கு உடுப்பு எடுப்பதாக இருந்தால்கூட நண்பிக்கும் எடுங்கள்.


07.  உங்கள் நண்பியை அவளின் விட்டில் அவளது குடும்பத்தினர் கவனிப்பதனைவிட நீங்கள் அதிகம் கவனியுங்கள். அப்போது உங்கள் மீது அதிக அன்பு உண்டாகும்.

08. உங்கள் வீட்டவர்களுடன் சகஜமாக பழக விடுவதுடன். உங்கள் குடும்பத்தாருடன் வெளியிடங்களுக்கு சென்றுவர அனுமதியுங்கள். அப்போது உங்கள் வீட்டவர்களை நண்பி கவர்வதோடு நண்பிக்கும் உங்கள் வீட்டவர்கள்மீது நல்லெண்ணம் உண்டாகும்.


09. உங்கள் நண்பியின் வீட்டவர்களுடன் மிகவும் நெருக்கமாகப் பழகுங்கள். அவர்களுக்கு உங்கள்மீது அதிக நம்பிக்கை வரவேண்டும் அதனோடு உங்கள்மீது நல்லபிப்பிராயமும் இருக்க வேண்டும். 


   அப்போதுதான் உங்கள் காதல் அவர்களுக்கு தெரிய வந்தாலும் அவர்கள் முட்டுக்கட்டையாக இருக்காமல் பச்சைக்கொடி காட்டுமளவுக்கு அவர்களோடு பழகிக் கொள்ளுங்கள்.


10. நண்பியும் நீங்களும் அடிக்கடி வெளி இடங்களுக்கு சென்று வாருங்கள்.


       அப்போதுதான் சமூகம் உங்களையும் உங்கள் நண்பியையும் தொடர்பு படுத்தி கட்டுக்கதைகள் கட்டும். அது உங்களுக்கு இலகுவாக இருக்கும்.


இது மட்டுமல்ல இன்னும் இருக்கின்றது சந்தர்ப்பம் வரும்போது சொல்லின்றேன்.



என் அனுபவமா என்று மட்டும் கேட்கவேண்டாம்.







Post Comment


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

20 comments: on "தோழியை காதலியாக்குவது எப்படி? சில ஆலோசனைகள்"

Anonymous said...

பொய் சொல்லாதிங்க இது உங்க அனுபவம்தானே. இப்படித்தான் நீங்க பெண்களை மடக்குவிங்களோ

ஹேமா said...

அட ..அட இப்பல்லாம் புத்தி வழிஞ்சோடுது ஆண்களுக்கெல்லாம்.நாங்க உஷாராயிட்டோம்ல !

ஸ்ரீராம். said...

ஹா...ஹா...நல்ல யோசனைகள்தான்...
ஆனால் திருமணம் செய்து கொள்ளப் போகும் பட்சத்தில் தன் சுயத்தை மறைக்காமல், அவர்கள் உணர்வுகளையும் மதித்து உண்மையாக இருத்தலே நலம். பின்னால் பிரச்னைகள் வராது!!

நிரூபன் said...

ஐடியா எல்லாமே அருமையாக இருக்கிறது பாஸ்,

ஆனால் நமக்குத் தான் முதல்ல ஒரு நண்பி சிக்க வேண்டுமே;-)))

சுதா SJ said...

பாஸ் பாஸ் காதலியை எப்படி தோழி ஆக்குவது என்றும் ஒரு பதிவு போடுங்களன் பாஸ்
புண்ணியமா போகும்

A.R.ராஜகோபாலன் said...

நல்ல பல விஷயங்களை சொல்லிய பதிவு
ரசிக்கும் படி இருந்தது

Mathuran said...

நல்லாத்தான் யோசிக்கிறீங்க

Mathuran said...

//துஷ்யந்தன் சொன்னது…

பாஸ் பாஸ் காதலியை எப்படி தோழி ஆக்குவது என்றும் ஒரு பதிவு போடுங்களன் பாஸ் புண்ணியமா போகும்//////

அடப்பாவி மக்கா....

வடலியூரான் said...

அனுபவமா பாஸ் .. ஆனாலும் எனக்கு எல்லத்தைலையும் கடைசியா ஒண்டு சொன்னியளே அது தான் பிடிச்சிருந்துது
//அப்போதுதான் சமூகம் உங்களையும் உங்கள் நண்பியையும் தொடர்பு படுத்தி கட்டுக்கதைகள் கட்டும். அது உங்களுக்கு இலகுவாக இருக்கும்.

Admin said...

//பெயரில்லா கூறியது...

பொய் சொல்லாதிங்க இது உங்க அனுபவம்தானே. இப்படித்தான் நீங்க பெண்களை மடக்குவிங்களோ//

அனுபவம் எல்லாம் இல்லை.... மடக்குறதா அப்படின்னா?

Admin said...

//ஹேமா கூறியது...

அட ..அட இப்பல்லாம் புத்தி வழிஞ்சோடுது ஆண்களுக்கெல்லாம்.நாங்க உஷாராயிட்டோம்ல !//

புத்தி அதிகம் இருந்தால்தானே இப்போதைய பெண்களிடம் ஜாக்கிரதையாக இருக்க முடியும்.

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்.

Admin said...

//ஸ்ரீராம். கூறியது...

ஹா...ஹா...நல்ல யோசனைகள்தான்...
ஆனால் திருமணம் செய்து கொள்ளப் போகும் பட்சத்தில் தன் சுயத்தை மறைக்காமல், அவர்கள் உணர்வுகளையும் மதித்து உண்மையாக இருத்தலே நலம். பின்னால் பிரச்னைகள் வராது!!//

உண்மைதான் என்னைப்போன்ற நல்ல பசங்க இருக்கத்தானே செய்வாங்க.

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்.

Admin said...

//!* வேடந்தாங்கல் - கருன் *! கூறியது...

அனுபவமா நண்பா..//

எனக்கு அனுபவம் இல்லை. உங்களுக்கு நிறைய அனுபவம் இருப்பதாக அறிந்தேன் உண்மையா நண்பா?

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்.

Admin said...

//நிரூபன் கூறியது...

ஐடியா எல்லாமே அருமையாக இருக்கிறது பாஸ்,

ஆனால் நமக்குத் தான் முதல்ல ஒரு நண்பி சிக்க வேண்டுமே;-)))//

கவலைப்படாதிங்க நண்பா பெண்களை நண்பிகளாக சிக்க வைப்பது எப்படி என்று ஒரு பதிவு போடுறன். உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.


வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்.

Admin said...

//துஷ்யந்தன் கூறியது...

பாஸ் பாஸ் காதலியை எப்படி தோழி ஆக்குவது என்றும் ஒரு பதிவு போடுங்களன் பாஸ்
புண்ணியமா போகும்//

என்ன காதலியால் அவஸ்தைப் படுறிங்கபோல..

கவலைப்படாதிங்க அதற்கும் பதிவு போடுகின்றேன்

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்.

Admin said...

//A.R.ராஜகோபாலன் கூறியது...

நல்ல பல விஷயங்களை சொல்லிய பதிவு
ரசிக்கும் படி இருந்தது//

அப்படியா.. நாங்க நல்ல விடயங்களை மட்டுமே சொல்லவோமல்ல...


வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்.

Admin said...

//மதுரன் கூறியது...

நல்லாத்தான் யோசிக்கிறீங்க//

நல்ல அறிவுரைதானே.. உங்களுக்கு நிறைய அனுபவம் இருக்கிறதாம் உண்மையா?

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்.

Admin said...

//வடலியூரான் கூறியது...

அனுபவமா பாஸ் .. ஆனாலும் எனக்கு எல்லத்தைலையும் கடைசியா ஒண்டு சொன்னியளே அது தான் பிடிச்சிருந்துது
//அப்போதுதான் சமூகம் உங்களையும் உங்கள் நண்பியையும் தொடர்பு படுத்தி கட்டுக்கதைகள் கட்டும். அது உங்களுக்கு இலகுவாக இருக்கும்.//

அனுபவம்தான். உங்களைப்போன்றவர்களின் அனுபவம்.

சமூகத்துக்கு பயந்தாவது எங்களை காதலித்துத்தானே ஆகணும்.

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்.

don9489111275 said...

தல super

Post a Comment