இலங்கையைப் பொறுத்தவரை வேலைவாய்ப்புப் பெறுவதென்றால்..... நான் சொல்லித்ததான் தெரியவேண்டும் என்பதில்லை.
அதிலும் குறிப்பாக ஏழைகளைப் பொறுத்தவரை மிகவும் கடினமான விடயமாகிவிட்டது. மிகவும் கஸ்ரப்பட்டு படித்து பட்டம் பெற்று வேலை
தேட நினைத்தால் பல இலட்சங்கள் இருந்தால்தான் வேலை என்றாகிவிட்டது.
கஸ்ரப்பட்டு படித்து பட்டம் பெற்ற ஏழை மாணவர்கள் வேலையின்றி கஸ்ரப் பட்டுக்கொண்டே இருக்கின்றனர். ஆனால் பணம் படைத்தவர்கள்
பல இலட்சங்களுக்கு வெலைகளை வாங்குகின்றனர்.
சரி நாட்டில்தான் வேலை கிடைக்கவில்லை வெளி நாட்டிலாவது வேலை கிடைக்கும் என்று கடன் பட்டு வெளிநாடுகளுக்கு வந்தால் வெளிநாடுகளிலே
அதைவிடத் துயரம்.
இலங்கையிலிருந்து கட்டார் நாட்டக்கு 4, 5 மாதங்களுக்கு முன்னர் கட்டார் அரசாங்கத்தின்கிழ் இருக்கின்ற நிறுவனத்திலே வேலை செய்வதற்காக இலங்கை தமிழர்கள் பலர்
வருகை தந்திருந்தனர். இவர்களில் பலர் பட்டதாரிகள்.
கட்டருக்கு வந்து 4, 5 மாதங்களாகிவிட்டது. இன்னும் வேலை வழங்கப்படவில்லை. கட்டாரிலே வந்து வேலை செய்வதற்கு நிறைவேற்ற வேண்டிய விடயங்கள் அனைத்தும் செய்து முடிந்துவிட்டது. அடையாள அட்டைகள்கூட வழங்கப்பட்ட விட்டன. நேர்முகப் பரீட்சையும் முடிந்துவிட்டது. வேலை வழங்கப்படவில்லை. தங்குவதற்கு இடமோ சாப்பாடோ எதுவும்
வழங்கப்படவில்லை. மிகவும் கஸ்ரப்பட்டுக்கொண்டிருக்கின்றனர்.
வேலை எப்போது வழங்கப்படும் அல்லது வழங்கப்படாது என்கின்ற விடயங்கள்கூட சொல்வதாக இல்லை. வேலை கிடைக்காது என்றால் எங்களை நாட்டுக்கு அனுப்புங்கள் என்றால் அதற்குரிய
ஏற்பாடுகளோ அல்லது பதில்களோ இல்லை.
என்ன அவர்களில் நானும் ஒருவன்...
7 comments: on "கட்டாரில் திண்டாடும் இலங்கைப் பட்டதாரிகள்"
http://www.mullaivaanam.com/2011/06/blog-post_6990.html
Thanks Santhuru.
I updated this Msg
http://www.mullaivaanam.com/
கவலை வேண்டாம் சகோதரா... சீக்கிரமே வெற்றி உங்களை தேடி வரும்
#சோகம் # கவலை
மனதை உற்சாகமாக வைத்துக்கொள்ளுங்கள். மனம் உறுதியாக இருக்குமிடத்து உங்களைவிட முயற்சியாளன் வேறு இருக்கமாட்டான்.
காத்திருப்புக்கள் எல்லாம் நன்மைக்கே எதற்கும் கொஞ்சம் அவதானமாக இருங்கள் நண்பரே
மனம் தளரவேண்டாம். தமிழன் எங்குபோனாலும் சோகம்தான் . நினைப்பதெல்லாம்..நடந்துவிட்டால்.......
...தெய்வ வழிபாடு சாந்தியும அமைதியும் தரட்டும். சோகத்தை பகிருங்கள் அது பாதியாகி குறைந்துவிடும்.
sorry chanthru... thamil type panna mudiyavillai.. ungal pathivak kandu vethanaiyadainthen. em ilaignarkalin valkkai innamum thunpam nirainththakave irukkirathu. kavalaipp padatheenka. God loves you... nichchaya vetti undu.
நினைப்பது இலகுவில் கிடைப்பதில்லை. காலம் வரக்கூடிவரும். நீங்கள் நிறைய கடவுள் நம்பிக்கை உள்ளவர். நல்லது நடக்கும் என்று மனதில் உறுதியாக நம்புங்கள். தேவையான கடமைகளைச் செய்யுங்கள். இறைவன் அருள் நிச்சயம் கிடைக்கும்
Post a Comment