நடைபெற்று முடிந்த க.பொ.சா.த. உயதரப் பரீட்சையிலே மட்டக்களப்பு மாவட்த்தைச் சேர்ந்த மாணவி ரி. தேவப்பிரியா கலைப்பிரிவில் அதிசிறப்பு சித்திபெற்று எமது மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.
மட்/வின்சன்ட் மகளிர் உயாதரப் பாடசாலையில் கல்வி கற்ற ரி. தேவப்பிரியா என்ற மாணவியே மேற்படி சாதனையினை புரிந்துள்ளார். இவர் கடந்த உயாதரப் பரீட்சையிலே கலைப்பிரிவில் தோற்றி மாகாண மட்டத்திலே முதலாவது இடத்தினையும் அகில இலங்கை ரீதியில் 13வது இடத்தினையும் பெற்றுள்ளார். இவர் மட்டக்களப்பு திராய்மடு (சுவிஸ் கிராமம்) கிராமத்திலே வசித்து வரும் மிகவும் வறுமைக்குடும்பத்தினைச் சோந்த ஓர் மாணவி என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் மிகவும் வறிய குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரைப் போன்ற பல திறமைவாய்ந்த மாணவர்கள் வறுமையான குடும்பத்தில் பிறந்ததன் காரணமாக கல்வியை இடை நடுவிலே கைவிட்ட பல சம்பவங்கள் இடம் பெற்றிருக்கின்றன.
இவரைப் பொறுத்தவரை மிகவும் வறிய குடும்பத்தில் பிறந்தவர். இவரது கல்வியை இவர் தொடரவேண்டும். அதற்கு அவரது குடும்ப வறுமை சூழல் தடையாக இருக்கக்கூடாது அவரது எதிர்கால கல்வி நல்லபடி அமைய சமூகம் உறுதுணையாக இருக்க வேண்டும்
6 comments: on "வறுமையிலும் திறமை"
அந்த மாணவிக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.. நல்ல எதிர்காலம் அமையனும்...
வாழ்த்துக்கள் அந்த பெண்ணுக்கு!!!
தேவிப் பிரியாவுக்கு எமது வாழ்த்துக்கள்.. இப்படியானோருக்கு வாய்ப்பும் வசதியும் கொடுத்தால் நிச்சயம் இன்னும் பல வெற்றிகள் பெறுவார்கள்.. புலம் பெயர் சமூகத்தில் இருந்து உதவிக் கரங்கள் கிடைக்குமா ???
அதற்கு மட்டும் பதிலே வராது .. என்னவோ போங்க..
******************************'
குற்றம் செய்த பிள்ளைகளை போலிசில் கொடுத்த பெற்றோர்கள்
//Ashwin-WIN கூறியது...
அந்த மாணவிக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.. நல்ல எதிர்காலம் அமையனும்...//
எல்லோருடைய எதிர்பார்ப்பும் அதுதான்.
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்
//மைந்தன் சிவா கூறியது...
வாழ்த்துக்கள் அந்த பெண்ணுக்கு!!!//
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்
//இக்பால் செல்வன் கூறியது...
தேவிப் பிரியாவுக்கு எமது வாழ்த்துக்கள்.. இப்படியானோருக்கு வாய்ப்பும் வசதியும் கொடுத்தால் நிச்சயம் இன்னும் பல வெற்றிகள் பெறுவார்கள்.. புலம் பெயர் சமூகத்தில் இருந்து உதவிக் கரங்கள் கிடைக்குமா ???
அதற்கு மட்டும் பதிலே வராது .. என்னவோ போங்க..///
நானும் இதைத்தான் எதிர்பார்க்கின்றேன். புலம்பெயர் சமுகத்திலிருந்து இவ்வாறானவர்களுக்கு உதவிகள் கிடைக்கவேண்டும். கிடைக்குமா?
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்
Post a Comment