Thursday, 9 June 2011

வெளிநாட்டுப் பணமும் நம்ம ஊரு பொண்டுகளும் படும்பாடு

அக்கரை மாட்டுக்கு இக்கரைப் பச்சை என்று சொல்வார்கள். வெளிநாட்டிலே இருப்பவர்கள் பணம் பொருட்கள் அனுப்புகின்றபோது. பலரும் அவர்களைப் பார்த்து சொல்வார்கள் உங்களுக்கென்ன வெளிநாட்டுக்காரர்கள் வெளிநாட்டுப் பணம் என்றெல்லாம் சொல்வார்கள்.         

வெளிநாட்டுப்பணம்தான் பொருள்தான் அனுப்பப்படுகின்றது. அதனை அனுப்புவதற்கு உழைப்பதற்கு வெளிநாடுகளிலே இருக்கின்ற தங்கள் உறவுகள் எந்தளவிற்கு கஸ்ரப்படுகின்றனர் என்பதனை பலரும் உணர்வதில்லை.

நான் கட்டாருக்கு வந்தபோதுதான் உணர்ந்தேன் அவர்கள் படும் கஸ்ரங்களும் கஸ்ரப்பட்டு இரவு பகலாக உழைத்து அனுப்பும் பணத்தினை அவர்களின் மனைவி பிள்ளைகள் (எல்லோருமல்ல) வீனாண முறையிலே செலவு செய்து வருகின்றனர்.

 நாட்டிலே பணம் அனுப்பப்பட்டால் சில வீடுகளிலே கொண்டாட்டம்தான் பணம் அனுப்பியதுமே ஒரு ரூபா கூட மிச்சம் பிடிக்காமல் செலவு செய்வோர் பலர் இருக்கின்றனர்.

அதிகமாக ஆடம்பர செலவுகளைச் செய்துகொண்டிருக்கின்றனர். இரண்டு நாட்கள் நன்றாக செலவு செய்வார்கள் பின்னர் அடுத்த சம்பளம் எடுத்து கணவன் பணம் அனுப்பும்வரை ஒரு சதம்கூட இல்லாமல் பட்டினி கிடக்கின்ற குடும்பங்களும் இல்லாமல் இல்லை.

ஒரு வெளிநாட்டுக்காரனின் மனைவி ஒரு மாலை போட்டால் நான் இரண்டு மாலை போடவேண்டும் அவள் கட்டும் சாறியைவிட விலை உயர்ந்த சாறி தான் கட்ட வேண்டும் என்றும் பேராசைப்பட்டு பணத்தை வீண் ிரயம் செய்வோரும் இல்லாமல் இல்லை.

இங்கே பணம் உழைப்பதற்கு எவ்வளவு கஸ்ரப்படுகின்றனர் என்பதனை செலவு செய்பவர்கள் சிறிதளவேனும் சிந்தித்துப் பார்ப்பதில்லை. இலவசமாக கிடைத்த பணம் போல் செலவு செய்கின்றனர்.                 

ஒரு குடும்பம் நல்ல நிலைக்கு வரவேண்டும் என்று வெளிநாடு வருகின்றனர். இவ்வாறு வீண் விரயம் செய்தால் அவர்களின் குடும்பநிலை எப்போது முன்னேற்றம் அடைவது.


வெளிநாட்டிலே தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை தொடராக எழுதிக்கொண்டே போகலாம் அவைகளையும் சந்தர்ப்பம் வரும்போது எழுதுகிறேன்.
                                                                          
எங்கள் பிரதேசத்திலே பெண்களை பொண்டுகள் என்று சொல்வதுண்டு.

Post Comment


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

4 comments: on "வெளிநாட்டுப் பணமும் நம்ம ஊரு பொண்டுகளும் படும்பாடு"

Ashwin-WIN said...

உண்மை உண்மை உண்மை..
உண்மையில் வெளிநாடுகளில் இருப்பவர்களை விட இங்கிருப்பவர்கள் சந்தோசமாக வாழ்கிறார்கள் அவர்களின் வியர்வையில்.
நல்லதொரு பதிவு சகோ.. தொடருங்கள்.

தோழி said...

பொண்டு அல்ல பெண்டு.. "பெண்டு பிள்ளைகள்" இப்படிதான் வரும்..

Admin said...

//Ashwin-WIN கூறியது...
உண்மை உண்மை உண்மை..
உண்மையில் வெளிநாடுகளில் இருப்பவர்களை விட இங்கிருப்பவர்கள் சந்தோசமாக வாழ்கிறார்கள் அவர்களின் வியர்வையில்.
நல்லதொரு பதிவு சகோ.. தொடருங்கள்.
//

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்

Admin said...

//Dharshi கூறியது...
பொண்டு அல்ல பெண்டு.. "பெண்டு பிள்ளைகள்" இப்படிதான் வரும்..//

நீங்கள் சொல்வதும் சரிதான். பொண்டுகள் என்றும் சொல்வதுண்டு பெண்டுகள் என்றும் சொல்வதுண்டு எங்கள் பகுதிகளில் அதிகமாக பொண்டுகள் என்று சொல்வார்கள் பெண்டுகள் என்பது பொண்டுகள் என்று மருவிஇருக்கலாம்

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்

9

Post a Comment