Monday, 20 June 2011

இலங்கை மீதான பொருளாதாரத்தடையினால் பாதிக்கப்படப்போவது அப்பாவித் தமிழர்களே..

இன்று உலக நாடுகளிலே இலங்கை மீதான பொருளாதாரத்தடை பற்றிப் பேசப்படுகின்றன. பரவலாக அனைத்து தமிழர்களுமே பொருளாதாரத்தடை கொண்டுவர வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றனர். இலங்கைத் தமிழர்களும் கூட.

இலங்கையின் இராணுவத்தினர் இறுதி யுத்தத்தின்போது அப்பாவி தமிழ் மக்களை கொடுரமாக கதறக்கதற கொன்றழித்தது. இது இன்று அம்பலமாகி இருக்கின்றது. இதன் காரணமாக இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்கவேண்டும் என்று சொல்லப்படுகின்றது. அதற்கான ஏற்பாடுகளும் இடம்பெற்று வருகின்றன.
பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டால் அதனால் ஏற்படுகின்ற மக்கள் யார் என்பதனை யாராவது சிந்தித்தார்களா? அப்பாவி மக்களே இதனால் பாதிக்கப்படப் போகின்றனர்.

அதிலும் குறிப்பாக தமிழ் மக்களே அதிகம் பாதிக்கப்பட்ப்போகின்றனர். பொருளாதாரத்தடை விதிக்கப்படுகின்றபோது தமிழ் மக்கள் வாழ்கின்ற பிரதேசங்களுக்கான வினியோகங்கள் மட்டுப்படுத்தப்படும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

யுத்தம் நடைபெற்ற காலங்களில் வடக்கு மக்கள் எவ்வாறு பொருட்தட்டுப்பாட்டை  எதிர் நோக்கினர் என்பதனை நாம் அறிவோம். இலங்கையில் பொருளாதாரத்தடை இல்லாத காலத்திலே வடக்கிலே பொருட்களின் விலைகள் எவ்வாறு உயர்ந்திருந்தன என்பதனை நாம் அறிவோம்.

பொருளாதாரத்தடை வருகின்றபோது இலங்கையிலே பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படுகின்றபோது. இலங்கை அரசாங்கம் என்ன செய்யும் தமிழர் பிரதேசங்களுக்கான  வினியோகத்தை இடை நிறுத்தும் அல்லது மட்டுப்படுத்தும்.
இவ்வாறு செய்யாது என்று சொல்ல முடியாது. இலங்கையின் பேரினவாத அரசாங்கங்கள் கடந்த காலங்களில் எமக்கு பல பாடங்களை படிப்பித்திருக்கின்றன.

தமிழர் பிரதேசங்கள் யுத்தத்தால் அழிவடைந்து அருக்கின்றது. இன்றைய தேவை என்ன? யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை கட்டியெழுப்புவதும். பாதிக்கப்பட்ட மக்களை நல்ல நிலைக்கு கொண்டு வருவதுமே.

பொருளாதாரத்தடை விதிக்கின்றபோது இவை சாத்தியமாகுமா? பொருளாதாரத்தடை இல்லாதபோதே தமிழர்களை ஓரக்கண்ணால் பார்க்கும் இலங்கை அரசாங்கம் பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டால் தமிழர்களுக்கு என்ன செய்யப்போகிறது.

பொருளாதாரத் தடை பற்றிப் பேசுபவர்கள் இவைகளைச் சிந்தியுங்கள் இலங்கை தமிழ் மக்கள் தொடர்ந்தும் அவலங்களை சந்திக்க வேண்டும் என்று விரும்புகின்றிர்களா?

இது இலங்கை அரசுக்கு ஆதரவாக எழுதப்பட்டதல்ல. தமிழர்களின் நலனுக்காக எழுதப்பட்டது.

Post Comment


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

2 comments: on "இலங்கை மீதான பொருளாதாரத்தடையினால் பாதிக்கப்படப்போவது அப்பாவித் தமிழர்களே.."

Anonymous said...

யுத்தம் நடைபெற்ற காலங்களில் வடக்கு மக்கள் எவ்வாறு பொருட்தட்டுப்பாட்டை எதிர் நோக்கினர் என்பதனை நாம் அறிவோம். இலங்கையில் பொருளாதாரத்தடை இல்லாத காலத்திலே வடக்கிலே பொருட்களின் விலைகள் எவ்வாறு உயர்ந்திருந்தன என்பதனை நாம் அறிவோம்./// ஒரு கிலோ அறுசி முந்நூறு ரூபாய்க்கு வாங்கிய அனுபவமும் உண்டு ...

பொருளாதார தடை என்ற போச்சை ஐநா எடுத்தவுடன் அடங்குகிற நிலையில் இலங்கை அரசு இல்லை...இது தொடர்பாக என் மனதில் எழுந்ததை நானும் எழுதியுள்ளேன்...http://nekalvukal.blogspot.com/2011/06/blog-post_11.html

Admin said...

//கந்தசாமி. கூறியது...

யுத்தம் நடைபெற்ற காலங்களில் வடக்கு மக்கள் எவ்வாறு பொருட்தட்டுப்பாட்டை எதிர் நோக்கினர் என்பதனை நாம் அறிவோம். இலங்கையில் பொருளாதாரத்தடை இல்லாத காலத்திலே வடக்கிலே பொருட்களின் விலைகள் எவ்வாறு உயர்ந்திருந்தன என்பதனை நாம் அறிவோம்./// ஒரு கிலோ அறுசி முந்நூறு ரூபாய்க்கு வாங்கிய அனுபவமும் உண்டு ...

பொருளாதார தடை என்ற போச்சை ஐநா எடுத்தவுடன் அடங்குகிற நிலையில் இலங்கை அரசு இல்லை...இது தொடர்பாக என் மனதில் எழுந்ததை நானும் எழுதியுள்ளேன்...http://nekalvukal.blogspot.com/2011/06/blog-post_11.html//

அரிசே அந்தவிலை பொருளாதாரத்தடை இலங்கையில் இல்லாதபோது. பொருளாதாரத்தடை வந்தால்?

உங்கள் பதிவை இப்போதுதான் பார்த்தேன்.

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்

Post a Comment