Friday, 24 June 2011

திருமணமான வலைப்பதிவர்கள் மனைவியிடம் இருந்து தப்பிக் கொள்வது எப்படி... சில ஆலோசனைகள்

பதிர்களுக்கு பல்வேறுபட்ட பிரச்சினைகள் இருக்கின்றன அவற்றையும் தாண்டி பதிவிட்டுக் கொண்டிருக்கின்றனர். அதிலும் குறிப்பாக பதிவர்களுக்கு வீட்டில்தான் தொல்லைகள் அதிகம். திருமணம் முடித்த பதிவர்கள் என்றால் சோல்லித்தான் தெரிய வேண்டுமா. மனைவியின் திட்டல்கள் பிள்ளைகளின் தொல்லைகள் என்று ஏராளம்.



என்று ஓரு பதிவெழுதி இருக்கின்றார். சிலவேளை இது அவரது உண்மைச் சம்பவமாக இருக்கலாம் என்று நம்பத்தகாத வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

உண்மையில் திருமணம் முடித்த பதிவர்கள் பல்வேறுபட்ட கஸ்ரங்களுக்கு மத்தியில் பதிவிட்டு வருகின்றனர். அவர்கள் மனைவியிடம் தப்புவதென்றால் கடினமான விடயமே. யாரிடம் தப்பித்துக் கொண்டாலும் மனைவியிடம் தப்புவதென்றால் கடினம்தான்.

 திருமணமான ஆண் பதிவர்கள் மனைவியிடம் இருந்து திட்டுவாஙஙகாமல் இருக்க. தப்பித்துக் கொள்வதற்காக சில ஆலோசனைகளை சொல்லலாமே என்று நினைக்கின்றேன்.

01.  மனைவிமாரைப் பொறுத்தவரை தான் சமைத்துக்கொண்டிருக்கும்போது கணவன் கணிணி முன்னால் பதிவெழுதிக் கொண்டிருந்தால். அடுப்பைவிட மனைவிதான்  அதிகம் எரிந்து கொண்டிருப்பார். இதனால் சமைக்கும் பொறுப்பை நீங்களே ஏற்றுக் கொள்ளுங்கள் அல்லது மனைவிக்கு சமையலில் உதவி செய்யுங்கள்.

02.  உங்கள் மனைவியைப்பற்றி புகழ்ந்து அவ்வப்போது வலைப்பதிவில் எழுதுங்கள். அவரைப்பற்றி எழுதி இருப்பதை மனைவியிடம் காண்பியுங்கள். அப்போது இன்னும் அதிகமாக வலைப்பதிவெழுத மனைவியே உங்களை ஊக்கப்படுத்துவார்.

03.  மனைவிக்கும் ஒரு கணிணி வாங்கிக் கொடுத்து அவரையும் வலைப்பதிவாளராக மாற்றிவிடுங்கள். பிரச்சினைகள் வராது ஆனால் மனைவியும் 24 மணித்தியாலமும் கணிணி முன்னால் இருந்தால் நான் பொறுப்பல்ல. சில வேளை நீங்கள் வெளியில்தான் சாப்பிடவேண்டி வரும். அல்லது மனைவிக்கு எழுதத்தெரியாதென்றால் மனைவி பெயரில் நீங்களே எழுதுங்கள்.

04.  மனைவி வீட்டுவேலை சமையல்வேலை எல்லாம் செய்து பிள்ளைகளையும் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றால்தான் மனைவிமார் கொதித்தெழுவார்கள். காரணம் இப்போதைய பிள்ளைகளை வைத்துக்கொள்வதே பெரிய விடயம். பிள்ளைகளை வெளியில் எங்காவது அனுப்பிவிடுங்கள். அல்லது அவர்களையும் வலைப்பதிவாளராக மாற்றி விடுங்கள். 

05.  வீட்டுக்கு வேலைக்காரி ஒருத்தியை வைத்துக் கொள்ளுங்கள்.( நீங்கள் அல்ல வீட்டு வேலைக்கு) அப்போது மனைவிக்கு வேலைகள் குறையும் உங்கள்மீது கோபப்படமாட்டார்.  வேலைக்காரி உங்கள் வேலைக்காரியானால் நான் பொறுப்பல்ல.

06.  அலுவலகத்துக்கு செல்பவர்கள் தாம் வலைப்பதிவு எழுதுவதாக காட்டிக் கொள்ளாமல் அலுவலக வேலைகள் செய்வதாக மனைவியிடம் சொல்லலாம். சில மனைவிமார் அலுவலக வேலைகளை வீட்டில் செய்தால் வேலையை விடச் சொல்லக்கூடும் கவனமாக இருங்கள்.

07.   வலைப்பதிவின் மூலம் அதிக வருமானம் வருவதாக சொல்லிக் கொள்ளுங்கள். வருமானத்தை மனைவி கேட்டால் வேறு வழிகளில் கொடுப்பதற்கு ஆயத்தமா இருக்க வேண்டும்.

08.   தொடர்ந்து வீட்டிலே இருக்காமல் நண்பர்களின் வீட்டுக்கு சென்று இணையத்தை பயன்னடுத்தலாம்.  நண்பர் வீட்டில் உங்களால் ஏற்படும் பிரச்சினைக்கு நாம் பொறுப்பல்ல.

09.   நீங்கள் ஏதாவது படித்துக் கொண்டிருப்பவரானால். இணையத்திலே தேடிப்படிப்பதாக மனைவியிடம் சொல்லிக் கொள்ளுங்கள்.

10.  எல்லாவற்றுக்கும்மேல் மனைவியின் தேவைகளை அறிந்து அவர் சொற்படி நடந்து அவர் விருப்பங்களை நிறைவு செய்யுங்கள். மனைவியே உங்களுக்கு வலைப்பதிவு ஆலோசகராக இருப்பார். 

திருமணமாகாத பதிவர்களே திருமணத்தைப்பற்றி சிந்திக்கும்போது கவனமாக இருங்கள் 

பட உதவி - கூகிள்

Post Comment


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

42 comments: on "திருமணமான வலைப்பதிவர்கள் மனைவியிடம் இருந்து தப்பிக் கொள்வது எப்படி... சில ஆலோசனைகள்"

கூடல் பாலா said...

பிளாக்ல இருக்கிறது பூராவும் கில்மா ...மனைவி படிச்சாங்கன்னா ரொம்ப ம(மி)திப்பா இருக்கும் .....

ஹேமா said...

சந்ரு...இதையெல்லாம் நம்பணும் !

Anonymous said...

///சிலவேளை இது அவரது உண்மைச் சம்பவமாக இருக்கலாம் என்று நம்பத்தகாத வட்டாரங்கள் தெரிவிக்கின்றன./// ஐயோ அது நான் இல்ல ..)))

Anonymous said...

///மனைவிக்கும் ஒரு கணிணி வாங்கிக் கொடுத்து அவரையும் வலைப்பதிவாளராக மாற்றிவிடுங்கள்./// பாஸ் அதுக்கு தான நம்ம கேபிள் டிவிகள் இருபத்தி நான்கு மணி நேரமும் சீரியல் போடுறாங்க ஹிஹிஹி ஒரு டிவியும் டிஸ்சும் வாங்கி கொடுத்தால் போதும் ..))

Anonymous said...

///அல்லது அவர்களையும் வலைப்பதிவாளராக மாற்றி விடுங்கள். /// வலைப்பதிவு குடும்பம் எண்டு வீட்டுக்கு பெயரும் பெரும் வச்சுடலாம் ..)))

Anonymous said...

///தொடர்ந்து வீட்டிலே இருக்காமல் நண்பர்களின் வீட்டுக்கு சென்று இணையத்தை பயன்னடுத்தலாம். நண்பர் வீட்டில் உங்களால் ஏற்படும் பிரச்சினைக்கு நாம் பொறுப்பல்ல./// நண்பனின் மனைவி விளக்குமாறு எடுக்காத வரைக்கும் சந்தோசமே...)))

Anonymous said...

//எல்லாவற்றுக்கும்மேல் மனைவியின் தேவைகளை அறிந்து அவர் சொற்படி நடந்து அவர் விருப்பங்களை நிறைவு செய்யுங்கள். மனைவியே உங்களுக்கு வலைப்பதிவு ஆலோசகராக இருப்பார். // இது மிகவும் ஐடியா பாஸ் ,எல்லாத்தையும் அணுக வேண்டிய முறையில் அணுகினால் பிரச்சனைகள் தீர்க்க வழி ஏற்ப்படும்

Anonymous said...

///திருமணமாகாத பதிவர்களே திருமணத்தைப்பற்றி சிந்திக்கும்போது கவனமாக இருங்கள்/// திருமணமாகும் முன் பதிவுலகை டைவர்ஸ் பண்ணிடுங்கள் ..)))

இராஜராஜேஸ்வரி said...

ஆ...னுபவம் பேசுகிறது

A.R.ராஜகோபாலன் said...

அப்படியா இனிமே நான் இதை முயற்சி செய்து பாக்கிறேன் நண்பரே

Anonymous said...

சந்துரு முடியலை போதும்...எப்படியெல்லாம் பதிவெழுத வேண்டி இருக்கு கடவுளே...

ம.தி.சுதா said...

இதுக்குத் தான் நம்மள மாதிரி ஒண்டிக் கட்டையாக இருக்க வேண்டும் என்பார்கள்... ஹ..ஹ..ஹ..


அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
குழந்தைகளுக்கான நுண் அறிவு வளர்க்கும்(fine movement) இலகு கருவி (உள்ளுர் கண்டுபிடிப்பு)

Angel said...

// இதனால் சமைக்கும் பொறுப்பை நீங்களே ஏற்றுக் கொள்ளுங்கள் அல்லது மனைவிக்கு சமையலில் உதவி செய்யுங்கள்.//
இந்த ஒரு முத்தான அறிவுரையை பின் பற்றினாலே போதும் !!!!!!PROBLEM SOLVED.

Admin said...

//koodal bala கூறியது...

பிளாக்ல இருக்கிறது பூராவும் கில்மா ...மனைவி படிச்சாங்கன்னா ரொம்ப ம(மி)திப்பா இருக்கும் .....//

அதுவும் சரிதான்... மனைவியிடம் மதிப்பும் இருக்கும்.. மிதிப்பும் இருக்கும்...

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்.

Admin said...

//ஹேமா கூறியது...

சந்ரு...இதையெல்லாம் நம்பணும் !//

உண்மையச் சொல்கிறேன்.. நம்புங்கள்

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்.

Admin said...

//கந்தசாமி. கூறியது...

///சிலவேளை இது அவரது உண்மைச் சம்பவமாக இருக்கலாம் என்று நம்பத்தகாத வட்டாரங்கள் தெரிவிக்கின்றன./// ஐயோ அது நான் இல்ல ..)))//

அது நீங்க இல்ல என்றால் இது நீங்கதானே..

Admin said...

//கந்தசாமி. கூறியது...

பாஸ் அதுக்கு தான நம்ம கேபிள் டிவிகள் இருபத்தி நான்கு மணி நேரமும் சீரியல் போடுறாங்க ஹிஹிஹி ஒரு டிவியும் டிஸ்சும் வாங்கி கொடுத்தால் போதும் ..))

இதுவும் நல்ல விடயம்தான்.. சீரியல்களைப்பார்த்து மனைவி எப்போதும் அழுதுகொண்டே இருப்பாரே.

Admin said...

//கந்தசாமி. கூறியது...

வலைப்பதிவு குடும்பம் எண்டு வீட்டுக்கு பெயரும் பெரும் வச்சுடலாம் ..)))//

குடும்பத்துக்கு தனி ஒரு வலைப்பதிவும் ஆரம்பிக்கலாம்

Admin said...

//கந்தசாமி. கூறியது...

நண்பனின் மனைவி விளக்குமாறு எடுக்காத வரைக்கும் சந்தோசமே...)))

விளக்குமாறு எடுக்காமல் உங்களை அரவணைத்துப் போனால் சந்தோசம்தானே.

Admin said...

//கந்தசாமி. கூறியது...

இது மிகவும் ஐடியா பாஸ் ,எல்லாத்தையும் அணுக வேண்டிய முறையில் அணுகினால் பிரச்சனைகள் தீர்க்க வழி ஏற்ப்படும்//

ம்... அணுகவேண்டிய முறையில் அணுகிப்பாருங்கள். எல்லாம் நல்லபடியே நடக்கும்..

Admin said...

//கந்தசாமி. கூறியது...

திருமணமாகும் முன் பதிவுலகை டைவர்ஸ் பண்ணிடுங்கள் ..)))//

இல்லையேல் மனைவியை டைவர்ஸ் பண்ணவேண்டிவரும் கவனம்.

Admin said...

//இராஜராஜேஸ்வரி கூறியது...

ஆ...னுபவம் பேசுகிறது//

இன்னும் எனக்கு கல்யானமாகலயே....

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்.

Admin said...

//A.R.ராஜகோபாலன் கூறியது...

அப்படியா இனிமே நான் இதை முயற்சி செய்து பாக்கிறேன் நண்பரே//

வாழ்த்துக்கள் முயற்சி செய்யுங்கள்..

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்.

Admin said...

//தமிழரசி கூறியது...

சந்துரு முடியலை போதும்...எப்படியெல்லாம் பதிவெழுத வேண்டி இருக்கு கடவுளே...//

என்ன செய்வது இப்படியெல்லாம் பதிவெழுதித்தான் நம்ம ஆண்களை பெண்களிடமிருந்து காப்பாற்ற முடியும்.

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்.

Admin said...

//♔ம.தி.சுதா♔ கூறியது...

இதுக்குத் தான் நம்மள மாதிரி ஒண்டிக் கட்டையாக இருக்க வேண்டும் என்பார்கள்... ஹ..ஹ..ஹ..//

இத நாங்க நம்பணும்...

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்.

Admin said...

//angelin கூறியது...

// இதனால் சமைக்கும் பொறுப்பை நீங்களே ஏற்றுக் கொள்ளுங்கள் அல்லது மனைவிக்கு சமையலில் உதவி செய்யுங்கள்.//
இந்த ஒரு முத்தான அறிவுரையை பின் பற்றினாலே போதும் !!!!!!PROBLEM SOLVED.//

அது..

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்.

மோகன்ஜி said...

உங்களுக்கு நகைச்சுவை சரளமாக வருகிறது.. வாய்விட்டு சிரிக்க முடிந்தது.

Admin said...

//மோகன்ஜி கூறியது...

உங்களுக்கு நகைச்சுவை சரளமாக வருகிறது.. வாய்விட்டு சிரிக்க முடிந்தது.//

அப்படியா...

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்.

நிரூபன் said...

என்று ஓரு பதிவெழுதி இருக்கின்றார். சிலவேளை இது அவரது உண்மைச் சம்பவமாக இருக்கலாம் என்று நம்பத்தகாத வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.//

அடிங்....படவா ராஸ்கல்
பிச்சுப் புடுவேன் பிச்சி..
என்னா பேச்சுப் பேசுறீங்க..
ஒரு சிங்கிள் சிங்கத்திற்கு இப்பத் தான் எல்லோரும் பொண்ணு பார்க்கிறாங்க..
நம்மப்தாகாத வட்டாரங்கள் என்று ஒரு உல்டா விட்டு,
வதந்தி பரப்பி என் வாழ்க்கையினையே கெடுத்திடுவீங்க போல இருக்கே;-))

பாஸ்....காலம் பூரா நான் கலியாணம் பண்ணாமல் இருக்கனும் என்று உங்களுக்கு ஆசை போல..
ஹி...ஹி...

நிரூபன் said...

திருமணமாகாத பதிவர்களே திருமணத்தைப்பற்றி சிந்திக்கும்போது கவனமாக இருங்கள்.//

பாஸ், இது நல்ல பையனுக்கு அழகு!

வாழ்க ! நீங்கள் வாழ்க!

நம்மளை மாதிரிப் பசங்களுக்கு டிஸ்கியிலை டிப்ஸ் குடுத்து விட்டு, கலியாணம் ஆன பசங்களுக்கு ஒரு பதிவினையே போட்டிருக்கிறீங்க...

நிரூபன் said...

டிப்ஸ் எல்லாம் கலக்கல்...
ஹி....நோட் பண்ணி வைக்கிறேன்,
கலியாணம் ஆன பின்னாடி தேவைப்படும் இல்லே...

சுதா SJ said...

கல்யாணம் ஆனா இவ்ளோ பிரச்சனைகள் வருமா ??? அவ்வவ்

சுதா SJ said...

இப்போ என்ன பாஸ் சொல்ல வாறிங்க??
கல்யாணம் கட்டலாமா வேண்டாமா ??

சுதா SJ said...

அசத்தல் பதிவு பாஸ்
கல்யாணம் ஆணவங்கள் படித்து பாதுகாக்க வேண்டிய பதிவு
ஹி ஹி

Admin said...

//நிரூபன் கூறியது...

அடிங்....படவா ராஸ்கல்
பிச்சுப் புடுவேன் பிச்சி..
என்னா பேச்சுப் பேசுறீங்க..
ஒரு சிங்கிள் சிங்கத்திற்கு இப்பத் தான் எல்லோரும் பொண்ணு பார்க்கிறாங்க..
நம்மப்தாகாத வட்டாரங்கள் என்று ஒரு உல்டா விட்டு,
வதந்தி பரப்பி என் வாழ்க்கையினையே கெடுத்திடுவீங்க போல இருக்கே;-))

பாஸ்....காலம் பூரா நான் கலியாணம் பண்ணாமல் இருக்கனும் என்று உங்களுக்கு ஆசை போல..
ஹி...ஹி...//

அப்போ நீங்க பார்த்த பொண்ணுங்க என்ன ஆச்சுது.

கல்யாணம் பண்ணினா எவ்வளவு சுதந்திரம் பறிபோகுது என்று தரியுமா என்று பலர் கேட்கிறார்களே பாஸ்.

Admin said...

//நிரூபன் கூறியது...

பாஸ், இது நல்ல பையனுக்கு அழகு!

வாழ்க ! நீங்கள் வாழ்க!

நம்மளை மாதிரிப் பசங்களுக்கு டிஸ்கியிலை டிப்ஸ் குடுத்து விட்டு, கலியாணம் ஆன பசங்களுக்கு ஒரு பதிவினையே போட்டிருக்கிறீங்க...//

நான் றொம்ப நல்ல பையன் என்று பலரும் சொல்றாங்க ..


உங்க மாதிரிப் பசங்களா நீங்க திருமணமானவரா? திருமணமாகாதவரா? எந்த பகுதிக்குள் நாங்கள் போடுவது.

Admin said...

//நிரூபன் கூறியது...

டிப்ஸ் எல்லாம் கலக்கல்...
ஹி....நோட் பண்ணி வைக்கிறேன்,
கலியாணம் ஆன பின்னாடி தேவைப்படும் இல்லே...//

அப்போ விரைவில் உங்களுக்கு தேவைப்படும்...

Admin said...

//துஷ்யந்தன் கூறியது...

கல்யாணம் ஆனா இவ்ளோ பிரச்சனைகள் வருமா ??? அவ்வவ்//

ம்... வருமெண்ணு சொல்றாங்க.. எனக்கு அனுபவமில்லை..

Admin said...

//துஷ்யந்தன் கூறியது...

இப்போ என்ன பாஸ் சொல்ல வாறிங்க??
கல்யாணம் கட்டலாமா வேண்டாமா ??//

கல்யாணம் கட்டுங்கள்.. உங்களை அவள் கட்டிப்போடாதவளாக பார்த்து கல்யாணம் பண்ணுங்க...

Admin said...

//துஷ்யந்தன் கூறியது...

அசத்தல் பதிவு பாஸ்
கல்யாணம் ஆணவங்கள் படித்து பாதுகாக்க வேண்டிய பதிவு
ஹி ஹி//

கல்யாணம் ஆகாதவங்களுக்கும் பொருந்தும் பாஸ்

போளூர் தயாநிதி said...

///மனைவிக்கும் ஒரு கணிணி வாங்கிக் கொடுத்து அவரையும் வலைப்பதிவாளராக மாற்றிவிடுங்கள்./// பாஸ் அதுக்கு தான நம்ம கேபிள் டிவிகள் இருபத்தி நான்கு மணி நேரமும் சீரியல் போடுறாங்க ஹிஹிஹி ஒரு டிவியும் டிஸ்சும் வாங்கி கொடுத்தால் போதும் ..))

Post a Comment