Sunday, 19 June 2011

சணல் 4 வீடியோவும் கொலைவெறி நாய்களும் தமிழின நாய்களும்

இன்று பரவலாகப் பேசப்படுகின்ற எழுதப்படுகின்ற விடயம் சணல் 4 வீடியோ விடயமாகும். அந்த வீடியோவை என்னால் முழுமையாகப் பார்க்க முடியவில்லை.

எம் இனத்தை கதறக்கதற சித்திரைவதை செய்து வாய்விட்டுச் சொல்ல முடியாத வேலைகளைச் செய்கின்றனர். அந்த வீடியோவைப் பார்த்து எம் தமிழர்கள் கதறி அழுகின்ற விதத்தினை வைத்து கேலி செய்து ஒருவர் பதிவெழுதி இருந்தார். இவர் மனிதப்பிறவிதானா?

இங்கே வெளியிடப்பட்ட வீடியோ புலிகளுக்கு ஆதரவானதல்ல. ஒரு இனம் எப்படி சித்திரவதை செய்யப்பட்டு அழிக்கப்படுவதை காட்டுகின்ற ஆவணம். இது புலிகளுக்கு ஆதரவாக வெளியிடப்பட்டதல்ல.

இன்று தமிழர்களுக்கு ஆதரவாக எங்கு குரல் கொடுக்கப்பட்டாலும். ஏன் அதனை சிலர் புலிகளுக்கு ஆதரவானதாக மாற்றி திசைதிருப்ப நினைக்கின்றனர்.

புலிகளுக்கு எதிரானவர்கள் இருக்கலாம். அவர்கள் இந்த வீடியோவை பொய்யானவை என்று கூறுவதில் நியாயமில்லை. புலிகளுக்கு எதிரானவர்கள் தமிழர்களுக்கும் எதிரானவர்கள் என்று தங்களைக் காட்டிக்கொள்ள நினைக்கின்றனரா?

நம் இனம் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டிருக்கின்றது. கொலைகாரர்களுக்கு எதிராக குரல்கொடுக்கவேண்டிய கடமை ஒவ்வொரு தமிழனுக்கும் இருக்கிறது. அப்படி இல்லையேல் அவன் தமிழனாக இருக்க முடியாது.

புலிகளுக்கு எதிரானவர்கள் இருக்கலாம் மாற்றுக்கருத்துடையவர்கள் இருக்கலாம். நானும் பல விடயங்களில் மாற்றுக் கருத்துடையவன்தான். இங்கே புலிகளுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டிய நேரமல்ல தமிழர்களை கதறக்கதற கொலை செய்த காட்டு மிராண்டிகளுக்கு எதிராக நியாயத்துக்காக போராடவேண்டிய நேரமிது.

இங்கே தாங்கள் புலிகளுக்கு எதிரானவர்கள் மாற்றுக்கருத்துடையவர்கள் மட்டக்களப்பான் யாழ்ப்பாணத்தான் என்ற பாகுபாடு வேண்டாம் தமிழனுக்காக குரல் கொடுப்பொம் அழிக்கப்பட்ட எம் இனத்தின் நீதிக்காகக் குரல்கொடுப்போம்.

வெறுமனே அரசியல் இலாபத்தக்காகவும் மாற்றுக் கருத்துடையவர்கள் புலிகளுக்கு எதிரானவர்கள் என்பதற்காகவும் தமிழினத்துக்கு எதிராக தமிழனாகப் பிறந்த எவரும் நிற்கவேண்டாம்.

இந்த வீடியோவிற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் ஒரு முறைக்கு பல முறை வீடியோவைப் பாருங்கள் அப்போதாவது உங்கள் கல் நெஞ்சு கரையட்டும். அப்படியும் கரையவில்லையேல் எம் இனத்தை கதறக்கதற சித்திரவதை செய்து உடல் வேட்டையாடும் அந்த நாய்களுக்கும் உங்களுக்கும் வித்தியாசமில்லை.
இந்த நிலை உங்கள் மனைவி பிள்ளைகள் அக்கா தங்கைகளக்கு ஏற்பட்டிருந்தால் எப்படி இருக்கும் என்பதனை சிந்தித்தப் பாருங்கள். இந்த நேரத்தில் எங்களுக்குள் இருக்கின்ற கசப்புணர்வுகளை மறந்து  இதற்காவது ஒன்று படுங்கள்.


இது புலிகளுக்கு ஆதரவாக எழுதப்பட்டதாக நினைக்க வேண்டாம். நம் தமிழினத்துக்காக எழுதப்பட்டது.

Post Comment


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

28 comments: on "சணல் 4 வீடியோவும் கொலைவெறி நாய்களும் தமிழின நாய்களும்"

Ashwin-WIN said...

:((((( கவலைப்படமட்டுமே முடியுது]

கவி அழகன் said...

சொல்லமுடியவில்லை

ஸ்ரீராம். said...

அந்த வீடியோவைப் பார்க்கும் மனத் துணிவு வரவில்லை. கொடூரமான விஷயம்!

பன்னிபிரபா said...

டேய் கேணை அவ்வளவு ஜனங்களும் செத்ததுக்கு அந்த பன்னிபிரபாவும் தானே காரணம்
எந்தநாயாவது அதை பற்றி எழுதுறீங்கலாடா?
எல்லாம் ராசபக்சே பண்ணினான் அப்படிதானே ஊழை இடுறீங்க?

Anonymous said...

பன்னி பிரபா உன் அப்பன் என்ன சிங்களவனா? சிங்களவனிடம் எவ்வளவு கூலி வாங்கி இப்படி எழுதுகிறாய் நாயே?

நிரூபன் said...

சகோதரம் ஏழாவது ஓட்டுடன் நான் வந்திருக்கேன்.

நிரூபன் said...

தமிழ் மக்களினைச் சித்திரவதைக்கு ஆளாக்கியோரைத் தண்டிக்க வேண்டும் எனும் உங்களது கருத்துக்களோடு உடன்படுகிறேன்,
அதே வேளை போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் நாம் அனைவடும் இதே வேகத்துடன் உதவ வேண்டிய தலையாய கடமை இருக்கிறது என்பதனை மறந்து விடக் கூடாதல்லவா.

சந்ரு said...

//Ashwin-WIN கூறியது...

:((((( கவலைப்படமட்டுமே முடியுது]//

ம்.. வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்

சந்ரு said...

//கவி அழகன் கூறியது...

சொல்லமுடியவில்லை//

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்

சந்ரு said...

//மைந்தன் சிவா கூறியது...

நாய்கள்....//

வேறு என்னவென்று சொல்வது..

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்

சந்ரு said...

//ஸ்ரீராம். கூறியது...

அந்த வீடியோவைப் பார்க்கும் மனத் துணிவு வரவில்லை. கொடூரமான விஷயம்!//

ம்...


வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்

சந்ரு said...

//பன்னிபிரபா கூறியது...

டேய் கேணை அவ்வளவு ஜனங்களும் செத்ததுக்கு அந்த பன்னிபிரபாவும் தானே காரணம்
எந்தநாயாவது அதை பற்றி எழுதுறீங்கலாடா?
எல்லாம் ராசபக்சே பண்ணினான் அப்படிதானே ஊழை இடுறீங்க?//

நான் புலிகளுக்கு ஆதரவாக எழுதவில்லை. புலிகள் செய்ததெல்லாம் தவறு என்றும் சொல்லவில்லை.

அப்பாவி மக்களை கதறக்கதற கொலை செய்தவர்களை தண்டிக்க வேண்டும் என்றுதான் சொல்கிறேன் அது புலிகளாக இருந்தால் கூட தண்டிக்கப்பட வேண்டும்.

எம் இனம் எம் சகோதரிகள் நிர்வாணப் படுத்தப்பட்டு சொல்ல முடியவில்லை கொடுரமான முறையில் கொலை செய்யப்பட்டிருக்கின்றனர். இதை பார்த்து இரசிப்பவன் தமிழனா?

சந்ரு said...

//பெயரில்லா கூறியது...

பன்னி பிரபா உன் அப்பன் என்ன சிங்களவனா? சிங்களவனிடம் எவ்வளவு கூலி வாங்கி இப்படி எழுதுகிறாய் நாயே?//

இருக்கலாம்

சந்ரு said...

//நிரூபன் கூறியது...

சகோதரம் ஏழாவது ஓட்டுடன் நான் வந்திருக்கேன்.//

நன்றிகள்

சந்ரு said...

//நிரூபன் கூறியது...

தமிழ் மக்களினைச் சித்திரவதைக்கு ஆளாக்கியோரைத் தண்டிக்க வேண்டும் எனும் உங்களது கருத்துக்களோடு உடன்படுகிறேன்,
அதே வேளை போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் நாம் அனைவடும் இதே வேகத்துடன் உதவ வேண்டிய தலையாய கடமை இருக்கிறது என்பதனை மறந்து விடக் கூடாதல்லவா.//

உங்கள் கருத்துத்தான் என் கருத்தும்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவவேண்டும் எனும் ஆதங்கங்களை உங்கள் பதிவிலே கருத்துரையிட்டிருக்கின்றேன்.

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்

A.R.ராஜகோபாலன் said...

மிக நல்ல பதிவு நண்பரே

உங்களின் கருத்துக்கு முழுமையாக உடன்படுகிறேன்

Anonymous said...

////அந்த வீடியோவைப் பார்த்து எம் தமிழர்கள் கதறி அழுகின்ற விதத்தினை வைத்து கேலி செய்து ஒருவர் பதிவெழுதி இருந்தார். இவர் மனிதப்பிறவிதானா///// பாஸ் இப்படியான சில நபர்களை( முகமூடிகளை) முக நூலிலும் நான் பார்த்துள்ளேன் ... இதுகள் தமிழன் என்றில்லாது மனித பிறப்புக்களிலும் உள்ளடக்க முடியாத ஜென்மங்கள்...

Anonymous said...

இங்கே வெளியிடப்பட்ட வீடியோ புலிகளுக்கு ஆதரவானதல்ல. ஒரு இனம் எப்படி சித்திரவதை செய்யப்பட்டு அழிக்கப்படுவதை காட்டுகின்ற ஆவணம். இது புலிகளுக்கு ஆதரவாக வெளியிடப்பட்டதல்ல.
/// ஆமாம் பாஸ், சனல் 4 இதை வெளியிட்டதுக்கு காரணம் ஒரு மனித குலம் எவ்வாறு வெறித்தனமான வன்முறைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது என்பதை இந்த உலகுக்கு காண்பிக்கவே ஒழிய புலிகளின் யுத்த தேல்விகளை அல்ல ...

சார்வாகன் said...

வேதனை தரும் பதிவு,
தமிழனுக்கு தமிழன்தான் ஆப்பு வைக்கிறான்.ஒரு போரில் வெற்றி தோல்வி ச்கஜம் என்றாலும்,ச்ரணடந்தவர்களை கொல்வது என்ன நியாயம்.ஹிட்லர் இரண்டாம் உலக்ப் போருக்கு காரண்மான்வன்.அவன் தோற்ற பிற‌கு ஜெர்மனியில் என்ன இப்படி வெறியாட்டமா நட்த்தப் பட்டது?.இந்திய சீன போர்,இந்தியா பாகிஸ்தான் யுத்தங்கள் எதிலும் இப்படி நடக்கவில்லை என்பதை யோசிக்க வேண்டும்.யுத்தத்தில் கூட சில கடை பிடிக்க வேண்டிய ஒழுங்கு முறை உண்டு.சதி செய்து சரணடைந்த பலரை கும்பல் கும்பலாக கொன்றொழித்த செயலும்,பெண்களை ஈனமாக் நட்த்திய செயலுக்கு பதில் சொல்லியே ஆக் வேண்டும்.
புலி,எலி என்ற புரளி கிள‌ப்புவர்கள் விரும்பாவிட்டாலும் நியாயம் கிடைக்கும் நாள் விரவில் வரும்.
இந்த காணொளிகள் கூட சிங்கள இராணுவத்தினர்(இராஜ பக்சே சஎதிர் கோஷ்டி) எடுத்து பரப்பியது.இல்லாவிட்டால் இராஜபக்சே பிரச்சினை இல்லாமல்,இப்படி நடக்கவே இல்லையென்று சொல்லி இருப்பான்.

LOSHAN said...

ம்ம்ம்.. பெருமூச்சுடன் கடுங்கோபமும் வருகிறது.
உங்கள் உணர்வுகள் தாம் எம்முடையதும்.\
மக்களுக்காகப் பேசுவோம்;கவலைப்படுவோம்; முடியுமான உதவிகள் செய்வோம்

சந்ரு said...

//A.R.ராஜகோபாலன் கூறியது...

மிக நல்ல பதிவு நண்பரே

உங்களின் கருத்துக்கு முழுமையாக உடன்படுகிறேன்//

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்

சந்ரு said...

//கந்தசாமி. கூறியது...

////அந்த வீடியோவைப் பார்த்து எம் தமிழர்கள் கதறி அழுகின்ற விதத்தினை வைத்து கேலி செய்து ஒருவர் பதிவெழுதி இருந்தார். இவர் மனிதப்பிறவிதானா///// பாஸ் இப்படியான சில நபர்களை( முகமூடிகளை) முக நூலிலும் நான் பார்த்துள்ளேன் ... இதுகள் தமிழன் என்றில்லாது மனித பிறப்புக்களிலும் உள்ளடக்க முடியாத ஜென்மங்கள்...//

உண்மயாகவே இவர்கள் மனிதர்களல்ல..

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்

சந்ரு said...

//கந்தசாமி. கூறியது...

இங்கே வெளியிடப்பட்ட வீடியோ புலிகளுக்கு ஆதரவானதல்ல. ஒரு இனம் எப்படி சித்திரவதை செய்யப்பட்டு அழிக்கப்படுவதை காட்டுகின்ற ஆவணம். இது புலிகளுக்கு ஆதரவாக வெளியிடப்பட்டதல்ல.
/// ஆமாம் பாஸ், சனல் 4 இதை வெளியிட்டதுக்கு காரணம் ஒரு மனித குலம் எவ்வாறு வெறித்தனமான வன்முறைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது என்பதை இந்த உலகுக்கு காண்பிக்கவே ஒழிய புலிகளின் யுத்த தேல்விகளை அல்ல ...//

உண்மைதான்...

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்

சந்ரு said...

//சார்வாகன் கூறியது...

வேதனை தரும் பதிவு,
தமிழனுக்கு தமிழன்தான் ஆப்பு வைக்கிறான்.ஒரு போரில் வெற்றி தோல்வி ச்கஜம் என்றாலும்,ச்ரணடந்தவர்களை கொல்வது என்ன நியாயம்.ஹிட்லர் இரண்டாம் உலக்ப் போருக்கு காரண்மான்வன்.அவன் தோற்ற பிற‌கு ஜெர்மனியில் என்ன இப்படி வெறியாட்டமா நட்த்தப் பட்டது?.இந்திய சீன போர்,இந்தியா பாகிஸ்தான் யுத்தங்கள் எதிலும் இப்படி நடக்கவில்லை என்பதை யோசிக்க வேண்டும்.யுத்தத்தில் கூட சில கடை பிடிக்க வேண்டிய ஒழுங்கு முறை உண்டு.சதி செய்து சரணடைந்த பலரை கும்பல் கும்பலாக கொன்றொழித்த செயலும்,பெண்களை ஈனமாக் நட்த்திய செயலுக்கு பதில் சொல்லியே ஆக் வேண்டும்.
புலி,எலி என்ற புரளி கிள‌ப்புவர்கள் விரும்பாவிட்டாலும் நியாயம் கிடைக்கும் நாள் விரவில் வரும்.
இந்த காணொளிகள் கூட சிங்கள இராணுவத்தினர்(இராஜ பக்சே சஎதிர் கோஷ்டி) எடுத்து பரப்பியது.இல்லாவிட்டால் இராஜபக்சே பிரச்சினை இல்லாமல்,இப்படி நடக்கவே இல்லையென்று சொல்லி இருப்பான்.//

உங்கள் கருத்துக்கள் நியாயமனவையே

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்

சந்ரு said...

//LOSHAN கூறியது...

ம்ம்ம்.. பெருமூச்சுடன் கடுங்கோபமும் வருகிறது.
உங்கள் உணர்வுகள் தாம் எம்முடையதும்.\
மக்களுக்காகப் பேசுவோம்;கவலைப்படுவோம்; முடியுமான உதவிகள் செய்வோம்//

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்

சி.கருணாகரசு said...

அது வலியின் சுவடு.

உண்மை உணர்வாளனுக்கு வலிக்கும்.

சி.கருணாகரசு said...

உணர்வுள்ளவனுக்கு மட்டுமே அது வலிக்கும்.... புரிதல் இல்லாதவரிடம் அதைப் பற்றி பேசுவதே வீண்.

அது வலியின் சுவடு.
அது உணர்ந்தவனுகும் உணர்வுள்ளவனுக்கும் மட்டுமே புரியும்.

Post a Comment