Saturday, 31 October 2009

எவரும் மறந்திடவேண்டாம்.


என்ன நண்பர்களே இருக்கிறம் சஞ்சிகையின் அச்சு, இலத்திரனியல் ஊடகவியலாளர்களுக்குமிடையிலான சந்திப்புக்கு வருவதற்கு தயாராகிவிட்டீர்களா? நாட்களை எண்ணிக்கொண்டிருந்த நான் இப்போது மணித்தியாலங்களை எண்ணிக்கொண்டு இருக்கின்றேன்.

முதலாவது பதிவர் சந்திப்புக்கு போகவில்லையே என்ற கவலை இன்னும் போகவில்லை அதுதான் இந்த எதிர்பார்ப்பு. இந்தச் சந்திப்பிலே வலைப்பதிவினூடாக கருத்துக்களை பரிமாறிக்கொண்ட நண்பர்களை நேரடியாக சந்திக்கப்போகின்றேனே என்ற சந்தோசத்தில் இருக்கின்றேன்.

இருக்கிறம் நிர்வாகத்தால் அனுப்பப்பட்ட மின்னஞ்சலிலே சில விடயங்களும், இருக்கிறம் சஞ்சிகை நிறுவனத்தைச் சென்றடைவதற்கான வரைபடமும் அனுப்பப்பட்டிருக்கின்றன. அந்த மின்னஞ்சலிலே குறிப்பிடப்பட்டிருக்கின்ற விடயங்களையும், இருக்கிறம் சஞ்சிகை நிறுவனத்தை சென்றடைவதற்கான வரைபடத்தினையும் தருகின்றேன்.

இருக்கிறம் சஞ்சிகையின் ஏற்பாட்டில் நடைபெறவிருக்கும் அச்சுவலைச் சந்திப்புக்கு தமது வருகையை உறுதிப்படுத்திய வலைப்பதிவர்களுக்கு எமது நன்றிகள். வருகையை உறுதிப்படுத்திய அனைவருக்கும் அழைப்பிதழ்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. அழைப்பிதழ் கிடைக்காதவர்கள் எம்முடன் தொடர்பு கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள். மேலும் இருக்கிறம் அலுவலகத்துக்கு வருவதற்கான வரைவுப்படமொன்றை இங்கே தந்திருக் கின்றோம். இதில் குறிப்பிடப்பட்டுள்ள இலக்க பஸ்களில் வந்து சேரலாம்.


முக்கிய குறிப்பு: இரவு 10 மணியுடன் பாதுகாப்பு காரணங்களை முன்னிட்டு பொளத்தாலோக மாவத்தையின் வீதி மூடப்படுவதால் மாலை 3 மணியிலி ருந்து இரவு 8 மணிவரையுமே எமது நிகழ்ச்சிக்கான ஒழுங்கு வரையறுக்கப்பட்டுள்ளது என்பதையும். உங்களுக்கான போக்குவரத்து ஒழுங்குகளை நீங்களே மேற்கொள்ள வேண்டுமென்பதையும் அறியத் தருகின்றோம்.
மேலதிக விபரங்களுக்கு.

"IRUKIRAM"
Ego Publication House (Pvt) Ltd
03, Torington Avenue, Colombo -07
T.P - 0113150836
Fax : 011 2585190
Email : irukiram@gmail.com
Website: www.irukkiram.tk

சரி எல்லோரும் மறந்திடாம வந்திடுங்க... நல்ல பல விடயங்கள் இச் சந்திப்பிலே இடம்பெற இருப்பதாக அறியக்கூடியதாக இருக்கின்றது.
read more...

Friday, 30 October 2009

இலங்கையின் தமிழ் ஊடகங்களும் வலைப்பதிவர்களும்.

இன்று இலங்கையைப் பொறுத்தவரை வலைப்பதிவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்ற நிலையில் வலைப்பதிவர்கள் தொடர்பாக ஊடகங்களின் பங்களிப்பும் அதிகரித்துவருகின்றது. அத்தோடு பலரும் இன்று வலைப்பதிவர்கள் பக்கம் பார்வையினைச் செலுத்தத் தொடங்கியுள்ளனர்.


இலங்கையின் முதலாவது வலைப்பதிவர் சந்திப்பின் பின்னரே வலைப்பதிவர்கள் பக்கம் எல்லோரது பார்வையும் திரும்பியது என்று சொல்லலாம். முதலாவது வலைப்பதிவர் சந்திப்பின்பின் பல நல்ல விடயங்கள் நடந்தேறியிருக்கின்றன. சந்திப்பின் பின்னர் எதனைச் சாதித்தனர் என்று ஒரு சிலர் கேட்பது இலங்கைப் பதிவர்களின் வளர்ச்சியினைத் தாங்கிக்கொள்ள முடியாதவர்களின் பொறாமையின் உச்சகட்ட வெளிப்பாடுதான்.

இலங்கையின் வலைப்பதிவர்களைப் பொறுத்தவரை பல துறை சார்ந்தவர்கள் இருக்கின்றனர். அவர்கள நல்ல பல விடயங்களைப் பதிவிடுகின்றனர். அந்தப் பதிவுகள் இணைய வசதியினைக் கொண்ட சிலரையே சென்றடைகின்றன. அப்பதிவுகள் எல்லோரையும் சென்றடைய வேண்டுமானால் ஊடகங்களின் பங்கு அவசியமாகின்றது.

இலங்கையைப் பொறுத்தவரை இலத்திரனியல், அச்சு ஊடகங்களைச் சேர்ந்த பலர் வலைப்பதிவர்களாக இருக்கின்றனர். அவர்களுக்கிடையே ஒரு நட்பு இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

அச்சு ஊடகங்களைப் போறுத்தவரை இன்று பதிவர்கள் பக்கம் தமது பார்வையினை அதிகரித்து இருக்கின்றனர்.

இன்று இலங்கையிலே இருக்கின்ற சில சஞ்சிகைகளும், பத்திரிக்கைகளும் பதிவர்களின் பதிவுகளை, ஆக்கங்களை பிரசுரிப்பதோடு பதிவர்களையும் அவர்களது வலைப்பதிவுகளைப் பற்றியும் அறிமுகம் செய்து வருகின்றன. இதன் மூலம் பதிவர்களுக்கு இன்னும் பல விடயங்களை பதிவிட வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகின்றது. பதிவர்கள் உச்சாகப்படுத்தப்படுகின்றனர்.

குறிப்பாக இருக்கிறம் சஞ்சிகை அவர்களது ஒவ்வொரு சந்சிகயிலும் பதிவர்களின் பதிவுகளை, ஆக்கங்களை முன்னுரிமை கொடுத்து பிரசுரித்து வருவதோடு ஊடகந்கலுக்கும் பதிவர்களுக்குமிடையே மேலும் ஒரு நெருக்கமான உறவினை ஏற்படுத்தும் வண்ணம் அச்சு, இலத்திரனியல் ஊடகங்களுக்கும் பதிவர்களுக்குமிடையே ஒரு சந்திப்பினை எதிர்வரும் திங்கட்கிழமை ஏற்பாடு செய்திருக்கின்றனர். இது வலைப்பதிவர்களுக்கு நல்ல பயனுள்ள விடயமாக அமைய இருக்கின்றது. (இதனைகூட சிலர் கிண்டல் செய்திருப்பது அவர்களின் அறியாமைதான்)

அத்தோடு தினக்குரல் பத்திரிகை பதிவர்களுக்கென ஞாயிறு தினக்குரலிலே ஒரு பக்கம் ஒதுக்கியிருப்பதோடு பதிவர்களது பதிவுகளையும், பதிவர்களைப் பற்றியும் அறிமுகம் செய்து வருகின்றது. மெட்ரோ நியூஸ் பத்திரிகைகூட பதிவர்களுக்கு முன்னுரிமை கொடுத்துவருகின்றன.


எதிர்வரும் திங்கட்கிழமை இடம்பெறும் சந்திப்புக்கு பின்னர் ஏனைய அச்சு ஊடகங்களும் பதிவர்களது பதிவுகளுக்கு, பதிவுகளுக்கு, ஆற்றல்களுக்கு இடங்கொடுக்கும் என்ற நம்பிக்கை இருக்கின்றது.

இலத்திரனியல் ஊடகங்களைப் பொறுத்தவரை இலங்கையிலே இருக்கின்ற அரச, தனியார் ஊடகங்களைச் சேர்ந்த பல ஒளி, ஒலிபரப்பாளர்கள் வலைப்பதிவர்களாக இருக்கின்றனர். இவர்களுக்கிடையே ஒரு நட்புறவுகூட இருக்கின்றன. வலைப்பதிவர்கள் தொடர்பில் இவர்களும் தமது ஊடகங்கள் மூலமாக தங்களால் முடிந்தவற்றைச் செய்துகொண்டு இருக்கின்றனர்.

இன்று இலங்கையிலே இருக்கின்ற சில இலத்திரனியல் ஊடகங்கள் பல தவறுகளைச் செய்து கொண்டிருக்கின்றன. தமிழ் மொழியை வளர்ப்பதாகச் சொல்லிக்கொண்டு தமிழ் மொழியினை கொலை செய்துகொண்டு இருக்கின்றன. இதனை பலரும் உரிய நிறுவனங்களுக்கு எடுத்துக்கூறியும் அவர்கள் தாங்கள் செய்வதுதான் சரி எனும் அளவுக்கு அவர்களின் அட்டகாசம் அதிகரித்துக்கொண்டு செல்கின்றன.

அச்சு ஊடகங்களும்கூட அவ்வப்போது இதனைச் சுட்டிக்காட்டியபோதும் குறிப்பிட்ட ஊடகங்கள் தவறுகளை திருத்துவதாக இல்லை. சில வலைப்பதிவர்கள் இவற்றினைச் சுட்டிக்காட்ட ஆரம்பித்தனர். நானும் பல இடுகைகள் மூலம் இவர்களது பிழைகளைச் சுட்டிக்காட்டினேன். காரணம் குறிப்பிட்ட ஊடகங்கனைச் சேர்ந்தவர்கள் வலைப்பதிவர்களாக இருக்கின்றனர் அவர்களாலாவது குறிப்பிட்ட ஊடகங்கள் விடுகின்ற பிழைகள் கவனத்தில் கொள்ளப்பட்டு திருத்தப்படலாம் என்ற எண்ணமே.

எதுவும் நடந்ததாகத் தெரியவில்லை அந்த ஊடகங்கள் தாங்கள் செய்வதே சரி என்று தமது வேலையினைச் செய்துகொண்டிருக்கின்றது. இலங்கையினைப் பொறுத்தவரை மிரட்டல்களுக்குக் குறைவில்லை. அவ்வப்போது வலைப்பதிவர்களுக்கு மிரட்டல்கள் வருவதுண்டு (எனக்கு பல தடவை) அண்மையிலே ஒரு அனானியால் எனக்கு ஒரு மிரட்டல் வந்திருந்தது ஒரு குறிப்பிட்ட இலத்திரனியல் ஊடகத்தைப் பற்றி எழுதவேண்டாம் எழுதினால் நடப்பது வேறு என்று மிரட்டப்பட்டிருக்கின்றது. இந்த மிரட்டல் எனக்கு மட்டும்தான் என்று நினைத்தேன் ஆனால் இலத்திரனியல் ஊடகங்களைப் பற்றி பதிவிட்ட அனைவருக்கும் இந்த மிரட்டல் கிடைத்திருப்பதாக பின்னர்தான் அறிந்தேன்.

பதிவர்களால் சுட்டிக்காட்டப்படுகின்ற குறிப்பிட்ட ஊடகங்கள் மீதான குற்றச்சாட்டுக்களை குறிப்பிட்ட குற்றம் சுமத்தப்பட்ட ஊடகங்கள் தங்கள் மீது தவறு இல்லை என்றால் தங்கள் கருத்துக்களை சொல்லலாமல்லவா? அல்லது தங்கள்மீது தவறு என்றால் அதனைத் திருத்திக்கொள்ளலாமல்லவா?

தவறுகள் சுட்டிக்காட்டப்படும்போது தமது தவறுகளை ஏற்றுக்கொள்ளும் ஒளி, ஒலிபரப்பாளர்கள் ஒரு, சிலரே இருப்பதாக தென்படுகின்றது. ஒரு சிலரின் குற்றச் சாட்டு ஊடகங்கள் பற்றி எழுதும் பதிவர்கள் பக்கம் சார்ந்து எழுதுவதாகவும் ஒரு நிறுவனத்தை சாடுவதாகவும், ஒரு நிறுவனம் சார்ந்து இருப்பதாகவும். இந்த குற்றச்சாட்டு தவறானது. அத்தனை இலத்திரனியல் ஊடகங்களும் விடுகின்ற தவறுகளும் சுட்டிக்காட்டப்படுகின்றன.

இங்கே லோஷன் போன்றோர் தங்களது நிறுவனங்களது குறைகளைச் சுட்டிக்காட்டியபோது சரியான விமர்சனமாக இருந்தால் ஏற்றுக்கொண்டு திருத்திக்கொள்கின்றனர். அல்லது தமது பக்க நியாயங்களைச் சொல்கின்றனர். இதனை பக்கம் சார்ந்து இருக்கின்றோம் என்று சொல்வது தவறானது.

ஏனைய ஊடகங்கள் சார்ந்தோர் தமது பக்க நியாயங்களைச் சொல்லலாம். தாம் விடுகின்ற தவறுகளை திருத்திக்கொள்ளாது அல்லது தமிழ் மொழியினை கொலை செய்கின்ற ஊடகங்கள் விடுகின்ற தவறுகளை வலைப்பதிவர்கள் அவ்வப்போது சுட்டிக்காட்டுவதில் தவறில்லை.

இலங்கையின் ஊடகங்களுக்கும் வலைப்பதிவர்களுக்குமிடையில் நல்ல உறவு இருக்கவேண்டும்.

எனது இப்பதிவினையும் பார்க்கலாம்.read more...

Thursday, 29 October 2009

கிராமியத் தெய்வ வழிபாடும் மூட நம்பிக்கைகளும்

கடவுள் இருக்கின்றார் என்பதனை 100 % நம்புபவன் நான் ஆனாலும் சில மூட நம்பிக்கைகள் இந்துக்களிடையே இருக்கின்றது. அந்த மூட நம்பிக்கைகள் தகர்த்தெறியப்படவேண்டும். என்பதே என் அவா.


இந்த மூட நம்பிக்கைகள் இந்து சமயத்தின் மீதும், கடவுளின்மீதும் இருக்கின்ற நம்பிக்கையினை இல்லாமல் செய்பவையாக இருக்கின்றன. இந்த மூட நம்பிக்கைகள் பொதுவாக கிராமியத் தெய்வ வழிபாட்டிலே அதிகமாகக் காணப்படுகின்றன.


அண்மையிலே ஒரு ஆலயத்திலே இடம்பெற்ற சில சம்பவங்களை இடுகையிடுகின்றேன். இந்தச் சம்பவங்கள் பலரது விமர்சனத்துக்கும் உள்ளானது என்பது குறிப்பிடத்தக்கது.


இந்த ஆலயம் ஒரு காளி ஆலயம். பல வருடங்கள் பழமையான ஆலயம். பல சிறப்புக்களை உடைய ஆலயம். அண்மையிலே ஆலயமானது சிறப்பான முறையிலே ஆலயம் புனரமைக்கப்பட்டு. கும்பாபிசேகம் இடம்பெற்றதோடு கடந்த வருடம் முதல் தெய்வம் ஆடி கட்டுச் சொல்லுகின்ற முறையும் ஆரம்பிக்கப்பட்டது.


இந்த சடங்கினைச் செய்வதற்கு வேறு கிராமங்களிலே இருந்து பூசாரிமார் வரவளைக்கப்பட்டனர். அவர்கள் நடந்துகொண்ட விதம் மக்களிடம் இருக்கின்ற கடவுள் நம்பிக்கையினை இல்லாமல் செய்யும் ஒன்றாகவே இருந்தது.


இந்த ஆலயத்திலே பலர் தெய்வம் ஆடினார். பலரை அழைத்து கட்டுச் சொன்னனர். ஆனால் நல்ல விடயங்கள் எதுவும் சொல்லப்பட்டதாகத் தெரியவில்லை. அங்கே சொல்லப்பட்ட விடயங்கள். பலரது எதிர்ப்பினையும் சம்பாதிக்க வேண்டியிருந்தது.


நான் பல ஆலயங்களிலே பார்த்திருக்கின்றேன் சில நிமிடங்களே தெய்வம் ஆடுவார்கள் ஆனால் இந்த ஆலயத்திலே பல மணித்தியாலங்களாக தெய்வம் ஆடப்பட்டது. அங்கே வந்த பக்தர்கள் பலரை அழைத்து தெய்வம் ஆடியவர்களால் சொல்லப்பட்ட விடயங்கள்.


1. எதிர்வரும் வருடம் ஆலயத்திலே சடங்கு நடப்பதற்கு முன்னர் குறிப்பிட்ட பணத்தினை ஆலயத்துக்கு செலுத்தவேண்டும், அல்லது குறிப்பிடுகின்ற வேலைகளை செய்து கொடுக்கவேண்டும். அப்போதுதான் நீங்கள் நினைக்கும் எந்தக் காரியமும் வெற்றியடையும் இல்லையேல் கடவுளின் தண்டனைக்கு ஆளாக நேரிடும் என்று சொல்லப்பட்டது.இது கடவுளே இலஞ்சம் வாங்குவது போன்று இருக்கின்றது. கடவுளுக்கு நாம் ஒன்றைக் கொடுத்தால்தால் கடவுள் எமக்கு வரமருளுவார் என்றால் எதற்கு அந்தக் கடவுளை வணங்கவேண்டும்.


நாம் நேர்கடன் வைப்பது நாம் நினைப்பதனை கடவுள் நிறைவேற்றிவிட்டார். அவர் நிறைவேற்றியதட்காக நாம் செய்யும் கைமாறாகும். அதனை இங்கே வேறு முறையில் பயன்படுத்த நினைத்துவிட்டனர்.

2. ஒரு இளைஞர் அழைக்கப்பட்டார் அவரிடம் சொல்லப்பட்ட விடயம் எல்லோரையும் ஆச்சரியப்பட வைத்தது. எந்த ஒரு நண்பரோடும் கதைக்கக் கூடாது. என்று அம்மன் மீது சத்தியம் செய்து வாங்கப்பட்டது. அவர் நண்பர்களோடு கதைக்கின்றபோது அவரது படிப்பு தடைப்பட்டு விடும் என்றும் சொல்லப்பட்டது. ஆனால் அவர் படிப்பினை நிறுத்தி பல வருடங்களாகிவிட்டது.இங்கு அவரை நண்பர்களோடு பழகவேண்டாம் என்று சத்தியம் வாங்குவது பொருத்தமானதா? அவர் இதனால் தனிமைப் படுத்தப்படும்போது அவரது எதிர்கால நிலை என்ன?


3. ஒரு மீன் வியாபாரியின் மனைவி அழைக்கப்பட்டு உங்கள் கணவன் மீன் விற்பனை செய்வதனால் ஆலயத்துக்கு வரக்கூடாது என்று சொல்லப்பட்டது .இது சரியானதா? இன்று மீன் சாப்பிட்டுவிட்டே ஆலயத்துக்கு செல்வோர் இருக்கின்றனர். மீன் விற்பனை செய்வோர் ஆலயத்துக்கு வரக்கூடாது என்று எங்கே சொல்லப்பட்டிருக்கின்றது? ஆனால் இந்த பூசாரிமார் ஆலய நிகழ்வுகள் இல்லாத நாட்களில் மீன் சாப்பிடுவதாகவும், மது அருந்துவதாகவும் பின்னர் அறிந்துகொண்டேன்.

4. ஒருவர் மது அறிந்துவிட்டு ஆலயத்துக்கு வந்திருந்தார். மது அருந்திவிட்டு ஆலயத்துக்கு வரக்கூடாது என்று தெய்வம் ஆடிய ஒருவர் மோசமான முறையிலே அடித்து தாக்கினார்.இது நாகரிகமான முறையா? அங்கே தெய்வத்துக்கு மதுக்கொடுத்தல் எனும் போர்வையில் சாராயம் கொடுக்கப்பட்டது. கடவுளே மது அருந்தும்போது ஒரு பக்தன் மது அருந்திவிட்டு வந்தது தவறு என்று அடிப்பது சரியா?


5. இக் கிராமத்திலே ஒரு பகுதியிலே தாழ்த்தப்பட்ட சாதியினர் இருக்கின்றனர். சுவாமி கிராமத்தின் வீதிகளிலே வலம் வருகின்றபோது ஆலய நிர்வாகத்தினரும் இன்னும் சிலரும் இந்த தாழ்த்தப்பட்ட சாதியினர் இருக்கும் பிரதேசத்துக்கு சுவாமியைக் கொண்டு செல்வதற்கு மறுத்துவிட்டனர்.இங்கே கடவுள் சாதி பார்ககின்றாரா? அல்லது கிராமத்தினை இரண்டாகப் பார்க்கின்றனரா? சாதி என்பது கடவுளால் உருவாக்கப்பட்டதல்ல செய்யும் தொழிலை வைத்தே மனிதனால் உருவாக்கப்பட்டதே சாதி. இன்னும் நாம் சாதி பார்த்துக்கொண்டிருப்பது நல்ல விடயமல்ல.


6. இங்கே கட்டுச் சொல்வதற்கு தெய்வம் ஆடுபவர்களால் அழைக்கப்பட்டவர்களில் 90 வீதமானவர்கள் இளம் பெண்களாகவே இருந்தனர். தெய்வம் ஆடியவர்களும் இளம் வாலிபர்கள்தான்.இங்கே பலரும் கேட்ட கேள்வி ஏன் ஆண்களை அழைக்க முடியாதா. தெய்வம் இளம் பெண்களுக்கு மட்டுமா அருள் கொடுக்கும்.


7. அங்கே மக்கள் இவர்களையே கடவுளாக மதிக்கப்பட்டனர். அங்கே ஆலயத்திலே இருந்த கடவுளை மக்கள் வணங்கியதனைவிட இவர்களை வணங்கியதே அதிகமாக இருந்தது. பலர் கால்களிலே விழுந்து வணங்கினர். இவர்களைத் தொட்டு கண்களிலே ஒற்றிக் கொண்டனர். ஏன் இந்த மூட நம்பிக்கை?

இன்னும் பல விடயங்கள் இருக்கின்றன...


நான் கேட்பது இந்த ஆலயம் ஆகம விதிப்படி அமைந்தது. முறைப்படி குருவாகப் படித்து தீட்சைபெற்று பல வருடங்களாக பூசை செய்து வருகின்ற ஒரு குருக்களுக்கு காட்சி கொடுக்காத கடவுள் இந்த மந்திரவாதிகளுக்கு காட்சி கொடுத்தாரா? அவர்களோடு மட்டும்தான் பேசுவாரா? ஏன் இந்தப் பூசாரிகள், மந்திரவாதிகள் மக்களையும் கடவுளையும் ஏமாற்றுகின்றனர்


ஏன் இவர்கள் மக்களை ஏமாற்றிப் பிழைப்பு நடத்திக்கொண்டு இருக்கின்றனர். இவர்களை ஏன் சிலர் முன்னிலைப்படுத்திக்கொண்டு இருக்கின்றனர்.


கடவுள் நம்பிக்கை இல்லாதவன் அல்ல கடவுளை 100% நம்புபவன் ஆனாலும் மூட நம்பிக்கையையும், மனிதக் கடவுளர்களையும் துரத்த நினைப்பவன்.இன்னும் பல பல மூட நம்பிக்கைகள் இந்துக்களிடையே இருக்கின்றன அவ்வப்போது உங்களை வந்து சேரும்.

இதனையும் பாருங்கள்
மதத்தின் பெயரால் பிழைப்பு நடத்துகின்றார்களா?
கடவுளின் பெயரால் கொடுமைகள்.
கடவுள் நேற்று முளைத்த காளானா...
read more...

Tuesday, 27 October 2009

அந்தரங்கம் என்றால் என்ன?

எப்பொழுதோ எழுத நினைத்தது நேரம் இடம் கொடுக்காததால் இன்று இடுகையாக வருகின்றது.


அண்மையிலே நண்பர் சதீஸ் லோஷனுடன் அந்தரங்கம். பகுதி- 1 எனும் தலைப்பிலே ஒரு பதிவிட்டிருந்தார். இப்பதிவிலே ஒலி, ஒளிபரப்பாளரும், வலைப்பதிவருமாகிய லோஷன் அவர்களை பேட்டி கண்டு இருந்தார் சதீஸ். இதிலே லோஷன் தன்னைப் பற்றிய பல விடயங்களைப் சொல்லி இருந்தார்.

இந்த இடுகைக்கு சில அனானிகள் திட்டித் தீர்த்து இருந்தனர். தலைப்பு தவறானது என்றும் வேறு அர்த்தத்தினைக் கொடுப்பதாகவும் குறிப்பிட்டு இருந்தனர். அவர்கள் அந்தரங்கம் என்பதனை தவறான கண்ணோட்டத்தில் பார்க்கின்றனர் என்பதனை மட்டும் என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. எல்லோரும் ஆவலோடு எதிர் பார்த்த லோஷன் பற்றிய தொடர் பதிவு இன்னும் வரவில்லை.

அந்தரங்கம் என்பது என்ன? இந்த இடத்திலே பயன் படுத்தப்பட்டது சரியா? தவறா? என்னைப் பொறுத்தவரை இதனை தீர்மானிக்க வேண்டியது சதீஸ், மற்றும் லோஷன் இருவருமே இதில் நாம் அந்தரங்கம் எனும் சொல் பயன்படுத்த முடியாது என்று சொல்ல முடியாது.

அந்தரங்கம் என்பது வெளியிடப்படாத, வெளிவராத தகவல்களாக அமையலாம். இது எந்தத் தகவலாகவும் அமையலாம். அந்தரங்கம் எனும்போது நாம் தவறான எண்ணத்தோடு நோக்குவது தவறானது. நல்ல பல விடயங்கள் இதுவரை வெளியிடப்படாத விடயங்கள் வெளியிடப்பட்டிருக்கலாமல்லவா? இங்கே அந்தரங்கம் என்பது லோஷனால் இதுவரை வெளியிடப்படாத விடயங்கள் இந்த பேட்டியிலே வெளியிடப்பட்டிருக்கலாம். அது எந்த விடயமாகவும் அமையலாம்.

அப்பதிவுக்கு பின்னூட்டமிட்டிருப்போரின் பின்னூட்டத்தைப்பார்க்கும்போது. அந்தரங்கம் என்பதை வேறு விதமாக நோக்கியிருந்தனர். அப்படியானால் ஒருவரின் அந்தரங்க செயலாளர் எனும்போது நாம் தவறான கண்னோட்டத்தில் பார்ப்பதில்லையே. அப்படி இருக்கும்போது ஏன் இங்கே மட்டும் தவறான கண்ணோட்டத்தில் பார்க்கின்றோம்.

இத் தலைப்பு தவறானது என்று சொல்வோர் அந்தரங்கம் என்பதற்கான வரைவிலக்கணத்தினைச் சொல்லவும்.

நண்பர் சதீஸிசிடமிருந்து லோஷன் பற்றிய தொடர் பதிவையும் விரைவில் எதிர்பார்க்கின்றேன்
read more...

Monday, 26 October 2009

மீண்டும் சந்திப்போம், சிந்திப்போம்


இருக்கிறம் சஞ்சிகையின் ஏற்பாட்டில் எதிர் வரும் நவம்பர் 2ந்திகதி திங்கட்கிழமை மாலை 3 மணிக்கு வலைப் பதிவர்களுக்கும் அச்சு, இலத்திரனியல் ஊடகங்களுக்கும் இடையிலான சந்திப்பு இடம்பெற இருக்கின்றது.இஷ சந்திப்பில் கலந்துகொள்ள விரும்புகின்றவர்கள் இருக்கிறம் சஞ்சிகையின் இணை ஆசிரியர் திரு. சஞ்சீத் அவர்களை எதிர்வரும் புதன் கிழமைக்கு முன்னர் தொடர்புகொண்டு தமது வருகையினை உறுதிப்படுத்திக்கொள்ளவும்.
சந்திப்பு நிகழும் இடம் இருக்கிறம் அலுவலகம், இல 3, டொரிங்டன் அவெனியூ , கொழும்பு 7. (ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்திற்க்கு முன்னால் உள்ள வீதி).


மேலதிக விபரங்களுக்கு :திரு. சஞ்சீத்

தொலைபேசி: 0113150836

மின்னஞ்சல் : irukiram@gmail.com

சந்திப்போம், சிந்திப்போம்
read more...

Saturday, 24 October 2009

தொல்லை தரும் தொலைபேசிக் கலாச்சாரம்...

கிடைத்த சிறிது நேரத்தில் ஒரு மீள் பதிவு விரைவில் எனது வழமையான பதிவுகள் தொடரும்.


இன்று கையடக்கத்தொலைபேசி இல்லாமல் வாழ்க்கை இல்லை என்றாகி விட்டது. கையடக்கத்தொலைபேசி சேவை வழங்கும் நிறுவனங்களும் போட்டி போட்டுக்கொண்டு தமது பாவனயளர்களுக்கு பல்வேறு சேவைகளை வழங்கி வருகின்றன. இந்த கையடக்க தொலைபெசிப்பாவனயால் நன்மைகள் இருந்த போதும் சில தீமைகளும் இருக்கத்தான் செய்கின்றன.எது எப்படி இருப்பினும் இந்தப்பதிவில் எனது நண்பர்களுக்குள் நிகழ்ந்த சில கையடக்கத்தொலைபேசி உரையாடல் தொடர்பான சுவாரஸ்யமான பல சம்பவங்களை பகிர்ந்து கொள்கிறேன்.இன்று இலங்கையில் வலயமைப்புகளிடையே பல ஆயிரக்கணக்கான நிமிடங்கள் வெளித்செல்லும் அழைப்புகள் இலவசம் என்றதுமே எனது நண்பர்களுக்கு சந்தோசம் சொல்லவே தேவை இல்லை. எனக்கும்தான்....நானும் நண்பர்களும் அடிக்கடி எங்கள் ஊரில் இருக்கும் ஒரு பிரசித்தி பெற்ற ஆலயத்துக்கு வெள்ளிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் செல்வோம் கடவுளின் தரிசனத்துக்காக அல்ல வேறு தரிசனம் கிடைப்பதுக்காக. இரு நாட்களிலும் பக்தர்கள் அதிகமாக வருவார்கள். அதனால் எப்படியோ சென்று விடுவோம்.
அங்கு ஆலயத்துக்கு வரும் பக்தர்களுக்கு உதவி செய்வது. என்ன உதவி என்று கேட்காதிங்க சொல்றன் பொங்கல் பொங்கி கொடுப்பது..... இதிலும் எனது நண்பர்கள் படு கில்லாடிகள் அழகான பெண் பிள்ளைகளுடன் வந்திருக்கும் பக்தர்களுக்கு அதிகமாகவே உதவி செய்வார்கள்.
அது மட்டுமல்ல அந்த பெண் பிள்ளைகளுடன் எப்படியோ கதைத்து தொலைபேசி இலக்கத்தை வாங்கிக்கொள்வார்கள். இனி என்ன நடக்கும் நான் சொல்லத்தேவை இல்லை....
இப்போ விடயத்துக்கு வருகிறேன் ஒருஞாயிற்றுக்கிழமை நண்பர்களும் நானும் கோவிலுக்கு சென்றிருந்தோம். ஆலயத்தில் நடந்த சில உண்மை சம்பவங்கள்.....


ஆலயத்தில் பொங்கல் பானைகள் பக்கத்தில் பக்கத்தில் இருக்கும் ஒரு நண்பன் ஒரு இடத்திலும் மற்ற நண்பன் என்னொரு இடத்திலும் இருக்கிறார்கள் ஒரு நண்பன் மற்ற நண்பனிடம் அழைப்பை எடுத்து சொன்னான் அடுப்பு எரியவில்லை பாருடா என்று அவர்களுக்கு இடைப்பட்ட துரம் 5 மீற்றர்தான்.எனது ஒரு நண்பனின் ஒரு நண்பி ஆலயத்துக்கு வந்து இருந்தார். அப்பொழுது பூசை நேரம் எனது நண்பர் தனது நண்பிக்கு அழைப்பை எடுத்தார். அவர் அந்த நண்பியிடம் கேட்டார் என்ன கேட்டு கும்பிடுறிங்க எனக்கும் ஒரு நல்ல கேர்ள் பிரென்ட் கிடைக்கணும் எண்டு கும்பிடுங்க என்று.கடவுளுக்கே கோல் பண்ணி பேசுவாங்க போல இருக்கிறது....
விட்டுக்கு வந்தா விடுறாங்களா இரவில் நித்திரை செய்வதுக்கு. இரவு பகலாக மிஸ் கோல் நள்ளிரவில் கோல் பண்ணி தேவை இல்லாமல் கதைத்து வெறுப்பு ஏற்றுவதுஎன்னும் ஒரு பழக்கம் பல பசங்களிடம் இருக்கிறது யாராவது பெண் பிள்ளைகளின் தொலைபேசி இலக்கத்தை எப்படியோ எடுத்துன் மிஸ் கோல் பண்ணுவது இரவிலே தூங்க விடாமல் வெறுப்பு ஏற்றுவது


பசங்க மட்டுமா நம்ம சில பெண்களும்தான் சில பொண்ணுகளுக்கு இரவில் கோல் பண்ணினா வேய்டிங்தான் இரவு 12 , 01 மணிக்கும் வெயிட்டிங்க்தான்... என்னதான் நடக்கிறதோ தெரியல்ல...இன்று கையடக்க தொலை பேசிகளின் பாவனை அதிகரித்து விட்டது என்பது நாம் அறிந்தது. சிறுவர் முதல் பெரியோர் வரை அனைவர் கையிலும் இன்று தவழ்ந்து பலரை சீரழித்துக்கொண்டு இருக்கிறது இந்தத் தொல்லைபேசி என்று சொல்லலாம்.


கையடக்க தொலைபேசி நல்ல விடயங்களுக்கு பயன் படுத்தும் காலம் மாறி இன்று தொலைத்துதொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்களின் போட்டியின் காரணமாக வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு பட்ட சேவைகளை போட்டி போட்டுக்கொண்டு வழங்குகின்றன.ஒரு நண்பர் தனது நண்பி ஒருவருக்கு இரவு 9 மணியளவில் அவசர செய்தி ஒன்று சொல்வதற்காக அழைப்பினை எடுத்து இருக்கிறார். அந்த நண்பி வெய்ட்டிங்கில் இருந்திருக்கிறார் நண்பரோ அவசர செய்தி சொல்லவேண்டியவர் பலதடவை அழைப்பினை எடுத்து பார்த்தார் அழைப்பு கிடைக்கவில்லை வேய்டிங்தான். நண்பரும் விடவில்லை நள்ளிரவு 1.30 போல் நண்பிக்கு அழைப்பு கிடைத்தது. நண்பர் கேட்டார் 9 மணிமுதல் 1.30 வரை இந்த இரவில் யாரோடு பேசுனிங்க என்று. நண்பி சொன்ன பதில் அண்ணாவோடு பேசினேன் என்றார். நண்பர் நினைத்தார் அண்ணா எதோ வெளி நாட்டில் இருக்கிறார் என்று. அண்ணா எங்கே இருக்கிறார் என்று கேட்டார். நண்பி சொன்னார் அண்ணா பக்கத்து ரூம்ல இருக்கிறார் என்று . நண்பருக்கு கோபம் கோபமாக வந்ததாம். ஒரு வீட்டில் இருந்து கொண்டு பக்கத்து ரூம்ல இருக்கும்இந்த நேரத்துல ...... கடவுள்தான் காப்பாத்தணும்பெரிய தேன்னை மரங்களிலே தேங்காய் பறிப்பவர்கள் மரத்திலே ஏறி தேங்காய் பறிக்கும் போது ஒரு தேங்காயை பறித்து கிழே போடுவார் கிழே நிற்பவர் அது தேங்காயா என்று பார்த்து சத்தம் போட்டு சொல்லுவார் மரத்தில் இருப்பவரும சத்தம் போட்டு தேங்காயா என்று கேட்பார் அது அந்த பிரதேசத்தில் எல்லோருக்கும் கேட்கும்படியாக இருக்கும். இது அந்தக்காலம். இன்று மரத்தில் ஏறுபவரும் கிழே நிற்பவரும் தொலை பேசியில் உரையாடுகின்றார்கள்.

இன்று வாகனங்களிலே பிச்சைக்காரர்களின் தொல்லை அதிகரித்து விட்டது. அது ஒருபுறமிருக்க. ஒரு தெருவோர பிச்சைக்காரன் ஒரு பேருந்து தரிப்பிடத்திலே. யாருமற்ற ஒரு பக்கம் சென்றான் என்ன செய்கிறான் என்று பார்த்தேன் தொலைபேசியை எடுத்து தனது மற்ற நண்பனிடம் சொல்கிறான் பஸ்சில் சனக்கூட்டம் அதிகமாக இருக்கிறது உடனே வரவும் என்று.

தொலைபேசி முலமாக நண்பர்களிடையே பல சுவாரஸ்யமான சம்பவங்கள் எடம் பெறுவதோடு சில வேளைகளில் அவர்களது நட்புக்கும் பாதிப்பு ஏற்படுவதுண்டு. அதே போன்று ஒரு சம்பவம்தான் இது.

ஒரு நண்பர் தன்னுடைய ஒரு நண்பரை கலாய்க்க விரும்பினார். அதற்கு தனது காதலியை துரும்பு சீட்டாக பயன் படுத்தினார். அது வேறு விபரிதமாகிவிட்டது.

ஒருவர் தனது காதலியிடம் தனது நண்பனின் தொலைபேசி இலக்கத்தினை கொடுத்து.தனது நண்பருக்கு அழைப்பினை எடுத்து யார் என்று சொல்லாமல் காதலிப்பது போல் கலாய்க்க சொல்லி இருக்கிறார். 2, 3 நாட்கள் நன்றாகவே நண்பரை குழப்பி இருக்கிறார்கள். அத்தோடு முடியவில்லை காதலியோ காதலனுக்கு தெரியாமல் அடிக்கடி அழைப்பினை எடுத்து கதலனின் நண்பனோடு காதலனுக்கு தெரியாமல் பேச ஆரம்பித்து விட்டார். இன்னும் சொல்ல வேண்டுமா?........இன்று குரல்களை மாற்றிப்பேசும் தொலைபேசிகள் முலமும் நிறையவே நம்ம பசங்கள பசங்களே பெண்களாக நடித்து ஏமாற்றிக்கொண்டு இருகாங்க. பெண்கள் ஏமாற்றியது போதாதா நண்பர்களே நீங்களும் ஏமாற்றனுமா...இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம் சொல்ல முடியாத விசயமும் நிறையவே இருக்குங்க...
read more...

Wednesday, 21 October 2009

சரியா? தவறா? ஒண்ணுமே புரியல்ல

எனது மலையக மக்களின் வாழ்வியலோடு பின்னிப்பிணைந்த நாட்டுப்புறப் பாடல்கள் எனும் இடுகை இருக்கிறம் சஞ்சிகையிலே பிரசுரிக்கப்பட்டிருக்கின்றது. இருக்கிறம் சஞ்சிகையின் ஆசிரியருக்கும், தொடர்புடைய அனைவருக்கும் எனது நன்றிகள்.


எனக்கு பல நாட்களாக இருந்து வந்த சந்தேகங்களை உங்களிடம் கேட்கின்றேன். உங்களிடம் இருந்து எனது சந்தேகத்துக்கான தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில்.

பலராலும் பழமொழிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. பழமொழி பொய்க்காது என்றெல்லாம் சொல்லப்படுகின்றது.....

நான் பயிற்சி அறிவிப்பாளராக இருந்தபோது. ஒரு ஆலயத்திலே நடைபெறுகின்ற திருவிழா நிகழ்வுகளை நேரடி ஒலிபரப்பு செய்வதற்கு அயத்தங்களைச் செய்தேன் அப்போது எமது உயரதிகாரி என்னை நேரடி ஒலிபரப்பு செய்யவேண்டாம் அந்தக் கோவில் பிரசித்திவாய்ந்தது நீ பயிற்சி அறிவிப்பாளர் "முதல் கோணல் முற்றிலும் கோணலாகிவிடும்" என்று சொன்னார்.
நான் என்னில் தவறில்லை எனும்போது எதனையும் தட்டிக் கேட்பவன். நான் விடவில்லை நான் அவருக்கு சொன்ன பதில் "வெற்றியின் முதல்படி தோல்வியாக" இருக்கட்டுமே என்றேன். அவருக்கு கோபம் வந்துவிட்டது என்னோடு சண்டை செய்ய ஆரம்பித்துவிட்டார். நானும் விடவில்லை நேரடி ஒலிபரப்பு செய்தேன். முதல் நேரடி ஒளிபரப்பே நல்ல வரவேற்பைப் பெற்றது. இன்று அந்த அதிகாரி எமது வானொலியில் இல்லை என்றாலும் அவர் இருக்கும்வரை என்னை அவர் கண்ணில் காட்ட முடியாது.

எனது சந்தேகம் என்னவெனில். வெற்றியின் முதல்படி தோல்வி என்கின்றோம். அதேபோல் முதல் கோணல் முற்றிலும் கோணல் என்கின்றோம். இது இரண்டும் முரணாக இருப்பது போன்று உணர்கின்றேன்.

வெற்றியின் முதல்படி தோல்வி எனும்போது. எமது முயற்சியின் முதல்படி தோல்வியாக அமைந்தாலும் அது வெற்றிக்கான படிக்கற்களாக அமையவேண்டும் அந்தத் தோல்வி எம்மை வெற்றியின் பக்கம் அயராத முயற்சியின் மூலமும். விட்ட தவறுகளைத் திருத்தி வெற்றி பெறுவதற்கான ஒரு நம்பிக்கையை ஊட்டுகின்றது.

முதல் கோணல் முற்றிலும் கோணல் எனும்போது நாம் ஒரு செயலைச் செய்யும்போது அந்தச் செயல் தோல்வியானால் மீண்டும் முயற்சிக்கத் தோன்றும் ஒருவருக்கு உச்சாகத்தை ஊட்டுவதாக இல்லாமல் அவரை அந்தச் செயலை கைவிடும் அளவுக்கு கொண்டு செல்கின்றதல்லவா?

அன்று என்னை நேரடி ஒலிபரப்பு செய்ய மறுத்தபோது நான் செய்யப்போகிறேன் என்று சண்டை பிடிக்காமல் இருந்திருந்தால் என் திறமைகள் மறைக்கப்பட்டிருக்கலாம். நானும் முதல் கோணல் முற்றிலும் கோணலாகிவிடலாம் என்று விட்டிருந்தால் என் திறமைகள் மறைக்கப்பட்டிருக்கும்.

"வெற்றியின் முதல்படி தோல்வி", "முதல் கோணல் முற்றிலும் கோணல்" இரண்டுமே முரண் படுவதாகவே உணர்கின்றேன். உங்கள் கருத்துக்களை எதிர் பார்க்கின்றேன்.

அடுத்து "ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே" என்று நாம் அடிக்கடி பயன்படுத்துவது மட்டுமல்ல திரைப்படப் பாடல்கள்கூட வந்திருக்கின்றன. இதனை பலரும் மனிதர்களின் உருவாக்கத்துக்கும், அழிவுக்கும் காரணம் பெண்ணே என்றுதான் கருதுகின்றோம். இது தவறான கருத்து என்று நான் நினைக்கின்றேன். இதன் பொருள் வேறு. ஏன் ஆண்களால் அழிவு இல்லையா? "ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே" உங்கள் விளக்கங்களையும் எதிர் பார்க்கின்றேன்.
read more...

Monday, 19 October 2009

கிழக்கை நேசிக்கும் ஊடகங்கள்.

வறட்சியில் கிழக்கு மக்கள்

இன்று கிழக்கு மாகாணத்தில் மழையின்றி மக்கள் பெரும் கஸ்ரங்களை அனுபவித்து வருகின்றனர். குளங்கள் மட்டுமல்லாமல், கிணறுகள்கூட வற்றிவிட்டன. இதனால் சில பிரதேசங்களிலே மக்கள் குடி நீரைப்பெறுவதிலே பல்வேறுபட்ட சிக்கல்களை எதிர்நோக்கி வருகின்றனர்.


அத்தோடு விவசாயிகளின் நிலை கேள்விக்குறியாகிக்கொண்டு இருக்கின்றது. அதிலும் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்திலே விவசாயத்திலே முன்னிலையில் இருக்கின்ற களுதாவளை தேத்தாத்தீவு போன்ற விவசாயக் கிராமங்களிலே நீர் தட்டுப்பாட்டினால் விவசாயிகள் பல சிரமங்களை எதிர் நோக்கி வருகின்றனர். இப்பிரதேசங்களிலே நீர் உவர் நீராக மாறிவருவது வேறு விடயம்.


கிழக்கை நேசிக்கும் ஊடகங்கள்.

அண்மைக்காலமாக மட்டக்களப்பு மாவட்டத்திலே சில வானொலி, தொலைக்காட்சிகள் போட்டி போட்டுக்கொண்டு தொடர் இசை நிகழ்சிகளை நடாத்தினார்கள். முன்னொரு காலத்திலேயே இசை நிகழ்சி என்றாலே மக்கள் பாரிய எதிர் பார்ப்புக்களோடு இருப்பார்கள். ஆனால் இந்த இசை நிகழ்சிகளை பார்க்கச் சென்று ஏமாற்றமடைந்த மக்கள் இன்று இசைக்குழுக்களையே வெறுக்குமளவில் இருக்கின்றனர்.


ஒரு இசை நிகழ்சியின் விறுவிறுப்பானது அறிவிப்பாளரின் பேச்சுத்திறனிலே தங்கி இருக்கின்றது . நானும் எனது நண்பர்களும் எங்கு இசை நிகழ்சி நடாந்தாலும் சென்று விடுவோம். சென்றால் ஆட்டம் போடாமல் வந்த நாள் இல்லை. ஒரு வானொலியின் இசை நிகழ்சிக்கு அறிவிப்புச் செய்ய வந்த அறிவிப்பாளருக்கு தமிழைவிட வேறு வார்த்தைகளே அதிகம் தெரியும் போன்று இருந்தது. ஒரு சிங்களவர் இதனைவிட நன்றாக தமிழிலே அறிவிப்புச் செய்வார் என்றார் எனது நண்பர்.


எனது கிராமத்திலே பத்துக்கு அதிகமான இசை நிகழ்சிகளை ஒரு மாதத்தில் செய்துவிட்டனர். ஒரு நாள் இரு வானொலிகள் ஒரு விளையாட்டு மைதானத்திலே ஒரே நேரத்தில் இசை நிகழ்சி நடாத்தவந்து இருவருக்குமிடையில் வாய்த தகராறு ஏறபட்டதுமுண்டு.


இன்னுமொரு வானொலி கிழக்கில் நுளம்புகளை ஒழித்தல் எனும் ஒரு நிகழ்சியினை பல இடங்களிலும் செய்தனர். நுளம்புகள் பற்றி மக்களுக்கு அறிவூட்டப்பட்டதோடு பல போட்டிகளையும் நடாத்தி நல்ல பரிசுகளையும் வழங்கினர். இப்படியான நிகழ்சிகள் வரவேற்கப்படுகின்றன.


இந்த நிறுவனங்கள் மக்களை தன் பக்கம் இழுத்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்துக்குமப்பால் இம்மக்களது பிரச்சனைகளை வெளி உலகுக்கும் எடுத்துச் சொல்லுகின்ற ஊடகங்களாக அமையவேண்டும்.


இவர்கள் இசை நிகழ்சிகளை நடாத்தும்போது அந்தந்தப்பிரதேசங்களிலே இருக்கின்ற இசைக்குழுக்களைக் கொண்டு நடாத்தலாமல்லவா அப்போது அந்தந்தப்பிரதேசக் கலைஞர்கள் ஊக்கப்படுத்தப்படுவதோடு. அவர்களின் திறமைகள் வெளி உலகிற்கு கொண்டுவரப்படலாமல்லவா.கிறுக்கல்கள்.....அன்று உன்
இதயத்தில் எனக்கோர்
இடம் கேட்டேன்
மறுத்துவிட்டாய் - இன்று
என் இதயத்தில்
ஓரிடம் கேட்கின்றாய்
என்னால் தரமுடியவில்லை
என் இதயம் இன்று
வேறோருத்தியிடம்
இருக்கின்றது.

read more...

Friday, 16 October 2009

கிழக்கிலங்கையில் சுதந்திரம் பெற்ற அரசியல்வாதிகள்

கிழக்கிலங்கையில் சுதந்திரம் பெற்ற அரசியல்வாதிகள்


இன்று தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள். கிழக்கிலே சுதந்திரமாக நடமாடித்திரிவதை காணக்கிடைக்கின்றன. அத்தோடு அவர்கள் மக்களைச் சந்திப்பது என்று பல செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். இது அவர்களின் எதிர்கால அரசியல் இருப்பை தக்கவைத்துக்கொள்ளும் முயற்சியாகவே தெரிகின்றது.


மட்டக்களப்பிலே பல வருடங்களாக காலடி வைக்காமல் இருந்த சில பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று சுதந்திரமாக நடமாடி வருகின்றனர். தங்களுக்கு தகுந்த பாதுகாப்பு இல்லை என்றும், தமது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் பல அறிக்கைகளை விட்டுக்கொண்டிருந்த இவர்கள் இன்று ஜனாதிபதியோடு பேச்சுவார்த்தை நடாத்தி இருப்பதாகவும். தமக்கு பாதுகாப்பு வழங்குவதாக ஜனாதிபதி உறுதி அளித்திருப்பதாகவும் சொல்கின்றனர் இது வேடிக்கையாக இருக்கின்றது. அன்று ஜனாதிபதியை நம்மப மறுத்தவர்கல்ளூக்கு இன்று நம்பமுடிகின்றதா?


இவர்களுக்கென ஒரு கொள்கை இல்லையா? இவர்கள் மக்களுக்காக என்ன செய்தார்கள்? தாமும் சுகபோக வாழ்க்கை அனுபவித்து தமது குடும்ப உறுப்பினர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பியவர்களே சிலர். இன்று மீண்டும் தேர்தலில் போட்டியிட இருப்பதாகவும் அறியமுடிகின்றது. இவர்களுக்கு தங்களது சொந்த ஊரிலேயே மக்கள் ஆதரவு இல்லை என்பது வேறு விடயம். இவர்களுக்கு மக்கள் நல்ல பாடம் புகட்டுவார்கள்.


தமிழக அரசியல் வாதிகளின் வருகை


அன்று இலங்கைத் தமிழர்கள் பல இன்னல்களை அனுபவித்துக்கொண்டிருந்தபோது. உலகெங்குமிருக்கி்ற தமிழர்களே. தமிழக அரசியல்வாதிகள் இலங்கைத் தமிழர்களுக்காக குரல் கொடுக்கமாட்டார்களா என்று எதிர்பார்த்திருந்தபோது. தமது அரசியல் இருப்புக்காக பாடுபட்டுக்கொண்டிருந்தவர்கள் இன்று இலங்கை வந்ததன் நோக்கம்தான் என்ன?இது ஒரு அரசியல் நாடகமே. அன்று எம் சொல்லொண்ணா துயரங்களை அனுபவித்தபோது வராதவர்கள் இன்று எதற்காக வந்தனர்? எத்தனை தமிழர்கள் மீதமிருக்கின்றனர் என்பதனைப் பார்க்கவா? இவர்களால் எதுவும் எமக்குக் கிடைக்கப்போவதில்லை. தமிழகத் தலைவர்களை நம்பி ஏமாந்த காலம் போய்விட்டது. இனியும் நாம் நம்பவேண்டிய அவசியமுமில்லை.


சில காரணங்களினால் என்னால் சில நாட்கள் வலைப்பதிவுப்பக்கம் வர முடியவில்லை இது எனது அவசரப் பதிவு. விரைவில் எனது வழமையான பதிவுகள் தொடரும்.
read more...

Thursday, 1 October 2009

நாளைய தலைவர்களின் இன்றைய நிலை..

நம் சிறுவர்களின் எதிர்காலம் தொடர்பிலே அதிகம சிந்திப்பவன் நான். பல்வேறு காரணங்களினால் நமது சிறார்களின் எதிர் காலம் கேள்விக்குறியாகிவிட்டன... சரி முதலில் படங்களைப் பாருங்கள் அப்புறம் கதைகளை சொல்லுங்கள்...

இதுதான் நம் வாழ்க்கையா?


என்ன பாவம் செயதேனோ

தமிழனாய் பிறந்ததால் கையேந்தும் நிலை

சிறுவர்நாம் என்ன கொடுமை செய்தோம்


ஏன் கை ஏந்துகிறீர்கள் கை ஏந்தவேண்டியவர்களா நீங்கள்....
காத்திருப்பே எமது வாழ்க்கையாகிப்போனதேன்....
என்றுதான் எமக்கு விடிவு கிடைக்குமோ.....
இதுதான் என் அழகிய தேசம்...
தொலைத்துவிட்ட எம் நிம்மதியைத் தேடிடும் பயணம்....
என் சொந்த மண்ணிலும் காலுன்ற முடியவில்லை என்னதான் நடக்கிறது உலகமென்பது இதுதானா...
தடைகளை தாண்டுவதா இல்லையா .... முளையிலே தடை போடும் தேசமிது....
இங்கேயாவது சற்று நிம்மதியாக விளையாடலாமா....


ஏக்கத்தோடு சந்தொசப்படுவதேன்றால் முடியுமா.....
வாழ்க்கையின் சுமை கையிலும், மனதிலும்.....
அறியாத பருவம் விடுங்கள்........ அவன் எதையும் அறியும் காலம் தொலைவில் இல்லை....


வாழ்க்கையின் சுமை என்பது இவ்வளவுதானா இன்னும் இருக்கிறதா


எதற்காக இந்த ஆழ்ந்த சிந்தனை நம் சிந்தனைகள் சிதறடிக்கப்பட்டு விட்டனவே...

????????????இதுதான் வாழ்க்கை என்பதா.....
இதுதான் உலகமென்பதா....

இதுதான் நம் விதி....


இதனையும் பாருங்கள்

இன்றைய சிறுவர்களின் கல்வி நிலைதான் என்ன....

படங்கள் பல இணையத்தளங்களில் பெறப்பட்டவை.

read more...