Monday, 28 September 2009

மதத்தின் பெயரால் பிழைப்பு நடத்துகின்றார்களா?

நான் 100% கடவுள் நம்பிக்கையும், கடவுள் மீது அளவற்ற நம்பிக்கையும் கொண்டவன். இன்று எமது இந்து மதம் போகிற போக்கைப் பார்த்தால் மதமும் மண்ணாங்கட்டியும்..என்று லோஷன் அண்ணா சொல்வது சரிதானோ என்று எண்ணத் தோன்றுகின்றது.
எமது இந்து மதம் ஆதியும் அந்தமும் இல்லாத ஒன்று, இறைவன் ஒருவனே அவனை பல அவதாரங்களிலே காண்கின்றோம் என்றெல்லாம் சொல்கின்றோம். இது முற்றிலும் உண்மையே.

எமது இந்துக்கள் ஆதியும் அந்தமும் இல்லாத கடவுளை வணங்குகின்றோம். எமது இந்துக்களிடையே இப்போது மனிதர்களாகப் பிறந்தவர்களை வணங்குகின்ற ஒரு நாகரிகம் பரவிவருகின்றது. இது சரியா? மனிதர்களை வணங்குபவர்களை ஆதியும் அந்தமும் இல்லாத இறைவனை வணங்கும் நாம் எப்படி இந்துக்களாக ஏற்றுக்கொள்ள முடியும்.

இந்த இடுகை இடுவதற்கு காரணம் நண்பர் கனககோபியின் மதத் திணிப்புகள் கெளரவமான வடிவில்... எனும் இடுகையும் வந்தியின் வேட்டைக்காரன், அம்மா பகவான் சில எதிர்வினைகள். எனும் இடுகையும் காரணமாக இருந்தாலும் எனது நண்பர்களோடு நான் அடிக்கடி சண்டை செய்கின்ற விடயமே இந்த அம்மா பகவானை வணங்குதல் விடயம்.

அம்மா பகவான் மட்டுமல்ல இன்று இந்துக்களிடையே பல மனிதர்களை கடவுளாய் சித்தரித்து வணங்குகின்ற ஒரு நோய் பரவிவருவதோடு அவர்களுக்குள்ளே போட்டி அதிகரித்துவிட்டது. இன்று எத்தனை அமைப்புக்கள் தங்கள் தங்கள் பாட்டிலே பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றன. இன்று எமது ஆதியும் அந்தமும் இல்லாத கடவுளர்களை முக்கியத்துவப்படுத்துவதைவிட மனிதர்களாகப் பிறந்தவர்களை முக்கியத்துவப்படுத்துகின்றனர்.

இவர்கள் தங்களைப் பிரபல்யப்படுத்துவதட்காக சில பிரச்சாரங்களில் ஈடுபடும்போது அது இந்து சமயக் கோட்பாடுகளிலிருந்து வேறுபடுகின்றன. அத்தோடு இப்படியான மனிதக் கடவுளர்களின் தோற்றத்தால் கடவுள் மீது இருக்கின்ற நம்பிக்கையினை மக்கள் இழக்கின்றனர்.

இந்துக்களாகிய நாம் ஏன் மனிதர்களை வணங்கவேண்டும்? தெய்வமாகப் போற்றவேண்டும்? இங்கே வணங்கப்படுகின்றவர்கள் என்ன செய்தார்கள்? ஏன் கடவுளை வைத்து பிழைப்பு நடத்துகின்றீர்கள்? இன்று பல தியாகங்களைச் செய்தவர்கள் இருக்கின்றனர். அவர்களையும் வணங்கலாமல்லவா? இன்று நாம் அப்படி வணங்கப்போனால் பல ஆயிரம் மனிதக் கடவுளர்கள் உருவாகலாமல்லவா?

கனககோபியின் பதிவிலே அனானி இட்ட பின்னூட்டங்களில் ஒன்று கீழே

//பெயரில்லா சொன்னது…

உமது கருத்து ஒரு வட்டம் அதாவது அம்மாபகவான் மீது குறை கூறுவதாக மட்டும் தான் இருக்கிறது தற்பொழுது அம்மாபகவான் கல்கி அவதாரம் என்றுதான் பக்தர்கள் வணங்குகிறார்கள். சாய்பாபா கிருஷ்ண அவதாரம் என்று சொல்லுராங்க.சாய் பாபா பற்றிய இன் வீடியோ ஆதாரம் என்னிடம் உண்டு வேண்டுமென்றால் அனுபிறேன். ஆதாரம் இல்லாமல் பேசப்பிடாது..நான் பாடசாலை படித்த காலத்தில் செவ்வாய் தோறும் பாபா பஜனை நடக்கும்.இது வற்புறுத்தல் இல்லையா. தம்பி பாபாவை விட தற்பொழுது அம்மா பகவனை வணங்குவோர் அதிகம்
//

இந்த பின்னூட்டம் மூலம் பல விடயங்களை அறிய முடிகின்றதல்லவா. மனிதர்களை வணங்குவோரின் போட்டி எப்படி இருக்கின்றது என்று. ஒரு பகவானை வணங்குவோர் இன்னொரு பகவானை ஆதார பூர்வமாக வீடியோ மூலம் பிடித்துக்கொடுக்க நினைக்கின்றார்.

அடுத்து இங்கே அவதாரம் பற்றிச் சொல்கின்றார். இது இந்த மனிதர்களை இறைவனாக போற்றுகின்றவர்கள் மக்களை தன பக்கம் இழுப்பதற்கு புனையப்பட்ட கட்டுக்கதைகளே. அப்படியானால் நானும் ஒரு கடவுளின் அவதாரம் என்று சொல்லலாமா?

இன்று பலர் அம்மா பகவானை வணங்குவதாக குறிப்பிடுகின்றார். இன்று தங்களை கடவுளாக மக்கள் நினைக்க வேண்டும் என்பதற்காக அவர்களால் பயன் படுத்தப்பட்ட மந்திர தந்திரங்களும் போலி நாடகங்களும் பிரச்சாரங்களுமே மக்கள் உண்மையான கடவுள் மீது இருக்கும் நாட்டத்தைவிட்டு போலி கடவுளர்களை தேடிப்போவது.

ஏன் நாம் இவர்களை வணங்கவேண்டும்? உண்மையான சிவபெருமான் போன்ற கடவுளர்களைவிட இவர்கள் என்ன செய்திருக்கின்றார்கள்? இந்துக்கள் என்போர் யார்? இவர்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவர்கள்?

கடவுளை வைத்து பிழைப்பு நடத்துவோர் பலர் அவர்களை உண்மையான இந்து ஒரு போதும் நம்பி ஏமாற மாட்டான். கடவுளின் பெயரால் பிழைப்பு நடத்த நினைப்பவன் என்றுமே இந்து மதத்துக்கு துரோகம் செய்து கொண்டே இருப்பான்.

இதனையும் பாருங்கள். எனது முன்னைய இடுகை

Post Comment

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

38 comments: on "மதத்தின் பெயரால் பிழைப்பு நடத்துகின்றார்களா?"

யோ வாய்ஸ் (யோகா) said...

வாங்க சந்ரு. நல்ல பதிவு. எனக்கும் இது போல அம்மா பகவான் மற்றும் இன்னும் சில திடீர் கடவுள் பக்தர்களுக்குமிடையே பெரிய வாக்கு வாதங்கள் வந்துள்ளன.

எங்கள் வீட்டிலும் வந்து என் அம்மாவை மூளைச்சலவை செய்து அம்மாபகவானை பின்பற்ற அழைத்தனர். நான் நல்ல நேரத்தில் கதைத்து அவரை போக விடாமல் தடுத்தேன்.

மற்றைய மதத்தில் பலவந்தமாக இணைப்பதை எதிர்ப்பதை போன்றே இதையும் எதிர்க்க வேண்டும்.

வந்தியத்தேவன் said...

இந்தவாரம் அம்மா பகவான் வாரம்.

’டொன்’ லீ said...

:-) உண்மைதான்...’ஆ’சாமிகள் அதிகரித்துவிட்டனர்.

Subankan said...

பேசாமல் சாமியார் ஆயிடலாம் போல இருக்கு. காசுக்குக் காசுமாச்சு, ...........

Saamuraai said...

// கடவுளை வைத்து பிழைப்பு நடத்துவோர் பலர் அவர்களை உண்மையான இந்து ஒரு போதும் நம்பி ஏமாற மாட்டான் //

நல்ல கருத்துள்ள பதிவு !!

மதத்தின் பால் மனிதன் கொண்ட நம்பிக்கைகள் இன்று வியாபாரம் ஆக்கப்படுகின்றன!!!

நேசமித்ரன் said...

சந்ரு. நல்ல பதிவு

கருத்துள்ள பதிவு

ஸ்ரீராம். said...

கடவுள் தான் எல்லா இடத்திலும் இருக்க முடியாது என்று தன் பிரதிநிதியாக அம்மாவைப் படைத்தானாம். தெய்வம் நேரில் வந்த அனுபவம் என்று கேள்விப் பட்டதில்லையா? சிக்கலான நேரத்தில் நம் நம்பிக்கைகள் நம்மைத் தூக்கி நிறுத்தினாலும் அந்த நம்பிக்கையே கூட கடவுள்தான். 'அன்பே சிவம்' பார்த்ததில்லை? நீங்களும் கடவுள்தான்...உங்கள் நண்பர்களும் கடவுள்தான்...மேற்சொன்ன நபர்கள் உங்களை கடவுளைப் பற்றி சிந்திக்க வைத்து விட்டால் அது அவர்கள் செய்யும் நல்ல காரியம்...இந்து என்ன கிறிஸ்தவர் என்ன, மேலே கடவுள் மந்திரிசபை வைத்து பரிபாலனமா பண்ணுகிறார்? கடவுள் என்பது ஒரு உணர்வு. ஒரு உருவகம்!

கனககோபி said...

அம்மா பகவான் பிரபல்யம் ஆகிறார் பதிவுகளின் மூலம். ;)

பதிவர்கள் எல்லோரும் செயற்பட ஆரம்பித்திருப்பது மிக நல்ல செயற்பாடு.
எல்லோரும் ஒன்றாகச் செயற்படுவோம்.

பதிவுக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும்.

கவிக்கிழவன் said...

நம்பிக்கை வைத்து கல்லையும் பார்த்தாள் தெய்வத்தின் கட்ச்சியமா அது உண்மைக்கு
சாட்ச்சியம்மா

இறக்குவானை நிர்ஷன் said...

சந்ரு,
நான் இதுபற்றி எனது பதிவில் குறிப்பிட்டிருக்கிறேன்.

இறைவனது சக்தி பரந்துபட்டது. சொரூப இலக்கணத்தில் இந்நிலையான், இவ்வண்ணத்தான், இப்படியிருப்பான் எனக் கூற முடியாதளவுக்கு ஏகமாகவும் அனேகமாகவும் விளங்குபவன். ஆன்மாக்களின் நலன் கருதி இறைவன்,தடத்த நிலையில் உருவம் கொள்கிறான்.

இந்தச் செயற்பாடு ஆவாகனத்தினூடு செய்யப்படுகிறது. எங்கும் நிறைந்த சக்தியை மந்திர உச்சாடனங்கள், பக்தியுடன் ஆவாகனம் செய்து சக்தியேற்றப்படுகிறது.

இது ஆகமங்களில் ஏற்றுக்கொள்ளப்பட்டு நடைமுறையில் உள்ளது. ஆனால் உயிரோடு இருக்கும் ஒருவரை இன்னொரு இடத்தில் எவ்வாறு ஆவாகனப்படுத்த முடியும். அவருக்கு இருப்பதோ ஒரேயொரு உயிர். அந்த உயிரைக்கொண்டு அவர் அங்கு வாழ்ந்துகொண்டிருக்கையில் அதே உயிரை இங்கு நூற்றுக்கணக்கான கும்பங்களில் ஆவாகனப்படுத்துகிறார்கள். எவ்வாறு சாத்தியப்படும்?
அதற்காக பணமும் அறவிடுகிறார்கள். எப்படி நியாயப்படுத்துகிறார்கள்?

சிந்தனையோட்டம் நன்றாக உள்ளவர்களுக்கு விளக்கம் கொடுக்கலாம். ஒரு வட்டத்துக்குள் நின்று சிந்திப்பவர்களுக்கு எது சொன்னாலும் புரியாது.

நல்லதொரு பதிவு.

சுசி said...

நல்ல பதிவு சந்ரு.
என்னைப் பொறுத்த வரை என்னையும் வணங்குன்னு வர்ப்புறுத்தாத படி எத்தனை சாமிகளும் வரலாம். அவங்கவங்க நம்பிக்கை அவங்களுக்கு.

Dr.எம்.கே.முருகானந்தன் said...

நல்ல பதிவு. பல சிந்தனைகளைத் தூண்டிவிட்டிருக்கிறீர்கள். கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பது சர்ச்சைக்குரியது.

விஞ்ஞான பூர்வமாகச் சிந்தித்தால் இல்லை என்ற முடிவிற்கே வர முடிகிறது.

எம்மிடையே பல அறிஞர்கள், ஞானிகள் இருந்திருக்கிறார்கள். இருக்கிறார்கள். கார்ல் மார்க்ஸ் முதல் இராமகிருஷ்ணர் எனப் பல விதமாக.

அவர்கள் சொன்னவற்றை கேட்டுத் தெளிவு பெறுவதில் பிழையில்லை.

அவர்களையோ அல்லது கடவுள் என்று கூறிப்படுபவரையோ வணங்க வேண்டும் என்றில்லை.

ஆனால் எல்லா மனிதர்களையும் மதிக்க வேண்டும். கனம் பண்ண வேண்டும், உதவ வேண்டும். தீங்கு செய்யாதிருக்க வேண்டும். அதற்கு மேலான கடவுளும் ஆன்மீகமும் கிடையாது என நான் எண்ணுகிறேன்.

சந்ரு said...

//யோ வாய்ஸ் (யோகா) கூறியது...
வாங்க சந்ரு. நல்ல பதிவு. எனக்கும் இது போல அம்மா பகவான் மற்றும் இன்னும் சில திடீர் கடவுள் பக்தர்களுக்குமிடையே பெரிய வாக்கு வாதங்கள் வந்துள்ளன.

எங்கள் வீட்டிலும் வந்து என் அம்மாவை மூளைச்சலவை செய்து அம்மாபகவானை பின்பற்ற அழைத்தனர். நான் நல்ல நேரத்தில் கதைத்து அவரை போக விடாமல் தடுத்தேன்.

மற்றைய மதத்தில் பலவந்தமாக இணைப்பதை எதிர்ப்பதை போன்றே இதையும் எதிர்க்க வேண்டும்.//

மதத்தின் பெயரால் மக்களை ஏமாற்றுவதும், ஒரு மதத்தினை திணிப்பதும் தண்டிக்கப்படவேண்டிய விடயமே....

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்....

சந்ரு said...

//வந்தியத்தேவன் கூறியது...
இந்தவாரம் அம்மா பகவான் வாரம்.//

அம்மா பகவானல்ல சும்மா பகவான்...

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்....

சந்ரு said...

//’டொன்’ லீ கூறியது...
:-) உண்மைதான்...’ஆ’சாமிகள் அதிகரித்துவிட்டனர்.//பணம் உழைக்க விரும்பினால் நீங்களும் ஆசாமியாகலாம் சும்மா பகவானாகலாம்
நண்பா...

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்....

சந்ரு said...

//Subankan கூறியது...
பேசாமல் சாமியார் ஆயிடலாம் போல இருக்கு. காசுக்குக் காசுமாச்சு, ...........//ஏன் கஸ்ரப்பட்டு படிக்கிறிங்க சுபாங்கன்.. பணம் சுலபமான வழி இருக்கும்போது...

சந்ரு said...

//Saamuraai கூறியது...
// கடவுளை வைத்து பிழைப்பு நடத்துவோர் பலர் அவர்களை உண்மையான இந்து ஒரு போதும் நம்பி ஏமாற மாட்டான் //

நல்ல கருத்துள்ள பதிவு !!

மதத்தின் பால் மனிதன் கொண்ட நம்பிக்கைகள் இன்று வியாபாரம் ஆக்கப்படுகின்றன!!!//

என்றோ ஒருநாள் இவர்களின் நாடகங்கள் அரங்கேறும் என்பது உண்மை...

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்....

சந்ரு said...

//நேசமித்ரன் கூறியது...
சந்ரு. நல்ல பதிவு

கருத்துள்ள பதிவு//

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்....

சந்ரு said...

//ஸ்ரீராம். கூறியது...
கடவுள் தான் எல்லா இடத்திலும் இருக்க முடியாது என்று தன் பிரதிநிதியாக அம்மாவைப் படைத்தானாம். தெய்வம் நேரில் வந்த அனுபவம் என்று கேள்விப் பட்டதில்லையா? சிக்கலான நேரத்தில் நம் நம்பிக்கைகள் நம்மைத் தூக்கி நிறுத்தினாலும் அந்த நம்பிக்கையே கூட கடவுள்தான். 'அன்பே சிவம்' பார்த்ததில்லை? நீங்களும் கடவுள்தான்...உங்கள் நண்பர்களும் கடவுள்தான்...மேற்சொன்ன நபர்கள் உங்களை கடவுளைப் பற்றி சிந்திக்க வைத்து விட்டால் அது அவர்கள் செய்யும் நல்ல காரியம்...இந்து என்ன கிறிஸ்தவர் என்ன, மேலே கடவுள் மந்திரிசபை வைத்து பரிபாலனமா பண்ணுகிறார்? கடவுள் என்பது ஒரு உணர்வு. ஒரு உருவகம்!//

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்....

சந்ரு said...

//கனககோபி கூறியது...
அம்மா பகவான் பிரபல்யம் ஆகிறார் பதிவுகளின் மூலம். ;)

பதிவர்கள் எல்லோரும் செயற்பட ஆரம்பித்திருப்பது மிக நல்ல செயற்பாடு.
எல்லோரும் ஒன்றாகச் செயற்படுவோம்.

பதிவுக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும்.//

சும்மா சாமியார்களுக்கு எதிராக தொடர்ந்து செயட்படுவோம்...
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்....

சந்ரு said...

//கவிக்கிழவன் கூறியது...
நம்பிக்கை வைத்து கல்லையும் பார்த்தாள் தெய்வத்தின் கட்ச்சியமா அது உண்மைக்கு
சாட்ச்சியம்மா//அதற்காக ஒரு சராசரி மனிதனை தெய்வமாக வழிபடுவதா?

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்....

சந்ரு said...

//இறக்குவானை நிர்ஷன் கூறியது...
சந்ரு,
நான் இதுபற்றி எனது பதிவில் குறிப்பிட்டிருக்கிறேன்.

இறைவனது சக்தி பரந்துபட்டது. சொரூப இலக்கணத்தில் இந்நிலையான், இவ்வண்ணத்தான், இப்படியிருப்பான் எனக் கூற முடியாதளவுக்கு ஏகமாகவும் அனேகமாகவும் விளங்குபவன். ஆன்மாக்களின் நலன் கருதி இறைவன்,தடத்த நிலையில் உருவம் கொள்கிறான்.

இந்தச் செயற்பாடு ஆவாகனத்தினூடு செய்யப்படுகிறது. எங்கும் நிறைந்த சக்தியை மந்திர உச்சாடனங்கள், பக்தியுடன் ஆவாகனம் செய்து சக்தியேற்றப்படுகிறது.

இது ஆகமங்களில் ஏற்றுக்கொள்ளப்பட்டு நடைமுறையில் உள்ளது. ஆனால் உயிரோடு இருக்கும் ஒருவரை இன்னொரு இடத்தில் எவ்வாறு ஆவாகனப்படுத்த முடியும். அவருக்கு இருப்பதோ ஒரேயொரு உயிர். அந்த உயிரைக்கொண்டு அவர் அங்கு வாழ்ந்துகொண்டிருக்கையில் அதே உயிரை இங்கு நூற்றுக்கணக்கான கும்பங்களில் ஆவாகனப்படுத்துகிறார்கள். எவ்வாறு சாத்தியப்படும்?
அதற்காக பணமும் அறவிடுகிறார்கள். எப்படி நியாயப்படுத்துகிறார்கள்?

சிந்தனையோட்டம் நன்றாக உள்ளவர்களுக்கு விளக்கம் கொடுக்கலாம். ஒரு வட்டத்துக்குள் நின்று சிந்திப்பவர்களுக்கு எது சொன்னாலும் புரியாது.

நல்லதொரு பதிவு.//

உங்கள் பதிவினைப் பார்த்த்தேன்...சும்மா சாமியார்களுக்கு எதிராக தொடர்ந்து செயட்படுவோம்...
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்....

சந்ரு said...

//சுசி கூறியது...
நல்ல பதிவு சந்ரு.
என்னைப் பொறுத்த வரை என்னையும் வணங்குன்னு வர்ப்புறுத்தாத படி எத்தனை சாமிகளும் வரலாம். அவங்கவங்க நம்பிக்கை அவங்களுக்கு.//

பொய் பிரசாரங்கள் மூலம் மக்களின் தெய்வ நம்பிக்கையை சிதைப்பது தவறல்லவா?

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்....

வால்பையன் said...

//எமது இந்துக்கள் ஆதியும் அந்தமும் இல்லாத கடவுளை வணங்குகின்றோம்.//

ஆதியும், அந்தமுமும் இல்லாமல் எப்படியய்யா ஒண்ணு இருக்க முடியும்!?
இந்த உலகில் உள்ள அனைத்திற்கும் தோற்றமும் உண்டு, மறைவும் உண்டு!

வால்பையன் said...

//எமது இந்துக்களிடையே இப்போது மனிதர்களாகப் பிறந்தவர்களை வணங்குகின்ற ஒரு நாகரிகம் பரவிவருகின்றது.//

நீங்க கும்பிடுகிறது எல்லாமே மனிதர்கள் தான்!
கிருஷ்ணன், ராமன் எல்லாம் யார்?
கற்பனையா நாலு கை வச்சிகிட்டா உடனே அவுங்க கடவுள் ஆகிருவாங்களா?

சந்ரு said...

//Dr.எம்.கே.முருகானந்தன் கூறியது...
நல்ல பதிவு. பல சிந்தனைகளைத் தூண்டிவிட்டிருக்கிறீர்கள். கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பது சர்ச்சைக்குரியது.

விஞ்ஞான பூர்வமாகச் சிந்தித்தால் இல்லை என்ற முடிவிற்கே வர முடிகிறது.

எம்மிடையே பல அறிஞர்கள், ஞானிகள் இருந்திருக்கிறார்கள். இருக்கிறார்கள். கார்ல் மார்க்ஸ் முதல் இராமகிருஷ்ணர் எனப் பல விதமாக.

அவர்கள் சொன்னவற்றை கேட்டுத் தெளிவு பெறுவதில் பிழையில்லை.

அவர்களையோ அல்லது கடவுள் என்று கூறிப்படுபவரையோ வணங்க வேண்டும் என்றில்லை.

ஆனால் எல்லா மனிதர்களையும் மதிக்க வேண்டும். கனம் பண்ண வேண்டும், உதவ வேண்டும். தீங்கு செய்யாதிருக்க வேண்டும். அதற்கு மேலான கடவுளும் ஆன்மீகமும் கிடையாது என நான் எண்ணுகிறேன்.//

நல்ல கருத்துக்கள்...

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்....

வால்பையன் said...

பாபா ஒரு பெரிய பிராடு,
அம்மா பகவான் சின்னபிராடு!

எந்த கடவுளாவது குங்குமத்தில் நான் கடவுள் என்று விளம்பரம் செய்து கொள்ளுமா!?

கேக்குறவன் கேனயனா இருந்தா.... எதாவது அசிங்க சொல்லிபுடுவேன்!

சந்ரு said...

//வால்பையன் கூறியது...
//எமது இந்துக்கள் ஆதியும் அந்தமும் இல்லாத கடவுளை வணங்குகின்றோம்.//

ஆதியும், அந்தமுமும் இல்லாமல் எப்படியய்யா ஒண்ணு இருக்க முடியும்!?
இந்த உலகில் உள்ள அனைத்திற்கும் தோற்றமும் உண்டு, மறைவும் உண்டு!//

தொடக்கமும் முடிவும் இறைவனுக்கு அப்பாற்பட்டது...

இறைவனுக்கு ஒரு முடிவு வந்துவிட்டால் மனிதனால் படைக்கப்பட்ட உயிர்களின் நிலை என்னவாவது...

சந்ரு said...

//வால்பையன் கூறியது...
//எமது இந்துக்களிடையே இப்போது மனிதர்களாகப் பிறந்தவர்களை வணங்குகின்ற ஒரு நாகரிகம் பரவிவருகின்றது.//

நீங்க கும்பிடுகிறது எல்லாமே மனிதர்கள் தான்!
கிருஷ்ணன், ராமன் எல்லாம் யார்?
கற்பனையா நாலு கை வச்சிகிட்டா உடனே அவுங்க கடவுள் ஆகிருவாங்களா?//

இவர்களெல்லாம் கடவுளின் அவதாரங்கள் என்றும் ஏன் இப்படி அவதாரங்கள் எடுக்கின்றனர் என்றும் விளக்கங்கள் எனது முன்னைய பதிவுகளிலே சொல்லிவிட்டேன்.

வால்பையன் said...

//தொடக்கமும் முடிவும் இறைவனுக்கு அப்பாற்பட்டது...

இறைவனுக்கு ஒரு முடிவு வந்துவிட்டால் மனிதனால் படைக்கப்பட்ட உயிர்களின் நிலை என்னவாவது... //

பூமி என்ன கயிற்றில் கட்டியா தொங்கிகிட்டு இருக்கு!
அதுபாட்டுக்கு சூரியனை சுற்றி வரல! அது மாதிரி தான் உயிரினங்களும் அதுபாட்டுக்கு இருக்கும்!

உங்க கற்பனை கடவுளால் அதற்கு ஒரு பிரயோஜனமும் இல்ல!

சந்ரு said...

//வால்பையன் கூறியது...
பாபா ஒரு பெரிய பிராடு,
அம்மா பகவான் சின்னபிராடு!

எந்த கடவுளாவது குங்குமத்தில் நான் கடவுள் என்று விளம்பரம் செய்து கொள்ளுமா!?

கேக்குறவன் கேனயனா இருந்தா.... எதாவது அசிங்க சொல்லிபுடுவேன்!//

இன்று கடவுள்களிலே நம்பிக்கை இல்லாமல் போவது இந்த ஆசாமிகளே காரணம்...

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்....

சந்ரு said...

//வால்பையன் கூறியது...
//தொடக்கமும் முடிவும் இறைவனுக்கு அப்பாற்பட்டது...

இறைவனுக்கு ஒரு முடிவு வந்துவிட்டால் மனிதனால் படைக்கப்பட்ட உயிர்களின் நிலை என்னவாவது... //

பூமி என்ன கயிற்றில் கட்டியா தொங்கிகிட்டு இருக்கு!
அதுபாட்டுக்கு சூரியனை சுற்றி வரல! அது மாதிரி தான் உயிரினங்களும் அதுபாட்டுக்கு இருக்கும்!

உங்க கற்பனை கடவுளால் அதற்கு ஒரு பிரயோஜனமும் இல்ல!//கடவுள் இருக்கின்றது என்போர் எல்லாமே இறைவனால்தான் இயங்குகின்றது என்கின்றான். கடவுள் இல்லை என்பவன் அதனை மறுக்கின்றான். நான் சொல்கிறேன் சூரியனை பூமி சுற்றுவதும் இந்த உலகமே இயங்குவதும் கடவுளால்தான் என்று

வால்பையன் said...

//இவர்களெல்லாம் கடவுளின் அவதாரங்கள் என்றும் ஏன் இப்படி அவதாரங்கள் எடுக்கின்றனர் என்றும் விளக்கங்கள் எனது முன்னைய பதிவுகளிலே சொல்லிவிட்டேன். //

ஆமாமா கற்பனை கதைகல் எல்லாம் நல்லாதான் இருந்துச்சு!
சரி அதன் பின் ஏன் அவதாரங்கள் வரல,
அதே மாதிரி கடவுள் ஏன் இந்தியாவில் மட்டும் அவதாரமெடுக்கிறார்!

சந்ரு said...

//வால்பையன் கூறியது...
//இவர்களெல்லாம் கடவுளின் அவதாரங்கள் என்றும் ஏன் இப்படி அவதாரங்கள் எடுக்கின்றனர் என்றும் விளக்கங்கள் எனது முன்னைய பதிவுகளிலே சொல்லிவிட்டேன். //

ஆமாமா கற்பனை கதைகல் எல்லாம் நல்லாதான் இருந்துச்சு!
சரி அதன் பின் ஏன் அவதாரங்கள் வரல,
அதே மாதிரி கடவுள் ஏன் இந்தியாவில் மட்டும் அவதாரமெடுக்கிறார்!//

இந்துக்கள் செறிந்து வாழும் இடங்களில்தானே அவதாரமேடுக்கமுடியும். சவூதி அரேபியாவில் போய் அவதாரமெடுக்க முடியுமா அல்லது சீனாவில் போய் அவதாரமெடுக்க முடியுமா? மக்களின் நன்மைக்காகவே இந்த அவதாரங்கள்.

வால்பையன் said...

//கடவுள் இருக்கின்றது என்போர் எல்லாமே இறைவனால்தான் இயங்குகின்றது என்கின்றான். கடவுள் இல்லை என்பவன் அதனை மறுக்கின்றான். நான் சொல்கிறேன் சூரியனை பூமி சுற்றுவதும் இந்த உலகமே இயங்குவதும் கடவுளால்தான் என்று//

அதுக்காக இயற்கை உங்களை கோவிச்சுக்காது!
நீங்கள் உங்கள் இஷ்டப்படி கதை கட்டிவிடலாம்!

நாம் இருக்கும் மில்கிவே கேலக்ஸியில் மட்டும் எத்தனை சூரியன்கள் இருக்கின்றன, அதை சுற்றி எத்தனை கோள்கள், எத்தனை லட்சம் கேலக்ஸிகள்!
நெபுலாக்கள், வெள்ளைகுள்ளர்கள், ப்ளாக் ஹோல்ஸ், கிரஸ்சர், ம்ம்ம் இன்னும் எத்தனை எத்தனை இந்த் அண்ட வெளியில் பாவம் உங்க கடவுளைத்தான் காணோம்!

அது ஏனுங்க பூமியில் மட்டும் உயிர்!
அது எப்படி உருவாச்சுன்னு உங்களுக்கு தெரியுமா!?

சந்ரு said...

//வால்பையன் கூறியது...
//கடவுள் இருக்கின்றது என்போர் எல்லாமே இறைவனால்தான் இயங்குகின்றது என்கின்றான். கடவுள் இல்லை என்பவன் அதனை மறுக்கின்றான். நான் சொல்கிறேன் சூரியனை பூமி சுற்றுவதும் இந்த உலகமே இயங்குவதும் கடவுளால்தான் என்று//

அதுக்காக இயற்கை உங்களை கோவிச்சுக்காது!
நீங்கள் உங்கள் இஷ்டப்படி கதை கட்டிவிடலாம்!

நாம் இருக்கும் மில்கிவே கேலக்ஸியில் மட்டும் எத்தனை சூரியன்கள் இருக்கின்றன, அதை சுற்றி எத்தனை கோள்கள், எத்தனை லட்சம் கேலக்ஸிகள்!
நெபுலாக்கள், வெள்ளைகுள்ளர்கள், ப்ளாக் ஹோல்ஸ், கிரஸ்சர், ம்ம்ம் இன்னும் எத்தனை எத்தனை இந்த் அண்ட வெளியில் பாவம் உங்க கடவுளைத்தான் காணோம்!//

அதுதான் கடவுளின் படைப்பின் மகத்துவம் நாம் நினைத்தபடி எல்லாமே இருந்தால் கடவுளைப்பற்றி எவருமே சிந்திக்கமாட்டோம்.

எல்லாமே கட்டுக்கதைகள் அல்ல சில கட்டுக்கதைகளாக இருக்கலாம். இந்த ஆண்ட வெளியில் கடவுளை காணவில்லை என்று யார் சொன்னது? கடவுள் எங்கும் இருக்கின்றார் என்று சொல்கின்றோம் நாம். அது எமது நம்பிக்கை உங்களுக்கு நம்பிக்கை எல்லை என்றால் நாம் என்ன செய்வது...//அது ஏனுங்க பூமியில் மட்டும் உயிர்!
அது எப்படி உருவாச்சுன்னு உங்களுக்கு தெரியுமா!?//அது தெரிந்துகொண்டால் நானும் கடவுளாகிவிடலாம்.

கடவுளுக்கும் மனிதனுக்கும் உள்ள இடைவெளி இதுதான்.

வால்பையன் said...

//இந்துக்கள் செறிந்து வாழும் இடங்களில்தானே அவதாரமேடுக்கமுடியும். சவூதி அரேபியாவில் போய் அவதாரமெடுக்க முடியுமா அல்லது சீனாவில் போய் அவதாரமெடுக்க முடியுமா? மக்களின் நன்மைக்காகவே இந்த அவதாரங்கள். //

இந்துக்கள் சொறிந்து வாழும் இடத்தில் மட்டுமானால் அதற்கு இந்தியாவே தகுதியில்லாத நாடு தான்!
இந்து மதம் இந்தியாவில் உருவானதல்ல!
மேலும் எல்லோரையும் படைத்த கடவுள் ஏன் இந்திய மக்கள் மீது மட்டும் ஆர்வம் காட்ட வேண்டும், அவர்கள் தான் நன்றாக சொறிந்து கொடுக்கிறார்கள் என்றா!?

இப்போது கூட நாட்டில் பலர் வெகு சீரியஸாக கடவுளை சொறிந்து கொண்டு தான் இருக்கிறார்கள், ஆனால் கடவுள் ஒரு அவதாரமும் எடுத்தது மாதிரி தெரியலையே! பாபான்னு ஒரு சொறிமுத்து கைகுள்ள செயினை மறைச்சு வச்சு மேஜிக் காட்டிகிட்டு இருக்கான், இந்த அம்மா பகவான் வேண்டும் வரம் தர்றேன், நான் கேட்கும் பணம் தான்னு வசூல் பண்ணிகிட்டு இருக்காங்க!

வால்பையன் said...

//அது தெரிந்துகொண்டால் நானும் கடவுளாகிவிடலாம். //

அந்த கதையை நான் பதிவா எழுதுறேன்!
அதற்காக என்னை கடவுள் ஆக்கிவிட வேண்டாம்!
குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டி கொண்டே இருந்தால் எல்லாமே வாயை பிளக்க வைக்கும் ஆச்சர்யம் தான்!

எலக்ட்ரான், புரோட்டான் எனும் கண்ணுக்கு தெரியாத மூலகூறுகளின் கூட்டமைப்பே ஒவ்வோரு பொருளும், பொருள் என்றால் திர, திரவ, வாயு அனைத்தும்!

அறியிவல் அடிப்படையை கொஞ்சம் படித்தாலே புரிந்து கொள்ளலாம்! கண்ணை மூடி கொண்டு கடவுள் தான் எல்லாம் என்றிருந்தால் உங்களால் ஒன்றையும் புரிந்து கொள்ள முடியாது அதற்கு முன்முடிவற்ற நிலையில் அறிவியலை அணுக வேண்டும்!

மேலும் உங்களை குறுக்கு கேள்வி கேட்க அறிவியல் மட்டுமே அனுமதிக்கிறது!

Post a Comment