Monday, 14 September 2009

என்னைத் தேடி வந்த தேவதை..

ஆசை இல்லா மனிதர்கள் இல்லை. எனக்கு அதிகமான ஆசைகள் இருக்கின்றது என்பது நிலாமதி அக்காவுக்கு தெரிந்துவிட்டது போலும். என்னிடம் வரம் தரும் தேவதையை அனுப்பிவிட்டார். என்னை பத்து வரங்கள் மட்டுமே கேட்க வேண்டும் என்றும் நிபந்தனையும் விதித்துவிட்டார்.

சரி நிறையவே ஆசைகள் எந்த வரத்தை முதலில் கேட்பது. எனக்கு இருக்கின்ற ஆசைகளை பட்டியலிடுகின்றேன்.

1. பாரதி மீண்டும் பிறக்கவேண்டும் பாரதியிடம் நான் தமிழ் படிக்க வேண்டும்.
பாரதியின் கவிதைகளால் ஈர்க்கப்பட்டவன் பாரதியின் கண்ணன் பாடல்களில் அடிக்கடி தொலைபவன். இன்று பாரதி இல்லையே என்று கவலைப்படுபவன்.

2. யுத்தத்தின் கொடுமையால் தாய், தந்தை, சொந்தங்களை இழந்து சிறுவர் இல்லங்களிலே தவிக்கின்ற அந்தச் சிறுவர்களின் தாய், தந்தையர்கள் மீண்டும் கிடைக்கக் வேண்டும்.

இன்று எத்தனை சிறுவர் இல்லங்கள் சிறுவர் இல்லங்களிலே நம் சிறார்கள் படும் இன்னல்கள்தான் எத்தனை. அவர்களின் ஏக்கங்கள்தான் என்ன? அவர்களின் எதிர் காலம் பற்றி சிந்திக்க உரியவர்கள் முன்வரவில்லை என்பது கவலைக்குரிய விடயமே. இல்லங்களிலே இருக்கின்ற ஆண்சிறார்களைவிட பெண் பிள்ளைகளைப் பற்றி சிந்திக்க வேண்டும். அவர்களின் எதிர்கால நிலை என்ன?

3. உலகில் இருக்கின்ற மொழிகளிலே தமிழ் மொழி முதலிடத்தில் இருக்க வேண்டும்.

உலக மொழிகளிலே தமிழ் மொழி முதலாவது மொழியாக அங்கிகரிக்கப்பட வேண்டும். உலகெங்கும் தமிழ் மொழி கட்டாய பாடமாக பல்கலைக்கழகங்களிலே சேர்க்கப்பட வேண்டும்.

4. ஏழைகள் இல்லாத பூமி வேண்டும்.
பணம் இருந்தால் எதனையும் செய்யமுடியும் ஏழையிடம் பணமில்லை அவன்படும் வேதனை அவனுக்குத்தான் தெரியும். கஷ்டப்பட்டு படித்து, பட்டம் பெற்று என்ன பயன் வேலை கிடைப்பதென்றால் பணம் கொடுக்கவேண்டும். எத்தனை ஏழைகள் நிம்மதியைத் தொலைத்தபடி...

5. மறைந்து தமிழர் கலைகளை வளர்க்க கேட்பேன்.
மறைந்து வரும் தமிழர் கலைகளை வளர்க்கவேண்டும் என்ற ஆசை நம் கலைஞர்களை ஒன்று திரட்டி சில கலைத்துறை படைப்புக்களை வெளி உலகுக்கு கொண்டு வரவேண்டும் என்ற ஆசை இருக்கின்றது. அதற்கு உதவும்படி கேட்பேன்.

6. சாதி, மத பேதமற்ற உலகம் வேண்டும்.
இன்று உலகில் சாதி, மதம் என்று எத்தனை பிரச்சனைகள். எத்தனை உயிர்கள் பறிக்கப்படுகின்றன.

7. மீண்டும் என் இளமைக்காலம் வேண்டும்.
என் தந்தை என் சிறு வயதிலே இறந்து விட்டார் சாதாரண குடும்பத்தை சேர்ந்த எனக்கு சிறு வயதிலே குடும்ப சுமைகள் காரணமாக என் தந்தையின் வழியில் பிழைப்புக்காக விவசாயத்திலே ஈடுபடவேண்டிய கட்டாய சூழ்நிலை. இளமைக்காலங்கள் விவசாயத்தோடும் படிப்போடும் கடந்துவிட்டது. சிறுவர்கள் அனுபவிக்க வேண்டிய எதனையும் அனுபவித்ததில்லை. மற்றைய சிறுவர்களை பார்த்து கவலைப்பட்டதுண்டு.

8. கவலைகள் இல்லாத மனது வேண்டும்.
என் மனது நிறைய கவலைகள் கொட்டிக்கிடக்கின்றன. அவற்றை சந்தோசங்கள் சில நேரங்களில் வந்து எட்டிப்பார்த்துவிட்டுச் செல்கின்றன.

9. தமிழரை அழிப்பவர்களும், அழிக்க நினைப்பவர்களும் மறு பிறவியில் தமிழராய் பிறக்க வேண்டும்.
அப்பொழுதுதான் தமிழர் பண்பாடு , தமிழின் இனிமை , தமிழர் வேதனை ...... என்று எல்லாவற்றையும் அவர்கள் அறிவார்கள்.

10. நான் கடவுளாய் நினைக்கின்ற ஒரு மனிதர் என்றும் இறவாத வரம் வேண்டும்.


இலங்கையில் இருக்கும் பல பதிவர்களுக்கு நிறையவே ஆசை இருப்பதை அறிந்தேன். என்னிடம் வந்த தேவதையை அவர்களில் ஐவரிடம் அனுப்புகின்றேன்.

உஞ்சலில் ஆடும் சுபானு
******************************


எனது மருமகள் ஏழாம் தரம் படிக்கின்றார். படிப்பு மட்டுமல்ல எல்லாவற்றிலும் கெட்டித்தனம். அவளது நீண்டநாள் ஆசையினை நிறைவேற்றி இருக்கின்றேன். தானும் வலைப்பதிவு ஆரம்பித்து சிறுவர்களுக்கு பயனுள்ள தகவல்களை பதிவிட வேண்டுமென்பது என்பது அவரது ஆசை...எனது உதவியோடு சிறுவர் உலகம் என்றும் வலைப்பதிவினை ஆரம்பித்துவிட்டார். இனி அவரும் எங்களோடு....

Post Comment


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

17 comments: on "என்னைத் தேடி வந்த தேவதை.."

யோ வாய்ஸ் (யோகா) said...

வாழ்த்துக்கள் சந்ரு நிலாமதி அக்கா என்னையும் இதே தொடர் பதிவுக்கு அழைதிருக்கார். நானும் எழுதியிருக்கிறேன்.

உங்களது ஆசைகள் அனைத்தும் நிறைவேற ஆண்டவரை பிரார்த்திக்கிறேன்...

ரொம்பவே டச்சிங்காக இருந்தது. உங்களது ஆசைகள். அனைத்தும் நிறைவேறா விடினும் முடிந்த அனைத்தும் நிறைவேற முயற்சிப்போம்.

சந்ரு said...

//யோ வாய்ஸ் (யோகா) கூறியது...
வாழ்த்துக்கள் சந்ரு நிலாமதி அக்கா என்னையும் இதே தொடர் பதிவுக்கு அழைதிருக்கார். நானும் எழுதியிருக்கிறேன்.

உங்களது ஆசைகள் அனைத்தும் நிறைவேற ஆண்டவரை பிரார்த்திக்கிறேன்...

ரொம்பவே டச்சிங்காக இருந்தது. உங்களது ஆசைகள். அனைத்தும் நிறைவேறா விடினும் முடிந்த அனைத்தும் நிறைவேற முயற்சிப்போம்.//


நிறைவேறும் ஆசைகளை தேவதையிடம் கேட்க வேண்டியதில்லையே. தேவதையிடம் கேட்கும் வரங்களை நல்ல வரமாக கேட்க வேண்டாமா?


வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிகள்.

க.பாலாஜி said...

//2. யுத்தத்தின் கொடுமையால் தாய், தந்தை, சொந்தங்களை இழந்து சிறுவர் இல்லங்களிலே தவிக்கின்ற அந்தச் சிறுவர்களின் தாய், தந்தையர்கள் மீண்டும் கிடைக்கக் வேண்டும்.//

நிச்சயம் நிறைவேற வேண்டிய ஆசை...அந்த தேவதைதான் மனசு வைக்க வேண்டும்....

Mrs.Menagasathia said...

//அப்பான்னா எல்லோருக்கும் உயிர் இல்லையா, அவ‌ர் என்றூம் உங்க‌ளுட‌ன் தான் வாழ்ந்து கொண்டு இருப்பார் க‌வ‌லை படாதீர்கள்.//

ரீப்பிட்ட்...

நிலாமதி said...

சந்துரு .......உங்கள் நியாயமான் ஆசைகள் நிறைவேற வாழ்த்துக்கள். நன்றி என் வேண்டுகோளுக்கு இணைக்க., தேவதையிடம் வரம் கேட்டு எழுதியமைக்கு

ஹேமா said...

சந்ரு அத்தனை ஆசைகளும் தேவையானவையே.தேவதையாவது மனம் வைக்கட்டும்.முன்னால் இருக்கும் மனிதனை விட கண்ணுக்குத் தெரியாத தேவதையை நம்புவோம்.

சுபானு said...

//ஏழைகள் இல்லாத பூமி வேண்டும்.
நிட்சயமாக இது நடைபெற வேண்டும். ஊஞ்சலிலாட தேவதையை அனுப்பியமைக்கு நன்றிகள்..

உங்கள் மருமகளுக்கு வாழ்த்துக்கள்.. என்து Google reader இல் அதனையும் திரட்டுகின்றேன்..

கவிக்கிழவன் said...

பேற்றோரை இளந்த குடும்பததை பிரிந்த சிறுவர் சம்மந்தமான விபரம்

456 (157 பெண் 157 ஆண் )போராட்டத்தில் ஈடுபடுத்தப்பட்டதாக கருதி கைதுசெய்யப்பட்ட சிறுவர்கள். அதுவரை விடுவிக்;கப்படவில்லை.
536 இரு பெற்றோரையும் இளந்தவர்கள். ஏற்கனவே இருபெற்றோரையும் இளந்து வன்னியில் இல்லங்களில் இருந்தபிள்ளைகள் உள்ளடக்கப்பட்டதா தெரியாது.
174 பெற்றோர் உறவினர்களுடன் மீள் இணைக்கப்பட்ட சிறுவர்கள்.
244 மீள் இணைக்கப்பட வேலைகள் நடைடிபறுகிறது தாமதமதமாக.

உங்கள் உறவினர்களது தெரிந்தவர்களது பிள்ளைகள் இருபெற்றோரையும் இளந்து பிரிந்து இருப்பின் இவர்களது உறவினர்கள் முகாமுக்கு வெளியில் இருப்பின் ( எந்தமாவட்டத்திலாவது) விரும்பினால் அப்பிள்ளைகளை தங்களிடம் எடுத்து பராமரிக்க முடியும். வவுனியா யாழ்ப்பாணம் திருகோணமலை சிறுவர் நன்நடத்தை திணைக்களததுடன் தொடர்பு கௌ;ளுங்கள் அல்து

கவிக்கிழவன் said...

பேற்றோரை இளந்த குடும்பததை பிரிந்த சிறுவர் சம்மந்தமான விபரம்

456 (157 பெண் 157 ஆண் )போராட்டத்தில் ஈடுபடுத்தப்பட்டதாக கருதி கைதுசெய்யப்பட்ட சிறுவர்கள். அதுவரை விடுவிக்;கப்படவில்லை.
536 இரு பெற்றோரையும் இளந்தவர்கள். ஏற்கனவே இருபெற்றோரையும் இளந்து வன்னியில் இல்லங்களில் இருந்தபிள்ளைகள் உள்ளடக்கப்பட்டதா தெரியாது.
174 பெற்றோர் உறவினர்களுடன் மீள் இணைக்கப்பட்ட சிறுவர்கள்.
244 மீள் இணைக்கப்பட வேலைகள் நடைடிபறுகிறது தாமதமதமாக.

உங்கள் உறவினர்களது தெரிந்தவர்களது பிள்ளைகள் இருபெற்றோரையும் இளந்து பிரிந்து இருப்பின் இவர்களது உறவினர்கள் முகாமுக்கு வெளியில் இருப்பின் ( எந்தமாவட்டத்திலாவது) விரும்பினால் அப்பிள்ளைகளை தங்களிடம் எடுத்து பராமரிக்க முடியும். வவுனியா யாழ்ப்பாணம் திருகோணமலை சிறுவர் நன்நடத்தை திணைக்களததுடன் தொடர்பு கௌ;ளுங்கள் அல்து UNICEF SAVE THE CHILDRE தொடர்பு கௌ;ளுங்கள்.or kavikkilavan@gmail.com தொடர்பு கௌ;ளுங்கள் i will give the phone number of thod=se people

வால்பையன் said...

//சாதி, மத பேதமற்ற உலகம் வேண்டும்.//


இத இத இதத்தான் எதிர்பார்க்கிறேன்!

சுசி said...

நியாயமான ஆசைகள் சந்ரு.
உங்கள் மருமகளுக்கும் வாழ்த்த்துக்கள்.

ஸ்ரீராம். said...

அன்பு அதிகம் இருப்பவர்களுக்கு ஆசைகளும் அதிகம் இருப்பதில் தப்பில்லை. ஆசைப் பட்டால்தான் கனவு காண முடியும். கனவு கண்டால்தான் கனவு மெய்ப்பட வழி காணத் தோன்றும். வாழ்த்துக்கள்.

கனககோபி said...

தொடர் பதிவுக்கு அழைத்தமைக்கு நன்றி.
நாளை அதை பதிவிடுகிறேன்.
உங்கள் ஆசைகள் கொஞ்சம் பொதுநலமா இருக்கிற மாதிரி இருக்கு, நான் அப்பிடியில்லை. ஹி ஹி...
மருமகளின் ஆர்வத்திற்கு வாய்ப்பளித்தமைக்கு வாழ்த்துக்கள்.

Anonymous said...

நல்லெண்ணங்களையும் நோக்கங்களையும் வரமாக்கிய விதம் அழகு,,,

Anonymous said...

பாரதி பிறந்தால் சொல்லி அனுப்பவும் ப்ளீஸ்....

வேந்தன் said...

வரங்கள் கிடைக்க வாழ்த்துக்கள்...

யோ வாய்ஸ் (யோகா) said...

உங்களை ஒரு தொடர் பதிவில் மாட்டி விட்டிருக்கிறேன்.

காதல் - அழகு - கடவுள் - பணம்
http://yovoice.blogspot.com/2009/09/blog-post_15.html
வந்து தொடருங்க

Post a Comment