Wednesday, 30 September 2009

எவனோ ஒருவன் உங்களில் ஒருவனாய்.

இது எனது 100 வது இடுகை. பரந்து விரிந்த இந்த வலையுலகில் நான் படித்தவை ஏராளம். பல நல்ல நண்பர்கள் கிடைத்திருக்கின்றனர். நான் வலைப்பதிவுக்கு வந்த புதிதில் எனக்கு வலைப்பதிவு தொடர்பில் எந்த அறிவும் கிடையாது. படிப்படியாக பல விடயங்களைக் கற்றுக் கொண்டேன்


ஆரம்பத்தில் நான் சில வலைப்பதிவுகளை பார்ப்பதோடு மட்டும் நின்றுவிட்டேன். நாமும் வலைப்பதிவு உருவாக்கலாம் என்ற விடயம் தெரியாததுதான் காரணம். வீட்டில் இனைய இணைப்பு இருந்தும் சில இணையத்தளங்களைப் பார்ப்பது இணையத்திலே அரட்டை அடிப்பது என்று பொழுது போய்க்கொண்டிருந்தது.


அந்தக் காலகட்டத்தில் நண்பர் பிரபா ஒரு வலைப்பதிவை ஆரம்பித்திருந்தார். அப்போது அவர் வலைப்பதிவு ஆரம்பிப்பது தொடர்பாக பல விடயங்களைச் சொன்னதோடு உச்சாகமும் ஊட்டினார். அவருக்கு இந்த வேளையில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.


அப்போது நான் அடிக்கடி இன்று பதிவிடுவதுபோல் பதிவிட்டாலும். திரட்டிகளில் இணைத்துக் கொள்வது, பின்னூட்டமிடுவது தொடர்பான விடயங்கள் தெரியாததால் பதிவிடுவதொடு மட்டும் நின்றுவிட்டேன். பின்னூட்டம் கூட இடுவதில்லை. காலப்போக்கில்தான் இவைகளை அறிந்து கொண்டேன். (பல மாதங்களின்பின்


எனது முதலாவது பதிவு நம்பிக்கை எனும் தலைப்பிலே நம்பிக்கை பற்றி எழுதி இருந்தேன். அதற்கு முதலாவது பின்னுட்டத்தை நண்பர் பிரபாவே இட்டிருந்தார். தொடர்ந்து இரண்டு மூன்று இடுகையின்பின் நண்பி சிந்து இரண்டாவது பின்னூட்டத்தை இட்டதோடு எனது அனைத்து இடுகைகளுக்கும் பின்னூட்டமிட்டு உச்சாகப் படுத்தினர். அப்போது சக்கரை சுரேஷ் கலை, சசி (இருவரும் இன்று பதிவிடுவது குறைவு ஏனோ தெரியவில்லை) மற்றும் பிரிவையும் நேசிக்கும் காயத்திரியும் தொடர்ந்து பின்னூட்டமிட்டு உச்சாகப்படுத்தினர். நான் பதிவிடுவதோடு நின்றுவிட்டேன் பினூட்டமிடுவதுமில்லை திரட்டிகளில் இணைப்பதுமில்லை.


பின்னூட்டமிடுதல் மற்று திரட்டிகளில் இணைப்பது தொடர்பாக அறிந்து செயலில் இறங்கியபோது பல நண்பர்கள் கிடைத்தார்கள். எனது வலைப்பதிவும் தொலைந்தது. இன்று புதிய வலைப்பதிவில் பதிவிடுகி்றேன். நான் ஆரம்ப காலங்களில் லோஷன் அண்ணாவின் வலைப்பதிவை ஒரு தடவை அல்ல பல தடவைகள் ஒரு இடுகையை வாசிப்பேன். எப்படி எழுதப்பட்டிருக்கின்றது என்ற நுணுக்கங்களை அறிவதற்காக. அத்தோடு எவருக்குமே பின்னூட்டமிடுவதில்லை என் கருத்துக்கள் தவறானவைகளாக அமையுமோ என்ற எண்ணத்தில்.


எனது பதிவிலே சில இடுகைகள் விவாதங்களாக இடம் பெறுகின்றன. நான் மொக்கைப்பதிவுகளை முடிந்தவரை இடுகையிடுவதில்லை. அதேபோல் இதுவரை சினிமா, விழையாட்டுப்பதிவுகள் இடுகையிடவில்லை. தெரியாது என்றல்ல இனிவரும் காலங்களில் எதிர் பார்க்கலாம்.


எனக்கு கிடைக்கும் வாக்குகள் பின்னூட்டங்கள் மூலம் சந்தோசமடையும் நான் அண்மையில் எனது ஒரு இடுகையினால் கடும் கவலை அடைந்தேன். திருமணத்தின் பின் ஒரே பெண்ணைப் பார்த்தபடி அலுப்படிக்காமல் மெயின்டெய்ன் பண்ணுவது எப்படி? எனும் இடுகையினை வெளியிட்டுவிட்டு மறுகணமே ஏன் வெளியிட்டேன் என்று கவலைப்பட்டதுண்டு. எனக்கு வழமையாக பினூட்டமிடுபவர்கள் பின்னூட்டமிடவில்லை பின்னூட்டமிட்டாலும் இது என் பதிவா என்று கேட்டே பின்னூட்டமிட்டனர். நான் அதனை ஒரு நகைச் சுவைப் பதிவாகவே இட்டிருந்தேன். அந்த இடுகைக்கான பார்வையாளர்களின் வருகைதான் எனது வலைப்பதிவுக்கு அதிகமாகக் கிடைத்த வருகை என்பது வேறு விடயம். (அந்த இடுகையினை நீக்கி விடுவோம் என்றுகூட நினைத்ததுண்டு)


அனானிகளால் பல தகாத வார்த்தைகளால் தாக்கப்பட்டிருக்கிறேன். அத்தோடு விரட்டப்பட்டுகூட இருக்கிறேன். இவைகள் என் எழுத்துக்களின் வேகத்தை அதிகரித்ததே தவிர குறைக்கவில்லை.


இன்று உலகெங்கும் நல்ல பல நண்பர்கள் கிடைத்திருக்கின்றார்கள். எனது ஆக்கங்களுக்கு ஒரு அங்கிகாரம் கிடைக்கின்றன என்று நினைக்கும்போது சந்தோசமடைகின்றேன். என் குடும்ப சுழலில் தனிமையை உணர்ந்த நான் எனது தனிமையினை இந்த வலையுலகம் நீக்கியிருப்பதாக உணர்கிறேன்.


இன்று சில பிரபல இணையத் தளங்களிலே எனது ஆக்கங்கள் முதல் பக்கத்திலேயே பிரசுரிக்கப்பட்டு எனது வலைப்பதிவுக்கு தொடுப்பு வழங்கப்பட்டிருக்கும்போது. மிகவும் சந்தோசப்படுகிறேன். எனது தமிழ் மொழி தொடர்பான இடுகைகள் சில தமிழ் மொழி தொடர்பான இணையத் தளங்களிலே இன்றும் முதல் பக்கத்திலே பிரசுரிக்கப்பட்டிருக்கின்றன. அவர்களுக்கும் எனது நன்றிகள்.


அண்மையில் நான் தமிழுயிர் எனும் வலைப்பதிவுக்குச் சென்றேன் அங்கே என் பதிவுகள் தமிழுயிர் தெரிவுகள் எனும் தலைப்பிலே தொடுப்பு வழங்கப்படிருப்பதை அறிந்து ஆச்சரியமடைந்தேன். தமிழுயிர் வலைப்பதிவுக்கும் எனது நன்றிகள். பல நண்பர்கள் எனது வலைப்பதிவுக்கு தொடுப்பு வழங்கி இருக்கின்றனர். தமிழுயிர் என்பது எனது தமிழ் மொழி தொடர்பான ஆக்கங்களுக்கு தொடுப்பு வழங்கியிருக்கின்றது.


எனக்கு வலைப்பதிவு மூலமாக பல துறை சார்ந்த நண்பர்கள் கிடைத்திருக்கின்றனர். அதிலும் குறிப்பாக தமிழ் மொழியோடும், தமிழ் இலக்கியத்தோடும் அதிக பற்றுக்கொண்ட எனக்கு தமிழ் இலக்கியத்துறை சார்ந்த பல நண்பர்கள் கிடைத்திருக்கின்றார்கள். அவர்கள் எனக்கு தங்கள் கருத்துக்கள் மூலம் உச்சாகத்தினை வழங்கி வருகின்றனர். அதிலே நண்பர்கள் முனைவர். இரா. குணசீலன், சுப. நற்குணம் மற்றும் முனைவர் சி.கல்பனா ஆகியோர் பின்னூட்டமிடுவது மாத்திரமல்லாமல் என்னை உச்சாகப் படுத்தியும் வருகின்றனர். அவர்களுக்கும் நன்றிகள்.


லோஷன் அண்ணாவைப் பொறுத்தவரை என்னை மட்டுமல்ல திறமை எங்கே இருக்கின்றதோ அவர்களை பாராட்டி உசசாகப்படுத்தாமல் விடமாட்டார். ஆரம்ப காலங்களில் அவரது பினூட்டமொன்று கிடைக்காதா என்று பல எதிர்பார்ப்புக்களோடு இருந்திருக்கின்றேன். இன்று எனது இடுகைகளை பாராட்டி பின்னூட்டமிடுவதோடு அவர் எனக்கு மின்னஞ்சல் அனுப்பும்போது அன்பு தம்பி என்று என்னை விழிக்கும் போது மட்டற்ற மகிழ்வடைகிறேன். (அறிவிப்புத்துறையில் அவரது குரல்களால் ஈர்க்கப்பட்டவன் என்பது வேறு விடயம்) லோஷன் அண்ணாவுக்கும் எனது நன்றிகள்.


எனக்கு அண்மையில் கிடைத்த நண்பரானாலும் அனானிகளால் தாக்கப்படும் நண்பர் சதீஸ் நல்ல நண்பராக தொடர்கின்றார்.

சில நண்பர்கள் எனது அத்தனை இடுகைகளுக்கும் பின்னுட்டமிட்டு உச்சாகப்படுத்தி வருகின்றனர் அவர்களிலே வால்பையன் என்னோடு சில விடயங்களிலே முரண்பட்டாலும் என்னோடு நல்ல நண்பர் எல்லோரையும் உச்சாகப்படுத்தும் ஒருவர். மற்றும் நாட்புடன் ஜமால், ஹேமா, மேனகா சத்தியா,ஞானசேகரன், பிரியமுடன் வசந்த், நிலாமதி, சுசி , காயத்திரி, சக்கரை சுரேஷ்,சத்தியா, தமிழரசி, ஜெகநாதன், ஸ்டார்ஜன், அக்பர், குறை ஒன்றுமில்லை ராஜ் என்று பல வெளிநாட்டு நண்பர்கள் என் எழுத்துக்களுக்கு உறமுஉட்டி வருகின்றனர். (பல நண்பர்கள் இருக்கின்றனர் பெயர் குறிப்பிடாத நண்பர்கள் மன்னிக்கவும்


கானா பிரபா அண்ணா மற்றும் டொன்லி போன்றோர் அடிக்கடி வந்து என்னை உச்சாகப்படுத்டுவோர் அவர்களுக்கும் நன்றிகள்.


இலங்கை நண்பர்கள் எனும்போது சுபாங்கன். சப்ராஸ், யாழினி போன்றோர் அன்றுமுதல் இன்றுவரை உச்சாகப்படுத்திவருகின்றனர் அவர்களுக்கும் நன்றிகள்.


இலங்கைப் பதிவர் சந்திப்பின்பின் பல நண்பர்கள் கிடைத்திருக்கின்றனர். நான் சந்திப்பில் கலந்துகொள்ளமுடியவில்லை என்றாலும் பல நல்ல நண்பர்கள் கிடைத்திருக்கின்றனர். குறிப்பாக புல்லட்,ஆதிரை, வந்தி, யோகா ஆகியோர் நல்ல நண்பர்களாக இருப்பதோடு எமது நட்பு தொடர்கின்றது. இவர்களோடு கோபி, மருதமூரான், இலங்கன். வேந்தன், அமுதன், மாயா, தங்க முகுந்தன், சுபானு என்று ஒரு கூட்டமே இருக்கிறது.
இன்னும் பல நல்ல ஆக்கங்களோடு உங்களை சந்திப்பேன் என்ற நம்பிக்கை இருக்கின்றது. உங்கள் ஆதரவு என்னை உச்சாகப்படுத்தட்டும்.

Post Comment


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

49 comments: on "எவனோ ஒருவன் உங்களில் ஒருவனாய்."

வந்தியத்தேவன் said...

சதத்திற்க்கு வாழ்த்துக்கள்

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

100 வது பதிவுக்கு எனது 100 பூங்கொத்துக்கள்

சுசி said...

வாழ்த்துக்கள் சந்ரு.
உங்கள் முயற்சியை பாராட்டுகின்றேன்.

நீங்கள் குறிப்பிட்ட பதிவு பற்றி நானும் இது சந்ரு பதிவா என்று கேட்டிருந்தேன். அது உங்கள் மனதை பாதித்திருந்தால் மன்னிக்கவும். எப்போதும் சீரியஸ் விடயங்கள் இல்லாமல் இடையில் விளம்பரம் போல் சில விடயங்களையும் எழுதினால் நல்லது என்பது என் கருத்து....
நாங்களும் ரிலாக்சாக படித்து இது சந்ரு பதிவுதானான்னு கேட்டுட்டு போலாம் இல்லையா...:)))

Sinthu said...

வாழ்த்துக்கள்.. என்னை உங்கள் பதிவில் சம்பந்தப் படுத்தியமைக்கு நன்றிகள் அண்ணா..
இன்னும் எழுதுங்க, வாசிக்கலாம்..

Subankan said...

சதத்திற்கு வாழ்த்து(க்)கள். அந்த சுனாமி எச்சரிக்கை இலங்கைக்கானது அல்ல.

வேந்தன் said...

100 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்.

முரளிகுமார் பத்மநாபன் said...

சந்துரு வாழ்த்துக்கள், 100வது பதிவிற்க்கும் உங்கள் தொடர்முயற்ச்சிக்கும்.

எவனோ ஒருவன் said...

வாழ்த்துக்கள் சந்ரு.
தலைப்பு நமக்கு நல்லா பொருந்தும்போல இருக்கே!

சந்ரு said...

//வந்தியத்தேவன் கூறியது...
சதத்திற்க்கு வாழ்த்துக்கள்//வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றிகள்

நிலாமதி said...

பாராடுக்கள் சந்துரு ..இது நூறாவது பதிவுமட்டு மல்ல உங்களை வளர்த்தெடுத்த , தாய் நிலம்,இந்த வலைப்பதிவு .மேலும் பல பதிவுகள் இட்டு , இன்றும் ஒரு சில் எழுது பிழைகள் உண்டு . கவனத்திற்கொண்டு மேலும் வளர என் வாழ்த்துக்கள். நிலாமதி அக்கா.

சந்ரு said...

//Starjan ( ஸ்டார்ஜன் ) கூறியது...
100 வது பதிவுக்கு எனது 100 பூங்கொத்துக்கள்//


வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றிகள்

உங்கள் தோழி கிருத்திகா said...

வாழ்த்துக்கள் ....... 100 இன்னும் வளர்ந்து 1000,10000 என போய்க்கொண்டே இருக்கட்டும்...
குட் லக் சந்த்ரு

சந்ரு said...

//சுசி கூறியது...
வாழ்த்துக்கள் சந்ரு.
உங்கள் முயற்சியை பாராட்டுகின்றேன்.

நீங்கள் குறிப்பிட்ட பதிவு பற்றி நானும் இது சந்ரு பதிவா என்று கேட்டிருந்தேன். அது உங்கள் மனதை பாதித்திருந்தால் மன்னிக்கவும். எப்போதும் சீரியஸ் விடயங்கள் இல்லாமல் இடையில் விளம்பரம் போல் சில விடயங்களையும் எழுதினால் நல்லது என்பது என் கருத்து....
நாங்களும் ரிலாக்சாக படித்து இது சந்ரு பதிவுதானான்னு கேட்டுட்டு போலாம் இல்லையா...:)))//உங்களால் என் மனம் பாதிக்கவில்லை. அதிலே சில விடயங்களை ஏன் பதிவிட்டேன் என்று கவலைப்பட்டேன்.


வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றிகள்

சந்ரு said...

//Sinthu கூறியது...
வாழ்த்துக்கள்.. என்னை உங்கள் பதிவில் சம்பந்தப் படுத்தியமைக்கு நன்றிகள் அண்ணா..
இன்னும் எழுதுங்க, வாசிக்கலாம்..//அன்று முதல் இன்றுவரை என்னை உச்சாகப் படுத்தும் உங்களை மறந்துவிடக் கூடாதல்லவா சிந்து...

வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றிகள்

சந்ரு said...

//Subankan கூறியது...
சதத்திற்கு வாழ்த்து(க்)கள். அந்த சுனாமி எச்சரிக்கை இலங்கைக்கானது அல்ல.//

இங்கே சுனாமி என்று பரபரப்பாக இருந்ததோடு ஒலிபெருக்கியிலும் அறிவிக்கப் பட்டது சுனாமி வரலாம் அவதானமாக இருக்கும்படி.

வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றிகள்

சந்ரு said...

//வேந்தன் கூறியது...
100 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்.//


வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றிகள்

சந்ரு said...

//முரளிகுமார் பத்மநாபன் கூறியது...
சந்துரு வாழ்த்துக்கள், 100வது பதிவிற்க்கும் உங்கள் தொடர்முயற்ச்சிக்கும்.//வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றிகள்

தொடருங்கள்...

சந்ரு said...

//எவனோ ஒருவன் கூறியது...
வாழ்த்துக்கள் சந்ரு.
தலைப்பு நமக்கு நல்லா பொருந்தும்போல இருக்கே!//ஆமா ரொம்பவே பொருத்தமாகத்தான் இருக்கிறது. அடிக்கடி நீங்களே பயன்படுத்தலாம்போல...

வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றிகள்

தொடருங்கள்...

ஆதிரை said...

வாழ்த்துக்கள் சந்ரு...

சந்ரு said...

//நிலாமதி கூறியது...
பாராடுக்கள் சந்துரு ..இது நூறாவது பதிவுமட்டு மல்ல உங்களை வளர்த்தெடுத்த , தாய் நிலம்,இந்த வலைப்பதிவு .மேலும் பல பதிவுகள் இட்டு , இன்றும் ஒரு சில் எழுது பிழைகள் உண்டு . கவனத்திற்கொண்டு மேலும் வளர என் வாழ்த்துக்கள். நிலாமதி அக்கா.//

என்னை நல்ல கருத்துக்களால் ஊக்கப்படுத்தும் ஒருவர் நீங்கள். அவசரமாக பதிவிட்டேன் எழுத்துப்பிழைகள் இருக்கின்றன திருத்துகிறேன்.

வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றிகள்

சந்ரு said...

//உங்கள் தோழி கிருத்திகா கூறியது...
வாழ்த்துக்கள் ....... 100 இன்னும் வளர்ந்து 1000,10000 என போய்க்கொண்டே இருக்கட்டும்...
குட் லக் சந்த்ரு//


வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றிகள்

தொடருங்கள்...

சந்ரு said...

//ஆதிரை கூறியது...
வாழ்த்துக்கள் சந்ரு...//வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றிகள்

பிரியமுடன்...வசந்த் said...

100 வது இடுகைக்கு வாழ்த்துக்கள் சந்ரு...

மேலும் பல இடுகைகள் எழுதி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்

ஸ்ரீராம். said...

நூறாவது இடுகைக்கு வாழ்த்துக்கள்.

Mrs.Menagasathia said...

100 வது இடுகைக்கு வாழ்த்துக்கள் சந்ரு...

மேலும் பல இடுகைகள் எழுதி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்!!
ரிப்பிட்ட்ட்ட்ட்......

இன்னும் நல்ல பல விஷயங்கள் எழுதுங்கள் சந்ரு.உங்களின் தமிழ் எழுத்துநடை பிடிக்கும்.

இப்போழுது என் மகள் நடக்காஅரம்பித்துள்ளதால் ப்ளாக் பக்கம் வரமுடியல.பல இடுகைகள்,பின்னுட்டம் எதுவும் செய்யமுடியவில்லை.எப்படியாவது 1 மணிநேரமாவது ஒதுக்கி சில இடுகைகளைப் படிக்கிறேன்.நன்றி சந்ரு!!

Anonymous said...

100 ஆவது பதிவிற்கு வாழ்த்துகள்.

ஜெஸ்வந்தி said...

நூறாவது இடுகைக்கு வாழ்த்துக்கள்.

பிரபா said...

சதமடித்த சந்ருவுக்கு வாழ்த்துக்கள்,
வலையுலகில் உற்சாக படுத்தியவர்கள் நிறைய பேர் இருந்தாலும்,
மிக விரைவாக கற்று கொண்டவர் , சந்ரு என்பதில் எனக்கு எந்த விதமான மாற்று கருத்துக்களும் இல்லை.
வாழ்த்துக்கள் சந்ரு தொடரட்டும் ................

Pavi said...

வாழ்த்துக்கள் அண்ணா.

கனககோபி said...

100 ஆவது பதிவிற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
ஆனால் இந்த 100 ஈவது பதிவு உங்கள் வேகத்திற்கு 'ஏதோ சாதித்துவிட்டோம்' என்று எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தாமல் '100வது பதிவு இடுகையில் எனக்கு வாழ்த்துத் தெரிவிக்க இத்தனை நண்பர்கள இருக்கிறார்களே, அவர்களுக்காக தொடர்ந்து எழுத வேண்டும்' என்ற எண்ணத்தை ஏற்படுத்தி தொடர்ந்து உங்கள் பாணியிலேயே எழுதுங்கள்...

தொடர்ந்து எழுத என் வாழ்த்துக்கள்...

ராமலக்ஷ்மி said...

நூறாவது பதிவில் முதன்முறையாக உங்கள் வலைப்பூவுக்குள் நுழைகிறேன் பூங்கொத்துடன்.

இந்தப் பதிவே நீங்கள் வலையுலகில் கடந்த வந்த பாதையையும் கதைபோல சொல்லி விட்டது.

இன்னும் பலசதம் காண என் வாழ்த்துக்கள்!

யோ வாய்ஸ் (யோகா) said...

சதத்திற்கு வாழ்த்துக்கள் சந்ரு...

இலங்கையில் உள்ள வெகு குறைவான சீரியஸ்பதிவர்களில் நீங்களும் ஒருவர். தொடர்ந்து எழுதுங்கள், வாசிக்க நாங்கள் இருக்கிறோம்.

இறக்குவானை நிர்ஷன் said...

சதத்துக்கு வாழ்த்துக்கள்.

படைப்புகள் தொடரட்டும்.
காலச்சுவடுகளைத் தாண்டி சாதனைகள் படைப்போம். சாதனைகளைச் சேர்த்து சகாப்தம் செய்வோம்.

சந்ரு said...

//பிரியமுடன்...வசந்த் கூறியது...
100 வது இடுகைக்கு வாழ்த்துக்கள் சந்ரு...

மேலும் பல இடுகைகள் எழுதி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்//


வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றிகள்

சந்ரு said...

//ஸ்ரீராம். கூறியது...
நூறாவது இடுகைக்கு வாழ்த்துக்கள்.//
வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றிகள்

சந்ரு said...

//Mrs.Menagasathia கூறியது...
100 வது இடுகைக்கு வாழ்த்துக்கள் சந்ரு...

மேலும் பல இடுகைகள் எழுதி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்!!
ரிப்பிட்ட்ட்ட்ட்......

இன்னும் நல்ல பல விஷயங்கள் எழுதுங்கள் சந்ரு.உங்களின் தமிழ் எழுத்துநடை பிடிக்கும்.

இப்போழுது என் மகள் நடக்காஅரம்பித்துள்ளதால் ப்ளாக் பக்கம் வரமுடியல.பல இடுகைகள்,பின்னுட்டம் எதுவும் செய்யமுடியவில்லை.எப்படியாவது 1 மணிநேரமாவது ஒதுக்கி சில இடுகைகளைப் படிக்கிறேன்.நன்றி சந்ரு!!//

வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றிகள்

சந்ரு said...

//♥ தூயா ♥ Thooya ♥ கூறியது...
100 ஆவது பதிவிற்கு வாழ்த்துகள்.//

வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றிகள்

சந்ரு said...

//ஜெஸ்வந்தி கூறியது...
நூறாவது இடுகைக்கு வாழ்த்துக்கள்.//


வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றிகள்

சந்ரு said...

//பிரபா கூறியது...
சதமடித்த சந்ருவுக்கு வாழ்த்துக்கள்,
வலையுலகில் உற்சாக படுத்தியவர்கள் நிறைய பேர் இருந்தாலும்,
மிக விரைவாக கற்று கொண்டவர் , சந்ரு என்பதில் எனக்கு எந்த விதமான மாற்று கருத்துக்களும் இல்லை.
வாழ்த்துக்கள் சந்ரு தொடரட்டும்//வலைப்பதிவு மட்டுமல்ல எந்த விடயத்தையும் விரைவாக கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆதங்கம் இருக்கின்றது. தேடல் அதிகம் பிராபா அவ்வளவுதான்

வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றிகள்

சந்ரு said...

//Pavi கூறியது...
வாழ்த்துக்கள் அண்ணா.//


வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றிகள்

சந்ரு said...

//கனககோபி கூறியது...
100 ஆவது பதிவிற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
ஆனால் இந்த 100 ஈவது பதிவு உங்கள் வேகத்திற்கு 'ஏதோ சாதித்துவிட்டோம்' என்று எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தாமல் '100வது பதிவு இடுகையில் எனக்கு வாழ்த்துத் தெரிவிக்க இத்தனை நண்பர்கள இருக்கிறார்களே, அவர்களுக்காக தொடர்ந்து எழுத வேண்டும்' என்ற எண்ணத்தை ஏற்படுத்தி தொடர்ந்து உங்கள் பாணியிலேயே எழுதுங்கள்...

தொடர்ந்து எழுத என் வாழ்த்துக்கள்...//


இன்னும் நல்ல பல விடயங்களை எழுதவேண்டும் என்ற ஆதங்கம் இருக்கின்றது.... நல்ல விடயங்களை தருவேன் என்ற நம்பிக்கையும் இருக்கிறது.


வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றிகள்

சந்ரு said...

//ராமலக்ஷ்மி கூறியது...
நூறாவது பதிவில் முதன்முறையாக உங்கள் வலைப்பூவுக்குள் நுழைகிறேன் பூங்கொத்துடன்.

இந்தப் பதிவே நீங்கள் வலையுலகில் கடந்த வந்த பாதையையும் கதைபோல சொல்லி விட்டது.

இன்னும் பலசதம் காண என் வாழ்த்துக்கள்!//

வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றிகள்

சந்ரு said...

//யோ வாய்ஸ் (யோகா) கூறியது...
சதத்திற்கு வாழ்த்துக்கள் சந்ரு...

இலங்கையில் உள்ள வெகு குறைவான சீரியஸ்பதிவர்களில் நீங்களும் ஒருவர். தொடர்ந்து எழுதுங்கள், வாசிக்க நாங்கள் இருக்கிறோம்.//


உங்கள் எதிர்பார்ப்பு வீண்போகாது எதிர் பார்த்திருங்கள்...

வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றிகள்

சந்ரு said...

//இறக்குவானை நிர்ஷன் கூறியது...
சதத்துக்கு வாழ்த்துக்கள்.

படைப்புகள் தொடரட்டும்.
காலச்சுவடுகளைத் தாண்டி சாதனைகள் படைப்போம். சாதனைகளைச் சேர்த்து சகாப்தம் செய்வோம்.//


வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றிகள்

வால்பையன் said...

சதமடித்தத்ற்கு வாழ்த்துக்கள் தல!

வால்பையன் said...

//சில நண்பர்கள் எனது அத்தனை இடுகைகளுக்கும் பின்னுட்டமிட்டு உச்சாகப்படுத்தி வருகின்றனர் அவர்களிலே வால்பையன் என்னோடு சில விடயங்களிலே முரண்பட்டாலும் என்னோடு நல்ல நண்பர் எல்லோரையும் உச்சாகப்படுத்தும் ஒருவர்.//

கருத்துகள் வேறு நட்பு வேறு நண்பரே!
எனது நண்பர்களில் பலர் கடவுள் நம்பிக்கையுள்ளவர்கள்!
இங்கே எழுத்தில் சண்டை நடக்கும், அங்கே வாய் சண்டை நடக்கும்!
ஆனாலும் மறுநாள் வழக்கம் போல் தான்!

புலவன் புலிகேசி said...

வாழ்த்துக்கள் சந்ரு.

சந்ரு said...

//வால்பையன் கூறியது...
//சில நண்பர்கள் எனது அத்தனை இடுகைகளுக்கும் பின்னுட்டமிட்டு உச்சாகப்படுத்தி வருகின்றனர் அவர்களிலே வால்பையன் என்னோடு சில விடயங்களிலே முரண்பட்டாலும் என்னோடு நல்ல நண்பர் எல்லோரையும் உச்சாகப்படுத்தும் ஒருவர்.//

கருத்துகள் வேறு நட்பு வேறு நண்பரே!
எனது நண்பர்களில் பலர் கடவுள் நம்பிக்கையுள்ளவர்கள்!
இங்கே எழுத்தில் சண்டை நடக்கும், அங்கே வாய் சண்டை நடக்கும்!
ஆனாலும் மறுநாள் வழக்கம் போல் தான்!

சதமடித்தத்ற்கு வாழ்த்துக்கள் தல!//

வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றிகள்

சந்ரு said...

//புலவன் புலிகேசி கூறியது...
வாழ்த்துக்கள் சந்ரு.//


வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றிகள்

Post a Comment