Saturday, 19 September 2009

திருமணத்தின் பின் ஒரே பெண்ணைப் பார்த்தபடி அலுப்படிக்காமல் மெயின்டெய்ன் பண்ணுவது எப்படி?

நம்ம பதிவுலக நண்பர் புல்லட் அண்மையில திடிரெண்டாப்போல் வாழ்க்கையும் வெறுமையும் - கொஞ்சம் சீரியசாய் எனும் ஒரு பதிவைப்போட்டு விட்டார். எல்லோரையும் சிரிக்க வைக்கிறவரே இவருக்கு என்ன நடந்ததெண்டு எல்லோருக்குமே ஒரே குழப்பம். எல்லோரும் அவருக்கு ஆறுதல் சொன்னதோடு ஆறுதல் சொல்லி பலர் பதிவிட்டும் விட்டனர்.


இப்பதான் புரியிறது அந்தப்பதிவு எதக்காகப்போடப்பட்டதெண்டு ஒன்றுமில்லை நம்ம புல்லட்டுக்கு கல்யாண ஆசை வந்துவிட்டது. (அவருக்கு இரண்டு தசாப்தங்களுக்குமுன் கல்யாண ஆசை வந்திருக்கவேண்டும் என்ன செய்வது தள்ளாடும் வயசில கல்யாண ஆசை வந்துவிட்டது.)


திருமணத்தின் பின் ஒரே பெண்ணைப்பார்த்தபடி அலுப்படிக்காமல் மெயின்டெய்ன் பண்ணுவது எப்படி? ;-)
{நமக்கெல்லாம் நாலு நாளைக்கொருக்கா வோல் பேப்பர மாத்தணும்.. இந்த வள்ளலில கலியாணம் சரிப்பட்டு வருமா? பீக் கொஸ்யன்க்கு ஆன்சர் தேடிட்டிருக்கோம்


என்று சொன்னதோடு அவருக்கு ஒரு நல்ல தீர்வு தரும்படியும் கேட்டிருந்தார்.


இதற்கான தீர்வினைச் சொல்லும்படி கேட்டிருந்தார் . நண்பருக்கு உதவி செய்ய வேண்டுமே என்ற நோக்கோடு உடனடியாக நம்ம சங்கத்தக்கூட்டி (என்ன சங்கமென்று கேட்காதிங்க சங்கத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை) உடனடியாக ஆராய்ந்து அவரது பிரச்சனைக்கான தீர்வுகள் ஆராயப்பட்டன.

திருமணத்தின் பின் ஒரே பெண்ணைப்பார்த்தபடி அலுப்படிக்காமல் மெயின்டெய்ன் பண்ணுவது எப்படி ?


எங்களது சங்கத்தால் அவருக்குக் கொடுக்கப்படும் ஆலோசனைகள் இதோ...


1. மனைவியை அடிக்கடி அழகுக்கலை நிலையத்துக்கு அனுப்பவேண்டும்.


2. மனைவி பாட்டியானாலும் நாகரிக ஆடைகளை எப்பொழுதும் அணியவேண்டும். உதாரணமாக தொடை மற்றும் ஏனைய கண்ணுக்குகுளிர்ச்சியைத் தரக்கூடிய, உடற்பாகங்களை வேளிக்காட்டக்கூடிய ஆடைகளை அணிய வேண்டும்.


3. நீங்கள் அதிகம் விரும்பி ரசிக்கின்ற நடிகை நடித்து புதிதாக வெளிவருகின்ற படங்களிலே அந்த நடிகை எப்படி கவர்ச்சி காட்டி நடித்திருக்கின்றாரோ அதேபோல் உங்கள் மனைவியையும் கவர்ச்சியாக உடை மற்றும் ஏனைய நாகரிகச் செயற்பாடுகளிலும் ஈடுபடச் செய்தல்.


4. அடிக்கடி உங்கள் கணனிக்கு மாற்றுகின்ற வோல் பேபர்களில் அந்த நடிகைகள் எப்படி இருக்கிறார்களோ அதேபோல் உங்கள் மனைவியையும் போட்டோ எடுத்து உங்கள் கணனிக்கு இந்த போட்டோக்களை மாற்றிக்கொள்ளலாம்.

5. பாட்டிமாரை (அறுபது வயதுக்கு மேற்பட்டவர்களை) நண்பிகளாக வைத்துக்கொள்வதோடு அடிக்கடி அவர்களைச் சந்தித்து பல மணி நேரம் பொழுதைக்கழிக்க வேண்டும். (எந்த ஒரு இளம் நண்பிகளும் இருக்கக்கூடாது.)

6. தன்னைவிட இருபது வயது குறைந்த பெண்ணை திருமனை செய்யலாம்.(மனைவியை நீங்கள் எப்போதும் பார்த்துக்கொண்டு இருக்கலாம் மனைவி உங்களைவிட வேறு ஒருவரைப் பார்த்தால் அதற்கு நாங்கள் பொறுப்பல்ல)

7. நடிகைகளைப்பற்றி பேசுகின்ற லோஷன் போன்றோரின் அல்லது நடிகைகளின் அந்தமாதிரிப்படங்களின் களஞ்சியமாக இருக்கின்ற வந்தி போன்றோரின் வலைப்பதிவுகளுக்கு போவதைத் தவிர்த்து சந்ரு போன்றோரின் நல்ல வலைப்பதிவுகளுக்கு அடிக்கடி போய் வரலாம்.

8. தினமும் பின்னேரங்களில் ஆதிரை போன்றோருடன் பெண்கள் அதிகமாக நடமாடும் Majestic City , போன்ற இடங்களுக்கு சென்று பெண்களோடு சேட்டை செய்வதனைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும். வேண்டுமானால் முதியோர் இல்லங்களுக்குப் போய் வரலாம்.

9. உங்கள் அலுவலகத்தில் இளம் பெண்கள் ஆண்களைப்போல் ஆடை அணியவேண்டும்என்ற கொள்கையினைக்கொண்டு வரலாம். (இதன் மூலம் பெண்களை பார்ப்பதனால் உங்களுக்கு வரும் பெண்கள் மீதான மோகத்தினைத் தவிர்த்துக் கொள்ளலாம்.)

10. மனைவிமீது வெறுப்பு வரும்போது வேறொரு மனைவியை மாற்றிக்கொள்ளலாம். (இதனால் மனைவிமீது வெறுப்பின்றி புது மனைவியோடு சந்தோசமாக இருக்கலாம் இங்கு எத்தனை மனைவி என்பது முக்கியமானதல்ல மனைவியோடு சந்தோசமாக இருப்பதே முக்கியத்துவப்படுத்தப்படுகின்றது.)

இதனைக் கடைப்பிடித்தால் பெண்கள் மீதான உங்கள் மோகம் குறைவடைந்து உங்கள் மனைவிமீது அதிகம் அன்பு, ஆசை வரும்.

இது போன்ற ஆலோசனைகள் தேவைப்படுவோர் எம்மைத் தொடர்பு கொள்ளவும்.

Post Comment


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

30 comments: on "திருமணத்தின் பின் ஒரே பெண்ணைப் பார்த்தபடி அலுப்படிக்காமல் மெயின்டெய்ன் பண்ணுவது எப்படி?"

புல்லட் said...

அருமயான பதிவு அழகான பதில்கள்..உங்கள் பதில்களை தனித்தனியே ஆராய்வோம்..

//1. மனைவியை அடிக்கடி அழகுக்கலை நிலையத்துக்கு அனுப்பவேண்டும்.//
ஒருக்கா மேக்கப் செய்ய 3000 ரூபா... மாதம் ஒரு 10 நாள் செய்தால் 30000 ருபா... இப்பிடியே போனால் நாமென்ன கஞ்சியா குடிப்பது..? ஆகவே மாதம் ஒரு 50000 ருபா மேக்கப் செலவுக்கு வட்டி வருவது போல சீதனத்தை உயர்த்த வேண்டும்.. அப்படித்தானே சந்ரு? சபாஷ்...
ஆகவே 3.1+0.6=3.7 என்று கணக்கு வருதே?//2. மனைவி பாட்டியானாலும் நாகரிக ஆடைகளை எப்பொழுதும் அணியவேண்டும். உதாரணமாக தொடை மற்றும் ஏனைய கண்ணுக்குகுளிர்ச்சியைத் தரக்கூடிய, உடற்பாகங்களை வேளிக்காட்டக்கூடிய ஆடைகளை அணிய வேண்டும். //

ஹிஹி ! பாட்டிமார் அப்பிடி எல்லாம் போட்டால் உங்கட கண்ணுக்கு குளிர்ச்சியாவா இருக்கிறது? என்ன கொடுமை பப்ளிக் இது?


//3. நீங்கள் அதிகம் விரும்பி ரசிக்கின்ற நடிகை நடித்து புதிதாக வெளிவருகின்ற படங்களிலே அந்த நடிகை எப்படி கவர்ச்சி காட்டி நடித்திருக்கின்றாரோ அதேபோல் உங்கள் மனைவியையும் கவர்ச்சியாக உடை மற்றும் ஏனைய நாகரிகச் செயற்பாடுகளிலும் ஈடுபடச் செய்தல்.//

உதெல்லாம் நாங்கள் கேட்கத்தேவையில்லையென்று நினைக்கிறேன்.. இபடபத்தைய பெண்டுகள் தாங்களாகவே செய்து கொள்ளுவார்கள்..


//4. அடிக்கடி உங்கள் கணனிக்கு மாற்றுகின்ற வோல் பேபர்களில் அந்த நடிகைகள் எப்படி இருக்கிறார்களோ அதேபோல் உங்கள் மனைவியையும் போட்டோ எடுத்து உங்கள் கணனிக்கு இந்த போட்டோக்களை மாற்றிக்கொள்ளலாம்.//

சுவரில கொழுவலாம்.. பேய்பிசாசு அண்டாது... நான் கதைக்குறது.. கணணி டெஸ்க்டொப்பை பற்றி...

//5. பாட்டிமாரை (அறுபது வயதுக்கு மேற்பட்டவர்களை) நண்பிகளாக வைத்துக்கொள்வதோடு எந்த ஒரு இளம் நண்பிகளும் இருக்கக்கூடாது. //

இதுக்கு அவளயளே பரவாயில்ல..

6. தன்னைவிட இருபது வயது குறைந்த பெண்ணை திருமனை செய்யலாம்.(மனைவியை நீங்கள் எப்போதும் பார்த்துக்கொண்டு இருக்கலாம் மனைவி உங்களைவிட வேறு ஒருவரைப் பார்த்தால் அதற்கு நாங்கள் பொறுப்பல்ல)

இருபது வயசு குறைவெண்டால் அது இப்ப நேசரி போய்க்கிட்டிருக்கும்... அதை யாராவது கட்டித்தருவாங்களா?

//7. நடிகைகளைப்பற்றி பேசுகின்ற லோஷன் போன்றோரின் அல்லது நடிகைகளின் அந்தமாதிரிப்படங்களின் களஞ்சியமாக இருக்கின்ற வந்தி போன்றோரின் வலைப்பதிவுகளுக்கு போவதைத் தவிர்த்து சந்ரு போன்றோரின் நல்ல வலைப்பதிவுகளுக்கு அடிக்கடி போய் வரலாம். //

உண்மைதான்.. உண்மைதான்.. உங்கள் திருவெம்பாவை பதிகங்களை இப்போது தரவிறக்கி கேட்க போகிறேன்..

//8. தினமும் பின்னேரங்களில் ஆதிரை போன்றோருடன் பெண்கள் அதிகமாக நடமாடும் Majestic City , போன்ற இடங்களுக்கு சென்று பெண்களோடு சேட்டை செய்வதனைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும். வேண்டுமானால் முதியோர் இல்லங்களுக்குப் போய் வரலாம்.//

சரி! வந்தால் அங்கு நிச்சயம் உங்களை சந்திக்கிறேன்.. ஏதாவது வாங்கிட்டு வரணுமா?

//9. உங்கள் அலுவலகத்தில் இளம் பெண்கள் ஆண்களைப்போல் ஆடை அணியவேண்டும்என்ற கொள்கையினைக்கொண்டு வரலாம். (இதன் மூலம் பெண்களை பார்ப்பதனால் உங்களுக்கு வரும் பெண்கள் மீதான மோகத்தினைத் தவிர்த்துக் கொள்ளலாம்.) //

ஏற்கனவே அப்படித்தான் வருகிறார்கள்..

//10. மனைவிமீது வெறுப்பு வரும்போது வேறொரு மனைவியை மாற்றிக்கொள்ளலாம். //

கிளைமாக்ஸ் சூப்பர்.. உங்கள் கலியாணம் எப்படி நடக்குதெண்டு நானும் பாத்து விடுகிறேன்..

//இது போன்ற ஆலோசனைகள் தேவைப்படுவோர் எம்மைத் தொடர்பு கொள்ளவும்.//

நீங்கள் நலமாக இருந்தால் சந்திப்போம்.. இப்போதே மகளிர் படை எல்லா நாடுகளிலுமிருந்தும் டிக்கட் புக் செய்கிறது. பார்க்கலாம்...

சந்ரு said...

//புல்லட் கூறியது...


//1. மனைவியை அடிக்கடி அழகுக்கலை நிலையத்துக்கு அனுப்பவேண்டும்.//
ஒருக்கா மேக்கப் செய்ய 3000 ரூபா... மாதம் ஒரு 10 நாள் செய்தால் 30000 ருபா... இப்பிடியே போனால் நாமென்ன கஞ்சியா குடிப்பது..? ஆகவே மாதம் ஒரு 50000 ருபா மேக்கப் செலவுக்கு வட்டி வருவது போல சீதனத்தை உயர்த்த வேண்டும்.. அப்படித்தானே சந்ரு? சபாஷ்...
ஆகவே 3.1+0.6=3.7 என்று கணக்கு வருதே?//


பரவாயில்லை எல்லாம் அறிந்து வைத்திருக்கிங்க.


சீதன விடயத்த நம்ம வந்தியிடம் கேட்டால் எப்படி வாங்கலாம் போன்ற விடயங்களைக் சொல்வார்.

சந்ரு said...

//புல்லட் கூறியது...


//2. மனைவி பாட்டியானாலும் நாகரிக ஆடைகளை எப்பொழுதும் அணியவேண்டும். உதாரணமாக தொடை மற்றும் ஏனைய கண்ணுக்குகுளிர்ச்சியைத் தரக்கூடிய, உடற்பாகங்களை வேளிக்காட்டக்கூடிய ஆடைகளை அணிய வேண்டும். //

ஹிஹி ! பாட்டிமார் அப்பிடி எல்லாம் போட்டால் உங்கட கண்ணுக்கு குளிர்ச்சியாவா இருக்கிறது? என்ன கொடுமை பப்ளிக் இது?//


நீங்க வேறு பெண்களைப்பார்க்காமல் இருந்தால் பாட்டியும் அப்படித்தான் தெரிவார்கள். முயற்சி செய்து பாருங்கள்.

சந்ரு said...

//புல்லட் கூறியது...


//தன்னைவிட இருபது வயது குறைந்த பெண்ணை திருமனை செய்யலாம்.(மனைவியை நீங்கள் எப்போதும் பார்த்துக்கொண்டு இருக்கலாம் மனைவி உங்களைவிட வேறு ஒருவரைப் பார்த்தால் அதற்கு நாங்கள் பொறுப்பல்ல)

இருபது வயசு குறைவெண்டால் அது இப்ப நேசரி போய்க்கிட்டிருக்கும்... அதை யாராவது கட்டித்தருவாங்களா? //இருபது வருடங்களுக்கு முன்னர்தான் நீங்க கல்யாணம் முடிக்கவேண்டிய வயசு என்ன செய்ற தள்ளாடும் வயசில உங்களுக்கு கல்யாண ஆசை வந்திட்டுது. உங்களுக்கு இருபது வயசு பெண் தேடுவதுதான் கஸ்ரமான விடயம். ஐம்பது வயது கிழவிகளே உங்க வயசக் கேட்டா வேணாம் எண்டு சொல்லிவிடுவார்கள்.

சந்ரு said...

//புல்லட் கூறியது...

கிளைமாக்ஸ் சூப்பர்.. உங்கள் கலியாணம் எப்படி நடக்குதெண்டு நானும் பாத்து விடுகிறேன்..//


நான் இப்பதான் சின்னப்பையன். அதுக்கெல்லாம் காலம் இருக்கிறது...

சந்ரு said...

//புல்லட் கூறியது...


//நீங்கள் நலமாக இருந்தால் சந்திப்போம்.. இப்போதே மகளிர் படை எல்லா நாடுகளிலுமிருந்தும் டிக்கட் புக் செய்கிறது. பார்க்கலாம்...//என்னைச் சந்திக்க அவ்வளவு ஆசையாக இருக்கின்றார்களோ... வரட்டும் வரட்டும் வரும்போது ஏதாவது வாங்கி வரச் சொல்லுங்கள்.

Subankan said...

//1. மனைவியை அடிக்கடி அழகுக்கலை நிலையத்துக்கு அனுப்பவேண்டும்.//

நாங்க அனுப்பலேன்னா அவங்க எங்கள அவங்க மாமியார் வீட்டுக்கில்ல அனுப்பிடுவாங்க


//2. மனைவி பாட்டியானாலும் நாகரிக ஆடைகளை எப்பொழுதும் அணியவேண்டும். உதாரணமாக தொடை மற்றும் ஏனைய கண்ணுக்குகுளிர்ச்சியைத் தரக்கூடிய, உடற்பாகங்களை வேளிக்காட்டக்கூடிய ஆடைகளை அணிய வேண்டும். //

ஆகா, பாட்டிமாரக் கூட விட்டுவைக்கமாட்டீங்களோ, இவ்வளவு தெளிவா சொல்லுறீங்க

//3. நீங்கள் அதிகம் விரும்பி ரசிக்கின்ற நடிகை நடித்து புதிதாக வெளிவருகின்ற படங்களிலே அந்த நடிகை எப்படி கவர்ச்சி காட்டி நடித்திருக்கின்றாரோ அதேபோல் உங்கள் மனைவியையும் கவர்ச்சியாக உடை மற்றும் ஏனைய நாகரிகச் செயற்பாடுகளிலும் ஈடுபடச் செய்தல்.
//

இதுக்கு நாங்கதான் செய்யச்சொல்லணுமா?

//4. அடிக்கடி உங்கள் கணனிக்கு மாற்றுகின்ற வோல் பேபர்களில் அந்த நடிகைகள் எப்படி இருக்கிறார்களோ அதேபோல் உங்கள் மனைவியையும் போட்டோ எடுத்து உங்கள் கணனிக்கு இந்த போட்டோக்களை மாற்றிக்கொள்ளலாம்.
//

அதுக்கப்புறம் கணினிய ஓபன் பண்ணவே முடியாதே

//5. பாட்டிமாரை (அறுபது வயதுக்கு மேற்பட்டவர்களை) நண்பிகளாக வைத்துக்கொள்வதோடு அடிக்கடி அவர்களைச் சந்தித்து பல மணி நேரம் பொழுதைக்கழிக்க வேண்டும். (எந்த ஒரு இளம் நண்பிகளும் இருக்கக்கூடாது.)
//

எங்களக் கழட்டிவிட இப்படி ஒரு ஐடியாவா? மறுபடியும் பாட்டீலயே நிக்கறீங்களே, பாத்து


//6. தன்னைவிட இருபது வயது குறைந்த பெண்ணை திருமனை செய்யலாம்.(மனைவியை நீங்கள் எப்போதும் பார்த்துக்கொண்டு இருக்கலாம் மனைவி உங்களைவிட வேறு ஒருவரைப் பார்த்தால் அதற்கு நாங்கள் பொறுப்பல்ல)
//
இருபது வயது குறைந்த பெண்ணைப் பார்த்துக்கொண்டுதான் இருக்கலாம்.

//7. நடிகைகளைப்பற்றி பேசுகின்ற லோஷன் போன்றோரின் அல்லது நடிகைகளின் அந்தமாதிரிப்படங்களின் களஞ்சியமாக இருக்கின்ற வந்தி போன்றோரின் வலைப்பதிவுகளுக்கு போவதைத் தவிர்த்து சந்ரு போன்றோரின் நல்ல வலைப்பதிவுகளுக்கு அடிக்கடி போய் வரலாம்.//

நல்ல விளம்பரம். எத்தினை நாளா யோசிச்சீங்க?

//8. தினமும் பின்னேரங்களில் ஆதிரை போன்றோருடன் பெண்கள் அதிகமாக நடமாடும் Majestic City , போன்ற இடங்களுக்கு சென்று பெண்களோடு சேட்டை செய்வதனைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும். வேண்டுமானால் முதியோர் இல்லங்களுக்குப் போய் வரலாம்.
//

பாத்தீங்களா பாத்தீங்களா, திரும்பவும் பாட்டி ஏரியாவுக்கே வரீங்க


//9. உங்கள் அலுவலகத்தில் இளம் பெண்கள் ஆண்களைப்போல் ஆடை அணியவேண்டும்என்ற கொள்கையினைக்கொண்டு வரலாம். (இதன் மூலம் பெண்களை பார்ப்பதனால் உங்களுக்கு வரும் பெண்கள் மீதான மோகத்தினைத் தவிர்த்துக் கொள்ளலாம்.)
//

உங்க மனசத் தொட்டுச் சொல்லுங்க. அதப் பாத்தா உங்களுக்கு மோகம் எல்லாம் வருமா?


//10. மனைவிமீது வெறுப்பு வரும்போது வேறொரு மனைவியை மாற்றிக்கொள்ளலாம். (இதனால் மனைவிமீது வெறுப்பின்றி புது மனைவியோடு சந்தோசமாக இருக்கலாம் இங்கு எத்தனை மனைவி என்பது முக்கியமானதல்ல மனைவியோடு சந்தோசமாக இருப்பதே முக்கியத்துவப்படுத்தப்படுகின்றது.)
//

இது தலைப்போட முரண்படுதே (திருமணத்தின் பின் ஒரே பெண்ணைப் பார்த்தபடி). ஐடியாவ மாத்துங்கப்பா

மேலே எல்லாம் ச்சும்மா. அருமையான பதிவு. பலருக்கு பயனளித்திருக்கும்.

சந்ரு said...

//Subankan கூறியது...

நாங்க அனுப்பலேன்னா அவங்க எங்கள அவங்க மாமியார் வீட்டுக்கில்ல அனுப்பிடுவாங்க//


பரவாயில்லையே தம்பி ரொம்ப தெளிவாத்தான் இருக்கிறான்.//ஆகா, பாட்டிமாரக் கூட விட்டுவைக்கமாட்டீங்களோ, இவ்வளவு தெளிவா சொல்லுறீங்க//


இளம் பொண்ணுங்களையே பார்க்கக்கூடாது என்றா என்ன செய்ற
இளம் பொண்ணுங்களையே பார்க்கக்கூடாது என்றா என்ன செய்ற இவங்களையாவது பார்த்துத்தான் ஆகவேண்டும். இவங்களைப் பார்த்தாவது நம்ம புல்லட்டுக்கு வெறுப்பு வரவேண்டாமா?

சந்ரு said...

//Subankan கூறியது...

//இருபது வயது குறைந்த பெண்ணைப் பார்த்துக்கொண்டுதான் இருக்கலாம்.//உங்க வயசுக்கு பார்த்துக்கொண்டுதான் இருக்க முடியும். என்ன செய்வது கல்யாணம் பற்றிப்பெசுற வயசு உங்களுக்கு பல வருடங்களுக்கு முன் போட்டுது.


எனது அப்பாவோடதானாம் நீங்க படிச்சதாம் உண்மையா?


//இது தலைப்போட முரண்படுதே (திருமணத்தின் பின் ஒரே பெண்ணைப் பார்த்தபடி). ஐடியாவ மாத்துங்கப்பா//


அதுதானே விதிமுறைய சொல்லிப்போட்டேன்.


(இங்கு எத்தனை மனைவி என்பது முக்கியமானதல்ல மனைவியோடு சந்தோசமாக இருப்பதே முக்கியத்துவப்படுத்தப்படுகின்றது.)//அருமையான பதிவு. பலருக்கு பயனளித்திருக்கும்.//

சந்ரு said...

//Subankan கூறியது...//அருமையான பதிவு. பலருக்கு பயனளித்திருக்கும்.//


உங்களுக்கும் பயனளிச்சு இருக்கென்று சொல்லுங்க...

வேந்தன் said...

//இளம் பெண்கள் ஆண்களைப்போல் ஆடை அணியவேண்டும்என்ற கொள்கையினைக்கொண்டு வரலாம்.//

அண்ணே இந்த கொள்கை கோயிலுக்கும் செல்லுமா....?

சந்ரு said...

//வேந்தன் கூறியது...
//இளம் பெண்கள் ஆண்களைப்போல் ஆடை அணியவேண்டும்என்ற கொள்கையினைக்கொண்டு வரலாம்.//

அண்ணே இந்த கொள்கை கோயிலுக்கும் செல்லுமா....?//


ஆமாம் பொருந்தும் வேந்தரே.... இன்று ஒரு சில இடங்களில் இப்படித்தானே நடக்கின்றது.

Anonymous said...

//இருபது வருடங்களுக்கு முன்னர்தான் நீங்க கல்யாணம் முடிக்கவேண்டிய வயசு என்ன செய்ற தள்ளாடும் வயசில உங்களுக்கு கல்யாண ஆசை வந்திட்டுது. உங்களுக்கு இருபது வயசு பெண் தேடுவதுதான் கஸ்ரமான விடயம். ஐம்பது வயது கிழவிகளே உங்க வயசக் கேட்டா வேணாம் எண்டு சொல்லிவிடுவார்கள்.//

அப்படி போடு அருவாளை... அது சரி 3000 கணக்கு எல்லாம் பெண்களை பிடிக்காத போண்டி அண்ணருக்கு எப்படியப்பு தெரியுமாம்... சரியான ஜொள்ளு பார்டி அண்ணா நீ... ச்ச்சா....

//நடிகைகளைப்பற்றி பேசுகின்ற லோஷன் போன்றோரின் அல்லது நடிகைகளின் அந்தமாதிரிப்படங்களின் களஞ்சியமாக இருக்கின்ற வந்தி போன்றோரின் வலைப்பதிவுகளுக்கு போவதைத் தவிர்த்து சந்ரு போன்றோரின் நல்ல வலைப்பதிவுகளுக்கு அடிக்கடி போய் வரலாம்.//

பலே.. நான் கை தட்டுவது கேட்கிறதா?

//நம்ம புல்லட்டுக்கு கல்யாண ஆசை வந்துவிட்டது. (அவருக்கு இரண்டு தசாப்தங்களுக்குமுன் கல்யாண ஆசை வந்திருக்கவேண்டும் என்ன செய்வது தள்ளாடும் வயசில கல்யாண ஆசை வந்துவிட்டது.)//

நான் கூட அந்த உண்மையை அறிந்த பின் ஒரு ஆக்கம் எழுதினேன். பிறகு ஓரிரண்டு பேரும் அதை உறுதி படுத்தினவை. தலைப்பு: மக்களை ஏமாற்றும் புல்லட்பாண்டி.. ஹி ஹி..

////10. மனைவிமீது வெறுப்பு வரும்போது வேறொரு மனைவியை மாற்றிக்கொள்ளலாம். //

Logic இடிக்குதே..

அது சரி, கணவன்மாரை எப்படி சகிப்பது என்று ஒரு பதிவு போடு என்டு என் நண்பி நச்சரிக்கிறாள். என்னிடம் கேட்டால் ஒரே ஒரு அட்வைஸ் தான். சகிக்கேலாட்டி ஸ்லோ பாய்சன் குடுக்க வேண்டியது தான். எதுக்காக, கஷ்டப்பட்டு சகிக்கோணும்.

Sinthu said...

எல்லாம் நல்ல தான் இருக்கிறது. கடைசியாக "இது போன்ற ஆலோசனைகள் தேவைப்படுவோர் எம்மைத் தொடர்பு கொள்ளவும்." என்று முடித்திருக்கிரீன்களே, யார் அந்த "எம்மை?"

Sinthu said...

"//6. தன்னைவிட இருபது வயது குறைந்த பெண்ணை திருமனை செய்யலாம்.(மனைவியை நீங்கள் எப்போதும் பார்த்துக்கொண்டு இருக்கலாம் மனைவி உங்களைவிட வேறு ஒருவரைப் பார்த்தால் அதற்கு நாங்கள் பொறுப்பல்ல)
//
இருபது வயது குறைந்த பெண்ணைப் பார்த்துக்கொண்டுதான் இருக்கலாம்."
அப்படி என்றால் கொக்குவிலிலோ அல்லது மொன்றடுவவிலோ இரண்டு வயது பொண்ணுங்க சேச்சே குழந்தைகள் யாராவது இருக்கிறாங்களா?

சிந்திக்க விரும்பும் சிலருக்காக...! said...

ஒரு குறிப்பிட்ட வய்திற்கப்புறம், மனைவியைப் ஒரு உடலாகப்பார்க்காமல், ஒரு பெண் நண்பராக, ஆனால் special and intimate, நம்முடனே உறையும் நண்பராக பார்க்கவேண்டும்.

இருவருக்குமிடையில், எப்போது இடைவெளி இருக்கவேண்டும் - மனத்தால் உடலால்.

அவ்விடைவெளி, மதித்து போற்றப்படவேண்டும். ஒருவரை மற்றொருவர் dominate பண்ணவிரும்பக்கூடாது. ஒருவருக்கொருவர் உதவி செய்வது மட்டுமே இருக்கவேண்டும்.

இப்படியிருப்பின் அத்திருமணம் நிலைத்து இன்பம் தரும்.

ஊர்சுற்றி said...

ஹிஹிஹ...

// (எந்த ஒரு இளம் நண்பிகளும் இருக்கக்கூடாது.) // ரொம்ப கஷ்டமாச்சே!

சுசி said...

இது சந்ருவோட பக்கம்தானா??????
வெளங்கும்...

வந்தியத்தேவன் said...

நான் இந்தப் பக்கம் வரவில்லை. நல்ல பொடியன் நான். சந்ருவின் பக்கத்தில் புல்லட் எழுதிய பதிவுபோல் தெரிகின்றது.

ஹேமா said...

சந்ரு,இரண்டு நாளா பாத்துக்கொண்டு இருக்கிறன் உங்கட பதிவை.என்ன சொல்ல எண்டு தெரியேல்ல.இப்பவும் வந்தன் போறன்.

Anonymous said...

சந்துருவின் பதிவா?

சரிங்க வந்தேன் படித்தேன்....

கனககோபி said...

//7. நடிகைகளைப்பற்றி பேசுகின்ற லோஷன் போன்றோரின் அல்லது நடிகைகளின் அந்தமாதிரிப்படங்களின் களஞ்சியமாக இருக்கின்ற வந்தி போன்றோரின் வலைப்பதிவுகளுக்கு போவதைத் தவிர்த்து சந்ரு போன்றோரின் நல்ல வலைப்பதிவுகளுக்கு அடிக்கடி போய் வரலாம். //

ஆகா....
ஒரு கல்லில நிறைய மாங்காய் விழுதே...???
அழகான பதிவு...

யோ வாய்ஸ் (யோகா) said...

//என்ன சங்கமென்று கேட்காதிங்க சங்கத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை//

ஏன் சந்ரு பொய் சொல்லுறீங்க.. வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்கிற பெயரில் நீங்கள் ஒரு சங்கத்தை பதிவு பண்ணி வைத்திக்கிற விடயம் எங்களுக்கு தெரியும்.

யோ வாய்ஸ் (யோகா) said...

பதிவு அருமை. எப்படி எல்லாம் அனுபவமா?

வால்பையன் said...

//மனைவியை அடிக்கடி அழகுக்கலை நிலையத்துக்கு அனுப்பவேண்டும்.//


அங்கிருக்கும் பெண்களை சைட் அடிக்கமாட்டோம் என்பதற்கு என்ன உத்தரவாதம்!

வால்பையன் said...

//உடற்பாகங்களை வேளிக்காட்டக்கூடிய ஆடைகளை அணிய வேண்டும். //

அது நமது தமிழ் கலாச்சாரத்தை சீரழிக்காதா!?

வால்பையன் said...

//நடிகை எப்படி கவர்ச்சி காட்டி நடித்திருக்கின்றாரோ அதேபோல் உங்கள் மனைவியையும் கவர்ச்சியாக உடை மற்றும் ஏனைய நாகரிகச் செயற்பாடுகளிலும் ஈடுபடச் செய்தல்.//


பெண்னை அலங்காரம் பண்ணி நடிகை மாதிரி ஆக்கலாம்! ஆனால் நாம் தலைகுப்புற நின்னாலும் ஒரு நடிகன் மாதிரி ஆகமுடியாதே என்ன பண்ணலாம்!?

வால்பையன் said...

சீரியஸ் இல்லையா!?
மொக்கை தானா!

ilangan said...

//நீங்கள் அதிகம் விரும்பி ரசிக்கின்ற நடிகை நடித்து புதிதாக வெளிவருகின்ற படங்களிலே அந்த நடிகை எப்படி கவர்ச்சி காட்டி நடித்திருக்கின்றாரோ அதேபோல் உங்கள் மனைவியையும் கவர்ச்சியாக உடை மற்றும் ஏனைய நாகரிகச் செயற்பாடுகளிலும் ஈடுபடச் செய்தல்.//
இப்பிடியும் செய்யலாமோ?

ஜெகநாதன் said...

நம்ம சந்ருவா? எப்படி இப்படி​யொரு ​நையாண்டி?? பின்​றேள் சந்ரு!! கடைசி பாய்ண்ட் - முத்தாய்ப்பு!!!

Post a Comment