Monday, 30 January 2012

கிழக்கை ஆள்வது அரசியல்வாதிகளா? அதிகாரிகளா?

அண்மையில் கிழக்கிலங்கையில் இடம்பெற்ற ஆசிரியர் இடமாற்றம் தொடர்பில் கிழக்கிலங்கை மாற்றத்துக்கான மக்கள் அமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது அதனை அப்படியே தருகின்றேன்.

கிழக்குமாகாணத்தில் தற்போது பொதுவாக ஆசிரியர்கள் மத்தியில் காணப்படும் பெரும் குழப்பமான நிலை முன்னொருபோதும் இல்லாத அளவுக்கு எல்லை மீறி சென்றிருக்கின்றது. காரணம் சொல்லவே தேவையில்லை. இடமாற்றப்பிரச்சினைதான். ஆசிரியர்களுக்கான இடமாற்றமானது புள்ளித்திட்ட அடிப்படையில் வரையப்பட்டிருந்தமையானது மிகவும் சிறப்பானதொரு முடிவாகவே எல்லோராலும் நோக்கப்பட்டது. 


ஆனால் பிரச்சினை எங்கே வெடித்திருக்கிறதென்றால், கல்வித்திணைக்கள அதிகாரிகளுக்கு வேண்டப்பட்டவர்களின் இடமாற்றத்தில்தான். மாகாண கல்விப்பணிமனையில் இருந்து மட்டக்களப்பு ஆசிரியர் ஒருவருக்கு திருகோணமலை மாவட்டத்திற்கு இடமாற்றம் கிடைத்திருந்தது. ஆனால் அவர் தனக்கு தெரிந்த அதிகாரி ஒருவர் மூலமாக இடமாற்றத்தை இரத்துச்செய்துள்ளார். அதேபோன்று சில ஆசிரியர்கள்  இந்த இடமாற்றத்தை வாய்ப்பாக பயன்படுத்தி விரும்பிய இடங்களுக்கு இடமாற்றம் பெற்றுள்ளனர். விடயம் அறிந்த ஆசிரியர்களின் ஒரே புலம்பல் “ வலயக்கல்விப்பணிப்பாளர்களுக்கு வேண்டியவர்கள் விரும்பிய இடத்திற்கு இடமாற்றம் பெற்றுள்ளார்கள். ஆனால் எங்களின் நிலைதான் பரிதாபத்துக்குள்ளாகியுள்ளது” என்பதுதான். முதலமைச்சரிடம் மேன்முறையீட்டுக்கு சென்ற ஆசிரியர்களின் கோரிக்கையை தகுந்த காரணங்களால் நிறைவேற்ற மறுத்தமை பாராட்டுக்குரிய விடயமே.  

 இதில் என்ன வேடிக்கையென்றால் அவர்கள் அனைவரும் அதிகாரிகள் மூலமாக தங்களது கோரிக்கையை வென்றெடுத்துவிட்டார்கள். இந்தவிடயம் திரிபடைந்து, முதலமைச்சரால் என்னத்துக்கு இயலும்? என்று ஆசிரியர் ஒருவர் ஏளனமாக கேட்கும் நிலைமையும் ஏற்பட்டிருக்கின்றது. இது கிழக்குமாணத்திற்கு ஏற்பட்டுள்ள மிகவும் அபாயகரமான சாபக்கேட்டின் ஆரம்பமாகும். “நியாயமான முறையில் இடமாற்றங்கள் இடம்பெறவேண்டும். அதில் நான் எந்த குறுக்கீடும் செய்யமாட்டேன்” என்று கிழக்கு முதல்வர் கூறியமையையிட்டு நாம் பெருமையடைகிறோம். அதேவேளை அதிகாரிகள் மூலம் முதல்வரின் சிந்தனை சின்னாபின்னமாக்கப்படுவதையிட்டு பெரும் வேதனையடைகிறோம். இது கல்வித்திணைக்களத்தில் மட்டுமல்ல ஏனைய அனைத்து திணைக்களங்களிலும் இந்நிலைமை பரவலாக காணப்படுகிறது. 

எனவே இந்த கறைபடிந்த செயற்பாடுகளை தடுப்பதற்கு கிழக்கு முதல்வர் எப்படிப்பட்ட நடவடிக்கை எடுத்தாலும் மக்கள் மனமுவந்து ஏற்றுக்கொள்வார்கள். உண்மையில் இந்த பிரச்சினைக்கு முழுவதுமாக முற்றுப்புள்ளி வைக்கவேண்டுமென்றால் குறிப்பிட்ட அதிகாரிகளின் மனமாற்றத்தினால் மட்டுமே முடியும். ஆனால் அதற்கான  சாத்தியப்பாடு கிழக்கு புத்திஜீவிகளிடம் மிகவும் அரிதாகவே காணப்படுவதாக நாம் உணர்கிறோம். விரைவில் இதற்கான தீர்வை முதல்வர் வரையாவிட்டால், அவரது ஆதரவாளர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள சலசலப்பையும் தீர்க்க முடியாமல் போகும் என்பதே திண்ணம். ஒரு நிருவாக கட்டமைப்பில்  அடிமட்டத்தில் செய்யப்படும் தவறு அதன் தலைமையே தாக்கும் என்பதை கிழக்கின் நிலைமை எடுத்தியம்புகின்றது. ஒரு சில அதிகாரிகளின் தவறு நல்ல அரசியலையும் தலைவர்களையும்  சாக்கடைக்குள் தள்ள முனைவது விபரீதத்தின் உச்சமே. “எல்லோரும் சமம்” என்கின்ற கொள்கையே நல்லாட்சியின் அடையாளம். இவ்வடையாளத்தை நிலைநிறுத்த கிழக்கு முதல்வர் என்ன செய்ப்போகின்றார் என்பதை நாம் உன்னிப்பாக அவதானித்துக்கொண்டிருப்போம்.

 எம்மக்கள் மத்தியில், மிக நீண்ட காலத்திற்கு பிற்பாடு அரசியல் அறிவுடன் நல்ல பாதையில் பயணிக்கின்ற உணர்வு ஏற்பட்டுள்ளது. இது நிரந்தரமாக இருக்கவேண்டும் என்பதே எங்களது அவாவாகும். அணைக்கட்டு பலமாக இருக்கின்றபோதும் ஏதோ ஒரு மூலையில் ஏற்படும் அரிப்பு முழு அணையையுமே அழித்துவிடும். அதிகாரிகளின் இச்செயற்பாடு அணையின் அரிப்புக்கு ஒப்பானதே. விரைவில் மாற்றம் ஏற்படும் என்ற நம்பிக்கையுடன்…..

மாற்றத்திற்கான மக்கள் அமைப்பு – கிழக்கிலங்கை
read more...

கிழக்கு மாகாண முதலமைச்சர் சந்திரகாந்தனின் ஐரோப்பிய விஜயம் படங்கள் இணைப்பு

கிழக்கின்  முதல்வர்  சந்திரகாந்தன் ஐரோப்பிய  விஜமொன்றை மேற்கொண்டு உள்ளார் .
சுவிஸ் வாழ் கிழக்குமாகாண புலம்பெயர் மக்களுடான சந்திப்பு சனியன்று இடம்பெற்றது .

நேற்றைய தினம் சுவிஸ்லாந்தில் பெருந்திரளான  மக்களின் மத்தியில் 
 கிழக்குமாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலை
புலிகள் கட்சியின் தலைவருமாகிய சந்திரகாந்தன் உரையாற்றினர் .
அங்கு புலம்பெயர்ந்த  மக்களின் மத்தியில் முதலமைச்சர் உரையாற்றுகையில் 
கிழக்கில் இடம்பெறும் அபிவிருத்தியும் மற்றும் கட்சியின் கொள்கைகளையும் விளக்கினார் ,
தொடந்து அங்கு சமுகமளித்திருந்த சுவிஸ் வாழ் புலம்பெயர் மக்களும் 
கல்விமான்களும் ,,புத்திஜீவிகளும் கிழக்கு மாகாண முதலமைச்சருக்கு 
பாராட்டுகளையும் ,முதலமைசரினால் மேற்க்கொள்ள படும்  சகல அபிவிருத்திக்கும் ,தமிழ் மக்கள் விடுதலைப்புகள் கட்சியின் வளர்ச்சிக்கும்   சுவிஸ் வாழ் கிழக்கு புலம் பெயர் மக்களால்  சகல பங்களிப்பையும் தருவதாகவும் உறுதியளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த பதிவில் மேலும்பல விபரங்களை எதிர்பாருங்கள்
read more...

Sunday, 29 January 2012

பம்மாத்தும் பகடமணியும்


மட்டக்களப்பில் பேச்சுத்தமிழில் பயன்படத்தப்படும் சொற்கள்தான் பம்மாத்து பகடமணி.  இச் சொற்கள் தொடர்பில் பதிவிட இருக்கின்றேன். இப்போது கூட்டமைப்பினர் செய்து வருவதுதான் பம்மாத்து பகடமணி.

கடந்த 2008ம் ஆண்டு மே மாதம் 10 ந்திகதி இடம்பெற்ற கிழக்கு மாகாண சபைக்கான தேர்தலில் அன்றைய எதிர்க்கட்சித் தலைவர் திரு ரணில் விக்கிரமசிங்கா அவர்களுடன் இணைந்து கிழக்கு மாகாண சபையின் நிர்வாகத்தினை தங்களது கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவரும் நோக்குடன் ஸ்ரீ.ல.முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ஜனாப் ரவூப் ஹக்கீம் அவர்களையும் தம்முடன் இணைத்துக்கொண்டு தோதலில் களமிறங்கியவர்கள்தான் மேற்கூறிய முக்கூட்டணியினர். ஆனால் அவர்களின் தேர்தல் வியூகம் தோல்வியைத் தழுவியதன் காரணமாக மாகாண சபையின் ஆட்சி அதிகாரம் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியினரால் கைப்பற்றப்பட்டு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் திரு சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் முதலமைச்சராக (16.05.2008ல்) பதவியேற்றார்.

இந்நிலையிலேதான் கிழக்கு மாகாணத்தின் ஓர் மாவட்டமாக அமைந்துள்ள திருகோணமலை மாவட்டத்தின் தமிழ் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவாகியிருந்தவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், சட்டமா மேதை என தம்மை அறிமுகப்படுத்திக்கொண்டிருப்பவருமான திரு சம்பந்தன் அவர்களை சந்தித்து கிழக்கு மாகாண நிர்வாகம் தொடர்பாகவும் அதற்கான அதிகாரங்களை அரசுடன் இணைந்து உரியமுறையில் பெறும் நோக்குடன் கிழக்கின் முதலமைச்சர் திரு சந்திரகாந்தன் அவாகளும் அவரது ஊடகப் பிரிவின் செயலாளரான ஜனாப் ஆசாத் மெளலானா அவர்களும் இணைந்து சம்பந்தனின் கொழும்பிலுள்ள வாசஸ்தலத்தில் சந்திப்பதற்கான அனுமதியினை அவரிடம் பெற்றுக்கொண்டு அங்கு சென்றிருந்தபோதே திரு சம்பந்தன் அவர்கள் நான் கிழக்கு மாகாணத்தையோ, அதன் முதலமைச்சரையோ ஏற்றுக்கொள்ளவில்லை என்னும் தமது கருத்தினைக்கூறி அவர்களை திருப்பி அனுப்பியிருந்தார்.
கிழக்கு மாகாண சபையினையோ, அன்றி அதன் முதலமைச்சரையோ நிராகரிப்பதற்கான காரணங்கள் எதனையும் அவரால் அன்று கூறமுடியவில்லை. அதற்கான பிரதான காரணம் அவர் ஒரு மாவட்டத்தின் வாக்காளர்களால் மட்டும் தெரிவுசெய்யப்பட்டவராகவும், திரு சந்திரகாந்தன் அவர்கள் ஒரு மாகாணத்தில் வாழ்ந்த மக்களில் பெரும்பாலானவர்களின் விருப்பிற்கேற்ப தெரிவாகியிருந்தமையே யதார்த்தமாகும். அதேவேளை சட்டத் துறையின் ஒரு சிறிய பகுதியினை மட்டுமே தாம் கற்றறிந்துள்ளமையை சம்பந்தன் தமது நடவடிக்கையின்மூலம் அன்று வெளிக்காட்டியிருந்தமை இங்கு முக்கிய விடயமாகும். கிழக்கு மாகாணத்தில் வாழ்ந்த வாக்காளர்களான (982.721) வாக்காளர்களில் (645.456 ) அதாவது (65.78%) வீதமான வாக்காளர்கள் வாக்களித்த நிலையில் அமைக்கப்பட்ட மாகாண சபையின் நிர்வாகத்தினை அங்கீகரிக்க தாம் தயாரில்லை என சம்பந்தன் கூறினார்.
குறிப்பு –இங்கு வாக்களித்த மூவினத்தையும்சார்ந்த வாக்காளர்கள் இலங்கையின் ஏனைய மாகாணங்களைப்போன்று தாம் வாழும் மாகாணமும் தனித்துவமான நிர்வாகத்தின்கீழ் செயற்படவேண்டும் என்பதனை வலியுறுத்திய நிலையிலேயே தமது வாக்குகளை வழங்கியிருந்தனர். இதுவிடயம் திரு பிரபாகரன் அவர்களின் தயவில் அரசியலுக்குள் மீண்டும் நுழைந்த திரு சம்பந்தன் அவர்களால் மட்டும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. காரணம் தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதி பிரபாகரன் மட்டுமே என பட்டமளிப்புச் செய்த அவரால் தமது வாக்குறுதியினை மீறமுடியவில்லை. அவ்வாறு மீறுவதானால் வன்னியில் அவருக்கென கொள்வனவு செய்யப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த சவப்பெட்டியினுள்ளேயே அவரது இறுதியான வாழ்க்கை முடிவுற்றிருக்கும்.
அதேவேளை தாம் முதன்முதலாக பாராளுமன்றத் தேர்தலில் களமிறங்கியபோது அவரது தொகுதியில் அவருக்கு மக்களால் அளிக்கப்பட்ட வாக்குகள் எத்தனை வீதம் என்பதனை அவர் மறந்துவிட்டார்போலும்.
அன்றைய திருமலை மாவட்ட வாக்காளர்களின் மொத்த எண்ணிக்கை (35.778) ஆகவும் மொத்தமாக வாக்களித்தவர்களின் எண்ணிக்கை (29.379) ஆக பதிவுசெய்யப்பட்டிருந்த நிலையில் திரு சம்பந்தனுக்கு அளிக்கப்பட்ட வாக்குகள் ஆக மொத்தம் (15.144 மட்டுமே) அதாவது (51.76%) வீதமான மக்கள் மட்டுமே வாக்களித்திருந்தனர். அதுவும் மேற்படி தேர்தல் தமிழீழக் கோரிக்கையினை முன்வைத்து தமிழர் விடுதலைக் கூட்டணியினரால் தேர்தலில் களமிறங்கிய நிலையிலேயே சம்பந்தனுக்கு கிடைத்த வாக்குகள் (51.76%) வீதமாக அமைந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த லட்சணத்திற்குள் (65.78%) வீதமான வாக்காளர்கள் பங்குகொண்ட கிழக்கு மாகாண சபையினை தம்மால் ஏற்றுக்கொள்ளமுடியாதென சம்பந்தன் தெரிவித்தமை சம்பந்தன் ஒரு பயங்கரவாதியா? ஜனநாயகவாதியா என்பதனை மக்களே தீர்மானிக்கலாம். புலம்பெயர் நாடுகளில் வாழும் சில புலிகளின் அடிவருடிப் பினாமிகள்தான் இன்று சம்பந்தனுக்கு ஏனைய அரசியல்வாதிகளினால் அனுபப்படும் மடல்களுக்கு பதில் கூறும் புத்திசாலிகளாக முளைவிட்டுள்ளனர்.
கிழக்கு மாகாண சபையினை நான் ஏற்பதற்கு தயாரில்லை என அன்று முழக்கமிட்ட திரு சம்பந்தன் அவாகள் கிழக்கு மாகாண அதிகாரத்தின்கீழ் நிர்வகிக்கப்படும் நகரசபைகளிலும், பிரதேச சபைகளிலும் தமது கட்சியின் வேட்பாளர்களை களமிறக்கியதன் மர்மமென்ன? இதன்மூலம் அவர் ஒரு (Money Maker) ரே தவிர மக்களின் பணியாளன் அல்ல என்பது தெளிவாகியுள்ளது. அதற்கமைய (17.03.2011ல்) கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்ற உள்ளுராட்சி தேர்தலில் திரு சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் பெற்ற வாக்குகள் ஆக மொத்தம் (54.542) வாக்ககள் மட்டுமே இதனை அங்கீகரிப்பதற்கு சம்பந்தன் தயாரா?
உள்ளுராட்சித் தேர்தல் முடிவுகள் கிழக்கு மாகாணம்
நடைபெற்று முடிந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் (17.03.2011—23.07.2011) மாநகர சபை, நகர சபை, பிரதேச சபை கிழக்கு மாகாணத்தில் பிரதான அரசியல் கட்சிகள் எனக்கூறப்படும் கட்சியினர் பெற்ற வாக்குகளும், அவர்களுக்கான உறுப்பினர்களின் விபரங்களும் பின்வருமாறு அமைந்துள்ளது.
கிழக்கு மாகாணத்தில் மேற்குறிப்பிட்ட திகதிகளில் இடம்பெற்ற உள்ளுராட்சிச் சபைகளுக்கான தேர்தலில் (1) மாநகர சபை, (3) நகர சபைகள், (29) பிரதேச சபைகள் உள்ளடக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் கிழக்கில் மொத்தமாக வாக்களித்த மக்களின் எண்ணிக்கையான (394.293) வாக்குகளில் அங்கு தேர்தலில் களமிறங்கிய ஒவ்வொரு கட்சிகளும் பெற்ற வாக்குகளும், அவர்களுக்கான உறுப்பினர்கள் மற்றும் கைப்பற்றிய சபைகள் தொடர்பான விபரங்கள் பின்வருமாறு அமைந்துள்ளது.

கிழக்கு மாகாணத்தில் மேற்குறிப்பிட்ட திகதிகளில் இடம்பெற்ற உள்ளுராட்சிச் சபைகளுக்கான தேர்தலில் (1) மாநகர சபை, (3) நகர சபைகள், (29) பிரதேச சபைகள் உள்ளடக்கப்பட்டிருந்தன. இவற்றில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் (45) உறுப்பினர்களைப் பெற்று (1) நகர சபையினையும் (6) பிரதேச சபைகளையும் கைப்பற்றியுள்ளனர். அதேவேளை கிழக்கில் மொத்தமாக வாக்களித்த வாக்காளர்களின் எண்ணிக்கையான (394.293) வாக்குகளில் (54.542) வாக்குகளை மட்டுமே த.தே.கூட்டமைப்பினர் பெற்ற நிலையில் இத்தொகை அளிக்கப்பட்ட வாக்குகளில் (13.82%)மான வாக்குகளை மட்டுமே தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் பெற்றுள்ளனர்
மேற்படி தகவல்கள் தொடர்பில் விமர்சனங்களை முன்வைக்க முன்வரும் புலம்பெயர் புலிப் பினாமிகளிடம் அரசியல் அறிவு அல்லது முதுகெலும்பு இருக்குமாயின் எமக்கே நேரடியாக தமது விமர்சனங்களை முன்வைக்கலாம் நாம் பதிலளிக்கவும், தமது கட்டுரையுடன் பிரசுரிக்கவும் தயாராகவுள்ளோம். அ. குமாரதுரை ஆசிரியர் மஹாவலி.கொம். எமது மின்னஞ்சல் முகவரி –Kumarathurai@kumarathurai.com

அன்றும், இன்றும்

த.ம.வி.பு கட்சியுடன் பேச்சு நடத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானம் –தமிழ்மிரர்
வியாழக்கிழமை 26 ஜனவரி 2012 04:55
(யொஹான் பெரேரா)

அதிகார பகிர்வு தொடர்பில் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியுடன் தமிழ் தேசிய கூட்டமைப்பு விரைவில் பேச்சு நடத்தவுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தனுடன் அதிகார பகிர்வு தொடர்பில் பேச்சு நடத்துவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
‘முதலமைச்சர் சந்திரகாந்தனால் பேச்சு நடத்துவது தொடர்பில் விடுக்கப்ட்ட வேண்டுகோளையடுத்து தேசிய பிரச்சினை தொடர்பில் பேச்சு நடத்தி அரசியல் தீர்வு தொடர்பில் ஒர் இணக்கப்பாட்டுக்கு வர தீர்மானித்துள்ளோம்’ என சம்பந்தன் தெரிவித்தார். இப்பேச்சு தொடர்பிலான திகதி இதுவரை தீர்மானிக்கப்படவி;ல்லை. பேச்சுக்கான திகதியை தீர்மானிப்பது தொடர்பில் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியினருடன் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாக அவர் குறிப்பிட்டார்.
அதிகார பகிர்வு தொடர்பில் இணக்கப்பட்டுக்கு வருவதற்கும் பேச்சு நடத்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு முதலமைச்சர் சந்திரகாந்தன் அண்மையில் அழைப்பு விடுத்திருந்தார். வடக்கு கிழக்கு இணைப்பு தவிர்ந்த காணி மற்றும் காவல்துறை அதிகாரங்களை வழங்குவது தொடர்பில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியும் தங்களுடன் ஒருமித்த கருத்துடனேயே உள்ளோம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரான இரா.சம்பந்தனுக்கு கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சி.சந்திரகாந்தன் அண்மையில் கடிதம் அனுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நன்றிகள்-  www.mahaveli.com
read more...

Saturday, 28 January 2012

கூட்டமைப்புக்கு தகுந்த பாடம் புகட்டுவோம் மாற்றத்தை நோக்கிய மக்கள் அமைப்பு

கிழக்கிலங்கை மாற்றத்தை நோக்கிய மக்கள் அமைப்பு அறிக்கை ஒன்றினை வெளியிட்டிருக்கின்றது அதனை அப்படியே தருகிறேன்.

                                                                  மாற்றத்தை நோக்கிய இளைஞர் அமைப்பு
                                                                 கிழக்கிலங்கை
                                                                 28.01.2012

எமது கிழக்கு மாகாண மக்கள் அன்றுதொட்டு இன்றுவரை அரசியல்தலைவர்களினால் ஏமாற்றப்பட்டு வருகின்றனர். கிழக்கு மாகாண மக்கள் தொடர்ந்தும் ஏமாறும் சமூகமாக இருக்க முடியாது. கடந்த காலங்களில்தான் எமது மக்கள் ஏமாற்றப்பட்டு வந்தார்கள் தொடர்ந்தும் எமது மக்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் ஏமாற்ற நினைத்துக் கொண்டிருக்கின்றனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் போன்றவர்கள் கிழக்கு மக்களை தொடர்ந்தும் ஏமாற்ற முடியும் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.

இதற்கு அண்மையில் நடைபெற்ற பல விடயங்களைச் சுட்டிக்காட்ட மூடியும். அதிலும் தற்போது பரவலாகப் பேசப்படுகின்ற விடயம் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் எழுதிய கடிதமாகும். இக் கடிதத்தில் குறிப்பிடப்பட்ட விடயம் என்ன? அரசுக்கும் கூட்டமைப்புக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளின்போது வடக்கு கிழக்கு இணைப்பு தவிர்ந்த பொலிஸ் காணி அதிகாரங்கள் பேசப்படுகின்றபோது அதற்கு தான் ஆதரவு வழங்குவதாகவும் இவ்விடயங்கள் தொடர்பில் கூட்டமைப்புடன் தான் மனந்திறந்து பேசத்தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டு இருக்கின்றார்.

அத்துடன் 15.01.2012 க்குள் தகுந்த பதிலை எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார். ஆனாலும் முதலமைச்சருக்கு எந்த விதமான பதிலும் அனுப்பப்படவில்லை. மாறாக கிழக்கு மாகாணத்தில் இல்லாத அமைப்புக்களின் பெயரில் போலி அறிக்கைகளை தமிழ்வின் இணையத்தளம் வெளியிட்டு வருகின்றது. பதில் சொல்ல வேண்டிய சம்பந்தன் அவர்கள் பதில் சொல்லாமல் போலி அமைப்புக்களின் பெயரில் வெளியிடப்படும் அறிக்கைகள் கிழக்கு மாகாண முதலமைச்சரையும் கிழக்கு மக்களையும் அவமதிக்கும் செயலாகும்.

கிழக்கு மாகாண மக்கள்மீது தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கோ அல்லது சம்பந்தனுக்கோ அக்கறை இருக்குமாக இருந்திருந்தால் போலியான அமைப்புக்களின் பெயரில் அறிக்கைகளை வெளியிடுவதனை தவிர்த்து முதலமைச்சருக்கு பதில் கடிதத்தினை அனுப்பி இருக்க முடியும். முதலமைச்சர் அவர்கள் முதலமைச்சர் பதவியினை பொறுப்பேற்ற நாள் முதல் மாகாணசபைக்கு பொலிஸ் காணி அதிகாரங்கள் வேண்டும் என்று குரல் கொடுத்து வருகின்றார். கூட்டமைப்பினர் தமிழீழமே இறுதி மூச்சு என்றிருந்தவர்கள் முப்பது வருடமாக இடம்பெற்ற யுத்தத்தில்; பல உயிரிழப்புக்களின் பின்னர் முதலமைச்சர் எதைக் கேட்கின்றாரோ அதனை பெறத்தயாராக இருக்கின்றனர்.

முதலமைச்சர் அவர்கள் அனுப்பிய கடிதத்தினை கூட்டமைப்பினர் அவமதித்த செயலானது கிழக்கு மக்களை அவமதித்தமைக்கு சமமானது. கிழக்கு மக்களால் தெரிவு செய்யப்பட்ட கிழக்கை பிரதிநிதிப் படுத்துகின்ற ஒரு முதலமைச்சரின் கடிதத்தினை அவமதித்தமையை கிழக்கு மக்கள் சார்பாக வண்மையாகக் கண்டிக்கின்றோம். கூட்டமைப்பினர் முதலமைச்சர் அவர்களை அவமதிப்பது இது முதல் தடவையல்ல முன்னர் ஒரு தடவை மாகாணசபை என்று ஒன்று இல்லை. முதலமைச்சரும் இல்லை என்று கிழக்கு மக்களையும் கிழக்கு மாகாண முதலமைச்சரையும் அவமதித்தார்கள். இன்று மாகாணசபை அதிகாரங்கள் தொடர்பில் பேசுகின்றனர்.

கிழக்கு மாகாணம் துரிதமாக அபிவிருத்தி அடைந்து வருவது யாவரும் அறிந்ததே. கிழக்கு மாகாண சபை உருவாக்கத்தின் மூலமாகத்தான் இத் துரித அபிவிருத்தி இடம்பெறுகின்றது என்பதனை அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும். 

தமிழ்வின் இணையத்தளத்தினால் போலி அமைப்புக்களின் பெயரில் வெளியிடப்படுகின்ற அறிக்கைகளின் நோக்கம் என்ன? தமிழ் மக்கள் நிம்மதியாக வாழக்கூடாது என்று தமிழ்வின் இணையத்தளம் நினைக்கின்றதா? தமிழ் மக்கள் மத்தியில் பிரச்சினைகள் இருக்கின்றபோதுதான் தாம் பிரச்சினைகளை எழுதி தமது இணையத்தளத்தை வளர்க்கலாம் என்று நினைக்கின்றனரா? அல்லது கிழக்கு மக்களை தொடர்ந்தும் ஏமாற்ற நினைக்கின்றனரா? அல்லது கிழக்கு மக்களை மடையர்கள் என்று நினைத்துவிட்டனரா?

இவ்வாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் கிழக்கு மக்களை ஏமாற்ற நினைக்கும் செயற்பாடுகளுக்கு துணைபோகும் மட்டக்களப்பு மாவட்ட கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் கிழக்கு மாகாண மக்கள் தகுந்த பாடம் புகட்ட வேண்டும். 

தொடர்ந்தும் கிழக்கு மக்களை ஏமாற்ற நினைப்பார்களாக இருந்தால் கிழக்கு மக்கள் கூட்டமைப்பிற்கு தகுந்த பாடம் புகட்ட வேண்டும். கிழக்கு மக்களுக்காக குரல் கொடுப்பார்கள் என்பதற்காகவே மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களையும் மக்கள் பாராளுமன்றத்திற்கு அனுப்பினார்கள் ஆனால் அவர்கள் கிழக்கு மக்களுக்காக என்ன செய்கின்றனர். சம்பந்தன் போன்றவர்கள் கிழக்கு மக்களை ஏமாற்ற நினைக்கும் செயற்பாடுகளுக்கு துணைபுரிகின்றனர்.

கிழக்கு மக்களே சிந்தியுங்கள் எமது இன்றைய தேவை என்ன? இன்று கிழக்கில் என்ன நடக்கின்றது? கடந்த 30 வருட போராட்டத்தில் பல உயிர்களையும் உடமைகளையும் இழந்திருக்கின்றோம். தொடர்ந்தும் இவ்வாறான இழப்புக்கள் இடம்பெற வேண்டுமா? அல்லது நலிவடைந்த எமது பிரதேசத்தை கட்டியெழுப்ப வேண்டுமா என்பதனை தீர்மானியுங்கள். இன்று மக்களுக்காக சேவை செய்துகொண்டிரப்பவர்கள் யார் என்பதனை தீர்மானியுங்கள். தமிழ் தேசியம் என்று மீண்டும் ஓர் அழிவினை நோக்கிச் செல்ல நீங்கள் தயாரா? அல்லது துரித அபிவிருத்தி மூலம் எமது பிரதேசத்தை கட்டியெழுப்ப வேண்டும் என்பதனை நீங்கள் விரும்புகின்றீர்களா? சிந்தித்து செயற்படுங்கள். கூட்டமைப்பினரின் போலி முகங்களை நம்பிவிடாதீர்கள். மக்களுக்காக சேவை செய்பவர்கள் யார் என்பதை தீர்மானியுங்கள்.

மறு புறத்திலே கூட்டமைப்பினர் கிழக்கு மாகாண முதலமைச்சரையும் கிழக்கு மாகாண மக்களையும் அவமதிப்பதனை வண்மையாகக் கண்டிப்பதோடு முதலமைச்சர் அவர்கள் கூட்டமைப்பினருக்கு இனிமேலும் மரியாதை கொடுக்க வேண்டாம் எனவும் கேட்டுக் கொள்கின்றோம். காரணம் முதலமைச்சரின் கடிதத்தினை அவமதித்த ஒரு தலைவரையும் கட்சியையும் முதலமைச்சர் அவர்கள் மரியாதை கொடுக்க வேண்டிய அவசியமில்லை.

கிழக்கு மாகாண மக்கள் கிழக்குத் தலைமைத்தவத்தின்கீழ் கிழக்கு மக்களாகவே இருக்கட்டம்.

பா.ஜேசுதாஸ் வை.தர்சன்
தலைவர்      செயலாளர்
மாற்றத்தை நோக்கிய மக்கள் அமைப்பு
கிழக்கிலங்கை


read more...

Friday, 27 January 2012

தமிழ்வின் இணையத்தளத்தின் முகத்திரையை கிழித்த கிழக்கு பல்கலைக்கழக பழைய மாணவர் சங்கம்

தமிழ்வின் இணையத்தளத்தில் கூட்டமைப்பு தமிழ் சமூகத்தின் ஆணையை மீறி கிழக்கு முதல்வரை சந்தித்தால் அன்று கிழக்கின் துக்க தினம்!- கிழக்கு பல்கலை பழைய மாணவர்கள் எனும் தலைப்பில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. தமிழ்வின் இணையத்தளத்தில் கிழக்கு பல்கலைக்கழக பழைய மாணவர் சங்கத்தின் பெயரில் தமிழ்வின் இணைத்தளத்தில் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கை தங்களால் வெளியிடப்பட்டதல்ல தமிழ்வின் இணையத்தளம் போலியாகதமது பெயரைப் பயன்படுத்தி அறிக்கை வெளியிட்டிருப்பதாக கிழக்கு பல்கலைக்கழக பழைய மாணவர் சங்கம்   அறிக்கை ஒன்றினை வெளியிட்டிருக்கின்றது. அவ் அறிக்கையை அப்படியே தருகின்றேன். 

அன்பின் தமிழ்வின் இணையத்தள நிர்வாகிக்கு.

உங்கள் இணையத்தளத்தில் 26.01.2012 அன்று கூட்டமைப்பு தமிழ் சமூகத்தின் ஆணையை மீறி கிழக்கு முதல்வரை சந்தித்தால் அன்று கிழக்கின் துக்க தினம்!- கிழக்கு பல்கலை பழைய மாணவர்கள் எனும் தலைப்பில் செய்தி வெளியாகி இருந்ததை அறிந்து அதிர்ச்சியும் கவலையும் அடைகின்றோம்.

எமது கிழக்குப் பல்கலைக் கழகத்தின் பமைய மாணவர் சங்கத்தால் தமிழ்வின் இணையத்தளத்திற்கோ அல்லது வேறு இணையத்தளங்களிற்கோ ஊடகங்களுக்கோ எந்தவிதமான அறிக்கையும் அனுப்பப்படவில்லை இருந்தபோதும் உங்கள் இணையத்தளத்தில் எமது பெயரினைப் பயன்படுத்தி மக்களை குழப்பமடையச் செய்யும் வகையில் செய்திகளை வெளியிட்டமையை இட்டு கடுமையான கண்டனங்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.

இவ்வாறான போலி அறிக்கைகளை வெளியிடுவதன் மூலம் எமது பழைய மாணவர் சங்கத்தின் நற் பெயருக்கு பாதிப்பை ஏற்படுத்தி இருப்பதுடன் எமது சங்கத்தின் பெயரையும் தவறான முறையில் பயன்படத்தி இருக்கின்றீர்கள். எங்கள் பழைய மாணவர் சங்கத்தின் பெயரில் அறிக்கைகளை வெளியிட உங்களுக்கு யார் அனுமதி தந்தது என்பதனை சொல்ல முடியுமா?

ஒரு ஊடகத்தினை நடாத்திக் கொண்டிருக்கும் நீங்கள் பொய்யான அறிக்கைகள் மூலம் மக்களை குழப்பமடையச் செய்வதன் நோக்கம் என்ன? எதற்காக போலி அறிக்கைகளை தயாரிக்கின்றீர்கள். உங்களுடைய இவ்வாறான செயல்களைப் பார்க்கின்றபோது தமிழ் மக்கள் நிம்மதியாக வாழ விரும்பாதவர்கள் போன்று உங்கள் செயற்பாடுகள் இருக்கின்றன.

தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் கிழக்கு மாகாண முதலமைச்சரை சந்தித்தால் அந்த நாளை துக்க நாளாக எமது கிழக்கு பல்கலைக்கழக பழைய மாணவர்சங்கம் பிரகடனப் படுத்தவில்லை. எமது மக்கள் நிம்மதியாக வாழ்ந்துகொண்டிருக்கின்றனர். மீண்டும் மீண்டும் எமது மக்களை போலிப் பிரச்சாரங்களும் போலி அறிக்கைகள் மூலமும் குழப்பமடையச் செய்து அரசியல் இலாபம் தேட நினைக்காதீர்கள்.

உங்களால் வெளியிடப் படுகி்ற அறிக்கைகள் அனைத்தும் எமது சங்கத்தின் பெயரில் வெளியிடப்பட்ட போலி அறிக்கை போன்று போலியான அறிக்கைகள்தானா? இனிமேலாவது இவ்வாறான கீழ்த்தரமான வேலைகளைச் செய்யாதீர்கள். எதற்காக எமது சங்கத்தின் பெயரில் போலி அறிக்கையினை வெளியிட்டடீர்கள் என்பதனை சொல்ல முடியுமா?

ஊடகம்  எனும் போர்வையில் இனிமேலாவது கீழ்த்தரமான வேலைகளை செய்ய வேண்டாம்.

                                                                                                            

                                                                      செயலாளர்
                                                                                                                                                                   வி.குணாளன்
                                                                      பழைய மாணவர்சங்கம்
                                                                     கிழக்கு பல்கலைக்கழகம்

read more...

Thursday, 26 January 2012

இலங்கை தமிழன் என்றால் உசிரு. இந்திய தமிழன் என்றால் மசிரு.

இந்திய - இலங்கை கடற்பரப்பில் இருநாடு மீனவர்களுக்கு இடையே பல ஆண்டுகளாக பிரச்சனைகள் தொடரும் நிலையில், கொழும்புக்கான விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்த இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் முன்வைத்துள்ள யோசனைகள் இருதரப்பிலும் மாற்றுக் கருத்துக்களை தோற்றுவித்துள்ளது. இது அவ்வாறிருக்க எனது முன்னைய இடுகை ஒன்றினைத் தருகின்றேன்.

இன்று இணையத்தளங்கள் வலைப்பதிவுகளில் அதிகமாக பேசப்படுகின்ற விடயம் தமிழக மீனவர்களின் கொலை பற்றிய விடயமாகவே இருக்கின்றன.


இந்தப் பிரச்சினை தொடர்பிலே சில வலைப்பதிவுகளிலும் சமூகத் தளங்களிலும் வாதப்பிரதிவாதங்கள் இடம் பெற்றுக்கொண்டிருக்கின்றன.இலங்கை வலைப்பதிவர்கள் பலர்; இலங்கை மீனவர்கள் குறிப்பாக வடபகுதி தமிழ் மீனவர்கள் தமிழக மீனவர்களால் பல்வேறு வழிகளிலே பாதிப்புக்குட்படுத்தப்படுவதாக குற்றம் சாட்டுகின்றனர்.இலங்கை மீனவர்கள் மீன்பிடிக்கின்ற இலங்கையின் கடலெல்லைக்குள் இந்திய மீனவர்கள் அத்துமீறிப் பிரவேசித்து இலங்கை மீனவர்களின் வலைகள் என்பவற்றை சேதப்படுத்தி தடைசெய்யப்பட்ட மீன்பிடி உபகரணங்களைப் பயன்படுத்தி இலங்கை மீனவர்களின் வயிற்றிலடித்துச் செல்லும் செயல் அன்று தொட்டு இன்றுவரை நடந்து வருகின்றது. இது யாவரும் அறிந்த விடயம்.தமிழக  மீனவர்களால் வெகுவாகப் பாதிக்கப்பட்ட இலங்கை வடபகுதி மீனவர்கள் பலர் இருக்கின்றனர்.தமிழக மீனவர்களினால் இலங்கை மீனவர்கள் பாதிக்கப்படுவதுபோல் அன்றுதொட்டு இன்றுவரை இலங்கை கடற்படையினரால் பல தமிழக மீனவர்களின் உயிர்களும் பறிக்கப்பட்டிருக்கின்றன.ஆனால் இன்று தமிழக மீனவர்களின் படுகொலைக்கு எதிர்ப்பலைகள் அதிகமாகி இருக்கின்றன.உலகத்தில் எந்த ஒரு மூலையிலாவது ஒரு தமிழனுக்கு ஏதாவது ஒன்று நடந்துவிட்டால் ஒவ்வொரு தமிழனும் அவனுக்காகக் குரல் கொடுக்க வேண்டும். அவன் இலங்கைத் தமிழனாக இருந்தால் என்ன இந்தியத் தமிழனாக இருந்தால் என்ன. இன்று தாக்கப்பட்டிருப்பவன் தமிழன். ஒவ்வொரு தமிழனும் அவனுக்காகக் குரல் கொடுக்கவேண்டும்.பல காலமாக தமிழக மீனவர்களால் இலங்கை மீனவர்கள் பாதிக்கப்படுகின்றனர். இருந்தபோதும் தமிழக மீனவர்களின் படுகொலை தொடர்பாக பரவலாக எதிர்ப்பலைகள் வந்துகொண்டிருக்கின்றபோது. அவர்களுக்காக பலரும் குரல் கொடுத்துக் கொண்டீருக்கும்போது நாமும் அவர்களுக்காக குரல் கொடுக்கவேண்டும்.அதைவிடுத்து தமிழக மீனவர்கள் என்றும் இலங்கை மீனவர்கள் என்றும் பிரித்து பேசாதீர்கள். இங்கே இரு பக்கமும் பாதிக்கப்படுவது எம் உறவுகள் அப்பாவித் தமிழர்கள்.இன்று தமிழக மீனவர்களின் படுகொலைக்கு எதிராக எல்லோரும் குரல் கொடுக்கும் நேரத்தில் இலங்கை மீனவர்கள் தமிழக மீனவர்களால் பாதிக்கப்படுகின்றனர் என்று குற்றம் சுமத்துவது எந்த வகையில் நியாயம்.இலங்கை மீனவர்கள் பாதிக்கப்படுகின்றார்கள் இல்லை என்று சொல்லவில்லை. இந்த நேரத்தில் இந்தக் குற்றச்சாட்டுக்கள் தேவையானதா?இலங்கை மீனவர்களின் வலைகள் வெட்டப்படுகின்றன இதனை தமிழகத்திலே இருக்கின்ற அனைத்து மீனவர்களும் செய்கின்றனரா? இல்லையே. இன்று உயிரிழந்திருக்கின்ற இந்திய மீனவன்தான் இலங்கை தமிழர்களின் வலையை வெட்டினானா?எவனோ ஒருவன் செய்திருக்கலாம் அதற்காக இன்று அப்பாவியாக உயிரிழந்திருக்கின்ற தமிழக மீனவனை குற்றம் சொல்லலாமா? அவனுக்காக குரல் கொடுக்காமல் விடலாமா?இலங்கை பதிவர்கள் சிலர் தமிழக மீனவர்களினால் இலங்கை மினவர்கள் வெகுவாகப் பாதிக்கின்றனர் எனும் குற்றச்சாட்டை ஏற்றுக் கொள்கின்றேன். நானும் குற்றம்சாட்டுகின்றேன். ஆனாலும் குற்றம்சாட்டுவதற்குரிய நேரம் இதுவல்ல.இலங்கையிலே இறுதிக்கட்ட யுத்தம் நடைபெற்றபோது. எதுவுமே அறியாதவர்கள்போன்று தமிழக அரசியல்வாதிகள் மௌனம் சாதித்தபோது (தமிழக அரசியல் வாதிகளென்ன உலகமே மௌனம் சாதித்தபோது) இலங்கை தமிழர்களுக்காக குரல் கொடுக்கவில்லையா? உயிரைக்கூட கொடுத்தார்கள்.இந்திய தமிழன் இலங்கை தமிழன் என்பதனை மறந்து தமிழன் என்று சிந்திப்போம் பாதிக்கப்பட்ட உறவுகளுக்காகக் குரல்கொடுப்போம்.தலைப்பை பார்த்தே பலர் என்னைத் திட்டியிருப்பீர்கள். திட்டிய அனைவருக்கும் நன்றிகள்.இன்று பதிவிட முடியாதபோதும் பதிவிட வேண்டும் என்பதற்காக பதிவிட்டேன்.


இதனையும் பாருங்கள்.


http://www.shanthru.com/2012/01/blog-post_26.html
read more...

முதலமைச்சரின் கடிதமும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அணுகுமுறையும். சரியா? தவறா? ஆரோக்கியமானதொரு விவாதத்திற்காக...

இன்று பரவலாகப் பேசப்படுகின்ற விடயம் கிழக்கு மாகாண முதலமைச்சர் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனுக்கு எழுதிய கடிதம் ஆகும். அக் கடிதம் தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு தொடர்பாக பரவலாகப் பேசப்படுகின்றனது. 
தமிழ் காங்கிரஷ் , தமிழரசுக் கட்சி, தமிழர் விடுதலைக்கூட்டணி என்ற வரலாற்றுத் தொடர்ச்சியின் இன்றைய வடிவமே தமிழ் தேசியக் கூட்டமைப்பாகும். பிரபல மேதாவி பொன் அருணாச்சலம் தொடங்கி அமிர்தலிங்கம் வரையிலான மிகப்பெரும் தலைமைகள் வழிநடாத்திய அரசியலையே இன்றைய தமிழ் கூட்டமைப்பும் அதன் தலைமையும் பிரதிபலிக்கின்றன. 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் கூட ஐம்பது வருட அரசியல் அனுபவம் மிக்க பழுத்த அரசியல்வாதி என்று போற்றப்படுகின்றார். தலைமை என்பது வல்லமை வாய்ந்ததாக இருப்பது மட்டும் அல்ல நல்லெண்ணம் கொண்டதாகவும் இருப்பது அவசியம். ஏனெனில் ஒரு மக்கள் கூட்டத்தை, ஒரு இனத்தை, ஏன் ஒரு நாட்டினையே வழிநடத்தும் பொறுப்பினை இந்த அரசியல் தலைமைகளே கையகப்படுத்தி இருக்கின்றனர். அப்படியானதொரு பொறுப்பு வாய்ந்த ஷ்தானத்தில் அமர்ந்திருப்பவர்தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனாகும். 

அதேபோன்றுதான் கிழக்கு மாகாணத்தின் அரசியல் வரலாறு என்பதும் காலாகாலமாக யாழ் மேலாதிக்கத் தலைமைகளால் வஞ்சிக்கப்பட்டு வந்திருக்கின்றது. நல்லையா இராசதுரை, தங்கதுரை, அஷ்;ரப் என்று கிழக்கு மாகாணத்தின் தனித்துவங்களுக்காக தமது அரசியல் வாழ்வையே அர்ப்பணித்தவர்கள் பலர். அவர்களின் அந்த ஒடுக்கப்பட்ட கிழக்கு மாகாண மக்களின் பிரதிபலிப்புகளில் இருந்து அந்த ஆளுமைகளின் தொடர்ச்சியாக உருவானதே தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளும் அதன் தலைவர் பொறுப்பில் இருக்கும் சந்திரகாந்தன் அவர்களுமாகும். அதற்கு மேலாக கிழக்கு மாகாணத்தின் முதலாவது முதலமைச்சர் என்கின்ற வரலாற்றுக் கடமையை ஏற்றிருப்பவர் சந்திரகாந்தன்.

கடந்த மூன்று தசாப்பதங்களாக இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டிருக்கின்றது. விரும்பியோ விரும்பாமலோ தமிழரின் அரசியல் அபிலாசைகள் பேச்சுவார்த்தைகள் ஊடாக மட்டுமே தீர்க்கப்பட்டாகவேண்டும் என்பதே புலிகளின் அழிவுக்குப்பின்னரான இன்றைய யதார்தமாகும். இதனை புரிந்துகொண்டதனால்தான் புலிகளின் தாகம் தமிழீழ தாயகம் என்றிருந்த நிலையில் பிரபாகரனை தமிழ் மக்களின் ஏகதலைவனாக ஏற்றுக்கொண்டிருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் இன்று அரசுடன் மாகாணசபைகளுக்கான காணி, பொலிஷ் அதிகாரங்கள் பற்றி பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றன. ஆனால் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னர் கிழக்கு மாகாணசபை உருவாக்கப்பட்டபோது தமிழீழத்தை தவிர மற்ற எதையும் ஏற்றுக்கொள்வது தமிழ்தேசியத் துரோகம் என்று இதே கூட்டமைப்பினரே சர்வதேசம் எங்கும் பறந்து பறந்து  பிரச்சாரம் செய்துவந்தனர்.

கிழக்கு மாகாணசபை உருவாக்கப்பட்டபோது அதை ஏற்றுக்கொள்ளமாட்டோம் என்று பங்கெடுக்காமல் 
புறக்கணித்தவர்கள் இன்று வடமாகாணசபை ஒன்றை உருவாக்குவதற்காக அரசிடம் தவம் கிடக்கின்றனர். இந்த நிலையில்தான் கிழக்கு மாகாணசபை முதலமைச்சராக கடமையேற்ற காலத்தில் இ;ருந்து மாகாணசபைகளுக்கான காணி மற்றும் பொலிஷ் அதிகாரங்கள் வழங்கப்பட்டாக வேண்டும் என்று சந்திரகாந்தன் தனித்து நின்று குரலெழுப்பி வருகின்றார். தாம் இல்லாத மாகாணசபைக்கு தமது ஆளுகைக்குள் கொண்டுவரமுடியாமல் போன கிழக்கு மாகாணத்திற்கு, அதிகாரங்கள் வழங்கப்பட்டால் என்ன? வழங்கப்படாவிட்டால் என்ன? என்கின்ற மாற்றாந்தாய் மனப்பாங்கிலேயே அனைத்து தமிழ் தலைமைகளும் இதுவரை மௌனம் காத்துவந்திருக்கின்றன. 

இன்றைய நிலையில் தமிழ் பேசும் மக்களின் சார்பில் அரசுடன் பேச்சுவார்தையில் ஈடுபடுகின்றோம் என்று சொல்லிக்கொள்ளும் கூட்டமைப்பினர், வடக்கு கிழக்கு இணைப்பு, மாகாணசபைக்கான காணி மற்றும் பொலிஷ் அதிகாரங்கள் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டே அரசுடனான பேச்சுகளை முன்னெடுத்து வருகின்றனர். அரசு கூட வட கிழக்கு மாகாண இணைப்பு என்பதைத் தவிர காணி பொலிஷ் அதிகாரங்கள் பகிர்வு விடயத்தில் தனது இறுக்கத்தைத் தளர்த்தக்கூடிய வாய்ப்புகள் அதிகமாகக் காணப்படுகின்றன. இந்தியாவும் எதிர்பார்ப்பது போல இக்கோரிக்கைகளை தமிழ் கட்சிகள் ஒருமித்து முன்வைக்கின்ற வேளைகளில் 13 வது திருத்தச்சட்;டத்தை முழுமையாக அமூல்படுத்தக்கூடிய சந்தர்ப்பங்கள் புலப்படுகின்றன. அதேவேளை மாகாணசபைகளுக்கான அதிகாரங்கள் பற்றிய எந்தவொரு கோரிக்கைகளுக்கும் இயங்கிக்கொண்டிருக்கும் மாகாணசபைகளுக்குள் இருந்து வெளிப்படுத்தப்படுகின்ற  குரல்களே மேலும் வலுச்சேர்க்க முடியும். எனவேதான் யுத்தத்திற்கு பின்னரான சமாதான முயற்சிகளில் முக்கியமானதொரு காலகட்டமாக இன்றைய காலகட்டம் அமைந்திருக்கின்றது. இந்த சந்தர்ப்பங்களை தமிழ் கட்சிகள் அனைத்தும் இணைந்து சாணக்கியமாக பயன்படுத்துகின்ற பட்சத்தில் அதிகாரப் பகிர்வு விடயங்களில் தமிழ் மக்களின் நீண்டகாலப் பிரச்சனைகள் மாகாணசபைகளை அடிப்படையாகக் கொண்டேனும் தீர்த்து வைக்கக்கூடிய வாய்ப்பு உண்டு. 

இதனடிப்படையில்தான் தமிழ் மக்களின் நீண்டகாலப்பிரச்சனைகளுக்கு தீர்வுகிடைக்கின்ற சந்தர்ப்பத்தினை சாத்தியப்படுத்துவதற்கான  எத்தனங்களில் ஒன்றாகவே கிழக்கு மாகாண முதலமைச்சர் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமைக்கு எழுதியிருக்கின்ற கடிதம் அமைந்திருக்கின்றது. அக்கடிதத்தில்  அவரும் அவரது கட்சியும் கொண்டிருக்கும் கொள்கையின் அடிப்படையில் வடக்குடன் கிழக்கு மாகாணத்தினை இணைப்பதற்கான கூட்டமைப்பினரின் கோரிக்கையை தாம் ஏற்றுக்கொள்ளாத போதும் மற்றைய காணி பொலிஷ் அதிகாரங்களை கோரும் விடயத்தில் தாம் முழுமையாக உடன்படுவதாக தெரிவித்திருக்கின்றார். அதேவேளை  வடக்கு கிழக்கு இணைப்பின் சாத்தியமின்மை  பற்றிய விடயம் பற்றி கூட்டமைப்பினருடன் தாம் பேசத் தயாராய் இருப்பதாகவும் அக்கடிதம் குறிப்பிடுகின்றது. 

தமிழ் சமூகத்துள் காணப்படும் ஏற்றத்தாழ்வுகள், ஆதிக்கங்கள், ஒடுக்கமுறைகள் போன்ற அகமுரண்பாடுகள் பற்றி நமக்குள்ளேயே ஆழமான உரையாடல்களும், புரிந்துணர்வுகளும் தேவை என்பதன் அவசியத்தை முதலமைச்சரின் இக்கோரிக்கை விளம்பிநிற்கின்றது. அதனை ஏற்றுக்கொள்வதோ அல்லது மறுப்பதோ கூட்டமைப்பின் சுதந்திரத்தின் பாற்பட்டது. ஆனால் கிழக்கு மாகாண மக்களின் பெரும்பான்மையான ஆதரவைப் பெற்ற முதலமைச்சர் பதவி வகிக்கின்ற ஒருவரிடமிருந்து எழுதப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த இக்கடிதத்தை தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைமை அணுகிய விதம்  ஆரோக்கியமானதொன்றல்ல. இதுபோன்றதொரு கடிதத்திற்கு நேடியாக பதிலிறுப்பதுதான் அரசியல் பண்பாடாக இருக்கமுடியும். ஆனால் சம்பந்தன் அவர்களோ பினாமி பெயர்களில் ஒழிந்துகொண்டு அக்கடிதத்தினை திரித்து துரோகக்குற்றச்சாட்டுகளுடன் பதிலளித்திருக்கின்றார். ஐம்பது வருட அனுபவங்கள் கொண்ட அரசியல்வாதி, மூத்த அரசியல் தலைவர் யாருக்குமே தெரியாத அநாமதேய அமைப்பொன்றின் பெயரில் பதிலளித்திருப்பதானது ஒரு பண்பட்ட அரசியல்வாதியின் செயற்பாடாக இருக்க முடியாது. தீவிரவாத அமைப்புகளும், பயங்கரவாத அமைப்புகளுமே இப்படியான அநாமதேய பிரசுரங்க@டாக தமது கருத்துகளை வெளிப்படுத்துவதுண்டு. கடந்த காலங்களில் புலிகள் அதனையே செய்துவந்தனர். எல்லாளன் படை, சங்கிலியன் படை என்று தேவையான தருணங்களில் எல்லாம் துரோகக் குற்றச்சாட்டுகளுக்கும் மிரட்டல்களுக்கும் பினாமிப் பெயர்கள் பயன்படுத்தப்பட்டன. ஆனால் அகிம்சை போதித்த தந்தை செல்வாவின் பெயரை வைத்து அரசியல் செய்கின்ற சம்பந்தன் அவர்கள் பயங்கரவாதிகளின் பாணியில் ஒரு முதலமைச்சரின் கடிதத்திற்கு பதிலளித்திருக்கின்றமையானது  இன்னும் இன்னும் புலம்பெயர் வாழ் புலிப்பினாமிகளின் கைப்பொம்மையாக கூட்டமைப்பினர் செயற்பட்டு வருவதையே காட்டுகிறது. சம்பந்தன் அவர்கள் காடுகளுக்கும் மறைந்திருந்து அரசியல் செய்பவர் அல்ல. பினாமி பெயர்களில் உலாவரவேண்டிய அவசியம் ஏன்? உள்ளத்தில் நேர்மையும், நாவினிலே வாய்மையும் இருந்தால் முதலமைச்சரின் கடிதத்திற்கு அவர் நேர்மையாக பதிலளித்திருக்க வேண்டும். ஒரு முக்கியமானதொரு வரலாற்றுச் சூழலில் கிழக்கு மாகாண மக்களின் சுயாட்சி இறைமை பாராதீனப்படுத்தப்பட்டிருக்கும் முதலமைச்சர் சந்திரகாந்தன் அவர்களின் கடிதத்தினை தமிழ் தேசியக் கூட்டமைப்பு அணுகியுள்ள விதம் கடுமையான கண்டத்திற்கு உரியது.


01.01.2012 அன்று சம்பந்தனுக்கு முதலமைச்சர் அனுப்பிய கடிதம்


read more...

Wednesday, 25 January 2012

கிழக்கில் தொடரும் தமிழர்கள் மீதான முஸ்லிம்களின் அடாவடித்தனங்கள்

கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட கறுவாக்கேணி கொண்டயன்கேணி கிராமங்களில் காணப்படுகின்ற அரச காணிகளில் எந்த ஒரு முன்னறிவித்தலும் இன்றி சட்டபூர்வமற்ற முறையில் காணிகளில் அத்துமீறி குடியேறிவரும் முஸ்லிம்களால் (23.01.2012) பெரும் பதற்ற நிலை உருவானது.
இதனை தடுக்கும் முகமாக பொலிசாரினதும் பிரதேச செயலாளர் மற்றும் பிரதேச சபை தவிசாளர் ஆகியோரின் அனுமதியுடனும் பொதுமக்களின் துணையுடன் அங்கு நாட்டிவைக்கப்பட்டிருந்த வேலிகள் அகற்றப்பட்டதுடன், அங்கு உருவான முரண்பாடுகள் சுமுக நிலைக்கு கொண்டுவரப்பட்டது.
அதனைத் தொடர்ந்து சுமுக நிலைக்கு கொண்டுவரப்பட்ட பின்பும் மீண்டும் பிரதேச செயலாளர் பொலிசாரின் கட்டுப்பாட்டையும் மீறி அங்கு அத்து மீறி முஸ்லிம்கள் காணிகளை அபரிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்வதனால் ஒரு பதற்ற நிலை காணப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இவ் அத்து மீறல் நடவடிக்கை  பொலிசாரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டு சட்டநடவடிக்கைக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அறியப்படுகின்றது.
read more...

கிழக்கு மாகாணத்தின் ஜனநாயத்தின் திறவு கோல் ரி.எம்.வி.பி. என்ற அடிப்படையை ஏற்றே ஆகவேண்டும்.

கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்ட அமைதி நிலை மற்றும் ஜனநாகவழி என்பவற்றிற்கு முதலில் வழி கோலியது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிதான் என்ற உண்மையை ஏற்றே ஆக வேண்டும். அந்த அடிப்படையிலே தமிழ் மக்களின் குறிப்பாக கிழக்கு மக்களின் எதிர்காலத்திலும் அவர்களது நலன்களிலும் அதிக அக்கறை கொண்ட கட்சி என்ற அடிப்படையிலேயே தான் தமிழ் தேசிய கூட்டைப்பின் தலைவர் இரா சம்பந்தனுக்கு தமிழ் மக்னகள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் கடிதம் எழுதியிருந்தார். ஆனால் இதனைப் சகித்துக் கொள்ள முடியாத ஒருசிலர் பொங்கல் விழாக்களிலே கொக்கரிக்கின்றார்கள். வேதனை அளிக்கின்றது பொறுத்திருந்;து பார்ப்போம் காலம் பதில் சொல்லும்.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் மற்றும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தனினால் 01.01.2012ம் திகதி இடப்பட்டு தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுத்தலைவர் இரா.சம்மந்தன் அவர்களுக்கு எழுதிய மடலுக்கு இன்று வரை அவரால் பதில் வழங்க முடியவில்லை என்றால் எப்படி தமிழ் பேசும் மக்களின் பிரச்சினையை தீர்க்க முன்வரப் போகிறார்கள் என்று தெரியவில்லை.
கிழக்கு மாகாண சபை அமைக்கப்பட்டதிலிருந்து ஒவ்வொரு சபை அமர்வுகளிலும் மற்றும் மத்திய அரசிடமும் 13வது திருத்தச் சட்டத்தின் காணி காவல் துறை அதிகாரங்களை வழங்குவது தொடர்பில் மாற்று கருத்து இல்லாமல் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியும், அதன் தலைமையும், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களும் கோரிய வண்ணமே உள்ளனர். ஆனால் தமிழ் சுயநிர்ணய உரிமை வடக்கு கிழக்கு இணைப்பு என்று பலதரப்பட்ட கருத்துக்களை கூறி வந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு,3 1ஃ2 வருடங்களாக ஆட்சி புரியும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் கோரிக்கையினை பழம் பெரும் கட்சி இன்றுதான் புரிந்திருக்கின்றது. யதார்த்தத்தினை இன்றாவது புரிந்து கொண்டமைக்கு தமிழ் மக்கள் சார்பில் நன்றி சொல்ல வேண்டும். ஆனால் உண்மையை உணர்ந்தாலும் வறட்டு பிடிவாதங்கள் குறைந்ததாக தெரியவில்லை. யார் விரும்பியோ விரும்பாமலோ கிழக்கு தமிழ் மக்களின் அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்று இத் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி தலைவர், கிழக்கு மாகாண முதலமைச்சராகவும், கட்சியின் பிரதிநிதிகள் மாகாண சபை உறுப்பினர்களாகவும் தெரிவு செய்யப்பட்டு கிழக்கில் மக்கள் பலம் பொருந்திய கட்சியாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி ஆட்சி புரிந்து வருகின்றது.
இந்நிலையில் தூரநோக்குடனான சிந்தனையுடன் செயற்பட வேண்டியது தமிழ் அரசியல் தலைமைத்துவங்களின் பொறுப்பாகும். யுத்தத்தின் கொடுரத்தினால் பாரிய இழப்புக்களை சந்தித்த தமிழ் சமூகம் இன்று அடுத்த கட்டத்திற்கு காலடி எடுத்து வைப்பதற்கு பல தேவைப்பாடு பூர்த்தி செய்ய வேண்டிய பொறுப்பு உள்ளது. கணவனை இழந்த பெண்கள், அங்கங்களை இழந்த இளம் சமூகம், குடும்பத்தினை தொலைத்த சிறுவர்கள், கல்வியினை தொலைத்த ஒரு தலைமுறை, வாழ்வாதாரம் இழந்து எதிர்பார்ப்புடன் ஏங்கித்தவிக்கும் சமூகத்தினர் என்று தமிழ் பேசும் மக்களின் உடனடி பூர்த்தி தேவைகள் பல இருக்கின்றது. இவற்றை நிவர்த்தி செய்ய வேண்டியது அரசியல் தலைமைகளின் பொறுப்பு.
3 1/2 வருடங்களாக ஆட்சிக்கு வந்தாலும் தமிழ் பேசும் மக்களின் தேவைகளை உணர்ந்து மிகத்துரிதமாக அனைத்து சமூக பொருளாதார, உட்கட்டமைப்பு வசதிகளை, இருக்கும் அதிகாரத்துக்குள் வருவித்து துரித வளர்ச்சியை அடையச் செய்த தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் தீர்க்க தரிசனமான அரசியல் சிந்தனையுடன் மாகாண சபைக்கான அதிகாரங்களை கேட்பதற்கு ஒருமித்த கருத்துடன் உள்ளனர்.
இது சம்பந்தமாக தனித்து தனித்து இருந்து செயற்பட்டதால் ஏற்பட்ட கடந்த கால அழிவுகளைக் கருத்தில் கொண்டு பேச்சு வார்த்தைக்கு அழைப்பு விடுக்கப்பட்ட போதும் அதற்கான பதில் கடிதம் கூட எழுத முடியாது கிழக்கு வெகுஜன அமைப்பு ஒன்றியம் என்ற பெயரில் மீண்டும் தமிழர்களை குழிதோண்டி புதைக்கும் அரசியல் நாடகம் நடாத்துவது ஏற்புடையதல்ல என்பதை தமிழ் தேசிய கூட்டமைப்பு விளங்கிக் கொள்ள வேண்டும். தாம் சார்ந்த இனத்துக்கும் தமக்கு வாக்களித்த மக்களுக்கும் சேவை செய்ய வேண்டிய பொறுப்பு உள்ளதென்பதை இவர்கள் நன்கு உணர்ந்து கொள்ள வேண்டும்.
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் எழுத்து மூலமாக இருக்கின்ற மாகாண சபை முறைமையினை பலப்படுத்துவதே இன்றைய தேவை என்பதை மக்களும் மக்கள் நலம் சார்ந்து சிந்திக்கும் தலைவர்களும் உணர்ந்துள்ள நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு உணர்ந்திருந்தால் முதலமைச்சருடைய கடிதத்திற்கு நிச்சயம் பதில் அனுப்பியிருப்பார்கள். இன்றுவரை பதில் அனுப்பாததும் அதனை தாங்கள் அரசியல் ரீதியாக கையாள முற்படுவதும் போலித்தனமானது என்று தெரிந்தும் தங்களை தாங்களே ஏமாற்ற முற்படுகிறார்கள் என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.
read more...

அரியநேந்திரனின் அரசியல் பிரவேசத்திற்கு முன்னரே அதிகாரத்திற்காக போராடியவர் பிள்ளையான்

முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் கடந்த 01.01.2012 அன்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் அவர்களுக்கு பிகரங்க மடல் ஒன்றினை அனுப்பி இருந்தார். அதன் சாராம்சம் வடக்கு கிழக்கு இணைப்பு தவிர்ந்த ஏனைய அதிகாரங்கள் தொடர்பில் தான் பேசத் தயார் என்பதே அதுவாகும்.
இன்றைய(24.01.2012) தகவல்களின்படி தமிழ் தேசிய கூட்டமைப்பு முதலமைச்சர் சந்திரகாந்தனின் கடித்திற்கு சாதகமான பதிலை ஓரிரு தினங்களில் அனுப்பி இரா சம்பந்தனுக்கும் சிவநேசதுரை சந்திரகாந்தனுக்குமிடையில் முக்கிய சந்திப்பொன்றும் இடம்பெற உள்ளதாக பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த வேளையிலே தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் அறிக்கை அரசனுமான அரியநேந்திரன் கடந்த 22.01.2012 பளுகாமத்தில் இடம்பெற்ற பொங்கல் நிகழ்விலே அன்று காணி, பொலிஸ் அதிகாரம் வேண்டாம் என்றவர்கள் இன்று தமிழ் தேசிய கூட்டடைப்பிற்கு கடிதம் எழுதுகின்றனர்.”என பேசியிருந்தார். நான் அவரிடம் ஒன்றை கேட்க விரும்புகின்றேன். அதாவது தங்களது தமிழ் தேசிய கூட்டமைப்பானது புலிகளின் ஆயுதப் போராட்டம் முடிவுற்ற பின்னர்தான் அதிகாராம் பற்றி பேச ஆரம்பித்தார்கள். பிள்ளையான் அவ்வாறல்ல என்று முதலமைச்சராக பதவி ஏற்றாரோ அன்றிலிருந்து அதிகாரம் தொடர்பில் பேசத் தொடங்கி விட்டார்.
ஏன் தாங்கள் கூட அரசியிலில் பிரவேசித்த காலத்திலே என்றாவது இது தொடர்பில் சிந்தித்து இருப்பீர்களோ? அல்லது விடுதலைப் போராட்டத்திற்காக தங்களது குடும்பத்திலோ அல்லது தாங்களோ நேரடி பங்களிப்பு ஏதும் செய்தவரோ? என்று சிந்திக்க வேண்டும். ஆனால் தாங்கள் சொல்கின்ற அந்த பிள்ளையான் தனது 15ஆவது வயதிலே விடுதலைப் போராட்டத்தில் இணைந்து தமிழ் மக்களின் உரிமைக்காக சுமார் பதினைந்து வருடம் போராடி விழுப்புண் அடைந்த வரலாறு தங்களுக்கு தெமரியுமோ என்ன? அதெல்லாம் தெரியாமலா என்ன. தங்களுக்கு ஏதாவது ஒரு நாள் பேசி அது சுடரொளி பத்திரிகையிலும் தமிழ் வின் இணையத்தளத்திலும் வரவேண்டும் அப்படி இருந்தால் போதும் ஐயாவுக்கு.
நான் உண்மையான மட்டக்களப்பானுக்கு பிறந்தவன் என்ற வகையில் நினைக்கின்றேன் தற்போது பிள்ளையானின் கடிதம் தங்களுக்கு புளிகரைக்குது போல ஏன் என்றால் பிள்ளையானுடன் தமிழ் தேசிய கூட்டமைப்பு பேசினால் தனது வண்டவாளங்கள் உண்மை நிலை தலைமைக்கு தெரிய வந்தால் தான் ஓரங்கட்டப்பட்டுவிடுவேனோ என்ற பயம் இருக்குப்போல அதுதான் ஐயா கொக்கரிக்கிறார்.
அறிக்கை மன்னன் அவர்களே பி;ளளையான் தங்களது தலைமைக்கு எழுதிய கடித்ததை முதலில் முழுமையாக படியுங்கள் அதன் மேடைகளில் விமர்சியுங்கள். கிழக்கு மாகாண சபை ஒன்று இல்லை அதற்கு ஒரு முதலமைச்சர் இல்லை என்று கிழக்கு மானகாண மக்களின் மனதை புண்படுத்திய தங்களது தலைமைக்கு கடிதம் எழுதியிருக்கின்றார் என்றால் அது அவரது பெரிய மனதை எங்களுக்கு காட்டுகின்றது. தனது குறுகிய அரசியல் நோக்கங்கள் அதிலே எதுவும் இல்லை என்பதனை அவர் தெளிவாக குறிப்பிடட்டிருந்தார். ஒட்டுமொத்த தமிழ் மக்னகளின் நலனுக்காக செயற்படுபவன் என்ற வகையிலே அதனை எழுதி இருந்தார் என்பதனை தாங்கள் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.
இவ்வளவு பெருமனதுடன் ஒரு மட்டக்களப்பான் எழுதிய கடித்திற்கு இன்னொரு மட்டக்களப்பான் விமர்சிப்பதென்பது உண்மையில் வேதனையளிக்கிறது. எது எப்படியோ இப்படியான மட்டக்களப்பானும் இன்றும் இருக்கத்தான் செய்கின்றான். மக்கள் பதில் சொல்வார்கள் .
நன்றி
மட்டு நரசிம்மன்.
read more...