Saturday, 14 January 2012

இலங்கை முஸ்லிம்கள் உண்மையான முஸ்லிம்களா? அல்லது தமிழர்களா?

இன்று மட்டக்களப்பில் தமிழர் பிரதேசங்களில் முஸ்லிம்கள் காணி பிடித்தல் சிலை உடைப்பு என்று பல பிரச்சினைகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. கிழக்கிலே குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் பரவலாக முஸ்லிம்கள் வேண்டுமென்றே சில அரசியல்வாதிகளின் பின்னணியில் தமிழர் பிரதேச நிலங்களை பிடித்து  வருகின்றனர். இவ்வாறு தொடர்ச்சியாக பல விடயங்கள் இடம்பெற்று வருகின்றன.

ஆனால் இலங்கையில் இருக்கும் முஸ்லிம்கள் உண்மையில் முஸ்லிம்களா அல்லது தமிழர்களா? 


மட்டக்களப்பில் இன்றுள்ள தமிழர்களில் பெருபான்மையாக இருப்பவர்கள் முற்குகர்களேயாகும். இவர்கள் கூட மட்டக்களப்பின் முற்குடிகள் அல்ல. அதற்குமுன்பே இங்கே வாழ்ந்திருக்கக் கூடிய திமிலர்கள் எனும் மீன்பிடியை தொழிலாக கொண்டவர்கள் துரத்தியடித்த பின்னே இவர்கள் இங்கு குடியேறியுள்ளனர். இலங்கையின் பூர்வீக குடிகளில் ஒன்றான இயக்கர்களும் மீன்பிடித்தலையே தொழிலாக கொண்டிருந்தனர் என்பதுவும் இங்கே நோக்கற்பாலது.
எனவே காலப்போக்கில் இந்த இயக்கர்களே திமிலர் என அடையாளப்பட்டிருந்தல் கூடும். திமிலதீவு, வலையிறவு போன்ற மட்டக்களப்பு வாவியின் கரையோர கிராமங்கள் இந்த திமிலர்களின் அடையாளங்கள் ஆகும். இவர்களுடன் அடிக்கடி புதிதாக குடியேறிய முற்குகர்கள் கொண்ட சண்டையானது இறுதியில் அவ்வேளை வியாபார நிமித்தம் ஆப்கானிஸ்தான், துருக்கி போன்றவற்றிருந்து இங்கு வந்து சென்ற பட்டாணிகள் உதவியுடனேயே முடிவுக்கு வந்துள்ளது.
திமிலர்களால் முற்குகர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களை இவர்களே தடுத்து நிறுத்தியுள்ளனர்.மட்டக்களப்பின் வடக்கே அமைந்துள்ள ‘ஏறாவூர்’ எனுமிடம் திமிலர்கள் ஊருக்குள் நுழையாமல் ஏற்படுத்தப்பட்ட தடை குடியிருப்பு ஆகும். அதாவது முக்குகர்கள் தமது சகோதரிகளை பட்டாணிகளுக்கு மணம் முடித்து கொடுத்து காவல் காப்பதற்காக ஏறாவூரில் இருத்தினராம். இதைதாண்டி திமிலர்கள் உள்நுழைய கூடாது என்பதற்காக ‘ஏறாவவூர்’ என அழைக்கப்படலாயிற்று என விபரிக்கிறது மட்டக்களப்பு மான்மீக கல்வெட்டுபாடல்.
இங்கு முக்குகர்களின் குடியேற்றம் என்று ஆரம்பித்ததோ அன்றே மட்டக்களப்பு பட்டாணியர்களின் (இன்றைய முஸ்லிம்களின் மூதாதையர்) வரவும் ஆரம்பித்திருக்கிறது. அவர்கள் மட்டக்களப்பின் காவர்களாக தமது உதிரத்தை சிந்திய மண் இது. ழூதிமிலரை துரத்தி சென்று திரும்பிவரும்போது பலரும் சந்தித்த வெளி சந்திவெளி எனவும் எதிரியை கொன்ற இடம் சத்துருகொன்றான் எனவும், சண்டையின் பின் வந்தேறிய (ஆறிய) இடம் வந்தாறுமூலை எனவும் மட்டக்களப்பில் முற்குகர்களும் பட்டாணியர்களும் நிலைகொண்டு வாழ்வதற்காக நடத்தியபோரின் வரலாற்றுத் தடயங்கள் கிராமங்களின் பெயர்களாகி இன்றும் காணப்படுகிறது.
அதுமட்டுமன்றி இந்த பட்டாணியர்கள் மணமுடித்துகொண்ட முற்குல பெண்களினு காவப்பட்டு வரும் குடிப்பெயர்கள் இன்று வரை மட்டக்களப்பு முஸ்லிம்களிடையேயும் காணப்படுவதும் மட்டக்களப்பு தமிழர்களும் முஸ்லிம்களும் ஒரே தாயின் பிள்ளைகள் என்பதை சொல்லி நிற்கிறது.
மட்டக்களப்பானது தமிழர்களுக்கு தன்னோடுள்ள பாத்தியதைக்கு என்ன எல்லையை கொண்டுள்ளதோ அந்த எல்லைவரை இன்றைய முஸ்லிம்களுக்கு மட்டக்களப்பு ீதுள்ள பாத்தியதையும் செல்லும் என்பதை இங்கே நாம் காண தவற கூடாது.இன்றைய உலகில் உள்ள மிக தொன்மையான ப10கோள வரை படங்களுள் முக்கியமானதொன்று தொலமி வரைந்த படமாகும். இதில் இலங்கை குறிப்பிடப்பட்டுள்ளதோடு கி.மு.147 வரையப்பட்ட இப்படத்தில் கல்முனை உள்ள இடம் குறிப்பிடப்பட்டுள்ளது.
கல்முனை துறைமுகத்தை அன்றைய கடலோடி வியாபாரிகள் தரிசித்துள்ளனர் என்பதற்கான மிகத் தொன்மையான ஆதாரமாகும். அப்போது வந்த பாரசீக வியாபாரிகளே இலங்கைக்கு இந்த முகவரியை தேடி தந்தவர்கள். .
வியாபார நோக்கத்துடன் வந்த பட்டாணிகள் தமிழ் பெண்களை கல்யாணம் முடித்திருக்கின்றனர் என்பதனை வரலாறு சொல்கின்றது. பட்டாணி ஆணுக்கும் தமிழ் பெண்ணுக்கும் பிறந்த சந்ததி முஸ்லிம் சந்ததியா தமிழ் சந்ததியா? 

Post Comment


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

16 comments: on "இலங்கை முஸ்லிம்கள் உண்மையான முஸ்லிம்களா? அல்லது தமிழர்களா?"

Rocket Tamil said...

அறியாதவர்கள் அறியவேண்டிய அவசியப் பதிவு நண்பா!

வாழ்த்துக்கள் தொடருங்கள்.

Robin said...

தமிழன் என்ற உணர்வு உள்ள எல்லாரும் தமிழர்கள்தான். இதில் சாதி மதத்திற்கு எந்த தொடர்பும் இல்லை.

காட்டான் said...

இது எனக்கு புதிய தகவல்..!!

சந்ரு said...

//Rocket Tamil கூறியது...
அறியாதவர்கள் அறியவேண்டிய அவசியப் பதிவு நண்பா!

வாழ்த்துக்கள் தொடருங்கள்.//

வருகைக்கு நன்றிகள் நண்பா..

இன்னும் பல விடயங்கள் இருக்கின்றது நண்பா...

சந்ரு said...

//Robin கூறியது...
தமிழன் என்ற உணர்வு உள்ள எல்லாரும் தமிழர்கள்தான். இதில் சாதி மதத்திற்கு எந்த தொடர்பும் இல்லை.//

சாதி மதம் கடந்து தமிழன் என்று வாழ நினைத்திரந்தால் சுவாமி விவேகானந்தரின் சிலையை உடைத்திருப்பார்களா?

சந்ரு said...

//காட்டான் கூறியது...
இது எனக்கு புதிய தகவல்..!!//

பழைய தகவல் என்பதனால் உங்களைப் போன்ற இளைஞர்களுக்கு தெரியாது

Rocket Tamil said...

"சிறுபான்மையினரை விழுங்கும் சிறுபான்மையினர்"

http://rockettamilnews.blogspot.com/

Anonymous said...

பட்டாணி ஆணுக்கும் தமிழ் பென்னும்க்கும் பிறந்த சந்ததி முஸ்லிம் சந்ததியா தமிழ் சந்ததியா?

தமிழ் பேசும் எவனும் தமிழன் தான். ஒரு மதம் மட்டும் இதை எல்லாம் நாசமாக்குவது என்று அலைகிறது.

பி.அமல்ராஜ் said...

வணக்கம் அண்ணா,

மிகவும் புதிய தகவல் ஒன்றை சொல்லித்தந்திருக்கிறீர்கள். மிக்க நன்றி.

சந்ரு said...

//பி.அமல்ராஜ் கூறியது...
வணக்கம் அண்ணா,

மிகவும் புதிய தகவல் ஒன்றை சொல்லித்தந்திருக்கிறீர்கள். மிக்க நன்றி.//

இது மட்டக்களப்பு மான்மிய கல்வெட்டு மற்றும் பல சான்றுகள் கூறும் உண்மைகள்.வருகைக்கு நன்றிகள்

Anonymous said...

‘கலியான செப்பு’ எனும் கரவாகு பகுதியில் இருக்கும் கல்வெட்டு பாடல்
மட்டக்களப்பு மான்மீக கல்வெட்டுபாடல்.

இவ்விரண்டையும் வலையேற்ற இயலுமா?

நன்றி

சிராஜ் said...

சந்துரு,

இலங்கைத் தமிழர்கள் பற்றி எனக்கு தெரியாது, அவர்கள் சார்பாக நான் பதிலும் அளிக்க முடியாது. ஆனால் நான் இந்தியாவில் வாழும் தமிழ் பேசும் முஸ்லிம், எனது கருத்தை நான் தெரிவிக்கிறேன்.

நான் முதலில் ஒரு முஸ்லிம்,
இரண்டாவதும் ஒரு முஸ்லிம்,
மூன்றாவதும் ஒரு முஸ்லிம்,
....
....
ஒரு லட்சமாவதும் ஒரு முஸ்லிம்,
ஒரு லட்சத்து ஒன்று நான் ஒரு இந்தியன்,
ஒரு லட்சத்து இரண்டு நான் தமிழன்.....

சந்தேகம் தீர்ந்ததா??? என்ன செய்யப் போறீங்க?????

சிராஜ் said...

சாரி சந்துரு,

சொல்ல மறந்த கதை..... மைனஸ் வோட்டு ஒன்னு.... ஏன்னா??? தமிழ் முஸ்லிம் மற்றும் தமிழ் இந்துக்களுக்கு இடையே இலங்கையில் சுமூக சூழல் இல்லாத நிலையில். அதற்க்கான முயற்சிகளை எடுக்காமல், மீண்டும் மீண்டும் இனவாதத்தை தூண்டுவதால். ஒரே ஒரு விஷயம் சந்துரு, இது போன்ற தொடர் இடுகைகள் உங்களைத்தான் பாதிக்கும். இதை நீங்கள் உணர்ந்து கொள்வது நல்லது.
இஸ்லாத்தை பற்றி நீங்கள் புதிதாக விமர்சிக்க எதுவுமே இல்லை. நீங்கள் விமர்சிப்பதெல்லாம் ஜுஜுபி. எனக்கு தெரிந்த ஆங்கில தளங்களுடன் ஒப்பிடுகையில் நீங்களெல்லாம் ஒன்றுமே இல்லை. உங்கள் மீது தமிழகத்தில் இருக்கும் மதிப்பை கெடுத்துக் கொள்ளாதீர்கள். இது கூட, எங்களுடைய பதில்களால் உங்கள் இடையே மீண்டும் பிரச்சனை வரக்கூடாது என்ற நல்லெண்ணத்தில் தான் சொல்கிறேன். இதை நீங்கள் எப்படி வேண்டுமென்றாலும் எடுத்துகொள்ளலாம்.

சந்ரு said...

முயற்சிக்கின்றேன் நண்பா..

சந்ரு said...

இதற்குரிய பதிலையும் கீழே தருகிறேன்

சந்ரு said...

உங்கள் கருத்துக்களுக்கு நண்றிகள் நண்பா.. மாற்றுக் கருத்து இருந்தால் நிட்சயமாக மைனஸ் வோட்டு போடுவதில் தவறில்லை. சில விடயங்களை சொல்கின்றேன். கிழக்கில் தமிழ் முஸ்லிம் உறவில் விரிசலை ஏற்படுத்துவதற்கு பலர் சதித் திட்டங்களை ஏற்படுத்தி வருகின்றனர்.

சில முஸ்லிம் அரசியல்வாதிகள் சிலர் இதற்கு பின்புலமாக இருக்கின்றனர். இதன் பிரதிபலிப்புத்தான் அண்மையில் நடந்த சம்பவங்கள். ஊடகங்கள் கூட இவற்றைக் கண்டும் காணாமல் இருந்தன. அவ் விடயங்களை நான் உடனுக்குடன் சுட்டிக்காட்டியதன் பயனாக இவ் விடயங்கள் தொடர்பில் அனைவர் பார்வையும் திரும்பி இருக்கின்றது. சுவாமி விவேகானந்தரின் சிலை உடைத்தவர்கள் யார் என அடையாளம் காணப்பட்டுள்ளது. விரைவில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்விடயங்களை வெளியிட்டதன் பயனாக தமிழ் முஸ்லிம் உறவில் விரிசல் ஏற்பட சதித் திட்டங்கள் இடம்பெறுகின்றன என்று எல்லோரும் விழிப்பாக இருக்கின்றனர். நான் இனவாதத்தை தூண்டவில்லை இனவாதத்துக்கான சதிகள் இடம்பெறுவதனை சம்பவங்களுடன் சுட்டிக் காட்டியிருந்தேன்.

Post a Comment