Wednesday 25 January 2012

கிழக்கு மாகாணத்தின் ஜனநாயத்தின் திறவு கோல் ரி.எம்.வி.பி. என்ற அடிப்படையை ஏற்றே ஆகவேண்டும்.

கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்ட அமைதி நிலை மற்றும் ஜனநாகவழி என்பவற்றிற்கு முதலில் வழி கோலியது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிதான் என்ற உண்மையை ஏற்றே ஆக வேண்டும். அந்த அடிப்படையிலே தமிழ் மக்களின் குறிப்பாக கிழக்கு மக்களின் எதிர்காலத்திலும் அவர்களது நலன்களிலும் அதிக அக்கறை கொண்ட கட்சி என்ற அடிப்படையிலேயே தான் தமிழ் தேசிய கூட்டைப்பின் தலைவர் இரா சம்பந்தனுக்கு தமிழ் மக்னகள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் கடிதம் எழுதியிருந்தார். ஆனால் இதனைப் சகித்துக் கொள்ள முடியாத ஒருசிலர் பொங்கல் விழாக்களிலே கொக்கரிக்கின்றார்கள். வேதனை அளிக்கின்றது பொறுத்திருந்;து பார்ப்போம் காலம் பதில் சொல்லும்.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் மற்றும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தனினால் 01.01.2012ம் திகதி இடப்பட்டு தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுத்தலைவர் இரா.சம்மந்தன் அவர்களுக்கு எழுதிய மடலுக்கு இன்று வரை அவரால் பதில் வழங்க முடியவில்லை என்றால் எப்படி தமிழ் பேசும் மக்களின் பிரச்சினையை தீர்க்க முன்வரப் போகிறார்கள் என்று தெரியவில்லை.
கிழக்கு மாகாண சபை அமைக்கப்பட்டதிலிருந்து ஒவ்வொரு சபை அமர்வுகளிலும் மற்றும் மத்திய அரசிடமும் 13வது திருத்தச் சட்டத்தின் காணி காவல் துறை அதிகாரங்களை வழங்குவது தொடர்பில் மாற்று கருத்து இல்லாமல் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியும், அதன் தலைமையும், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களும் கோரிய வண்ணமே உள்ளனர். ஆனால் தமிழ் சுயநிர்ணய உரிமை வடக்கு கிழக்கு இணைப்பு என்று பலதரப்பட்ட கருத்துக்களை கூறி வந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு,3 1ஃ2 வருடங்களாக ஆட்சி புரியும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் கோரிக்கையினை பழம் பெரும் கட்சி இன்றுதான் புரிந்திருக்கின்றது. யதார்த்தத்தினை இன்றாவது புரிந்து கொண்டமைக்கு தமிழ் மக்கள் சார்பில் நன்றி சொல்ல வேண்டும். ஆனால் உண்மையை உணர்ந்தாலும் வறட்டு பிடிவாதங்கள் குறைந்ததாக தெரியவில்லை. யார் விரும்பியோ விரும்பாமலோ கிழக்கு தமிழ் மக்களின் அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்று இத் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி தலைவர், கிழக்கு மாகாண முதலமைச்சராகவும், கட்சியின் பிரதிநிதிகள் மாகாண சபை உறுப்பினர்களாகவும் தெரிவு செய்யப்பட்டு கிழக்கில் மக்கள் பலம் பொருந்திய கட்சியாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி ஆட்சி புரிந்து வருகின்றது.
இந்நிலையில் தூரநோக்குடனான சிந்தனையுடன் செயற்பட வேண்டியது தமிழ் அரசியல் தலைமைத்துவங்களின் பொறுப்பாகும். யுத்தத்தின் கொடுரத்தினால் பாரிய இழப்புக்களை சந்தித்த தமிழ் சமூகம் இன்று அடுத்த கட்டத்திற்கு காலடி எடுத்து வைப்பதற்கு பல தேவைப்பாடு பூர்த்தி செய்ய வேண்டிய பொறுப்பு உள்ளது. கணவனை இழந்த பெண்கள், அங்கங்களை இழந்த இளம் சமூகம், குடும்பத்தினை தொலைத்த சிறுவர்கள், கல்வியினை தொலைத்த ஒரு தலைமுறை, வாழ்வாதாரம் இழந்து எதிர்பார்ப்புடன் ஏங்கித்தவிக்கும் சமூகத்தினர் என்று தமிழ் பேசும் மக்களின் உடனடி பூர்த்தி தேவைகள் பல இருக்கின்றது. இவற்றை நிவர்த்தி செய்ய வேண்டியது அரசியல் தலைமைகளின் பொறுப்பு.
3 1/2 வருடங்களாக ஆட்சிக்கு வந்தாலும் தமிழ் பேசும் மக்களின் தேவைகளை உணர்ந்து மிகத்துரிதமாக அனைத்து சமூக பொருளாதார, உட்கட்டமைப்பு வசதிகளை, இருக்கும் அதிகாரத்துக்குள் வருவித்து துரித வளர்ச்சியை அடையச் செய்த தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் தீர்க்க தரிசனமான அரசியல் சிந்தனையுடன் மாகாண சபைக்கான அதிகாரங்களை கேட்பதற்கு ஒருமித்த கருத்துடன் உள்ளனர்.
இது சம்பந்தமாக தனித்து தனித்து இருந்து செயற்பட்டதால் ஏற்பட்ட கடந்த கால அழிவுகளைக் கருத்தில் கொண்டு பேச்சு வார்த்தைக்கு அழைப்பு விடுக்கப்பட்ட போதும் அதற்கான பதில் கடிதம் கூட எழுத முடியாது கிழக்கு வெகுஜன அமைப்பு ஒன்றியம் என்ற பெயரில் மீண்டும் தமிழர்களை குழிதோண்டி புதைக்கும் அரசியல் நாடகம் நடாத்துவது ஏற்புடையதல்ல என்பதை தமிழ் தேசிய கூட்டமைப்பு விளங்கிக் கொள்ள வேண்டும். தாம் சார்ந்த இனத்துக்கும் தமக்கு வாக்களித்த மக்களுக்கும் சேவை செய்ய வேண்டிய பொறுப்பு உள்ளதென்பதை இவர்கள் நன்கு உணர்ந்து கொள்ள வேண்டும்.
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் எழுத்து மூலமாக இருக்கின்ற மாகாண சபை முறைமையினை பலப்படுத்துவதே இன்றைய தேவை என்பதை மக்களும் மக்கள் நலம் சார்ந்து சிந்திக்கும் தலைவர்களும் உணர்ந்துள்ள நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு உணர்ந்திருந்தால் முதலமைச்சருடைய கடிதத்திற்கு நிச்சயம் பதில் அனுப்பியிருப்பார்கள். இன்றுவரை பதில் அனுப்பாததும் அதனை தாங்கள் அரசியல் ரீதியாக கையாள முற்படுவதும் போலித்தனமானது என்று தெரிந்தும் தங்களை தாங்களே ஏமாற்ற முற்படுகிறார்கள் என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.

Post Comment


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "கிழக்கு மாகாணத்தின் ஜனநாயத்தின் திறவு கோல் ரி.எம்.வி.பி. என்ற அடிப்படையை ஏற்றே ஆகவேண்டும்."

Post a Comment