Sunday 30 January 2011

உரிமை இழந்தோம், உடமை இழந்தோம், உயிரை இழக்கலாமா?


நம் தமிழ் உறவுகளுக்காக குரல் கொடுப்போம்.




இணைய தள முகவரி- savetnfisherman.org

ட்விட்டர் முகவரி- twitter.com/savetnfisherman 

பேஸ்புக் முகவரி - http://www.facebook.com/savetnfisherman

உங்களுடைய ஆதரவரை இந்திய அரசுக்கு அனுப்ப -Fill This Form


காலத்துக்கு பொருத்தமான பாடல்கள்.






read more...

Friday 28 January 2011

தமிழக மீனவர்களும் வலைப்பதிவர்களும்.

மட்டக்களப்பில் தொடரும் மழை 

மட்டக்களப்பு மாவட்டத்திலே மீண்டும் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கின்றது. வெள்ளம் வடிந்தோடிய பல பகுதிகள் மீண்டும் வெள்ளத்தில்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்னும் சரியான முறையில் நிவாரணங்கள் வழங்கப்படவில்லை. இன்னும் எந்தவிதமான நிவாரணங்களையும் பெறாமல் பல மக்கள் இருக்கின்றனர்.

மீண்டும் மழை பெய்துகொண்டிருப்பதனால் மட்டக்களப்பு மக்கள் இன்னும் பல கஸ்ரங்களை எதிர்காலத்தில் எதிர்நோக்க வேண்டி ஏற்படும். 

காரணம் விவசாயம். மீன்பிடி உட்பட பல்வேறுபட்ட தொழில்கள் வெகுவாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றன. இவை பற்றி விரிவான ஒரு பதிவு பின்னர் வரும்.



தமிழக மீனவர்களும் வலைப்பதிவர்களும்.

நம் ஒவ்வொருவருக்கும் தமிழன் என்ற உணர்வு இருக்கவேண்டும். உலகில் எந்தவொரு மூலையிலாவது ஒரு தமிழனுக்கு ஏதாவது ஒன்று நடந்துவிட்டால் நாம் ஒவ்வொரு தமிழனும் இன மத சாதி பிரதேச வேறுபாடுகளை மறந்து பாதிக்கப்பட்ட தமிழனுக்காக குரல் கொடுக்க வேண்டும்.

அந்தவகையில் தமிழக வலைப்பதிவர்களை பாராட்டுவதோடு அவர்களின் ஒற்றுமை தன்னம்பிக்கை விடாமுயற்சி என்பன ஒவ்வொரு தமிழனுக்கும் வலைப்பதிவருக்கும் பாடமாக அமைய வேண்டும்.

அவர்களின் ஒற்றுமை தன்னம்பிக்கை விடாமுயற்சி என்பனவற்றுக்கு எடுத்துக்காட்டு…




read more...

600 பொலிசாரையும் கொலைசெய்த பொறுப்பு கருணாவையே சாரும


முன்னாள்  SSP டசி   செனவிரத்தின பிரேமதாசாவின் ஆட்சிக்காலத்தில்  (1990) முன்னாள் விடுதலைப்புலிகளின்  கிழக்குப்பிராந்திய தளபதியான கருணா சரணடைந்த 600 பொலிஸ் உத்தியோகத்தர்களையும் சுட்டுக்கொண்டார். இக் கொலை தொடர்பில் இன்னும் எவ்.விதமான விசாரனையும் மேற்கொள்ளப்படவில்லை. அக்கொலைக்கு முழுப் பொறுப்பும் வாய்ந்தவர் தற்போதைய மீழ்குடியேற்ற பிரதியமைச்சர் வி.முரளிதரன் என கடந்த (24.01.2011)  அன்று    LLRC   முன்னிலையில் சாட்சியமளித்த முன்னாள் பிரதிப்பொலிஸ் மா அதிபர் டசி செனவிரத்ன தெரிவித்தார்.
 
அது போன்ற மிலேச்சத்தனமான பயங்கரமான படுகொலைகலைச் செய்தவர் இன்று அரசின்  கட்சியின் உப தலைவரும் பிரதி அமைச்சருமாவார். இவருக்கு எதிராக விசாரனைகள் உடன் ஆரம்பிக்கப்படவேண்டும்  இல்லையேல் அரசு அக்கொலைகளை ஏற்றுக்கொண்டதாக அர்த்தமாகிவிடும். இதனால் ஜனாதிபதிக்கும் அமைச்சரவைக்குமே  களங்கம் ஏற்படும். இது தொடருமானால் அரசுக்குள்ள நற்பெயரும் கெட்டுவிடும் என அவர் மேலும் தெரிவித்தார். அவரது முழுமையான சாட்சியம் 25.01.2011 வெளியான தி ஜலண்ட் பத்திரிக்கையில் முன் பக்கத்தில் பிரசுரமாகிஇருக்கிறது




scan0006
scan0007
read more...

Monday 24 January 2011

பாரிய இயற்கை அனர்த்தத்திற்கு தயாராகுங்கள்? முன்னெச்சரிக்கை விடுக்கும் பாம்புகள்

கிழக்கு மாகாணம் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டம் என்றதுமே அண்மைக்காலத்தில் பேசப்பட்ட விடயம். கடும் மழை பெரு வெள்ளம்.

மடமக்களப்பு மாவட்டத்திலே வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கு முன்னர் எல்லோராலும் பரவலாக பேசப்பட்ட விடயம். மட்டக்களப்பு வாவியிலே பெருந்தொகையான  பாம்புகளின் வருகை.

இதனை பார்ப்பதற்காக இரவு பகலாக கல்லடிப் பாலத்திலே மக்கள் கூட்டமாக சில நாட்கள் இருந்தன. பாம்புகளின் வருகையைக் கண்ட மக்கள் அச்சமடைந்தனர். சுனாமி ஏற்படப் போகின்றன எல்லோரும் பேசிக் கொண்டனர். பாராளுமன்றத்தில்கூட இவை பற்றிப் பேசப்பட்டன.

 மக்கள் அச்சமடைந்தமைக்கு காரணம் இல்லாமல் இல்லை. சுனாமி ஏற்படுவதற்கு முன்னர் சில நாட்கள் மட்டக்களப்பு வாவியிலே அதிகளவான பாம்புகள் கூட்டம் கூட்டமாக வெளிப்பட்டன.

சுனாமிக்கு முன்னர் ஒரு போதும் இவ்வாறு பாம்புகள் வெளிப்பட்டதில்லை. சுனாமிக்கு முன்னரும் இவ்வாறு பாம்புகளின் வருகையை கண்ட மக்கள் பாரிய அழிவு வரப்போகின்றதோ என்று அச்சம் கொண்டனர். அதேபோல் சுனாமி பாரிய அழிவை ஏற்படுத்தியது.

தற்போதைய நிலையில் மட்டக்களப்பில் கடும் மழையினால் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கு முன்னர். பாம்புகளின் வருகையை கண்ட மக்கள் பெரும் அச்சமடைந்தனர். மக்கள் பாம்புகளின் வருகையை கண்டு ஏதோ அழிவு வரப்போகின்றது என்று அச்சப்பட்டபோது கேலி செய்தவர்களும் உண்டு. நானும்தான்.

ஆனால் பாம்புகளின் வருகையானது. ஒரு இயற்கை அழிவிற்கான முன்னெச்சரிக்கையாக எடுத்துக் கொள்ளலாம். சில பறவைகள் மிருகங்களுக்கு இயற்கை அழிவுகளை முன்கூட்டியே அறியும் திறன் இருப்பதுபோல் இந்த பாம்புகளுக்கும் இருக்கலாம்.

எல்லோரும் இவற்றை பாம்பு என்று சொல்கின்றனர். ஆனால் இவை ஒரு வகை மீனினம்.

இவை ஒருபுறமிருக்க வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பல மக்கள் இன்னும் எந்தவிதமான உதவிகளையும் பெறாமல் இருக்கின்றனர். உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?



read more...

Saturday 22 January 2011

அதிகம் சொத்து சேர்க்க விரும்புகிறிர்களா? இருக்கிறது இலகுவான வழி

ஆரயம்பதியில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக மாகாண சபை உறுப்பினர் பிரசாந்தனின் கருத்துக்கள். 

எனக்கு சொத்துச் சேர்க்க நான் அரசியலுக்கு வரவில்லை மக்களின் விடிவே எமது முடிவு-கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பூ.பிரசாந்தன்

prasanthan-annan-photo1தொடர்ந்தும் மக்களை மடையர்களாக கையேந்தும் சமூகமாக மாற்றி அரசியல் தலைமைகளின் எண்ணங்களுக்கு ஆடும் பொம்மைகளாக மாற்றுவதற்கோ தனிப்பட்ட ரீதியில் எமது வங்கி இருப்பையோ, சுகபோகங்களை அனுபவிக்கவோ அரசியல் பாதைக்கு வந்தவனல்ல. நான் சாதாரண ஏழைக் குடும்பத்தில் எங்கோ ஓர் மூலையில் பிறந்த என்னை ஆட்சிபீடம் ஏற்றிய மக்களின் அபிலாசைகளையும், உரிமைகளையும் மக்கள் பிரதிநிதியாக ஜனநாயக ரீதியில் பெற்றுக்கொடுப்பதற்காகவே மக்கள் எனக்கு வாக்களித்தார்கள்.
நான் சார்ந்த எனது கட்சியும், அதன் தலைவர் கௌரவ.சி.சந்திரகாந்தனும் அவ் வழியே தன்னுயிரைத் தியாகம் செய்யத் துணிந்த நேர்மை மிக்க தலைவன். அவரின் பாசறையிலுள்ள நாம் அநியாயத்திற்கும், ஊழலுக்கும், அடாவடித்தனங்களுக்கும் ஒரு போதும் துணை நிற்கப் போவதில்லை என்பதை அனைவரும் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். உண்மை ஆரம்பத்தில் கசக்கும். ஆனால் அது தான் நிரந்தரம். ஒரு பொய்யை மறைத்து மக்களுக்கு துரோகம் செய்ய முற்பட்டதன் விளைவே மண்முனைப்பற்று பிரதேச செயலகம் மீதான மக்களின் கிளர்ச்சிக்குக் காரணம். இதில் எந்த அரசியல் பின்புலமும் இல்லை. இருக்கவும் தேவையில்லை.

 அதிமேதகு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களின் பணிப்பில் கௌரவ.பசில் ராஜபக்ச அவர்களின் நேரடி கண்காணிப்பில் பெருந்தொகையான பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கி வருவதும் அவை அப் பகுதி மக்களுக்கு சென்றடையாது போவதும் மக்கள் அறிந்த உண்மை. பசித்த வயிற்றுக்கு புசிப்பதற்கே அரச நிவாரணம். மாறாக ஒரு சில ஊழல் பேர்வழிகளின் வங்கிக் கணக்கையும், மாடிவீடுகளையும் அமைப்பதற்கல்ல. பல அரச அதிகாரிகள் வெள்ளம், புயல் என அனைத்து அனர்த்தத்திலும் இரவு பகல் பாராது அர்ப்பணிப்புடன் சேவையாற்றி வருகின்றனர். இவர்களுள் அரச அதிகாரி என்ற பெயரில் ஒரு சிலர் செய்யும் துரோகமே மக்களை அரசு மீது வெறுப்படையச் செய்கின்றது.
மண்முனைப்பற்று சம்பவமும் அவ்வாறே அவசரப் பொலிஸ் கையும் களவுமாகப் பிடித்த கிராம சேவையாளர் S.A.சுரேஸ் மீது நடவடிக்கை எடுக்கவில்லை, பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பொருட்கள் வழங்கப்படாது தேக்கிவைக்கப்பட்டுள்ளது என்றே மறு நாள் ஆர்ப்பாட்டத்தில் குறித்த மக்கள் கூக்குரலிட்டனர். எது எவ்வாறு இருப்பினும் முறைப்பாடு கிடைத்தால் நடவடிக்கை எடுக்க வேண்டிய பிரதேச செயலாளர் அதனை மூடி மறைக்க முற்பட்டதாகவும் அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட நிவாரணப் பொருட்கள் பிரதேச செயலகத்தில் வைக்கப்பட்டமை குறித்துமே மக்கள் புரட்சி கிளர்ந்தெழுந்தது.

அரசினால் கிடைக்கும் நிவாரணப் பொருட்கள் குறைவாகப் பகுதி பகுதியாகக் கிடைத்தாலும் அதனை முறையாக பங்கீடு செய்வதற்காகவே அனர்த்த முகாமைத்துவப் பயிற்சிகள் வழங்கப்படுகின்றது. மாறாக அனைத்தும் வரும்வரை சேமித்து வைப்பது சிறந்த முகாமைத்துவமுமல்ல. மனிதாபிமானமுமல்ல. அனைவரும் முதலில் மனிதர்கள். அதன் பின்பே அதிகாரிகள். இதனை தட்டிக் கேட்க வேண்டிய ஜனநாயக உரிமை மக்களுக்கு உண்டு.
மிக சிரமப்பட்டு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களும் கிழக்கு மக்களின் மத்தியில் ஜனநாயகக் காற்றை சுவாசிக்க இடம் கொடுத்த கிழக்கு மாகாண முதலமைச்சர் சி.சந்திரகாந்தனும் மக்களிடம் விதைத்தது ஜனநாயகப் பாதையையே ஆகும்.

ஜனநாயக அடிப்படையில் மக்கள் தமக்கு நிகழ்ந்த அநீதியை தட்டிக் கேட்க முற்பட்ட போது மக்களால் குறிப்பிடப்பட்டது போல் குற்றம் புரிந்த கிராம சேவையாளரை கைது செய்யாது மூடி மறைக்க முற்பட்டது தான் ஆத்திரமூட்டும் நடவடிக்கையாக கைகலப்பிற்குக் காரணமாக அமைந்தது என்பதே வெளிப்படை.

மக்கள் பிரதிநிதி என்ற வகையில் மக்களுக்கு எங்கு பாதிப்பு ஏற்பட்டாலும் அங்கு சென்று மக்கள் குறைதீர்க்க வேண்டியது எனது கடமை. அதே போல் ஆளும் கட்சி பிரதிநிதி என்ற ரீதியில் அரச நிருவாகத்தினை பாதுகாத்து நெறிப்படுத்த வேண்டியதும் எனது பொறுப்பு. அதற்கு மேலாக மண்முனைப்பற்று மக்கள் எனக்கும் எனது த.ம.வி.கட்சிக்கும் 91மூ வாக்கு வழங்கி ஆட்சிபீடம் ஏற்றியவர்கள். அங்கு பெரும் மக்கள் புரட்சி ஏற்பட்டால் அவ்விடம் செல்லவேண்டியது எனது தார்மீகப் பொறுப்பாகும். அதன்படியே நான் அங்கு சென்றேனே தவிர பிரதேச செயலாளருக்கோ எனக்கோ தனிப்பட்ட எந்த குரோதமும் கிடையாது. குறித்த பிரதேச செயலாளர் மண்முனைப்பற்றிற்கு பிரதேச செயலாளராக நியமிக்கப்பட வேண்டும் என்பதில் முனைப்போடு இருந்தவன் நான் என்பது வெளிப்படையான உண்மை.


குற்றம் எவர் செய்தாலும் தண்டிக்கப்பட வேண்டியவர்களே. அதற்கு மாறாக அதிகாரிகள் சிலர் குற்றத்தினை புரிந்த ஓர் அதிகாரிக்கு குற்றத்தினை மறைக்க எத்தனிப்பது நொந்துபோன எம் சமூகத்தின் எதிர்கால சுபீட்சத்திற்கு வழிசமைக்காது.
ஆரையம்பதி பிரதேச செயலகத்தில் கடந்த சுனாமி அனர்த்த நிவாரணத்தின் போதும் இதே முறைப்பாடு மக்களால் கிடைக்கப்பெற்றது. அதே போல் யுத்த கால நிவாரணத்தின் போதும் இதே முறைப்பாடு. வெள்ள நிவாரணத்தின் போதும் இதே முறைப்பாடு. எங்கு தவறு உள்ளது. அதனை கண்டுபிடிக்க வேண்டுமே தவிர மூடி மறைக்க யாரும் துணைபோகக் கூடாது என இரு கரம் கூப்பி கேட்டுக்கொள்கின்றேன்.

எடுத்தோம் கவுத்தோம் என சில முக்கிய அரசியல் தலைவர்களும் உண்மை அறியாது அநீதிக்கு துணை போக முற்படுவதும் எதிர்கால வாக்கு வங்கியைத் தக்க வைக்க முனைவதும் வேதனைக்குரியது.

இறைவனால் கொடுக்கப்பட்ட அரசியல் மக்கள் பிரதிநிதி என்ற பொறுப்பு மிக்க சுமையை மக்களுக்காக சுமக்க வேண்டுமே தவிர சுயநலத்திற்காக சுமக்கக் கூடாது. சுயநலம் மேலோங்கியதன் விளைவே 60 வருட மக்களின் துன்ப நிலைக்குக் காரணம்
அரச சொத்துக்களை சேதம் செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள். அப்படியெனில் முதலில் தண்டிக்கப்பட வேண்டியவர் குறித்த கிராம சேவையாளரே. குறித்த கிராம சேவையாளரே மக்களுக்காக வழங்கப்பட்ட அரச நிவாரணத்தினை பதுக்கி வைத்தவர் என மக்கள் கூறுகின்றனர். இதற்கான தீர்வு கிடைக்காதததன் விளைவே 16.01.2011ம் திகதி மக்கள் கிளர்ச்சிக்குக் காரணம் என்பது மக்களின் உள்ளங்கனி நெல்லிக்கனியான கருத்து.

குறித்த கிராம சேவையாளரையோ அல்லது அம் முகாம் நடாத்தியதாகக் குறிப்பிடப்படும் குறித்த குற்றச் செயலுடன் தொடர்புபட்ட அமைப்புக்களையோ மக்கள் மத்தியில் ஆராய்ந்து மக்களின் கருத்துக்களுக்கு ஏற்ப நடவடிக்கை எடுக்கவேண்டியதும் அதிகாரிகளின் பொறுப்பு என்பதனை நான் உணர்கின்றேன்.

அரசும், அரசு சாரா நிறுவனங்களும், ஊடகங்களும், தனிநபர்களும் ஏனையவர்களிடமும், வெளிநாடுகளிடமும் பாதிக்கப்பட்ட மக்குளுக்காக யாசகம் கேட்டு பாடுபடும் நிலையில் பதுக்கல்கள், சுருட்டல்கள், முறைகேடுகள் எவராலும் அனுமதிக்க முடியாது. அரசியல்வாதிகளையும், அரச அதிகாரிகளையும் மக்கள் அனர்த்த காலங்களில் தெய்வமாக, துயர்துடைப்பவர்களாக நேசிக்கின்றனர்.

 அதற்கு தகுதி உடையவர்களாக நாம் அனைவரும் பாடுபட வேண்டும். கதிரைகளைச் சூடாக்கும் கடந்த கால நிலைக்கு யாரும் தூபமிடக் கூடாது என்பதே வற்றிய வயிற்றுடனும், ஒட்டிய மார்புடனும், மனச்சுமைகளுடனும் இருக்கும் மக்களின் எதிர்பார்ப்பு. எனக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லாத நிலையில் மக்களின் குமுறலை திசை திருப்பாது குற்றம் சுமத்தப்பட்ட கிராம சேவையாளர் ளு.யு.சுரேஸ், அவருடன் சம்பந்தப்பட்ட குழு, பிரதேச செயலாளர் ஆகியோர் மீது அரசு விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே எனது வேண்டுகோள். 
நன்றி
என்றும் மக்கள் சேவையில்,
கி.மா.ச.உ.பூ.பிரசாந்தன்
மாகாணசபை உறுப்பினர்,
கிழக்கு மாகாணம்.

read more...

Friday 21 January 2011

உண்மைகளை சொல்ல மறுக்கும் ஊடகங்களும். கையேந்தும் தமிழ் மக்களும் மனிதநேயமற்ற மனிதர்களும

ஊடகங்கள் உண்மைகளை வெளியிட வேண்டும். ஆனால் சில ஒருசில ஊடகங்கள் தாம் நினைத்தவற்றை வெளியிட்டு வருகின்றன.

என்னைச் சுற்றி நடக்கின்ற உண்மைகளை வெளியிட வேண்டும் என்று நினைப்பவன் நான். கிழக்கு மாகாணத்திலே குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்திலே வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கத்தினால் நிவாரணங்கள் வழங்கப்படுகின்றபோதிலும் அதிகாரிகள் பலர் பதுக்கி வைக்கின்ற நிலை காணப்படுகின்றது.

பாதிக்கப்பட்ட பல மக்கள் இதுவரை எந்தவிதமான உதவிகளையும் பெறவில்லை ஆனால் தாராளமாக உதவிகள் செய்வதாக அரசாங்கம் சொல்கின்றது.

நான் பல இடங்களுக்கு சென்று அவதானித்தேன். ஒரு நபருக்கு நான்கு நாட்களுக்கு அரிசி 1 கிலோகிராம் பருப்பு 120 கிராம் சீனி 80 கிராம் தேங்காய் எண்ணை 40 கிராம் வழங்கப்படுவதாக நிவாரணம் வழங்கப்படுகின்ற கூட்டுறவு கடைகளிலே எழுதி ஒட்டப்பட்டிருக்கின்றன.

ஆனால் ஒரு குடும்பத்துக்கு இதுவரை ஒரு கிலோகிராம் அரிசி 250 கிராம் பருப்பு 250 கிராம் சீனி 80 கிராம் தேங்காய் எண்ணை வழங்கப்படுகின்றது.

எல்லாவற்றையும் இழந்து தவிக்கின்ற மக்கள் இவற்றை வைத்து என்ன செய்வது. பல பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்னும் எந்தவிதமான உதவிகளும் கிடைக்கவில்லை.

அரசாங்கத்தின் மூலமும் உலக உணவுத்திட்டத்தின் மூலமும் தாராளமாக உதவிகள் வழங்கப்படுகின்றன. ஆனால் அவை உரிய முறையில் மக்களைச் சென்றடையவில்லை. அதிகாரிகள் பதுக்கி வைத்திருக்கின்றனர்.

அண்மையில் ஆரையம்பதியிலே ஒரு கிராம சேவகரால் பதுக்கி வைக்கப்படடிருந்த ஒரு தொகைப் பொருட்களை மக்கள் கைப்பற்றியதுடன் மறுநாள் ஆரையம்பதி பிரதேச செயலகத்துக்கு முன்னால் மக்கள் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.

படங்கள் கீழே இணைத்திருக்கின்றேன்.

இது தொடர்பான வீரகேசரி செய்தி..
http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=29634

அந்த இரு நாட்களும் சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு நானும் சென்றேன். (நானும் ஒரு ஊடகப் பிரிவைச் சேர்ந்தவன்)
ஆரையம்பதி பிரதேச செயலகத்திலே மக்கள் ஆர்ப்பாட்டத்திலே ஈடுபட்டபோது கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பிரசாந்தன் அவ்விடத்துக்கு வந்தார்.

சில ஊடகங்கள் உண்மைக்கு புறம்பான செய்திகளை வெளியிட்டிருந்தன. மாகாணசபை உறுப்பினர் பிரசாந்தன் அவர்களின் குழுவினர் ஆரையம்பதி பிரதேச செயலகத்துக்கு சேதம் ஏற்படுத்தியதுடன் ஊழியர்களைத் தாக்கியதாகவும்.

அன்றையதினம் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் முற்று முழுதாக வீடியோ எடுக்கப்பட்டு என்னிடம் இருக்கின்றது. அங்கே நடந்த சம்பவங்களுக்கும் மாகாணசபை உறுப்பினருக்கும் கைது செய்யப்பட்டிருப்பவர்களுக்கும் தொடர்பு இருக்கின்றதா என்பதனைப் பார்க்க முடியும்.


மாகாண சபை உறுப்பினர் தன்னை அச்சுறுத்தியதாக பொலிசில் ஆரையம்பதி பிரதேச செயலாளர் தனபாலசிங்கம் முறைப்பாடு செய்திருந்தார். இதனையடுத்து குறித்த மாகாண சபை உறுப்பினரை பொலிசார் கைது செய்யும் முயற்சியில் ஈடுபட்டார்கள்.இன்று சட்டத்தரணி மூலம் நீதி மன்றில் ஆஜராகிய மாகாண சபை உறுப்பினர் பிரசாந்தன் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்

உண்மையாகவே ஊழல்களிலே ஈடுபடுகின்ற அதிகாரிகளை கைது செய்வதனை விட்டுவிட்டு அவர்களுக்காக சில அரசியல்வாதிகளும் காவல்துறையினரும் சில ஊடகங்களும் செயற்படுவது கவலைக்குரிய விடயம்.

இது ஒரு புறமிருக்க ஒரு இணையத்தளம் இன்று ஆரையம்பதியிலே பிரசாந்தன் அவர்களுக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக குறிப்பிடுகின்றது. இன்று முழுவதும் நான் ஆரையம்பதியிலேதான் இருந்தேன் எந்தவிதமான ஆர்ப்பாட்டங்களும் இடம்பெறவில்லை.


காவல்துறையினராகட்டும் ஊடகங்களாகட்டும் ஊழலில் ஈடுபடுபவர்களின் ஊழல்களை மூடி மறைப்பதனை விடுத்து அவர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்.
.



_mg_0066
_mg_0079
_mg_99042_mg_0626_mg_99091
read more...

Thursday 20 January 2011

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பூ.பிரசாந்தன் பிணையில் விடுதலை


 தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பூ.பிரசாந்தன் 1இலட்சம் ரூபாய் சரீரப் பிணையில் விடுதலை வெய்யப்பட்டுள்ளார். அண்மையில் வெள்ள  நிவாரணத்தை பதுக்கி வைத்துள்ளதைக் கண்டித்து ஆரையம்பதி பிரதேச செயலகத்தை மக்கள் முற்றுகையிட்டபோது மாகாண சபை உறுப்பினர் அவ்விடத்தில் இருந்தார். அவருடன் அவரது ஆதரவாளர்களும் இருந்திருந்தார்கள். அப்போது பொது மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தார்கள்.

prasanthan-annan-photo


இதன்போது மாகாண சபை உறுப்பினர் தன்னை அச்சுறுத்தியதாக பொலிசில் ஆரையம்பதி பிரதேச செயலாளர் தனபாலசிங்கம் முறைப்பாடு செய்திருந்தார். இதனையடுத்து குறித்த மாகாண சபை உறுப்பினரை பொலிசார் கைது செய்யும் முயற்சியில் ஈடுபட்டார்கள்.இன்று சட்டத்தரணி மூலம் நீதி மன்றில் ஆஜராகிய மாகாண சபை உறுப்பினர் பிரசாந்தன் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்

read more...

உனக்கில்லடி உபதேசம் ஊருக்குத்தான்டி



கிழக்கிலே குறிப்பாக மட்டக்களப்பிலே வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஒரு சில இடங்களைத் தவிர ஏனைய இடங்களில் வெள்ளம் வெள்ளம் வடிந்திருக்கின்ற நிலையில் பாதிக்கப்பட்ட மக்கள் சொல்லொண்ணாத் துயரங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.



வெள்ள அனர்த்தத்தின்போது பலரும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் செய்திருந்தாலும் நான் எதிர் பார்த்தவர்கள் போதிய உதவிகள் செய்யவில்லை. 


இலங்கை வலைப்பதிவர்களைப் பொறுத்தவரை வலைப்பதிவுக்கு வெளியே என்ன செய்யலாம் என்று பேசிக் கொண்டிருந்த காலம். நிவாரணப் பணிகளிலே முடிந்தவரை எல்லோரும் பங்களிப்பு செய்திருக்கலாம். இந்த வேளையில் எனது முன்னைய பதிவு ஒன்று ஞாபகத்துக்கு வருகின்றது. 


உனக்கில்லடி உபதேசம் ஊருக்குத்தான்டி




ஆனால் ஒருசில பதிவர்கள்தான் பல்வேறுபட்ட விதத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளைச் செய்திருந்தனர். அவர்களுக்கு நன்றிகள். 


நாம் வெறும் பேச்சளவிலேதான் இருக்கின்றோம் செயலில் எதுவுமில்லை. பல பதிவர்கள் எவ்வளவோ எழுதுகின்றனர். ஆனால் இந்த விடயத்தில் பின் வாங்கியது ஏன்?



பதிவெழுதுகின்றோம் சந்திக்கின்றோம் என்பதோடு நின்றுவிடாமல் எமது மக்கள் பாதிக்கப்படுகின்றபோது எங்களால் முடிந்தவற்றைச் செய்ய வேண்டும். 



இது ஒருபுறமிருக்க வெளிநாடுகளிலே இருக்கின்ற பதிவர்களும் (ஒருசிலரைத்தவிர) பாதிக்கப்பட்ட மக்கள் விடயத்தில் பாரா முகமாய் இருப்பது கவலைப்படவேண்டிய விடயம். நான் பல வெளிநாட்டு வலைப்பதிவர்களுக்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக உதவிகள் தேவை என்று தெரியப்படுத்தி இருந்தேன். செந்தழல் ரவி மட்டுமே உதவி செய்வதாக உறுதியளித்தார்.


அதேபோன்று இன்னும் சில வெளிநாட்டு வலைப்பதிவர்களும் உதவி செய்வது பற்றி பதிவிட்டிருந்தனர் அவர்களுக்கும் நன்றிகள்.


பல ஆயிரக்கணக்கானவர்கள் பதிவெழுதுகின்றோம். ஏதோ தேவையற்ற விடயங்களை எல்லாம் எழுதுகின்றோம். எங்களால் உதவிதான் செய்ய முடியாது என்றாலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி உதவிகள் தேவை என்பதனையாவது பதிவட்டிருக்கலாம் அல்லவா?


தமிழ் மக்கள் மீதும் தமிழ் மீதும் அதிக அக்கறை கொண்ட பல பதிவர்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்காக கையை விரித்ததை அறிய முடிந்தது. 


இனிவரும் காலங்களிலாவது பேச்சிலும் எழுத்திலும் மட்டும் இல்லாமல் செயலிலும் இறங்க வேண்டும். 


உலகத் தமிழர்கள்கூட பாதிக்கப்பட்ட மக்களை புறக்கணித்து விட்டனர். 


இவை அத்தனைக்கும்மேல் போதிய அளவு உதவிகள் வழங்கப்படுகின்றன என்று சொல்லப்படுகின்ற போதிலும் உண்மைநிலை அதுவல்ல பல மக்கள் பசி பட்டினியால் வாடுகின்றனர். போதியளவு உதவிகள் வழங்கப்படவில்லை. இவை பற்றிய உண்மைகள் அடுத்த பதிவில். 


read more...

Tuesday 18 January 2011

சாமி வரம் கொடுக்க பூசாரி பறித்த கதை

இன்று(18.01.2011) மட்டக்களப்பு மாநகரில் மாபெரும் மக்கள் போராட்டம் இடம்பெற்றது.மேற்படி போராட்டமானது மக்களுக்காக அரசினால் வழங்கப்பட்ட நிவாரணப் பொருட்களை பதுக்கி வைத்த அதிகாரிகளுக்கு எதிராக மேற் கொள்ளப்பட்டதாகும்.இப் போராட்டத்தில் பெருந்திரளான மக்கள் கலந்து கொணடிருந்தமை விசேட அம்சமாகும். நேற்று இதே போன்றதொரு மக்கள் ஆர்ப்பாட்டம் ஆரையம்பதி பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.
அண்மையில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக கிழக்கு மாகாணம் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தது. குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டம் வெகுவாகப் பாதிக்கப்பட்டிருந்ததை அனைவரும் அறிவர்.இவ்வாறு பாதிக்கப்பட்டிருந்த மக்கள் பட்டினியால் வாடக்கூடாது என அரசு அறிவித்திருந்தது. அதற்காக வேண்டி பல கோடி ரூபாய் பெறுமதியான பொருட்களை அரசு மக்களுக்காக வழங்கி வைத்தது.அரசு மாத்திரமன்றி பல தனியார் அமைப்புக்கள் மற்றும் தனவந்தர்களும் பாதிக்கப்பட்டிருந்த மக்களுக்காக நிவாரணப் பொருட்களை வழங்கி இருந்தார்கள்.


இவ்வாறு பாதிக்கப்பட்ட மக்களுக்காக அரசினால் வழங்கப்பட்ட பொருட்களை சில அதிகாரி மட்டத்திலானவர்கள் பதுக்கி வைத்ததாக கூறியே மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தார்கள். மட்டக்களப்பு மணிக்கூட்டுச் சந்தியில் சுமார் ௨ மணிநேரம் இப் போராட்டம் இடம்பெற்றது.
தங்களுக்காக அரசினால் வழங்கப்பட்ட நிவாரணப் பொருட்கள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். இல்லையேல் நாங்கள் இவ் இடத்தை விட்டு செல்ல மாட்டோம் என அம்மக்கள் தெரிவித்தனர்.இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஸ்தலத்திற்கு விரைந்த பொலிஸார் நிலமையைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்ததாக தகவல்கள் கூறுகின்றன.


உண்மையில் அரசு எந்தவித நிபந்தனைகளும் இல்லாது பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும் என அனைத்து அதிகாரிகளுக்கும் பணித்திருந்தும் அது மக்களுக்கு சேரவில்லை என்றால் அது யார் குற்றம். அதிகாரிகளின் குற்றமா? அல்லது அரசின் குற்றமா? எனச் சிந்தித்தே மக்கள் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என் கோரி ஆரர்பாட்டத்தில் ஈடுபட்டார்கள். சாமி வரம் கொடுத்தும் பூசாரி மறுத்த கதையாகியது மக்களின் நிலை.



_mg_0879



aar
aaaaa
read more...

Sunday 16 January 2011

வெள்ள நிவாரணப் பொருட்களை பதுக்கிய கும்பல் பொலிசாரின் வலையில்

மட்டக்களப்பு ஆரையம்பதி RKM பாடசாலையில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்படடு தங்கியிருந்த மக்களுக்காக ஒதுக்கப்பட்ட நிவாரணப் பொருட்கள் மக்களுக்கு வழங்கப்படாமல் பதுக்கிவைக்கப்பட்டிருந்ததை அறிந்து ஒன்று கூடிய பொதுமக்கள் அவசரபொலிசிற்கு அறிவித்ததையடுத்து அங்கு விரைந்த காத்தான்குடி பொலிசார் ஒரு தொகைப் பொருட்களைக் கைப்பற்றினர். இங்கு கருத்துத் தெரிவித்த பொதுமக்கள் சுனாமியனர்த்தத்தின்போதும் இவ்வாறான முறைகேடுகள் தங்களால் கண்டறியப்பட்டபோதும் சரியான நடவடிக்கைகள் உரிய அதிகாரிகளால் எடுக்கப்படவில்லை அதனாலேயே மென்மேலும் இவ்வாறான நடவடிக்கைகள் தொடர்கின்றன. எனவே இதற்குத் தகுந்த நடவடிக்கைகள் உரிய அதிகாரிகளால் கட்டாயம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றனர்.


_mg_0066
_mg_0079
_mg_99042_mg_0626_mg_99091
read more...

சீமானுக்கு தாயகத்திலிருந்து ஒரு கடிதம்

வணக்கம்…

நலமாக இருக்கின்றீர்களா?...

எனக்கு பிடித்த மணிதர்களுள் நீங்களும் ஒருவர். நீங்கள் தமிழர்கள் மீதும் தமிழ்மொழி மீதும் வைத்திருக்கின்ற பற்றும் அக்கறையுமே உங்களை எனக்கு பிடிக்கக் காரணமாகும். ஆனாலும் அண்மைக் காலமாக உங்கள் மீது எனக்கு இருக்கின்ற நல்ல அபிப்பிராயங்கள் குறைந்து வருகின்றன.  


நீங்கள் உண்மையாகவே தமிழ் மக்கள் மீதும் தமிழ்மொழி மீதும் பற்று வைத்திருக்கின்றீர்களா? அல்லது உங்கள் அரசியல் இருப்புக்காக இலங்கை தமிழர்களையும் தமிழ் மொழியையும் பயன்படுத்திக் கொள்ள நினைக்கின்றீர்களா?

தமிழக அரசியல்வாதிகள் சிலர் இலங்கைத் தமிழர்களை தங்கள் அரசியல் இருப்புக்காக பயன்படுத்தியிருக்கின்றார்கள். நீங்கள் அவர்களைப்போல் அல்லாது உண்மையான தமிழ் பற்றாளனாக இருக்க வேண்டும்.


நீங்கள் தொடர்ந்தும் பல தடைகளைத் தாண்டியும் இலங்கைத் தமிழர்களுக்காகக் குரல் கொடுத்து வருகின்றீர்கள். உங்களுடைய ஒவ்வொரு நடவடிக்கைகளையும் உன்னிப்பாக அவதானித்து வருபவர்களில் நானும் ஒருத்தன்.

இலங்கையிலே யுத்தம் நடைபெற்றபோது பாதிக்கப் பட்ட நம் உறவுகளுக்காக குரல் கொடுத்தீர்கள். உங்களது நாம் தமிழர் அமைப்பினூடாக எத்தனையோ நடவடிக்கைகளை மேற்கொண்டீர்கள். அவைகளை நான் சொல்ல வேண்டிய அவசியமில்லை எல்லோரும் அறிவர்.

இன்று இலங்கையின் கிழக்கிலே இருக்கின்ற எமது தமிழ் உறவுகள் பாரிய வெள்ளப்பெருக்கின் காரணமாக பாரிய அழிவினை எதிர் நோக்கியிருக்கின்றனர்.

கடும்மழை வெள்ளப்பெருக்கின் காரணமாக கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டம் அதிகளவு பாதிக்கப்பட்டிருக்கின்றது. அதிலும் குறிப்பாக முன்னர் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த படுவான்கரைப் பிரதேசமே மிக மோசமாகப் பாதிக்கப் பட்டிருக்கின்றது. வெள்ளம் வடிந்து கொண்டிருந்தாலும் சில பிரதேசங்களுக்கான தரை வழிப் போக்குவரத்து துண்டிக்கப்பட்ட நிலையிலேயே இருக்கின்றது.

காலநிலை வழமைக்குத் திரும்பினாலும் மக்களின் இயல்பு நிலை இப்போதைக்கு வழமைக்குத் திரும்ப காலங்கள் செல்லலாம். பல மக்கள் வீடுகள் உடமைகளை இழந்திருக்கின்றனர். அவர்களின் முக்கிய தொழிலான விவசாயம் முற்றாகப் பாதிக்கப் படடிருக்கின்றது.

இப்பிரதேச மக்களைப் பொறுத்தவரை யுத்தத்தினாலும் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள். யுத்தத்தின் வடுக்கள் இன்னும் மாறாத நிலையில் மற்றுமோர் பாரிய அழிவை சந்தித்திருக்கின்றனர்.

கிழக்கு மாகாண தமிழ் மக்கள் பாரிய அழிவினை சந்தித்திருக்கின்றனர் என்பதனை நீங்கள் அறியாமல் இல்லை. தமிழர்கள் அவலங்களை சந்திக்கும்போது அவர்களுக்காகக் குரல்கொடுக்கும் உதவிக்கரம் நீட்டும் நீங்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக என்ன செய்தீர்கள். 

தமிழர்களுக்காக குரல் கொடுக்கும் உங்களது நாம் தமிழர் அமைப்பு அந்த மக்களுக்காக என்ன செய்தது. நானறிந்தவரை எதுவும் செய்ததாகத் தெரியவில்லை. 

பாதிக்கப்பட்ட மக்களுக்கு  பல்வேறுபட்ட அமைப்புக்கள் பல்வேறுபட்ட உதவிகளை வழங்கி வருகின்றது. உங்களாலும் உங்கள் நாம் தமிழர் அமைப்பு மூலமாகவும் ஏன் உதவிகளைச் செய்ய முடியாது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீங்கள் உதவி செய்ய வேண்டுமென்று எதிர்பார்க்கின்றேன்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய முடியாத அளவில் நீங்களோ உங்கள் நாம் தமிழர் அமைப்போ இல்லை. இலங்கை தமிழர்களுக்காக குரல் கொடுக்கும் நீங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிக்கரம் நீட்டாதது ஏன்? யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்காக மட்டுமே குரல் கொடுப்பீர்காளா? உதவிக்கரம் நீட்டுவீர்களா? வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தமிழ் மக்களில்லையா?

நீங்களும் இலங்கை இனப்பிரச்சினையையும் இலங்கை தமிழர்களையும் வைத்து அரசியல் நடாத்த நினைக்கின்றீர்களா? 

நீங்களும் உங்களது நாம் தமிழர் அமைப்பும் தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்கின்ற உதவிக்கரம் நீட்டுகின்ற அமைப்பு என்பதனால் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட எமது தமிழ் உறவுகளுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்யும்படி அன்பாக வேண்டிக் கொள்கின்றேன்.

அன்புடன்…
சந்ரு

read more...