நாம் ஒவ்வொருவரும் சமூகக் கருத்துக்கள், பெண்ணடிமை, சிறுவர் துஸ்பிரயோகம், மது, புகைத்தல் போன்றவற்றால் ஏற்படுகின்ற விளைவுகள் பற்றி எல்லாம் பேசிக்கொண்டிருக்கின்றோம். இதைப் பற்றிப் பேசுகின்ற நாம் அவற்றை சரியாக செய்கின்றோமா? நாம் மற்றவர்களுக்கு சொல்கின்ற கருத்துக்களுக்கு அமைவாக நடந்து கொள்கின்றோமா என்பதை நாம் ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டியவ்பர்களாக இருக்கின்றோம்.
சிலர் இருக்கின்றார்கள் பெண்விடுதலை பற்றி எழுதிக்கொண்டிருப்பார். ஆனால் அதற்கு மாறாக அவர் நடந்துகொண்டிருப்பார். புகைத்தலால் ஏற்படும் விளைவுகளைப் பற்றி கவிதை எழுதுவார் ஆனால் அவரால் புகைத்தலை நிறுத்த முடியாமல் இருக்கும்.
சிறுவர்களை வேலைக்கு அமர்த்தக் கூடாது, சிறுவர் துஸ்பிரயோகம் செய்யக்கூடாது என்றெல்லாம் பேசுவோம் அதன்படி நாம் நடக்கின்றோமா? இவற்றை நடைமுறைப் படுத்தவேண்டிய அதிகாரிகளே சிறுவர்களை வீட்டில் வேலைக்கு வைத்திருப்பார்கள். அந்த சிறுவர்களுக்கு சித்திரவதையும் செய்வார்கள்.
பதிவர்களாகிய நாம் பல்வேறுபட்ட கருத்துக்களை சமுகத்துக்கு சொல்லிக் கொண்டிருக்கின்றோம். அதன்படி நாம் நடந்து கொள்கின்றோமா என்பதை நாம் ஒவ்வொருவரும் சிந்தித்து பார்க்கவேண்டும்.
பாடலைக் கேட்டுப்பாருங்கள்..
16 comments: on "உனக்கில்லடி உபதேசம் ஊருக்குத்தான்டி"
தலைப்புக்கு முதல் வணக்கம்.
சந்துரு நல்லா எழுதியிரிகிங்க உங்க கருத்து தான் என்னுடேதும்..
நல்ல கேள்வி,மற்றவர்களை ஏமாற்றுவதாக நினைத்து, அவர்கள் அவர்களையே ஏமாற்றி கொள்கிறார்கள்.
//ஜோதிஜி கூறியது...
தலைப்புக்கு முதல் வணக்கம்.//
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள் நண்பரே.
//sandhya கூறியது...
சந்துரு நல்லா எழுதியிரிகிங்க உங்க கருத்து தான் என்னுடேதும்..//
உங்கள் கருத்தும் என் கருத்தோடு உடன் படுவதில் சந்தோசம். வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்.
//இளம் தூயவன் கூறியது...
நல்ல கேள்வி,மற்றவர்களை ஏமாற்றுவதாக நினைத்து, அவர்கள் அவர்களையே ஏமாற்றி கொள்கிறார்கள்.//
உண்மைதான். உங்கள் கருத்துக்களுக்கும் வருகைக்கும் நன்றிகள்.
நல்ல பகிர்வு.
நல்ல பாடலும்.
"நீங்கள் அத்தனை பேரும் உத்தமர் தானா சொல்லுங்கள்....."
எல்லார் கிட்டயும் கேக்க வேண்டிய கேள்வி தான்..
அழகான தலைப்பு, அவசியமான கேள்வி..
நன்றி. :)
நல்ல பதிவுடன்..
பாடலும் சேர்ந்து அருமை சந்ரு
நன்றி
மாறவும் மாட்டார்கள், மாற்றவும்
முடியாது
இவையெல்லாம் தொடர்கதைகள்தான்
good post
மிகவும் சிறப்பான காலத்திற்கு தேவையான பதிவு சந்ரு. இருந்தாலும் எனது கருத்தொன்றை சொல்ல விளைகின்றேன். தான் எப்படியிருந்தாலும் பரவாயில்லை என்று நினைப்பவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையை கடமையோடும் பொறுப்புணர்ச்சியோடும் உரிய நேரத்திற்கு செய்து முடித்தாலே போதும். அதுதான் ஒரு தனிமனிதனோ அல்லது சமூகத்தினுடைய வெற்றிக்கு உறுதுணையாக அமையும்.சரிதானே சந்ரு..
//அம்பிகா கூறியது...
நல்ல பகிர்வு.
நல்ல பாடலும்.//
எனக்கு பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்று...
வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிகள்.
//Ananthi கூறியது...
"நீங்கள் அத்தனை பேரும் உத்தமர் தானா சொல்லுங்கள்....."
எல்லார் கிட்டயும் கேக்க வேண்டிய கேள்வி தான்..
அழகான தலைப்பு, அவசியமான கேள்வி..
நன்றி. :)//
நான் என்னையும் பார்த்துக் கேட்கிறேன்.
வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிகள்.
//கலா கூறியது...
நல்ல பதிவுடன்..
பாடலும் சேர்ந்து அருமை சந்ரு
நன்றி
மாறவும் மாட்டார்கள், மாற்றவும்
முடியாது
இவையெல்லாம் தொடர்கதைகள்தான்//
என்ன செய்வது திருந்தாத உள்ளங்கள்.
வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிகள்.
//சசிகுமார் கூறியது...
good post//
வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிகள்.
//Jana master கூறியது...
மிகவும் சிறப்பான காலத்திற்கு தேவையான பதிவு சந்ரு. இருந்தாலும் எனது கருத்தொன்றை சொல்ல விளைகின்றேன். தான் எப்படியிருந்தாலும் பரவாயில்லை என்று நினைப்பவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையை கடமையோடும் பொறுப்புணர்ச்சியோடும் உரிய நேரத்திற்கு செய்து முடித்தாலே போதும். அதுதான் ஒரு தனிமனிதனோ அல்லது சமூகத்தினுடைய வெற்றிக்கு உறுதுணையாக அமையும்.சரிதானே சந்ரு..//
உண்மைதான் ஒவ்வொருவரும் தமது கடமைகளை பொறுப்புணர்ச்சியுடன் செய்யவாவது முன்வருவார்களானால் பாராட்டப்பட வேண்டிய விடயம் இந்த காலகட்டத்தில்.
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்.
Post a Comment