இந்த ஆலயம் பல நுற்றாண்டு கால வரலாற்றினைக் கொண்டதோடு திருநீறு தானாகவே கிடைக்கின்ற தீர்த்தக்கேணியினையும் கொண்ட ஆலயமாகவும் இருக்கின்றது.
திருவிழாக் காலங்களில் கலை, கலாசாரம் சார்ந்த பல கலை நிகழ்சிகளும், சமய சம்பந்தமான பல நிகழ்வுகளும் இடம்பெறும்.
ஆலயத்தைப் பற்றியும். ஆலயத்திலே இடம்பெறுகின்ற முக்கியநிகழ்வுகளும் பல விடயங்களும் இன்னொரு பதிவில் விபரமாக தருகின்றேன்.
5 comments: on "அரோகரா... சொல்லுங்கோ.... அரோகரா..."
உண்மையிலேயே உங்கள் ஊர் திருநீற்றுக்கேணியில் திருநீறு கிடைக்கின்றதா? உண்மையை தெளிவாக கூறுங்கள்
//Jana master கூறியது...
உண்மையிலேயே உங்கள் ஊர் திருநீற்றுக்கேணியில் திருநீறு கிடைக்கின்றதா? உண்மையை தெளிவாக கூறுங்கள்//
உண்மையாகவே இந்த ஆலயத்திலே இருக்கின்ற தீர்த்தக் கங்கையிலே திருநீறு இருக்கின்றது. இந்த தீர்த்தக் கங்கையிலே மண் இல்லை என்றுதான் கூறவேண்டும். நீருக்கடியிலே மண்ணுக்கு பதிலாக சுத்தமான திருநீறு அதே போன்று இருக்கின்றது.
அதிசயம் என்னவெனில் தீர்த்தக் கங்கையில் மட்டுமே இவ்வாறு வருகின்றது. ஆனால் தீர்த்தக் கங்கையை சுற்றி இருக்கின்ற பிரதேசங்களிலே இவ்வாறு வரவில்லை.
இந்த பிரதேசத்திலே இருக்கின்ற பல ஆலயங்கள் இங்கிருந்துதான் திருநீற்றினைப் பெற்றுக் கொள்கின்றன.
அப்படியொரு விசேடமா?பார்க்க முயச்சிக்கின்றேன்
நன்றி சந்ரு பாடலும் கேட்க முடிந்தது
அப்படியொரு விசேடமா?பார்க்க முயச்சிக்கின்றேன்
நன்றி சந்ரு பாடலும் கேட்க முடிந்தது
அந்த இன்னொரு பதிவிருக்கு காத்திருக்கிறேன் ..!!
Post a Comment