கடவுள் மீது அதிக நம்பிக்கையும் சமயப்பற்றும் கொண்ட நான் சில ஆலயங்கள், அதனோடு சார்ந்த சிலர் செய்கின்ற நடவடிக்கைகள், மூட நம்பிக்கைகள் என்பவற்றை முற்றாக வெறுக்கின்றேன்.
கடவுள் எனக்கு மாளிகைபோல் கோவில் கட்ட வேண்டும். ஆடம்பரமாக திருவிழாக்கள் செய்யவேண்டும் அப்போதுதான் நான் எல்லோருக்கும் வரம் தருவேன் என்று சொல்லவில்லை. ஆனால் மக்களின் பணத்தினைப் பெற்று தேவையற்ற ஆடம்பரங்களையும், செலவுகளையும் சிலர் செய்து வருவது கவலைக்குரியது.
எனது கிராமத்திலே பிரசித்தி பெற்ற ஆலயம் ஒன்றிலே திருவிழா நடைபெற்று வருகின்றது அங்கே நடைபெறுகின்ற விடயங்கள் மிகவும் கவலைப்படவேண்டிய விடயமாக இருக்கின்றது.
திருவிழா நடைபெறுகின்றபோது பல்வேறுபட்ட ஆடம்பரங்கள் மூலம் அதிகம் செலவு செய்யப்படுவதை காண முடிகின்றது. உதாரணமாக அதிகமான பணம் கொடுத்து வாணவேடிக்கைகள் வாங்கப்படுகின்றது. பணம் வீணடிக்கப்படுகின்றது. இந்தப் பணத்தை உணவின்றி கஸ்ரப்படுகின்ற எத்தனையோ பேருக்கு ஒரு வேலை உணவுக்காவது பயன் மடுத்தலாம்.
இது ஒரு புறமிருக்க இங்கே ஆடம்பரங்களுக்காக செலவு செய்யப்படுகின்ற இந்தப் பணம் எங்கிருந்து வந்தது. இக்கிராமத்திலே இருக்கின்ற ஒவ்வொரு குடும்பத்திலும் பணம் அறவிடப்படுகின்றது. பல குடும்பங்கள் அன்றாட சாப்பாட்டுக்கே வழியின்றி இருக்கும்போது பணம் கொடுத்திருக்கின்றனர். அவர்களின் பனமும் இங்கே வீணாக்கப்படுகின்றது.
இன்று நடந்த ஒரு சம்பவம். சில நண்பர்கள் ஒன்று சேர்ந்து இந்த ஆலயத்திலே தீர்த்தோற்சவ தினத்தன்று ஆலயத்துக்கு வருகின்ற பக்தர்களுக்கு அன்னதானம் கொடுக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு அதற்குரிய ஏற்பாடுகளையும் செய்தபொழுது வழமையாக ஆலயத்திலே அன்னதானம் கொடுக்கின்ற ஒரு அமைப்பு நீங்கள் அன்னதானம் கொடுக்கக் கூடாது நாங்கள் மட்டும்தான் இங்கே அன்னதானம் கொடுப்போம் என்று சொல்லியிருக்கின்றார்கள்.
ஆலயத்திலே அன்னதானம் கொடுக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட நண்பர்கள் இது தொடர்பாக ஆலய நிர்வாகத்திடம் தொடர்பு கொண்டபோது ஆலய நிர்வாகம் அவர்கள் மட்டும்தான் அன்னதானம் கொடுக்கவேண்டும் வேறு எவரும் இங்கே கொடுக்க வேண்டாம் என்று சொல்லப்பட்டது.
இது தொடர்பில் இன்று ஆலய நிர்வாகத்தோடு சம்மந்தப் பட்டவர்களோடும் நான் வாக்குவாதப் பட்டும் வேறு எவரும் இந்த ஆலயத்திலே அன்னதானம் கொடுக்கக் கூடாது என்றுதான் ஆலயத்தின் பரிபாலன சபைத்தலைவரே சொல்லிவிட்டார்.
இந்த ஆலயத்தைப் பொறுத்தவரை பல இடங்களில் இருந்தும் மக்கள் வருகின்ற ஒரு ஆலயம் பலருடைய பக்களிப்பும் இருக்கின்ற ஆலயம். அந்த ஆலயத்துக்கு ஒரு பக்தனால் அன்னதானம் வழங்க தடை விதிக்கின்ற ஆலய நிர்வாக சபை எல்லாம் தேவையா? எதற்கு அந்த ஆலயம்?
5 comments: on "திருந்தாத ஜென்மங்கள்"
உங்களின் ஆதங்கம் புரிந்து கொள்ள முடிகிறது.அது நியாயமாகவும் இருக்கிறது
சந்துரு உங்க ஆதங்கம் எனக்கு புரியறது ..இங்கேயும் சில கோவில்களில் இப்பிடி தான் செய்யறாங்க ..அவங்களை திருந்தினா தான் உண்டு ..உங்க கருத்து சரியானது தான்
எல்லா ஊரிலையும் இந்தமாதிரி சிலதுங்க இருக்குது ...!!
யார் திருத்தறது இவங்கள
உங்களது நல்லெண்ண முயற்சி வெற்றியடைய வாழ்த்துக்கள்.
Post a Comment