இலங்கையைப் பொறுத்தவரை இன்று கருத்து சுதந்திரம் என்பது பறிக்கப்பட்ட ஒன்றாகவே இருக்கின்றது. இன்று ஒருவர் துணிந்து அவரது கருத்துக்களை வெளியிட முடியுமா என்றால் அது கேள்விக்குறியான விடயமே.
தடைகளையும், அடக்கு முறைகளையும் மீறி சவால்களுக்கு மத்தியிலே ஒருவர் தன் கருத்துக்களை வெளியிடுவாராக இருந்தால் அவரது உயிருக்கு உத்தரவாதம் இல்லை. கருத்துச் சுதந்திரத்தை துப்பாக்கிகள் தட்டிப் பறித்துக் கொண்டிருக்கின்றன.
உண்மைகளை துணிச்சலோடு பல சவால்களுக்கு மத்தியிலே வெளியிட்ட பல நேர்மையான ஊடகவியலாளர்களை நாம் பறிகொடுத்திருக்கின்றோம். ஒருவர் அல்லது ஒரு குழுவினர் செய்கின்ற தவறுகளையும் அடாவடிகளையும் அட்டூழியங்களையும் வெளி உலகிற்கு கொண்டு வருகின்ற எந்த ஒரு ஊடகவியலாளனும் சுதந்திரமாக தன் கருத்துக்களை வெளியிட சந்தர்ப்பம் கிடைப்பதில்லை.
ஒருவரை ஒரு குழுவினரைப் பற்றிய கருத்துக்களை வெளியிடுகின்றவர்களை போட்டுத் தள்ளுகின்றபோது இன்னொருவர் தங்களுக்கு எதிராக உருவாக மாட்டார் என்று நினைக்கின்றனர்.
மாற்றுக் கருத்துடையோரை விட்டு வைக்கக் கூடாது என்று நினைப்பவர்களும் செயலில் இறங்குபவர்களும் இருக்கின்றனர்
இன்று ஒருவர் உண்மைகளை வெளியிட முடியாத நிலை இருக்கின்றது. மீறியும் வெளியிடுவாராக இருந்தால் சில வேளைகளில் ஒரு ஊடகவியலாளனால் எழுதப்பட்ட செய்தியை அந்த ஊடகவியலாளனே வாசிக்கும் நிலையில் அவனது உயிருக்கு உத்தரவாதமிருக்காது.
இன்று பேச்சு ஊடக சுதந்திரமென்பது வெறுமனே பேச்சளவில்தான் இருக்கிறது. ஊடக சுதந்திரம் துப்பாக்கிகளினால் சிறைப்பிடிக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றது.
நாளுக்கு நாள் ஊடக சுதந்திரம் பறிக்கப் பட்டு ஊடக அடக்கு முறைகள் அதிகரித்தவண்ணமிருக்கின்றன. ஒரு ஊடகவியலாளன் மீதோ அல்லது ஊடக நிறுவனம் மீதோ தாக்குதல் நடாத்தப் படுகின்றபோது மட்டுமே அறிக்கைகளையும் கண்டனங்களையும் வெளியிடும் அரசியல்வாதிகளும் உரிய அதிகாரிகளும். இதுவரை இடம் பெற்ற தாக்குதல்கள் தொடர்பில் காத்திரமான நடவடிக்கை ஏதாவது எடுத்திருக்கின்றனரா?
தாக்குதல்கள் இடம் பெறுகின்ற போது மட்டும் அறிக்கைகளையும் கண்டனங்களையும் வெளியிடுவதோடு நின்றுவிடாது இனிவரும் காலங்களிலாவது ஊடக சுதந்திரம் பறிபோகாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
12 comments: on "துப்பாக்கி முனையில் சிறைப்பிடிக்கப்பட்ட ஊடக சுதந்திரம்"
எங்கள் நாட்டில் இன்றும் நடந்திருக்கிறதே சந்ரு !
//ஹேமா கூறியது...
எங்கள் நாட்டில் இன்றும் நடந்திருக்கிறதே சந்ரு !//
அதற்காகத்தான் இதை எழுதினேன்
அக்கிரமம்.... அநியாயம் மலிந்த தேசத்தில் எப்படி நீதி.... நியாயம் ....உண்மை எதிர்பார்கக் முடியும்...........?
நல்ல பதிவு........வாழ்த்துகள்
நல்ல பதிவு , உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
தட்டிக் கேட்க யாருமில்லை என்ற தைரியம் தான் . வேறு என்னத்தை சொல்ல??
இவர்களை கேள்வி கேட்க யாரும் முன் வருவதில்லை
நீ என்ன பெரிய அறிவாளி மாதிரி நினைக்கிறியோ பே..........
ஊடக உரிமை என்பது கொஞ்சம் கடினம்தான் அங்கே.
என் பதிவிலும் கொஞ்சம் எழுதி உள்ளேன். முடிந்தால் கருத்து கூறவும்.
http://konjamalasalkonjamkirukkal.blogspot.com/2010/07/blog-post_30.html
hmmm
hmmmmm
உண்மை...! இதற்கு நம் நாட்டில் அண்மையில் நடந்த சம்பவங்களேயே தக்க உதாரணங்களாக கொள்ளலாம்...!
Post a Comment