இக்கிராம விவசாயிகள் வெற்றிலைச் செய்கை மட்டுமன்றி மிளகாய் வெண்காயம் போன்ற பயிர்களையும் செய்து வருகின்றனர். இன்றைய நிலையில் இந்த விவசாயிகளுடைய எதிர்காலம் கேள்விக்குறியாகி இருக்கின்றது்
இப்பிரதேசத்து நீர் உவர் நீராக மாறி வருகின்றது் இதனால் பயிர் செய்ய முடியாத நிலை ஏற் பட்டிருக்கின்றது. இக்கிராமமானது கடற்கரைப் பிரதேசம் என்பதோடு சுனாமியால் பாதிக்கப்பட்ட பிரதேசமுமாகும்.
சுனாமியின் பின்னர் ஓரிரு வருடங்கள் இப்பிரதேசத்திலே பயிர் செய்ய முடியாத நிலை ஏற்பட்டிருந்தும் படிப்படியாக அந்த நிலை மாற்றமடைந்தது. மீண்டும் தற்போது துரிதமாக உவர் நீராக மாறி வருகின்றது.
இதற்கான காரணம் 40 50 அடி ஆழத்துக்குமேல் பல நூற்றுக்கணக்கான குழாய்க் கிணறுகள் அமைக்கப்பட்டிருப்பதே என்று சொல்லப்படுகின்றது. அனைத்து விவசாயிகளும் இவ்வாறு குழாய்க் கிணறுகளை அமைத்திருக்கின்றனர்.
எதிர் காலத்தில் முற்று முழுதாக இப்பிரதேச நீர் உவர் நீராக மாறக்கூடிய சாத்தியங்கள் அதிகமாக இருப்பதனால் விவசாயிகளும் மக்களும் அச்சமடைந்திருப்பதோடு உரிய இத் துறை சார்ந்த அதிகாரிகள் இக் குழாய்க் கிணறுகளுக்குப் பதிலாக மாற்று வழிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிடுகின்றனர்.
6 comments: on "காலம் மாறிப் போச்சு..."
நல்ல பதிவு. யாராவது நடவடிக்கை எடுப்பார்களா??
நடவடிக்கை எடுப்பார்களா என்ன கேள்வி இது. அதெல்லாம் கிடையாது
//vanathy கூறியது...
நல்ல பதிவு. யாராவது நடவடிக்கை எடுப்பார்களா??//
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்
//சசிகுமார் கூறியது...
நடவடிக்கை எடுப்பார்களா என்ன கேள்வி இது. அதெல்லாம் கிடையாது//
நடவடிக்கை எடுப்பதா??????????????
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்
சந்ரு உங்கள் எழுத்துக்களைப் பார்க்கும் போது கொஞ்சம் பெருமையாய் உள்ளது. பராவாயில்லையே... இலங்கையின் உள்ளே உள்ள விசயங்களை நீங்களாவது எழுத்துக்களின் மூலம் வெளியே கொண்டு வருவது மகிழ்ச்சியான விசயம். தமிழுக்காக என்ற தலைப்பை விட நீங்கள் தமிழர்களுக்காக என்று தைரியமாக வைத்துக் கொள்ளலாம்.
Post a Comment