இப்பொழுது எமது பகுதியிலே மிகவும் பரபரப்பாக பேசப் படுகின்ற விடயம்தான். ஒரு வீட்டில் தங்கத்தாலான சிலை ஒன்று நிலத்துக்கடியில் இருந்து வெளிப்பட்ட விடயம்.
நான் கடவுள் மீதும், கடவுள் நம்பிக்கை மீதும் அதீத நம்பிக்கை கொண்டவனானாலும் இவ்வாறான விடயங்களை ஒரு வீதம் கூட நம்புவதில்லை.
சில காலமாக இவ்வாறான பல கதைகள் வெளியானதை யாவரும் அறிவோம். இவ்வாறான கதைகள் வெளிவந்து சில காலம் பரபரப்பாக பேசப்படும் ஆனாலும் பின்னர் அவை பற்றி பேசப்படாமல் இருப்பது ஒரு புறமிருக்க. அதனால் எதுவும் நடந்ததாகவும் தெரியவில்லை.
மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடியில் ஒரு வீட்டில் நிலத்துக்கடியில் இருந்து தங்கத்திலாலான சிலை ஒன்று வெளிப்பட்டிருப்பதாக பரபரப்பாக பரவ ஆரம்பித்ததுமே. அந்த வீட்டை பல இடங்களில் இருந்தும் மக்கள் பார்வையிட வந்து கொண்டே இருக்கின்றனர்.
எல்லோரும் சென்று பார்த்து வருகின்றனர். ஒவ்வொருவரும் ஒவ்வொரு கதை சொல்கின்றனர். ஆனாலும் பார்த்த பலர் சொல்கின்ற கதை இதுதான். அந்த சிலை 5 கிலோவுக்கு மேல் வரும் தங்கத்தாலானது. இன்னும் சில சிலைகள் வெளிப்படுமாம்.
எல்லோரும் சென்று பார்த்து வருகின்றார்கள். எனக்கு இவற்றில் நம்பிக்கை இல்லை என்பதால் நான் போக விரும்பவில்லை. இருந்தாலும் எல்லோரும் சென்று பார்த்துவந்து கதைகளை சொல்கின்றபோது பார்க்க வேண்டும் என்ற ஆவல் எனக்கு வந்தது.
என்னுடைய நண்பர்கள் சிலரை அழைத்துக்கொண்டு பார்க்கலாம் என்று நேற்றிரவு 8 மணியளவில் குறிப்பிட்ட வீட்டுக்கு சென்றேன். செல்லும் பாதைகளில் பலர் பார்த்துவிட்டு வருவதையும், பார்க்க செல்வதையும் அறிய முடிந்தது.
அந்த வீட்டை அடைந்தபோது ஒரு ஆலயத்துக்கு செல்வது போன்ற ஒரு உணர்வு ஏற்பட்டது. அங்கே வந்திருந்தவர்களும் ஒரு ஆலயத்தில் இவ்வாறு நடந்து கொள்ள வேண்டுமோ அதே போன்றுதான் நடந்து கொண்டனர்.
ஆனால் சிலை இருப்பதாக சொல்லப்பட்ட அறை பூட்டப்பட்டிருந்தது. இந்து சமயம் சம்பந்தமான கிரியைகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன.
ஆனாலும் எனக்கு அந்த சிலையை பார்க்கவேண்டும் அந்த வீட்டின் சொந்தக் காரர்களோடு பேசவேண்டும் தகவல்களை பெறவேண்டும் என்று முயற்சி செய்தேன். சில கிரியைகள் இடம் பெறுவதால் இப்போது பார்க்க முடியாது என்று சொல்லப்பட்டது.
பகல் நேரத்திலே எல்லோரும் பார்ப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப் பட்டிருக்கிறது. பலர் பார்த்திருக்கின்றனர்.
இவ்வாறான விடயங்கள் இப்போது அடிக்கடி நடைபெறுவது சாதாரணமாகிவிட்டது. இது உண்மையோ அல்லது பொய்யான விடயமாக இருப்பது ஒரு புறமிருக்க இவ்வாறு அடிக்கடி நடப்பதனால் மக்களுக்கு கடவுள் மீது இருக்கின்ற நம்பிக்கை இல்லாமல் போகின்றது என்பதுதான் உண்மை.
கடவுள் மீது அதித நம்பிக்கையும், சமயத்தின் மீது பற்றும் கொண்ட நான் இவைகளை 1 வீதமும் நம்பவில்லை. சரி கடவுள்தான் என்றாலும் எதற்காக வீடுகளிலே சிலையாக தோன்றவேண்டும்? பொதுவான இடங்களிலே வெளிப்படலாம்தானே?
3 comments: on "நிலத்திலிருந்து வெளிப்பட்ட தங்கத்தாலான கடவுள் சிலை?"
என்ன கொடுமை சார் இது கடவுளாவது களிமண்ணாவது எல்லாம் பைத்தியகாரத்தனம்.....................
ஏதாவது ஒரு புரளி கிளப்பலேன்னா நம்ம ஆளுங்களுக்கு தூக்கம் வராது.
சந்துரு நானும் கடவுளை நம்பறவள் தான் ...கடவுள் சிலை கிடைச்ச விஷயம் அது முன்னோர்கள் யாரவது பூமிக்கு அடியில் வச்சிரிகலாம் இல்லையா ..கடவுள் சிலை கிடைச்சதும் கடவுள் இல்லைன்னு எப்பிடி சொல்லல்லாம் ஒன்னும் புரியலை ..
Post a Comment