Wednesday, 7 July 2010

நன்னாரி வேரும் இரு பதிவர்களும்.

அண்மையில் நண்பர் பிரபாவும் நானும் வானொலி தொடர் நிகழ்சி ஒன்றுக்காக யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பகுதி மக்களை சந்தித்து பேட்டி எடுப்பதற்காக கிழக்கு மாகாணத்திலே யுத்தத்தால் பாதிக்கப் பட்ட பல பகுதிகளுக்கு சென்றிருந்தோம்.

நான்கு அறிவிப்பாளர்கள் சென்றிருந்தோம் அதில் நானும் பிரபாவுமே பதிவர்கள். குறிப்பிட்ட ஒரு தினத்தில் வாகரைக்கு போவதாக முடிவெடுத்து மாலை வேளையில் மட்டக்களப்பு நகரிலிருந்து வாகரை நோக்கி புறப்பட்டோம்.

வாகரைக்கு நான் முன்னர் ஒரு தடவை சென்றிருந்தாலும். இந்த தடவை சென்றபோது வித்தியாசத்தை உணர முடிந்தது. முதல் தடவை சென்றபோது வாகரை புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது. இப்போது இராணுவ கட்டுப்பாட்டில் இருக்கின்றது. அங்கே மக்களை சந்தித்தபோது மக்களின் வெளிப்பாடுகளை பின்னர் பகிர்ந்து கொள்கிறேன்.

இப்போது விடயத்துக்கு வருகிறேன். வாகரை சென்று கொண்டிருக்கும்போது. வீதியின் இரு மருங்கிலும் சிறு, சிறு பற்றைகைகாடுகள் காட்சியளித்தன. அந்த காடுகளுக்குள்ளே ஒரு இராணுவ வீரர் ஏதோ பிடுங்கிக் கொண்டிருந்தார். என்ன பிடுங்குகிறார் என்று அறிய ஆவலோடு எமது வாகனத்தின் வேகத்தைக் குறைத்து பார்த்தபோது எங்கள் எல்லோருடைய கடந்த கால நினைவுகளை ஒவ்வொருவராக மீட்டிப்பார்த்து ஒருவரோடு ஒருவர் பகிர்ந்து கொண்டோம்.

  • அவர் பிடுங்கிக் கொண்டிருந்தது நன்னாரி வேர் . நன்னாரி வேர் என்றால் என்ன என்று இப்போது பலருக்குத் தெரியாது. பலர் நனாரி எனும் பெயரையே கேள்விப் பட்டிருக்கமாட்டார்கள்.
எனது சிறிய வயதிலே அதிகளவான நன்னாரி வேர் தேநீர் அருந்தி இருக்கிறேன். நல்ல மனமும், சுவை நிறைந்ததாகவும் இருக்கும். மருத்துவக் குணங்களும் அதிகம் கொண்டதாம் இந்த நன்னாரி வேர்.

எங்களுடைய பிரதேசத்திலே முன்னர் அதிகமாகக் கிடைக்கும் ஆனால் இப்போது மருந்துக்கும் இல்லை. அங்கே அந்த இராணுவ வீரர் பிடுங்கும்போது நானும் பிடுங்கி எடுத்து வீட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்ற எண்ணம் இருந்தது ஆனாலும் நாம் அவசரமாக சென்று கொண்டிருப்பதனால் அந்த என்னத்தை கைவிட்டுவிட்டேன்.

எங்கள் வாகனத்தை செலுத்தி வந்தவர் மருதமுனையை சேர்ந்த ஒரு நண்பர். அவர் முன்னர் தேற்றாத்திவிலே ஒரு நன்னாரி வேர் தேனீர் கடை இருந்ததாகவும் அவர் நன்னாரி வேர் தேனீர் அருந்துவதட்காகவே தேற்றாத்தீவுக்கு வந்து போவதாகவும் சொன்னார்.

ஆனால் நம்ம பிரபாவோ எங்களுடைய பிரதேசங்களிலே இப்போது நன்னாரி வேர் இல்லை என்பதனால் இங்கிருந்து பிடுங்கிக் கொண்டு எமது பிரதேசத்திலே விற்பனை செய்வோம் என்று ஆலோசனை சொன்னார்.

இப்போது நன்னாரி வேர் தேநீர் அருந்தவேண்டும் என்று ஆசை இருக்கிறது. ஒரு நாள் அதற்காகவே வாகரைக்கு செல்ல வேண்டும்.

சுவை, மணம் மாத்திரமல்ல நல்ல மருத்துவக் குணமும் கொண்டதுதான் இந்த நன்னாரி வேர். நானறிந்த நன்னாரி வேரின் மருத்துவக் குணங்களை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

நன்னாரி, சீமைநன்னாரி, பெருநன்னாரி, கருநன்னாரி. என வகை பலவகை உண்டு

எங்கும் வளரும் கொடி வகையைச் சேர்ந்தது. . இதன் வேரின் மேற்புறம் கருமை நிறமாகும். உள்ளே வெண்மை நிறமாகவும், நல்ல மணமுடைய தாகவும், இருக்கும்.

நன்னாரி வேர் உடல் வெப்பத்தை தணிக்க கூடிய ஒன்று.

மேக நோய், பால்வினை நோய்களுக்கு சிறந்த நிவாரணி.

பச்சை நன்னாரி வேறை அரைத்து பாலில் கலந்து சாப்பிட்டு வர மூலச் சூடு, இருமல், நீர்க்கடுப்பு என்பன குணமாகும்.

வெட்டி வேர், விளாமிச்சை வேர், நன்னாரி வேர் இவற்றை நன்கு அலசி, வெள்ளைத் துணியில் கட்டியில் மண்பானை தண்ணீரில் போட்டு தண்ணீரில் போட்டு அந்நீரை குடித்துவந்தால் பலவீனப்பட்ட தலைமுடியின் வேர்கால்களுக்கு நல்ல பலம் கிடைக்கும்


வெயில் காலத்தில் நா வரச்சியை தணிக்க நன்னாரி குடிநீர் மிக நல்லது. உடல் வெப்பத்தை தணிக்கும் சக்தி உள்ளது நன்னாரி வேருக்கு.
 
கல்லீரல் நோய், காமாலை என்பவற்றை குணப்படுத்தும்.
 
ஆண்மை பெருக நானாரி வேரை ஊற வைத்து  இளஞ் சூடாக அருந்தி வரவேண்டும்.

நன்னாரி வேருடன் பாலும் சக்கரையும் கலந்து சிறு பிள்ளைகளுக்கு கொடுத்து வர வேண்டும்.

நன்னாரி வேர்ப் பொடியுடன் சோற்றுக் கற்றாழை சோறு சேர்த்து உண்ண விஷக் கடிகளால் உண்டாகும் பக்க விளைவுகள் நீங்கும்.

நன்னாரிவேரை வாழையிலையில் வைத்துக் கட்டி எரித்து சாம்பலாக்கி அதனுடன் தேவையான அளவு சீரகமும், சர்க்கரையும் பொடித்துக் கலந்து அருந்திவர சிறு நீரகநோய்கள் அனைத்தும் விலகும்.

இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்.  பல படங்களை இணைக்க 2 மணி நேரம் முயற்சி செய்தும் முடியவில்லை. என் வலைப்பதிவில் படங்களை இணைக்க முடியவில்லை.


Post Comment


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

4 comments: on "நன்னாரி வேரும் இரு பதிவர்களும்."

சசிகுமார் said...

நல்ல பயனுள்ள செய்திகள் நண்பரே தொடரட்டும் உங்கள் மகத்தான சேவை

நிலாமதி said...

நல்ல பயனுள்ள் செய்தி....படங்களை எதிர்பார்த்தேன். பெயர் கேள்விபட்டு இருக்கிறேன்.முடிந்தால் பதிவும்.நன்றி ....

Anonymous said...

athu thetthateevu illay kiran kulam

Anonymous said...

சந்துரு அருமையான பதிவு பா ..நன்னாரி வேர் பத்தி கேள்வி பெட்டிரிகேன் ..இப்போ தான் இதே பத்தி சரியாய் தெரிஞ்சுட்டேன் நன்றி .

சினிமா நடிகர் வடிவேல் கூட" நன்னாரி பயலே "என்று நிறையை பேரே திட்டியிருக்கா காமெடி சீனில் பார்த்திரிகிறேன்...

Post a Comment